TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil – 15th & 16th October 2023

1. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற ‘MMDR சட்டத்துடன்’ தொடர்புடைய துறை எது?

அ. மருந்துகள் மற்றும் மருந்துகள்

ஆ. சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் 🗹

இ. இயந்திரங்கள் மற்றும் இயந்திரங்கள்

ஈ. திரைப்படங்கள் மற்றும் இதழ்கள்

  • பிரதம மந்திரி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், லித்தியம், நியோபியம், அரிய புவி தனிமங்கள் (REES) முதலான மூன்று முக்கிய கனிமங்களைத் தோண்டியெடுப்பதற்கான உரிமைத்தொகை விகிதத்தை நிர்ணயிப்பதற்காக சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறை) சட்டம், 1957இன் 2ஆவது அட்டவணையில் திருத்தம் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது.

2. இந்தியாவில் இளையோர் மேம்பாட்டிற்காக உருவாக்கப்பட்ட தன்னாட்சி அமைப்பின் பெயர் என்ன?

அ. இளைஞர் திறன் இந்தியா

ஆ. மேரா யுவ பாரத் 🗹

இ. இளம் இந்தியா

ஈ. இந்தியாவில் பயில்வோம்

  • பிரதமர் தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இளையோர் மேம்பாடு மற்றும் இளையோர்கள் தலைமை தாங்கும் வளர்ச்சிக்குத் தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் ஒரு பரந்த நடைமுறையாக செயல்படவும், இளையோரின் விருப்பங்களை நிறைவேற்றவும், அரசின் அனைத்துத் தரப்பிலும் வளர்ந்த பாரதத்தை உருவாக்கவும், சமமான அணுகலை வழங்குவதற்கும் ஒரு தன்னாட்சி அமைப்பான மேரா யுவ பாரத் (MY பாரத்) என்னும் எனது இளையபாரதம் என்ற அமைப்பை நிறுவ ஒப்புதல் அளிக்கப்பட்டது.

3. எந்த மாநிலம்/யூனியன் பிரதேசத்தின் முந்திரிக்கு சமீபத்தில் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது?

அ. கேரளா

ஆ. கோவா 🗹

இ. ஆந்திரப் பிரதேசம்

ஈ. குஜராத்

  • கோவா முந்திரிக்கு சமீபத்தில் புவிசார் குறியீடு வழங்கப்பட்டது. புவிசார் குறியீடு (GI) என்பது ஒரு குறிப்பிட்ட நிலப் பரப்பில் உற்பத்தியாகும் தயாரிப்புகளுக்கு வழங்கப்படுகிற ஒரு சிறப்புக்குறியீடாகும். இக்குறியீடு தனித்துவமான அம்சங்களையும் பண்புகளையும் குறிக்கிறது. முந்திரி, போர்த்துகீசியப் பெயரான ‘காஜு’ அல்லது கொங்கனியில் ‘காஜு’ என்பதிலிருந்து பெறப்பட்டதாகும். கோவா முந்திரி இயற்கையானதும் சிறந்த சுவையும் உடைய தனித்துவம் மிக்க முந்திரி ஆகும்.

4. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தில் இருந்து தனது குடிமக்களை திரும்ப அழைத்துவர இந்தியா மேற்கொண்ட நடவடிக்கையின் பெயர் என்ன?

அ. ஆபரேஷன் அஜய் 🗹

ஆ. ஆபரேஷன் அபை

இ. ஆபரேஷன் அடல்

ஈ. ஆபரேஷன் அருண்

  • இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய இரு நாடுகளிலும் உள்ள இந்திய குடிமக்களை திரும்ப அழைத்து வருவதை நோக்கமாகக் கொண்ட, “ஆபரேஷன் அஜய்” என்ற நடவடிக்கையை இந்தியா அறிவித்தது. மதிப்பீடுகளின்படி, சுமார் 18,000 இந்தியர்கள் தற்போது இஸ்ரேலில் வசிக்கின்றனர். காசாவில் இருந்து ஹமாஸ் போராளிகள் இஸ்ரேலுக்கு எதிராக மேற்கொண்ட தாக்குதல்களிலும் இஸ்ரேலின் பதில் தாக்குதல்களிலும் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் மேலும் காயமடைந்துள்ளனர்.

5. பல்வேறு சர்வதேச அமைப்புகளால், ‘உலகின் மிகப்பெரிய திறந்தவெளி சிறை’ எனக் குறிப்பிடப்பட்ட பகுதி எது?

அ. தைவான்

ஆ. சிரியா

இ. காசா 🗹

ஈ. ஈரான்

  • இரண்டு மில்லியனுக்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் வசிக்கும் மத்தியதரைக்கடல், இஸ்ரேல் மற்றும் எகிப்துக்கு இடையேயுள்ள ஒரு குறுகிய பிரதேசமான காசா, 2007ஆம் ஆண்டு முதல் வான், தரை மற்றும் கடல் முற்றுகைக்கு உட்பட்டுள்ளது. பல்வேறு சர்வதேச நிறுவனங்கள், ஐநா வல்லுநர்கள், உரிமைக்குழுக்கள், அறிவாளர்கள் மற்றும் பிரிட்டிஷ் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் ஆகியோரால் ‘காசா ஒரு திறந்தவெளி சிறைச்சாலை’ என்று கூறப்பட்டுள்ளது.

6. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற ‘White Goods’ என்பது கீழ்காணும் எதனை குறிப்பிடுகிறது?

அ. பால் பொருட்கள்

ஆ. காற்பதனிகள் மற்றும் LED விளக்குகள் 🗹

இ. பனை பொருட்கள்

ஈ. கிரிப்டோகரன்சிகள்

  • வெண் பொருட்களுக்கான (White Goods) `6,238 கோடி மதிப்பில் உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டத்திற்கான (PLI) விதிமுறைகளை அரசாங்கம் புதுப்பித்துள்ளது. புதிய வழிகாட்டுதல்களின்படி, இத்திட்டத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்கள், திட்டத்தின் பலன்களுக்குத் தகுதிபெற, பதிவுசெய்யப்பட்ட விலை மதிப்பீட்டுக் கணக்கரின் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். வெள்ளைப் பொருட்கள் PLI திட்டம் காற்பதனிகள் (ACs) மற்றும் LED விளக்குகளின் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கோடு வடிவமைக்கப்பட்டுள்ளது.

7. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘V2X தொழில்நுட்பம்’ என்பதுடன் தொடர்புடையது எது?

அ. கணினி வரைகலை

ஆ. ஆட்டோமொபைல் 🗹

இ. பணத்தாள்களை அச்சிடுதல்

ஈ. எலக்ட்ரானிக் கேஜெட்டுகள்

  • பிற வாகனங்கள் மற்றும் வெளிப்புற அமைப்புகளுடன் தொடர்புகொள்வதற்காக மகிழுந்துகளில் (car) இணைப்பு அம்சங்களை சேர்க்கும் வாகன உற்பத்தியாளர்கள், சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக மேம்படுத்தப்பட்ட விபத்து சோதனை மதிப்பீடுகளைப் பெறவேண்டும் என்று இந்திய அரசாங்கத்தின் குழு பரிந்துரைத்துள்ளது.
  • இம்முன்முயற்சியானது, ஓட்டுநர்களுக்கு இடையே எச்சரிக்கைகளை அனுப்புவதற்கும், போக்குவரத்து விளக்குகள் போன்ற உட்கட்டமைப்புகளுடன் தொடர்புகொள்வதற்கும் பயன்படும் வாகனத்திலிருந்து-எல்லாவற்றுக்கும் (V2X) என்ற தொழினுட்பத்தைப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்கும்.

8. ‘அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோரின் மனநலம்’ என்ற தலைப்பிலான அறிக்கையை வெளியிட்ட நிறுவனம் எது?

அ. UNICEF

. WHO 🗹

இ. NITI ஆயோக்

ஈ. பன்னாட்டு மன்னிப்பு அவை

  • ‘அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோரின் மனநலம்: ஆபத்து மற்றும் பாதுகாப்புக் காரணிகள் மற்றும் கவனிப்புக்கான அணுகல்’ என்ற தலைப்பில் உலக சுகாதார அமைப்பு (WHO) சமீபத்தில் ஓர் அறிக்கையை வெளியிட்டது. புகலிடம் வேண்டுவோர் மற்றும் அகதி சிறார்கள் குறித்த உலகளாவிய ஆய்வானது, 15-17 வயதினரை ஒப்பிடுகையில் இளவயதுப் பிரிவினரிடையே (6-14 வயது) நடத்தைக் கோளாறுகள் அதிகமாகக் காணப்படலாம் என்பதைக் குறிக்கிறது.

9. இந்திய வனவிலங்கு அறக்கட்டளையின்படி, இந்தியாவில் மிகவும் அழிந்து வரும் நீர்வாழ் உயிரினம் எது?

அ. நடனம் ஆடும் தவளை 🗹

ஆ. மெய்த்தவளை

இ. மரத்தவளை

ஈ. அடுக்குத் தவளை

  • இந்திய வனவிலங்கு அறக்கட்டளையானது, மேற்குத்தொடர்ச்சி மலையில் பிரத்தியேகமாக காணப்படும் நடனம் ஆடும் தவளைகளை இந்தியாவில் மிகவும் அழிந்துவரும் நீர்வாழ் உயிரினமாக அடையாளம் கண்டுள்ளது. இது உலகின் ஐந்தாவது மிகவும் அருகிவரும் உயிரினமாகும்; 92 சதவீத நடனம் ஆடும் தவளைகள் அச்சுறுத்தப்பட்ட பிரிவில் இடம்பெற்றுள்ளன. சமீபத்தில் வெளியிடப்பட்ட குளோபல் ஆம்பிபியன் மதிப்பீட்டின் இரண்டாவது பதிப்பின் அடிப்படையில் இந்த அமைப்பு பகுப்பாய்வு செய்துள்ளது.

10. ‘அமேஸ்-28’ என்ற பெயரில் 3D முறை அச்சிடல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கட்டப்பட்ட முதல் கட்டிடம் திறக்கப்பட்டுள்ள மாநிலம் எது?

அ. பீகார்

ஆ. கர்நாடகா

இ. மத்திய பிரதேசம்

ஈ. கேரளா 🗹

  • ‘அமேஸ்-28’ என்று பெயரிடப்பட்ட, முப்பரிமாண (3D) அச்சிடல் தொழில்நுட்பத்தில் கட்டப்பட்ட கேரளாவின் முதல் கட்டிடம் சமீபத்தில் திறக்கப்பட்டது. 380 சதுர அடி பரப்பளவு கொண்ட இந்தக் கட்டிடம், ஓர் அறை கொண்ட கோடை இல்லத்தைக் கொண்டுள்ளது. மாதிரி திட்டமாக வடிவமைக்கப்பட்ட இது வெறும் 28 நாட்களில் கட்டிமுடிக்கப்பட்டது ஆகும். சென்னையைச் சார்ந்த கட்டுமான தொழில்நுட்ப துளிர் நிறுவனமான டுவாஸ்டாவின் ஆதரவுடன் கேரா மாநில நிர்மிதி கேந்திரத்தால் இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

11. ஈராண்டுகளுக்கு (2023-2025) இந்தியப் பெருங்கடலின் விளிம்பில் உள்ள நாடுகள் சங்கத்தின் தலைமைப் பொறுப்புக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடு எது?

அ. இந்தியா

ஆ. இலங்கை 🗹

இ. இந்தோனேசியா

ஈ. ஆஸ்திரேலியா

  • இந்தியப் பெருங்கடலின் விளிம்பில் உள்ள நாடுகள் சங்கத்தில் ஆப்பிரிக்கா, மேற்காசியா, தெற்காசியா, தென்கிழக்கு ஆசியா, ஆஸ்திரேலியா மற்றும் இந்தியப் பெருங்கடலைச் சுற்றியுள்ள 23 நாடுகள் உள்ளன. 2023 முதல் 2025 வரையிலான ஈராண்டுகளுக்கு இலங்கை இந்தச் சங்கத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்கிறது. இந்தியா இந்தச் சங்கத்தின் துணைத் தலைவராகப் பொறுப்பேற்றது. இதற்கு முன் வங்க தேசத்திடம் தலைமைப்பொறுப்பு இருந்தது. தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின் சிந்தனையில் உருவானதுதான் இருபத்தாறு ஆண்டுகள் பழமையான இந்த அமைப்பு.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. அப்துல் கலாம் பிறந்தநாள்.

முன்னாள் குடியரசுத்தலைவர் ஆ ப ஜெ அப்துல் கலாம் கடந்த 1931ஆம் ஆண்டு அக்டோபர்.15இல் இராமேசுவரத்தில் பிறந்தார். கல்வியின்மீது அளவுகடந்த ஆர்வத்தை வளர்த்துக்கொண்ட கலாம் விஞ்ஞானியாக தனது ஆராய்ச்சியைத் தொடங்கி ‘பிருத்வி’, ‘அக்னி’ ஏவுகணைகள், ‘பொக்ரான்’ அணுகுண்டு சோதனை உள்ளிட்டவற்றின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றினார். அதன் காரணமாக இவர், ‘இந்தியாவின் ஏவுகணை நாயகன்’ என்று அழைக்கப்படுகிறார். 2002ஆம் ஆண்டு நாட்டின் குடியரசுத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

‘மக்கள் குடியரசுத்தலைவர்’ எனப் போற்றப்பட்டார். அவரின் பிறந்தநாள் ‘உலக இளையோர் நாள்’ எனக் கொண்டாடப்படுகிறது. அவர், 2015 ஜூலை.27இல் இயற்கை எய்தினார்.

2. வரி நிலுவையை வசூலிக்கும் சமாதானத் திட்டம் தொடக்கம்.

தமிழ்நாட்டில் வணிகர்களிடமிருந்து வரி நிலுவையை எளிய முறையில் வசூலிப்பதற்கான சமாதானத்திட்டம் தொடங்கப்பட்டது. `50 ஆயிரத்துக்குக் கீழ் வரி, அபராதம், வட்டி ஆகியவற்றை வைத்துள்ள வணிகர்களுக்கு அவை முழுமையாகத் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. சமாதானத் திட்டம் அடுத்த ஆண்டு பிப்ரவரி வரை நடைமுறையில் இருக்கும்.

3. தில்லி பி20 உச்சிமாநாடு.

ஜி20 நாடாளுமன்ற அவைத்தலைவர்களின் 9ஆவது (பி20) உச்சிமாநாடு தில்லியில் கடந்த அக்.12 முதல் 14 வரை மூன்று நாள்கள் நடைபெற்று முடிவுற்றது. பி20 மாநாடு முதன்முறையாக அர்ஜெண்டினாவில் நடைபெற்றது.

IMPORTANT LINKS

TNPSC Current Affairs

https://www.winmeen.com/tnpsc-tamil-current-affairs/

Winmeen: Install the Winmeen App – Daily Free & Premium Tnpsc Study Materials & Online Test

https://play.google.com/store/apps/details?id=co.robin.jbzwb

Winmeen: Winmeen Tnpsc Test Series – Samacheer lesson Wise Test + Previous Year Model Test for Tnpsc Group 1,2, 4 & VAO

https://wp.me/p7JanY-ag8

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!