March 1st Week 2021 Current Affairs Online Test in Tamil

நடப்பு நிகழ்வுகள் March 1 Week Online Test - 2021 Tamil

Congratulations - you have completed நடப்பு நிகழ்வுகள் March 1 Week Online Test - 2021 Tamil. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
ஆண்டுதோறும், ‘பாகுபாடுகள் ஒழிப்பு நாள் - Zero Discrimination Day’ அனுசரிக்கப்படும் தேதி எது?
A
மார்ச் 01
B
மார்ச் 02
C
மார்ச் 03
D
மார்ச் 04
Question 1 Explanation: 
ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 1 அன்று UNAIDSஆல் உலகம் முழுவதும் ‘பாகுபாடுகள் ஒழிப்பு நாள்’ அனுசரிக்கப்படுகிறது. 2030ஆம் ஆண்டுக்குள் AIDS’ஐ ஒரு பொதுநல அச்சுறுத்தலாக எண்ணி அதனை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமெனக்கொண்ட ஐநா அமைப்புதான் இந்த UNAIDS.
Question 2
பன்னாட்டு துருவக்கரடிகள் நாள் அனுசரிக்கப்படும் தேதி எது?
A
பிப்ரவரி 25
B
பிப்ரவரி 27
C
பிப்ரவரி 28
D
மார்ச் 01
Question 2 Explanation: 
பன்னாட்டு துருவக்கரடிகள் நாளானது ஒவ்வோர் ஆண்டும் பிப்.27 அன்று துருவக்கரடியின் பாதுகாப்பு நிலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக கொண்டாடப்படுகிறது. பன்னாட்டு துருவக்கரடிகள் நிறுவனடிக்கால் இந்நாள் ஏற்பாடுசெய்யப்படுகிறது. புவி வெப்பமடைதல் மற்றும் உருகிவரும் கடல்பனிக்கட்டிகள் ஆகியவை துருவக்கரடிகளின் மீது ஏற்படுத்தும் தாக்கம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இந்த நாள் தனது நோக்கமாகக் கொண்டுள்ளது.
Question 3
30ஆவது அட்ரியாடிக் பியர்ல் போட்டி நடைபெற்ற நாடு எது?
A
இந்தியா
B
ஜப்பான்
C
மாண்டினீக்ரோ
D
இத்தாலி
Question 3 Explanation: 
முப்பதாவது அட்ரியாடிக் பியர்ல் போட்டியானது மாண்டினீக்ரோவின் புத்வாவில் நடைபெற்றது. 5 தங்கப்பதக்கம், 3 வெள்ளிப்பதக்கம் மற்றும் இரண்டு வெண்கலப்பதக்கம் என மொத்தம் 10 பதக்கங்களுடன் இந்திய மகளிர் அணி முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதைத்தொடர்ந்து உஸ்பெகி -ஸ்தான் 2ஆம் இடத்திலும், செக் குடியரசு 3ஆம் இடத்திலும் உள்ளது.
Question 4
நடப்பாண்டு (2021) ஆசிய பொருளாதார பேச்சுவார்த்தைக்கு இணைந்து தலைமை தாங்கிய இந்திய அமைப்பு எது?
A
புனே பன்னாட்டு மையம்
B
ஐஐடி – மெட்ராஸ்
C
ஐஐம் – ஆமதாபாத்
D
BITS பிலானி
Question 4 Explanation: 
2021 ஆசிய பொருளாதார பேச்சவார்த்தை நிகழ்வுக்கு இந்தியாவின் புனே பன்னாட்டு மையம் இணைந்து தலைமைதாங்கியது. இந்நிகழ்வி -ல், மத்திய வெளியுறவு அமைச்சர் S ஜெய்சங்கர் மற்றும் ஜப்பான், ஆஸ்திரேலியா, மாலத்தீவுகள், மொரீஷியஸ் மற்றும் பூடான் ஆகிய நாடு -களைச்சார்ந்தோர் பங்கேற்றனர். ஆசிய பொருளாதார பேச்சுவார்த்தை என்பது வெளியுறவு அமைச்சகத்தி -ன் முதன்மை புவி-பொருளாதாரம் சார்ந்த மாநாடு ஆகும்.
Question 5
VL-SRSAM என்பது எந்த வகை ஏவுகணையாகும்?
A
வானிலிருந்து தாக்கும் ஏவுகணை
B
தரையிலிருந்து தாக்கும் ஏவுகணை
C
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை
D
தரையிலிருந்து வானுக்குத் தாக்கும் ஏவுகணை
Question 5 Explanation: 
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பானது VL-SRSAM (Vertical Launch Short Range Surface to Air Missile) ஏவுகணையை இருமுறை வெற்றிகரமாக சோதனைசெய்துள்ளது. இந்த ஏவுகணையை இந்திய கடற்படையில் பணியமர்த்துவதற்காக DRDO இதனை சிறப்பு முறையில் வடிவமைத்துள்ளது. பல்வேறு வான்வழி அச்சுறுத்தல்களை எதிர்த்து தாக்குவாதற்காக இந்த ஏவுகணை உருவாக்கப்பட்டுள்ளது.
Question 6
அண்மையில் NITI ஆயோக் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியால் அறிமுகப்படுத்தப்பட்ட, ‘DigiBoxx’ என்றால் என்ன?
A
சொத்து மேலாண்மை தளம்
B
ஆவணக்களஞ்சியம்
C
சமூக ஊடகம்
D
செய்தியிடல் செயலி
Question 6 Explanation: 
NITI ஆயோகின் தலைமைச் செயல் அதிகாரியான அமிதாப் காந்த் இந்தி -யாவின் முதல் டிஜிட்டல் சொத்து மேலாண்மை தளமான ‘டிஜிபாக்ஸை’ அறிமுகப்படுத்தியுள்ளார். இது ஒரு டிஜிட்டல்வழியிலான கோப்பு சேமிப்பு, பகிர்வு & மேலாண்மை மென்பொருளாகும். இது, அனைத்து கோப்புக -ளையும் ஒரு மையப்படுத்தப்பட்ட இடத்தில் சேமிப்பதற்கான ஒரு பாது -காப்பான வழியை வழங்குகிறது.
Question 7
‘இ-தர்தி ஜியோ’ என்ற வலைத்தளத்தை அறிமுகப்படுத்தியுள்ள மத்திய அமைச்சகம் எது?
A
வீட்டுவசதி & நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
B
உள்துறை அமைச்சகம்
C
புவி அறிவியல் அமைச்சகம்
D
எரிசக்தி அமைச்சகம்
Question 8
உள்மாநில மின்சார-பரிமாற்ற திட்டத்தை மேம்படுத்துவதற்காக அஸ்ஸாம் மாநிலத்திற்கு $304 மில்லியன் கடனை வழங்கவுள்ள நிறுவனம் எது?
A
ADB
B
உலக வங்கி
C
AIIB
D
புதிய வளர்ச்சி வங்கி
Question 8 Explanation: 
இந்தியாவும் ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியும் (AIIB) அஸ்ஸாம் உள்மாநில மின்சார-பரிமாற்ற அமைப்பை மேம்படுத்தும் திட்டத்திற்காக $304 மில்லியன் கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இந்தத் திட்டம் துணை மின்நிலையங்களை நிர்மாணிப்பதையும் தேவையான பரிமா -ற்ற வடங்களை அமைப்பதையும் நோக்கமாக கொண்டுள்ளது.
Question 9
NASA & ஜெர்மன் விண்வெளி ஆய்வுமையத்தின் ஓர் அண்மைய ஆய்வின்படி, பூமியில் காணப்படும் சில நுண்ணுயிரிகள், பின்வரும் எந்தக் கோளில் உயிர்வாழக்கூடும்?
A
வியாழன்
B
வெள்ளி
C
செவ்வாய்
D
புதன்
Question 9 Explanation: 
NASA மற்றும் ஜெர்மன் விண்வெளி ஆய்வு மையத்தின் ஓர் அண்மைய ஆய்வின்படி, பூமியில் காணப்படும் சில நுண்ணுயிரிகளால் செவ்வாய் கோளில் உயிர்வாழக்கூடும். ஓர் அறிவியல்பூர்வ பலூனைக்கொண்டு பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளை புவியின் அடுக்கு மண்டலம் வரை ஏவுவதன்மூலம் செவ்வாய் போன்ற சூழ்நிலையில் அவை எப்படி இருக்கும் என்பதை ஆராய்ச்சியாளர்கள் சோதித்தனர்.
Question 10
இந்தியாவின் முதல் கடலடி சுரங்கப்பாதை கட்டப்படுகிற நகரம் எது?
A
சென்னை
B
கொச்சின்
C
மும்பை
D
கொல்கத்தா
Question 10 Explanation: 
மும்பை நகரத்தின் கடலோர சாலைகள் திட்டத்தின் ஒருபகுதியாக இந்தியாவின் முதல் கடலடி சுரங்கப்பாதையானது மும்பையில் கட்டப்பட உள்ளது. இது, வரும் 2023ஆம் ஆண்டுக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2.07 கிமீ நீளத்தைக்கொண்டுள்ளன இந்த இரட்டைச்சுரங்கப்பாதைகள், கடல்படுகைக்கு 20 மீட்டர் கீழே அமைந்திருக்கும்.
Question 11
உலக வனவுயிரிகள் நாள் கடைப்பிடிக்கப்படும் தேதி எது?
A
மார்ச் 03
B
மார்ச் 04
C
மார்ச் 04
D
மார்ச் 06
Question 11 Explanation: 
ஒவ்வோர் ஆண்டும் மார்ச்.3 ஆம் தேதியன்று உலக வனவுயிரிகள் நாள் அனுசரிக்கப்படுகிறது. இது, புவியில் வாழும் விலங்கு மற்றும் தாவரங்கள் எதிர்கொள்ளும் ஆபத்துகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. “Forests and Livelihoods: Sustaining People and Planet” என்பது நடப்பா -ண்டு (2021) வரும் உலக வனவுயிரிகள் நாளுக்கான கருப்பொருளாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.
Question 12
உலக செவிப்புலன் நாள் கடைப்பிடிக்கப்படும் தேதி எது?
A
மார்ச் 01
B
மார்ச் 02
C
மார்ச் 03
D
மார்ச் 04
Question 12 Explanation: 
காது கேளாமை மற்றும் செவித்திறன் குறைபாடு ஆகியவற்றை எப்படி தடுப்பது என்பதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வோர் ஆண்டும் மார்ச்.3 அன்று உலக செவிப்புலன் நாள் அனுசரிக்கப்படுகிறது. உலக நலவாழ்வு அமைப்பானது (WHO) ஜெனீவாவில் அமைந்துள்ள அதன் தலைமையகத்தில் ஆண்டுதோறும் உலக செவிப்புலன் நாள் கருத்தரங் -கை ஏற்பாடு செய்கிறது. “Hearing Care for All” என்பது இந்த ஆண்டில் (2021) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும்.
Question 13
வயநாடு வனவுயிரிகள் சரணாலயம் அமைந்துள்ள மாநிலம் எது?
A
தமிழ்நாடு
B
தமிழ்நாடு
C
கர்நாடகா
D
தெலங்கானா
Question 13 Explanation: 
வனத்துறை மற்றும் ஃபெர்ன்ஸ் நேச்சர் கன்சர்வேஷன் சொசைட்டி இணைந்து நடத்திய தட்டாம்பூச்சி குறித்த ஓர் ஆய்வு சமீபத்தில் வயநாடு வனவுயிரிகள் சரணாலயத்தில் நிறைவடைந்தது. இந்தச் சரணாலயம் மேற்குத்தொடர்ச்சிமலையில் கேரள மாநிலத்தில் அமைந்துள்ளது. கிட்டத்தட்ட 4 மாதங்களுக்கு நீடித்த இந்தக் கணக்கெடுப்பின்போது, 84 வகையான ஓடோனேட்டுகள் காணப்பட்டன. ‘ஓடோனேட்ஸ்’ என்பது டிராகன்ஃபிளைஸ் மற்றும் டாம்செஃப்ளைஸ் ஆகியவற்றைக்கொண்ட பூச்சிகளின் வரிசையாகும்.
Question 14
அண்மையில் எந்த மாநிலத்தில், கால்நடை மற்றும் விலங்கு அறிவியலுக்கான ஒருங்கிணைந்த ஆராய்ச்சி நிறுவனம் (AIIRLAS) திறக்கப்பட்டது?
A
தமிழ்நாடு
B
கேரளா
C
கர்நாடகா
D
உத்தர பிரதேசம்
Question 14 Explanation: 
தமிழ்நாட்டின் முதலமைச்சர் எடப்பாடி க பழனிசாமி அவர்கள் சமீபத்தில் கால்நடை மற்றும் விலங்கறிவியலுக்கான ஒருங்கிணைந்த ஆராய்ச்சி நிறுவனத்தை (AIIRLAS) திறந்துவைத்தார். இது, சேலம் மாவட்டத்தின் தலைவாசலில் அமைந்துள்ளது. இதன்வகையில் இது ஆசியாவிலேயே மிகப்பெரிய நிறுவனமாகும். `1,023 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது.
Question 15
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘ஹண்டர் கில்லர்ஸ்’, எந்த இந்திய ஆயுதப்படையால் கொள்முதல் செய்யப்படவுள்ளது?
A
இந்திய வான்படை
B
இந்திய இராணுவம்
C
இந்திய கடலோரக் காவல்படை
D
இந்தியக் கடற்படை
Question 15 Explanation: 
பாதுகாப்பு அமைச்சரான இராஜ்நாத் சிங் தலைமையிலான இராணுவ கொள்முதல் குழுமம், 118 அர்ஜுன் Mk1-A ‘ஹண்டர் கில்லர்ஸை’ கொள் முதல் செய்வதற்கான இந்திய இராணுவத்தின் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஒப்புதலின்மூலம், இந்திய இராணுவம், விரைவில், 118 அர்ஜுன் Mk-1A பிரதான போர் பீரங்கிகளைக் கொண்டிருக்கும். இது, பாதுகாப்பு ஆராய்ச்சி & மேம்பாட்டு அமைப்பின் தயாரிப்பாகும்.
Question 16
சமீபத்திய செய்திகளில் இடம்பெற்ற அமேஸானியா-1 செயற்கைக் கோள் சார்ந்த நாடு எது?
A
பிரான்ஸ்
B
பிரேஸில்
C
பின்லாந்து
D
பிலிப்பைன்ஸ்
Question 16 Explanation: 
PSLV C-51 ஏவுகலத்தைப் பயன்படுத்தும் ISRO’இன் 53ஆவது திட்டமா -னது அமேஸானியா-1 செயற்கைக்கோளை விண்ணில் ஏவும். இந்தச் செயற்கைக்கோள் பிரேசிலுக்கு சொந்தமானதாகும். கூடுதலாக, பதினெண் இணை செயற்கைக்கோள்களையும் இது சுமந்து செல்லும். இந்த ஏவுகலம், ஆந்திர பிரதேச மாநிலத்தின் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து ஏவப்படும்.
Question 17
“நம்ம கார்கோ” என்ற சேவை தொடங்கப்பட்டுள்ள மாநிலம் எது?
A
தமிழ்நாடு
B
கேரளா
C
கர்நாடகா
D
தெலங்கானா
Question 17 Explanation: 
கர்நாடக மாநில முதலமைச்சர் B S எடியுரப்பா, சமீபத்தில், ‘நம்ம கார்கோ’ என்ற சேவையை அறிமுகப்படுத்தினார். இந்த முயற்சியின்கீழ், மாநில சாலைப்போக்குவரத்துக்கழக பேருந்துகள் சரக்கு பொதிகளை கொண்டு சென்று மாநிலத்திற்கு கூடுதல் வருவாயை ஈட்டும். இது, கர்நாடகாவின் 109 பேருந்துநிலையங்களிலும், அண்டை மாநிலங்களின் தேர்ந்தெடுக் -கப்பட்ட இடங்களிலும் செயல்படுத்தப்படுகிறது.
Question 18
COVAX திட்டத்தின்மூலம் இலவச COVID தடுப்பூசிகளைப்பெற்ற முதல் நாடு எது?
A
காங்கோ
B
கானா
C
சூடான்
D
எத்தியோப்பியா
Question 18 Explanation: 
COVAX திட்டத்தின்மூலம் இலவச COVID தடுப்பூசிகளைப் பெற்ற முதல் நாடு கானா ஆகும். உலக நலவாழ்வு அமைப்பானது (WHO) COVAX திட்டத்தை கவி (Gavi) தடுப்பூசி கூட்டணி மற்றும் தொற்றுநோய் தயார் நிலை கண்டுபிடிப்புகளுக்கான கூட்டணி ஆகியவற்றுடன் இணைந்து மேற்கொண்டு வருகிறது. COVID தடுப்பூசிகளை ஏழை நாடுகளுடன் பகிர்ந்துகொள்வதை இது தனது நோக்கமாகக் கொண்டுள்ளது.
Question 19
மிகவும் அருகிவிட்ட இனமான, ‘ஆல்பைன் தாவர இனங்கள்’ கண்டுபிடிக்கப்பட்டுள்ள மாநிலம் எது?
A
அஸ்ஸாம்
B
சிக்கிம்
C
அருணாச்சல பிரதேசம்
D
ஹிமாச்சல பிரதேசம்
Question 19 Explanation: 
அருணாச்சல பிரதேச மாநிலத்தின் தவாங் மாவட்டத்தில், ‘ஆல்பைன் தாவரம்’ என்ற ஒரு புதிய இனத்தை அறிவியலாளர்கள் குழு கண்டறிந் -துள்ளது. ‘Cremanthodium indicum’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்புதிய இனங்கள், இமயமலை சூரியகாந்தி குடும்பத்தைச் சார்ந்தவை. இந்த இனம், தவாங் மாவட்டத்தின் பெங்கா-டெங் சோ ஏரியைப் பூர்வீகமாகக் கொண்டதாகும்.
Question 20
இந்திய கடல்சார் உச்சிமாநாடு-2021 நடைபெறும் இடம் எது?
A
சென்னை
B
கொச்சின்
C
மும்பை
D
மெய்நிகர் முறையில்
Question 20 Explanation: 
‘இந்திய கடல்சார் உச்சிமாநாடு 2021’ஐ பிரதமர் மோடி, மார்ச்.2 அன்று காணொலிக்காட்சிமூலம் தொடங்கிவைத்தார். துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப்போக்குவரத்து அமைச்சகத்தின் அலுவல் -பூர்வ அறிக்கையின்படி, இதன் தொடக்க அமர்வில் பல்வேறு நாடுகளை சார்ந்த அமைச்சர்கள் பங்கேற்பர். இந்த உச்சிமாநாட்டின்போது `20,000 கோடி மதிப்புள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Question 21
BRICS அமைப்பின் நடப்பாண்டிற்கான (2021) தலைவராக பொறு -ப்பேற்றுள்ள நாடு எது?
A
இந்தியா
B
சீனா
C
பிரேஸில்
D
இரஷ்யா
Question 21 Explanation: 
BRICS அமைப்பின் நடப்பாண்டிற்கான (2021) தலைவராக இந்தியா பொறுப்பேற்றுள்ள. BRICS உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற மூன்று நாள் கூட்டத்தின் தொடக்கத்துடன் இந்தியா தனது தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டது. இக்கூட்டத்திற்கு வெளியுறவு அமைச்சின் செயலர் தலைமைதாங்கினார். இச்சந்திப்பின்போது, இந்தியா, 2021ஆம் ஆண்டிற்கான அதன் கருப்பொருள்கள் மற்றும் முன்னுரிமைகளை BRICS’இன் உறுப்புநாடுகளுக்கு அறிமுகம் செய்தது.
Question 22
பின்வரும் எத்தேதியிலிருந்து, COVID தடுப்பூசியின் இரண்டாவது கட்டம் இந்தியாவில் தொடங்கவுள்ளது?
A
2021 மார்ச் 01
B
2021 மார்ச் 15
C
2021 ஏப்ரல் 01
D
2021 ஜூன் 01
Question 22 Explanation: 
COVID-19 நோய்க்கான இரண்டாம் சுற்று தடுப்பூசி செலுத்துதலுக்கு இந்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அது, 2021 மார்ச்.1 முதல் தொடங்க உள்ளது. இச்சுற்று, 60 வயதுக்கு மேற்பட்டவர்களையும், 45 வயதுக்கு மேற்பட்ட, ஒன்றுக்கும் மேற்பட்ட நோய்களை உடையவர்களையும் இல -க்காகக்கொண்டுள்ளது. பயனாளிகள் எந்தவொரு அரசு மருத்துவம -னையிலும் இலவசமாக தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். மேலும், தனி -யார் மையங்களிலும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.
Question 23
முதலாவது ‘இந்திய புரத நாள்’ கொண்டாடப்பட்ட ஆண்டு எது?
A
2019
B
2020
C
2021
D
1990
Question 23 Explanation: 
தேசிய அளவிலான பொதுநல முன்னெடுப்பான ‘Right to Protein’ இந்தி -யாவின் முதல் ‘புரத நாளை’ 2020 பிப்.27 அன்று அறிமுகப்படுத்தியது. புரதத்தின் ஊட்டச்சத்து நன்மைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்து -வதற்காக இந்நாள் அனுசரிக்கப்படுகிறது. “Powering with Plant Protein” என்பது நடப்பாண்டு (2021) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும்.
Question 24
“உலகளவில் பள்ளிகளில் உணவளிக்கும் நிலை - State of Schoolfeeding Worldwide” என்றவொரு அறிக்கையை வெளியிடுகிற அமைப்பு எது?
A
FAO
B
IUCN
C
UN – WFP
D
WTO
Question 24 Explanation: 
“உலகளவில் பள்ளிகளில் உணவளிக்கும் நிலை” என்ற பெயரிலான ஓர் அறிக்கையை ஐக்கிய நாடுகள் அவை - உலக உணவுத்திட்டம் (WFP) வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை, முதன்முதலில் 2013ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. இந்த அறிக்கை, பள்ளி அடிப்படையிலான ஊட்டச்சத்து திட்டங்களை செயல்படுத்துதல் மற்றும் பாதுகாப்பு குறித்த விரிவான பகுப்பாய்வை வழங்குகிறது.
Question 25
புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளின்படி, டிஜிட்டல் தளங்கள், எத்தனை மணிநேரத்திற்குள் தேவையான தகவல்களை வழங்க வேண்டும்?
A
12 மணி நேரம்
B
24 மணி நேரம்
C
48 மணி நேரம்
D
72 மணி நேரம்
Question 25 Explanation: 
தகவல் தொழில்நுட்பம் (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் ஊடக நெறிமுறைகள் குறியீடு) விதிகள் - 2021 அண்மையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அது, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் வெளியிடப்பட்டது. இந்த விதிகளின்கீழ், வாட்ஸப்போன்ற தளங்கள் அங்கீகரிக்கப்பட்ட முக -வர் நிறுவனங்களுக்கு அடையாள சரிபார்ப்புகுறித்த தகவல்களை 72 மணிநேரத்திற்குள் வழங்கவேண்டும். சட்டத்துக்குப் புறம்பான செய்திக -ளை பதிபவர்களை புகாரளிப்பதற்காக குறைதீர்க்கும் பொறிமுறையை அமைக்கவேண்டும் எனவும் இவ்விதிகளில் உள்ளது.
Question 26
நகர புத்தாக்க பரிவர்த்தனை தளத்தை அறிமுகப்படுத்தியுள்ள மத்திய அமைச்சகம் எது?
A
உள்துறை அமைச்சகம்
B
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம்
C
மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
D
கல்வி அமைச்சகம்
Question 26 Explanation: 
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகமானது சமீபத்தில் நகர புத்தாக்க பரிமாற்ற (City Innovation Exchange) என்றவொரு தளத்தை தொடங்கியுள்ளது. நகரங்களில் காணப்படும் சவால்களுக்கு புதுமையான தீர்வுகளை வடி -வமைப்பதற்காக கல்வியாளர்கள், வணிகங்கள் மற்றும் அரசாங்கத்தை ஒன்றிணைப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தத் தளத்தில், நானூற்றுக்கும் மேற்பட்ட துளிர் நிறுவனங்கள், 100 சீர்மிகு நகரங்கள், 150’க்கும் மேற்பட்ட சவால் அறிக்கைகள் மற்றும் 215’ க்கும் மேற்பட்ட தீர்வுகள் வெளியிடப்பட்டன.
Question 27
மூடிஸ் முதலீட்டாளர்கள் சேவையின் அண்மைய கணிப்பின்படி, 2021-22ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி -யின் வளர்ச்சி விகிதம் என்னவாக இருக்கும்?
A
7.5 சதவீதம்
B
9.5 சதவீதம்
C
13.5 சதவீதம்
D
15 சதவீதம்
Question 27 Explanation: 
உலகளாவிய மதிப்பீட்டு நிறுவனமான மூடிஸ், இந்தியாவின் 2021-22 மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி கணிப்பை 13.5 சதவீதமாக திருத்தியுள்ளது. நாட்டின் வளர்ச்சி, அடுத்த ஆண்டில் 6.2 சதவீதமாக இருக்கும். மூடிஸ், இந்தியாவின் இறையாண்மை மதிப்பீட்டை Baa3’இல் தக்கவைத்துள்ளது. அது, மிகக்குறைந்த முதலீட்டு தரமாகும். மேலும், அது எதிர்மறையான கண்ணோட்டத்தைக்குறிக்கிறது. இந்திய மதிப்பீட்டு நிறுவனமான ICRA, 2021-22ஆம் நிதியாண்டில், இந்தியாவின் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி, 10.5 சதவீத அளவுக்கு வளர்ச்சியடையும் என்று அறிவித்தது.
Question 28
தூய்மைமிகு சிறப்புவாய்ந்த இடங்கள் முன்முயற்சியின் நான்காம் கட்டத்தின்கீழ், எத்தனை தளங்களை மத்திய ஜல் சக்தி அமைச்சகம் தேர்ந்தெடுத்துள்ளது?
A
8
B
12
C
15
D
16
Question 28 Explanation: 
தூய்மைமிகு சிறப்புவாய்ந்த இடங்கள் (SIP) முன்முயற்சியின் நான்காம் கட்டத்தின்கீழ், 12 சிறப்புவாய்ந்த தளங்களைத் தேர்ந்தெடுத்துள்ளதாக மத்திய ஜல் சக்தி அமைச்சகத்தின் குடிநீர் மற்றும் நலவாழ்வுத்துறை அறிவித்துள்ளது. SIP என்பது தூய்மை இந்தியா இயக்கம் – கிராமப்புறம் (SBM-G) இயக்கத்தின் ஒரு முன்முயற்சியாகும். இம்முயற்சி, தளங்களிலும் அதனைச்சுற்றியுள்ள இடங்களிலும் தூய்மை தரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஜல் சக்தி அமைச்சகமானது வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சக -ம், சுற்றுலா அமைச்சகம், கலாச்சார அமைச்சகம் மற்றும் மாநில / யூடி அரசாங்கங்களுடன் இதற்காக ஒருங்கிணைந்துள்ளது
Question 29
விரைவில் இந்திய ராணுவம் பயன்படுத்தவுள்ள செய்தியனுப்பும் தளத்தின் பெயர் என்ன?
A
Secure Application for Internet
B
Safe Messaging Service
C
Secure Instant Messaging
D
Safe Communication Network
Question 29 Explanation: 
இந்திய இராணுவத்தளபதி M M நரவனேவின் அண்மைய அறிக்கையி -ன்படி, இந்திய ராணுவம் தனது உள்ளக தொடர்புகளுக்கு SAI (Secure Application for Internet) என்ற செய்தி பரிமாற்ற தளத்தைப் பயன்படுத்தத் தொடங்கவுள்ளது. கர்னல் சாய் சங்கர் உருவாக்கிய இந்தச் செயலி, இணைய பாதுகாப்பு & தரவு சோதனை ஆகியவற்றுக்கான அனுமதி பெறும் பணியில் ஈடுபட்டுள்ளது. அனுமதி கிடைத்தபிறகு, இந்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் இந்தச் செயலி பயன்படுத்தப்படும்.
Question 30
கிருஷ்ணதேவராயனின் இறப்புகுறித்த முதல் கல்வெட்டுக்குறிப் -பை, ASI, பின்வரும் எவ்விடத்தில் கண்டுபிடித்தது?
A
ஆக்ரா
B
மதுரா
C
தும்கூர்
D
கிருஷ்ணகிரி
Question 30 Explanation: 
அண்மையில், இந்திய தொல்லியல் ஆய்வகத்தின் (ASI) உறுப்பினர்கள் கிருஷ்ணதேவராய நாயக்கனின் இறப்பு குறித்த முதல் கல்வெட்டுக் குறிப்பை கண்டுபிடித்துள்ளனர். கிருஷ்ணதேவராய நாயக்கன் விஜயந -கர பேரரசின் பேரரசராக இருந்து பொ ஆ 1509-1529 வரை ஆண்டார். கர்நாடகாவின் தும்கூர் மாவட்டத்தின் ஹொன்னேஹள்ளியில் உள்ள கோபாலகிருஷ்ணா கோவிலுக்கு அருகே இக்கல்வெட்டு காணப்பட்டது.
Question 31
உலக வேலைவாய்ப்பு மற்றும் சமூக கண்ணோட்டம்-2021’ஐ வெளியிட்டுள்ள பன்னாட்டு அமைப்பு எது?
A
IMF
B
ILO
C
WEF
D
UNICEF
Question 31 Explanation: 
உலக வேலைவாய்ப்பு மற்றும் சமூக கண்ணோட்டம் – 2021’ஐ பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு (ILO) வெளியிட்டுள்ளது. இவ்வறிக்கை ILO’இன் முதன்மை வெளியீடுகளுள் ஒன்றாகும். இது, வேலையை ஒழு -ங்கமைப்பதற்கான விவரங்களை வழங்குகிறது. இணைய அடிப்படை -யிலான மற்றும் இருப்பிட அடிப்படையிலான தளங்களில், தொழிலாளர் -கள் மற்றும் வணிகங்களின் அனுபவத்தையும் இது சித்தரிக்கிறது.
Question 32
நாணயம் மற்றும் நிதி தொடர்பான அறிக்கையை வெளியிட்டுள்ள அமைப்பு எது?
A
பன்னாட்டுச் செலவாணி நிதியம்
B
உலக வங்கி
C
இந்திய ரிசர்வ் வங்கி
D
புதிய வளர்ச்சி வங்கி
Question 32 Explanation: 
2020-21ஆம் ஆண்டிற்கான நாணயம் மற்றும் நிதி (Currency and Finance) தொடர்பான அறிக்கையை இந்திய ரிசர்வ் வங்கி அண்மையில் வெளியிட்டுள்ளது. “Reviewing the Monetary Policy Framework” என்பது இந்த ஆண்டின் அறிக்கைக்கான கருப்பொருளாகும். நடைமுறையில் உள்ள நிச்சயமற்ற பொருளாதார சூழ்நிலைக்கு எதிராக, 2021 மார்ச்சில் நிலவும் பணவீக்கம் மற்றும் பணவீக்க இலக்குகளின் போக்குகளை இந்த அறிக்கை விமர்சன ரீதியாக பகுப்பாய்வு செய்கிறது.
Question 33
COVID-19 ஆக்ஸிஜன் அவசர பணிக்குழுவை தொடங்கவுள்ள அமைப்பு எது?
A
UNICEF
B
இந்திய மருத்துவ சங்கம்
C
AIIMS
D
உலக நலவாழ்வு அமைப்பு
Question 33 Explanation: 
உலக நலவாழ்வு அமைப்பு (WHO) தலைமையிலான ஒரு கூட்டமைப்பு COVID-19 உயிர்வளி அவசர பணிக்குழுவை தொடங்க முடிவுசெய்துள் -ளது. குறைந்த மற்றும் நடுத்தர வருவாய்கொண்ட நாடுகளின் சுகாதார அமைப்புகள் மீதான அழுத்தங்களுக்கு மத்தியில் இம்முடிவு வந்துள்ளது. அந்நாடுகளுள் பல உயிர்வளி இன்றி சிகிச்சைக்கு பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றன. இப்பணிக்குழுவின்கீழ், உலகெங்கிலும் உள்ள சுகாதார அமைப்புகளுக்கு உயிர்வளி வழங்கலை அதிகரிப்பதை உலக சுகாதார அமைப்பு (WHO) நோக்கமாகக் கொண்டுள்ளது.
Question 34
78ஆவது கோல்டன் குளோப் விருதுகளில் ‘சிறந்த திரைப்படம்’ (நாடகம்) விருதை வென்ற திரைப்படம் எது?
A
நோமட்லேண்ட்
B
பரியேறும் பெருமாள்
C
தி கிரெளன்
D
கனா
Question 34 Explanation: 
78ஆவது கோல்டன் குளோப் வெற்றியாளர்களாக “Nomadland” மற்றும் “Borat Subsequent Moviefilm” ஆகிய திரைப்படங்கள் தெரிவாகின. நாடகப்பிரிவுக்கான விருதை ‘Nomadland’உம், நகைச்சுவை அல்லது இசைப்பிரிவுக்கான விருதை ‘Borat Subsequent Moviefilm’உம் வென்றது. ‘Nomadland’இன் இயக்குநரான சோலி ஜாவோ, 1984’க்குப் பிறகு ‘சிறந்த இயக்குநர்’ விருதை வென்ற முதல் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றார்.
Question 35
இந்திய பெண்கள் லீக்கை நடத்தவுள்ள மாநிலம் எது?
A
கேரளா
B
ஒடிஸா
C
இராஜஸ்தான்
D
திரிபுரா
Question 35 Explanation: 
இந்த ஆண்டின் இந்திய பெண்கள் லீக், ஒடிஸா மாநிலத்தால் நடத்தப்பட உள்ளது. இந்திய பெண்கள் லீக் என்பது இந்தியாவின் ஒரு முன்னணி பெண்கள் கால்பந்து லீக் போட்டியாகும். இது, அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தால் நடத்தப்படுகிறது. இதுமுதலில், தில்லியில், 6 அணிகளு -டன் விளையாடும் போட்டியாக இருந்தது. இதன் கடைசி பருவத்தின் -போது (4ஆவது IWL) பெங்களூரில் 12 அணிகளாக மாற்றப்பட்டது.
Question 36
ஆண்டுதோறும், ‘பாகுபாடுகள் ஒழிப்பு நாள் - Zero Discrimination Day’ அனுசரிக்கப்படும் தேதி எது?
A
மார்ச் 02
B
மார்ச் 01
C
மார்ச் 05
D
மார்ச் 04
Question 36 Explanation: 
ஒவ்வோர் ஆண்டும் மார்ச்.1 அன்று UNAIDSஆல் உலகம் முழுவதும் ‘பாகுபாடுகள் ஒழிப்பு நாள்’ அனுசரிக்கப்படுகிறது. 2030ஆம் ஆண்டுக்குள் AIDS’ஐ ஒரு பொதுநல அச்சுறுத்தலாக எண்ணி அதனை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமெனக்கொண்ட ஐநா அமைப்புதான் இந்த UNAIDS.
Question 37
பின்வரும் எந்த அமைச்சகத்தால், ‘சுகம்ய பாரத்’ செயலி தொடங்க -ப்பட்டுள்ளது?
A
பெண்கள் & குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சகம்
B
திறன் மேம்பாட்டு அமைச்சகம்
C
சமூக நீதி & அதிகாரமளித்தல் அமைச்சகம்
D
அறிவியல் & தொழில்நுட்ப அமைச்சகம்
Question 37 Explanation: 
மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகமானது “சுகம்ய பாரத்” என்ற செயலியை உருவாக்கியுள்ளது. அணுகலை மேம்படுத்துவ -தற்காக, மாற்றுத்திறனாளிகள் அதிகாரமளித்தல் துறை (DEPwD) இதை உருவாக்கியுள்ளது. இது “Access – The Photo Digest” என்ற தலைப்பி -லான கையேட்டுடன் வெளியிடப்பட்டது.
Question 38
இந்தியா, பின்வரும் எந்நட்புநாட்டோடு இணைந்து, ‘சுற்றுச்சூழல் ஆண்டு’ என்றவொன்றை அறிமுகப்படுத்தியது?
A
பிரான்ஸ்
B
இலங்கை
C
மொரிஷியஸ்
D
மியான்மர்
Question 38 Explanation: 
இந்திய சுற்றுச்சூழல் அமைச்சரான பிரகாஷ் ஜவடேகர், பிரான்ஸ் சுற்றுச் சூழல் அமைச்சருடன் இணைந்து இந்தோ-பிரெஞ்சு ‘சுற்றுச்சூழல் ஆண்டை’ அறிமுகம்செய்துவைத்தார். இந்தியாவும் பிரான்சும் அஸ்ஸாம், இராஜஸ்தான், மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் சுற்றுச்சூழல் திட்டங்களைத்தொடங்கவுள்ளன. நீடித்த வளர்ச்சியில் இந்தோ-பிரெஞ்சு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
Question 39
சிறப்பு வேளாண்மை மண்டலங்களை (SAZ) நிறுவுவதற்கான கொள்கையை அறிமுகப்படுத்திய முதல் மாநிலம் எது?
A
தமிழ்நாடு
B
பஞ்சாப்
C
உத்தரகண்ட்
D
தெலங்கானா
Question 39 Explanation: 
2011ஆம் ஆண்டில் சிறப்பு வேளாண் மண்டலங்களை (SAZ) அமைத்த முதல் மாநிலம் உத்தரகண்ட் ஆகும். இது சிறப்பு பொருளாதார மண்டலங் -களின் அடிப்படையில் தொடங்கப்பட்டதாகும். இது மலைப்பகுதிகளுக்கு உகந்த உயர்தர விதைகளை உருவாக்க உழவர்களை ஊக்குவித்தது.
Question 40
MoSPIஆல் வெளியிடப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தியின் இரண்டாவது முன்கூட்டிய மதிப்பீடுகளின்படி, 2020-21 நிதியாண் -டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி என்ன?
A
-7 சதவீதம்
B
-8 சதவீதம்
C
-9 சதவீதம்
D
-10 சதவீதம்
Question 40 Explanation: 
புள்ளிவிவரம் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (MoSPI) வெளியிட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தியின் இரண்டாவது முன்கூட்டிய மதிப்பீடுக -ளின்படி, 2020-21ஆம் நிதியாண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி -8 சதவீதமாக பதிவுசெய்யப்பட்டுள்ளது. NSO, MoSPI ஆகியவை காலாண்டு மதிப்பீடுகளையும் வெளியிட்டன. தொடர்ச்சியாக இரண்டு காலாண்டு சுருக்கத்திற்குப் பிறகு, அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் (Q3) இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 0.4 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன்மூலம் நாடு மந்தநிலையிலிருந்து மீள்வதாகக் கூறப்படுகிறது.
Question 41
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற பாரம்பரிய ‘லாந்தர் விளக்கு விழா’ கொண்டாடப்படுகிற நாடு எது?
A
வங்கதேசம்
B
சீனா
C
ஜப்பான்
D
தென் கொரியா
Question 41 Explanation: 
சீனா தனது பாரம்பரிய, ‘விளக்கு விழா’வை முதல் சீன சந்திர மாதத்தின் 15ஆவது நாளில் கொண்டாடுகிறது. இந்த விழா சீனப்புத்தாண்டு அல்லது ‘வசந்த விழா’ காலத்தின் இறுதிநாளையும் குறிக்கிறது. இந்த ஆண்டு, 2021 பிப்.12 அன்று சீனா ‘காளை ஆண்டு’க்குள் அடியெடுத்து வைத்தது. இந்த விழா, சீன நாட்காட்டியின்படி முதல் முழுநிலா இரவாகும்.
Question 42
தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம் குறித்த அறிக்கை – 2021’ஐ வெளியிட்டுள்ள அமைப்பு எது?
A
FAO
B
UNCTAD
C
WTO
D
IMF
Question 42 Explanation: 
ஐநா வர்த்தக மற்றும் மேம்பாட்டு அமைப்பானது (UNCTAD) சமீபத்தில் ‘தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அறிக்கை-2021’ என்ற தலைப்பில் ஓர் அறிக்கையை வெளியிட்டது. நவீன தொழில்நுட்பங்கள் தற்போதுள்ள ஏற்றத்தாழ்வுகளை விரிவுபடுத்துகிறதா மற்றும் அதிக ஏற்றத்தாழ்வுக -ளை உருவாக்குகின்றனவா என்பதை UNCTAD’இன் இவ்வறிக்கை ஆராய்கிறது. தற்போதைய $350 பில்லியன் அமெரிக்க சந்தையுடன், தொழில்நுட்பங்கள் 2025ஆம் ஆண்டில் $3.2 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு வளரக்கூடும் என்று இவ்வறிக்கை காட்டுகிறது.
Question 43
’One District One Focus’ தயாரிப்புகளின் பட்டியலை இறுதிசெய்து -ள்ள நடுவண் அமைச்சகம் எது?
A
உள்துறை அமைச்சகம்
B
வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம்
C
வேளாண் அமைச்சகம்
D
தொழிலாளர் & வேலைவாய்ப்பு அமைச்சகம்
Question 43 Explanation: 
மத்திய உழவு மற்றும் உழவர்கள் நல அமைச்சகமானது, One District One Focus’இன்கீழ் வரவிருக்கும் தயாரிப்புகளின் பட்டியலை இறுதி செய்துள்ளது. நாடு முழுவதும் 728 மாவட்டங்களுக்கான தயாரிப்புகளை மத்திய உணவுப்பதப்படுத்துதல் அமைச்சகத்துடன் கலந்தாலோசித்து இப்பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அடையாளம் காணப்பட்ட பொருட்கள் வேளாண், தோட்டக்கலை, விலங்கு, கோழி, பால், மீன்வளம் மற்றும் மீன்வளர்ப்பு, கடல் துறைகளைச் சார்ந்தவையாகும்.
Question 44
170 ஆண்டுகளுக்குப்பிறகு இந்தோனேசியாவில் காணப்பட்ட பறவையினம் எது?
A
புருவங்கருத்த தவிட்டுக்குருவி
B
வெண் சிட்டுக்குருவி
C
வன ஆந்தை
D
வங்கத்து கானமயில்
Question 44 Explanation: 
அழிந்துபோனதாகக் கருதப்பட்ட புருவங்கருத்த தவிட்டுக்குருவி, சுமார் 170 ஆண்டுகளுக்குப்பிறகு மீண்டும் தென்பட்டுள்ளது. இந்தோனேசியா -வின் போர்னியோவில் இந்தப் பறவை தென்பட்டுள்ளது. இந்தப்பறவை முதன்முதலில் கடந்த 1848’இல் அறிவியலாளர்களால் விவரிக்கப்பட்டது; பின்னர் அது அழிந்துவிட்டதாக கருதப்பட்டது. உலகளாவிய வனவுயிரி பாதுகாப்பின்படி, இந்தோனேசியாவின் போர்னியோவில், இருவர் தற்செ -யலாக இந்தப்பறவையை நிழற்படம் எடுத்தனர்.
Question 45
மக்களவை மற்றும் மாநிலங்களவை தொலைக்காட்சி அலைவரி -சைகளை இணைத்து உருவாக்கப்பட்ட புதிய தொலைக்காட்சி அலைவரிசையின் பெயர் என்ன?
A
இந்தியா TV
B
சன்ஸாத் அலைவரிசை
C
LRS TV
D
RS TV
Question 45 Explanation: 
இந்திய நாடாளுமன்றம் தனது மக்களவை மற்றும் மாநிலங்களவைக் -கான இரண்டு தொலைக்காட்சி அலைவரிசைகளை ஒருங்கிணைத்து சன்சாத் டிவி என்ற புதிய நிறுவனத்தை உருவாக்கியுள்ளது. இப்புதிய தொலைக்காட்சி அலைவரிசை, அவைகளின் நடவடிக்கைகளை நேர -லையாக ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் ஒளிபரப்பும். இப்புதிய தொலைக்காட்சி அலைவரிசையின் தலைமைச் செயல் அதிகாரியாக முன்னாள் ஜவுளித்துறை செயலாளர் இரவி கபூர் நியமிக்கப்பட்டுள்ளார்.
Question 46
CERAWeek உலகளாவிய எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் தலை -மைத்துவ விருதைப்பெறவுள்ள தலைவர் யார்?
A
நரேந்திர மோதி
B
இராம்நாத் கோவிந்த்
C
மம்தா பானர்ஜி
D
நிர்மலா சீதாராமன்
Question 46 Explanation: 
இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கு CERAWeek உலகளாவிய எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் தலைமைத்துவ விருது வழங்கப்பட்டுள்ளது. டெக் -சாஸின் ஹூஸ்டனில் தகவல் மற்றும் நுண்ணறிவு நிறுவனமான IHS மார்கிட் ஏற்பாடு செய்யும் வருடாந்திர மாநாடான செராவீக் பன்னாட்டு எரிசக்தி மாநாட்டில் அவருக்கு இந்த விருது வழங்கப்படவுள்ளது.
Question 47
ISRO தனது PSLV-C51 ஏவுகலத்தைப் பயன்படுத்தி எத்தனை செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவியது?
A
18
B
19
C
20
D
21
Question 47 Explanation: 
இந்தியாவின் PSLV-C51 ஏவுகலமானது ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இது பிரேசில், ஐக்கிய அமெரிக்க நாடுகள் மற்றும் இந்தியாவைச்சார்ந்த 19 செயற்கைக்கோள்க -ளுடன் பிரேசிலின் 637 கிலோகிராம் எடையுடைய ஆப்டிகல் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான அமேஸானியா-1’ஐ விண்ணுக்கு சுமந்துசென்றது.
Question 48
பின்வரும் எவ்வறிவியலாளரின் கண்டுபிடிப்பை நினைவுகூரும் வகையில் தேசிய அறிவியல் நாள் அனுசரிக்கப்படுகிறது?
A
ஜெகதீஷ் சந்திரபோஸ்
B
C V இராமன்
C
சீனிவாச இராமானுஜன்
D
ஹோமி ஜே பாபா
Question 48 Explanation: 
‘இராமன் விளைவு’ கண்டுபிடிக்கப்பட்டதை நினைவுகூரும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் பிப்.28 அன்று இந்தியாவில் தேசிய அறிவியல் நாள் அனுசரிக்கப்படுகிறது. அதேநாளில், C V இராமன், ‘இராமன் விளைவு’ குறித்து அறிவித்தார். அவருக்கு, 1930’இல் நோபல் பரிசு வழங்கப்பட்டது. “Future of Science and Technology and Innovation: Impact on Education Skills and Work” என்பது நடப்பாண்டில் (2021) வரும் தேசிய அறிவியல் நாளுக்கான கருப்பொருளாகும்.
Question 49
பிரமோத் சந்திர மோடி என்பவர் பின்வரும் எந்த அமைப்பின் தலைவராவார்?
A
SEBI
B
CBIC
C
CBDT
D
IRDAI
Question 49 Explanation: 
மத்திய நேரடிவரிகள் வாரியத்தின் (CBDT) தலைவராக பிரமோத் சந்திர மோடி மீண்டும் நியமனம்செய்யப்பட்டுள்ளார். 1982ஆம் தொகுதி இந்திய வருவாய் சேவை அதிகாரியான PC மோடி, 2019 பிப்ரவரியில் CBDT’இன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரது பதவிக்காலம் கடந்த ஆண்டு ஆகஸ்டில், ஆறு மாதகாலத்திற்கு நீட்டிக்கப்பட்டது.
Question 50
BARC உருவாக்கிய, ‘டிஜிட்டல் கோபால்ட் சிகிச்சை எந்திரத்தை’ இந்தியா எந்த நாட்டுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது?
A
மொரீஷியஸ்
B
மடகாஸ்கர்
C
மியான்மர்
D
மாலத்தீவுகள்
Question 50 Explanation: 
பாபா அணு ஆராய்ச்சி மையம் உருவாக்கிய புற்றுநோய் சிகிச்சைக்கான ஒரு நவீன, ‘டிஜிட்டல் கோபால்ட் சிகிச்சை எந்திரத்தை’ தீவு நாடான மடகாஸ்கருக்கு இந்தியா வழங்கியுள்ளது. ‘Bhabhatron-II’, என்ற டெலி கோபால்ட் எந்திரம் அண்மையில் மடகாஸ்கரின் தலைநகரமான அன்ட -னனரிவோவில் அந்நாட்டின் அதிபர் ஆண்ட்ரி இராஜோலினாவால் திறந்துவைக்கப்பட்டது. இந்தியாவிடமிருந்து ‘Bhabhatron-II’ ரேடியோ சிகிச்சை எந்திரத்தைப்பெற்ற சில நாடுகளுள் இதுவும் ஒன்றாகும்.
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 50 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *