Tnpsc

March 3rd Week 2021 Current Affairs Online Test in Tamil

நடப்பு நிகழ்வுகள் March 3rd Week Online Test - 2021 Tamil

Congratulations - you have completed நடப்பு நிகழ்வுகள் March 3rd Week Online Test - 2021 Tamil. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
சிறப்பு பெண்கள் மொகல்லா கிளினிக்குகளைத் தொடங்குவதாக அறிவித்துள்ள இந்திய மாநிலம் / யூனியன் பிரதேசம் எது?
A
உத்தர பிரதேசம்
B
தில்லி
C
பீகார்
D
குஜராத்
Question 1 Explanation: 
அடுத்த நிதியாண்டில் நகரம் முழுவதும் சிறப்பு பெண்கள் மொஹல்லா கிளினிக்குகள் திறக்கப்படும் என்று தில்லி அரசு சமீபத்தில் அறிவித்தது. 2021-22ஆம் ஆண்டிற்கான அரசாங்கத்தின் வருடாந்த வரவுசெலவுத் திட்டத்தை முன்வைக்கும்போது, துணை முதலமைச்சரும் நிதியமைச்ச -ருமான மனீஷ் சிசோடியா இந்தத் திட்டத்தை அறிவித்தார். இது, பெண்களுக்கு, வீட்டிலிருந்து நடந்து செல்லும் தூரத்தில், இலவச மகளிர் மருத்துவ மற்றும் பிற மருத்துவ சேவைகளை வழங்கும்.
Question 2
பின்வரும் எந்தத்துறை, தனது அதிகாரிகளுக்காக ஆன்லைனில் 5G சான்றிதழுடன் கூடிய படிப்பைத் தொடங்கியுள்ளது?
A
நிதியியல் சேவைகள் துறை
B
தொலைத்தொடர்பு துறை
C
மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை
D
தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத்துறை
Question 2 Explanation: 
தொலைத்தொடர்புத்துறை தனது அதிகாரிகளுக்காக ஆன்லைன் 5G சான்றிதழுடன்கூடிய படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் துறையின் பயிற்சிப்பிரிவான கொள்கை ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு மற்றும் பயிற்சிக்கான தேசிய தொலைத்தொடர்பு நிறுவனம் நடத்தும் 12 வார ஆன்லைன் பாடத்திட்டத்தைத் தொடங்குவதன்மூலம், 5G வல்லுந -ர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களைக்கொண்ட ஓர் உள்ளுறை குழுமத்தை உருவாக்குவது இந்தத் துறையின் நோக்கமாகும்.
Question 3
பொருளாதார விவகார துறையுடன் இணைந்து சொத்து பணமாக் -குதல் குறித்த தேசிய அளவிலான மெய்நிகர் பயிலரங்கை ஏற்பாடு செய்த நிறுவனம் எது?
A
NITI ஆயோக்
B
TERI
C
FICCI
D
ASSOCHAM
Question 3 Explanation: 
NITI ஆயோக், பொருளாதார விவகாரங்கள் துறையுடன் இணைந்து, சொத்தை பணமாக்குதல் குறித்த தேசிய அளவிலான மெய்நிகர் பயிலரங் -கை ஏற்பாடு செய்தது. இந்தச் செயலமர்வுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமைதாங்கினார். இதில், மாநிலங்களின் தலைமைச்செயலர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிர்வாகிகள் ஆகியோர் பங்கேற்றனர்.
Question 4
அண்மையில் இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்ட மூன்றாவது ‘ஸ்கார்பீன்’ இரக நீர்மூழ்கிக்கப்பலின் பெயர் என்ன?
A
INS கனகலதா
B
INS சென்னை
C
INS கொல்கத்தா
D
INS கரஞ்ச்
Question 4 Explanation: 
இந்திய கடற்படை தனது கடற்படையில், ‘INS கரஞ்ச்’ - மூன்றாவது ‘ஸ்கார்பீன்’ இரக நீர்மூழ்கிக்கப்பலை பணியில் சேர்த்துள்ளது. இது, மசகன் கப்பல் கட்டும் நிறுவனத்தால் அதன் ‘திட்டம்–75’இன்கீழ் கட்டப்ப -ட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ், 6 ‘ஸ்கார்பீன்’ இரக நீர்மூழ்கிக்கப்பல்கள் பிரான்ஸ் தொழில்நுட்பத்துடன் கட்டப்பட்டுள்ளன.
Question 5
இந்திய விடுதலையின் எழுபத்தைந்தாம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் கொண்டாட்டங்களுக்கு என்ன பெயர் சூட்டப்பட்டுள்ளது?
A
ஆதி மகோத்ஸவம்
B
விடுதலைப்பெருவிழா
C
சுதந்திர இந்தியா
D
அம்ரித் மகோத்ஸவம்
Question 5 Explanation: 
இந்திய விடுதலையின் எழுபத்தைந்தாம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் ‘அம்ரித் மகோத்ஸவத்தின்’ ஒருபகுதியாக அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இருக்குமாறு பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். விடுதலையின் 75ஆம் ஆண்டை நினைவுகூரும் இந்த அம்ரித் திருவிழா, நாட்டின் 75 இடங்களில், 75 வாரங்களுக்கு கொண்டாடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ________________________________________
Question 6
NASA’இன் கூற்றுப்படி, பூமியில் உள்ள எந்த ஏரி, செவ்வாய்க் கோளின் ஜெசெரோ பள்ளத்தை ஒத்திருக்கிறது?
A
பழவேற்காடு ஏரி
B
சால்தா ஏரி
C
வேம்பநாடு ஏரி
D
விக்டோரியா ஏரி
Question 6 Explanation: 
NASA’இன் ஓர் அண்மைய வெளியீட்டின்படி, துருக்கிய ஏரி சால்தாவில் காணப்படும் பாறை மற்றும் கனிம இருப்புகள் செவ்வாய்க்கோளின் ஜெசெரோ பள்ளத்துடன் மிகவும் ஒத்துள்ளது. சமீபத்தில், NASA’இன் பெர்சிவரன்ஸ் விண்கலம், செவ்வாய்க்கோளின் ஜெசெரோ பள்ளத்தில் தரையிறங்கியது. அந்தப்பள்ளம் ஒரு காலத்தில் நீரால் நிரம்பியிருந்திருக்கலாம் எனக்கூறப்படுகிறது. ________________________________________
Question 7
உலக நுகர்வோர் உரிமைகள் நாள் கடைப்பிடிக்கப்படுகிற தேதி எது?
A
பிப்ரவரி 12
B
மார்ச் 15
C
ஜனவரி 16
D
ஏப்ரல் 9
Question 7 Explanation: 
நுகர்வோர் உரிமைகளை மேம்படுத்துவதற்கும், நுகர்வோர், நேர்மைய -ற்ற வர்த்தகர்களிடமிருந்து பாதுகாக்கப்படுவதையும் அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்குமாக ஒவ்வோர் ஆண்டும் மார்ச்.15 அன்று உலக நுகர்வோர் உரிமைகள் நாள் அனுசரிக்கப்படுகிறது. “Tackle plastic pollution” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்த நாளுக்கான கருப்பொருளாகும்.
Question 8
எந்த நடுவண் அமைச்சகத்தின்கீழ், ‘APEDA’ நிறுவப்பட்டது?
A
வேளாண் அமைச்சகம்
B
ஊரக வளர்ச்சி அமைச்சகம்
C
ஊரக வளர்ச்சி அமைச்சகம்
D
உணவுப்பதனிடும் தொழிற்சாலைகள் அமைச்சகம்
Question 8 Explanation: 
வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையமானது (APEDA) 1985ஆம் ஆண்டு டிசம்பரில் நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட APEDA சட்டத்தின்கீழ் இந்திய அரசால் நிறுவப்பட்டது. இது வணிகம் & தொழிற்துறை அமைச்சகத்தின் கீழ் அமைக்கப்பட்டது. வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களின் ஏற்றுமதியை அதிகரிப்பதற்காக, APEDA, அண்மையில் தனது முதல் மெய்நிகர் வர்த்தக கண்காட்சியைத் தொடங்கியது.
Question 9
சமீப செய்திகளில் இடம்பெற்ற ககிர்மாதா கடற்கரை அமைந்துள்ள மாநிலம் எது?
A
ஆந்திர பிரதேசம்
B
ஒடிஸா
C
மகாராஷ்டிரா
D
குஜராத்
Question 9 Explanation: 
அழிவின் விளிம்பிலிருக்கும் ஆலிவ் ரிட்லி பெண் ஆமைகள் ஒடிஸா மாநிலத்தில் உள்ள ககிர்மாதா கடற்கரைக்கு வரத்தொடங்கியுள்ளன. இந்த இடம், இவ்வினங்கள் முட்டையிட பயன்படும் உலகின் மிகப்பெரிய முட்டையிடும் தளம் எனக்கூறப்படுகிறது. இந்த நிகழ்வு ஸ்பானிஷ் மொழியில் “அரிபாடா” என்று அழைக்கப்படுகிறது. கடந்த ஆண்டு, சுமார் 4.50 இலட்சம் ஆமைகள் இந்தக்கடற்கரைக்கு வருகை புரிந்தன.
Question 10
ஓர் அண்மைய ஆய்வின்படி, கடல்களில் வெப்பமயமாதலால், எவ்வுயிரினத்தின் வளர்சிதை மாற்றத்தில் பாதிப்பேற்பட்டுள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது?
A
கடலாமைகள்
B
திமிங்கலங்கள்
C
சுறாக்கள்
D
ஓங்கில்கள்
Question 10 Explanation: 
சயின்டிபிக் ரிப்போர்ட்ஸ் என்னும் இதழில் அண்மையில் வெளியான ஓர் ஆய்வின்படி, கடல்களின் வெப்பமயமாதல் சுறாக்களின் வளர்சிதை மாற் -றத்தை பாதித்ததாகக் கூறப்படுகிறது. மிகுந்த வெப்பநிலையில் வளரும் சுறாக்கள் சராசரி வெப்பநிலையில் வளரும் சுறாக்களைவிட குறைவான எடைகொண்டதாக உள்ளன. குட்டிசுறாக்கள், உயிர்வாழத்தேவையான ஆற்றல் இல்லாமல், மிகச்சிறியதாக பிறக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
Question 11
இந்திய கரும்பு ஆராய்ச்சி நிறுவனம் அமைந்துள்ள இடம் எது?
A
லக்னோ
B
தஞ்சாவூர்
C
வாரணாசி
D
சிவகங்கை
Question 11 Explanation: 
ICAR - இந்திய கரும்பு ஆராய்ச்சி நிறுவனம், உத்தரபிரதேச மாநிலத்தில் லக்னோவில் அமைந்துள்ளது. உள்நாட்டு வான்போக்குவரத்து அமைச்ச -கமும் உள்நாட்டு வான்போக்குவரத்து இயக்குநரகமும் ட்ரோன்களைப் பயன்படுத்த IISR’க்கு நிபந்தனை விலக்கு அளித்துள்ளன. ட்ரோன்களைப் பயன்படுத்தி பூச்சி மற்றும் கரும்பு பயிரின் நோய்களைக் கட்டுப்படுத்த, ட்ரோன் முறையிலான தெளித்தல் தீர்வை மதிப்பீடு செய்யும் சோதனைகளை இந்நிறுவனம் நடத்தும்.
Question 12
தெலுங்கானா மாநிலத்தில் இந்தியாவின் மிகப்பெரிய மிதக்கும் சூரிய மின்னுற்பத்தி நிலையத்தை அமைக்கவுள்ள அமைப்பு எது?
A
NHPC
B
NTPC
C
REC
D
BHEL
Question 12 Explanation: 
NTPC (தென் மண்டலம்) தெலுங்கானாவின் இராமகுண்டத்தில் இந்தி -யாவின் மிகப்பெரிய மிதக்கும் சூரிய மின் நிலையத்தை அமைக்க உள்ளது. இது, 100 MW திறன்கொண்ட திட்டமாகும். இது, தற்போது நாட்டின் மிகப்பெரிய மிதக்கும் சூரிய மின்னுற்பத்தி ஆலையாக இருக்கு -ம். NTPC, சுமார் 450 MW சூரிய சக்தி மற்றும் 217 MW மிதக்கும் சூரிய மின்னுற்பத்தி ஆகியவற்றை செயல்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது.
Question 13
இந்தியாவில் சூரிய மின்னுற்பத்தி தொகுதிகளை இறக்குமதி செய்வதற்கு, எவ்வளவு சதவீதம் சுங்க வரி விதிக்கப்படுகிறது?
A
5%
B
10%
C
15%
D
40%
Question 13 Explanation: 
சூரிய மின்னுற்பத்தி தொகுதிகளை இறக்குமதி செய்வதற்கு 40% சுங்க வரியும் சூரிய மின்கலங்களை இறக்குமதி செய்வதற்கு 25% சுங்க வரியு -ம் விதிக்க இந்திய அரசு முடிவுசெய்துள்ளது. இறக்குமதியைக் குறைப்ப -தற்கும், சூரிய மின்னுற்பதிக்கூறுகளின் உள்ளூர் உற்பத்தியை அதிக -ரிப்பதற்கும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தப் புதிய சுங்க வரி, 2022 ஏப்ரல் முதல் நடைமுறைக்கு வரும்.
Question 14
கீழ்காணும் எந்த அமைச்சகம் ESI திட்டத்தை PM-JAY உடன் ஒருங்கிணைக்கவுள்ளது?
A
உள்துறை அமைச்சகம்
B
நலவாழ்வு & குடும்பநலத்துறை அமைச்சகம்
C
தொழிலாளர் & வேலைவாய்ப்பு அமைச்சகம்
D
சமூக நீதி அமைச்சகம்
Question 14 Explanation: 
சத்தீஸ்கர், கர்நாடகா, மத்திய பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் உள்ள 113 மாவட்டங்களில் ஆயுஷ்மான் பாரத பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய (PM-JAY) திட்டத்துடன் ESI திட்டத்தை ஒன்றி -ணைக்க மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் தொடங்கியுள்ளது. இந்த ஒருங்கிணைப்பின்மூலம், 1.35 கோடி ESI பய -னாளிகள் PM-JAY திட்டத்தின்கீழ் இலவச சிகிச்சையின் பலன்களைப் பெறமுடியும்.
Question 15
சமீபத்தில், அரசர் பூமிபால் பன்னாட்டு உலக மண் நாள் விருது - 2020’ஐ வென்ற இந்திய ஆராய்ச்சி நிறுவனம் எது?
A
NHPC
B
NTPC
C
ICAR
D
HAL
Question 15 Explanation: 
புது தில்லியில் உள்ள ICAR (இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சில்) சமீபத்தில் அரசர் பூமிபால் பன்னாட்டு உலக மண் நாள் விருது-2020’ஐ வென்றது. நலம்மிக்க எண்ணெய்களின் முக்கியத்துவம்குறித்து விழிப்பு -ணர்வை ஏற்படுத்துவதற்கான அவ்வமைப்பின் அர்ப்பணிப்புக்காக இது வழங்கப்பட்டுள்ளது.
Question 16
செயற்கைக்கோள் தரவைப்பயன்படுத்தி காற்றின் தரத்தைக் கண்காணிப்பதற்காக, எந்த நாட்டின் விண்வெளி நிறுவனத்துடன் ISRO கூட்டிணைந்துள்ளது?
A
ஐக்கிய அமெரிக்க நாடுகள்
B
ஜப்பான்
C
பிரான்ஸ்
D
இரஷ்யா
Question 16 Explanation: 
இந்திய விண்வெளி ஆய்வு மையம் (ISRO) மற்றும் ஜப்பான் விண்வெளி ஆய்வு முகமை (JAXA) ஆகியவை செயற்கைக்கோள் தரவுகளைப்பய -ன்படுத்தி, நெற்பயிர் பயிரிடப்பட்டுள்ள பரப்பளவு மற்றும் காற்றின் தரத் -தைக் கண்காணிப்பது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள பங்குதாரர்களாக இருக்க முடிவுசெய்துள்ளன. புவி கண்காணிப்பு, நிலவு திட்டத்தில் ஒத்துழைப்பு மற்றும் செயற்கைக் கோள் வழிசெலுத்தல் ஆகியவற்றில் நடைபெற்றுகொண்டிருக்கும் ஒத்து -ழைப்பையும் அதிகாரிகள் ஆய்வுசெய்தனர். விண்வெளிச்சூழல் விழிப்பு -ணர்வு மற்றும் தொழிற்முறை பரிமாற்றத் திட்டத்தை கொண்டுவரவும் இருநாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன.
Question 17
மருந்துகளுக்கான PLI திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ள மத்திய அமைச்சகம் எது?
A
இரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகம்
B
வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம்
C
வெளியுறவு அமைச்சகம்
D
பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம்
Question 17 Explanation: 
முக்கிய மூலப்பொருட்கள், இடைநிலை மூலப்பொருட்களின் உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்துவதற்கான உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டத்திற்கு மத்திய இரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. முன்னதாக 2020-21 முதல் 2028 -29 வரையிலான நிதியாண்டுக்கு மருந்துகளுக்கான PLI திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஏற்கனவே தனது ஒப்புதலை அளித்திருந்தது.
Question 18
பாரத் இ-மார்க்கெட்’ என்பது கீழ்காணும் எந்த நிறுவனத்தால் தொடங்கப்பட்ட மின்னணு வணிக இணையதளமாகும்?
A
FICCI
B
KVIC
C
CAIT
D
TRIFED
Question 18 Explanation: 
அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பான CAIT மின்னணு வணிகத் -துக்காக, ‘பாரத் இ-மார்க்கெட்’ என்னும் ஓர் இணையதளத்தை தொடங் -கவுள்ளது. இதை முன்னிட்டு, விற்பனையாளர்களுக்கான, திறன்பேசி செயலி ஒன்றை அன்மையில் அறிமுகம்செய்தது. இந்தச்செயலி வணிகங்கள் மற்றும் சேவை வழங்குநர்களை இந்த இணையதளத்தில் பதிவுசெய்துகொள்வதன்மூலம் தங்கள் சொந்த மெய் நிகர் அங்காடியை உருவாக்க உதவுகிறது. இதற்காக அவர்களிடம் எந்த ஒரு கட்டணமும் வசூலிக்கப்படாது.
Question 19
2021 மார்ச்சில், எவ்வமைப்பின் முதல் மெய்நிகர் உச்சிமாநாட்டில் இந்தியா பங்கேற்றது?
A
BRICS
B
QUAD
C
BIMSTEC
D
G20
Question 19 Explanation: 
அமெரிக்க அதிபர் ஜோ பிடன், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் மற்றும் ஜப்பானிய பிரதமர் யோஷிஹைட் சுகா ஆகியோருடன் QUAD தலைவர்களின் முதல் மெய்நிகர் உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். COVID-19’இன் பொருளாதார மற்றும் நல்வாழ்வு பாதிப்புகள், காலநிலை மாற்றம் மற்றும் இணையவெளி, பயங்கரவாத எதிர்ப்பு, தரமான உட்கட்டமைப்பு முதலீடு மற்றும் மனிதாபிமான உதவி, பேரிடர்-நிவாரணம் உள்ளிட்ட சவால்களை எதிர்கொள்வது குறித்து தலைவர்கள் விவாதித்தனர்.
Question 20
ஆசாதி கா அம்ரித் மகோத்சவம்’ கொண்டாட்டங்கள் அனைத்தும் பின்வரும் எந்த இடத்திலிருந்து தொடக்கிவைக்கப்பட்டன?
A
சபர்மதி ஆசிரமம்
B
இராஜ் காட்
C
மதுரை
D
செங்கோட்டை, புது தில்லி
Question 20 Explanation: 
இந்தியாவின் 75ஆவது விடுதலை ஆண்டை முன்னிட்டு, அகமதாபாத் சபர்மதி ஆசிரமத்திலிருந்து ‘பாதயாத்திரை’ (சுதந்திர யாத்திரை) மற்றும் விடுதலையின் அம்ருத் மகோத்சவ முன்னோட்ட நிகழ்ச்சிகளை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். இந்த நிகழ்வு, மகாத்மா காந்தி தலைமையிலான வரலாற்றுச்சிறப்புமிக்க உப்புச்சத்தியாகிரக யாத்திரை -யின் 91ஆவது ஆண்டுநிறைவைக்குறிக்கிறது. இந்தியாவின் 75ஆவது விடுதலை ஆண்டை முன்னிட்டு, இதர கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் டிஜிட்டல் நடவடிக்கைகளையும் அவர் தொடங்கிவைத்தார்.
Question 21
அண்மையில் ஆப்பிரிக்காவின் தலைமைத்துவத்திற்கான சிறந்த பரிசை வென்ற மகாமதூ இசெளபெள (Mahamadou Issoufou), எந்த நாட்டின் அதிபராக இருந்தார்?
A
சாட்
B
நமீபியா
C
நைஜர்
D
சூடான்
Question 21 Explanation: 
இரண்டு பதவிக்காலங்களுக்குப்பிறகு நைஜரின் அதிபர் பதவியிலிருந்து விலகும் மகாமதூ இசெளபெள, ஆப்பிரிக்காவின் தலைமைத்துவத்திற்கா -ன சிறந்த பரிசை வென்றுள்ளார். வறுமை முதல் ஆயுதக்கிளர்ச்சி மற்றும் நாட்டில் பாலைவனமாக்கல் வரை குறிப்பிடத்தக்க சவால்களை எதிர்கொண்டதற்காக அவருக்கு 2020ஆம் ஆண்டுக்கான இப்ராஹிம் பரிசு வழங்கப்பட்டது.
Question 22
சமீப செய்திகளில் இடம்பெற்ற, “2001 FO32” என்றால் என்ன?
A
விண்கலம்
B
COVID தடுப்பு மருந்து
C
சிறுகோள்
D
அருமண் உலோகம்
Question 22 Explanation: 
அமெரிக்க விண்வெளி நிறுவனமான NASA, இந்த ஆண்டு, 2001 FO32 என்று பெயரிடப்பட்ட மிகப்பெரிய சிறுகோள் 1.25 மில்லியன் மைல் தொலைவில் புவிக்கு மிகவருகே கடந்து செல்லும் என்று கூறியுள்ளது. இந்த சிறுகோள் 3,000 அடி விட்டம் கொண்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது; 20 ஆண்டுகளுக்கு முன்பு இது கண்டுபிடிக்கப்பட்டது.
Question 23
நடப்பாண்டில் (2021) BRICS அமைப்பிற்கு தலைமை தாங்கும் நாடு எது?
A
பிரேஸில்
B
இரஷ்யா
C
இந்தியா
D
சீனா
Question 23 Explanation: 
நடப்பாண்டிற்கான (2021) BRICS அமைப்பின் தலைவராக இந்தியா பொறுப்பேற்றுள்ளது. அண்மையில், பொருளாதார & வர்த்தக சிக்கல்கள் குறித்த BRICS தொடர்புக்குழு மார்ச் 9 முதல் 11 வரை இந்தியாவின் தலைமையில் அதன் முதல் கூட்டத்தை நடத்தியது. “BRICS@15: Intra BRICS Cooperation for Continuity, Consolidation, and Consensus” என்பது நடப்பாண்டு (2021) BRICS அமைப்பிற்கான கருப்பொருளாகும்.
Question 24
பின்வருவனவற்றுள் பவானி தேவியுடன் தொடர்புடைய விளை -யாட்டு எது?
A
குத்துச்சண்டை
B
வாள் சண்டை
C
ஈட்டியெறிதல்
D
பூப்பந்து
Question 24 Explanation: 
தமிழ்நாட்டின் வாள் சண்டை சாம்பியனான பவானி தேவி, டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளார். இதன்மூலம், ஒலிம்பிக்கிற்கு தகுதிபெற்ற முதல் இந்திய வாள் சண்டை வீராங்கனை என்ற பெருமை -யை அவர் அடைந்தார். சரிசெய்யப்பட்ட அதிகாரப்பூர்வ தரவரிசை முறையின்கீழ் அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். COVID-19 தொற்றுநோய் காரணமாக, 2020’இல் நடக்கவிருந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் அனைத்தும் 2021ஆம் ஆண்டு ஜூலைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
Question 25
அமெரிக்க துணை தூதரகத்தின் துணிச்சல்மிகு பெண்ணுக்கான பன்னாட்டு விருதுபெற்ற கெளசல்யா சங்கர் சார்ந்த மாநிலம் எது?
A
தமிழ்நாடு
B
கேரளா
C
கர்நாடகா
D
தெலங்கானா
Question 25 Explanation: 
சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகம் அண்மையில் தமிழ் நாட்டைச்சார்ந்த கெளசல்யா சங்கருக்கு, துணிச்சல்மிகு பெண்ணுக்கா -ன பன்னாட்டு விருதினை வழங்கியுள்ளது. சாதி அடிப்படையிலான வன்முறைகளை எதிர்த்துப் போராடுவதை நோக்கமாகக்கொண்ட அவ -ர், கடந்த 2017ஆம் ஆண்டு முதல் சங்கர் சமூக நீதி அறக்கட்டளை என்ற அறக்கட்டளையை நடத்திவருகிறார்.
Question 26
தேசிய தடுப்பூசி நாள் கடைப்பிடிக்கப்படுகிற தேதி எது?
A
மார்ச் 15
B
மார்ச் 10
C
மார்ச் 16
D
மார்ச் 14
Question 26 Explanation: 
தடுப்பூசியின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதற்காக தேசிய நோய்த்தடுப்பு நாள் என அழைக்கப்படும் தேசிய தடுப்பூசி நாள் ஆண்டுதோறும் மார்ச்.16 அன்று இந்தியா முழுவதும் அனுசரிக்கப்படுகிற -து. போலியோ வைரஸ் மற்றும் பிற கொடிய வைரஸ்களுக்கு எதிரான தடுப்பூசிகுறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இந்திய அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது. நடப்பாண்டில் (2021) வரும் தேசிய தடுப்பூசி நாள், போலியோ மற்றும் COVID-19 இரண்டையும் ஒழிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ‘பல்ஸ் போலியோ’ நோய்த்தடுப்பு திட்டம் செயல்பாட்டுக்கு வந்த நாளான 1995 மார்ச்.16 அன்று இந்த நாள் முதன்முதலாக அனுசரிக்கப்பட்டது.
Question 27
கலாநாமக் அரிசி விழா நடைபெறவுள்ள மாநிலம் எது?
A
அஸ்ஸாம்
B
உத்தர பிரதேசம்
C
கர்நாடகா
D
ஆந்திர பிரதேசம்
Question 27 Explanation: 
உத்தர பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ‘கலாநாமக் அரிசி விழா’வை நடத்துவதாக அறிவித்தார். உபியில் பயிரிடப்படும் ‘கலா நாமக்’ அரிசி, அம்மாநிலத்தின் சில கீழைமாவட்டங்களின் ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பாக உள்ளது. இதற்கு முன்னர் ஜான்சியில் ஸ்ட்ராபெரி விழா மற்றும் லக்னோவில் வெல்லம் திருவிழா ஆகியவற்றை உபி மாநில அரசு ஏற்பாடு செய்திருந்தது.
Question 28
India FinTech: A USD 100 Billion Opportunity” என்றவோர் அறிக்கையை வெளியிட்டுள்ள இந்திய அமைப்பு எது?
A
ASSOCAM
B
FICCI
C
CAIT
D
NASSCOM
Question 28 Explanation: 
இந்திய வர்த்தக மற்றும் தொழிற்துறை கூட்டமைப்பும் (FICCI) பாஸ்டன் ஆலோசனை குழுமமும் இணைந்து “India FinTech: A USD 100 Billion Opportunity” என்றவோர் அறிக்கையை வெளியிட்டன. இந்தியாவின் நிதியியல் தொழில்நுட்ப தொழிற்துறையின் மொத்த மதிப்பீடு $50 முதல் $60 பில்லியன் அமெரிக்க டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது. 2025ஆம் ஆண்டில் நிதியியல் தொழினுட்ப தொழிற்துறையின் மதிப்பீடு $150-160 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கலாம் என இது கூறுகிறது.
Question 29
வரைவு மின்னணு வணிகக் கொள்கையை வெளியிடவுள்ள மத்திய அமைச்சகம் எது?
A
மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
B
வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
C
கனரக தொழில்துறை அமைச்சகம்
D
உள்துறை அமைச்சகம்
Question 29 Explanation: 
வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழுள்ள தொழில் ஊக் -குவிப்பு மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத்துறையானது வரைவு மின்னணு வணிகக்கொள்கையை வெளியிடவுள்ளது. தொழிற்துறை வளர்ச்சியில் தரவு பயன்பாட்டிற்கான கொள்கைகளை இந்தக்கொள்கை வகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அங்கீகரிக்கப்படாதோர் தரவை தவறாகப் பயன்படுத்துவதையும் அணுகு -வதையும் தடுக்க, பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
Question 30
நாட்டின் முதல் குளிரூட்டப்பட்ட இரயில் முனையம் அமையவுள்ள நகரம் எது?
A
சென்னை
B
பெங்களூரு
C
மதுரை
D
அகமதாபாத்
Question 30 Explanation: 
இந்தியாவின் முதல் குளிரூட்டப்பட்ட ரயில் முனையமானது பெங்களூரு நகரத்தில் விரைவில் செயல்படவுள்ளது. இந்த இரயில் முனையத்திற்கு மூத்த கட்டுமான பொறியாளர், ‘இந்திய மாமணி’ சர் M விஸ்வேஸ்வரயா -வின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இப்புதிய ரயில் முனையம், நகரத்தின் பயப்பனஹள்ளியில் திட்டமிடப்பட்டுள்ளது. `314 கோடி செலவில் இந்தப் புதிய இரயில் முனையம் கட்டப்பட்டுள்ளது.
Question 31
சமீப செய்திகளில் இடம்பெற்ற, ‘கார்பன் எல்லை ஒப்பந்தங்களை’ முன்மொழிந்த அமைப்பு எது?
A
G7
B
G20
C
QUAD
D
ஐரோப்பிய ஒன்றியம்
Question 31 Explanation: 
ஐரோப்பிய ஆணையமானது கடந்த 2020 டிசம்பரில் ஐரோப்பிய பசுமை ஒப்பந்தத்தை வெளியிட்டது. மேலும் முதல் ஐரோப்பிய காலநிலை சட்டத் -தை முன்மொழிவதற்கு 2021 மார்ச்சை காலக்கெடுவாகவும் நிர்ணயம் செய்தது. ‘கார்பன் எல்லை ஒப்பந்தத்தை’ செயல்படுத்தும் திட்டங்களை இந்த ஆவணம் சிறப்பித்துக்காட்டுகிறது.
Question 32
தேசிய தலைநகர் பிராந்தியத்தில் காற்றின் தர மேலாண்மைக்கா -ன அரசாங்க ஆணையத்தின் தலைவர் யார்?
A
இஞ்செட்டி ஸ்ரீநிவாஸ்
B
MM குட்டி
C
சித்தார்த்த மொகந்தி
D
அருந்ததி மெக்
Question 32 Explanation: 
MM குட்டி தலைமையிலான இந்திய அரசின் “தேசிய தலைநகர பிராந்தி -யத்தில் காற்றின் தரமேலாண்மைக்கான ஆணையம்” அது அமைக்கப் -பட்ட 5 மாதகாலங்களுக்குள் கலைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையம், கடந்த 2020 அக்டோபரில் ஓர் அவசர ஆணைமூலம் அமைக்கப்பட்டது. அண்மையில் இந்த அவசர ஆணை காலவதியானதை அடுத்து இந்த ஆணையம் கலைக்கப்பட்டது.
Question 33
When God is a Traveller” என்ற கவிதைத்தொகுப்பை எழுதியவர் யார்?
A
ஹரீஷ் மீனாட்சி
B
அருந்ததி சுப்பிரமணியம்
C
அனாமிகா
D
R S பாஸ்கர்
Question 33 Explanation: 
“When God is a Traveller” என்ற கவிதைத் தொகுப்பை இந்த ஆண்டின் சாகித்திய அகாதெமி விருது வென்ற கவிஞர் அருந்ததி சுப்பிரமணியம் எழுதியுள்ளார். 2020ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதெமி விருதைப் பெற்ற 20 எழுத்தாளர்களில் இவரும் ஒருவர். ஏழு கவிதை நூல்கள், நான்கு நாவல்கள், 5 சிறுகதை தொகுப்புகள், 2 நாடகங்கள், ஒரு பெருங்கவிதை நூல், ஓர் அனுபவ நூல் என மொத்தம் இருபது மொழிகளில் வெளியான இருபது நூல்கள் சாகித்திய அகாதெமி விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
Question 34
’பை’ நாள் கடைபிடிக்கப்படுகிற தேதி எது?
A
மார்ச் 14
B
மார்ச் 15
C
மார்ச் 16
D
மார்ச் 17
Question 34 Explanation: 
‘பை’ நாள் என்பது π என்னும் புகழ்பெற்ற கணித மாறிலியைக் கொண் -டாடும் நாளாகும். ஒவ்வோர் ஆண்டும் மார்ச்.14ஆம் தேதி ‘பை’ நாளாக கடைபிடிக்கப்படுகிறது. அமெரிக்க நாட்காட்டியின் படி 3/14 என்பது மார்ச் 14’ஐக்குறிக்கும். இந்த எண், அதாவது 3.14 என்பது அண்ணளவாக π’ஐயும் குறிக்கும். இது மார்ச் 14 1:59:26 என்ற குறிப்பிட்ட நேரத்திலும் கொண்டாடப்படுகிறது. (π = 3.1415926).
Question 35
வன்வாசி சமாகம் என்பது பின்வரும் எந்த மாநிலத்தில் உள்ள ஒரு பழங்குடியினர் அவையாகும்?
A
மத்திய பிரதேசம்
B
உத்தர பிரதேசம்
C
ஆந்திர பிரதேசம்
D
ஒடிஸா
Question 35 Explanation: 
உத்தர பிரதேச மாநிலத்தின் சோன்பத்ரா மாவட்டத்தில், வன்வாசி சமாக -ம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்நிகழ்வில், முதன்மை விருந்தினராக இந்தியக்குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்றார். அப்போது, சேவா குஞ்ச் ஆசிரமத்தின் புதிய கட்டிடத்தையும் அவர் திறந்துவைத்தார். அப்பள்ளி மற்றும் விடுதியின் கட்டடப்பணிகளை NTPC மேற்கொண்டது.
Question 36
கலாச்சார அமைச்சரின் தலைமையில் அடுத்த ஈராண்டுகளுக்கு எந்த இந்திய ஆற்றைப்பற்றி ஆராய ஆலோசனைக்குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது?
A
சரசுவதி
B
சரயு
C
மகாநதி
D
நர்மதை
Question 36 Explanation: 
அடுத்த ஈராண்டுகளுக்கு புராணகாலத்தில் இருந்ததாக நம்பப்படுகிற சரசுவதி ஆற்றைப்பற்றி ஆய்வதற்கான திட்டத்தை உருவாக்குவதற்காக ஆலோசனைக்குழுவை மத்திய அரசு மறுகட்டமைத்துள்ளது. 2017ஆம் ஆண்டில் இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் அமைத்த முந்தைய குழுவின் காலம் 2019’இல் முடிவடைந்தது. 27 பேர்கொண்ட குழுவில் பல்வேறு அமைச்சகங்கள், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பிற நிபுணர்கள் அடங்குவர்.
Question 37
சமீபசெய்திகளில் இடம்பெற்ற OTPRMS சான்றிதழ்கள் என்பதுடன் தொடர்புடைய மத்திய அமைச்சகம் எது?
A
கல்வி அமைச்சகம்
B
திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம்
C
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
D
வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி அமைச்சகம்
Question 37 Explanation: 
இணையவழி ஆசிரியர் மாணவர் பதிவு மேலாண்மை அமைப்பு Online Teacher Pupil Registration Management System (OTPRMS) என்பது தேசிய ஆசிரியர் கல்விக்கான கவுன்சிலின்கீழ் ஏதேனும் ஒரு தேர்வில் தேர்ச்சிபெற்ற (அ) படித்துவருபவர்களுக்கு, ஆசிரியர் பணி பெறுவதற்கு தங்களை பதிவு செய்துகொள்ள உதவுகிறது. OTPRMS சான்றிதழ்களை டிஜிலாக்கர் சேவையுடன் இணைக்க மத்திய கல்வி அமைச்சகம் முடிவு செய்துள்ளது. அது, சான்றிதழ்களை இலவசமாக அணுக உதவுகிறது.
Question 38
அகில இந்திய சுற்றுலா வாகனங்கள் அங்கீகாரம் மற்றும் அனுமதி விதிகள், பின்வரும் எந்தத் தேதியிலிருந்து பொருந்தும்?
A
ஏப்ரல் 1, 2021
B
மே 1, 2021
C
ஜூன் 1, 2021
D
ஆகஸ்ட் 1, 2021
Question 38 Explanation: 
‘அகில இந்திய சுற்றுலா வாகனங்களுக்கான அங்கீகாரம் & அனுமதி விதிகள், 2021’ என்ற பெயரில் ஒரு புதிய திட்டத்தை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்தப்புதிய விதிகளின்கீழ், எந்தவொரு சுற்றுலா வாகன ஆபரேட்டரும் ‘அகில இந்திய சுற்றுலா அங்கீகாரம் அல்லது அனுமதி’க்கு ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம். தேவையான ஆவணங்கள் சமர்ப்பிக்க -ப்பட்டு கட்டணம் செலுத்திய பிறகு, அத்தகைய விண்ணப்பங்களை சமர்ப்பித்த 30 நாட்களுக்குள் அனுமதி வழங்கப்படும். ________________________________________
Question 39
சேத்ருஞ்சாய் மலைக்குன்றுகள் அமைந்துள்ள மாநிலம் எது?
A
மகாராஷ்டிரா
B
குஜராத்
C
கர்நாடகா
D
இராஜஸ்தான்
Question 39 Explanation: 
சேத்ருஞ்சாய் மலைக்குன்றுகள் காப்பு வனப்பகுதி குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ளது. இது ஏராளமான ஆசிய சிங்கங்களின் தாயகமாக உள் -ளது. அண்மையில், சேத்ருஞ்சாய் மலைக்குன்றுகள் காப்பு வனப்பகுதி -யில் பெரும் தீவிபத்து ஏற்பட்டது. இந்தத் தீ, 200 ஹெக்டேருக்கு மேல் பரவியதாகக் கூறப்படுகிறது.
Question 40
இந்திய ரயில்வேயின் செனாப் பாலம் கட்டப்பட்டுவருகிற மாநிலம் / யூனியன் பிரதேசம் எது?
A
உத்தரகண்ட்
B
ஹிமாச்சல பிரதேசம்
C
ஜம்மு & காஷ்மீர்
D
அஸ்ஸாம்
Question 40 Explanation: 
செனாப் பாலம் என்பது இந்திய இரயில்வேயால் கட்டப்பட்டு வரும் எஃகு மற்றும் கான்கிரீட் கலந்த பாலமாகும். இது ஜம்மு-காஷ்மீரின் பக்கலுக்கு -ம் கவுரிக்கும் இடையில் கட்டப்பட்டு வருகிறது. கட்டி முடிந்ததும், இந்தப் பாலம் உலகின் மிகவுயர்ந்த பாலமாக இருக்கும். சமீபத்தில், இந்த இரயி -ல்வே பாலத்தின் வளைவின் அடிப்பகுதியை நிர்மாணித்ததன்மூலம் ஒரு பொறியியல் சாதனை அடையப்பெற்றுள்ளது.
Question 41
நாடாளுமன்றங்களுக்கு இடையேயான ஒன்றியத்தின் தலை -மையகம் அமைந்துள்ள இடம் எது?
A
ஜெனீவா
B
ரோம்
C
பாரிஸ்
D
நைரோபி
Question 41 Explanation: 
நாடாளுமன்ற முறைகள் மற்றும் பேச்சுவார்த்தைமூலம் அமைதியை மேம்படுத்துவதற்காக, 1889ஆம் ஆண்டில் நாடாளுமன்றங்களுக்கு இடையேயான ஒன்றியம் நிறுவப்பட்டது. நாடாளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் துவார்டே பச்சேகோ சமீபத்தில் புது தில்லிக்கு வருகை தந்து மாநிலங்களவையின் நடவடிக்கைகளை கண்டார். நாடாளுமன்றங்க -ளுக்கு இடையேயான ஒன்றியமானது 179 நாடாளுமன்ற உறுப்பினர் -களையும் 13 இணை-உறுப்பினர்களையும் கொண்டுள்ளது.
Question 42
முதலாவது தேசிய மருந்து கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் நிறுவப்பட்ட மாநிலம் எது?
A
குஜராத்
B
பஞ்சாப்
C
இராஜஸ்தான்
D
மகாராஷ்டிரா
Question 42 Explanation: 
பஞ்சாபின் மொகாலியில் உள்ள தேசிய மருந்து கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை தேசிய முக்கியத்துவம்வாய்ந்த ஒரு நிறுவனமாக அறிவிப் -பதற்காக 1998ஆம் ஆண்டின் தேசிய மருந்து கல்வி மற்றும் ஆராய்ச்சி சட்டம் இயற்றப்பட்டது. ஆமதாபாத், கெளகாத்தி, ஹாஜிபூர், ஹைதராபாத், கொல்கத்தா மற்றும் ரேபரேலி ஆகிய இடங்களில் ஆறு புதிய நிறுவனங்கள் 2007-08’ஆம் காலகட்டத்தில் அமைக்கப்பட்டன. ஆறு நிறுவனங்களுக்கு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த குறிச்சொல்லை வழங்க சமீபத்தில் ஒரு மசோதா மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
Question 43
சுரங்கங்கள் மற்றும் தாதுக்கள் திருத்த மசோதா-2021, DMF’க்கு வழிகாட்டுதல்களை வழங்க நடுவணரசுக்கு அதிகாரமளிக்க முயற்சி செய்கிறது. DMF என்றால் என்ன?
A
Deposit Mineral Fund
B
District Mineral Foundation
C
Deep Mine Fund
D
District Mine Fund
Question 43 Explanation: 
சுரங்கங்கள் மற்றும் தாதுக்கள் (மேம்பாடு & ஒழுங்குமுறை) திருத்த மசோதா-2021 மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது, சுரங்கங்க -ள் மற்றும் தாதுக்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டம், 1957’ஐ திருத்துகிறது. தன்பயன் மற்றும் வணிக சுரங்கங்களுக்கு இடையிலான வேறுபாட்டை நீக்க இந்தச்சட்டம் முயற்சி செய்கிறது.
Question 44
மக்களவையில், தேசிய தலைநகர் தில்லி (திருத்த) மசோதா, 2021 ‘ஐ அறிமுகப்படுத்திய அமைச்சகம் எது?
A
கல்வி அமைச்சகம்
B
உள்துறை அமைச்சகம்
C
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
D
வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி அமைச்சகம்
Question 44 Explanation: 
மத்திய உள்துறை அமைச்சகமானது அண்மையில், தேசிய தலைநகர் தில்லி (திருத்த) மசோதா, 2021 ‘ஐ மக்களவையில் அறிமுகம் செய்தது. இம்மசோதா, ‘தில்லி அரசு’ என்பதன் பொருளை ‘தில்லியின் துணைநி -லை’ என்று மறுவரையறை செய்ய முயற்சி செய்கிறது. இந்த மசோதா தில்லியின் துணைநிலை ஆளுநருக்கு அவரது விருப்பப்படி அதிகாரங்க -ளை வழங்க முற்படுகிறது.
Question 45
2020-21 காலப்பகுதியில் MGNREGS’இன்கீழ், வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் முதலிடம் வகித்த மாநிலம் எது?
A
தமிழ்நாடு
B
கோவா
C
இராஜஸ்தான்
D
ஹரியானா
Question 45 Explanation: 
2020-21 காலப்பகுதியில், MGNREGS’இன்கீழ், இந்தியா, ஒட்டுமொத்த -மாக 366 கோடி நபர்களின் வேலை நாட்களை உருவாக்கியுள்ளது. இத்திட்டத்தின்கீழ், இதுவரை உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகளிலே -யே இதுதான் அதிகபட்சமாகும். மாநிலங்களில், ராஜஸ்தான் 43 கோடி நபர்களின் வேலை நாட்களை உருவாக்கி முதலிடத்தில் உள்ளது. அதைத்தொடர்ந்து மேற்கு வங்கம், உத்தரபிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் உள்ளன.
Question 46
உலக மறுசுழற்சி நாள் அனுசரிக்கப்படுகிற தேதி எது?
A
மார்ச் 18
B
ஏப்ரல் 18
C
மே 18
D
ஜூன் 18
Question 46 Explanation: 
உலக மறுசுழற்சி நாளானது ஒவ்வோர் ஆண்டும் மார்ச்.18 அன்று அனுச -ரிக்கப்படுகிறது. நமது புவியின் இயற்கை வளங்கள் விரைவாகப் பயன் -படுத்தப்படுவது குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்நாள் அமைந்துள்ளது. மறுசுழற்சி செய்வதற்கான கருத்தை -யும் பழக்கத்தையும் இந்த நாள் ஊக்குவிக்கிறது. “Recycling Heroes” என்பது நடப்பாண்டில் (2021) வரும் உலக மறுசுழற்சி நாளுக்கான கருப்பொருளாகும்.
Question 47
உலக கவிதைகள் நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?
A
மார்ச் 20
B
மார்ச் 21
C
மார்ச் 22
D
மார்ச் 23
Question 47 Explanation: 
கவிதைகளைப் படித்தல், படைத்தல், பயிற்றுவித்தல் ஆகியவற்றை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டு ஒவ்வோர் ஆண்டும் மார்ச்.21 அன்று உலக கவிதைகள் நாள் கொண்டாடப்படுகிறது. ஐநா அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பான UNESCO நிறுவனத்தால் 1999ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட 30ஆவது அமர்வின்போது அறிவிக்கப்பட்டு, உலக நாடுகள் முழுவதும் இந்த நாள் கொண்டாடப்பட்டுவருகிறது.
Question 48
நடப்பாண்டில் (2021) வரும் பன்னாட்டு மகிழ்ச்சி நாளுக்கான கருப்பொருள் என்ன?
A
Share Happiness
B
Angry Birds Happy Planet
C
Reclaim Happiness
D
Happiness for all, forever
Question 48 Explanation: 
மகிழ்ச்சியாக இருப்பது மானுடர்களின் அடிப்படை உரிமை என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வோர் ஆண்டும் மார்ச். 20 அன்று உலகம் முழுவதும் பன்னாட்டு மகிழ்ச்சி நாள் கொண்டாடப்ப -டுகிறது. “Happiness for all, forever” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்த நாளுக்கான கருப்பொருளாகும்.
Question 49
உலக சிட்டுக்குருவிகள் நாள் கடைப்பிடிக்கப்படுகிற தேதி எது?
A
மார்ச் 20
B
மார்ச் 21
C
மார்ச் 22
D
மார்ச் 23
Question 49 Explanation: 
நவீன உட்கட்டமைப்பு, நுண்ணலை கோபுரங்கள் மற்றும் பூச்சிக்கொல் -லிகளால் ஏற்படும் மாசுகள் மற்றும் குறைந்துவரும் பசுமைவெளிகள் போன்ற காரணங்களால் அருகிவரும் சிட்டுக்குருவிகளின் எண்ணிக் -கையை மக்களுக்கு எடுத்துக்கூறி அதன்மூலம் அவர்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக கடந்த 2010ஆம் ஆண்டிலிருந்து உலக சிட்டுக்குருவிகள் நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. “I Love Sparrows” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும். Nature Forever Society of India என்னும் அமைப்பு, பிரான்ஸைச் சார்ந்த Eco-Sys Action Foundation என்னும் தொண்டு நிறுவனம் மற்றும் பல்வேறு பன்னாட்டு அமைப்புகளால் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
Question 50
மருத்துவ ரீதியிலான கருக்கலைப்பு, 2020’இன்படி, சிறப்புவகை பெண்களுக்கு கருக்கலைப்பு செய்ய அனுமதிக்கப்படும் உச்சவரம்பு காலம் என்ன?
A
20 வாரங்கள்
B
24 வாரங்கள்
C
28 வாரங்கள்
D
32 வாரங்கள்
Question 50 Explanation: 
மருத்துவ ரீதியிலான கருக்கலைப்பு செய்வதற்கு தற்போதுள்ள 20 வார உச்சவரம்பிலிருந்து 24 வாரங்களாக அதை மாற்ற அனுமதிப்பதற்கான திருத்த மசோதாவை மாநிலங்களவை நிறைவேற்றியது. பாலியல் வண்புணர்விலிருந்து தப்பியவர்கள், தகாத உறவுமுறையால் பாதிக்கப்பட்டவர்கள், பருவ வயதினை எட்டாதோர் & மாற்றுத்திறனாளி -கள் உள்ளிட்ட சிறப்புவகை பெண்களுக்கு இந்த வரம்பு பொருந்தும். இந்த மசோதாவை, மக்களவை, ஓராண்டுக்கு முன்பு நிறைவேற்றியது.
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 50 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!