Tnpsc

March 2021 Monthly Current Affairs Online Test Tamil

நடப்பு நிகழ்வுகள் March Online Test - 2021 Tamil

Congratulations - you have completed நடப்பு நிகழ்வுகள் March Online Test - 2021 Tamil. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
ஆண்டுதோறும், ‘பாகுபாடுகள் ஒழிப்பு நாள் - Zero Discrimination Day’ அனுசரிக்கப்படும் தேதி எது?
A
மார்ச் 01
B
மார்ச் 02
C
மார்ச் 03
D
மார்ச் 04
Question 1 Explanation: 
ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 1 அன்று UNAIDSஆல் உலகம் முழுவதும் ‘பாகுபாடுகள் ஒழிப்பு நாள்’ அனுசரிக்கப்படுகிறது. 2030ஆம் ஆண்டுக்குள் AIDS’ஐ ஒரு பொதுநல அச்சுறுத்தலாக எண்ணி அதனை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமெனக்கொண்ட ஐநா அமைப்புதான் இந்த UNAIDS.
Question 2
30ஆவது அட்ரியாடிக் பியர்ல் போட்டி நடைபெற்ற நாடு எது?
A
இந்தியா
B
ஜப்பான்
C
மாண்டினீக்ரோ
D
இத்தாலி
Question 2 Explanation: 
முப்பதாவது அட்ரியாடிக் பியர்ல் போட்டியானது மாண்டினீக்ரோவின் புத்வாவில் நடைபெற்றது. 5 தங்கப்பதக்கம், 3 வெள்ளிப்பதக்கம் மற்றும் இரண்டு வெண்கலப்பதக்கம் என மொத்தம் 10 பதக்கங்களுடன் இந்திய மகளிர் அணி முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதைத்தொடர்ந்து உஸ்பெகி -ஸ்தான் 2ஆம் இடத்திலும், செக் குடியரசு 3ஆம் இடத்திலும் உள்ளது.
Question 3
உள்மாநில மின்சார-பரிமாற்ற திட்டத்தை மேம்படுத்துவதற்காக அஸ்ஸாம் மாநிலத்திற்கு $304 மில்லியன் கடனை வழங்கவுள்ள நிறுவனம் எது?
A
ADB
B
உலக வங்கி
C
AIIB
D
புதிய வளர்ச்சி வங்கி
Question 3 Explanation: 
இந்தியாவும் ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியும் (AIIB) அஸ்ஸாம் உள்மாநில மின்சார-பரிமாற்ற அமைப்பை மேம்படுத்தும் திட்டத்திற்காக $304 மில்லியன் கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இந்தத் திட்டம் துணை மின்நிலையங்களை நிர்மாணிப்பதையும் தேவையான பரிமா -ற்ற வடங்களை அமைப்பதையும் நோக்கமாக கொண்டுள்ளது.
Question 4
NASA & ஜெர்மன் விண்வெளி ஆய்வுமையத்தின் ஓர் அண்மைய ஆய்வின்படி, பூமியில் காணப்படும் சில நுண்ணுயிரிகள், பின்வரும் எந்தக் கோளில் உயிர்வாழக்கூடும்?
A
வியாழன்
B
வெள்ளி
C
செவ்வாய்
D
புதன்
Question 4 Explanation: 
NASA மற்றும் ஜெர்மன் விண்வெளி ஆய்வு மையத்தின் ஓர் அண்மைய ஆய்வின்படி, பூமியில் காணப்படும் சில நுண்ணுயிரிகளால் செவ்வாய் கோளில் உயிர்வாழக்கூடும். ஓர் அறிவியல்பூர்வ பலூனைக்கொண்டு பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளை புவியின் அடுக்கு மண்டலம் வரை ஏவுவதன்மூலம் செவ்வாய் போன்ற சூழ்நிலையில் அவை எப்படி இருக்கும் என்பதை ஆராய்ச்சியாளர்கள் சோதித்தனர்.
Question 5
இந்தியாவின் முதல் கடலடி சுரங்கப்பாதை கட்டப்படுகிற நகரம் எது?
A
சென்னை
B
கொச்சின்
C
மும்பை
D
கொல்கத்தா
Question 5 Explanation: 
மும்பை நகரத்தின் கடலோர சாலைகள் திட்டத்தின் ஒருபகுதியாக இந்தியாவின் முதல் கடலடி சுரங்கப்பாதையானது மும்பையில் கட்டப்பட உள்ளது. இது, வரும் 2023ஆம் ஆண்டுக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.2.07 கிமீ நீளத்தைக்கொண்டுள்ளன இந்த இரட்டைச்சுரங்கப்பாதைகள், கடல்படுகைக்கு 20 மீட்டர் கீழே அமைந்திருக்கும்.
Question 6
வயநாடு வனவுயிரிகள் சரணாலயம் அமைந்துள்ள மாநிலம் எது?
A
தமிழ்நாடு
B
கேரளா
C
கர்நாடகா
D
தெலங்கானா
Question 6 Explanation: 
வனத்துறை மற்றும் ஃபெர்ன்ஸ் நேச்சர் கன்சர்வேஷன் சொசைட்டி இணைந்து நடத்திய தட்டாம்பூச்சி குறித்த ஓர் ஆய்வு சமீபத்தில் வயநாடு வனவுயிரிகள் சரணாலயத்தில் நிறைவடைந்தது. இந்தச் சரணாலயம் மேற்குத்தொடர்ச்சிமலையில் கேரள மாநிலத்தில் அமைந்துள்ளது.
Question 7
அண்மையில் எந்த மாநிலத்தில், கால்நடை மற்றும் விலங்கு அறிவியலுக்கான ஒருங்கிணைந்த ஆராய்ச்சி நிறுவனம் (AIIRLAS) திறக்கப்பட்டது?
A
தமிழ்நாடு
B
கேரளா
C
கர்நாடகா
D
உத்தர பிரதேசம்
Question 7 Explanation: 
தமிழ்நாட்டின் முதலமைச்சர் எடப்பாடி க பழனிசாமி அவர்கள் சமீபத்தில் கால்நடை மற்றும் விலங்கறிவியலுக்கான ஒருங்கிணைந்த ஆராய்ச்சி நிறுவனத்தை (AIIRLAS) திறந்துவைத்தார். இது, சேலம் மாவட்டத்தின் தலைவாசலில் அமைந்துள்ளது. இதன்வகையில் இது ஆசியாவிலேயே மிகப்பெரிய நிறுவனமாகும். `1,023 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது.
Question 8
நம்ம கார்கோ” என்ற சேவை தொடங்கப்பட்டுள்ள மாநிலம் எது?
A
தமிழ்நாடு
B
கேரளா
C
கர்நாடகா
D
தெலங்கானா
Question 8 Explanation: 
கர்நாடக மாநில முதலமைச்சர் B S எடியுரப்பா, சமீபத்தில், ‘நம்ம கார்கோ’ என்ற சேவையை அறிமுகப்படுத்தினார். இந்த முயற்சியின்கீழ், மாநில சாலைப்போக்குவரத்துக்கழக பேருந்துகள் சரக்கு பொதிகளை கொண்டு சென்று மாநிலத்திற்கு கூடுதல் வருவாயை ஈட்டும். இது, கர்நாடகாவின் 109 பேருந்துநிலையங்களிலும், அண்டை மாநிலங்களின் தேர்ந்தெடுக் -கப்பட்ட இடங்களிலும் செயல்படுத்தப்படுகிறது.
Question 9
மிகவும் அருகிவிட்ட இனமான, ‘ஆல்பைன் தாவர இனங்கள்’ கண்டுபிடிக்கப்பட்டுள்ள மாநிலம் எது?
A
அஸ்ஸாம்
B
சிக்கிம்
C
அருணாச்சல பிரதேசம்
D
ஹிமாச்சல பிரதேசம்
Question 9 Explanation: 
அருணாச்சல பிரதேச மாநிலத்தின் தவாங் மாவட்டத்தில், ‘ஆல்பைன் தாவரம்’ என்ற ஒரு புதிய இனத்தை அறிவியலாளர்கள் குழு கண்டறிந் -துள்ளது. ‘Cremanthodium indicum’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்புதிய இனங்கள், இமயமலை சூரியகாந்தி குடும்பத்தைச் சார்ந்தவை. இந்த இனம், தவாங் மாவட்டத்தின் பெங்கா-டெங் சோ ஏரியைப் பூர்வீகமாகக் கொண்டதாகும்.
Question 10
இந்திய கடல்சார் உச்சிமாநாடு-2021 நடைபெறும் இடம் எது?
A
சென்னை
B
கொச்சின்
C
மும்பை
D
மெய்நிகர் முறையில்
Question 10 Explanation: 
‘இந்திய கடல்சார் உச்சிமாநாடு 2021’ஐ பிரதமர் மோடி, மார்ச்.2 அன்று காணொலிக்காட்சிமூலம் தொடங்கிவைத்தார். துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப்போக்குவரத்து அமைச்சகத்தின் அலுவல் -பூர்வ அறிக்கையின்படி, இதன் தொடக்க அமர்வில் பல்வேறு நாடுகளை சார்ந்த அமைச்சர்கள் பங்கேற்பர். இந்த உச்சிமாநாட்டின்போது `20,000 கோடி மதிப்புள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Question 11
BRICS அமைப்பின் நடப்பாண்டிற்கான (2021) தலைவராக பொறு -ப்பேற்றுள்ள நாடு எது?
A
இந்தியா
B
சீனா
C
பிரேஸில்
D
இரஷ்யா
Question 11 Explanation: 
BRICS அமைப்பின் நடப்பாண்டிற்கான (2021) தலைவராக இந்தியா பொறுப்பேற்றுள்ள. BRICS உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற மூன்று நாள் கூட்டத்தின் தொடக்கத்துடன் இந்தியா தனது தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டது. இக்கூட்டத்திற்கு வெளியுறவு அமைச்சின் செயலர் தலைமைதாங்கினார். இச்சந்திப்பின்போது, இந்தியா, 2021ஆம் ஆண்டிற்கான அதன் கருப்பொருள்கள் மற்றும் முன்னுரிமைகளை BRICS’இன் உறுப்புநாடுகளுக்கு அறிமுகம் செய்தது.
Question 12
முதலாவது ‘இந்திய புரத நாள்’ கொண்டாடப்பட்ட ஆண்டு எது?
A
2019
B
2020
C
2021
D
1990
Question 12 Explanation: 
தேசிய அளவிலான பொதுநல முன்னெடுப்பான ‘Right to Protein’ இந்தி -யாவின் முதல் ‘புரத நாளை’ 2020 பிப்.27 அன்று அறிமுகப்படுத்தியது. புரதத்தின் ஊட்டச்சத்து நன்மைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்து -வதற்காக இந்நாள் அனுசரிக்கப்படுகிறது. “Powering with Plant Protein” என்பது நடப்பாண்டு (2021) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும்.
Question 13
“உலகளவில் பள்ளிகளில் உணவளிக்கும் நிலை - State of Schoolfeeding Worldwide” என்றவொரு அறிக்கையை வெளியிடுகிற அமைப்பு எது?
A
FAO
B
IUCN
C
UN – WFP
D
WTO
Question 13 Explanation: 
“உலகளவில் பள்ளிகளில் உணவளிக்கும் நிலை” என்ற பெயரிலான ஓர் அறிக்கையை ஐக்கிய நாடுகள் அவை - உலக உணவுத்திட்டம் (WFP) வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை, முதன்முதலில் 2013ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. இந்த அறிக்கை, பள்ளி அடிப்படையிலான ஊட்டச்சத்து திட்டங்களை செயல்படுத்துதல் மற்றும் பாதுகாப்பு குறித்த விரிவான பகுப்பாய்வை வழங்குகிறது.
Question 14
தூய்மைமிகு சிறப்புவாய்ந்த இடங்கள் முன்முயற்சியின் நான்காம் கட்டத்தின்கீழ், எத்தனை தளங்களை மத்திய ஜல் சக்தி அமைச்சகம் தேர்ந்தெடுத்துள்ளது?
A
8
B
12
C
15
D
16
Question 14 Explanation: 
தூய்மைமிகு சிறப்புவாய்ந்த இடங்கள் (SIP) முன்முயற்சியின் நான்காம் கட்டத்தின்கீழ், 12 சிறப்புவாய்ந்த தளங்களைத் தேர்ந்தெடுத்துள்ளதாக மத்திய ஜல் சக்தி அமைச்சகத்தின் குடிநீர் மற்றும் நலவாழ்வுத்துறை அறிவித்துள்ளது. SIP என்பது தூய்மை இந்தியா இயக்கம் – கிராமப்புறம் (SBM-G) இயக்கத்தின் ஒரு முன்முயற்சியாகும். இம்முயற்சி, தளங்களிலும் அதனைச்சுற்றியுள்ள இடங்களிலும் தூய்மை தரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஜல் சக்தி அமைச்சகமானது வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சக -ம், சுற்றுலா அமைச்சகம், கலாச்சார அமைச்சகம் மற்றும் மாநில / யூடி அரசாங்கங்களுடன் இதற்காக ஒருங்கிணைந்துள்ளது
Question 15
கிருஷ்ணதேவராயனின் இறப்புகுறித்த முதல் கல்வெட்டுக்குறிப் -பை, ASI, பின்வரும் எவ்விடத்தில் கண்டுபிடித்தது?
A
ஆக்ரா
B
மதுரா
C
தும்கூர்
D
கிருஷ்ணகிரி
Question 15 Explanation: 
அண்மையில், இந்திய தொல்லியல் ஆய்வகத்தின் (ASI) உறுப்பினர்கள் கிருஷ்ணதேவராய நாயக்கனின் இறப்பு குறித்த முதல் கல்வெட்டுக் குறிப்பை கண்டுபிடித்துள்ளனர். கிருஷ்ணதேவராய நாயக்கன் விஜயந -கர பேரரசின் பேரரசராக இருந்து பொ ஆ 1509-1529 வரை ஆண்டார். கர்நாடகாவின் தும்கூர் மாவட்டத்தின் ஹொன்னேஹள்ளியில் உள்ள கோபாலகிருஷ்ணா கோவிலுக்கு அருகே இக்கல்வெட்டு காணப்பட்டது.
Question 16
விரைவில் இந்திய ராணுவம் பயன்படுத்தவுள்ள செய்தியனுப்பும் தளத்தின் பெயர் என்ன?
A
Secure Application for Internet
B
Safe Messaging Service
C
Secure Instant Messaging
D
Safe Communication Network
Question 16 Explanation: 
இந்திய இராணுவத்தளபதி M M நரவனேவின் அண்மைய அறிக்கையி -ன்படி, இந்திய ராணுவம் தனது உள்ளக தொடர்புகளுக்கு SAI (Secure Application for Internet) என்ற செய்தி பரிமாற்ற தளத்தைப் பயன்படுத்தத் தொடங்கவுள்ளது. கர்னல் சாய் சங்கர் உருவாக்கிய இந்தச் செயலி, இணைய பாதுகாப்பு & தரவு சோதனை ஆகியவற்றுக்கான அனுமதி பெறும் பணியில் ஈடுபட்டுள்ளது. அனுமதி கிடைத்தபிறகு, இந்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் இந்தச் செயலி பயன்படுத்தப்படும்.
Question 17
உலக வேலைவாய்ப்பு மற்றும் சமூக கண்ணோட்டம்-2021’ஐ வெளியிட்டுள்ள பன்னாட்டு அமைப்பு எது?
A
IMF
B
ILO
C
WEF
D
UNICEF
Question 17 Explanation: 
உலக வேலைவாய்ப்பு மற்றும் சமூக கண்ணோட்டம் – 2021’ஐ பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு (ILO) வெளியிட்டுள்ளது. இவ்வறிக்கை ILO’இன் முதன்மை வெளியீடுகளுள் ஒன்றாகும். இது, வேலையை ஒழு -ங்கமைப்பதற்கான விவரங்களை வழங்குகிறது. இணைய அடிப்படை -யிலான மற்றும் இருப்பிட அடிப்படையிலான தளங்களில், தொழிலாளர் -கள் மற்றும் வணிகங்களின் அனுபவத்தையும் இது சித்தரிக்கிறது.
Question 18
இந்திய பெண்கள் லீக்கை நடத்தவுள்ள மாநிலம் எது?
A
கேரளா
B
ஒடிஸா
C
இராஜஸ்தான்
D
திரிபுரா
Question 18 Explanation: 
இந்த ஆண்டின் இந்திய பெண்கள் லீக், ஒடிஸா மாநிலத்தால் நடத்தப்பட உள்ளது. இந்திய பெண்கள் லீக் என்பது இந்தியாவின் ஒரு முன்னணி பெண்கள் கால்பந்து லீக் போட்டியாகும். இது, அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தால் நடத்தப்படுகிறது. இதுமுதலில், தில்லியில், 6 அணிகளு -டன் விளையாடும் போட்டியாக இருந்தது. இதன் கடைசி பருவத்தின் -போது (4ஆவது IWL) பெங்களூரில் 12 அணிகளாக மாற்றப்பட்டது.
Question 19
இந்தியா, பின்வரும் எந்நட்புநாட்டோடு இணைந்து, ‘சுற்றுச்சூழல் ஆண்டு’ என்றவொன்றை அறிமுகப்படுத்தியது?
A
பிரான்ஸ்
B
இலங்கை
C
மொரிஷியஸ்
D
மியான்மர்
Question 19 Explanation: 
இந்திய சுற்றுச்சூழல் அமைச்சரான பிரகாஷ் ஜவடேகர், பிரான்ஸ் சுற்றுச் சூழல் அமைச்சருடன் இணைந்து இந்தோ-பிரெஞ்சு ‘சுற்றுச்சூழல் ஆண்டை’ அறிமுகம்செய்துவைத்தார். இந்தியாவும் பிரான்சும் அஸ்ஸாம், இராஜஸ்தான், மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் சுற்றுச்சூழல் திட்டங்களைத்தொடங்கவுள்ளன. நீடித்த வளர்ச்சியில் இந்தோ-பிரெஞ்சு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
Question 20
சிறப்பு வேளாண்மை மண்டலங்களை (SAZ) நிறுவுவதற்கான கொள்கையை அறிமுகப்படுத்திய முதல் மாநிலம் எது?
A
தமிழ்நாடு
B
பஞ்சாப்
C
உத்தரகண்ட்
D
தெலங்கானா
Question 20 Explanation: 
2011ஆம் ஆண்டில் சிறப்பு வேளாண் மண்டலங்களை (SAZ) அமைத்த முதல் மாநிலம் உத்தரகண்ட் ஆகும். இது சிறப்பு பொருளாதார மண்டலங் -களின் அடிப்படையில் தொடங்கப்பட்டதாகும். இது மலைப்பகுதிகளுக்கு உகந்த உயர்தர விதைகளை உருவாக்க உழவர்களை ஊக்குவித்தது.
Question 21
மக்களவை மற்றும் மாநிலங்களவை தொலைக்காட்சி அலைவரி -சைகளை இணைத்து உருவாக்கப்பட்ட புதிய தொலைக்காட்சி அலைவரிசையின் பெயர் என்ன?
A
இந்தியா TV
B
சன்ஸாத் அலைவரிசை
C
LRS TV
D
RS TV
Question 21 Explanation: 
இந்திய நாடாளுமன்றம் தனது மக்களவை மற்றும் மாநிலங்களவைக் -கான இரண்டு தொலைக்காட்சி அலைவரிசைகளை ஒருங்கிணைத்து சன்சாத் டிவி என்ற புதிய நிறுவனத்தை உருவாக்கியுள்ளது. இப்புதிய தொலைக்காட்சி அலைவரிசை, அவைகளின் நடவடிக்கைகளை நேர -லையாக ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் ஒளிபரப்பும். இப்புதிய தொலைக்காட்சி அலைவரிசையின் தலைமைச் செயல் அதிகாரியாக முன்னாள் ஜவுளித்துறை செயலாளர் இரவி கபூர் நியமிக்கப்பட்டுள்ளார்.
Question 22
ISRO தனது PSLV-C51 ஏவுகலத்தைப் பயன்படுத்தி எத்தனை செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவியது?
A
18
B
19
C
20
D
21
Question 22 Explanation: 
இந்தியாவின் PSLV-C51 ஏவுகலமானது ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இது பிரேசில், ஐக்கிய அமெரிக்க நாடுகள் மற்றும் இந்தியாவைச்சார்ந்த 19 செயற்கைக்கோள்க -ளுடன் பிரேசிலின் 637 கிலோகிராம் எடையுடைய ஆப்டிகல் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான அமேஸானியா-1’ஐ விண்ணுக்கு சுமந்துசென்றது.
Question 23
பிரமோத் சந்திர மோடி என்பவர் பின்வரும் எந்த அமைப்பின் தலைவராவார்?
A
SEBI
B
CBIC
C
CBDT
D
IRDAI
Question 23 Explanation: 
மத்திய நேரடிவரிகள் வாரியத்தின் (CBDT) தலைவராக பிரமோத் சந்திர மோடி மீண்டும் நியமனம்செய்யப்பட்டுள்ளார். 1982ஆம் தொகுதி இந்திய வருவாய் சேவை அதிகாரியான PC மோடி, 2019 பிப்ரவரியில் CBDT’இன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரது பதவிக்காலம் கடந்த ஆண்டு ஆகஸ்டில், ஆறு மாதகாலத்திற்கு நீட்டிக்கப்பட்டது.
Question 24
BARC உருவாக்கிய, ‘டிஜிட்டல் கோபால்ட் சிகிச்சை எந்திரத்தை’ இந்தியா எந்த நாட்டுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது?
A
மொரீஷியஸ்
B
மடகாஸ்கர்
C
மியான்மர்
D
மாலத்தீவுகள்
Question 24 Explanation: 
பாபா அணு ஆராய்ச்சி மையம் உருவாக்கிய புற்றுநோய் சிகிச்சைக்கான ஒரு நவீன, ‘டிஜிட்டல் கோபால்ட் சிகிச்சை எந்திரத்தை’ தீவு நாடான மடகாஸ்கருக்கு இந்தியா வழங்கியுள்ளது. ‘Bhabhatron-II’, என்ற டெலி கோபால்ட் எந்திரம் அண்மையில் மடகாஸ்கரின் தலைநகரமான அன்ட -னனரிவோவில் அந்நாட்டின் அதிபர் ஆண்ட்ரி இராஜோலினாவால் திறந்துவைக்கப்பட்டது. இந்தியாவிடமிருந்து ‘Bhabhatron-II’ ரேடியோ சிகிச்சை எந்திரத்தைப்பெற்ற சில நாடுகளுள் இதுவும் ஒன்றாகும்.
Question 25
தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம் குறித்த அறிக்கை – 2021’ஐ வெளியிட்டுள்ள அமைப்பு எது?
A
FAO
B
UNCTAD
C
WTO
D
IMF
Question 25 Explanation: 
ஐநா வர்த்தக மற்றும் மேம்பாட்டு அமைப்பானது (UNCTAD) சமீபத்தில் ‘தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அறிக்கை-2021’ என்ற தலைப்பில் ஓர் அறிக்கையை வெளியிட்டது. நவீன தொழில்நுட்பங்கள் தற்போதுள்ள ஏற்றத்தாழ்வுகளை விரிவுபடுத்துகிறதா மற்றும் அதிக ஏற்றத்தாழ்வுக -ளை உருவாக்குகின்றனவா என்பதை UNCTAD’இன் இவ்வறிக்கை ஆராய்கிறது. தற்போதைய $350 பில்லியன் அமெரிக்க சந்தையுடன், தொழில்நுட்பங்கள் 2025ஆம் ஆண்டில் $3.2 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு வளரக்கூடும் என்று இவ்வறிக்கை காட்டுகிறது.
Question 26
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற பாரம்பரிய ‘லாந்தர் விளக்கு விழா’ கொண்டாடப்படுகிற நாடு எது?
A
வங்கதேசம்
B
சீனா
C
ஜப்பான்
D
தென் கொரியா
Question 26 Explanation: 
சீனா தனது பாரம்பரிய, ‘விளக்கு விழா’வை முதல் சீன சந்திர மாதத்தின் 15ஆவது நாளில் கொண்டாடுகிறது. இந்த விழா சீனப்புத்தாண்டு அல்லது ‘வசந்த விழா’ காலத்தின் இறுதிநாளையும் குறிக்கிறது. இந்த ஆண்டு, 2021 பிப்.12 அன்று சீனா ‘காளை ஆண்டு’க்குள் அடியெடுத்து வைத்தது. இந்த விழா, சீன நாட்காட்டியின்படி முதல் முழுநிலா இரவாகும்.
Question 27
டைட்டனோசரின் புதைப்படிவங்கள் அண்மையில் எந்த நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டன?
A
அர்ஜென்டினா
B
ஐக்கிய அமெரிக்க நாடுகள்
C
ஐக்கிய அரபு அமீரகம்
D
இரஷ்யா
Question 27 Explanation: 
டைட்டனோசர் என்பது நான்கு கால்களில் நடந்துசெல்லும் நீண்ட கழுத்துடைய தாவரம் உண்ணும் டைனோசர்களின் குழுவாகும். 140 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கிரெட்டேசியஸ் காலத்தில் வாழ்ந்த ‘Ninjatitan zapatai’ என்ற டைனோசர் இனத்தின் புதைப்படிவங்களை அறிவியலாளர்கள் அண்மையில் கண்டுபிடித்தனர். கண்டுபிடிக்கப்பட்ட புதைப்படிவங்கள், டைட்டனோசர்கள் என அழைக்கப்படும் டைனோசர் குழுவின் மிகப்பழமையான உறுப்பினர் என்று கூறப்படுகிறது.
Question 28
பாலைவனக்கொடி (Desert Flag) என்னும் பன்னாட்டளவிலான பயிற்சியை நடத்தும் நாடு?
A
UAE
B
USA
C
UK
D
பிரான்ஸ்
Question 28 Explanation: 
‘பாலைவனக்கொடி’ என்பது ஒரு பன்னாட்டுப்பயிற்சியாகும். இது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. இந்தியா, பிரான்ஸ் மற்றும் USA உட்பட பத்து நாடுகள் இந்தப்பயிற்சியில் பங்கேற்கவுள்ளன. இப்பயிற்சி, இம்மாதம் மூன்றுவாரகாலத்துக்கு நடைபெறும். இப்பயிற்சியானது பல, தீவிரமான வான்போர்வகை பயிற்சிகளை உள்ளடக்கும். இப்பயிற்சியில் பங்கேற்க இந்திய வான் படையின் Su-30-MKI மற்றும் C-17s போர் வானூர்திகள் சமீபத்தில் புறப்பட்டன.
Question 29
அரோமா திட்டத்தின் ஒருபகுதியாக ஜம்முவில் பயிரிடப்படுகிற மூலிகை எது?
A
லாவெண்டர்
B
வேர்க்கோசு
C
புதினா
D
துளசி
Question 29 Explanation: 
2016ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட அரோமா திட்டத்தின் ஒருபகுதியாக ஜம்முவில் லாவெண்டர் பயிரிடப்பட்டுவருகிறது. ‘லாவெண்டர்’ என்பது மருத்துவ குணங்கள் கொண்ட ஒரு நறுமண மூலிகையாகும். இது, வணிகரீதியாக ஒரு முக்கியமான பயிராக கருதப்படுகிறது, முக்கியமாக அத்தியாவசிய எண்ணெய்களை உற்பத்தி செய்வதற்காக இது பயிரிடப்ப -டுகிறது. ஒரு லிட்டர் லாவெண்டர் அத்தியாவசிய எண்ணெய் 10,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
Question 30
இந்தியாவின் மிகப்பெரிய தரைநிலை ஆப்டிகல் தொலைநோக் -கி நிறுவப்பட்டுள்ள மாநிலம் எது?
A
உத்தரகண்ட்
B
கோவா
C
கர்நாடகா
D
பஞ்சாப்
Question 30 Explanation: 
உத்தரகண்ட் நைனிடால் பகுதியில் உள்ள தேவஸ்தல் என்ற இடத்தில் உலகத்தரத்திலான 3.6 மீட்டர் ஆப்டிக்கல் தொலைநோக்கி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தத்தொலைநோக்கி இந்தோ-பெல்ஜிய கூட்டு முயற்சியின் விளைவாகவும், இரஷ்ய அறிவியல் அகாதமி உதவியுடனும் கடந்த 2007’இல் நிறுவப்பட்டதாகும். தன்னாட்சி ஆராய்ச்சி அமைப்பான ஆர்யபட்டா கூர்நோக்கு அறிவியல் பற்றிய ஆராய்ச்சி நிறுவனத்தால் இந்தத் தொலைநோக்கி இயக்கப்பட உள்ளது. இந்த அமைப்பு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின் கீழ் இயங்கி வருகிறது.
Question 31
பன்னாட்டு கழிவெடுப்பவர்கள் (Waste Pickers’) நாள் கடைபிடிக் -கப்படுகிற தேதி எது?
A
மார்ச் 1
B
மார்ச் 2
C
மார்ச் 3
D
மார்ச் 4
Question 31 Explanation: 
11 தொழிலாளர்களின் கொடூரமான இறப்புக்கு வழிவகுத்த கொலம்பிய படுகொலையை குறிக்கும் வகையில் மார்ச்.1ஆம் தேதி பன்னாட்டு கழிவு எடுப்பவர்கள் நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாள் உலகெங்கிலும் உள்ள கழிவெடுப்பவர்கள் / மறுசுழற்சி செய்பவர்களுக்கு குரல் மற்றும் அங்கீகாரத்தை வழங்க முற்படுகிறது.
Question 32
உலகின் முதல் வாத்தலகி (platypus) சரணாலயத்தை உருவாக்கு -கிற நாடு எது?
A
இந்தியா
B
இலங்கை
C
பாகிஸ்தான்
D
ஆஸ்திரேலியா
Question 32 Explanation: 
நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசாங்கமும் ஆஸ்திரேலியாவின் தரோங்கா பாதுகாப்பு சங்கமும் இணைந்து உலகின் முதல் பிளாட்டிபஸ் சரணாலய -த்தை கட்டுவதாக அறிவித்தன. இது, காலநிலை மாற்றத்தால் அழிவை எதிர்கொண்டுள்ள வாத்தலகி பாலூட்டிகளின் இனப்பெருக்கம் மற்றும் மறுவாழ்வை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சிட்னியில் இருந்து 390 கிமீ தூரத்தில் உள்ள மிருகக்காட்சிசாலையில் இந்த வசதி உருவாக்கப்படவுள்ளது.
Question 33
நடப்பாண்டில் (2021) வரும் உலக செவித்திறன் நாளுக்கான கருப்பொருள் என்ன?
A
Hearing care for All
B
Save Hearing
C
Care for hearing
D
Hearing care
Question 33 Explanation: 
செவித்திறன் இழப்பைத் தடுக்க எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த மார்ச்.3ஆம் தேதி உலக செவித்திறன் நாள் அனுசரிக்கப்படுகிறது. இது உலக சுகாதார அமைப்பின் குருட்டுத்தன்மை மற்றும் காதுகேளாமை தடுப்பு அலுவலகத்தால் ஒவ்வோர் ஆண்டும் நட -த்தப்படும் ஒரு பிரச்சாரமாகும். 2021ஆம் ஆண்டிற்கான பிரச்சாரத்தின் கருப்பொருள் “Hearing care for All”.
Question 34
NADMP என்பதன் முழு வடிவம் என்ன?
A
National Agriculture Disaster Management Plan
B
Ninth Agriculture Disaster Management Plan
C
New Agriculture Disaster Management Plan
D
Ninth Agriculture Disaster Mitigation Planning
Question 34 Explanation: 
வறட்சி, வெள்ளம் மற்றும் COVID-19 கொள்ளைநோய்போன்ற திடீர் இயற்கை பேரிடர்களுக்கு சரியான நேரத்தில் பதிலளிப்பதை உறுதி செய்வதில் தேசிய வேளாண் பேரிடர் மேலாண்மை திட்டம் (NADMP) மத்திய வேளாண் அமைச்சகத்திற்கு வழிகாட்ட முயற்சி செய்கிறது. வேளாண் துறைக்கு அச்சுறுத்தலாக இருக்கும் 34 இடர்களை இது அடையாளங்காட்டுகிறது. வெப்ப அலைகள், பூகம்பங்கள், விலங்குகளின் தாக்குதல்கள், பாலைவனமாக்கல், வேளாண் தீ, சூறாவளிகள் மற்றும் இரசாயனங்கள் மீது அதிக சார்பு ஆகியவை இவற்றுள் அடங்கும்.
Question 35
பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் சமூக மற்றும் கல்வி நிலைமைகள் குறித்து அதன் முதல் ஆய்வை நடத்தவுள்ள மாநிலம் எது?
A
ஹரியானா
B
ஒடிஸா
C
மத்திய பிரதேசம்
D
மகாராஷ்டிரா
Question 35 Explanation: 
ஒடிஸா மாநில அரசாங்கம் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் சமூக மற்றும் கல்வி நிலைமைகள் குறித்த முதல் மாநில ஆய்வைத்தொடங்கவுள்ளது. அம்மாநிலத்தில் கிட்டத்தட்ட 209 சமூகத்தினர் சமூகம் மற்றும் கல்வி ரீதியாக பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக இனங்காணப்பட்டுள்ளனர். அது, மாநிலத்தின் மொத்த மக்கள்தொகையில் 54 சதவீதத்தை உள்ளடக்கிய -தாகும். இதற்கு ஒடிஸா மாநில பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
Question 36
சிமிலிபால் உயிர்க்கோள இருப்பகம் அமைந்துள்ள மாநிலம் எது?
A
ஒடிஸா
B
உத்தரகண்ட்
C
இராஜஸ்தான்
D
கோவா
Question 36 Explanation: 
சிமிலிபால் உயிர்க்கோள இருப்பகம் என்பது சிமிலிபால் தேசிய பூங்கா மற்றும் புலிகள் காப்பகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை உள் -ளடக்கியதாகும். இது, கிழக்குத்தொடர்ச்சிமலையின் கிழக்கு முனையில் ஒடிஸாவில் அமைந்துள்ளது. ‘சிமிலிபால்’ என்ற பெயர் இலவம்பஞ்சு மரம் என்று பொருள்படும் ‘சிமுல்’ என்பதிலிருந்து உருவானதாகும். சமீபத்தில், இந்தத் தேசிய பூங்காவில் காட்டுத்தீ ஏற்பட்டு தொடர்ந்து ஒரு வாரகாலமாக எரிந்துவருகிறது.
Question 37
மத்திய தொழிலகங்கள் பாதுகாப்புப்படையின் (CISF) உதய நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?
A
மார்ச் 5
B
மார்ச் 8
C
மார்ச் 10
D
மார்ச் 11
Question 37 Explanation: 
மத்திய தொழிலகங்கள் பாதுகாப்புப்படையின் உருவாக்க நாளானது ஆண்டுதோறும் மார்ச்.10 அன்று கொண்டாடப்படுகிறது. கடந்த 1969ஆம் ஆண்டு இதே நாளில், இந்திய நாடாளுமன்ற சட்டத்தின்கீழ் 2,800 படைவீரர்களுடன் CISF உருவாக்கப்பட்டது. இது நேரடியாக, மத்திய உள்துறை அமைச்சகத்தின்கீழ் இயங்கி வருகிறது. CISF’இன் தலைமை -யகம் புது தில்லியில் அமைந்துள்ளது.
Question 38
சமீபத்தில் வெளியிடப்பட்ட நகராட்சி செயல்திறன் குறியீட்டின்படி, 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகைகொண்ட நகரங்களின் பிரிவில், முதலிடத்தைப் பிடித்த நகரம் எது?
A
இந்தூர்
B
லக்னோ
C
சூரத்
D
போபால்
Question 38 Explanation: 
மத்திய அரசானது அண்மையில் நகராட்சி செயல்திறன் குறியீட்டை வெளியிட்டது. இந்தக் குறியீட்டில், 10 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகைகொண்ட நகரங்களின் பிரிவில், இந்தூர் நகரம் முதலிடத்தைப் பிடித்தது. அதைத்தொடர்ந்து சூரத் மற்றும் போபால் ஆகிய நகரங்கள் உள்ளன. பத்து இலட்சத்துக்கும் குறைவான மக்கள்தொகைகொண்ட நகரங்களின் பிரிவில் புது தில்லி முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதைத் தொடர்ந்து திருப்பதி மற்றும் காந்திநகர் ஆகிய நகரங்கள் உள்ளன.
Question 39
பாவோ தான் என்பது கீழ்க்காணும் எந்த இந்திய மாநிலத்தில் பயிரிடப்படுகிற அரிசி வகையாகும்?
A
மேற்கு வங்கம்
B
அஸ்ஸாம்
C
ஒடிஸா
D
கர்நாடகா
Question 39 Explanation: 
‘பாவோ தான்’ என்பது இரும்புச்சத்து நிறைந்த சிவப்பு அரிசி வகைகளுள் ஒன்றாகும். இது, அஸ்ஸாம் மாநிலத்தில், பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கில் உள்ள வண்டல் மண்ணில் பயிரிடப்படுகிறது. சமீபத்தில், இந்தச் ‘சிவப்பு அரிசி’யின் முதல் சரக்கு அமெரிக்காவிற்கு (USA) அனுப்பப்பட்டது. இவ்வ -ரிசியின் தனித்துவமான அம்சம் என்னவென்றால், இது எந்த இரசாயன உரத்தையும் பயன்படுத்தாமல் வளர்க்கப்படுகிறது.
Question 40
10 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகை பிரிவில், ‘Ease of Living Index-2020’இன்படி, சிறந்த நகரமாக உருவெடுத்த நகரம் எது?
A
புனே
B
சண்டிகர்
C
சென்னை
D
பெங்களூரு
Question 40 Explanation: 
மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி வெளியிட்டுள்ள, ‘Ease of Living Index-2020’இன்படி பெங்களூரு சிறந்த நகரமாக உருவெடுத்துள்ளது. 2020ஆம் ஆண்டில், மதிப்பீட்டுப் பயிற்சி நடத்தப்பட்ட நகரங்களுக்கான தரவரிசை அறிவிக்கப்பட்டது. மதிப்பீட்டுப் பயிற்சியில் சுமார் 111 நகரங்கள் பங்கேற்றன. இப்பட்டியலில், தமிழ்நாட் -டைச்சார்ந்த சென்னை நான்காவது இடமும், கோயம்புத்தூர் ஏழாவது இடமும் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
Question 41
‘உலக செவித்திறன் அறிக்கை’யை வெளியிட்ட அமைப்பு எது?
A
WHO
B
FAO
C
IMF
D
ADB
Question 41 Explanation: 
உலக நலவாழ்வு அமைப்பானது (WHO) கேட்புத்திறன் தொடர்பான முதல் அறிக்கையை அண்மையில் வெளியிட்டது. இது, மார்ச்.3 அன்று உலக செவித்திறன் நாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது. இந்த அறிக் -கையின்படி, உலகளவில் கிட்டத்தட்ட 2.5 பில்லியன் மக்கள், அதாவது நான்கில் ஒருவர், வரும் 2050’க்குள் ஓரளவு செவித்திறன் இழப்புடன் வாழ்வார்கள். அவர்களுள் 700 மில்லியன்பேருக்கு செவிப்புலன் மற்றும் மறுவாழ்வு சேவைகளுக்கான அணுகல் தேவைப்படும்.
Question 42
எந்த ஆற்றின்மீது, ‘நட்புப்பாலம்’ கட்டப்பட்டுள்ளது?
A
பிரம்மபுத்திரா
B
யமுனை
C
கோசி
D
பெனி
Question 42 Explanation: 
திரிபுரா மாநிலத்தில் பாயும் பெனி ஆற்றின்மீது, 1.9 கிமீ நீளத்திற்கு கட்டப் -பட்டுள்ள பாலந்தான், ‘நட்புப்பாலம்’. இந்தப்பாலம், இந்தியாவையும் வங் -காளதேசத்தையும் இணைக்கிறது. இப்பாலத்தை தேசிய நெடுஞ்சாலை -கள் மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்கழகம், `133 கோடி செலவில் கட்டியுள்ளது.
Question 43
உலக உணவுவிலைக்குறியீட்டை’ வெளியிடுகிற அமைப்பு எது?
A
உலக வங்கி
B
உணவு மற்றும் உழவு அமைப்பு
C
பன்னாட்டுச் செலவாணி நிதியம்
D
IFAD
Question 43 Explanation: 
உணவு மற்றும் உழவு அமைப்பு (FAO) உணவு விலைக்குறியீட்டை வெளியிட்டு வருகிறது. இது தானியங்கள், எண்ணெய் வித்துக்கள், பால் பொருட்கள், இறைச்சி மற்றும் சர்க்கரை ஆகியவற்றின் மாதாந்திர விலை ஏற்ற இறக்கங்களை அளவிடுகிறது. சமீபத்திய ஜனவரி மாத புள்ளிவிவரத்தின்படி, பிப்ரவரி மாதத்தில் உலக உணவுவிலைகள் தொடர்ந்து ஒன்பதாவது மாதமாக உயர்ந்தன. 2014 ஜூலை முதல் இந்தக் குறியீட்டு எண் உயர்ந்துகொண்டே செல்கிறது. சர்க்கரை மற்றும் தாவர எண்ணெய்களின் விலை உயர்வே இந்தக் குறியீட்டு எண்ணின் உயர்வுக்கு வழிவகுக்கிறது.
Question 44
CARICOM’இன் தலைமையகம் அமைந்துள்ள இடம் எது?
A
தென்னாப்பிரிக்கா
B
கயானா
C
ஜிம்பாப்வே
D
நமீபியா
Question 44 Explanation: 
CARICOM என்பது கரீபிய சமூகத்தை குறிக்கிறது. இது, கடந்த 1973’இல் நிறுவப்பட்டது. இதன் தலைமையகம் கயானாவின் ஜார்ஜ்டெளனில் அமைந்துள்ளது. இது கரீபிய சமூகம் மற்றும் பொதுவான சந்தை என்றும் அழைக்கப்படுகிறது.
Question 45
ICRISAT’இன் தலைமையகம் அமைந்துள்ள இடம் எது?
A
ஹைதராபாத்
B
சென்னை
C
மும்பை
D
பெங்களூரு
Question 45 Explanation: 
மித வறட்சியான வெப்பமண்டலங்களுக்கான சர்வதேச பயிர் ஆராய்ச்சி நிறுவனம் (ICRISAT) என்பது கிராமப்புற மேம்பாட்டுக்கான வேளாண் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள ஒரு பன்னாட்டு அமைப்பாகும். இதன் தலை -மையகம் ஹைதராபாத்தின் பதஞ்செருவில் அமைந்துள்ளது. OPELIP திட்டத்தின்மூலம், குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியின குழுக்க -ளுக்கான திறன்மேம்பாட்டு முயற்சிகளை வழங்குவதற்காக ஒடிஸா அரசாங்கத்தால் இது சமீபத்தில் இணைக்கப்பட்டது.
Question 46
ஐக்கிய நாடுகளின் ஐரோப்பாவுக்கான பொருளாதார ஆணையத் -தின் தலைமையகம் அமைந்துள்ள இடம் எது?
A
ஜெனிவா
B
பிரஸ்ஸல்ஸ்
C
ரோம்
D
பாரிஸ்
Question 46 Explanation: 
ஐரோப்பாவுக்கான ஐநா பொருளாதார ஆணையத்தை (UNECE) 1947’இல் ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக கவுன்சில் (ECOSOC) அமைத்தது. இதன் தலைமையகம் சுவிச்சர்லாந்தின் ஜெனீவாவில் அமைந்துள்ளது. UNECE வெளியிட்டுள்ள அண்மைய அறிக்கையின்படி, கரியமில வாயு நடுநிலைமைத்தன்மையை அடைவதற்கு, புதைப்படிவ மின்னுற்பத்தியிலும் தொழிலகங்களிலிருந்தும் வெளியேற்றப்படும் கரிய -மிலவாயுவை சேமிப்பது அவசியமாகும்.
Question 47
உலக சிறுநீரக நாள் கொண்டாடப்படுகிற மாதம் எது?
A
ஜனவரி
B
பிப்ரவரி
C
மார்ச்
D
ஏப்ரல்
Question 47 Explanation: 
உலக சிறுநீரக நாளானது ஆண்டுதோறும் மார்ச் மாதத்தில் வரும் இரண்டாம் வியாழக்கிழமை அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படு -கிறது. “Living Well with Kidney Disease” என்பது நடப்பாண்டு (2021) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும். பன்னாட்டு சிறுநீரகவியல் சங்கமும் பன்னாட்டு சிறுநீரக அறக்கட்டளைகள் கூட்டமைப்பும் இணைந்து இந்த உலகளாவிய பிரச்சாரத்தை ஏற்பாடுசெய்கின்றன.
Question 48
இந்திய அறிவியல் மற்றும் ஆராய்ச்சி பெல்லோஷிப் – 2021’க்கு தேர்வுசெய்யப்பட்டுள்ள அறிஞர்களின் எண்ணிக்கை என்ன?
A
2
B
5
C
17
D
40
Question 48 Explanation: 
இந்திய அறிவியல் மற்றும் ஆராய்ச்சி பெல்லோஷிப் – 2021’க்கு, 40 அறிஞர்கள் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர். இந்த ஆராய்ச்சி அறிஞர்கள் ஆறு நாடுகளைச்சார்ந்தவர்களாவர். மேலும், பல்வேறு இந்திய நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சி நடத்துவதற்கான பெல்லோசிப் அவர்கட்கு வழங்கப்பட்டுள்ளது. ஆராய்ச்சித்திட்டம், அனுபவம், கல்வித்தகுதி மற்றும் வெளியீட்டு பதிவின் அடிப்படையில் அறிஞரின் தேர்வு அமைந்துள்ளது.
Question 49
INS குலிஷ் & INS சுமேதா ஆகிய இந்திய கடற்படைக் கப்பல்கள், எந்நாட்டின் துறைமுகத்துக்கு முதன்முறையாக சென்றன?
A
இலங்கை
B
வங்காளதேசம்
C
மியான்மர்
D
ஜப்பான்
Question 49 Explanation: 
INS குலிஷ் மற்றும் INS சுமேதா ஆகிய இந்திய கடற்படைக் கப்பல்கள் அண்மையில் வங்கதேசத்தின் துறைமுக நகரமான மோங்லாவுக்கு சென்றன. நடைபெற்றுகொண்டிருக்கும், ‘ஸ்வர்னிம் விஜய் வர்ஷ்’ (1971 விடுதலைப்போர்) நினைவாக அவை அங்கு சென்றன. INS சுமேதா என்பது உள்நாட்டில் கட்டப்பட்ட கடல் ரோந்துக்கப்பலாகும். INS குலிஷ் என்பது உள்நாட்டில் கட்டப்பட்ட வழிகாட்டப்பட்ட ஏவுகணை கப்பலாகும்.
Question 50
‘சாபஹர் நாளை’ இந்தியா எந்தத் தேதியில் நினைவுகூர்ந்தது?
A
2021 மார்ச் 2
B
2021 மார்ச் 4
C
2021 மார்ச் 6
D
2021 மார்ச் 8
Question 50 Explanation: 
மார்ச் 2 முதல் மார்ச் 4 வரை தில்லியில் நடைபெற்ற இந்தியா கடல்சார் உச்சிமாநாடு - 2021’இன்படி, 2021 மார்ச்.4 அன்று, இந்தியா, ‘சாபஹர் நாளை’ நினைவுகூர்ந்தது என்று வெளிவிவகார அமைச்சகம் கூறியது. மெய்நிகராக நடந்த இந்நிகழ்வில் ஆப்கானிஸ்தான், ஈரான், ஆர்மீனியா, இரஷ்யா, கஜகஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சார்ந்த அமைச்சர்கள் பங்கேற்றனர்.
Question 51
கலாசார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சரால் தொடங்கப்பட்ட அனைத்து பெண்கள் கலைக்கண்காட்சியின் பெயர் என்ன?
A
நாரி சக்தி
B
அக்ஷய பாத்திரம்
C
ஷக்தி கலா
D
நாரி சம்ரிதி
Question 51 Explanation: 
• மத்திய கலாசார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரகலாத்சிங் படேல் ‘அக்ஷய பாத்திரம்’ என்ற தலைப்பில் அனைத்து பெண்களின் கலைக் கண்காட்சியை தொடங்கிவைத்தார். இக்கண்காட்சி பன்னாட்டு மகளிர் நாளன்று லலித் கலா அகாதமியில் தொடங்கிவைக்கப்பட்டது. • பன்னிரண்டுக்கும் மேற்பட்ட நாடுகளைச் சார்ந்த 250’க்கும் மேற்பட்ட கலைப்படைப்புகளை இந்தக் கண்காட்சி காட்சிப்படுத்தும்.
Question 52
இந்திய விடுதலையின் 75ஆம் ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் அமைக்கப்பட்டுள்ள குழுவின் தலைவர் யார்?
A
பிரதமர்
B
குடியரசுத்தலைவர்
C
உள்துறை அமைச்சர்
D
பாதுகாப்பு அமைச்சர்
Question 52 Explanation: 
• இந்திய விடுதலையின் 75ஆம் ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் நடுவணரசு குழுவொன்றை அமைத்தது. இந்தக்குழு தனது முதல் கூட்டத்தை அண்மையில் நடத்தியது. கொண்டாட்டங்களுக்கான நடவடிக்கைகள் தொடர்பான நடைமுறைகள் குறித்து அப்போது அது விவாதித்தது. இந்தக் குழுவில் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், முன்னாள் பிரதமர்கள் மன்மோகன் சிங், H D தேவேகவுடா உள்ளிட்ட 259 உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர்.
Question 53
ஆறுகளுக்கான பன்னாட்டு நடவடிக்கை நாள் (International Day of Action for Rivers) கடைப்பிடிக்கப்படுகிற தேதி எது?
A
மார்ச் 10
B
மார்ச் 12
C
மார்ச் 14
D
மார்ச் 16
Question 53 Explanation: 
• ஆண்டுதோறும் மார்ச்.14 அன்று ஆறுகளுக்கான பன்னாட்டு நடவடிக் –கை நாள் அனுசரிக்கப்படுகிறது. நடப்பாண்டு (2021), ஆறுகளுக்கான பன்னாட்டு நடவடிக்கை நாளின் 24ஆவது பதிப்பாகும். நமக்கு வாழ்வு தரும் நீராதாரத்தைப்பற்றி நமக்கும் நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கோடு அர்ப்பணிக்கப்பட்ட நாளாகும் இது. ‘Rights of Rivers’ என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்நாளுக் –கான கருப்பொருளாகும்.
Question 54
டஸ்ட்லிக்’ என்பது இந்தியாவிற்கும் பின்வரும் எந்த நாட்டிற்கும் இடையிலான இராணுவப் பயிற்சியாகும்?
A
பிரான்ஸ்
B
மியான்மர்
C
உஸ்பெகிஸ்தான்
D
ஜப்பான்
Question 55
சொத்து மீட்டமைப்பு இந்தியா லிமிடெட் (ARCIL)’இன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
A
A K பல்லா
B
பல்லவ் மொகபத்ரா
C
G C முர்மு
D
R K மாத்தூர்
Question 55 Explanation: 
சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் தலைமைச்செயலதிகாரி பல்லவ் மொகபத்ரா, சொத்து மீட்டமைப்பு இந்தியா லிட்’இன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ARCIL என்பது இந்தியாவின் பழைமையான சொத்து புனரமைப்பு நிறுவனமாகும்; இது, 2002’இல் நிறுவப்பட்டது. பல்லவ் மொகபத்ராவுக்கு முன்பு, தலைமைச்செயலதிகாரியாக விநாயக் பாகுகுணா அப்பொறுப்பினை வகித்து வந்தார்.
Question 56
உலக நுகர்வோர் உரிமைகள் நாள் கடைப்பிடிக்கப்படுகிற தேதி எது?
A
பிப்ரவரி 12
B
மார்ச் 15
C
ஜனவரி 16
D
ஏப்ரல் 9
Question 56 Explanation: 
நுகர்வோர் உரிமைகளை மேம்படுத்துவதற்கும், நுகர்வோர், நேர்மைய -ற்ற வர்த்தகர்களிடமிருந்து பாதுகாக்கப்படுவதையும் அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்குமாக ஒவ்வோர் ஆண்டும் மார்ச்.15 அன்று உலக நுகர்வோர் உரிமைகள் நாள் அனுசரிக்கப்படுகிறது. “Tackle plastic pollution” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்த நாளுக்கான கருப்பொருளாகும்.
Question 57
அண்மையில் இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்ட மூன்றாவது ‘ஸ்கார்பீன்’ இரக நீர்மூழ்கிக்கப்பலின் பெயர் என்ன?
A
INS கனகலதா
B
INS சென்னை
C
INS கொல்கத்தா
D
INS கரஞ்ச்
Question 57 Explanation: 
இந்திய கடற்படை தனது கடற்படையில், ‘INS கரஞ்ச்’ - மூன்றாவது ‘ஸ்கார்பீன்’ இரக நீர்மூழ்கிக்கப்பலை பணியில் சேர்த்துள்ளது. இது, மசகன் கப்பல் கட்டும் நிறுவனத்தால் அதன் ‘திட்டம்–75’இன்கீழ் கட்டப்ப -ட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ், 6 ‘ஸ்கார்பீன்’ இரக நீர்மூழ்கிக்கப்பல்கள் பிரான்ஸ் தொழில்நுட்பத்துடன் கட்டப்பட்டுள்ளன.
Question 58
செயற்கைக்கோள் தரவைப்பயன்படுத்தி காற்றின் தரத்தைக் கண்காணிப்பதற்காக, எந்த நாட்டின் விண்வெளி நிறுவனத்துடன் ISRO கூட்டிணைந்துள்ளது?
A
ஐக்கிய அமெரிக்க நாடுகள்
B
ஜப்பான்
C
பிரான்ஸ்
D
இரஷ்யா
Question 58 Explanation: 
இந்திய விண்வெளி ஆய்வு மையம் (ISRO) மற்றும் ஜப்பான் விண்வெளி ஆய்வு முகமை (JAXA) ஆகியவை செயற்கைக்கோள் தரவுகளைப்பய -ன்படுத்தி, நெற்பயிர் பயிரிடப்பட்டுள்ள பரப்பளவு மற்றும் காற்றின் தரத் -தைக் கண்காணிப்பது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள பங்குதாரர்களாக இருக்க முடிவுசெய்துள்ளன. புவி கண்காணிப்பு, நிலவு திட்டத்தில் ஒத்துழைப்பு மற்றும் செயற்கைக் கோள் வழிசெலுத்தல் ஆகியவற்றில் நடைபெற்றுகொண்டிருக்கும் ஒத்து -ழைப்பையும் அதிகாரிகள் ஆய்வுசெய்தனர். விண்வெளிச்சூழல் விழிப்பு -ணர்வு மற்றும் தொழிற்முறை பரிமாற்றத் திட்டத்தை கொண்டுவரவும் இருநாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன.
Question 59
இந்தியாவில் சூரிய மின்னுற்பத்தி தொகுதிகளை இறக்குமதி செய்வதற்கு, எவ்வளவு சதவீதம் சுங்க வரி விதிக்கப்படுகிறது?
A
5%
B
10%
C
15%
D
40%
Question 59 Explanation: 
சூரிய மின்னுற்பத்தி தொகுதிகளை இறக்குமதி செய்வதற்கு 40% சுங்க வரியும் சூரிய மின்கலங்களை இறக்குமதி செய்வதற்கு 25% சுங்க வரியு -ம் விதிக்க இந்திய அரசு முடிவுசெய்துள்ளது. இறக்குமதியைக் குறைப்ப -தற்கும், சூரிய மின்னுற்பதிக்கூறுகளின் உள்ளூர் உற்பத்தியை அதிக -ரிப்பதற்கும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தப் புதிய சுங்க வரி, 2022 ஏப்ரல் முதல் நடைமுறைக்கு வரும்.
Question 60
இந்திய கரும்பு ஆராய்ச்சி நிறுவனம் அமைந்துள்ள இடம் எது?
A
லக்னோ
B
தஞ்சாவூர்
C
வாரணாசி
D
சிவகங்கை
Question 60 Explanation: 
ICAR - இந்திய கரும்பு ஆராய்ச்சி நிறுவனம், உத்தரபிரதேச மாநிலத்தில் லக்னோவில் அமைந்துள்ளது. உள்நாட்டு வான்போக்குவரத்து அமைச்ச -கமும் உள்நாட்டு வான்போக்குவரத்து இயக்குநரகமும் ட்ரோன்களைப் பயன்படுத்த IISR’க்கு நிபந்தனை விலக்கு அளித்துள்ளன. ட்ரோன்களைப் பயன்படுத்தி பூச்சி மற்றும் கரும்பு பயிரின் நோய்களைக் கட்டுப்படுத்த, ட்ரோன் முறையிலான தெளித்தல் தீர்வை மதிப்பீடு செய்யும் சோதனைகளை இந்நிறுவனம் நடத்தும்.
Question 61
சமீப செய்திகளில் இடம்பெற்ற ககிர்மாதா கடற்கரை அமைந்துள்ள மாநிலம் எது?
A
ஆந்திர பிரதேசம்
B
ஒடிஸா
C
மகாராஷ்டிரா
D
குஜராத்
Question 61 Explanation: 
அழிவின் விளிம்பிலிருக்கும் ஆலிவ் ரிட்லி பெண் ஆமைகள் ஒடிஸா மாநிலத்தில் உள்ள ககிர்மாதா கடற்கரைக்கு வரத்தொடங்கியுள்ளன. இந்த இடம், இவ்வினங்கள் முட்டையிட பயன்படும் உலகின் மிகப்பெரிய முட்டையிடும் தளம் எனக்கூறப்படுகிறது. இந்த நிகழ்வு ஸ்பானிஷ் மொழியில் “அரிபாடா” என்று அழைக்கப்படுகிறது. கடந்த ஆண்டு, சுமார் 4.50 இலட்சம் ஆமைகள் இந்தக்கடற்கரைக்கு வருகை புரிந்தன.
Question 62
தேசிய தடுப்பூசி நாள் கடைப்பிடிக்கப்படுகிற தேதி எது?
A
மார்ச் 15
B
மார்ச் 10
C
மார்ச் 16
D
மார்ச் 14
Question 62 Explanation: 
தடுப்பூசியின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதற்காக தேசிய நோய்த்தடுப்பு நாள் என அழைக்கப்படும் தேசிய தடுப்பூசி நாள் ஆண்டுதோறும் மார்ச்.16 அன்று இந்தியா முழுவதும் அனுசரிக்கப்படுகிற -து. போலியோ வைரஸ் மற்றும் பிற கொடிய வைரஸ்களுக்கு எதிரான தடுப்பூசிகுறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இந்திய அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது. நடப்பாண்டில் (2021) வரும் தேசிய தடுப்பூசி நாள், போலியோ மற்றும் COVID-19 இரண்டையும் ஒழிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ‘பல்ஸ் போலியோ’ நோய்த்தடுப்பு திட்டம் செயல்பாட்டுக்கு வந்த நாளான 1995 மார்ச்.16 அன்று இந்த நாள் முதன்முதலாக அனுசரிக்கப்பட்டது.
Question 63
நடப்பாண்டில் (2021) BRICS அமைப்பிற்கு தலைமை தாங்கும் நாடு எது?
A
பிரேஸில்
B
இரஷ்யா
C
இந்தியா
D
சீனா
Question 63 Explanation: 
நடப்பாண்டிற்கான (2021) BRICS அமைப்பின் தலைவராக இந்தியா பொறுப்பேற்றுள்ளது. அண்மையில், பொருளாதார & வர்த்தக சிக்கல்கள் குறித்த BRICS தொடர்புக்குழு மார்ச் 9 முதல் 11 வரை இந்தியாவின் தலைமையில் அதன் முதல் கூட்டத்தை நடத்தியது. “BRICS@15: Intra BRICS Cooperation for Continuity, Consolidation, and Consensus” என்பது நடப்பாண்டு (2021) BRICS அமைப்பிற்கான கருப்பொருளாகும்.
Question 64
மருந்துகளுக்கான PLI திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ள மத்திய அமைச்சகம் எது?
A
இரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகம்
B
வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம்
C
வெளியுறவு அமைச்சகம்
D
பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம்
Question 64 Explanation: 
முக்கிய மூலப்பொருட்கள், இடைநிலை மூலப்பொருட்களின் உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்துவதற்கான உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டத்திற்கு மத்திய இரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. முன்னதாக 2020-21 முதல் 2028 -29 வரையிலான நிதியாண்டுக்கு மருந்துகளுக்கான PLI திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஏற்கனவே தனது ஒப்புதலை அளித்திருந்தது.
Question 65
2021 மார்ச்சில், எவ்வமைப்பின் முதல் மெய்நிகர் உச்சிமாநாட்டில் இந்தியா பங்கேற்றது?
A
BRICS
B
QUAD
C
BIMSTEC
D
G20
Question 65 Explanation: 
அமெரிக்க அதிபர் ஜோ பிடன், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் மற்றும் ஜப்பானிய பிரதமர் யோஷிஹைட் சுகா ஆகியோருடன் QUAD தலைவர்களின் முதல் மெய்நிகர் உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். COVID-19’இன் பொருளாதார மற்றும் நல்வாழ்வு பாதிப்புகள், காலநிலை மாற்றம் மற்றும் இணையவெளி, பயங்கரவாத எதிர்ப்பு, தரமான உட்கட்டமைப்பு முதலீடு மற்றும் மனிதாபிமான உதவி, பேரிடர்-நிவாரணம் உள்ளிட்ட சவால்களை எதிர்கொள்வது குறித்து தலைவர்கள் விவாதித்தனர்.
Question 66
சமீப செய்திகளில் இடம்பெற்ற, ‘கார்பன் எல்லை ஒப்பந்தங்களை’ முன்மொழிந்த அமைப்பு எது?
A
G7
B
G20
C
QUAD
D
ஐரோப்பிய ஒன்றியம்
Question 66 Explanation: 
ஐரோப்பிய ஆணையமானது கடந்த 2020 டிசம்பரில் ஐரோப்பிய பசுமை ஒப்பந்தத்தை வெளியிட்டது. மேலும் முதல் ஐரோப்பிய காலநிலை சட்டத் -தை முன்மொழிவதற்கு 2021 மார்ச்சை காலக்கெடுவாகவும் நிர்ணயம் செய்தது. ‘கார்பன் எல்லை ஒப்பந்தத்தை’ செயல்படுத்தும் திட்டங்களை இந்த ஆவணம் சிறப்பித்துக்காட்டுகிறது.
Question 67
நாட்டின் முதல் குளிரூட்டப்பட்ட இரயில் முனையம் அமையவுள்ள நகரம் எது?
A
சென்னை
B
பெங்களூரு
C
மதுரை
D
அகமதாபாத்
Question 67 Explanation: 
இந்தியாவின் முதல் குளிரூட்டப்பட்ட ரயில் முனையமானது பெங்களூரு நகரத்தில் விரைவில் செயல்படவுள்ளது. இந்த இரயில் முனையத்திற்கு மூத்த கட்டுமான பொறியாளர், ‘இந்திய மாமணி’ சர் M விஸ்வேஸ்வரயா -வின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இப்புதிய ரயில் முனையம், நகரத்தின் பயப்பனஹள்ளியில் திட்டமிடப்பட்டுள்ளது. `314 கோடி செலவில் இந்தப் புதிய இரயில் முனையம் கட்டப்பட்டுள்ளது.
Question 68
India FinTech: A USD 100 Billion Opportunity” என்றவோர் அறிக்கையை வெளியிட்டுள்ள இந்திய அமைப்பு எது?
A
ASSOCAM
B
FICCI
C
CAIT
D
NASSCOM
Question 68 Explanation: 
இந்திய வர்த்தக மற்றும் தொழிற்துறை கூட்டமைப்பும் (FICCI) பாஸ்டன் ஆலோசனை குழுமமும் இணைந்து “India FinTech: A USD 100 Billion Opportunity” என்றவோர் அறிக்கையை வெளியிட்டன. இந்தியாவின் நிதியியல் தொழில்நுட்ப தொழிற்துறையின் மொத்த மதிப்பீடு $50 முதல் $60 பில்லியன் அமெரிக்க டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது. 2025ஆம் ஆண்டில் நிதியியல் தொழினுட்ப தொழிற்துறையின் மதிப்பீடு $150-160 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கலாம் என இது கூறுகிறது.
Question 69
‘My Life in Full: Work, Family and Our Future’ என்பது பின்வரும் யாரின் நினைவுக்குறிப்பாகும்?
A
கிரண் மஜும்தார் ஷா
B
இந்திர நூயி
C
சுதா மூர்த்தி
D
ஷிகா சர்மா
Question 69 Explanation: 
‘My Life in Full: Work, Family and Our Future’ என்பது 65 வயதான முன்னாள் பெப்சிகோ தலைமைச் செயல் அதிகாரி இந்திரா நூயியின் நினைவுக்குறிப்பாகும். இது, 2021 செப்டம்பர் மாதத்தில் போர்ட்போலி -யோ புத்தகங்கள் நிறுவனத்தால் வெளியிடப்படும். இது, குழந்தைப் பருவத்திலிருந்து உலகின் மிகவும் ஆற்றல்வாய்ந்த பெண்களுள் ஒருவராக மாறும்வரை அவரது வாழ்க்கையை விவரிக்கி -றது. 24 ஆண்டுகள் பெப்சிகோவில் பணியாற்றிய இந்திரா நூயி, அதன் தலைமைச் செயல் அதிகாரியாக 12 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.
Question 70
COVID-19 கொள்ளைநோய் காரணமாக MPLADS நிதி, எந்த ஆண்டு வரை இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது?
A
2021
B
2022
C
2023
D
2024
Question 70 Explanation: 
COVID-19 கொள்ளைநோய் காரணமாக 2020-21 மற்றும் 2021-22ஆம் ஆண்டுகளில், புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளூர் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் (MPLADS) நிதி வழங்கப்படமாட்டாது என்று மத்திய அரசு அறிவித்தது. 2019-20ஆம் ஆண்டிற்கான MPLADS நிதி, மத்திய நிதியமைச்சகத்தால் விடுவிக்கப்பட்டு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக நடுவண் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மாநிலங்களவைக்குத் தெரிவித்தார்.
Question 71
‘ஆசியா மற்றும் பசிபிக் SDG முன்னேற்ற அறிக்கை-2021’ஐ வெளியிட்ட அமைப்பு எது?
A
ADB
B
UN ESCAP
C
IMF
D
AIIB
Question 71 Explanation: 
ஆசிய மற்றும் பசிபிக் நாடுகளுக்கான ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக ஆணையம் (UN ESCAP) ஆசியா மற்றும் பசிபிக் SDG முன்னேற்ற அறிக்கையின் 2021 பதிப்பை வெளியிட்டது. இந்த அறிக் -கையின்படி, COVID-19 கொள்ளைநோய்க்குள் நுழைவதற்கு முன்னர், இப்பகுதி 2020 இலக்குகளை வெகுவாக அடையவில்லை. உலகளாவிய பைங்குடில் வாயு வெளியேற்றத்தில் பாதிக்கும்மேலானது ஆசிய-பசிபிக் பிராந்தியத்துடையதாகும். ________________________________________
Question 72
2021 உலக தூக்க நாள் கடைப்பிடிக்கப்படுகிற தேதி எது?
A
மார்ச் 19
B
மார்ச் 20
C
மார்ச் 21
D
மார்ச் 22
Question 72 Explanation: 
ஒவ்வோர் ஆண்டும் இளவேனிற்கால சமய இரவு நாளுக்கு முந்தைய நாளன்று உலக தூக்க நாள் அனுசரிக்கப்படுகிறது. நடப்பாண்டு (2021) மார்ச்.19 அன்று இந்நாள் வருகிறது. இதை உலக தூக்க சங்கத்தின் உலக தூக்க நாள் குழுமம் ஏற்பாடு செய்கிறது. “Regular Sleep, Healthy Future” என்பது நடப்பாண்டு வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும்.
Question 73
நடப்பாண்டில் (2021) வரும் உலக தண்ணீர் நாளுக்கான கருப் பொருள் என்ன?
A
Why Waste Water?
B
Valuing Water
C
Water is Life
D
Better Water, Better Jobs
Question 73 Explanation: 
தண்ணீரின் முக்கியத்துவம்பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வோர் ஆண்டும் மார்ச்.21 அன்று உலக தண்ணீர் நாள் கடைபிடிக்க -ப்படுகிறது. “Valuing Water” என்பது நடப்பாண்டில் (2021) வரும் உலக தண்ணீர் நாளுக்கான கருப்பொருளாகும்.
Question 74
மருத்துவ ரீதியிலான கருக்கலைப்பு, 2020’இன்படி, சிறப்புவகை பெண்களுக்கு கருக்கலைப்பு செய்ய அனுமதிக்கப்படும் உச்சவரம்பு காலம் என்ன?
A
20 வாரங்கள்
B
24 வாரங்கள்
C
28 வாரங்கள்
D
32 வாரங்கள்
Question 74 Explanation: 
மருத்துவ ரீதியிலான கருக்கலைப்பு செய்வதற்கு தற்போதுள்ள 20 வார உச்சவரம்பிலிருந்து 24 வாரங்களாக அதை மாற்ற அனுமதிப்பதற்கான திருத்த மசோதாவை மாநிலங்களவை நிறைவேற்றியது. பாலியல் வண்புணர்விலிருந்து தப்பியவர்கள், தகாத உறவுமுறையால் பாதிக்கப்பட்டவர்கள், பருவ வயதினை எட்டாதோர் & மாற்றுத்திறனாளி -கள் உள்ளிட்ட சிறப்புவகை பெண்களுக்கு இந்த வரம்பு பொருந்தும். இந்த மசோதாவை, மக்களவை, ஓராண்டுக்கு முன்பு நிறைவேற்றியது.
Question 75
எந்தத் திட்டத்தின்கீழ், CSIR, இந்தியப் பெருங்கடலில், மரபணு வேறுபாட்டை வரைபடமாக்க உள்ளது?
A
Project IOR
B
Project Bio
C
Project TraceBioMe
D
Project 21
Question 75 Explanation: 
‘TraceBioMe’ திட்டத்தின்கீழ், - கோவாவில் உள்ள அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி கழகத்தின் தேசிய கடல்சார் நிறுவனமானது (CSIR -NIO) இந்தியப்பெருங்கடலில் உள்ள உயிரினங்களின் மரபணு வேறு பாட்டை வரைபடமாக்கத் தொடங்கியுள்ளது. இந்தத் திட்டத்தில், மரபணு வரைபடத்தை உருவாக்குவதற்கு கடலின் வெவ்வேறு இடங்களில் உள்ள நீர், வண்டல், மிதவை நுண்ணுயிரிகள் மற்றும் பல்வேறு உயிரினங்களின் பெரிய அளவிலான மாதிரிகள் சேகரிக்கப்படும்.
Question 76
IBSA (இந்தியா-பிரேசில்-தென்னாப்பிரிக்கா) பெண்கள் மன்றக் கூட்டம் நடைபெற்ற இடம் / முறை எது?
A
இந்தியா
B
சீனா
C
பிரேஸில்
D
மெய்நிகர் முறையில்
Question 76 Explanation: 
IBSA (இந்தியா-பிரேசில்-தென்னாப்பிரிக்கா) பெண்கள் மன்றக் கூட்டம் சமீபத்தில் மெய்நிகர் முறையில் நடைபெற்றது. இது, சந்திப்பின் 6ஆவது பதிப்பாகும். இந்தியாவைச்சார்ந்த தூதுக்குழுவிற்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் தலைமைதாங்கியது. இக்கூட்டத்தின்போது ஒரு கூட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது. அது, IBSA இலக்குகள் மற்றும் வாழ்வின் அனைத்து நிலைகளிலும் பாலின சமத்து -வத்தை அடைவதற்கான உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுகிறது.
Question 77
பிரிட்ஸ்கர் பரிசுடன் தொடர்புடைய துறை எது?
A
இலக்கியம்
B
இதழியல்
C
கட்டுமானக்கலை
D
அறிவியல் & தொழில்நுட்பம்
Question 77 Explanation: 
பிரிட்ஸ்கர் பரிசு என்பது கட்டடக்கலைத் துறையில் வழங்கப்படும் மிக உயரிய கெளரவமாகும். 2021 பிரிட்ஸ்கர் கட்டடக்கலை பரிசு, அன்னே லாகடன் மற்றும் ஜீன்-பிலிப் வசல் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்விரு பிரெஞ்சு வெற்றியாளர்களும் லாகடன் & வசாலின் நிறுவனத் -தின் நிறுவனர்களாவர். தி ஹையாத் அறக்கட்டளையின் தலைவர் வெற்றியாளர்களை அறிவித்தார். அன்னே லாகடன், இந்த விருதை வென்ற முதல் பிரெஞ்சு பெண் கட்டடக்கலைஞராவார்.
Question 78
சமீப செய்திகளில் இடம்பெற்ற, “Baikal-GVD” என்றால் என்ன?
A
விண்கலம்
B
ரஷிய தொலைநோக்கி
C
கிரிப்டோகரன்சி
D
புதிய கோள்
Question 78 Explanation: 
ரஷிய அறிவியலாளர்கள், “பைக்கால்-GVD” என்ற தொலைநோக்கியை உருவாக்கியுள்ளனர். இத்தொலைநோக்கி தெற்கு சைபீரியாவில் உள்ள பைக்கால் ஏரியின் அடியாழத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த ஏரி, பூமியின் மிகஆழமான ஏரியாகும். இந்தத் தொலைநோக்கியைப் பயன்ப -டுத்தி, பிரபஞ்சத்தில் இதுவரை அறியப்பட்ட மிகச்சிறிய துகளான நியூட் -ரினோவை அறிவியலாளர்கள் கண்டறியவுள்ளனர்.
Question 79
புதிய கொரோனா வைரஸுக்கு எதிரான பிறபொருளெதிர்ப்பி உடன் பிறந்த உலகின் முதல் குழந்தை, பின்வரும் எந்த நாட்டில் பிறந்தது?
A
ரஷியா
B
அமெரிக்கா
C
பிரேசில்
D
இத்தாலி
Question 79 Explanation: 
புதிய கொரோனா வைரஸுக்கு எதிரான பிறபொருளெதிர்ப்பிகளைக் கொண்ட உலகின் முதல் குழந்தை அமெரிக்காவில் பிறந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கருவுற்று 36ஆவது வாரத்தில் தாய்க்கு COVID-19 தடுப்பூசி போடப்பட்டது. இதன் விளைவாக தாய் மற்றும் குழந்தை இருவருக்கும் பிறபொருளெதிர்ப்பிகள் உருவாகியுள்ளன.
Question 80
ஆற்றல் சுவராஜ் யாத்திரை’ பேருந்தை உருவாக்கிய நிறுவனம் எது?
A
IIT பாம்பே
B
IIT மெட்ராஸ்
C
IIT கெளகாத்தி
D
IISc, பெங்களூரு
Question 80 Explanation: 
மத்திய கல்வி அமைச்சர் இரமேஷ் பொக்ரியால் ‘நிஷாங்க்’, ஆற்றல் சுவராஜ் யாத்திரை பேருந்தில் பயணம் செய்தார். இந்தப் பேருந்தை, பாம்பே இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தின் பேராசிரியர் டாக்டர் சேதன் சிங் சோலங்கி வடிவமைத்து உருவாக்கியுள்ளார். இது, சூரிய ஆற்றலில் இயங்கும் ஒரு வாகனமாகும்.
Question 81
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற பிராட்காஸ்ட் எஞ்சினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிட் (BECIL) என்பது எந்த அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு பொதுத்துறை நிறுவனமாகும்?
A
தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
B
உள்துறை அமைச்சகம்
C
எரிசக்தி அமைச்சகம்
D
ஜவுளி அமைச்சகம்
Question 81 Explanation: 
பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் என்பது மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின்கீழ் இயங்கும் ஒரு பொதுத்துறை நிறுவனமாகும். சமூக ஊடக தளங்களில் பதியப்படும் தகவல்களின் உண்மைதன்மை -யை சரிபார்ப்பதற்கும் தவறான தகவல்களைக் கண்டறிவதற்குமான தீர்வுகள் மற்றும் சேவைகளை வழங்க, முகமைகளுக்கு அழைப்புவிடுக் -கும் ஒப்பந்தப்புள்ளியை BECIL சமீபத்தில் வெளியிட்டது. BECIL, முகமை -களை அதிகாரபூர்வ பட்டியலில் வைத்திருக்க முற்படுகிறது.
Question 82
2021ஆம் ஆண்டுக்கான மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இந்தியா அடைந்துள்ள தரநிலை என்ன?
A
139
B
145
C
108
D
5
Question 82 Explanation: 
உலக மகிழ்ச்சி அறிக்கை-2021 ஐநா நீடித்த வளர்ச்சிக்கான தீர்வுகள் வலையமைப்பால் சமீபத்தில் வெளியிடப்பட்டது. வாழ்க்கை மதிப்பீடுகள், நேர்மறை உணர்ச்சிகள் மற்றும் எதிர்மறை உணர்ச்சிகள் ஆகிய 3 முக்கிய குறிகாட்டிகளின்கீழ் இவ்வறிக்கை நல்வாழ்வை அளவிடுகிறது. 149 நாடுகளில், இந்தியா 139ஆவது இடத்திலுள்ளது. அறிக்கையின்படி பின்லாந்து உலகின் மகிழ்ச்சியான நாடாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Question 83
உயர்தொழில்நுட்ப பகுதியில் உற்பத்தி மேற்கொள்வதற்கான அரசாங்கக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
A
நிர்மலா சீதாராமன்
B
பியூஷ் கோயல்
C
இராஜ்நாத் சிங்
D
நரேந்திர மோடி
Question 83 Explanation: 
உயர்தொழினுட்ப பகுதிகளில் உற்பத்தி மேற்கோள்வதற்கான குழுவை இந்திய அரசு அமைத்துள்ளது. அலுவல்பூர்வ அறிவிப்பின்படி, இக்குழுவுக் -கு மத்திய வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தலைமை தாங்கவுள்ளார். இந்நடவடிக்கை, முதலீடுகளை மேம்படுத்து -வதோடு தீவிர தொழில்நுட்ப துறைகளில் உற்பத்தியை ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Question 84
அண்மையில், ‘டயல் 112’ ERSS மற்றும் மாநில அவசரநிலை பதிலளிப்பு மையத்தை தொடங்கிய மாநிலம் எது?
A
தமிழ்நாடு
B
கர்நாடகா
C
ஒடிஸா
D
மத்திய பிரதேசம்
Question 84 Explanation: 
ஒடிஸா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் `157 கோடி மதிப்புள்ள ‘டயல் 112’ - மாநில அவசரகால ஆதரவு அமைப்பை அறிமுகப்படுத்தியுள் -ளார். காவல்துறை, தீயணைப்பு துறை மற்றும் நலவாழ்வு உள்ளிட்ட அனைத்து அவசர சேவைகளுக்கும், இந்தக் கட்டணமில்லா எண்ணை மக்கள் பயன்படுத்தலாம். மாநில அவசரநிலை பதிலளிப்பு மையம் மற்றும் மொபைல் டேடா டெர்மினல்கள் பொருத்தப்பட்ட அவசரகால மீட்பு வாகனங்களும் தொடங்கிவைக்கப்பட்டன.
Question 85
தேசிய கணக்குகள் புள்ளிவிவரங்கள் – 2021’இன்படி, எந்தத் துறையின் தனியார் இறுதி நுகர்வு செலவு அதிகபட்ச உயர்வைக் கொண்டிருந்தது?
A
கல்வி
B
உணவகங்கள்
C
நலவாழ்வு
D
மதுபானங்கள்
Question 85 Explanation: 
நடுவண் புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட தேசிய கணக்குகள் புள்ளிவிவரங்கள் - 2021’இன்படி, சுகாதாரம், கல்வி மற்றும் உணவகங்களுக்கான தனியார் இறுதிநுகர்வு செலவு, 2019-20ஆம் ஆண்டில் அதிகபட்ச உயர்வைக் கொண்டுள்ளன.
Question 86
ஐநா அறிவித்தபடி, உலகம் முழுவதும் பன்னாட்டு மகிழ்ச்சி நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?
A
மார்ச் 18
B
மார்ச் 20
C
மார்ச் 22
D
மார்ச் 24
Question 86 Explanation: 
ஐநா அவையின் பொது அவை, கடந்த 2012ஆம் ஆண்டில், மார்ச்.20’ஐ பன்னாட்டு மகிழ்ச்சி நாளாக அறிவித்தது. உலகெங்குமுள்ள மக்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்க, இது, 2013 முதல் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. உலக மகிழ்ச்சி அறிக் -கையின்படி, இந்த ஆண்டு, பின்லாந்து, உலகின் மகிழ்ச்சியான நாடாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Question 87
. உலக வானிலை நாள் கடைபிடிக்கப்படுகிற தேதி எது?
A
மார்ச் 20
B
மார்ச் 21
C
மார்ச் 22
D
மார்ச் 23
Question 87 Explanation: 
ஆண்டுதோறும், மார்ச்.23 அன்று உலக வானிலை நாள் கடைபிடிக்கப்ப -டுகிறது. இது, 1950 மார்ச்.23 அன்று உலக வானிலை அமைப்பு (WMO) உருவாக்கப்பட்டதை நினைவுகூர்கிறது. புவியின் வளிமண்டலத்தைப் பாதுகாப்பதில் மனிதர்களும், அமைப்புகளும் ஆற்றிய பங்கையும் இந்தச் சிறப்பு நாள் எடுத்துக்காட்டுகிறது. “The Ocean, Our Climate and Weather” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும்.
Question 88
உலக காசநோய் நாள் கடைபிடிக்கப்படுகிற தேதி எது?
A
மார்ச் 21
B
மார்ச் 22
C
மார்ச் 23
D
மார்ச் 24
Question 88 Explanation: 
ஒவ்வோர் ஆண்டும், உலக நலவாழ்வு அமைப்பு இந்த நோய் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மார்ச்.24 அன்று உலக காசநோய் நாளை நினைவுகூர்கிறது. 1882ஆம் ஆண்டு இதேநாளில், மருத்துவர் இராபர்ட் கோச், காசநோயை ஏற்படுத்தும் பாக்டீ -ரியத்தை கண்டுபிடித்ததாக அறிவித்தார். “The Clock is Ticking” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும்.
Question 89
கைதுசெய்யப்பட்ட மற்றும் காணாமல்போன பணியாளர்களுக் -கான பன்னாட்டு ஒன்றிணையும் நாள் அனுசரிக்கப்படுகிற தேதி எது?
A
மார்ச் 23
B
மார்ச் 24
C
மார்ச் 25
D
மார்ச் 26
Question 89 Explanation: 
ஆண்டுதோறும் மார்ச்.25 அன்று, “கைதுசெய்யப்பட்ட மற்றும் காணாமல்போன பணியாளர்களுக்கான பன்னாட்டு ஒன்றிணையும் நாள்” ஐநா அவையால் அனுசரிக்கப்படுகிறது. இந்நாளானது ஒவ்வோர் ஆண்டும் அலெக் கோலெட் என்பவர் கடத்திச்செல்லப்பட்ட நாளினை நினைவுகூரும் விதமாக கடைபிடிக்கப்படுகிறது. அவர், கடந்த 1985’இல், துப்பாக்கிமுனையில் கடத்தப்பட்டபோது, பாலசுதீனத்தில் ஐக்கிய நாடுக -ள் - நிவாரண மற்றும் பணி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
Question 90
சமீப செய்திகளில் இடம்பெற்ற, 2011 இஸ்தான்புல் மாநாட்டுடன் தொடர்புடைய பிரச்சினை எது?
A
குடும்ப வன்முறை மற்றும் பாலின சமத்துவம்
B
பருவநிலை மாற்றம்
C
நிதியியல் உள்ளடக்கம்
D
பரவா நோய்
Question 90 Explanation: 
இசுதான்புல்லில் உருவாக்கப்பட்ட ஐரோப்பிய கவுன்சில் ஒப்பந்தமானது, குடும்ப வன்முறைகளைத் தடுக்கவும், வழக்குத் தொடரவும், ஒழிக்கவும், சமத்துவத்தை ஊக்குவிக்கவும் உறுதியளித்தது. துருக்கி அதிபர் தயிப் எர்டோகன், பெண்களைப் பாதுகாப்பதற்காக வடிவமைக்கப்பட்ட இந்தப் பன்னாட்டு ஒப்பந்தத்திலிருந்து, துருக்கியை வெளியேற்றினார். எவ்வாறாயினும், அதிகரித்துவரும் குடும்ப வன்முறைகளை எதிர்ப்பதற் -கான ஒரு கருவியாக இந்த ஒப்பந்தத்தை காணும் மக்கள், தங்கள் கவலைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
Question 91
முதல் பழங்குடி கல்வி அமைப்புப் பள்ளியான, ‘நியுபு நைவ்காம் யெர்கோ’ திறக்கப்பட்டுள்ள மாநிலம் எது?
A
ஒடிஸா
B
அருணாச்சல பிரதேசம்
C
மேற்கு வங்கம்
D
மிசோரம்
Question 91 Explanation: 
அருணாச்சலபிரதேச மாநில முதலமைச்சர் பேமா கந்து, அம்மாநிலத்தின் முதல் முதல் பழங்குடி மொழிவழிக்கல்வி அமைப்புப் பள்ளியைத் திறந்து வைத்துள்ளார். ‘நியுபு நைவ்காம் யெர்கோ’ என்று பெயரிடப்பட்ட இந்தப் பள்ளி, பழங்குடி மரபுகள், கலாச்சாரம் மற்றும் மொழி ஆகியவற்றை மேம் -படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் உதவும். பள்ளியின் வளர்ச்சி மற்றும் பராமரிப்புக்காக `3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Question 92
மாவட்டங்களின் ஆண்டு ஏற்றுமதி தரவரிசைக் குறியீட்டைத் தயாரிப்பதில் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு உதவுவது எது?
A
NITI ஆயோக்
B
வணிக அமைச்சகம்
C
திட்ட ஆணையம்
D
தேசிய வளர்ச்சிக் கழகம்
Question 92 Explanation: 
பல்வேறு மாவட்டங்களின் ஆண்டு ஏற்றுமதி தரவரிசைக் குறியீட்டைத் தயாரிக்க மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் உதவும் என மத்திய வணிகம் & தொழிற்துறை அமைச்சகம் அறிவித்தது. இக்குறியீடு ஒவ்வொரு மாவட்டத்தையும் அதன் ஏற்றுமதி போட்டித்தன்மைக்கு ஏற்ப வரிசைப்படுத்தும். மாவட்டத்தில் ஏற்றுமதி திறன்கொண்ட பொருட்கள் மற்றும் சேவைகளை அடையாள -ங்காண்பதே மாவட்ட ஏற்றுமதி செயல்திட்டமாகும்.
Question 93
COVID-19’உம் சுற்றுலாவும்’ என்ற தலைப்பில் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ள பன்னாட்டு அமைப்பு எது?
A
NITI ஆயோக்
B
NCAER
C
UNCTAD
D
TERI
Question 93 Explanation: 
• ஐநா வர்த்தகம் மற்றும் மேம்பாட்டு அமைப்பான UNCTAD, அண்மையில், ‘COVID-19’உம் சுற்றுலாவும்’ என்ற தலைப்பிலான ஓர் அறிக்கையை வெளியிட்டது. இவ்வறிக்கையின்படி, உலக சுற்றுலாத்துறை குறைந்தது $1.2 டிரில்லியன் அமெரிக்க டாலர்களை அல்லது உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.5 சதவீதத்தை இழக்கக்கூடும். • 8 மாதங்களுக்கும் மேல் பன்னாட்டு சுற்றுலா நடைபெறாமல் இருந்தால், இந்த இழப்பு சதவீதம் $2.2 டிரில்லியன் அமெரிக்க டாலர் அல்லது உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.8% ஆக உயரக்கூடும்.
Question 94
ஒப்பந்தங்கள் மற்றும் சமரச வழிமுறைகளை அமல்படுத்துவதற்கா -ன செயல்திட்டங்களை உருவாக்குவதற்காக இந்திய அரசாங்கம் உருவாக்கிய 2 உயர்மட்ட பணிக்குழுக்களின் தலைவர்கள் யார்?
A
நரேந்திர மோடி & இராஜ்நாத் சிங்
B
நிர்மலா சீதாராமன் & அமித் ஷா
C
இராஜீவ் குமார் & அமிதாப் காந்த்
D
Y M தியோஸ்தலி & உர்ஜித் படேல்
Question 94 Explanation: 
• ஒப்பந்தங்கள் மற்றும் சமரச வழிமுறைகளை அமல்படுத்துவதற்கான முறையான செயல்திட்டத்தை அமைப்பதற்காக இந்திய அரசு இரண்டு உயர்மட்ட பணிக்குழுக்களை அமைத்துள்ளது. • பணிக்குழுவில் ஒன்று NITI ஆயோக் துணைத்தலைவர் இராஜீவ் குமார் தலைமையிலும் மற்றொரு குழு NITI ஆயோக் தலைமைச்செயலதிகாரி அமிதாப் காந்த் தலைமையிலும் உள்ளது. இப்பணிக்குழுக்கள், நாட்டில் உட்கட்டமைப்பு வளர்ச்சியை விரைவாக செயல்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
Question 95
மது அருந்துவதற்கான வயதை 25’லிருந்து 21’ஆக குறைத்த மாநிலம் / யூனியன் பிரதேசம் எது?
A
உத்தர பிரதேசம்
B
மத்திய பிரதேசம்
C
தில்லி
D
ராஜஸ்தான்
Question 95 Explanation: 
• தில்லி அரசு அதன் புதிய கலால் கொள்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. அக்கொள்கையின்கீழ், தில்லியில் மது அருந்துவதற்கான குறைந்தபட்ச வயதை 25’லிருந்து 21 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது. தில்லி அரசு அமைத்த குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த முறை செயல்படுத்தப்பட்டுள்ளது.
Question 96
பாதுகாப்பின் பார்வையில், சமீபத்திய செய்திகளில் இடம்பெற்ற ‘வஜ்ரா’ என்றால் என்ன?
A
ஆளில்லா வானூர்தி
B
கடலோர ரோந்துக்கப்பல்
C
பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை
D
தொலைநிலை கட்டுப்பாட்டு துப்பாக்கி
Question 96 Explanation: 
• இந்திய கடலோர காவல்படையின் ரோந்துக்கப்பலான ‘வஜ்ரா’ கப்பல் முறையாக சேவையில் ஈடுபடுத்தப்பட்டது. இது, லார்சன் மற்றும் டூப்ரோ நிறுவனத்தால் உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்டது. ஏழு கடல் ரோந்து கப்பல்களுள் இது ஆறாவது கப்பலாகும். இந்தக்கப்பலில் ஆயுத தளவாடங்கள், தொலைத்தொடர்பு கருவிகள், கட்டமைப்பு வசதிகள் பாதுகாப்பு அம்சங்கள் உள்ளிட்டவை நிரம்ப உள்ளன.
Question 97
முதன்முறையாக ‘கட்டற்ற விண்வெளி குவாண்டம் தகவல்தொட -ர்பை’ விளக்கிக்காட்டிய இந்திய அமைப்பு எது?
A
HAL
B
BEL
C
ISRO
D
DRDO
Question 97 Explanation: 
• முதன்முறையாக, இந்திய விண்வெளி ஆய்வு மையம் (ISRO) சமீபத்தில் 300 மீட்டர் உயரத்திற்குமேல் விண்வெளி குவாண்டம் தகவல்தொடர்பு -களின் இருப்பை நிரூபித்துள்ளது. குவாண்டம்-கீ-மறைகுறியாக்கப்பட் -ட சமிக்ஞைகளைப் பயன்படுத்தி நேரலையில் இதனை நிரூபித்தது. ஆமதாபாத்தில் உள்ள விண்வெளி பயன்பாட்டு மையத்தில், கட்டற்ற-விண்வெளி குவாண்டம் விசை விநியோகம் நிரூபிக்கப்பட்டது.
Question 98
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, “மன்யங்கொண்டா ஜாதரா” என்றால் என்ன?
A
பண்டைய ஹரப்பர் தளம்
B
புத்த விகாரம்
C
மாநிலங்களுக்கு இடையேயான மதஞ்சார் விழா
D
விடுதலைக்கு முந்தைய இயக்கம்
Question 98 Explanation: 
• மன்யங்கொண்டா ஜாதரா என்பது ஆந்திர பிரதேசம் மற்றும் ஒடிஸா ஆகிய மாநிலங்களுக்கு இடையேயான மதஞ்சார் விழாவாகும். இந்த விழாவில், ஆந்திர பிரதேச மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் மொத்துகுதேம் மண்டலத்தில் உள்ள பொல்லூரு கிராமத்தில் ஒடிஸா மாநிலத்திற்கு கடவுளர் சிலைகளை மாற்றுவதும் அடங்கும். • கடந்த காலங்களில், இந்தத் திருவிழாவின்போது விரும்பத்தகாத நிகழ்வு -களும் இடதுசாரி தீவிரவாதங்களும் பதிவாகியுள்ளன. ஆனால், ஏராள -மான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக, இந்த ஆண்டின் திருவிழா அமைதியாக நடந்தேறியது.
Question 99
இந்தியாவின் UPSC’க்கும் பின்வரும் எந்த நாட்டின் தேர்வாணை -யத்துக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது?
A
இலங்கை
B
வங்காளதேசம்
C
ஆப்கானிஸ்தான்
D
பாகிஸ்தான்
Question 99 Explanation: 
• இந்தியாவின் மத்திய பணியாளர் தேர்வாணையம் (UPSC) மற்றும் ஆப்கானிஸ்தானின் சுயாதீன நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் குடிமைப் பணிகள் ஆணையம் (IARCSC) ஆகியவற்றுக்கிடையேயான புரிந்துண -ர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. IARCSC மற்றும் UPSC ஆகியவற்றுக்கு இடையேயான உறவை இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் வலுப்படுத்தும். • பணியாளர்கள் தேர்வில் இருதரப்புக்கும் உள்ள அனுபவம் மற்றும் நிபுணத்துவத்தை பகிர்ந்துகொள்ளவும் இது வழிவகுக்கும்.
Question 100
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நிரந்தர சிந்து ஆணையத்தின் 116ஆவது கூட்டம் நடைபெற்ற இடம் எது?
A
லாகூர்
B
புது தில்லி
C
ஜெய்ப்பூர்
D
ஜலந்தர்
Question 100 Explanation: 
• இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நிரந்தர சிந்து ஆணை -யக்கூட்டத்தின் 116ஆவது கூட்டம் சமீபத்தில் புது தில்லியில் நடந்தது. இந்தச் சந்திப்பு, இரண்டரை ஆண்டுகளுக்கு மேலான இடைவெளிக்குப் பின்னர் நடந்தது. பாகிஸ்தான் தேசிய நாளுடன் இச்சந்திப்பு ஒத்துப்போ -னது. இரண்டு நாள் நடைபெற்ற இக்கூட்டம், இந்திய தரப்பில் சிந்து நீர் ஆணையர் பிரதீப் குமார் சக்சேனா தலைமையில் நடைபெற்றது.
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 100 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!