Answer KeyTnpsc Answer Key

Tnpsc Assistant Director Exam Previous Questions Answer Key 2022 – General Tamil And General Studies in Tamil

Tnpsc Assistant Director Exam Previous Questions Answer Key 2022 – General Tamil And General Studies in Tamil

1. பிரித்தெழுதுக:

பொய்யகற்றும்

(அ) பொய் அகற்றும் (ஆ) பொய் கற்றும் (இ) பொய்யகற்றும் (ஈ) பொய் யகற்றும்

2. பிரித்தெழுதுதல்:

செந்தமிழ் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது

(அ) செந்+தமிழ் (ஆ) செம்+தமிழ் (இ) சென்மை+தமிழ் (ஈ) செம்மை+தமிழ்

3. சேர்த்தெழுதுதல்:

எட்டு+திசை

(அ) எட்டி இசை (ஆ) எட்டு திசை (இ) எட்டிசை (ஈ) எட்டுத்திசை

4. அருகுற

எதிர்சொல்லைக் கண்டறி:

(அ) அருகில் (ஆ) தொலைவில் (இ) அண்மையில் (ஈ) பக்கத்தில்

5. “அணுகு”

– என்பதன் எதிர்ச்சொல் எழுதுக:

(அ) அருகில் (ஆ) விலகு (இ) தொலைவு (ஈ) பருகு

6. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக:

உயர்திணைக்குரியதல்லாத பால்வகைக் கண்டறிக:

(அ) ஆண்பால் (ஆ) பெண்பால் (இ) பலவின்பால் (ஈ) பலர்பால்

7. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக:

கொழுந்து வகை அல்லாததைக் கண்டறிக:

(அ) கீரைத்தண்டு (ஆ) வேப்பங்கொழுந்து (இ) பனங்குருத்து (ஈ) நெல் துளிர்

8. பின்வருவனவற்றுள் தவறான செய்தியைத் தரும் தொடர்:

(அ) அரிக்கமேடு அகழாய்வில் ரோமானிய நாணயங்கள் கிடைத்தன.

(ஆ) புறப்பொருள் வெண்பாமாலை என்னும் இலக்கண நூலிலும் ஏறுகோள் குறித்துக் கூறப்பட்டுள்ளது

(இ) எட்டு, பத்து ஆகிய எண்ணுப் பெயர்களின் பின் வல்லினம் மிகாது

(ஈ) பட்டிமண்டபம் பற்றிய குறிப்பு மணிமேகலையில் காணப்படுகிறது

9. மரபு பிழையற்றதை எடுத்து எழுதுக:

(அ) சோறு சாப்பிட்டான் (ஆ) பால் குடித்தான் (இ) அம்பு விட்டான் (ஈ) கூடை முடைந்தான்

10. மரபு பிழையற்றதை எடுத்து எழுதுக:

(அ) எருது எக்காளமிடும் (ஆ) கோழி கூவும் (இ) மயில் அலறும் (ஈ) காகம் கத்தும்

11. மரபு தொடரின் பொருளைக் கண்டறிக:

கொடி கட்டிப் பறத்தல்.

(அ) கொடியைக் கட்டுதல் (ஆ) புகழ்பெற்று விளங்குதல்

(இ) பறக்க நினைத்தல் (ஈ) ஆசைப்படுதல்

12. ஆங்கிலச்சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லை அறிதல்:

Continent – என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்

(அ) கண்டம் (ஆ) வலசை (இ) வானிலை (ஈ) புகலிடம்

13. ஆங்கிலச்சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லை அறிதல்:

“Conversation”

(அ) உரையாடல் (ஆ) கலந்துரையாடல் (இ) சொற்பொழிவு (ஈ) பட்டிமன்றம்

14. ஆங்கிலச்சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லை எழுதுக:

“Orthography”

(அ) சொல்லிலக்கணம் (ஆ) எழுத்திலக்கணம்

(இ) பொருளிலக்கணம் (ஈ) யாப்பிலக்கணம்

15. பிறமொழிச் சொற்கள் கலவாத தொடரைக் கண்டறி:

(அ) கம்ப்யூட்டர் துறையில் உங்கள் அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்.

(ஆ) கல்யாணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர்

(இ) அனுபவமே சிறந்த ஆசான்

(ஈ) எவ்வகையான செயற்கைக்கோளையும் ஏவும் திறன் நம்மிடம் உள்ளது.

16. ஒலி மற்றும் பொருள் வேறுபாடறிந்து சரியான பொருளையறிதல்:

உடலின் உறுப்பு

(அ) தளை (ஆ) தலை (இ) தழை (ஈ) கழை

17. ஒலி மற்றும் பொருள் வேறுபாடறிந்து சரியான பொருளையறிதல்:

அறிவுப்பகுதி

(அ) கலை (ஆ) களை (இ) கழை (ஈ) தழை

18. ஒரு பொருள் தரும் பல சொற்கள் “ஈ” என்பதன் தவறான பொருளைத் தேர்ந்தெடுக்க:

(அ) உயிரெழுத்து (ஆ) ஒரு வகை பறவை (இ) அணிகலன் (ஈ) பகிர்ந்து கொடு

19. ஒலி பொருள் தரும் பல சொற்கள்:

வடு,மூசு,குரும்பை,கச்சல் ஆகிய சொற்கள் எதனைக் குறிக்கும்?

(அ) பிஞ்சு வகை (ஆ) காய் வகை (இ) கனி வகை (ஈ) குலை வகை

20. ஒலி பொருள் தரும் பல சொற்கள்:

“வயல்”

(அ) பழனம், செய் (ஆ) காணி, கனல் (இ) தரிசு, தீ (ஈ) சுடர், கழனி

21. “கேட்டான்” என்ற சொல்லின் வேர்ச்சொல்லைக் கண்டறி:

(அ) கேல் (ஆ) கேள் (இ) கேட் (ஈ) கேட்டு

22. வேர்ச்சொல்லின் தொழிற்பெயர் காண்க:

“பாடு”

(அ) பாடினான் (ஆ) பாடுவான் (இ) பாடுகிறான் (ஈ) பாடுதல்

23. பார் என்னும் வேர்ச்சொல்லின் பெயரெச்ச வடிவம் தருக

(அ) பார்த்து (ஆ) பார்த்த (இ) பார்த்தான் (ஈ) பார்த்தது

24. வேர்ச்சொல்லின் தொழிற்பெயர் காண்க:

“படி”

(அ) படித்தான் (ஆ) படித்தல் (இ) படிப்பாள் (ஈ) படிக்கிறான்

25. “MIGRATION” என்ற ஆங்கிலச் சொல்லுக்குச் சரியான தமிழ்ச் சொல்லைத் தேர்க:

(அ) வலசை (ஆ) வானிலை (இ) நகர்தல் (ஈ) புகலிடம்

26. அகரவரிசைப்படி சொற்களை சீர் செய்க:

(அ) நாக்கு,நைடதம், நொய்யல், நோன்பு (ஆ) நைடதம்,நாக்கு,நொய்யல்,நோன்பு

(இ) நோன்பு,நைடதம்,நாக்கு,நொய்யல் (ஈ) நொய்யல்,நோன்பு,நைடதம்,நாக்கு

27. அகரவரிசைப்படி சொற்களை சீர் செய்க:

(அ) சோலை,சுறும்பு,சாந்தம்,சைலம் (ஆ) சுறும்பு,சாந்தம்,சைலம்,சோலை

(இ) சாந்தம்,சுறும்பு,சைலம்,சோலை (ஈ) சைலம்,சோலை,சுறும்பு,சாந்தம்

28. சொற்களை ஒழுங்குபடுத்துக:

ஆடுபவரின் கரகச் செம்பின் தலையில் நன்கு படியும்படி உட்புறமாகத் தட்டி அடிப்பாகத்தை செய்கின்றனர்

(அ) நன்கு படியும்படி ஆடபவரின் தலையில் உட்புறமாகத் தட்டி கரகச் செம்பின் அடிப்பாகத்தைச் செய்கின்றனர்

(ஆ) கரகச் செம்பின் உட்புறமாகத் தட்டி அடிப்பாகத்தை ஆடுபவரின் தலையில் நன்கு படியும்படிச் செய்கின்றனர்

(இ) ஆடுபவரின் தலையில் நன்கு படியும்படி உட்புறமாகத் தட்டி கரகச் செம்பின் அடிப்பாகத்தை செய்கின்றனர்

(ஈ) கரகச் செம்பின் அடிப்பாகத்தை உட்புறமாகத் தட்டி ஆடுபவரின் தலையில் நன்கு படியும்படிச் செய்கின்றனர்

29. சொற்களை ஒழுங்குபடுத்துக:

ஆட்சிக்கு அரசனின் அறம்கூறும் துணை புரிந்தன அறநெறி மன்றங்கள்

(அ) அறம்கூறும் மன்றங்கள் அரசனின் அறநெறி ஆட்சிக்குத் துணை புரிந்தன.

(ஆ) அறம்கூறும் அரசனின் ஆட்சிக்கு அறநெறி மன்றங்கள் துணை புரிந்தன

(இ) அறம்கூறும் அரசனின் ஆட்சிக்கு அறநெறி மன்றங்கள் துணை புரிந்தன

(ஈ) அரசனின் ஆட்சிக்கு துணை புரிந்தன அறம்கூறும் அறநெறி மன்றங்கள்

30. சொற்களை ஒழுங்குபடுத்துக:

பறிக்கப்பட்ட பரந்து நின்ற என் மனம் மலரைப்போல மரக்கிளையிலிருந்து வாடுகிறது

(அ) என் மனம் பரந்து நின்ற மரக்கிளையிலிருந்து பறிக்கப்பட்ட மலரைப்போல வாடுகிறது.

(ஆ) பரந்து நின்ற என் மனம் பறிக்கப்பட்ட மரக்கிளையிலிருந்து மலரைப்போல வாடுகிறது

(இ) பரந்து நின்ற என் மனம் பறிக்கப்பட்ட மலரைப்போல மரக்கிளையிலிருந்து வாடுகிறது

(ஈ) என் மனம் பறிக்கப்பட்ட மலரைப் போல் பரந்து நின்ற மரக்கிளையிலிருந்து வாடுகிறது

31. விடை வகைகள்:

பள்ளிக்கூடம் எங்குள்ளது? என்ற வினாவிற்கு வலப்பக்கத்தில் உள்ளது எனக் கூறல் எவ்வகை விடை?

(அ) சுட்டு விடை (ஆ) நேர் விடை (இ) மறை விடை (ஈ) ஏவல் விடை

32. “உனக்குக் கதை எழுதத் தெரியுமா?” என்ற வினாவிற்கு “கட்டுரை எழுதத் தெரியும்” என்று விடை கூறுவது

(அ) இனமொழி விடை (ஆ) ஏவல் விடை

(இ) உறுவது கூறல் விடை (ஈ) உற்றது உரைத்தல் விடை

33. காமராசர் நகர் எங்கே இருக்கிறது? ஏன்ற வினாவிற்கு, “இந்த வழியாகச் செல்லுங்கள்” என்று விடையளிப்பது

(அ) நேர் விடை (ஆ) சுட்டுவிடை (இ) மறை விடை (ஈ) உற்றது உரைத்தல் விடை

34. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்து எழுதுக:

பாரத ஸ்டேட் வங்கியின் உரையாடு மென்பொருள் “இலா”

(அ) பாரத ஸ்டேட் வங்கியின் உரையாடு மென்பொருள் எது?

(ஆ) யாது பாரத ஸ்டேட் வங்கியின் உரையாடு மென்பொருள்

(இ) உரையாடு மென்பொருள் இலா பாரத ஸ்டேட் வங்கியில் எதற்காக பயன்படுகிறது?

(ஈ) பாரத ஸ்டேட் வங்கியின் உரையாடு மென்பொருள் என்ன?

35. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க:

பூங்கொடி தன் தோழியுடன் திங்கட்கிழமை காலையில் பேருந்தில் ஏறிப் பள்ளிக்குச் சென்றாள்

(அ) பூங்கொடி பள்ளிக்கு யாருடன் சென்றாள்?

(ஆ) பூங்கொடி பள்ளிக்கு எப்படிச் சென்றாள்?

(இ) பூங்கொடி பள்ளிக்கு எத்தனை பேருடன் சென்றாள்?

(ஈ) பூங்கொடி எப்பொழுது பள்ளிக்குச் சென்றாள்?

36. சுட்டுவிடை, மறைவிடை, நேர்விடை ஆகிய மூன்று விடைகளை எவ்வாறு அழைப்பர்?

(அ) மறைமுக விடைகள் (ஆ) வெளிப்படை விடைகள்

(இ) குறிப்பு விடைகள் (ஈ) நேரெதிர் விடைகள்

37. செய்வினை, செயப்பாட்டு வினை வாக்கியங்களைக் கண்டெழுதுதல்:

குமரன் ஓவியம் வரைந்தான்

(அ) செய்வினை வாக்கியம் (ஆ) செயப்பாட்டு வினை வாக்கியம்

(இ) வினை முற்று வாக்கியம் (ஈ) பிறவினை வாக்கியம்

38. பிறவினை சொற்றொடரைக் கண்டறிக:

(அ) கபிலனைத் திருந்தச் செய்தான் (ஆ) கபிலன் திருந்தினான்

(இ) கபிலன் திருந்துவான் (ஈ) கபிலன் திருந்துவானா?

39. வாக்கிய அமைப்பினைக் கண்டறிக:

தமிழ்ப்பற்று தமிழறிஞர்களால் வளர்க்கப்பட்டது

(அ) செய்வினை (ஆ) செயப்பாட்டு வினை `(இ) தன்வினை (ஈ) பிறவினை

40. “இடி விழுந்த மரம் போல” – இவ்வுவமை கூறும் பொருள் விளக்கம்

(அ) துன்பம் (ஆ) முறிதல் (இ) அழிதல் (ஈ) கருகுதல்

41. “எம்பளம்” என்பது

(அ) அடையாளம் (ஆ) குறியீடு (இ) சின்னம் (ஈ) வரைபடம்

42. ”Territory” இணையான தமிழ் சொல் அறிக:

(அ) நீர்ப்பகுதி (ஆ) கண்டப்பகுதி (இ) நிலப்பகுதி (ஈ) பனிப்பிரதேசம்

43. அலுவல் சார்ந்த கலைச்சொற்களை கண்டறிக:

(அ) Conical Stone-குமிழிக்கல் (ஆ) Irrigation technology-பாசனத்தொழில் நுட்பம்

(இ) Video Conference- காணொலிக் கூட்டம் (ஈ) Tropical Zone-வெப்ப மண்டலம்

44. விடை வகைகள்:

“கடைக்குப் போவாயா” என்ற கேள்விக்குப் “போகமாட்டேன்” என மறுத்துக் கூறல்

(அ) ஏவல் விடை (ஆ) வினா எதிர் வினாதல் விடை (இ) நேர் விடை (ஈ) மறை விடை

45. பிறமொழிச் சொல்லுக்கு நிகரான தமிழ்ச்சொல்லை எழுது:

ப்ளாக்போர்டு

(அ) கரும்பலகை (ஆ) வெண்பலகை (இ) பலகை (ஈ) கருந்தரை

46. இதில் தவறான இணை எது?

(அ) கோல்டு பிஸ்கட்-தங்கக்கட்டி (ஆ) ரிப்பீட்-மிகுதியாக

(இ) ஈக்வலாக-சமமாக (ஈ) யூஸ்-பயன்படுத்தல்

47. ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் அறிக:

Adulteration

(அ) கடற்பயணம் (ஆ) பயணப் படகுகள் (இ) தொழில் முனைவோர் (ஈ) கலப்படம்

48. தவறான ஊர்ப்பெயரின் மரூஉவை எழுதுக:

(அ) தஞ்சை-தஞ்சாவூர் (ஆ) நெல்லை-திருநெல்வேலி

(இ) மயிலை-மயிலாடுதுறை (ஈ) புதுகை-புதுக்கோட்டை

49. மரூஉச் சொல் சரியான இணை(களைக்) கண்டறிக:

1.சைதை-சைதாப்பேட்டை.

2.கும்பை-கும்பகோணம்.

3. மயிலை-மயிலாப்பூர்.

4.நெல்லை-திருநெல்வேலி

(அ) 1,2 சரி (ஆ) 3 மட்டும் சரி (இ) 1,3,4 சரி (ஈ) 2,4 சரி

50. மரூஉச்சொல் – சரியாகப் பொருத்துக:

(அ) சைதை 1. நாகப்பட்டிணம்.

(ஆ) புதுகை 2. புதுக்கோட்டை.

(இ) புதுவை 3. புதுச்சேரி.

(ஈ) நாகை 4.சைதாப்பேட்டை

அ ஆ இ ஈ

அ. 4 2 3 1

ஆ. 4 3 2 1

இ. 1 2 3 4

ஈ. 2 4 3 1

51. நிறுத்தற்குறி அறிக: (எது சரியானது)

(அ) கூட்டத்தில் தலைவர் “சக்தி அவர்கள் இப்போது தலைப்பில்லை என்னும் தலைப்பில் பேசுவார்” என்று அறிவித்தார்

(ஆ) கூட்டத்தில் தலைவர் சக்தி அவர்கள் இப்போது “தலைப்பில்லை” என்னும் தலைப்பில் பேசுவார் என்று அறிவித்தார்

(இ) கூட்டத்தில் தலைவர் “சக்தி அவர்கள் இப்போது ‘தலைப்பில்லை” என்னும் தலைப்பில் பேசுவார்” என்று அறிவித்தார்

(ஈ) கூட்டத்தில் தலைவர் “சக்தி” அவர்கள் இப்போது “தலைப்பில்லை என்னும் தலைப்பில் பேசுவார்” என்று அறிவித்தார்

52. சரியான நிறுத்தற்குறிகளுடன் அமைந்த வாக்கியத்தைக் கண்டறிக:

(அ) வெண்பாவால் எழுதப்பட்ட நூல் முத்தொள்ளாயிரம்: மன்னர்களின் பெயர்களைக் குறிப்பிடாமல் சேர,சோழ,பாண்டியர் பொதுவாகப் பாடுகிறது.

(ஆ) வெண்பாவால் எழுதப்பட்ட நூல் முத்தொள்ளாயிரம்; மன்னர்களின் பெயர்களைக் குறிப்பிடாமல் சேர,சோழ, பாண்டியர் என்று பொதுவாகப் பாடுகிறது

(இ) “வெண்பா”வால் எழுதப்பட்ட நூல் ‘முத்தொள்ளாயிரம்’. மன்னர்களின் பெயர்களைக் குறிப்பிடாமல் சேர,சோழ, பாண்டியர் என்று பொதுவாகப் பாடுகிறது

(ஈ) “வெண்பா”வால் எழுதப்பட்ட நூல் முத்தொள்ளாயிரம். சேர,சோழ, பாண்டியர் என்று பொதுவாகப் பாடுகிறது

53. சரியான நிறுத்தற்குறிகளையுடைய வாக்கியத்தைக் கண்டறிக:

(அ) நல்லவை வெல்லும், தீயவைத் தோற்கும். (ஆ) நல்லவை வெல்லும்! தீயவைத் தோற்கும்!!

(இ) நல்லவை வெல்லும். தீயவைத் தோற்கும். (ஈ) நல்லவை வெல்லும்; தீயவைத் தோற்கும்.

54. பேச்சு வழக்கு, எழுத்து வழக்கு:

பின்வருவனவற்றுள் எழுத்து வழக்கில் அமைந்த சொல் எது?

(அ) சொல்லு (ஆ) சொல் (இ) சொல்லிக்கினு (ஈ) சொல்றா

55. பேச்சு வழக்கு, எழுத்து வழக்கு:

பின்வருவனவற்றுள் எழுத்து வழக்கில் அமையாத சொல்லைக் கண்டறிக:

(அ) செல்க (ஆ) வருக (இ) குந்திக்க (ஈ) படித்தான்

56. சரியான எழுத்து வழக்குத் தொடரினை தெரிந்தெடு:

(அ) நேற்று நீ வந்தியா? (ஆ) நேற்று நீ வருவாயா?

(இ) நேற்று அவன் வருவானா? (ஈ) நேற்று நீ வந்தாயா?

57. சொற்களை இணைத்து புதிய சொல் உருவாக்கு:

சிங்கம் – சரியான சொல்

(அ) பறழ் (ஆ) குருளை (இ) குட்டி (ஈ) கன்று

58. சொற்களை இணைத்து புதிய சொல் உருவாக்கு:

பசு – சரியான சொல்

(அ) கன்று (ஆ) குட்டி (இ) பறழ் (ஈ) குருளை

59. சொற்களை இணைத்து புதிய சொல் உருவாக்கு:

சுவர் – சரியான சொல்

(அ) கட்டினான் (ஆ) அமைத்தான் (இ) உண்டாக்கினான் (ஈ) எழுப்பினான்

60. பொருத்தமான காலம் கண்டறிக:

(அ) நான் வந்தேன் (எதிர்காலம்) (ஆ) கவிதை இயற்றினாள் (இறந்தகாலம்)

(இ) மேடையில் பேசுவேன் (நிகழ்காலம்) (ஈ) மழை பெய்தது (எதிர்காலம்)

61. நிகழ்காலத்தைக் குறிப்பது:

(அ) நடந்தாள் (ஆ) நடந்திருந்தாள் (இ) நடக்கிறது (ஈ) நடந்தது

62. பொருத்தமான காலம் அமைத்தல்:

சிரி என்ற வேர்ச்சொல்லின் எதிர்காலத்தைக் கண்டுபிடி

(அ) சிரித்தாள் (ஆ) சிரிக்கிறாள் (இ) சிரிப்பாள் (ஈ) சிரிக்கவில்லை

63. சரியான வினாச் சொல்லை இட்டு எழுது:

நெல்லையப்பர் கோவில் ——- உள்ளது?

(அ) எது (ஆ) யாவை (இ) எங்கு (ஈ) என்ன

64. சரியான வினாச் சொல்லைத் தேர்ந்தெடு:

அறிநெறிச் சாரம் பாடலை எழுதியவர் ———-?

(அ) எவ்வாறு (ஆ) எப்படி (இ) ஏன் (ஈ) யார்

65. சரியான வினாச் சொல்லை இட்டு நிரப்புக:

தீ விபத்து ஏற்பட்டால் செய்யக் கூடாதவை —–?

(அ) எவை (ஆ) ஏன் (இ) எப்படி (ஈ) யாவை

66. மீனாட்சி சுந்தரனார் நல்ல தமிழில் பேசி விளக்கும் திறமைப் பெற்றிருந்தார் ——– அவருடைய மாணாக்கர்கள் அவரிடம் கற்பதனை மிகவும் விரும்பினார்கள்.

(அ) மற்றும் (ஆ) ஆகையால் (இ) அவை போல (ஈ) அது போல

67. சரியான இணைப்புச் சொல்லினைத் தேர்ந்தெடு.

மாபெரும் புத்தகக் கண்காட்சி காமராசர் அரங்கத்தில் நடைபெறுகிறது.

புத்தக் கண்காட்சி ———- நடைபெறுகிறது

(அ) எங்கு (ஆ) ஏன் (இ) எதற்காக (ஈ) எவ்வாறு

68. கீழ்கண்டவற்றில் சரியான இணைப்புச் சொல்லினை தேர்ந்தெடு:

பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்

கலம்தீமை யால் திரிந்து அற்று.

தூய்மையற்ற பாத்திரத்தில் வைக்கப்படும் பால் திரிந்துவிடும். நற்பண்பு இல்லாதவன் பெற்ற பெருஞ்செல்வமும் யாருக்கும் பயனின்றி அழியும்

(அ) ஏனெனில் (ஆ) அது போல (இ) ஆகையால் (ஈ) அதனால்

69. இவற்றுள் எது சரியானது?

இரு பொருள் : ஆக்குதல்

(அ) யாக்கை, உடம்பு (ஆ) செய்தல், சமைத்தல்

(இ) சோறு, உண்டாக்குதல் (ஈ) உணவு, பருகுதல்

70. அடைப்புக்குள் உள்ள சொல்லை தகுந்த இடத்தில் சேர்க்க:

(மதலை)

(அ) ஏணி சாத்திய ——– (ஆ) வானம் ஊன்றிய ——–

(இ) இரவில் மாட்டிய ——- (ஈ) கானம் பாடிய ——–

71. அடைப்புக்குள் உள்ள சொல்லை தகுந்த இடத்தில் சேர்க்க:

(தனது)

(அ) தலைவர் ——– கையால் பரிசு வழங்கினார்

(ஆ) மாணவன் ——- கையால் பெற்றுக்கொண்டான்

(இ) மாடுகள் ——- தலையை ஆட்டின

(ஈ) தலைவர் ——- வீட்டை வழங்கினார்

72. சால,உறு,தவ,நனி,கூர்,கழி – என்ற ஆறு சொற்களும் ஒரே பொருளைத் தரும் அவற்றைக் கண்டறிக

(அ) விரைவு (ஆ) புதுமை (இ) மிகுதி (ஈ) சிறப்பு

73. உயர்ந்தோங்குமலை – இத்தொடரில் ஒரு பொருளுக்கு இரு சொற்கள் உள்ளன. அவற்றைத் தேர்ந்தெடு:

(அ) ஓங்கு, மலை (ஆ) உயர், ஓங்கு (இ) உயர்,மலை (ஈ) மலை, உயர்

74. நகை என்னும் சொல் தரும் இருபொருள் குறிப்பிடுக:

(அ) ஊர், துறைமுகம் (ஆ) புன்னகை, கரை

(இ) சிரிப்பு, அணிகலன் (ஈ) கேலி, உறக்கம்

75. குறில் நெடில் பொருள் வேறுபாடறிந்து சரியான விடையைத் தெரிவு செய்க:

பாரி-பரி

(அ) தலைவன்-கழுதை (ஆ) வீரன்-பரித்துக்கொள் (இ) வள்ளல்-குதிரை (ஈ) மாரி-குதிரை

76. கூற்று: மாலுமிகள் கோள்களின் நிலையை வைத்துப் புயல், மழை போன்றவை தோன்றும் காலங்களையும், கடல் நீர் பொங்கும் காலத்தையும் அறிந்து, தகுந்த காலத்தில் கப்பல்களைச் செலுத்தினர்

காரணம்: மாலுமிகளின் அனுபவ அறிவு கப்பல்களைச் செலுத்த உதவுகிறது

(அ) கூற்று. காரணம் இரண்டும் சரி (ஆ) கூற்று சரி; காரணம் தவறு

(இ) கூற், காரணம் இரண்டும் தவறு (ஈ) கூற்று தவறு; காரணம் சரி

77. கலைச்சொல் தருக:

Homograph

(அ) உயிரெழுத்து (ஆ) ஒப்பெழுத்து (இ) ஒரு மொழி (ஈ) மெய்யெழுத்து

78. கலைச்சொல் தருக:

Cosmic Ray

(அ) விண்வெளிக் கதிர்கள் (ஆ) பால்வீதி மண்டலம்

(இ) புறஊதாக் கதிர்கள் (ஈ) விண் எறிக்கல்

79. கலைச்சொற்களை அறிதல்:

நூல்

(அ) Thread (ஆ) Loom (இ) Tanning (ஈ) Factory

80. “யாண்டு” என்னும் சொல்லின் பொருளினை எழுதுக:

(அ) எனது (ஆ) எங்கே (இ) எவ்வளவு (ஈ) எது

81. பொருத்தமான பொருளைத் தெரிவு செய்தல்:

(அ) ஈன்று 1. கிளை

(ஆ) கொம்பு 2. மிகுந்த சுவை.

(இ) அதிமதுரம் 3. கவி

(ஈ) குரங்கு 4.பெற்று

அ ஆ இ ஈ

அ. 2 3 4 1

ஆ. 4 3 2 1

இ. 4 1 2 3

ஈ. 1 2 4 3

82. தகுந்த சொல்லைத் தேர்ந்து எழுதுக:

வீட்டுப் பயன்பாட்டிற்காகப் பொருள் வாங்குபவர்

(அ) நுகர்வோர் (ஆ) முதலீட்டாளர் (இ) தொழிலாளி (ஈ) நெசவாளி

83. பின்வருவனவற்றைப் பொருத்தி விடை அறிக:

(அ) ஆ 1. குவியல்

(ஆ) ஆடு 2.கற்றை

(இ) ஒளி 3.மந்தை

(ஈ) கல் 4.நிரை

அ ஆ இ ஈ

அ. 4 3 1 2

ஆ. 4 3 2 1

இ. 3 4 2 1

ஈ. 3 2 1 4

84. கட்டளைத் தொடரைக் கண்டறிக:

(அ) அப்துல் நேற்று வந்தான் (ஆ) அப்துல் நேற்று வருவித்தான்

(இ) இது நாற்காலி (ஈ) பூக்களைப் பறிக்காதீர்

85. இவ்வரிகளில் உள்ள பொருள்கோளை கண்டறிக:

“ஆலத்துமேல குவளை குளத்துள

வாலின் நெடிய குரங்கு”

(அ) நிரல்நிறைப் பொருள்கோள் (ஆ) தாப்பிசைப் பொருள்கோள்

(இ) கொண்டு கூட்டுப் பொருள்கோள் (ஈ) ஆற்றுநீர் பொருள்கோள்

86. “விருந்தினரும் வறியவரும்

நெறுங்கி யுண்ண

மேன்மேலும் முகமலரும் மேலோர்

போல”

– என்று விருந்தைப் பற்றி கூறும் நூலைக் கண்டிடுக:

(அ) பொருநராற்றுப்படை (ஆ) கலிங்கத்துப்பரணி

(இ) தக்கயாகப்பரணி (ஈ) சிறுபாணாற்றுப்படை

87. பிழை திருத்துதல்:

(ஒரு-ஓர்) – (ஒரு-ஓர் சரியாக அமைந்த தொடரைத் தேர்ந்தெடுக்க)

(அ) ஒரு அழகிய சிற்றூரில் ஓர் குளம் இருந்தது

(ஆ) ஓர் அழகயி சிற்றூரில் ஓர் குளம் இருந்தது

(இ) ஓர் அழகிய சிற்றூரில் ஒரு குளம் இருந்தது

(ஈ) ஒரு அழகிய சிற்றூரில் ஒரு குளம் இருந்தது

88. சரியான தொடரைத் தேர்ந்தெடு:

(அ) அருந்தும் அருமருந்தென உணவே நம் தமிழ் மக்கள் அறிந்தவர்

(ஆ) நம் தமிழ்மக்கள் அருமருநதென அருந்தும் உணவே அறிந்தவர்

(இ) அருந்தும் உணவே அருமருந்தென அறிந்தவர் நம் தமிழ்மக்கள்

(ஈ) நம் உணவே அருமருந்தென அறிந்தவர் அருந்தும் தமிழ்மக்கள்

89. பிழையை திருத்தி எழுது

(அ) ஓர் புத்தகம் (ஆ) ஒரு புத்தகம் (இ) ஒன்று புத்தகம் (ஈ) ஒன்றின் புத்தகம்

90. சொல் – பொருள் – பொருத்துக:

அ. வாரணம் 1. பாக்கு

ஆ. சூரன் 2. குதிரை

இ. பரி 3. வீரன்

ஈ.கமுகு 4. யானை

அ ஆ இ ஈ

அ. 4 3 1 2

ஆ. 3 1 4 2

இ. 3 1 2 4

ஈ. 4 3 2 1

91. சொல் – பொருள் – பொருத்துக:

சரியான சொல்லையும், பொருளையும் தேர்ந்தெடு

(அ) வருக்கை-இருக்கை (ஆ) புள்-தாவரம் (இ) அள்ளல்-சேறு (ஈ) மடிவு-தொடக்கம்

92. பொருத்துக:

சொல் பொருள்

அ. கழனி 1. கப்பல்

ஆ. சமர் 2. கடல்

இ. கலம் 3. போர்

ஈ. ஆழி 4. வயல்

அ ஆ இ ஈ

அ. 3 1 2 4

ஆ. 4 3 1 2

இ. 2 4 1 3

ஈ. 1 3 4 2

93. ஒருமை பன்மை பிழையற்ற தொடர் எது?

(அ) ஈஸ்ட்மன் என்பார் படச்சுருள் தயாரிக்கும் முறையைக் கண்டுபிடித்தனர்

(ஆ) ஈஸ்ட்மன் என்பார் படச்சுருள் தயாரிக்கும் முறையைக் கண்டுபிடித்தன

(இ) ஈஸ்ட்மன் என்பார் படச்சுருள் தயாரிக்கும் முறையைக் கண்டுபிடித்தார்

(ஈ) ஈஸ்ட்மன் என்பார் படச்சுருள் தயாரிக்கும் முறையைக் கண்டுபிடித்தது

94. ஒருமை பன்மை பிழையை நீக்குக:

(அ) மரங்கள் அனைத்தும் வளர்ந்தன (ஆ) மரங்கள் அனைத்தும் வளர்ந்நது

(இ) மரம் அனைத்தும் வளர்ந்தன (ஈ) வளர்ந்து செழித்தது மரங்கள்

95. ஒருமை பன்மை பிழை நீக்கி எழுதுக:

(அ) காட்டு விலங்குகள் பலவும் வரத் தொடங்கியது

(ஆ) காட்டு விலங்குகள் பலவும் வரத் தொடங்கின

(இ) காட்டு விலங்குகள் பலவும் வரத் தொடங்கினர்

(ஈ) காட்டு விலங்குகள் பலவும் வரத் தொடங்கினார்கள்

96. கீழ்க்கண்ட பத்தியைப் படித்து வினாவிற்கான சரியான விடையைத் தேர்ந்தெடு:

முத்துராமலிங்கர் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கேற்றார். தமது பேச்சாற்றலால் ஆங்கில ஆட்சிக்கு எதிராக மக்களிடம் பெரும் எழுச்சியை ஏற்படுத்தினார். மேடைகளில் அவர் ஆற்றிய வீர உரையைக் கேட்ட மக்கள் ஆங்கில ஆட்சிக்கு எதிராக வீறு கொண்டு எழுந்தனர். அதனால் அச்சமடைந்த ஆங்கில அரசு பலமுறை அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தது. மேலும் வாய்ப்பூட்டுச் சட்டம் மூலம் மேடைகளில் அரசியல் பேசக்கூடாது என்று அவருக்குத் தடை விதித்தது. வட இந்தியாவில் வாய்ப்பூட்டுச் சட்டத்தின்படி பேசத் தடை விதிக்கப்பட்ட தலைவர் பாலகங்காதர திலகர். அவரைப் போலவே தென்னாட்டில் அச்சட்டத்திற்கு ஆட்பட்ட தலைவர் முத்துராமலிங்கர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது விடுதலை வேட்கையை அறிந்த திரு.வி.கலியாணசுந்தரனார் தேசியம் காத்த செம்மல் என்று பாராட்டியுள்ளார். வங்கச் சிங்கம் என்று போற்றப்பட்ட நேதாஜி சுபாஷ் சந்திர போசுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார்

விடுதலைப் போரில் பங்கேற்றவர்

(அ) கந்தன் (ஆ) முத்து இராமலிங்கர் (இ) நாதன் (ஈ) பாலன்

97. அவர் உரையைக் கேட்ட ஆங்கில அரசு செய்த செயல்

(அ) சிறையில் அடைத்தது (ஆ) பரிசு அளித்தது

(இ) பதக்கம் அளித்தது (ஈ) பாராட்டியது

98. மேடைகளில் அரசியல் பேசக் கூடாது என்று தடை விதிக்கப்பட்ட சட்டம்

(அ) 144 சட்டம் (ஆ) இல்லப்பூட்டுச் சட்டம்

(இ) வாய்ப்பூட்டுச்சட்டம் (ஈ) சொத்துரிமை மறுப்புச் சட்டம்

99. தேசியம் காத்த செம்மல் என்று பாராட்டியவர்?

(அ) திரு.வி.கலியாணசுந்தரனார் (ஆ) பாரதியார்

(இ) சர்.சி.வி.இராமன் (ஈ) பாரதிதாசன்

100. வங்கச் சிங்கம் என்று பாராட்டப்படுபவர்?

(அ) திருப்பூர் குமரன் (ஆ) சுப்ரமணிய சிவா

(இ) திலகர் (ஈ) நேதாஜி சுபாஷ் சந்திரபோசு

101. “சுதந்திரத்திற்கான போரில், பயம் என்பது மன்னிக்க முடியாத துரோகம் மற்றும் விரக்தி என்பது மன்னிக்க முடியாத பாவம்” இதை யார் கூறியது?

(அ) சித்திரஞ்சன் தாஸ் (ஆ) சரோஜினி நாயுடு (இ) அன்னி பெசன்ட் (ஈ) மோதிலால் நேரு

102. 1922ம் ஆண்டு கயா காங்கிரஸ் அமர்வில் சபைகளை “ஒன்று சீர்படுத்துவது அல்லது முடித்து வைப்பது” என்ற முன்மொழிலை, கீழ்வரும் தலைவர்களுள் யார் எதிர்த்தது?

(அ) மதன் மோகன் மாளவியா (ஆ) சி.ஆர்.தாஸ்

(இ) மோதிலால் நேரு (ஈ) சி.இராஜகோபாலச்சாரியார்

103. பின்வருவனவற்றுள் எது சரியாகப் பொருந்தவில்லை?

1. வேதங்களுக்குத் திரும்பு – தயானந்த சரஸ்வதி.

2. சுயராஜ்ஜியம் பொது பிறப்புரிமை – காந்தி

3. ஜெய் ஜவான் ஸ்ர – பகத் சிங்

4. நீண்ட வருடங்களுக்கு முன்பு நாம்

விதியுடன் முயற்சி செய்தோம் – ஜவஹர்லால் நேரு

(அ) 1 மற்றும் 2 சரியானவை (ஆ) 1 மற்றும் 4 சரியானவை

(இ) 2 மற்றும் 3 சரியானவை (ஈ) 2 மற்றும் 4 சரியானவை

104. பின்வருபவற்றுள் பொருந்தாத ஜோடி எது?

1. சாம்பராண் சத்தியாகிரகம் – 1917

2. கேதா சத்தியாகிரகம் – 1927

3.அகமதாபாத் மில் வேலைநிறுத்தம் – 1918

4. ரவுலட் சட்ட சத்தியாகிரகம் – 1919

(அ) 1 மட்டும் (ஆ) 2 மற்றும் 3 இவை இரண்டும்

(இ) 2 மட்டும் (ஈ) 2 மற்றும் 4 இவை இரண்டும்

105. “அவர் ஒரு பயமில்லாத,குற்றச்சாட்டு இல்லாத போர்வீரர் போன்றவர். தேசியம் அவர் கைகளில் பாதுகாப்பாக உள்ளது?

காந்தியின் இந்த கூற்று யாரைக் குறிக்கிறது?

(அ) சர்தார் வல்லபாய் படேல் (ஆ) பி.ஆர்.அம்பேத்கர் (இ) ஜவஹர்லால் நேரு (ஈ) பகத்சிங்

106. கூற்று (A): பிராமணர் அல்லாதோர் ஆங்கிலேய இந்திய ஆட்சியில் அரசுத் துறையில் வேலைக்கு அமர்த்தப்பட்டனர்.

காரணம் (R): 1921ம் ஆண்டு வகுப்புவாரி பிரதிநிதித்துவ ஆணை நிறைவேற்றப்பட்டமையேயாகும்.

(அ) கூற்று (A) மற்றும் காரணம் (R) சரி, ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

(ஆ) கூற்று (A) தவறு, காரணம் (R) சரி

(இ) கூற்று மற்றும் காரணம் சரி, காரணம் கூற்றை விளக்குகின்றது

(ஈ) கூற்று (A) சரி, காரணம் (R) தவறு

107. 1914ஆம் ஆண்டு ஜாக்ரோனில் உள்ள ராதா கிருஷ்ண உயர்நிலை பள்ளியை நிறுவியவர் யார்?

(அ) பிபின் சந்திரபால் (ஆ) சித்தரஞ்சன் தாஸ்

(இ) லாலாலஜபதி ராய் (ஈ) சர்தார் வல்லபாய் பட்டேல்

108. சுதேசி நீராவி கப்பல் கழகம் தன்னுடைய நீராவி கப்பலை எங்கிருந்து எங்கு வரை இயக்கியது?

(அ) தூத்துக்குடி-கேரளா (ஆ) தூத்துக்குடி-கொழும்பு

(இ) தூத்துக்குடி-மும்பை (ஈ) தூத்துக்குடி-கொல்கத்தா

109. கீழ்க்கண்டவற்றில் சரியான இணையைத் தேர்ந்தெடுக்க:

1. வேலூர்க் கலகம் – 10 ஜீலை 1806.

2. 1857ம் ஆண்டு புரட்சி – தேயிலைத் தொழிலாளர்கள்

3. மெட்ராஸ் மகாஜன சபை – Dr. ரங்கய்யா நாயுடு

4. வங்கப்பிரிவினை – 20 ஜீலை 1905

(அ) 1 மற்றும் 3 சரி (ஆ) 1 மற்றும் 4 சரி (இ) 1,3 மற்றும் 4 சரி (ஈ) 2,3,4 சரி

110. கீழ்க்கண்டவற்றுள் பெண்களின் பருவநிலைகளை வரிசைப்படுத்துக:.

1. மங்கை.

2.அரிவை.

3.மடந்தை.

4.தெரிவை

(அ) 1,4,2,3 (ஆ) 1,3,2,4 (இ) 1,2,4,3 (ஈ) 3,1,2,4

111. சென்னை மாகாண சட்டமன்றத்தின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர் யார்?

(அ) முத்துலட்சுமி ரெட்டி (ஆ) சரோஜினி நாயுடு

(இ) மூவலூர் ராமாமிர்தம் (ஈ) ஆனந்தி கோபால் ஜோஷி

112. நீதிக்கட்சியால் வெளியிடப்பட்ட தமிழ்ப் பத்திரிக்கை பெயரை குறிப்பிடுக:

(அ) திராவிடன் (ஆ) குடியரசு (இ) நவசக்தி (ஈ) விடுதலை

113. கீழ்க்கண்டவற்றில் அறிஞர் அண்ணாவை பற்றிய சரியான கூற்று எது?

1. சுயமரியாதை திருமணங்களை அங்கிகரித்தார்.

2. சென்னை மாநிலம் என்ற பெயரை தமிழ்நாடு என மற்றினார்.

3. இரண்டாம் உலக தமிழ் மாநாடு 1969ல் நடைபெற்றது,

4. மெரினா கடற்கரையில் இவரது ஆட்சியில் கண்ணகி சிலை நிறுப்பட்டது.

(அ) 1 மட்டும் (ஆ) 1,2 மட்டும் (இ) 2,3 மட்டும் (ஈ) 1,2,3,4

114. சி.என்.அண்ணாதுரையின் நாடகங்களை அவற்றின் கருத்தோடு இணைக்க:

அ. வேலைக்காரி 1. குற்றங்களின் அடிப்படை ஏழ்மை என்பதை நிறுவதல்

ஆ. ஓர் இரவு 2. மது ஒழிப்புக்கு ஆதரவுக்கு குரல்

இ. நீதி தேவன் மயக்கம் 3. ஏதிர் எதிரான சமுதாய ஆதிக்க சக்திகளின் நடவடிக்கைகள்

ஈ. நல்ல தம்பி 4. இராமயண கதைமாந்தர்களை உருவாக்கியதில் கம்பர்

செய்த தவறுகளை வெளிப்படுத்துதல்

அ ஆ இ ஈ

அ. 3 1 4 2

ஆ. 2 4 3 1

இ. 1 2 3 4

ஈ. 3 4 2 1

115.”நீரின்று அமையா யாக்கைக்கு எல்லாம்

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே”

என்ற புறநானூற்றுப் பாடல் உணர்த்தும் கருத்து யாது?

(அ) உணவு வழங்குவதன் முக்கியத்துவம் (ஆ) உணவு வழங்காமையின் இழிவு

(இ) உணவின் இன்றியமையாமை (ஈ) நீரின் இன்றியமையாமை

116. சைவ, வைணவ பக்தி இலக்கியங்களில் இடம்பெறும் “திருப்பல்லாண்டு” பாடியவர்கள் யாவர்?

(அ) சேந்தனார், பெரியாழ்வார் (ஆ) திருஞானசம்பந்தர், நம்மாழ்வார்

(இ) சுந்தரர், பொய்கையாழ்வார் (ஈ) மாணிக்கவாசகர், குலசேகராழ்வார்

117. பெண் புதின எழுத்தாளர்களில் முன்னோடி யார்?

(அ) இந்துமதி (ஆ) லட்சுமி (இ) வை.மு.கோதை நாயகி (ஈ) இராஜம் கிருஷ்ணன்

118. “கோபல்லபுரத்து மக்கள்” என்ற புதினத்திற்கு சாகித்திய அகாடெமி பரிசு பெற்றவர் யார்?

(அ) அசோகமித்திரன் (ஆ) மேலாண்மை பொன்னுசாமி

(இ) கி.ராஜநாராயணன் (ஈ) இராஜம் கிருஷ்ணன்

119. “இன் உயிர் தருதலும் ஆற்றுமோ –

முன்னிய தேஎத்து முயன்று செய்பொருளே?”

என வரும் கலித்தொகையின் பாடலடிகள் இடம்பெற்றுள்ள திணை யாது?

(அ) குறிஞ்சிக்கலி (ஆ) முல்லைக்கலி (இ) மருதக்கலி (ஈ) பாலைக்கலி

120. “திணை மாலை நூற்றைம்பது” என்ற நூலின் ஆசிரியர் யார்?

(அ) கண்ணஞ்சேந்தனார் (ஆ) கணிமேதாவியார்

(இ) மூவாதியார் (ஈ) புல்லங்காடனார்

121. “இயேசு காவியம்” என்ற நூலை எழுதிய ஆசிரியர் யார்?

(அ) எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை (ஆ) கவியரசு கண்ணதாசன்

(இ) கவிஞர்.மு.மேத்தா (ஈ) கவிஞர் மீரா

122. “மருங்குவண்டு சிறந்தார்ப்ப மணிப்பூஆடை அதுபோர்த்து கருங்கயற்கண் விழித்தொல்கி நடந்தாய் வாழி காவேரி” என்ற அடிகள் இடம் பெற்றுள்ள காதை?

(அ) கடலாடு காதை (ஆ) கானல் காதை (இ) வேனிற் காதை (ஈ) நாடுகாண் காதை

123. தென்னிந்திய விடுதலை இயக்கமானது பின்னாளில் புகழ்மிக்க ——- அழைக்கப்பட்டது

(அ) நீதிக்கட்சி (ஆ) திராவிடர் கழகம்

(இ) திராவிடர் கூட்டமைப்பு (ஈ) சுயமரியாதை இயக்கம்

124. முதல் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடைபெற்ற இடம் ——— மற்றும் ———— ஆண்டு

(அ) மதுரை, 2008 (ஆ) சென்னை, 2009 (இ) கோயம்புத்தூர், 2010 (ஈ) திருச்சி, 2011

125. டாக்டர் முத்துலெட்சுமிரெட்டி மகப்பேறு உதவித் திட்டத்தின் கீழ் ஏழை கர்ப்பிணிப் பெண்களுக்கு வழங்கப்படும் நிதியுதவி ரூ.—-

(அ) ரூ.12,000 (ஆ) ரூ.15,000 (இ) ரூ.20,000 (ஈ) ரூ.25,000

126. 2001-ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி, தமிழ்நாட்டின் எந்த மாவட்டம் மிக அதிகமான கல்வி விகிதத்தைக் கொண்டுள்ளது

(அ) சென்னை (ஆ) கோயம்புத்தூர் (இ) கன்னியாகுமரி (ஈ) நாமக்கல்

127. இந்திய பொருளாதாரத்தில் கோவிட் பெருந்தொற்றால் மிகவும் பாதிக்கப்பட்டத் துறை(கள்)

1. சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் தொடர்பான தொழில்கள்.

2. சிறு மற்றும் நடுத்தர தொழில்கள்

3. தொலை தொடர்பு துறை

(அ) 3 மட்டும் (ஆ) 1 மற்றும் 2 (இ) 2 மற்றும் 3 (ஈ) 1 மற்றும் 3

128. SIDCO பொதுத்துறை நிறுவனமாக மாற்றப்பட்ட ஆண்டு

(அ) 1970 (ஆ) 1971 (இ) 1972 (ஈ) 1973

129. சரியாகப் பொருந்தியுள்ளவற்றைத் தேர்ந்தெடு

1. பாலின விகிதம் – 1000 ஆண்களுக்கு எத்தனை பெண்கள்

2. IMR – ஒரு லட்சம் கர்ப்பிணி தாய்மார்களின் பிரசவ இறப்பு விகிதம்

3. MMR – ஒரு வயது முடியும் முன் குழந்தைகளின் இறப்பு விகிதம்

4. மக்கள் தொகை அடர்த்தி – ஒரு சதுர மீட்டரில் வசிக்கும் மக்கள் தொகை அளவீடு

(அ) 1 மற்றும் 3 சரி (ஆ) 1 மற்றும் 4 சரி (இ) 2 மற்றும் 3 சரி (ஈ) 3 மற்றும் 4 சரி

130. பிறப்பு விகிதம் ——–க்கு ஓர் ஆண்டில் நிகழும் நேரடி பிறப்புகளின் எண்ணிக்கையைக் குறிக்கிறது

(அ) 100 மக்கள் தொகை (ஆ) 10,000 மக்கள் தொகை

(இ) 1000 மக்கள் தொகை (ஈ) சதுர கிலோமீட்டர்

131. கூற்று (A): தூத்துக்குடியில் ஸடெர்லைட்-காப்பர் தொழிற்சாலையை மூடவேண்டும் என்று மக்கள் போராட்டம் நடத்தினார்கள்.

காரணம் (R): ஸ்டெர்லைட்-காப்பர் தொழிற்சாலையின் கழிவுகள் மற்றும் அதில் கசியும் வாயு, காற்றையும், தூத்துக்குடி கடலோர பகுதி சுற்றுபுற சூழ்நிலையை பாதிக்கின்றது

(அ) (A) சரி ஆனால் (R) தவறு

(ஆ) (A) மற்றும் (R) இரண்டும் சரி மற்றும் (R) என்பது (A)விற்கு சரியான விளக்கம்

(இ) (A) தவறு ஆனால் (R) சரி

(ஈ) (A) மற்றும் (R) இரண்டும் சரி ஆனால் (R) என்பது (A)விற்கு சரியான விளக்கமல்ல

132. 2017-2018ம் ஆண்டில் தமிழ்நாட்டின் தலா வருமானம்

(அ) ரூ.1,42,267 (ஆ) ரூ.1,76,510 (இ) ரூ.1,30,372 (ஈ) ரூ.1,11,246

133. சுருக்குக: 100+8 ÷2+{(3×2)-6 ÷ 2}

(அ) 130 (ஆ) 125 (இ) 107 (ஈ) 103

134. நான்கு பாக்கெட் பிஸ்கட்டுகள் 12 பெண்களால் உட்கொள்ளப்படுகின்றன. எனில், 12 பாக்கெட் பிஸ்கட்டுகளை உட்கொள்ளும் பெண்களின் எண்ணிக்கை

(அ) 32 (ஆ) 34 (இ) 35 (ஈ) 36

135. ஷீலா என்பவர் ஒரு குறிப்பிட்ட அசலுக்கு 4 ஆண்டுகளுக்கு 9.5% வட்டி வீதத்தில் தனிவட்டியாக ரூ.21,280 ஐச் செலுத்தினார் எனில் அசலைக் காண்க:

(அ) ரூ.50,600 (ஆ) ரூ.65,000 (இ) ரூ.56,000 (ஈ) ரூ.66,000

136. ஒரு கூட்டுத் தொடர் வெரிசையின் 6வது உறுப்பின் 6 மடங்கும் 7வது உறுப்பின் 7 மடங்கும் சமம் எனில், அக்கூட்டுத் தொடர் வரிசையின் 13வது உறுப்பு

(அ) 0 (ஆ) 6 (இ) 7 (ஈ) 13

137. பின்வரும் தொடரில் கேள்விக்குறியை (?) சரியான பதிலால் நிரப்புக:

101,100,?,87,71,46

(அ) 88 (ஆ) 89 (இ) 92 (ஈ) 96

138. பின்வரும் எண் தொடரில் ஒரு எண் தவறாக உள்ளது. தவறான எண்ணைக் காண்க:

5, 7.5, 11.25, 17.5, 29.75, 50, 91.25

(அ) 7.5 (ஆ) 17.5 (இ) 29.75 (ஈ) 91.25

139. R = {(a,-2), (-5,b), (8,c), d,1)} என்பது சமனிச் சார்பைக் குறிக்குமெனில், மற்றும் ஆகியவற்றின் மதிப்புகள் முறையே —,—,—,— ஆகும்.

(அ) 2,5,8,1 (ஆ) 2,5,-8,-1, (இ) -2,-5,-8,-1 (ஈ) -2,-5,8,1

140. ஆங்கில எழுத்துகளில் Aக்கு, Bக்கு 2, Cக்கு 3 என்பது போல் தொடர்ந்து Zக்கு 26 எனக்கொள்க:

7 15 15 4
13 15 18 14 9 14 7

-ன் விளக்கத்தைக் காண்க:

(அ) GOOD EVENING (ஆ) GOOD THOUGHT (இ) GOOD MORNING (ஈ) COME QUICKLY

141. ஆங்கில எழுத்துக்கள் A🡪D, B🡪E, C🡪F, D🡪G, ….,Z🡪C என முறையே மாற்றி அமைக்கப்பட்டால் “KHOOR” எனும் வார்த்தை எவ்வாறு மாற்றி அமைக்கப்படும்?

(அ) HELLO (ஆ) HALIO (இ) HILLO (ஈ) HELLS

142. கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் எத்தனை முக்கோணங்கள் உள்ளன?

Shape

Description automatically generated

(அ) 5 (ஆ) 10 (இ) 15 (ஈ) 20

143. ரூ.529க்கு ஒரு வேலையை செய்ய A,B,C ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனார்கள். Aயும் Bயும் சேர்ந்து அவ்வேலையின் 19/23 பகுதியை செய்வார்கள் Bயும் யுCம் சேர்ந்து அவ்வேலையின் 8/23 பகுதியை செய்வார்கள் எனில் A பெறும் தொகை என்ன?

(அ) ரூ.315 (ஆ) ரூ.345 (இ) ரூ.355 (ஈ) ரூ.375

144. A என்பவர் ஒரு வேலையை 20 நாள்களிலும், B என்பவர் அதே வேலையை 30 நாள்களிலும் செய்து முடிப்பர். அவ்விருவரும் சேர்ந்து அவ்வேலையைச் செய்து முடிக்க எத்தனை நாள்கள் ஆகும்?

(அ) 25 நாள்கள் (ஆ) 20 நாள்கள் (இ) 15 நாள்கள் (ஈ) 12 நாள்கள்

145. 8 மீ உயரம், 6 மீ நீளம் மற்றும் 2.5 மீ அகலம் கொண்ட ஒரு செவ்வக வடிவ நீர்த்தொட்டியானது எத்தனை லிட்டர் நீரை கொள்ளும்?

(அ) 12 லிட்டர் (ஆ) 1200 லிட்டர் (இ) 12000 லிட்டர் (ஈ) 120000 லிட்டர்

146. ஒரு கனச்செவ்வக வடிவ மீன்தொட்டியின் வெளி அளவுகள் முறையே 80 செ.மீ X 30 செ.மீ X 40 செ.மீ தொட்டியின் அடிப்பக்கம், 2 பக்கவாட்டு முகங்கள் மற்றும் ஒரு பின்பக்க முகம் ஆகியன வண்ணத்தாள் கொண்டு மூடப்பட்டால், தேவைப்படும் வண்ணத்தாளின் பரப்பளவு யாது?

(அ) 2400 செ.மீ2 (ஆ) 3200 செ.மீ2 (இ) 7800 செ.மீ2 (ஈ) 8000 செ.மீ2

147. 12% ஆண்டு வட்டி வீதப்படி 3 ஆண்டுகளில் ரூ.432 கூட்டு வட்டி தரும் அசல்

(அ) ரூ.1066 (ஆ) ரூ.1067 (இ) ரூ.1069 (ஈ) ரூ.1070

148. அசல் ரூ.30,000 முதலாம் ஆண்டு வட்டி வீதம் R= 7% இரண்டாம் ஆண்டு வட்டி வீதம் R= 8% ஆண்டுக்கு ஒரு முறை வட்டிக் கணக்கிடப்படுகிறது எனில் கூட்டு வட்டி

(அ) ரூ.5,668 (ஆ) ரூ.3,668 (இ) ரூ.6,668 (ஈ) ரூ.4668

149. ஒரு குறிப்பிட்ட வைப்புத் தொகையானது 15 ஆண்டுகளில் தனிவட்டியில் மூன்று மடங்கானால் அதன் ஆண்டு வட்டி வீதம் காண்க:

(அ) 12 2/3% (ஆ) 13 1/3% (இ) 16 2/3% (ஈ) 20%

150. ரூ.500க்கு 6 ஆண்டுகளில் 5% தனிவட்டி வீதம் கிடைக்கும் தொகையைக் காண்க:

(அ) ரூ.120 (ஆ) ரூ.140 (இ) ரூ.150 (ஈ) ரூ.250

151. ஒரு பெட்டி தக்காளியின் விலை ரூ.200. வேந்தன் அவரிடம் 13 பெட்டிகளை வாங்குவதற்கான பணம் உள்ளது. ஒரு பெட்டியின் விலை ரூ.260 என அதிகரித்தால் அவரிடம் உள்ள பணத்தை வைத்து வாங்கக்கூடிய பெட்டிகளின் எண்ணிக்கை

(அ) 7 (ஆ) 8 (இ) 10 (ஈ) 11

152. ஒரு மகிழுந்து 1 மணி 30 நிமிடத்தில் 120 கி.மீ தூரத்தை கடக்கிறது. ஏனில் 760 கி.மீ தூரத்தை கடக்க ஆகும் நேரம்

(அ) 8 மணி 30 நிமிடங்கள் (ஆ) 9 மணி (இ) 9 மணி 30 நிமிடங்கள் (ஈ) 10 மணி

153. இரு எண்களின் மீ.சி.ம 84, இவ்விரு எண்களின் விகிதம் 3:4 எனில், அவ்வெண்களைக் காண்க?

(அ) 7 மற்றும் 12 (ஆ) 4 மற்றும் 21 (இ) 2 மற்றும் 42 (ஈ) 21 மற்றும் 28

154. (a+b)2, a2-b2, (a-b) 2 ன் மீ.பொ.ம:

(அ) (a+b) 2 (ஆ) (a-b) 2 (இ) (a+b) (a-b) (ஈ) (a+b) 2 (a-b) 2

155. 445 மற்றும் 572ஐ ஒரு குறிப்பிட்ட எண்ணால் வகுக்கும் பொழுது முறையே மீதி 4 மற்றும் 5 ஐத்தரக் கூடிய மிகப்பெரிய எண்ணைக் கண்டறிக

(அ) 72 (ஆ) 57 (இ) 63 (ஈ) 36

156. 65 மற்றும் 117-யின் மீப்பெரு பொது வகுத்தியை 65m-117 என்ற வடிவில் எழுதினால் ன் மதிப்பு காண்க:

(அ) 1 (ஆ) 2 (இ) 3 (ஈ) 4

157. ஒரு நாளில் 10 மணி நேரம் என்பது எத்தனை சதவீதம்?

(அ) 2.4 % (ஆ) 24% (இ) 4.166% (ஈ) 41.66%

158. கீழ்கண்டவற்றுள் எது சரியான கூற்றாகும். நியூட்டனின் ஈர்ப்பு விதியானது

(அ) சூரியனுக்கும் பூமிக்கும் இடையேயுள்ள ஈர்ப்பு விசையை குறிக்கிறது

(ஆ) பூமிக்கும் நிலவுக்கும் இடையேயுள்ள ஈர்ப்பு விசையை குறிக்கிறது

(இ) எலக்ட்ரானுக்கு அணுக்கருவுக்கும் இடையேயுள்ள ஈர்ப்பு விசையை குறிக்காது

(ஈ) (A) மற்றும் (B) இரண்டும் சரியானது

159. எண்ணெய் வண்ணப் பூச்சு மற்றும் தாள் தயாரிப்பில் பயன்படும் கருநீலக்கல் கீழ்க்காணும் எந்த ஒரு அயனியால் மிகச்சிறந்த நீலநிறத்தைப் பெற்றுள்ளது?

(அ) பல்சல்பைட்டு (S22-) (ஆ) குளோரைடு (இ) சல்பேட்டு (ஈ) பல்அயோடைடு

160. கீழ்கண்டவற்றுள் எது நியூட்டனின் முதல் விதியோடு தொடர்புடையது

(அ) ஆற்றல் (ஆ) செய்யப்பட்ட வேலை (இ) உந்தம் (ஈ) நிலைமம்

161. ஹீமோசயனின் என்பது

(அ) துத்தநாகம் கொண்ட புரதம் (ஆ) தாமிரம் கொண்ட புரதம்

(இ) புரதம் இல்லை (ஈ) இரும்பு கொண்ட புரதம்

162. ஈர்ப்பு மாறிலி “G” மற்றும் புவி ஈர்ப்பு முடுக்கம் “g” ஆகியவற்றிற்கிடையேயுள்ள தொடர்பு

(அ) GM = gR2 (ஆ) GM = gR (இ) GM = g2R (ஈ) G = Gr2

163. புரோமோதைமால் நீலம் என்பது அமில-கார நிலைக்காட்டியாக பயன்படுகிறது. அமில ஊடகத்தில் புரோமோதைமால் நீலம் நிலைக்காட்டியின் நிறம்

(அ) சிவப்பு (ஆ) மஞ்சள் (இ) ஆரஞ்சு (ஈ) நீலம்

164. கெப்ளரின் பரப்பு விதியானது ——- அழிவின்மை விதியின் படி அமைகிறது

(அ) ஆற்றல் (ஆ) கோண உந்தம் (இ) உந்தம் (ஈ) மேற்கண்ட அனைத்தும்

165. அயோடின் நீரில் கரையாது? பின் எவ்வாறு டின்சர் அயோடின் தயாரிக்கப்படுகிறது?

(அ) அயோடினை ஆல்கஹாலில் கரைத்து

(அ) சம அளவுள்ள அயோடின் மற்றும் பொட்டாசியம் அயோடையை நீரில் கரைத்து

(இ) பொட்டாசியம் அயோடையை நீரில் கரைத்து

(ஈ) அயோடின் மற்றும் பொட்டாசியம் அயோடைடின் நீர்ம கரைசலை காய்ச்சி வடித்த ஆல்கஹாலுடன் சேர்த்து 300 ml அளவிற்கு கரைசலை தயாரித்து

166. 2021ம் ஆண்டு தமிழக அரசு தந்தை பெரியாரின் பிறந்த தினத்தை ————ஆகக் கொண்டாட முடிவு செய்துள்ளது?

(அ) பெண்கள் வளர்ச்சி நாள் (ஆ) தமிழ் விழப்புணர்வு நாள்

(இ) சமூக நீதி நாள் (ஈ) திராவிட நாள்

167. பின்வருவனவற்றில் தடைசெய்யப்பட்ட சீனாவின் செயலிகள் யாவை?

1. ஹேலோ

2. கேம் ஸ்கேனர்.

3. பைடுவின் வழிகாட்டி.

4. டிக்டாக்

(அ) 4 மட்டும் (ஆ) 2 மற்றும் 4 மட்டுமு; (இ) 2 மட்டும் (ஈ) 1,2,3 மற்றும் 4 ஆகியவை

168. டிசம்பர் 2021-ல் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மானாம்பள்ளி காட்டுப் பகுதியில் காணப்பட்ட விலங்கினம், வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் 1972-ல் பட்டியல் I-லும் CITE ஒப்பந்தப் பட்டியலில் பின் இணைப்பு II-லும் காணப்படுவது எது?

(அ) சிஙக வால் குரங்கு (ஆ) சிறுத்தை (இ) புலி (ஈ) வரையாடு

169. “தாசாசூத்ரா” என்பது

(அ) வேத கணிதத்தின் பத்து விதிகள் (ஆ) பங்குச் சந்தையின் பத்து அம்சங்கள்

(இ) சுய உதவிக் குழுக்களின் பத்துக் கொள்கைகள் (ஈ) கடல் சார்ந்த பத்து வளங்கள்

170. நவீன ஓரிசா ———-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது?

(அ) 1926 (ஆ) 1929 (இ) 1936 (ஈ) 1939

171. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2013 எப்போது நடைமுறைக்கு வந்தது?

(அ) 05 ஏப்ரல் 2013 (ஆ) 05 மே 2013 (இ) 05 ஜீன் 2013 (ஈ) 05 ஜீலை 2013

172. இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரி சபையின் தலைவர் ——— ஆவார்

(அ) பிரதமர் (ஆ) உள்துறை அமைச்சர் (இ) யூனியன் நிதி அமைச்சர் (ஈ) ஜனாதிபதி

173. இரண்டாம் தர நகர்புற குடியிருப்புகளின் மக்கள் தொகையானது

(அ) 10,000 – 19,999 (ஆ) 50,000 – 99,999 (இ) 20,000 – 49,999 (ஈ) 5,000 – 9,999

174. ஹீப்ளியை தலைமையிடமாக கொண்ட இரயில்வே மண்டலம் எது?

(அ) தென் மத்திய இரயில்வே மண்டலம் (ஆ) தென் மேற்கு இரயில்வே மண்டலம்

(இ) மேற்கு மத்திய இரயில்வே மண்டலம் (ஈ) தென் கிழக்கு இரயில்வே மண்டலம்

175. சீரழிவுடையது, பயனற்றது மற்றும் லாபமற்றதுமான காடுகள்

(அ) ஒதுக்கப்பட்டது (ஆ) பாதுகாக்கப்பட்டது

(இ) வகைப்படுத்தப்படாதது (ஈ) வகைப்படுத்தப்பட்டது

176. பின்வருவனவற்றில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் பாயும் ஆறு எது?

(அ) ஜீலம் (ஆ) சீனப் (இ) ராஃபி (ஈ) சிந்து

177. “செர்ரி ப்ளாசம்ஸ்” என்று அழைக்கக்கூடி இடியுடன் கூடிய மழை பெறும் மாநிலம்

(அ) கேரளா (ஆ) கர்நாடகா (இ) தமிழ்நாடு (ஈ) ஆந்திர பிரதேசம்

178. 1882-ம் ஆண்டு பூனாவில் ஆரிய மகிளா சமாஜ்யை நிறுவியவர்

(அ) பண்டிட் ரமாபாய் (ஆ) மேடம் பிக்காஜி காமா

(இ) நானிபாலா தேவி (ஈ) நளினி சென் குப்தா

179. போர்த்துகீசிய பாதிரியாரால் ஐரோப்பிய ஓவியங்கள் எந்த மொகலாய மன்னரின் ஆட்சியில் அறிமுகம் செய்யப்பட்டது?

(அ) பாபர் (ஆ) அக்பர் (இ) ஷாஜஹான் (ஈ) ஒளரங்கசீப்

180. யாருடைய ஆட்சிக் காலத்தில் முதல் முறையாக பெரோஷாவினுடைய யமுனா கால்வாய் பழுதுபார்க்கப்பட்டது?

(அ) பாபர் (ஆ) அக்பர் (இ) ஷாஜஹான் (ஈ) ஒளரங்கசீப்

181. ஆலம்கீர் நாமாவை எழுதுpயது யார்?

(அ) முன்சி மிர்சா முகமது காசிம் (ஆ) கபி கான் (இ) பீம்சென் (ஈ) தான்சென்

182. ஹீனர்களின் முதல் படையெடுப்பு எந்த குப்த மன்னர் ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்தது?

(அ) முதலாம் குமார குப்தர் (ஆ) புரு குப்தர் (ஈ) ஸ்கந்த குப்தர் (ஈ) புத குப்தர்

183. முகமது-பின்-துக்ளக் காலத்தில் நடைபெற்ற கடுமையான தண்டனைகள் மற்றும் கொலைகள் பற்றி குறிப்பிட்டவர் யார்?

(அ) பெரிஷ்டா (ஆ) பிர்தௌசி (இ) இபன் பதூதா (ஈ) இர்பான் ஹபீப்

184. பால்பன் சிறுவனாக இருந்த போது அவரை கவர்ந்து சென்றவர்கள் யார்?

(அ) மங்கோலியர் (ஆ) ஹீனர்கள் (இ) துருக்கியர் (ஈ) டார்டாரியர்

185. முகம்மது பின் துக்ளக் வெளியிட்ட தங்க நாணயத்தின் பெயர்

(அ) வராகன் (ஆ) பகோடா (இ) அதாலி (ஈ) தினார்

186. நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் பொருந்தும்

(அ) அசையா பொருட்கள் (ஆ) அசையும் பொருட்கள்

(இ) குறிப்பிட்ட பொருட்கள் மற்றும் சேவைகள் (ஈ) அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகள்

187. ஏழைகளுக்கு இலவச சட்ட உதவி அரசு வழங்குவதற்கான சட்டம் எந்த அரசியலமைப்பு சட்ட திருத்த்தின் மூலம் இந்திய அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டது?

(அ) 42வது சட்டதிருத்தம் (ஆ) 44வது சட்டதிருத்தம்

(இ) 62வது சட்டதிருத்தம் (ஈ) 43வது சட்டதிருத்தம்

188. லோக்சபாவில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் அறிமுகப்படுத்த தேவையான ஆதரவு

(அ) 160 உறுப்பினர்கள் (ஆ) 80 உறுப்பினர்கள்

(இ) 140 உறுப்பினர்கள் (ஈ) 50 உறுப்பினர்கள்

189. இந்திய அரசியலமைப்பின் எந்த ஷரத்து “ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு உயர்நீதிமன்றம் இருக்க வேண்டும்” எனக் கூறுகிறது?

(அ) விதி 214 (ஆ) விதி 215 (இ) விதி 216 (ஈ) விதி 217

190. குடியரசுத் தலைவரின் தடுப்புமுறை ஆணை (அதிகாரம்) பற்றிய வாக்கியங்களை கவனிக்கவும்

1. சாதாரண மசோதாக்களை உறுதி செய்தல் நிராகரித்தல் மற்றும் திருப்புதல் கூடும்.

2. பண மசோதாவை உறுதி செய்தல் மற்றும் நிராகரித்தல் கூடும் ஆனால் திருப்புதல் கூடாது.

3. ஆரசியலமைப்பு திருத்தம் மசோதாவை உறுதி செய்தல், நிராகரித்தல் அல்லது திருப்புதல் கூடும். மேல் காணப்படுபவையில் எதுஎவை சரியானது?

(அ) 1,2 மற்றும் 3 (ஆ) 1 மற்றும் 2 (இ) 2 மற்றும் 3 (ஈ) 1 மற்றும் 3

191. குடியரசு தலைவரின் மன்னிப்பளிக்கும் அதிகாரம் பற்றிய கண்ட கூற்றுக்களை கருதவும்

1. அவர் இந்த விகாரத்தினை மேல் முறையிட்டு நீதிமன்றமாக செயல்படுத்துகிறார்.

2. அவரின் அதிகாரம் நீதிமன்றத்தின் அதிகாரத்திற்கு அப்பாற்பட்டது இல்லை.

3. குடியரசு தலைவர் கருணை மனு கோருவோருக்கு கட்டுப்பட வேண்டிய அவசியம் இல்லை.

4. மன்னிப்பள்ககும் அதிகாரம் என்பது அடிப்படையில் அவருடைய சிறப்பதிகாரம் ஆகும்.

(அ) 1 மட்டும் சரி (ஆ) 1 மற்றும் 2 மட்டும் சரி (இ) 3 மட்டும் சரி (ஈ) 3 மற்றும் 4 மட்டும் சரி

192. மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் பதவிக்கான நபரை ஆளுநருக்கு பரிந்துரைக்கும் குழுவில் உள்ள உறுப்பினர்கள்

(அ) முதலமைச்சர், சபாநாயகர், உள்துறை அமைச்சர், எதிர்கட்சி தலைவர் மற்றும் சட்ட அமைச்சர்

(ஆ) முதலமைச்சர், சபாநாயகர், உள்துறை அமைச்சர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்

(இ) முதலமைச்சர், சபாநாயகர், எதிர்கட்சி தலைவர் மற்றும் தற்போதைய உயர் நீதிமன்றமாவட்ட நீதிமன்ற நீதிபதி

(ஈ) முதலமைச்சர், சபாநாயகர், உள்துறை அமைச்சர், எதிர் கட்சி தலைவர் மற்றும் தற்போதைய உயர் நீதிமன்றமாவட்ட நீதிமன்ற நீதிபதி

193. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு பொதுவான உயர் நீதிமன்றத்தை வழங்கும் அரசியலமைப்பு திருத்தச் சட்டம்

(அ) 7வது திருத்தச் சட்டம் 1956 (ஆ) 8வது திருத்தச் சட்டம் 1960

(இ) 9வது திருத்தச் சட்டம் 1962 (ஈ) 10வது திருத்தச் சட்டம் 1964

194. திட்டக் குழுவிற்கு மாற்றாக 1, ஜனவரி 2015 அன்று கொண்டு வரப்பட்ட நிதி ஆயோக்கின் அப்போதைய துணைத்தலைவர்

(அ) G.Sபல்லா (ஆ) அரவிந்த பனகாரியா (இ) விஜய்.I.கேல்கர் (ஈ) சுரேஷ் D.டெண்டுல்கர்

195. இந்திய ரிசர்வ் வங்கி பணக் கொள்கையின் நோக்கங்கள்:

1. விலை நிலைப்படுத்துதல்.

2. வரி விகிதம்.

3. சமூக நீதி.

குறியீடுகளைப் பயன்படுத்தி சரியான விடையைத் தெரிவு செய்க:

(அ) 1 மட்டும் சரி (ஆ) 1 மற்றும் 2 மட்டும் சரி (இ) 1 மற்றும் 3 மட்டும் சரி (ஈ) 1,2 மற்றும் 3 மட்டும் சரி

196. அடுக்கு வரி விளைவு என்பது

(அ) வரி விளைவு (ஆ) வரி மீதான வரி (இ) வளர்வீத வரி விளைவு (ஈ) நேர்முக வரி விளைவு

197. மக்கள் தொகையின் உகந்த கோட்பாட்டை நிறுவியவர் யார்?

(அ) எட்வின் கேனன் (ஆ) மால்தஸ் (இ) கீன்ஸ் (ஈ) ரிக்கார்டோ

198. இந்தியாவில் NREGA —– அன்று நடைமுறைக்கு வந்தது.

(அ) 2 பிப்ரவரி 2006 (ஆ) 28 ஏப்ரல் 1989 (இ) 1 ஏப்ரல் 1999 (ஈ) 2 அக்டோபர் 1993

199. அடிப்படை பெட்ரோ கெமிக்கல்கள் மற்றும் அவற்றின் இறுதி தயாரிப்புகளின் வளர்ச்சிக்காக குழு உருவாக்கப்பட்டது.

(அ) C.H.ஹனுமன்தராவ் குழு (ஆ) D.R.காட்கில் குழு

(இ) D,V.கபூர் குழு (ஈ) K.S.சலாப்பட்டி ராவ் குழு

200. எந்த பகுதி தீவிர பகுதி மேம்பாட்டுத் திட்டத்துடன் தொடர்புடையது அல்ல?

(அ) லுதியானா,பஞ்சாப் (ஆ) அலிகார், உத்திர பிரதேசம்

(இ) திருவாரூர்-தமிழ்நாடு (ஈ) பாலி, ராஜஸ்தான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!