TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil – 15th November 2023

1. தீபாவளியன்று 22.23 இலட்சம் அகல்விளக்குகளை ஏற்றி உலக சாதனை படைத்த நகரம் எது?

அ. வாரணாசி

ஆ. அயோத்தி 🗹

இ. மைசூரு

ஈ. போபால்

  • தீபாவளியை முன்னிட்டு அயோத்தியில் சுமார் 22.23 இலட்சம் அகல்விளக்குகள் ஏற்றப்பட்டு உலகசாதனை படைக்கப்பட்டது. கடந்த 2022ஆம் ஆண்டில், 17 இலட்சத்திற்கும் அதிகமான அகல்விளக்குகள் ஏற்றப்பட்டன. சரயு ஆற்றின் கரையில் அமைந்துள்ள இந்த நகரம் அதன் முந்தைய உலக சாதனையை தானே முறியடித்துள்ளது.

2. ‘அறிவு, சுகாதாரம், புத்தாக்கம் மற்றும் ஆராய்ச்சி நகரம்’ என்பதுடன் தொடர்புடைய எந்த மாநிலம்/யூனியன் பிரதேசம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. கர்நாடகா 🗹

இ. அஸ்ஸாம்

ஈ. மேற்கு வங்காளம்

  • திட்டமிடப்பட்ட KHIR நகரத்தில் 80,000 வேலைவாய்ப்புகளை உருவாக்குவதோடு சுகாதாரம், புத்தாக்கம் மற்றும் அறிவுசார் துறைகளில் `40,000 கோடி அளவுக்கு முதலீட்டை ஈர்க்க கர்நாடக மாநில அரசு இலக்கு வைத்துள்ளது. பெங்களூருவின் புறநகரில் அறிவு (Knowledge), சுகாதாரம் (Health), புத்தாக்கம் (Innovation) மற்றும் ஆராய்ச்சி (Research) நகரத்தின் வளர்ச்சியை கருத்திற்கொள்ளும் நோக்கோடு கர்நாடக அரசு அம்மாநிலத்தின் தொழிற்துறை சிந்தனையாளர்களை சந்தித்தது. பெங்களூருவில் இருந்து 60 கிமீ தொலைவில் 2,000 ஏக்கர் பரப்பளவில் இந்தப் புதிய முதலீட்டு மண்டலம் அமைக்கப்படவுள்ளது.

3. நகர்ப்புற உட்கட்டமைப்புகளை உருவாக்குவதற்காக கீழ்காணும் எந்த நிறுவனத்துடனான $400 மில்லியன் டாலர் மதிப்பிலான கொள்கை அடிப்படையிலான கடன் ஒப்பந்தத்தில் இந்திய அரசாங்கம் கையெழுத்திட்டது?

அ. உலக வங்கி

ஆ. ADB 🗹

இ. IMF

ஈ. WTO

  • உயர்தர நகர்ப்புற உள்கட்டமைப்பை உருவாக்க $400 மில்லியன் டாலர் கடன்பெற ஆசிய வளர்ச்சி வங்கியுடன் இந்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டது. கடந்த 2021ஆம் ஆண்டு இந்திய அரசின் நிலையான நகர்ப்புற வளர்ச்சி மற்றும் சேவை விநியோகத் திட்டத்தின் முதல் துணை திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. அந்தத் திட்டத்துக்கு $350 மில்லியன் டாலர் நிதியுதவிபெற ஆசிய வளர்ச்சி வங்கியுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. அந்தத் திட்டத்தின் 2ஆவது துணைத் திட்டம் முதலீட்டுத் திட்டமிடல், மாநில மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் சீர்திருத்தம் மேற்கொள்வதை ஆதரிக்கிறது. நகர்ப்புறங்களில் குடிநீர் பாதுகாப்பு, நீர்நிலைகளைப் புனரமைத்தல், நிலத்தடி நீர் அளவை நிலையாக பராமரித்தல் உள்ளிட்டவற்றையும் அந்தத் துணைத் திட்டம் ஊக்குவிக்கிறது.

4. நடப்பு 2023 அக்டோபரில், இந்தியாவின் சில்லறை பணவீக்க விகிதம் என்னவாக இருந்தது?

அ. 3.87%

ஆ. 4.87% 🗹

இ. 6.87%

ஈ. 8.87%

  • இந்தியாவின் சில்லறை பணவீக்கம் அக்டோபரில் 4.87 சதவீதமாகக் குறைந்துள்ளது என்று புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நுகர்வோர் விலைக்குறியீட்டெண் 5.02%ஆக இருந்தது. இந்திய ரிசர்வ் வங்கி, 2023இன் கடைசி காலாண்டில் மொத்த சில்லறை பணவீக்கம் சராசரியாக 5.6 சதவீதமாகவும், 2023-24இல் ஒட்டுமொத்தமாக 5.4 சதவீதமாகவும் இருக்கும் என கணித்துள்ளது.

5. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘நான்காவது குழு’வுடன் தொடர்புடைய அமைப்பு எது?

அ. உலக பொருளாதார மன்றம்

ஆ. ஐக்கிய நாடுகள் 🗹

இ. பன்னாட்டு செலாவணி நிதியம்

ஈ. உலக வங்கி

  • ஐக்கிய நாடுகளின் பொது அவையின் நான்காவது குழுவானது (சிறப்பு அரசியல் மற்றும் குடியேற்ற நீக்கம்) பதிவு செய்யப்பட்ட வாக்குகள்மூலம் ஆறு வரைவு தீர்மானங்களை நிறைவேற்றியது. இந்தத் தீர்மானங்கள் பாலஸ்தீனப் பிரச்சினை உட்பட மத்திய கிழக்கு நாடுகளின் நிலைமை குறித்தவையாகும். ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பாலஸ்தீனப் பகுதியில் இஸ்ரேலின் குடியேற்ற நடவடிக்கைகளைக் கண்டிக்கும் தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்குச் செலுத்தியுள்ளது.

6. ‘செவ்வாயின் ஆய்வுக்கூறு மாதிரியுடன் பூமிக்குத் திரும்பும் திட்டத்துடன்’ தொடர்புடைய நாடு எது?

அ. இஸ்ரேல்

ஆ. ஐக்கிய அரபு அமீரகம்

இ. ஐக்கிய அமெரிக்க நாடுகள் 🗹

ஈ. ரஷ்யா

  • NASAஇன் செவ்வாயின் ஆய்வுக் கூறு மாதிரியுடன் பூமிக்குத் திரும்பும் திட்டமானது, மிகவும் சிக்கலான விண்வெளி முன்னெடுப்புகளுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்தத் திட்டம் NASA முகமைக்கு திட்டமதிப்பீட்டில் நெருக்கடிக்கு வழிவகுக்கும் இடர்கூறையும் கொண்டுள்ளது. ஆளில்லா ஆய்வுகள் மற்றும் எந்திர ஊர்திகளைப் பயன்படுத்தி செவ்வாய் கோளிலிருந்து பாறை மாதிரிகளை சேகரிப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.

7. CITES உடனான COP19 கூட்டத்தின்போது, உறுப்பினர்கள் எந்த விலங்குகளை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இனமாக முதன்மைப்படுத்த அறிவுறுத்தப்பட்டனர்?

அ. வங்கப்புலி

ஆ. ஜாகுவார் 🗹

இ. சிறுத்தை

ஈ. ஆப்பிரிக்க யானை

  • CITES உடனான COP19 கூட்டத்தின்போது, ஜாகுவார்களை வேட்டையாடுவதை எதிர்த்துப் போராடுவதற்கான முழுமையான மற்றும் பயனுள்ள நடவடிக்கைகளை உடனடியாக செயல்படுத்துவதற்கான அறிவுறுத்தல்களை பங்கேற்கும் நாடுகள் பெற்றுக்கொண்டன. கூடுதலாக, வனவிலங்கு குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் கவனஞ்செலுத்தி, ஜாகுவாரின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்க அறிவுறுத்தப்பட்டது.

8. ‘முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் பதிலளிப்புத் திட்டத்தை’ அறிமுகப்படுத்திய அமைப்பு எது?

அ. WEF

. FAO 🗹

இ. IMF

ஈ. உலக வங்கி

  • உணவு மற்றும் உழவு அமைப்பால், ‘முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் பதிலளிப்புத் திட்டம்’ அண்மையில் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின்படி, 2024 மார்ச் வரை 4.8 மில்லியனுக்கும் அதிகமான தனிநபர்களுக்கு உதவி வழங்குவதற்கு தோராயமாக $160 மில்லியன் அமெரிக்க டாலர்கள் உடனடியாகத் தேவைப்படுகின்றன.

9. ‘2040ஆம் ஆண்டுக்குள் நெகிழி மாசுபாட்டை ஒழிப்பது: கொள்கை ரீதியிலான பகுப்பாய்வு’ என்ற அறிக்கையை வெளியிட்ட நிறுவனம் எது?

அ. NITI ஆயோக்

ஆ. உலக வங்கி

இ. UNEP

ஈ. OECD 🗹

  • நெகிழி மாசுபாடு குறித்த பன்னாட்டு அரசுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தைக்கு முன்னதாக பொருளியல் கூட்டுறவு மற்றும் மேம்பாட்டு அமைப்பால், ‘2040ஆம் ஆண்டுக்குள் நெகிழி மாசுபாட்டை ஒழிப்பதை நோக்கிய கொள்கை ரீதியிலான பகுப்பாய்வு’ என்ற அறிக்கை வெளியிடப்பட்டது. கடந்த 2022ஆம் ஆண்டில் உலகளாவிய சூழலில் சுமார் 21 மில்லியன் மெட்ரிக் டன் நெகிழிப் பொருட்கள் பயன்பாட்டில் இருப்பதாக இந்த இடைக்கால அறிக்கை வெளிப்படுத்துகிறது.

10. புனித பீட்டர்ஸ்பர்க் பிரகடனத்துடன் தொடர்புடைய உயிரினம் எது?

அ. புலி 🗹

ஆ. வெள்ளாடு

இ. முயல்

ஈ. நாய்

  • 2010இல் புனித பீட்டர்ஸ்பர்க் பிரகடனத்தின்படி, புலிகள் வாழும் 13 நாடுகள் 2022ஆம் ஆண்டுக்குள் குறைந்து போன புலிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க உறுதிபூண்டன. ஓர் அண்மைய தரவுகளின்படி, உலகளாவிய புலிகளின் எண்ணிக்கை 60 சதவீதம் அதிகரித்து, மொத்தம் 5,870 புலிகள் தற்போது உள்ளன. பூடான், மியான்மர், கம்போடியா, லாவோ மற்றும் வியட்நாம் போன்ற நாடுகள் தங்கள் நாட்டில் உள்ள புலிகளின் எண்ணிக்கையில் குறைவதைக் கண்டு இதற்கான திட்டத்தின் இணைந்து பணியாற்றின.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் என். சங்கரய்யா (102) மறைவு.

மார்க்சிய பொதுவுடைமைக் கட்சியின் மூத்த தலைவரும் சுதந்திரப் போராட்ட தியாகியுமான என். சங்கரய்யா (102), காலமானார். இவர் 1967, 1977, 1980 ஆகிய ஆண்டுகளில் மதுரை மேற்கு மற்றும் மதுரை கிழக்குத் தொகுதியில் போட்டியிட்டு வென்று 3 தடவை தமிழ்நாட்டின் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியுள்ளார். தீக்கதிர் நாளேட்டின் முதல் ஆசியரும் இவரே.

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோசை அழைத்து சுதந்திரப் போராட்டத்துக்காக கூட்டத்தை நடத்திய சிறப்பு அவருக்கு உண்டு. 1938ஆம் ஆண்டு இந்தித் திணிப்பை எதிர்த்து மாணவர்களுடன் போராட்ட பயணத்தைத்தொடங்கினார். அதன்பின் 1939ஆம் ஆண்டு தாழ்த்தப்பட்ட மக்களுக்கான குரலாக ஒலித்தார். இதற்காக அவர் முன்னெடுத்த மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நுழைவுப் போராட்டம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இவருக்குத் தமிழ்நாடு அரசு ‘தகைசால் தமிழர்’ விருது வழங்கி கௌரவப்படுத்தி இருந்தது. இந்த விருதை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியபோது முதன்முதலாக அவ்விருதை 2021இல் சங்கரய்யா பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

IMPORTANT LINKS

TNPSC Current Affairs

https://www.winmeen.com/tnpsc-tamil-current-affairs/

Winmeen: Install the Winmeen App – Daily Free & Premium Tnpsc Study Materials & Online Test

https://play.google.com/store/apps/details?id=co.robin.jbzwb

Winmeen: Winmeen Tnpsc Test Series – Samacheer lesson Wise Test + Previous Year Model Test for Tnpsc Group 1,2, 4 & VAO

https://wp.me/p7JanY-ag8

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!