Tnpsc

July 4th Week 2020 Current Affairs Online Test Tamil

நடப்பு நிகழ்வுகள் -22 July to 31 July 2020

Congratulations - you have completed நடப்பு நிகழ்வுகள் -22 July to 31 July 2020. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
கால்நடைப் பராமரிப்பு உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியத்தின் வழிகாட்டுதல்களை வெளியிட்ட மத்திய அமைச்சர் யார்?
A
கிரிராஜ் சிங்
B
நரேந்திர சிங் தோமர்
C
ஹர்சிம்ரத் கெளர் பதல்
D
அர்ஜுன் முண்டா
Question 1 Explanation: 
 பல்வேறு துறைகளில் வளர்ச்சியை ஊக்குவிப்பதை உறுதிசெய்வதற்கான தற்சார்பு இந்தியா உந்துதல் தொகுப்புத் திட்டத்தின்கீழ், மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தபடி, `15,000 கோடி மதிப்பிலான கால்நடைப் பராமரிப்புத் துறை உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியத்துக்கான வழிகாட்டுதல்கள் அமலாக் -கத்தை மத்திய மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் தொடங்கிவைத்தார்.  இந்தத் திட்டத்தின்கீழ் வேளாண் உற்பத்தி அமைப்புகள், குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், பிரிவு 8’இன்கீழ்வரும் நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழில்முனைவோர் குறைந்தபட்சம் 10% விளிம்புத்தொகை பங்களிப்பு செய்யவேண்டும் என்ற நிபந்தனையுடன் இத்திட்டத் -தின்மூலம் பயன்பெறுவர். மீதி 90 சதவீதத்தை வரையறுக்கப்பட்ட வங்கிகள் கடனாக அளிக்கும்
Question 2
பன்னாட்டு ஒலிம்பிக் குழுமமானது 2022ஆம் ஆண்டு டக்கார் இளையோர் ஒலிம்பிக் போட்டிகளை, எந்த ஆண்டிற்கு ஒத்திவைத்துள்ளது?
A
2024
B
2026
C
2028
D
2030
Question 2 Explanation: 
 பன்னாட்டு ஒலிம்பிக் குழுமமானது (IOC) 2022ஆம் ஆண்டு டக்கார் இளையோர் ஒலிம்பிக்கை நான்கு ஆண்டுகளுக்கு, அதாவது எதிர்வரும் 2026ஆம் ஆண்டுக்கு ஒத்திவைத்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. செனகலின் தலைநகரத்தில் நடைபெற இருக்கும் இளையோர் கோடைக்கால விளையாட்டுப் போட்டிகளானது ஆப்பிரிக்காவில் ஏற்பாடு செய்யப்படும் முதல் ஒலிம்பிக் போட்டிகளாகும். டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் எதிவரும் 2021ஆம் ஆண்டு ஜூலை மாதத்திலும் மற்றும் பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் எதிர்வரும் 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன.
Question 3
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற சாட்டோகிராம் துறைமுகம் அமைந்துள்ள நாடு எது?
A
ஆப்கானிஸ்தான்
B
மியான்மர்
C
வங்கதேசம்
D
தாய்லாந்து
Question 3 Explanation: 
 மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் (தனிப்பொறுப்பு) மன்சுக் மண்டவியா, காணொளிக் காட்சி வாயிலாக கொல்கத்தாவிலிருந்து அகர்தலாவுக்கு முதல் சோதனை சரக்குக்கப்பலை வங்கதேசத் -தின் சாட்டோகிராம் துறைமுகம் வழியாக கொடியசைத்து தொடக்கிவைத்தார்.  வங்கதேசம் வழியாக இந்தியாவின் சரக்குப் போக்குவரத்துகளை இயக்குவதற்காக சாட்டோகிராம் & மோங்லா துறைமுகங்களைப் பயன்படுத்துவதற்கான ஒப்பந்தத்தின்கீழ் இது செய்யப்பட்டுள்ளது. இது வடகிழக்குப் பிராந்தியத்தை வங்கதேசம் வழியாக இணைக்க தொலைவு குறைவாக உள்ள மாற்றுப் பாதையாகும். 4
Question 4
இறக்குமதிக் கொள்கையை திருத்துவதன்மூலம் இந்திய வேளாண்மை துறையால் எந்த வேளாண் உபகரணம் இறக்குமதி செய்வது தடைசெய்யப்படும்?
A
உழவுந்து
B
எந்திரக் கலப்பை
C
எந்திரக் களையெடுப்பி
D
சுழன்று களையெடுப்பி
Question 4 Explanation: 
 வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, எந்திரக் கலப்பை மற்றும் அதன் கூறுகளுக்கான இறக்குமதிக் கொள்கையை ‘கட்டற்றது’ என்பதிலிருந்து ‘தடைசெய்யப்பட்டவை’ என்பதாக அரசாங்கம் திருத்தியுள்ளது. ‘தடைசெய்யப்பட்டவை’ என வகைப்படுத்தப்பட்ட தயாரிப்புகளை இறக்குமதி செய்வதற்கு, இறக்குமதியாளர்கள் வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகத்திடம் உரிமம் பெற வேண்டும். இந்நடவடிக்கை முக்கியமாக சீனாவிலிருந்து வரும் உபகரணங்களின் இறக்குமதியைக் கட்டுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Question 5
NITI ஆயோக்கின் பரிந்துரையின்படி, பெரிய உட்கட்டமைப்பு திட்டங்களில் பயன்படுத்தப்பட வேண்டிய மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களின் சதவீதம் என்ன?
A
5%
B
10%
C
25%
D
100%
Question 5 Explanation: 
 இந்தியா முழுவதும் இரண்டாம் நிலை தயாரிப்புகளை ஊக்கப்படுத்துவதற்காக பெரிய உட்கட்டமைப்பு திட்டங்களில் மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களை 25% அளவுக்கு பயன்படுத்த வேண்டும் என NITI ஆயோக் பரிந்துரைத்துள்ளது. தற்போது நம்நாட்டில் அரிதாகக் காணப்படும் உலோகங்கள், நெகிழி மற்றும் தாள் உள்ளிட்டவற்றின் மறுசுழற்சி செய்யப்பட்ட தயாரிப்புகளை இது ஊக்குவிக்கும் என NITI ஆயோக்கின் தலைமைச் செயல் அதிகாரி அமிதாப் காந்த் அறிவித்தார். இறக்குமதி செய்யும்போது இந்தியா இந்தப் பொருட்களின் மீது 2.5 சதவீத அளவுக்கு சுங்கவரி விதிக்கிறது.
Question 6
ஆரோக்கியஸ்ரீ’ என்பது எந்த மாநிலத்தில் செயல்படுத்தப்படும் சுகாதாரப் பாதுகாப்புத் திட்டமாகும்?
A
தமிழ்நாடு
B
கேரளா
C
ஆந்திர பிரதேசம்
D
கர்நாடகா
Question 6 Explanation: 
 ஆந்திர பிரதேச மாநில முதலமைச்சர் YS ஜெகன் மோகன் ரெட்டி, 2019ஆம் ஆண்டில் ‘ஆரோக்யஸ்ரீ’ என்ற திட்டத்துக்கு ‘YSR ஆரோக்கியஸ்ரீ’ திட்டம் என மறுபெயரிட்டார். அண்மையில், அனைவருக்கும் மலிவுவிலையில் நலவாழ்வுச் சேவைகளை வழங்குவதற்காக, இந்நலவாழ்வுத்திட்டத்தின் சேவைகள் மாநிலத்தின் மேலும் 6 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டன. இந்தப் புதிய சேவைகளில் புற்றுநோய் மற்றும் டைகோக்லெரா உள்வைப்பு மற்றும் இதுபோன்ற பிற நடைமுறைகள் உள்ளடங்கும். கடந்த ஏப்ரல் மாதத்தில், இந்தத் திட்டம், COVID-19 சிகிச்சைக்கும் விரிவுபடுத்தப்பட்டது.
Question 7
மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் முதல் இணையவழி நிஷ்தா திட்டம், எந்த மாநிலத்தில் தொடங்கப்பட்டுள்ளது?
A
மத்திய பிரதேசம்
B
குஜராத்
C
ஆந்திர பிரதேசம்
D
ஒடிசா
Question 7 Explanation: 
 ஆந்திர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 1200 முக்கிய பயிற்சியாளர்களுக்கான முதலாவது, ‘NISHTHA’ இணையவழி கல்வித்திட்டத்தை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ‘நிஷாங்க்’ புது தில்லியில் மெய்நிகர் நிகழ்ச்சியில் தொடங்கிவைத்தார். கடந்த 2019ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டதிலிருந்து 33 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் தங்கள் பகுதிகளில் சமக்ர சிக்சா என்ற நடுவணரசு உதவியுடன் கூடிய திட்டத்தின் கூட்டுமுயற்சியில் இத்திட்டத்தை தொடங்கியுள்ளன. NCERT, மாநில அளவிலான பயிற்சிக்கல்வித்திட்டத்தை வழங்குகிறது.
Question 8
எந்த ஆப்பிரிக்க நாட்டின் முதல் பெண் பிரதமராக ஒசெளகா ரபோண்டா நியமிக்கப்பட்டுள்ளார்?
A
காபோன்
B
ஜிம்பாப்வே
C
நைஜீரியா
D
கென்யா
Question 8 Explanation: 
 மத்திய ஆப்பிரிக்க நாடான காபோனின் முதல் பெண் பிரதமராக ரோஸ் கிறிஸ்டியன் ஒசெளகா ரபோண்டா நியமிக்கப்பட்டுள்ளார். 2019ஆம் ஆண்டில் பிரதமராக நியமிக்கப்பட்ட ஜூலியன் நோகோ பெக்கலேவுக்குப் பதிலாக, 56 வயதான ஒசெளகா ரபோண்டாவை, காபோன் அதிபர் அலி போங்கோ ஒண்டிம்பா நியமித்துள்ளார். இந்நியமனத்திற்கு முன், ஒசெளகா ரபோண்டா, கடந்த 2012ஆம் ஆண்டில் வரவுசெலவுத் திட்ட அமைச்சராகவும் பின்னர் பாதுகாப்பு அமைச்சராகவும் பணியாற்றினார்.
Question 9
Projects Today’இன்படி, 2019-20’இன் முதல் காலாண்டில், இந்தியாவில் அதிக முதலீடுகளை ஈர்த்த மாநிலம் எது?
A
தமிழ்நாடு
B
குஜராத்
C
கர்நாடகா
D
மகாராஷ்டிரா
Question 9 Explanation: 
 திட்டங்களின் இணைய தரவுத்தளமான புராஜெக்ட்ஸ் டுடே நடத்திய ஆய்வின்படி, 2019-20’இன் முதல்காலாண்டில் இந்தியாவில் அதிக முதலீடுகளை ஈர்த்த மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. இந்த மாநிலம் `18,236 கோடி முதலீடுகளை தன்னகத்தே ஈர்த்துள்ளது. அது மொத்த புதிய முதலீட்டில் 18.63 சதவீதமாகும். 2020 மே மாதத்தில் மட்டும் 17 ஒப்பந்தங்களில் இந்த மாநிலம் கையெழுத்திட்டுள்ளது. இதைத்தொடர்ந்து `11,229 கோடி முதலீட்டுடன் மகாராஷ்டிர மாநிலம் இரண்டாமிடத்தில் உள்ளது.
Question 10
ஓர் உத்திசார் முக்கியத்துவம்வாய்ந்த பெட்ரோலிய இருப்பை உருவாக்குவதற்காக, எந்த நாட்டுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது?
A
மலேசியா
B
அமெரிக்க ஐக்கிய நாடுகள்
C
ஆப்கானிஸ்தான்
D
ஜப்பான்
Question 10 Explanation: 
 அமெரிக்காவில் பெட்ரோலிய இருப்புக்களை சேமிப்பதற்காக, இந்தியா, அண்மையில் அமெரிக்காவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்தியாவின் எண்ணெய் இருப்புக்களை அதிகரிக்க அமெரிக்காவின் உத்திசார் முக்கியத்துவம் வாய்ந்த இருப்புகளில் எண்ணெயை சேமிக்கவும் இந்தியா திட்டமிட்டுள்ளது. மத்திய பெட்ரோலிய & இயற்கை எரிவாயு அமைச்சர் தர்மேந்திர பிரதான், அமெரிக்க எரிசக்தி செயலர் டான் புரூலெட்டேவுடன் ஒரு மெய்நிகரான அமெரிக்க-இந்திய உத்திசார் முக்கியம் வாய்ந்த எரிசக்தி கூட்டாண்மைக்கு அமைச்சர் தலைமைதாங்கினார்.
Question 11
நடப்பாண்டில் (2020) துணை-வெப்பமண்டல பழக்கண்காட்சியை நடத்திய மாநிலம் எது?
A
ஹரியானா
B
மத்திய பிரதேசம்
C
ஆந்திர பிரதேசம்
D
கேரளா
Question 11 Explanation: 
 ஹரியானா மாநில தோட்டக்கலைத்துறையானது ஜூலை.18-22 வரையிலான ஐந்து நாட்களுக்கு துணை-வெப்பமண்டல பழக்கண்காட்சியை நடத்தவுள்ளது. இந்தக்கண்காட்சி, லாட்வாவில் உள்ள துணை-வெப்பமண்டல பழங்களுக்கான மையத்தில் நடத்தப்பட்டது. இம்மையம் இந்தோ- இஸ்ரேல் கூட்டுத் திட்டத்தில் உருவாக்கப்பட்டதாகும். துணை-வெப்பமண்டல பழங்களின் சாகுபடி நுட்பங்கள், சமூக-ஊடகங்கள் வழியாக விளக்கப்பட்டு நேரடியாக ஒளிபரப்பப்படும். இதன்மூலம், விவசாயிகள் ‘மேரா பாணி - மேரா விராசத்’ என்ற பயிர் வகைப்படுத்துதல் திட்டத்தின்கீழ் தொழில்நுட்பங்களை கற்றறிந்துகொள்ள முடியும்.
Question 12
காசிரங்கா தேசிய பூங்கா மற்றும் புலிகள் காப்பகம் அமைந்துள்ள மாநிலம் எது?
A
சிக்கிம்
B
அஸ்ஸாம்
C
மணிப்பூர்
D
மேகாலயா
Question 12 Explanation: 
 காசிரங்கா தேசிய பூங்கா மற்றும் புலிகள் காப்பகம் அஸ்ஸாம் மாநிலத்தில் அமைந்துள்ளது. அஸ்ஸாம் மாநிலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை அடுத்து சுமார் 40 இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டனர். UNESCO’இன் உலக பாரம்பரிய தளமாக விளங்கும் இந்தப் புலிகள் காப்பகம், இந்தப் பெருவெள்ளத்தில் மூழ்கியுள்ளது. காண்டாமிருகம், மான் மற்றும் காட்டுப்பன்றி உட்பட 86 விலங்குகள் இதில் சிக்குண்டு இறந்தன. 1988ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆறாவது மிக மோசமான வெள்ளமாக இது கூறப்படுகிறது.
Question 13
மாதிரி பதிவுமுறையின்படி, 2016-18ஆம் ஆண்டில், இந்தியாவில் தாய்வழி இறப்பு விகிதம் என்ன?
A
122
B
119
C
117
D
113
Question 13 Explanation: 
 இந்தியாவில் தாய்வழி இறப்பு விகிதம் (MMR) 2016-18’ஆம் ஆண்டில் 113ஆக குறைந்துள்ளது. இந்த விகிதம் 2015-17ஆம் ஆண்டில் 122 ஆகவும், 2014-2016ஆம் ஆண்டில் 130 ஆகவும் இருந்தது. தலைமை மாதிரி பதிவு அமைப்பு அலுவலகம், சமீபத்தில், இந்தியாவில் தாய்வழி இறப்புகுறித்த சிறப்பு அறிக்கை - 2016-18’ஐ வெளியிட்டது. ஐ.நா’இன் நீடித்த வளர்ச்சி இலக்குகளானது, உலகளாவிய தாய்வழி இறப்பு விகிதத்தை இலட்சம் பிறப்புகளுக்கு எழுபதை விடவும் குறைவாக வைத்திருப்பதை நோக்கமெனக் கொண்டுள்ளது.
Question 14
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘படிவம் 26 AS’ என்பது எந்த அமைப்புடன் தொடர்புடையதாகும்?
A
NITI ஆயோக்
B
மத்திய நேரடி வரிகள் வாரியம்
C
நிதியியல் சேவைகள் துறை
D
இந்திய பங்குகள் & பரிவர்த்தனை வாரியம்
Question 14 Explanation: 
 ‘படிவம் 26 AS’ என்பது ஆண்டுதோறும் தாக்கல் செய்யப்படும் ஓர் அறிக்கையாகும். இது, வரி செலுத்துவோர் வருமானத்தில், வரிபிடித்தம் செய்வோரால் பிடித்தம் செய்யப்படும் பல்வேறு வரிகளின் தகவல்களைக்கொண்டுள்ளது. அண்மையில், CBDT’இன் வருமான வரித்துறை, வருமானவரியை விரைவாக தாக்கல்செய்ய வரிசெலுத்துவோருக்கு உதவும்நோக்கில், ‘படிவம் 26 AS’ என்றவொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இப்புதிய படிவம், சரியான வரியைக்கணக்கிடும் மற்றும் வரி நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Question 15
பிளாஸ்மா நன்கொடை பரப்புரை’யை நடத்திய மாநிலம் அல்லது யூனியன் பிரதேசம் எது?
A
புதுச்சேரி
B
குஜராத்
C
தில்லி
D
ஒடிசா
Question 15 Explanation: 
 தில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனமான AIIMS’இல், COVID-19 பிளாஸ்மா கொடை இயக்கத்தை சுகாதார & குடும்பநலத்துறை அமைச்சர் Dr. ஹர்ஷ் வர்தன் தொடக்கி வைத்தார். தில்லி காவல்துறையுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில், COVID-19 தொற்றிலிருந்து குணமடைந்த 26 காவலர்கள் தன்னார்வத்துடன் குருதி பிளாஸ்மா கொடையளித்தனர். புதுதில்லியில் அண்மையில் நாட்டின் முதல் பிளாஸ்மா வங்கி திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Question 16
ஜூலை.20 அன்று கொண்டாடப்படும் விண்வெளி ஆய்வு நாள், இப்படியும் ____அழைக்கப்படுகிறது?
A
ஞாயிறு நாள்
B
திங்கள் நாள்
C
செவ்வாய் நாள்
D
புவி நாள்
Question 16 Explanation: 
 1969 ஜூலை.20 அன்று நீல் ஆம்ஸ்ட்ராங் & எட்வின் ஆல்ட்ரின் ஆகியோர் திங்களின் மேற்பரப்பில் இறங்கிய முதல் மனிதர்களாக ஆனார்கள். இந்த வரலாற்று சாதனையை நினைவுகூரும் வகையில், இது விண்வெளி ஆய்வு நாளாக (Space Exploration) கொண்டாடப்படுகிறது. இது திங்கள் நாள் என்றும் அழைக்கப்படுகிறது. அப்போதைய அமெரிக்க அதிபர் ஜான் F கென்னடி, “அடுத்த பத்தாண்டுக்குள் ஒரு மனிதனை திங்களில் இறக்கி, பாதுகாப்பாக அவனை/ளை புவிக்குத் மீட்டுவரவேண்டும்” என்ற இலக்கை நிர்ணயித்திருந்தார். ஆம்ஸ்ட்ராங்கின் இந்தச் சாதனைக்குப் பின்னர், அமெரிக்கா, 1969 & 1972’க்கு இடையே திங்களுக்கு, ஆறு அப்பல்லோ விண்கலங்களை ஏவியுள்ளது.
Question 17
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019 உடன் தொடர்புடைய ‘CCPA என்பதன் விரிவாக்கம் என்ன?
A
Commission of Consumer Protection Authority
B
Commission of Consumer Protection Authority
C
Chief Consumer Protection Agency
D
Chief Consumer Products Agency
Question 17 Explanation: 
 2019ஆம் ஆண்டின் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டமானது ஜூலை.20 முதல் நடைமுறைக்கு வந்தது. இந்தச் சட்டம், மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தை (CCPA) நிறுவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நுகர்வோரின் உரிமைகளை மீறுவது குறித்து விசாரணை நடத்துவதற்கு இந்த ஆணையத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதால், நுகர்வோரின் உரிமைகளை CCPA பாதுகாத்து செயல்படுத்தும். இந்த ஆணையத்தால் புகார்களைத் தாக்கல் செய்யவியலும், பாதுகாப்பற்ற பொருட்கள் மற்றும் சேவைகளை திரும்பப்பெற உத்தரவிட முடியும் மற்றும் தவறான விளம்பரங்களுக்கு எதிராக நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்வும் இயலும்.
Question 18
எந்த மாநிலம் அல்லது யூனியன் பிரதேசம் தனது அனைத்து பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கும் `25 இலட்சம் மதிப்பிலான காப்பீட்டை வழங்க ஒப்புதல் அளித்துள்ளது?
A
புது தில்லி
B
ஜம்மு & காஷ்மீர்
C
அஸ்ஸாம்
D
மேகாலயா
Question 18 Explanation: 
 ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம், அங்குள்ள அனைத்து பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கும் `25 இலட்சம் மதிப்பிலான காப்பீட்டை வழங்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து BDC தலைவர்கள், கிராமத் தலைவர்கள் & நகராட்சி அமைப்புகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் ஆகியோர் தீவிரவாதத்தின் காரணமாக மரணிக்கநேர்ந்தால் அவர்களுக்கு இத்தொகை வழங்கப்படும். கடந்த மாதம், தெற்கு காஷ்மீரில் ஒரு கிராமத் தலைவர் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
Question 19
இந்தியாவுக்கும் எந்த நாட்டிற்கும் இடையிலான வணிகக் கவுன்சில், ‘இந்தியா ஐடியாஸ் உச்சிமாநாடு’ 2020’ஐ நடத்தியது?
A
மலேசியா
B
அமெரிக்க ஐக்கிய நாடுகள்
C
ஆப்கானிஸ்தான்
D
ஜப்பான்
Question 19 Explanation: 
 ஜூலை. 22 அன்று நடைபெற்ற, ‘இந்தியா யோசனைகள் உச்சிமாநாடு’ 2020 நிகழ்ச்சியை அமெரிக்க - இந்தியா வணிகக்கவுன்சில் நடத்தியது. இந்தியப் பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க வெளியுறவுத் துறை செயலர் மைக் பாம்பியோ ஆகியோர் இதில் சிறப்புரையாற்றினர். “US-இந்தியா கூட்டாண்மை, வர்த்தகம் மற்றும் முதலீடு மற்றும் COVID-19 காலத்தில் பணியின் எதிர்காலம்” பற்றிய விவாதங்கள் இந்த உச்சிமாநாட்டில் மேற்கொள்ளப்பட்டன. இம்மாநாட்டில், வெளியுறவு அமைச்சர் Dr. S ஜெய்சங்கர் உட்பட பல்வேறு வணிக மற்றும் அரசுத்தலைவர்கள் உரையாற்றினர்.
Question 20
இயற்கை காலநிலை மாற்றத்தின் ஆய்வின்படி, காலநிலை மாற்றம் காரணமாக எந்த விலங்கினம் அழிந்துபோகக்கூடும்?
A
துருவக்கரடி
B
பெங்குயின்
C
கடற்பசு
D
ஆர்க்டிக் நரி
Question 20 Explanation: 
 “இயற்கை காலநிலை மாற்றம்” என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்ட அறிவியலாளர்களின் ஆய்வு முடிவின்படி, காலநிலை மாற்றம் காரணமாக மாமிச உண்ணியான துருவக்கரடிகள் அழிந்துபோகக் கூடும். 13 வகையான துருவக்கரடிகளுள் 12 வகையான துருவக்கரடிகள் எதிர்வரும் அடுத்த எண்பது ஆண்டுகளுக்குள் முழுமையாக அழிந்துவிடும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
Question 21
மின்சாரம் கடத்தும் கம்பிவடங்கள் & கோபுரங்களை ஆய்வுசெய்வதற்கு ஆளில்லா வானூர்திகளை பயன்படுத்த ஒப்புதல் பெற்ற முதல் மாநிலம் எது?
A
குஜராத்
B
இராஜஸ்தான்
C
மகாராஷ்டிரா
D
மத்திய பிரதேசம்
Question 21 Explanation: 
 மின்சாரம் கடத்தும் கம்பிவடங்கள் & கோபுரங்களை ஆய்வுசெய்வதற்கு ஆளில்லா வானூர்திகளைப் பயன்படுத்த, மகாராஷ்டிரத்துக்கு உள்துறை அமைச்சகமும் உள்நாட்டு வான் போக்குவரத்துக்கான தலைமை இயக்குநரும் அனுமதி அளித்துள்ளனர். மின்துறை ஊழியர்களின் பணி அபாயத்தைக் குறைக்க, சீர்கெட்ட கூடுதல் உயர் மின்னழுத்த மின் இணைப்புகளை கண்காணிக்க ஆளில்லா வானூர்திகளைப் பயன்படுத்துவதற்கு அனுமதிபெற்ற முதல் மாநிலமாக மகாராட்டிர மாநிலம் உள்ளது.  மகாராட்டிர மாநில மின் பரிமாற்ற நிறுவனத்தின் கூற்றுப்படி, ஒவ்வொரு மண்டலத்திற்கும் உயர் தெளிவுத்திறன்கொண்ட நிழற்படக்கருவிகள் கொண்ட ஆளில்லா வானூர்திகள் வழங்கப்படும்.
Question 22
நவீன் ரோஜ்கர் சத்ரி யோஜனா’ என்றவொன்றை தொடங்கியுள்ள மாநில அரசு எது?
A
மத்திய பிரதேசம்
B
உத்தர பிரதேசம்
C
உத்தரகாண்ட்
D
பஞ்சாப்
Question 22 Explanation: 
 உத்தர பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், சமீபத்தில், ‘நவீன் ரோஜ்கர் சத்ரி யோஜனா’ என்றவொரு திட்டத்தை தொடங்கினார். இந்தத் திட்டம், மாநிலத்தில் உள்ள பட்டியலின சாதியினரின் ஒட்டுமொத்த வளர்ச்சியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ‘பண்டிட் தீனதயாள் உபாத்யாய் சுவரோஜ்கர் யோஜனா’வின்கீழ், மூவாயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு சுமார் `17.42 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் முதலமைச்சர் வழங்கியுள்ளார்.
Question 23
எந்த அமைப்பின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக சுமித் தேப் நியமிக்கப்பட்டுள்ளார்?
A
தேசிய கனிம மேம்பாட்டுக் கழகம்
B
தேசிய அலுமினிய நிறுவனம்
C
இந்திய நிலக்கரி நிறுவனம்
D
NLC இந்தியா லிட்
Question 23 Explanation: 
 நாட்டின் இரும்புத்தாது சுரங்கப்பணிகளை மேற்கொள்ளும் நிறுவனமான தேசிய கனிம மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக சுமித் தேப் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர், தேசிய கனிம மேம்பாட்டுக்கழகத்தில் இயக்குநராக பணியாற்றிவருகிறார். இம்மாத இறுதியில் வயது மூப்பு காரணமாக ஓய்வுபெறவுள்ள N பைசேந்திர குமாரைத் தொடர்ந்து நியமிக்கப்பட்டுள்ள அவர், 2023ஆம் ஆண்டு வரை அவர் அப்பதவியில் இருப்பார்.
Question 24
அவசரகால மருத்துவ சேவை’களை அமைப்பதற்காக, எந்த நாட்டுடனான ஒப்பந்தத்தில் இந்தியா கையொப்பமிட்டுள்ளது?
A
இலங்கை
B
மாலத்தீவுகள்
C
மொரிசியசு
D
வங்கதேசம்
Question 24 Explanation: 
 மாலத்தீவின் தலைநகரமான மாலேவில், ‘அவசரகால மருத்துவ சேவை’களை அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் அண்மையில் இந்தியாவும் மாலத்தீவும் கையெழுத்திட்டன. இத்திட்டத்திற்காக, இந்தியா, சுமார் $20 மில்லியன் டாலர்களை மாலத்தீவுக்கு வழங்கவுள்ளது. பல்வேறு சிறு மற்றும் நடுத்தர திட்டங்களில், இந்தியா, மாலத்தீவிற்கு உதவிவருகிறது. இம்மருத்துவசேவை வசதியானது சிக்கலான பேரிடர் காலங்களில் தரமான அவசரகால சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதிசெய்யும்.
Question 25
இந்தியாவில், ‘யுவா இந்தியா’ என்ற பெயரில் கூட்டணியொன்றை தொடங்கியுள்ள பன்னாட்டு அமைப்பு எது?
A
உலக வங்கி
B
UNICEF
C
UNESCO
D
பன்னாட்டுச் செலவாணி நிதியம்
Question 25 Explanation: 
 யுவா (யுனிசெப் அமைப்பால் ஏற்படுத்தப்பட்ட பல்முனை தொடர்பாளர்கள் தளம்) அமைப்புடனான ஓர் உத்தேச அறிக்கையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது. இது, இந்திய இளைஞர்களிடம் தன்னார்வத்தை ஊக்குவிப்பதுடன், கல்வி மற்றும் பயிற்சியிலிருந்து ஆக்கபூர்வ பணிக்கு செல்ல உதவி, அவர்களை திறன்மிக்க குடிமக்களாக உருவாக்குவதற்கு சேர்ந்து பணியாற்றவும் வகைசெய்யும்.  கடந்த 2019ஆம் ஆண்டில், UNICEF, இந்தியாவில் ‘YuWaah’ கட்டற்ற தலைமுறை என்ற நிறுவனத்தை அறிமுகப்படுத்தியது. இது பல்முனை தொடர்பாளர்கள்கொண்ட ஒரு கூட்டணியாகும்; இது, இளம்பருவ -த்தினருக்கு திறன்மேம்பாட்டை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
Question 26
சுய-உதவிக்குழுக்கள் மற்றும் பால் கூட்டுறவு சங்கங்களை ஊக்கப்படுத்துவதற்காக, எந்த மாநில அரசு, ‘அமுல்’ உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது?
A
தமிழ்நாடு
B
ஹரியானா
C
ஆந்திர பிரதேசம்
D
உத்தர பிரதேசம்
Question 26 Explanation: 
 ஆந்திர பிரதேச மாநில அரசானது பால் கூட்டுறவு நிறுவனமான AMUL (ஆனந்த் பால் யூனியன் லிட்) உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தம், மகளிர் சுய-உதவிக்குழுக்கள் மற்றும் அரசுத்துறைசார் பால் கூட்டுறவு சங்கங்களை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. உலகத்தரம் வாய்ந்த உட்கட்டமைப்பு, தொழில்நுட்பம் மற்றும் உள்ளூர் குழுக்களுக்கு சந்தை அணுகல் ஆகியவற்றை இந்த ஒப்பந்தம் வழங்கும்.
Question 27
COVID-19 சேவைகளுக்காக சிங்கப்பூர் அதிபர் விருதைப் பெற்றுள்ள இந்திய வம்சாவளியைச் சார்ந்த செவிலியர் யார்?
A
கலா நாராயணசாமி
B
பாஷா முகர்ஜி
C
அங்கித் பாரத்
D
உமா மதுசூதன்
Question 27 Explanation: 
 சிங்கப்பூரைச் சார்ந்த இந்திய வம்சாவளி செவிலி கலா நாராயணசாமிக்கு (59) செவிலியர்களுக்கான அதிபர் விருது வழங்கப்பட்டுள்ளது. COVID-19 தொற்றுநோய்களின்போது முன்களத்தில் (குறிப்பாக 2003ஆம் ஆண்டில் SARS பரவலின்போது கற்றுக்கொண்ட தொற்று கட்டுப்பாட்டு நடைமுறைகளைப் பயன்படுத்தியதற்காக) பணியாற்றியதற்காக அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. 10,000 SGD மதிப்பிலான இவ்விருது, ஐந்து செவிலியர்களுக்கு அவர்களின் சேவைகளுக்காக வழங்கப்படுகிறது.
Question 28
விமான உமிழ்வை கையாளுவதற்காக புதிய, ‘ஜெட் ஜீரோ கவுன்சில்’ என்றவொன்றைத் தொடங்கிய நாடு எது?
A
அமெரிக்க ஐக்கிய நாடுகள்
B
ஐக்கியப் பேரரசு
C
சீனா
D
ரஷ்யா
Question 28 Explanation: 
 ஐக்கியப் பேரரசின் பிரதமர், அந்நாட்டில் விமான உமிழ்வை கையாளுவதற்காக புதிய, ‘ஜெட் ஜீரோ கவுன்சில்’ என்றவொன்றை தொடங்கியுள்ளார். காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கான £350 மில்லியன் பவுண்டுகள் திட்டத்தின் ஒருபகுதியாக, இந்த அவை தொடங்கப்பட்டுள்ளது. அரசு, சுற்றுச்சூழல் துறை மற்றும் விமானத்துறைசார் வல்லுநர்களை ஒருங்கிணைத்து சுழிய-உமிழ்வு கொண்ட நீண்டதூரம் பயணிக்கும் விமானத்தை இந்த அவை உருவாக்கவுள்ளது. எதிர்வரும் 2050ஆம் ஆண்டுக்குள் இந்த இலக்கை அடைய இங்கிலாந்து எண்ணம் கொண்டுள்ளது.
Question 29
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘Grand Renaissance’ அணை அமைந்துள்ள நாடு எது?
A
எத்தியோப்பியா
B
நைஜீரியா
C
சூடான்
D
எகிப்து
Question 29 Explanation: 
Grand Renaissance’ அணை என்பது கடந்த 2011ஆம் ஆண்டு முதல் எத்தியோப்பியாவில் கட்டப்பட்டு வரும் ஒரு நீர்மின்னுற்பத்தி நிலையமாகும். முன்பு, ‘மில்லினியம் அணை’ என்று அழைக்கப்பட்ட இந்த அணை, எத்தியோப்பியாவின் நீல நைல் ஆற்றிலுள்ள பெனிஷங்குல்-குமுஸ் பிராந்தியத்தில் உள்ளது.  சூடான் & எகிப்து ஆகிய நாடுகள், இந்த நீர்மின்னுற்பத்தி அணை கட்டப்பட்டால் தங்கள் நாடுகளில் நீர் பற்றாக்குறை ஏற்படும் என அஞ்சுவதால் இதன் கட்டுமானம் தற்போது சிக்கலில் உள்ளது. ஆனால், எத்தியோப்பியா தனது மக்களுக்கு மின்னுற்பத்தி செய்வதற்கு, $4 பில்லியன் டாலர் மதிப்பிலான இந்த அணை தேவை என்று வலியுறுத்துகிறது. அண்மையில், அணை தொடர்பான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கு மூன்று நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.
Question 30
BRICS CCI இளம் தலைவர்களுக்கான வழிநடத்தல் குழுவின் கெளரவ ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டுள்ள இந்திய அதிகாரி யார்?
A
டீனா தாபி
B
சுமிதா சபர்வால்
C
அன்னீஸ் கன்மணி ஜாய்
D
சாந்தனு கோயல்
Question 30 Explanation: 
 இளம் இ.ஆ.ப அதிகாரியான டீனா தாபி, BRICS CCI இளம் தலைவர்களுக்கான வழிநடத்தல் குழுவின் கெளரவ ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். 2016 - 2023 வரையிலான அமர்வுக்கான கெளரவப் பாத்திரத்தில், 2016ஆம் ஆண்டு குடிமைப்பணிகள் தேர்வில் முதலிடம் பெற்ற டீனா தாபி நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் தற்போது, ராஜஸ்தானின் பில்வாரா மாவட்டத்தில் துணைப்பிரிவு அதிகாரியாக (SDO) பணியாற்றி வருகிறார். மேலும், COVID-19 தொற்றை கட்டுப்படுத்த அவர் மேற்கொண்ட சிறந்த முயற்சி -களுக்காக அவர் பாராட்டப்படுகிறார். மும்பை சுங்க துணை ஆணையர் சாஹில் சேத் அவர்களும் இந்த பதவிக்கு தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.
Question 31
UNEP மற்றும் IEA ஆகியவற்றின் ‘குளிரூட்டிகள் உமிழ்வு & கொள்கை தொகுப்பு அறிக்கை’யின்படி, 2050ஆம் ஆண்டுக்குள் உலகில் மொத்தம் எத்தனை குளிரூட்டிகள் இருக்கும்?
A
1.4 மில்லியன்
B
1.4 பில்லியன்
C
14 பில்லியன்
D
140 பில்லியன்
Question 31 Explanation: 
 ஐ.நா சுற்றுச்சூழல் திட்டம் (UNEP) மற்றும் பன்னாட்டு எரிசக்தி நிறுவனம் (IEA) ஆகியவை இணைந்து ‘குளிரூட்டிகளின் உமிழ்வு & கொள்கை தொகுப்பு அறிக்கை: சிறப்பான முறையில் குளிரூட்டிகளை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் கிகாலி திருத்தம்' என்ற தலைப்பில் 2020 ஜூலை.17 அன்று அறிக்கையொன்றை வெளியிட்டன. அவ்வறிக்கையின்படி, 2050ஆம் ஆண்டில், உலகிற்கு, பத்து பில்லியனுக்கும் அதிகமான புதிய குளிரூட்டிகள் தேவைப்படும். இது, அவற்றின் எண்ணிக்கையை 14 பில்லியனாக மாற்றும்.
Question 32
அமெரிக்காவுக்கு இயக்கப்படும் இந்தியாவின் முதல் உள்நாட்டு வான் போக்குவரத்து நிறுவனம் எது?
A
இண்டிகோ
B
ஸ்பைஸ் ஜெட்
C
விஸ்தாரா
D
கோ ஏர்
Question 32 Explanation: 
 குருகிராமைச் சார்ந்த இந்திய வான் போக்குவரத்து நிறுவனமான ‘ஸ்பைஸ் ஜெட்’ இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் இயங்கவுள்ளது. ஏர் இந்தியாவுக்குப் பிறகு அமெரிக்காவிற்கு இயங்கும் முதல் இந்திய வான் போக்குவரத்து நிறுவனமாக ஸ்பைஸ் ஜெட் உள்ளது. இந்திய அரசாங்கத்திற்கும் அமெரிக்க அரசாங்கத்திற்கும் இடையிலான இந்திய வான் போக்குவரத்து சேவை ஒப்பந்தத்தின்கீழ் இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இது ஐக்கியப் பேரரசுக்கு இயக்கவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
Question 33
கிருஷ்ணாபட்டணம் துறைமுகத்தை கையகப்படுத்த, எந்நிறுவனத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது?
A
அதானி துறைமுகங்கள் SEZL
B
இந்திய கொள்கலன் கழகம்
C
ஆல்கார்கோ லாஜிஸ்டிக்ஸ்
D
இந்திய போக்குவரத்துக் கழகம்
Question 33 Explanation: 
 கிருஷ்ணாபட்டணம் துறைமுக நிறுவனத்தை, அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டல நிறுவனம் கையகப்படுத்த, இந்திய போட்டியியல் ஆணையம் (CCI) ஒப்புதல் அளித்துள்ளது. இவ்விணைப்பின் வாயிலாக கிருஷ்ணாபட்டணம் துறைமுகத்தின் பங்குகளைப் பெறுவதுடன், நிர்வாகக் கட்டுப்பாட்டையும் அதானி துறைமுகங்கள் நிறுவனம் கையகப்படுத்தியுள்ளது.
Question 34
தேசிய ஒலிபரப்பு நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?
A
ஜூலை 23
B
ஜூலை 24
C
ஜூலை 25
D
ஜூலை 26
Question 34 Explanation: 
 ஒவ்வோர் ஆண்டும் ஜூலை.23 அன்று இந்தியாவில் தேசிய ஒலிபரப்பு நாள் கொண்டாடப்படுகிறது. கடந்த 1927ஆம் ஆண்டு இதே நாளின்போது, நாட்டின் முதல் வானொலி ஒலிபரப்பு, அன்றைய பம்பாய் நிலையத்திலிருந்து மேற்கொள்ளப்பட்டது. இம்முதல் ஒலிபரப்பை இந்தியன் பிராட்காஸ்டிங் கம்பெனி என்ற தனியார் அமைப்பு மேற்கொண்டது. தற்போது, பிரஸார் பாரதி, தேசிய பொதுச்சேவை ஒலிபரப்பு நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. அது தூர்தர்ஷன் தொலைக்காட்சி வலையமைப்பு மற்றும் அகில இந்திய வானொலி (AIR) ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.
Question 35
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘ஆபரேஷன் லெஜண்ட்’ உடன் தொடர்புடைய நாடு எது?
A
மலேசியா
B
அமெரிக்க ஐக்கிய நாடுகள்
C
ஆப்கானிஸ்தான்
D
ஜப்பான்
Question 35 Explanation: 
 அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ‘ஆபரேஷன் லெஜண்ட்’ என்ற திட்டத்தை அறிவித்துள்ளார். வன்முறை குற்றங்களுக்கு எதிராக உறுதியான நடவடிக்கைகள் எடுக்க சிகாகோ, அல்புகெர்கி மற்றும் நியூ மெக்ஸிகோ உள்ளிட்ட பல அமெரிக்க நகரங்களுக்கு கூட்டாட்சி முகவர்களை அனுப்புவதை இத் திட்டம் நோக்கமாகக்கொண்டுள்ளது. குற்றங்களை எதிர்த்து உள்ளூர் காவல்துறைக்கு உதவ மத்திய சட்ட அமலாக்க முகவர்கள் பணியமர்த்தப்படுவார்கள்.
Question 36
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘ASTHROS’ திட்டம், எந்த நாட்டின் விண்வெளி நிறுவனத்துடன் தொடர்புடையது?
A
பிரான்ஸ்
B
இரஷ்யா
C
அமெரிக்க ஐக்கிய நாடுகள்
D
இந்தியா
Question 36 Explanation: 
 தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகமானது (NASA) ‘ASTHROS’ என்ற புதிய பணியில் ஈடுபடத் தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது. Astrophysics Stratospheric Telescope for High Spectral Resolution Observations at Sub millimeter-wavelengths என்பதன் சுருக்கமே ‘ASTHROS’.  புவியிலிருந்து கண்ணுக்குப் புலப்படாத தொலைதூர அகச்சிவப்புக்கதிரைக் காண்பதற்காக, கால்பந்து மைதான அளவிலான ஒரு வளிக்கூட்டில், தொலைநோக்கி ஒன்றை வைத்து அடுக்கு மண்டலத்திற்கு அனுப்புவதே இந்தப் பணியின் நோக்கமாகும். 2023ஆம் ஆண்டில் அண்டார்டிகாவிலிருந்து இதனைத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
Question 37
நிதிநிலைத்தன்மை அறிக்கை’யை வெளியிட்டுள்ள இந்திய நிதி நிறுவனம் எது?
A
இந்திய பங்குகள் & பரிவர்த்தனை வாரியம்
B
இந்திய ரிசர்வ் வங்கி
C
இந்திய திவால் வாரியம்
D
பாரத வங்கி
Question 37 Explanation: 
 இந்திய ரிசர்வ் வங்கியானது ஆண்டுக்கு இருமுறை வெளியிடப்படும் நிதிநிலைத்தன்மை அறிக்கை எனப்படும் ஓர் அறிக்கையை வெளியிடுகிறது. அனைத்து வங்கிகளின் மொத்த வாராக்கடன் விகிதம் 2020 மார்ச்சில் உள்ள 8.5 சதவீதத்திலிருந்து 2021 மார்ச்சுக்குள் 12.5 சதவீதமாக உயரக்கூடும் என்று RBI மதிப்பிட்டுள்ளது. பொதுத்துறை வங்கிகளின் மொத்த வாராக்கடன் விகிதம், 2021 மார்ச்சில் 15.2 சதவீதமாக உயரும். COVID-19 தொற்று காரணமாக விளைந்த பொது முடக்கமே, பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள இந்த மந்தநிலைக்கான முக்கிய காரணமாக கூறப்பட்டுள்ளது.
Question 38
தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தின், ‘தேன் பரிசோதனை ஆய்வகம்’ திறக்கப்பட்டுள்ள மாநிலம் எது?
A
மத்திய பிரதேசம்
B
குஜராத்
C
உத்தரகாண்ட்
D
பஞ்சாப்
Question 38 Explanation: 
 மத்திய வேளாண் மற்றும் உழவர்நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், மெய்நிகராக, ‘உலகத் தரம்வாய்ந்த தேன் பரிசோதனை ஆய்வக’த்தை திறந்துவைத்துள்ளார். குஜராத்தின் ஆனந்தில், தேசிய தேனீ வாரியத்தின் ஆதரவுடன் தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம் இத்தகைய நவீன ஆய்வகத்தை நிறுவியுள்ளது. வேளாண்மை, கூட்டுறவு மற்றும் உழவர்நலத்துறை ஆகியவை, தேசிய தேனீ வளர்ப்பு மற்றும் தேன் திட்டத்துக்கு ஈராண்டுகாலத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
Question 39
இந்தியாவில் வருமான வரி நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?
A
ஜூலை 23
B
ஜூலை 24
C
ஜூலை 25
D
ஜூலை 26
Question 39 Explanation: 
 வருமான வரி நாளானது ஆண்டுதோறும் ஜூலை.24 அன்று மத்திய நேரடி வரிகள் வாரியத்தாலும் மற்றும் அதுசார் அலுவலகங்களாலும் கொண்டாடப்படுகிறது. முதல் விடுதலைப் போரின்போது ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்வதற்காக, 1860ஆம் ஆண்டில் இதேநாளில், வருமான வரி என்றவொரு புதிய வரி முதன்முதலில் சர் ஜேம்ஸ் வில்சன் அவர்களால் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. நடப்பாண்டில் (2020) வரும் வருமான வரி நாள், அந்நாளின் 160ஆவது ஆண்டு நாளாகும்.
Question 40
தேசிய புலனாய்வுக் கட்டமைப்பு, “NATGRID” என்பதுடன் தொடர்புடைய மத்திய அமைச்சகம் எது?
A
நிதி அமைச்சகம்
B
உள்துறை அமைச்சகம்
C
வெளிவிவகார அமைச்சு
D
பாதுகாப்பு அமைச்சகம்
Question 40 Explanation: 
 தேசிய புலனாய்வு கட்டமைப்பு (NATGRID) என்பது உள்துறை அமைச்சகத்தின்கீழ் இணைக்கப்பட்ட ஓர் அலுவலகமாகும். விசாரணை மற்றும் சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கு நிகழ்நேர தகவல்கள் கிடைப்பதை இது உறுதிசெய்கிறது. எந்தவொரு நிறுவனத்தின் நிதி விவரங்களையும் CBI, அமலாக்க இயக்குநரகம் மற்றும் NIA உள்ளிட்ட 10 நிறுவனங்களுடன் பகிர்ந்துகொள்வதற்காக மத்திய நேரடி வரிகள் வாரியம் ‘NATGRID’ உடன் கூட்டிணைந்துள்ளது. இந்தத் தகவல்பகிர்வு வழிமுறை, NATGRID தளத்தின்கீழ் மேற்கொள்ளப்படுகிறது.
Question 41
அகலப்பாதையில் செல்லும் பத்து டீசல் பொறிகளை, இந்தியா, எந்த நாட்டிற்கு வழங்கவுள்ளது?
A
இலங்கை
B
வங்கதேசம்
C
மியான்மர்
D
லாவோஸ்
Question 41 Explanation: 
 இந்திய இரயில்வேயின் அண்மைய அறிக்கையின்படி, அது தனது அகலப்பாதையில் செல்லக்கூடிய 10 டீசல் பொறிகளை வங்கதேசத்துக்கு ஒப்படைக்கவுள்ளது. முன்னதாக, இரயில் பொறிகளை கொள்முதல் செய்வதற்கான கோரிக்கையை, வங்கதேசம், இந்தியாவுக்கு அனுப்பியிருந்தது. ஏனெனில், அதன் தற்போதைய இரயில் பொறிகளில் 72 சதவீதத்துக்கும் அதிகமானவை அதன் ஆயுளின் விளிம்பில் உள்ளன. உள்நாடு மற்றும் நாடுகளுக்கிடையேயான இரயில் போக்குவரத்துக்கு இந்த ரயில் பொறிகள் பயன்படுத்தப்படும் என வங்கதேசம் தெரிவித்துள்ளது.
Question 42
உன்னத பாரத் அபியானின்கீழ், IIT தில்லியுடன் கூட்டிணைந்துள்ள அமைப்பு எது?
A
TRIFED
B
NAFED
C
UPSC
D
AICTE
Question 42 Explanation: 
 மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின், ‘உன்னத இந்தியா திட்ட’த்தை தில்லி IITஉடன் இணைந்து TRIFED செயல்படுத்தவுள்ளது. இதற்கான முத்தரப்புப் புரிந்துணர்வு ஒப்பந்தம் TRIFED, IIT தில்லி மற்றும் விஞ்ஞான பாரதி ஆகிய 3 அமைப்புகளுக்கிடையே IIT தில்லியில் கையெழுத்திடப்பட்டது. TRIFED அமைப்பின், ‘வன் தன்’ திட்டத்தின்கீழ் உள்ள பழங்குடியின தொழில்முனைவோர், ‘உன்னத இந்தியா திட்ட’த்தின்கீழ் ஈராயிரத்து அறுநூற்றுக்கும் மேற்பட்ட கல்வி ஆராய்ச்சி நிறுவனங்களின் அனைத்து நிபுணத்துவத்தையும் பெற்றுக்கொள்ளமுடியும்.
Question 43
வனப்பகுதிகளை கண்காணிப்பதற்காக, ஆளில்லா கண்காணிப்பு வானூர்தி மற்றும் கொள்ளைக்கு எதிராக விரைவாக மீட்புப்பணியை மேற்கொள்ளும் வாகனம் ஆகியவற்றை வெளியிட்டுள்ள மாநிலம் எது?
A
தமிழ்நாடு
B
ஹரியானா
C
அஸ்ஸாம்
D
உத்தர பிரதேசம்
Question 43 Explanation: 
 வனப்பகுதிகளை கண்காணிப்பதற்காக, ஆளில்லா கண்காணிப்பு வானூர்தி மற்றும் கொள்ளை / அட்டூழியத்திற்கு எதிராக விரைவாக மீட்புப்பணியை மேற்கொள்ளும் வாகனம் ஆகியவற்றை அசாம் மாநில முதலமைச்சர் சர்பானந்த சோனோவால் வெளியிட்டுள்ளார்.  இவ்வாகனங்கள் கண்காணிப்பை வலுப்படுத்தவும், மனித-விலங்கு மோதலைக்குறைக்கவும் வனத் துறையால் பயன்படுத்தப்படும். தேசிய பூங்காக்கள், வனவுயிரி சரணாலயங்கள் மற்றும் பிற காப்புக் காடுகளில் வேட்டையாடுதல் ஆகியவற்றை கண்காணிப்பதற்காக இவை பயன்படுத்தப்படும்.
Question 44
எந்த நாட்டோடு இணைந்து, இந்தியா, ‘கூட்டுப்பொருளாதார & வர்த்தகக்குழு கூட்ட’த்தை நடத்தியது?
A
அமெரிக்க ஐக்கிய நாடுகள் (USA)
B
ஐக்கியப் பேரரசு (UK)
C
ஜப்பான்
D
வட கொரியா
Question 44 Explanation: 
 இந்தியா–ஐக்கியப் பேரரசு இடையிலான 14ஆவது கூட்டுப்பொருளாதார & வர்த்தகக்குழு கூட்டம் ஜூலை 24 அன்று மெய்நிகராக நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு, மத்திய வர்த்தக மற்றும் தொழிற்துறை அமைச்சர் பியூஷ் கோயல், ஐக்கியப் பேரரசின் சர்வதேய வர்த்தக அமைச்சர் எலிசபெத் டிரஸ் ஆகியோர் கூட்டாகத் தலைமை வகித்தனர். தடையற்ற வர்த்தக உடன்படிக்கை, படிப்படியாக அதன் பலன்களை விரைந்து பெறுவதை நோக்கிய அர்ப்பணிப்பு நடவடிக்கையைப் பகிர்ந்துகொள்ள கோயல் மற்றும் டிரஸ் ஆகியோர் இசைவு தெரிவித்தனர்.
Question 45
‘COVID-19 சட்ட ஆய்வகம்’ என்ற புதியதொரு முயற்சியை தொடங்கியுள்ள பன்னாட்டு அமைப்பு எது?
A
உலக நலவாழ்வு அமைப்பு (WHO)
B
உலக வர்த்தக அமைப்பு (WTO)
C
உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO)
D
UNICEF
Question 45 Explanation: 
 தனிநபர் மற்றும் சமூகங்களின் நலவாழ்வைப் பாதுகாப்பதற்கான சட்டங்கள் கடைப்பிடிக்கப்படுவதை உறுதிசெய்வதற்காக உலக நலவாழ்வு அமைப்பு (WHO) சமீபத்தில், ‘COVID-19 சட்ட ஆய்வகம்’ என்ற புதியதொரு முயற்சியைத் தொடங்கியுள்ளது. இது ஐநா வளர்ச்சித்திட்டம், WHO, HIV / AIDS தொடர்பான ஐ.நா திட்டம் (UNAIDS) மற்றும் ஜார்ஜ் டவுன் பல்கலையின் தேசிய மற்றும் உலகளாவிய நலவாழ்வு சட்டத்திற்கான ஓ’நீல் நிறுவனம் ஆகியவற்றின் கூட்டுத்திட்டமாகும்.
Question 46
இந்திய ரிசர்வ் வங்கியால் அமைக்கப்பட்ட QR குறியீட்டு பகுப்பாய்வுக்கான குழுவின் தலைவர் யார்?
A
D B பதக்
B
நரசிம்மன்
C
Y V ரெட்டி
D
D K மோகந்தி
Question 46 Explanation: 
 இந்திய ரிசர்வ் வங்கியானது QR (Quick Response) குறியீட்டை பகுப்பாய்வு செய்வதற்கான குழுவின் அறிக்கையை வெளியிட்டுள்ளது. டிஜிட்டல் கட்டணங்களில், தற்போது, இந்தியாவில் பயன்படுத்தப்படும் QR குறியீடுகளின் முறையை மறுஆய்வு செய்வதற்காக பேராசிரியர் D B பதக் தலைமையில், கடந்த 2019 டிசம்பரில் RBI இக்குழுவை அமைத்தது. QR குறியீடு பரிவர்த்தனைகளை நுகர்வோர் மத்தியில் பிரபலப்படுத்த சலுகைத் திட்டங்களை வழங்குமாறு இந்த அறிக்கை அரசிடம் கேட்டுக்கொண்டுள்ளது. தனியுரிம QR குறியீடுகளை படிப்படியாக அகற்றவும் இந்த அறிக்கை பரிந்துரைத்துள்ளது.
Question 47
மத்திய பிரதேச மாநிலத்தின் குவாலியர் - சம்பல் பகுதியானது எந்தப் பன்னாட்டு நிறுவனத்தின் ஆதரவோடு விளைநிலமாக மாற்றப்படவுள்ளது?
A
உலக வங்கி
B
ஆசிய வளர்ச்சி வங்கி
C
ஆசிய உட்கட்டமைப்பு & முதலீட்டு வங்கி
D
புதிய மேம்பாட்டு வங்கி
Question 47 Explanation: 
 மத்திய பிரதேச மாநிலம் குவாலியர்–சம்பல் பிராந்தியத்தில் உள்ள பெருமளவிலான மலைப்பாங்கான நிலங்களை, சாகுபடிக்கு உகந்த விளைநிலங்களாக மாற்றுவது குறித்து, வேளாண் & விவசாயிகள் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், உலக வங்கிப் பிரதிநிதிகளுடன் காணொளிக்காட்சி மூலம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.  இதன்மூலம், சுமார் மூன்று லட்சம் ஹெக்டேர் பரப்பிலான கரடுமுரடான நிலங்கள் சீர்படுத்தப்படும். இந்தத்திட்டத்தின்மூலம் மேற்கொள்ளப்படவுள்ள சீர்திருத்தங்கள், வேளாண் வளர்ச்சி மற்றும் சுற்றுச் சூழலை மேம்படுத்துவதோடு மட்டுமின்றி, மாநில மக்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க உதவுவதுடன், அப்பகுதியின் விரிவான வளர்ச்சிக்கும் வழிவகுக்கும்.
Question 48
எந்த உலகளாவிய சங்கத்துடனான, ‘அறிவியல் ஒத்துழைப்புக்கான ஒப்பந்த’த்தை அடுத்த ஐந்தாண்டுக -ளுக்கு இந்தியா புதுப்பிக்கவுள்ளது?
A
ASEAN
B
BIMSTEC
C
ஐரோப்பிய ஒன்றியம்
D
G20
Question 48 Explanation: 
 இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு (2020-2025) அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு தொடர்பான ஒப்பந்தத்தைப் புதுப்பித்துள்ளன. இருதரப்பினரும் வாய்மொழிக் குறிப்புகள் பரிமாறிக்கொள்வதன்மூலம் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.  இந்த ஒப்பந்தம் தொடக்கத்தில் நவம்பர் 23, 2001ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்டது. பின்னர் கடந்த காலத்தில் 2007 மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் இருமுறை புதுப்பிக்கப்பட்டது. இது அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சிகளில் இருதரப்பின் ஒத்துழைப்பை விரிவாக்கும், பொதுவான ஆர்வமுள்ள பகுதிகளில் ஒருங்கிணைந்து நடவடிக்கைகள் மேற்கொள்வதையும், அத்தகைய ஒத்துழைப்பின் முடிவுகளை அவர்களின் பொருளாதார & சமூக நலனுக்காகப் பயன்படுத்துவதையும் பலப்படுத்தும்.
Question 49
2021ஆம் ஆண்டில் கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டிகளின் நான்காவது பதிப்பை தொகுத்து வழங்கவுள்ள இந்திய மாநிலம் / யூனியன் பிரதேசம் எது?
A
ஒடிசா
B
ஹரியானா
C
கோவா
D
மேற்கு வங்கம்
Question 49 Explanation: 
 2021 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்குப் பிறகு, கேலோ இந்தியா இளையோர் போட்டிகளின் நான்காவது பதிப்பை, ஹரியானா, பஞ்சகுலாவில் நடத்துகிறது. முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் மற்றும் மத்திய விளையாட்டு அமைச்சர் கிரன் ரிஜிஜு ஆகியோர், COVID-19 தொற்றுநோய் காரணமாக போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவித்தனர். இதில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் / வீராங்கனைகள் பங்கேற்பர்.
Question 50
COVID-19 தொற்றுபரவலுக்கு இடையே, அனைத்து வனவுயிரி தயாரிப்புகளுக்கும் தடைவிதித்துள்ள ஆசிய நாடு எது?
A
சீனா
B
வியட்நாம்
C
பிலிப்பைன்ஸ்
D
மலேசியா
Question 50 Explanation: 
 முட்டைகள் / இளம் உயிரிகள் உட்பட இறந்த / உயிருடன் இருக்கும் அனைத்து வனவுயிரிகளையும் இறக்குமதிசெய்ய தடைவிதிக்கும் உத்தரவில் வியட்நாமின் பிரதமர் நுயேன் ஜுவான் புக் சமீபத்தில் கையெழுத்திட்டார். இவ்வுத்தரவில் வனவுயிரிகளை வர்த்தகம் செய்வது சம்பந்தப்பட்ட குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்குவதும் அடங்கும். COVID-19 பரவலுக்கு மத்தியில், வியட்நாமில் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மருத்துவம் / உணவு வகைகளில் அருகிவரும் வனவுயிரிகளை பயன்படுத்துவதில் பெயர்போன நாடாகும் வியட்நாம்.
Question 51
இந்திய பருத்திக் கழக்கமானது தனது சொந்த பருத்திக்கிடங்கை எந்த நாட்டில் அமைக்கவுள்ளது?
A
இலங்கை
B
வியட்நாம்
C
மியான்மர்
D
லாவோஸ்
Question 51 Explanation: 
 இந்திய பருத்திக் கழக்கமானது ஏற்றுமதியை அதிகரிப்பதற்காக வியட்நாமில் தனது சொந்த பருத்திக் கிடங்கை அமைக்கவுள்ளது. 1.52 மில்லியன் சுருள் பருத்தியை வங்கதேசத்துக்கு ஏற்றுமதி செய்ய அரசாங்களுக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் தயாரிக்கப்படுகிறது. அடுத்துவரும் அறுவடை காலத்திற்கு முன்னதாக உபரி பருத்தியை சேமித்து வைப்பதற்காக இத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
Question 52
ஐ.நா. உலக வனவுயிரிசார்ந்த குற்றங்கள் அறிக்கையின்படி, உலகில் சட்டத்துக்குப் புறம்பான புலிகள் தயாரிப்புகளை உற்பத்தி செய்வதில் முதலிடத்தில் உள்ள இரு நாடுகள் எவை?
A
இந்தியா மற்றும் சீனா
B
இந்தியா மற்றும் தாய்லாந்து
C
சீனா மற்றும் தாய்லாந்து
D
இந்தியா மற்றும் இந்தோனேசியா
Question 52 Explanation: 
 அண்மையில் வெளியான ஐக்கிய நாடுகளின் உலக வனவுயிரிசார்ந்த குற்றங்கள் அறிக்கையின்படி, உலகில் சட்டத்துக்குப்புறம்பான புலிகள் தயாரிப்புகளை உற்பத்தி செய்வதில் இந்தியாவும் தாய்லாந்தும் முதலிடத்தில் உள்ளன. இந்தப் புலிகள் தயாரிப்புகளை அதிகம் வாங்குவதில் சீனா முதலிடத்திலும், அதைத்தொடர்ந்த இடங்களில் தாய்லாந்தும் வியட்நாமும் உள்ளன. புலிகளின் மிகவும் மதிப்புமிக்க உடல்பாகமான அதன் எலும்புகள், மனிதர்களின் எலும்பு & தசைநார் காயங்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.
Question 53
உலகளாவிய வனவள மதிப்பீடு 2020’ என்ற தலைப்பில் அறிக்கையொன்றை வெளியிட்ட அமைப்பு எது?
A
உலக உணவு திட்டம்
B
உணவு மற்றும் வேளாண் அமைப்பு
C
உணவு மற்றும் வேளாண் அமைப்பு
D
இயற்கைக்கான உலகளாவிய நிதியம்
Question 53 Explanation: 
 அமெரிக்க ஐக்கிய நாடுகளின் சிறப்பு நிறுவனமான உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) அண்மையில், ‘உலகளாவிய வனவள மதிப்பீடு 2020’ என்ற தலைப்பில் அறிக்கையொன்றை வெளியிட்டது. 1990ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் 236 நாடுகளின் நிலையை இந்த அறிக்கை ஆராய்கிறது. கடந்த முப்பதாண்டுகளில், உலகம் முழுவதும் வனப்பரப்பளவு குறைந்துவிட்டதாக இந்த அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.  2010-2015ஆம் ஆண்டில் 12 மில்லியன் ஹெக்டேர்களாக இருந்த வனவிழப்பு விகிதம் 2015-2020ஆம் ஆண்டில் 10 மில்லியன் ஹெக்டேராக குறைந்துள்ளது. 1990ஆம் ஆண்டு முதல் உலகம் 178 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவிளான காடுகளை இழந்துள்ளது; இப்பரப்பளவு லிபியாவின் அளவுக்கு சமமாகும்.
Question 54
2020 பிப்ரவரி-ஜூன் காலகட்டத்தில் NITI ஆயோக்கால் தரவரிசைப்படுத்தப்பட்ட முன்னேற விரும்பும் மாவட்டங்களின் பட்டியலில் முதலிடம் பிடித்த மாவட்டம் எது?
A
நவாடா
B
மோகா
C
பீஜப்பூர்
D
பக்ரைச்
Question 54 Explanation: 
 2020 பிப்ரவரி-ஜூன் காலகட்டத்தில் NITI ஆயோக்கால் தரவரிசைப்படுத்தப்பட்ட முன்னேற விரும்பும் மாவட்டங்களின் பட்டியலில் சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பீஜப்பூர் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. மேகாலயாவின் ரி-போய் மாவட்டம் மற்றும் உத்தர பிரதேச மாநிலத்தின் பக்ரைச் மாவட்டம் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பெற்றுள்ளன. இந்த டெல்டா தரவரிசை சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து, கல்வி, வேளாண்மை மற்றும் நீர்வளம், நிதியியல் உள்ளடக்கம், திறன் மேம்பாடு மற்றும் அடிப்படை உட்கட்டமைப்பு உள்ளிட்ட 6 வளர்ச்சிப் பகுதிகளில் 112’க்கும் மேற்பட்ட முன்னேற விரும்பும் மாவட்டங்களால் செய்யப்பட்ட முன்னேற்றத்தை கருதுகிறது.
Question 55
எந்தெந்த தயாரிப்புகளை உற்பத்தி செய்வதற்காக, உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டம் மற்றும் தொழிற்பூங்கா திட்டம் உள்ளிட்ட நான்கு திட்டங்களை மத்திய அமைச்சர் சதானந்த கவுடா தொடங்கியுள்ளார்?
A
மொத்தவிலை மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்கள் 
B
ஜவுளி
C
தானியங்கு
D
எஃகு
Question 55 Explanation: 
 மொத்தவிலை மருந்துகள் & மருத்துவ சாதனங்களின் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதற்காக 4 திட்டங்களுக்கான வழிகாட்டுதல்களை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. மத்திய வேதியியல் மற்றும் உரங்களுக்கான அமைச்சர் D V சதானந்த கவுடா, இந்தத் திட்டங்களுக்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டார். அது மருந்து மூலப்பொருட்களில் பயன்படுத்தப்படும் இடைநிலை மருந்துகள், செயலில் உள்ள மருந்துப்பொருட்கள் & மருத்துவ சாதனங்கள் போன்றவற்றில் இறக்குமதியைக் குறைக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது.
Question 56
இந்திய தரநிர்ணய ஆணையத்தின் (BIS) புதிய திறன்பேசி செயலியின் பெயர் என்ன?
A
BIS Score
B
BIS Care
C
BIS Standard
D
BIS Utkarsh
Question 56 Explanation: 
 இந்திய தரநிர்ணய ஆணையத்தின் திறன்பேசி செயலியான, ‘BIS-Care’ மற்றும் நுகர்வோருக்கான வலைத்தளமான www.manakonline.in தரநிர்ணயம், மின்னணு-இந்திய தரநிர்ணய ஆணையத்தின் இணக்க மதிப்பீடு மற்றும் பயிற்சி இணையதளத்தை, மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு & பொது விநியோகத்துறை அமைச்சர் இராம்விலாஸ் பஸ்வான் தொடங்கிவைத்தார்.  ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் இந்தச் செயலி கிடைக்கப்பெறுகிறது. ISI முத்திரை மற்றும் ஹால்மார்க் முத்திரை பொறிக்கப்பட்ட பொருட்களின் தரம் மெய்யானதா என்பதை நுகர்வோர் பரிசோதிப்பதுடன், இச்செயலியைப் பயன்படுத்தி புகாரளிக்கவும் முடியும். முன்னதாக, அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியைக் கட்டுப்படுத்துவதற்காக, எதிர்வரும் 2021 மார்ச் மாதத்துக்குள் 371 பொருட்களுக்கான தர விதிமுறைகளை வடிவமைக்க, BIS’க்கு உத்தரவிடப்பட்டது.
Question 57
எந்த நாட்டினுடைய முந்நூறு ஆண்டுகள் பழைமைமிகுந்த வரலாற்றுச் சிறப்புவாய்ந்த திருக்கோவில், இந்திய ஒன்றியத்தின் உதவியுடன் புனரமைக்கப்பட்டுள்ளது?
A
இலங்கை
B
வங்கதேசம்
C
மியான்மர்
D
தாய்லாந்து
Question 57 Explanation: 
 வங்கதேசத்தின் மிகப்பழைமையான கோவில்களுள் ஒன்றான ஸ்ரீஸ்ரீ ஜாய்காளி மாதர் திருக்கோவில், 97 இலட்சம் டாக்கா மதிப்பிலான இந்திய நிதியுதவியுடன் புனரமைக்கப்பட்டுள்ளது. நேட்டூரில் உள்ள இந்தப் புனரமைக்கப்பட்ட கோவிலை, வங்கதேசத்துக்கான இந்திய உயராணையர் ரிவா கங்குலி தாஸ் திறந்துவைத்துள்ளார். இந்தச் செயல்முறைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், 2016ஆம் ஆண்டில் கையெழுத்தானது. இந்தியா அதன் உயர் விளைவுகள்கொண்ட சமூக மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் இந்த நிதியுதவியை வழங்கியுள்ளது. இதன்கீழ் மேலும் பல திட்டங்களும் மேற்கொள்ளப்படுகின்றன.
Question 58
2023 ICC உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்தவுள்ள நாடு எது?
A
இங்கிலாந்து
B
இந்தியா
C
தென்னாப்பிரிக்கா
D
ஆஸ்திரேலியா
Question 58 Explanation: 
 பன்னாட்டுக் கிரிக்கெட் கழகத்தின் (ICC) 2023ஆம் ஆண்டு உலகக்கோப்பைப் போட்டிகள் இந்தியாவில் நடத்தப்படவுள்ளன. 50 ஓவர்கள்கொண்ட உலகக்கோப்பை சூப்பர் லீக் போட்டிகளை அண்மையில், ICC, அறிமுகப்படுத்தியது. இந்தத் தகுதி லீக், உலகக்கோப்பையில் பங்கேற்கும் இறுதி ஏழு அணிகளை தீர்மானிக்கும். இந்தியா வழங்குநராக இருப்பதால், அது தானாகவே போட்டிக்கு தகுதிபெறும். ஜூலை 30 அன்று நடக்கவுள்ள இங்கிலாந்து & அயர்லாந்து இடையிலான தொடருடன் இந்த லீக் தொடங்கும்.
Question 59
எந்த இந்திய ஆளுமையின் பிறந்தநாள், உலக மாணவர்கள் நாளென கொண்டாடப்படுகிறது?
A
இராதாகிருஷ்ணன்
B
APJ அப்துல் கலாம்
C
ஹோமி J பாபா
D
விக்ரம் சாராபாய்
Question 59 Explanation: 
 இந்தியாவின் பதினோராவது குடியரசுத்தலைவரான டாக்டர். APJ அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளான அக்.15ஆம் தேதியை உலக மாணவர் நாளாக ஐநா அவை அங்கீகரித்து கொண்டாடி வருகிறது. அண்மையில், ஜூலை.27 அன்று, ‘இந்தியாவின் ஏவுகணை மனிதர்’ என அழைக்கப்படும் அவரது நினைவுநாள் இந்தியா முழுவதும் அனுசரிக்கப்பட்டது. ஷில்லாங்கில் உள்ள IIM’இல் மாணவர்களை இடையே உரையாற்றும்போது, மாரடைப்பு காரணமாக அவர் காலமானார்.
Question 60
‘Dare to Dream 2.0’ என்ற பெயரில் ஒரு புத்தாக்கப் போட்டியை தொடங்கியுள்ள அமைப்பு எது?
A
இந்திய விண்வெளி ஆய்வு மையம்
B
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு
C
NITI ஆயோக்
D
இந்திய அறிவியல் நிறுவனம்
Question 60 Explanation: 
 பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பானது (DRDO) அண்மையில், ‘Dare to Dream 2.0’ என்ற புத்தாக்கப் போட்டியை அறிமுகப்படுத்தியது. இந்திய ஒன்றியத்தின் முன்னாள் குடியரசுத்தலைவரான Dr. APJ அப்துல் கலாம் அவர்களின் ஐந்தாவது நினைவுநாளன்று இதை இந்திய பாதுகாப்பு அமைச்சர் இராஜ்நாத் சிங் அறிவித்தார். நாட்டில் விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறைகளில் புத்தாக்கங்களை மேற்கொள்ள, மேம்பட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதற்கு தனிநபர்கள் மற்றும் துளிர் நிறுவனங்களை இந்தப் போட்டி ஊக்குவிக்கிறது.
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 60 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!