TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil – 13th February 2024

1. அண்மையில், எந்த அமைப்பால், “Road to Paris 2024: Championing Clean Sports and Uniting for Anti-Doping” என்ற மாநாடு நடத்தப்பட்டது?

அ. தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு முகமை (NADA)

ஆ. தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகம்

இ. இந்திய விளையாட்டு ஆணையம்

ஈ. இந்திய தேசிய விளையாட்டு கூட்டமைப்பு

  • பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் நெருங்கிவரும் நிலையில், தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு முகமை தடைசெய்யப்பட்ட பொருட்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து இந்திய விளையாட்டு வீரர்களுக்குக் கற்பித்தற்காக “Road to Paris 2024: Championing Clean Sports and Uniting for Anti-Doping” என்ற மாநாட்டை நடத்தியது. காந்தி நகரில் உள்ள தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்தில் ஊட்டச்சத்து துணைப்பொருள்களின் சோதனைக்கான சிறப்பு மையத்தை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் திறந்து வைத்தார்.

2. பெருங்கடல்கள் மற்றும் வளிமண்டலத்தை ஆய்வுசெய்வதற்காக அண்மையில் NASAஆல் ஏவப்பட்ட செயற்கைக் கோளின் பெயரென்ன?

அ. STARS-1

ஆ. ROSAT

இ. PACE

ஈ. ASTRO A

  • NASA மற்றும் ஸ்பேஸ்X ஆகியவை வானிலை மாற்றம் காரணமாக Plankton, Aerosol, Cloud, and ocean Ecosystem (PACE) செயற்கைக்கோளின் ஏவுதலை ஒத்திவைத்துள்ளன. காலநிலை மாற்றத்தின் மத்தியில் பெருங்கடல்கள்-வளிமண்டல இணைப்புகளை ஆராய்வது, நீர் மற்றும் வளியில் நுண்ணுயிரிகளின் வாழ்க்கையின் தாக்கத்தை புரிந்துகொள்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. மிதவைத் தாவரம் ஆய்வுமூலம் கரியமில வாயு பரிமாற்றம், வளிமண்டல மாறிகள் மற்றும் பெருங்கடல்கள் ஆரோக்கியம் ஆகியவற்றை PACE கண்காணிக்கும்.
  • இந்தத் திட்டத்தின் வளிமக்கரைசல்கள் தயாரிப்புகள் காட்டுத்தீபோன்ற நிகழ்வுகளில் சுகாதார ஆலோசனைகளுக்கு உதவும் மற்றும் தீங்கு விளைவிக்கும் பாசிப்படர்வுகளை கண்காணிக்கும்.

3. புது தில்லியில் நடைபெறும் 2024 – உலக புத்தகக் கண்காட்சிக்கானக் கருப்பொருள் என்ன?

அ. Azadi ka Amrit Mahotsav

ஆ. Books for Readers with Special Needs

இ. Indigenous Voices: Mapping India’s Folk & Tribal Literature

ஈ. Multilingual India: A Living Tradition

  • 2024 பிப்.10-18 வரை தேசிய புத்தக அறக்கட்டளை மற்றும் ITPO நடத்தும் புது தில்லி புத்தகக்கண்காட்சி, “Multilingual India: A Living Tradition” என்ற கருப்பொருளின்கீழ் நடத்தப்படுகிறது. இந்த நிகழ்வில், 25 பிரதிநிதிகளுடன் அதன் இலக்கிய பாரம்பரியத்தை கௌரவ விருந்தினராக உள்ள சவுதி அரேபியா முன்னிலைப்படுத்தி வருகிறது. கலாசார பரிமாற்றத்தை மேம்படுத்துவதோடு இந்தியா மற்றும் சவுதி அரேபியா இடையே இருதரப்பு உறவுகளையும் இந்த நிகழ்வு வலுப்படுத்துகிறது.

4. அண்மையில், தனது மாநில அரசு ஊழியர்களுக்குப் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்திய முதல் வடகிழக்கு மாநிலம் எது?

அ. மிசோரம்

ஆ. சிக்கிம்

இ. மணிப்பூர்

ஈ. அஸ்ஸாம்

  • சிக்கிம் மாநில முதலமைச்சர் பிரேம் சிங் தமாங், 2006 ஏப்ரல்.01ஆம் தேதிக்குப்பிறகு பணியமர்த்தப்பட்ட மாநில அரசு ஊழியர்களுக்குப் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவதாக அறிவித்தார். சிக்கிம் மாநிலச் சேவைகள் ஓய்வூதிய விதிகள், 1990இன்படி, 1990 மார்ச்.31ஆம் தேதிக்குமுன் நியமிக்கப்பட்ட ஊழியர்கள் இதன் மூலம் பயனடைவார்கள். இந்த நடவடிக்கை மாநில அரசு ஊழியர்களின் நிதி நலவாழ்வைப் பாதுகாப்பதற்கான குறிப்பிடத்தக்க நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.

5. அண்மையில், அஸ்ஸாமில் பாய்ந்தோடும் பிரம்மபுத்திரா நதி திட்டத்திற்கு, $200 மில்லியன் டாலர் மதிப்பில் கடன் வழங்க ஒப்புதல் அளித்த வங்கி எது?

அ. ICICI வங்கி

ஆ. ஆசிய வளர்ச்சி வங்கி

இ. உலக வங்கி

ஈ. HDFC வங்கி

  • இந்தியாவின் அஸ்ஸாம் மாநிலத்தில் பாய்ந்தோடும் பிரம்மபுத்திரா நதிக்கரையில் வெள்ளம் மற்றும் ஆற்றங்கரை அரிப்பு அபாய மேலாண்மைக்குத் தீர்வுகாணும் வகையில் ஆசிய வளர்ச்சி வங்கி $200 மில்லியன் டாலர் மதிப்பில் கடன் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டம் விரிவான மற்றும் ஒருங்கிணைந்த உத்தியை வலியுறுத்துகிறது. இச்சிக்கல்களை திறம்பட தணிக்க நீண்டகால திட்டமிடலை வழங்கவும் காலநிலை மற்றும் பேரிடர் நெகிழ்திறன் மிக்க ஆதரவை வழங்கவும் இது நோக்கம் கொண்டுள்ளது.

6. ‘மிமாஸ்’ என்பது கீழ்காணும் எந்தக் கோளின் இயற்கைச் செயற்கைக்கோளாகும்?

அ. சனி

ஆ. நெப்டியூன்

இ. செவ்வாய்

ஈ. வெள்ளி

  • வில்லியம் ஹெர்ஷல் என்பவரால் 1789இல் கண்டுபிடிக்கப்பட்ட சனியின் நிலவான மிமாஸ், அதன் மேற்பரப்பிற்கு அடியில் ஒரு பரந்த கடலைக் கொண்டிருக்கக்கூடும் என அனுமானிக்கப்படுகிறது. சனியின் முக்கிய நிலவுகளில் மிகச்சிறியதும் உட்புறத்தில் அமைந்திருப்பதுமான, ‘மிமாஸ்’ நிலவு ‘சனி-I’ என்றும் அழைக்கப்படுகிறது. ஓர் அண்மைய பகுப்பாய்வின்படி, ஒப்பீட்டளவில் 5 முதல் 15 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு மிமாஸில் ஓர், ‘இளம்’ கடல் உருவாகியிருக்கலாம்.

7. ஆரல் கடலானது கீழ்காணும் எந்த இரு நாடுகளின் எல்லையில் அமைந்துள்ளது?

அ. கஜகஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான்

ஆ. உஸ்பெகிஸ்தான் மற்றும் துர்க்மெனிஸ்தான்

இ. கிர்கிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான்

ஈ. துர்க்மெனிஸ்தான் மற்றும் கஜகஸ்தான்

  • ஒருகாலத்தில் உலகின் நான்காவது பெரிய உள்நாட்டு நீர்நிலையாக இருந்த ஆரல் கடல், 1960ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட ஒரு பெரிய சோவியத் நீர்மாற்றுத்திட்டத்தால் கிட்டத்தட்ட மறைந்துபோகும் நிலைக்கு வந்துவிட்டது. பாசனத்திட்டங்களுக்காக சிர் தர்யா மற்றும் அமு தர்யா ஆறுகளின் போக்கைத் திருப்பியதால், இக்கடல் படிப்படியாக வறண்டுபோக தொடங்கியது. கஜகஸ்தானுக்கும் உஸ்பெகிஸ்தானுக்கும் இடையில் அமைந்துள்ள இந்த ஆரல் கடல் மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்குமுன்பு உருவாகி பல நாடுகளின் ஆறுகளுக்கு வடிகாலாக இருந்தது. கடுமையான மத்திய ஆசிய காலநிலையும் மனித தலையீடுகளும் அதன் இவ்வீழ்ச்சிக்கு வழிகோலியுள்ளன.

8. ‘கட்டுடல் இந்தியா’ இயக்கத்தின் புதிய விளம்பரத்தூதர் யார்?

அ. நீரஜ் சோப்ரா

ஆ. நரேந்திர குமார் யாதவ்

இ. ஜோகிந்தர் சர்மா

ஈ. சுனில் குமார்

  • இந்திய அரசாங்கம், ‘கட்டுடல் இந்தியா’ இயக்கத்தின் விளம்பரத் தூதராக IRS அதிகாரி நரேந்திர குமார் யாதவை நியமித்துள்ளது. தற்போது GSTஇன் கூடுதல் இயக்குநராக உள்ள நரேந்திர குமார் யாதவ், இந்த இயக்கத்தின் விளம்பரத்தூதராக நியமிக்கப்பட்ட முதல் அரசு ஊழியர் ஆவார்.

9. விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து துணைப்பொருள்களின் சோதனைக்கான சிறப்பு மையம் (CoE-NSTS) தொடங்கப்பட்டுள்ள இடம் எது?

அ. கோயம்புத்தூர்

ஆ. காந்திநகர்

இ. போபால்

ஈ. இம்பால்

  • காந்திநகரில் அமைந்துள்ள தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்தில், விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து துணைப்பொருள்களின் சோதனைக்கான தனது முதலாவது சிறப்பு மையத்தை (CoE-NSTS) இந்தியா தொடக்கியுள்ளது. அமைச்சர் அனுராக் சிங் தாக்கூரால் தொடக்கி வைக்கப்பட்ட இந்த ஆய்வகம், தடைசெய்யப்பட்ட பொருட்களைச் சோதனையிட்டுக் கண்டறிவதற்கும், விளையாட்டு வீரர்களின் நல்வாழ்வை உறுதிசெய்வதற்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்திய விளையாட்டு வீரர் / வீராங்கனைகளுக்கு ஊக்கமருந்து இல்லாத ஊட்டச்சத்து துணைப் பொருள்களை வழங்குவதை இந்த முயற்சி தனது நோக்கமாகக் கொண்டுள்ளது.

10. WHOஆல் 2024ஆம் ஆண்டுக்கான, ‘நெல்சன் மண்டேலா விருது’ வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ள நிறுவனம் எது?

அ. AIIMS, தில்லி

ஆ. AIIMS, மதுரை

இ. மனநலம் மற்றும் நரம்பு அறிவியலுக்கான தேசிய நிறுவனம்

ஈ. தேசிய ஆயுர்வேத நிறுவனம்

  • மனநலம் & நரம்பு அறிவியலுக்கான தேசிய நிறுவனம் (NIMHANS) மனநலம் & நல்வாழ்வை மேம்படுத்துவதற்கான அதன் அளப்பரிய பணிக்காக உலக நலவாழ்வு அமைப்பால் (WHO) 2024ஆம் ஆண்டுக்கான நெல்சன் மண்டேலா விருதைப் பெற்றுள்ளது. மனநலம் மற்றும் நரம்பியல் துறை நவீனங்களுக்கு முன்னோடியாக உள்ள NIMHANS, புதுமையான ஆராய்ச்சி, கல்வி மற்றும் மனநலத்தை பொதுச் சுகாதாரத்தோடு ஒருங்கிணைக்கிறது. இந்த விருது NIMHANSஇன் 50ஆம் ஆண்டு நிறுவன ஆண்டுடன் ஒத்துப்போகிறது.

11. 67ஆவது அகில இந்திய காவல்துறை பணித்திறன் கூட்டம் நடைபெற்ற இடம் எது?

அ. சென்னை

ஆ. லக்னோ

இ. பெங்களூரு

ஈ. பாளையங்கோட்டை

  • 2024 பிப்.12-16ஆம் தேதி வரை லக்னோவில் 67ஆவது அகில இந்திய காவல்துறை பணித்திறன் கூட்டத்தை ரெயில்வே பாதுகாப்புப் படை (RPF) நடத்தவுள்ளது. இந்நிகழ்வை ஏற்பாடுசெய்யும் பொறுப்பு அகில இந்திய காவல் துறை பணித்திறன் கூட்ட மத்திய ஒருங்கிணைப்புக் குழுவால் RPFஇடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சட்ட அமலாக்க வட்டாரங்களில் புகழ்பெற்ற இந்த நிகழ்வு, உள்நாட்டுப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக குற்றங்களை அறிவியல் பூர்வமாகக் கண்டறிதல் & புலனாய்வு செய்வதில் காவல்துறை அதிகாரிகளிடையே சிறப்பையும் ஒத்துழைப்பையும் ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 67ஆவது அகில இந்திய காவல் பணித்திறன்களுக்காக ரெயில்வே பாதுகாப்புப் படையின் தொழில்நுட்பக்குழுவால் உருவாக்கப்பட்ட பிரத்யேக செயலி மற்றும் வலைத்தளம் அறிமுகப்படுத்தப்பட்டது. உள்நாட்டில் உருவாக்கப்பட்ட இந்த டிஜிட்டல் தளங்கள் தகவல்தொடர்புகளை ஒழுங்குபடுத்துதல், நிகழ்நேர தகவல்களை வழங்குதல்போன்ற சிறப்பம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

12. பின்வருவனவற்றில் எது, ‘infexnTM’ என்பதை விளக்குகிறது?

அ. புத்தொழில் வளர்ச்சித் திட்டம்

ஆ. மரபணுத் தொகுதி அடிப்படையிலான தொற்றுநோய் சோதனை

இ. மரபணு மாற்றப்பட்ட பயிர்களின் சுவையைக் கூட்டும் செயல்முறை

ஈ. MSME–களுக்கான கடனளி சாளரம்

  • இந்தியாவின் முதல் மரபணுத் தொகுதி அடிப்படையிலான தொற்றுநோய் பரிசோதனையான, ‘infexnTM’ என்ற பரிசோதனையை கேரள மாநில அரசு அறிமுகப்படுத்தவுள்ளது. HaystackAnalytics மற்றும் NIMS மெடிசிட்டிமூலம் உருவாக்கப்பட்ட இந்தப் பரிசோதனையானது குறித்தெடுத்த அடுத்த தலைமுறை வரிசைமுறை செயல்பாட்டைப் பயன்படுத்துகிறது. இது 24 மணி நேரத்திற்குள் தொடர்புடைய நுண்ணுயிர்க்கொல்லி எதிர்ப்புத் திறன்கொண்ட மரபணுக்களுடன் பாக்டீரியா மற்றும்/அல்லது பூஞ்சை தொற்றுகளை அடையாளம் காணும் திறன்கொண்டதாகும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. தேசிய வளர்ச்சியைவிட தமிழ்நாட்டின் பொருளாதாரம் 8.19 சதவீதமாக உயர்வு.

தேசிய வளர்ச்சியைவிட, தமிழ்நாட்டின் பொருளாதாரம் 8.19%ஆக உயர்ந்துள்ளதாக ஆளுநர் உரையில் தெரிவிக்கப் -பட்டுள்ளது. நாட்டின் நிலப்பரப்பில் 4 சதவீதத்தையும், மக்கள்தொகையின் 6 சதவீதத்தையும் மட்டுமே கொண்டுள்ள தமிழ்நாடு இந்தியாவின் பொருளாதாரத்தில் 9 சதவீதத்துக்கும் அதிகமான பங்கை அளிக்கிறது. 2022-23ஆம் ஆண்டில் 7.24 சதவீத நிலையான தேசிய வளர்ச்சி வீதத்தை விஞ்சி, தமிழ்நாட்டின் பொருளாதாரம் 8.19 சதவீதமாக உயர்ந்துள்ளது. மேலும், 2022-23இல் நாட்டின் 6.65 சதவீத பணவீக்கத்துடன் ஒப்பிடும்போது, தமிழ்நாட்டின் பணவீக்கம் 5.97 சதவீதமாக உள்ளது.

2. புதுமைப்பெண் திட்டம்: கல்லூரிகளில் சேரும் மாணவிகள் எண்ணிக்கை அதிகரிப்பு.

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு புதுமைப்பெண் திட்டத்தால் கல்லூரிகளில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கை 34% அதிகரித்துள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. அரசுப்பள்ளிகளில் 6-12ஆம் வகுப்பு வரை பயின்று பின்னர் உயர்கல்வி பயிலும் அனைத்து மாணவிகளுக்கும் மாதந்தோறும் `1000 வழங்கும் வகையில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு புதுமைப்பெண் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. நடப்பாண்டில் மாதம் தோறும் 2.73 இலட்சம் மாணவிகள் இதனால் பயனடைந்து வருவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு முழுமையான வேளாண் வளர்ச்சியை அடையத்தேவையான கட்டமைப்புகளை ஏற்படுத்த நடப்பாண்டில் `190 கோடியில் 2,504 கிராம ஊராட்சிகளில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்மூலம் 1.07 கோடி பேர் பலன் அடைந்துள்ளனர். நான் முதல்வன் திட்டம்மூலம் கடந்த ஆண்டு 1.84 இலட்சம் விண்ணப்பதாரர்களில் 1.19 இலட்சம் மாணவர்கள் வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனர். இவ்வாறு தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

3. தமிழ்நாடு அரசின் உரையில் இடம்பெற்ற திருக்குறள்:

பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்

அணியென்ப நாட்டிவ் வைந்து.

(குறள்: 738: பொருட்பால். இயல்: அரணியல். அதிகாரம்: நாடு.)

விளக்கம்: நோய் இல்லாமை, செல்வம், மிகுந்த விளைச்சல், மகிழ்ச்சி, நல்ல பாதுகாப்பு இவை ஐந்தும் ஒரு நாட்டிற்கு அழகு எனப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!