TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil – 17th November 2023

1. இந்தியாவின் 28ஆவது மாநிலமாக ஜார்கண்ட் உருவாக்கப்பட்ட ஆண்டு எது?

அ. 1998

ஆ. 2000 🗹

இ. 2002

ஈ. 2010

  • கடந்த 2000 நவம்பர்.15 அன்று ஜார்க்கண்ட் மாநிலம் இந்தியாவின் 28ஆவது மாநிலமாக உருவாக்கப்பட்டது. ஒவ்வோர் ஆண்டும் நவம்பர்.15ஆம் தேதியன்று ஜார்க்கண்ட் மாநிலம் அதன் மாநில தினத்தை மாநிலம் முழுவதும் கொண்டாடுகிறது. பிரிப்பதற்கு முன், அம்மாநிலம் பீகாரின் தென்பகுதியின் ஒருபகுதியாக இருந்தது.

2. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற எட்னா மலை அமைந்துள்ள நாடு எது?

அ. பிலிப்பைன்ஸ்

ஆ. இத்தாலி 🗹

இ. இந்தோனேசியா

ஈ. ஜப்பான்

  • உலகின் மிகவும் செயல் நிலையில் உள்ள எரிமலைகளில் ஒன்றான இத்தாலியில் உள்ள புகழ்பெற்ற எட்னா மலை, முந்தைய ஆண்டு வெடித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்த எரிமலை பொ. ஆ. மு (BCE) 1500க்கு முன்பிலிருந்தே வெடித்து வந்துள்ளதாக பதிவுகள் உள்ளன. அதன் பின்னர் மொத்தம் 200 முறை இந்த எரிமலை வெடித்துள்ளது.

3. ஆடவர்களுக்கான, ‘உலக தடகள வீரர்’ விருதுக்குத் தேர்வு செய்யப்பட்ட இந்தியர் யார்?

அ. விராட் கோலி

ஆ. நீரஜ் சோப்ரா 🗹

இ. சாத்விக் ரெட்டி

ஈ. ஆர் பிரக்ஞானந்தா

  • ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியனான ஈட்டியெறி வீரர் நீரஜ் சோப்ரா, ஆடவருக்கான, ‘ஆண்டின் சிறந்த தடகள வீரர்’ விருதுக்குத் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். 25 வயதான இவர் மதிப்புமிக்க இவ்விருதுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து விளையாட்டு வீரர்களுள் ஒருவராவார். அமெரிக்காவின் ரியான் குரூசர் (குண்டெறிதல்), சுவீடனின் மொண்டோ டுப்லாண்டிஸ் (தண்டூன்றித் தாண்டுதல்), கென்யாவின் கெல்வின் கிப்டம் (தொடரோட்டம்) மற்றும் அமெரிக்காவின் நோவா லைல்ஸ் (100 மீ/200 மீ) ஆகியோர் இறுதிப்பட்டியலில் உள்ள பிற வீரர்களாவர்.

4. ‘இந்தோ-பசிபிக் பிராந்திய பேச்சுவார்த்தை’ நடத்தப்படும் நகரம் எது?

அ. சென்னை

ஆ. புது தில்லி 🗹

இ. மும்பை

ஈ. கொல்கத்தா

  • இந்திய-பசிபிக் பிராந்திய பேச்சுவார்த்தை எனப்படும் இந்திய கடற்படையின் வருடாந்திர உயர்மட்ட சர்வதேச மாநாடு புது தில்லியில் நடைபெறவுள்ளது. இந்திய கடற்படையால் ஏற்பாடு செய்யப்பட்டு கோவாவில் நடைபெற்ற 2023 – கோவா கடல்சார் மாநாட்டுக்குப்பிறகு இந்த நிகழ்வு நடைபெறுகிறது.

5. ‘உலக எரிசக்தி வேலைவாய்ப்பு – 2023’ என்ற அறிக்கையை வெளியிடும் நிறுவனம் எது?

அ. FAO

ஆ. WEF

இ. IEA 🗹

ஈ. UNEP

  • உலக எரிசக்தி வேலைவாய்ப்பு-2023 என்ற அறிக்கையானது சர்வதேச எரிசக்தி நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையின்படி, உலகளவில் 35 மில்லியன் பணிளுடன், கடந்த 2021ஆம் ஆண்டில் முதன்முறையாக மரபு சார் புதைபடிவ எரிபொருள் துறையில் (32 மில்லியன்) கிடைக்கும் பணிகளின் எண்ணிக்கையை தூய ஆற்றல் துறையில் உள்ள பணிகளின் எண்ணிக்கை விஞ்சியது. தூய ஆற்றல் துறை பணிகள் தொடர்ந்து முன்னணியில் இருப்பதாக இந்த அறிக்கை காட்டுகிறது. புதைபடிவ எரிபொருள் துறையில் உள்ள வேலைகளின் விகிதத்தைவிட 3.6 மடங்குக்கும் அதிகமாக அது வளர்ந்து வருகின்றது.

6. 2023-24 பட்ஜெட்டில் குறிப்பிட்டுள்ளபடி, 2023-24க்கான நேரடி வரி வசூல் இலக்கு எவ்வளவு?

அ. ரூ 8.23 டிரில்லியன்

ஆ. ரூ 16.23 டிரில்லியன்

இ. ரூ 10.23 டிரில்லியன்

ஈ. ரூ 18.23 டிரில்லியன் 🗹

  • 2023-24 வரவுசெலவுத்திட்டத்தில் நேரடி வரிவசூல் `18.23 டிரில்லியன் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது கடந்த நிதியாண்டின் `16.61 டிரில்லியனைவிட 9.75 சதவீதம் அதிகமாகும். மத்திய நேரடி வரிகள் வாரியத்தின்படி, நடப்பு நிதியாண்டில் நிர்ணயம் செய்யப்பட்ட `18.23 டிரில்லியன் நேரடி வரிவசூல் இலக்கை அரசாங்கம் விஞ்சும். அரசின் தரவுகளின்படி, இந்த நிதியாண்டில் ஏப்ரல்.01 முதல் நவம்பர்.09 வரையிலான காலக்கட்டத்தில் நேரடி வரி வசூல் 22 சதவீதம் அதிகரித்து `10.60 டிரில்லியனாக உள்ளது.

7. ‘சதர் திருவிழா’ கொண்டாடப்படுகிற மாநிலம்/யூனியன் பிரதேசம் எது?

அ. கோவா

ஆ. தெலுங்கானா 🗹

இ. கேரளா

ஈ. பஞ்சாப்

  • ஒவ்வோர் ஆண்டும் தீபாவளி நாளுக்கு அடுத்த இரண்டாவது நாளில் மக்கள் கொண்டாடும் சதர் திருவிழாவிற்கு ஹைதராபாத் தயாராகி வருகிறது. துன்னபொத்துல பண்டுகா (எருமைமாடுகளுக்கானத் திருவிழா) என்றும் அழைக்கப்படும் இந்தத் திருவிழா எருமைமாடுகளுக்கென ஓர் அர்ப்பணிக்கப்பட்ட திருவிழாவாகும்.

8. அரேபிய குருவி சீலாமீன் (Arabian sparrow seer fish) மற்றும் ரஸ்ஸலின் புள்ளிகொண்ட சீலாமீன் (Russell’s spotted seer fish) கண்டுபிடிக்கப்பட்ட நாடு எது?

அ. இலங்கை

ஆ. அமெரிக்கா

இ. இந்தியா 🗹

ஈ. சீனா

  • இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் மற்றும் மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள், இந்திய கடற்பகுதியில் இரு கூடுதல் அதிக மதிப்புள்ள சீலாமீன்களை அடையாளம் கண்டுள்ளனர். இவ்வினங்களில் ஒன்றான அரேபிய குருவி சீலாமீன் (Scomberomorus avirostrus), அறிவியல் துறைக்கு முற்றிலும் புதியததாகும். மற்றோர் இனமான ரஸ்ஸலின் புள்ளிகொண்ட சீலாமீன் (Scomberomorus leopardus), ஒரு தனித்துவமான இனமாக அறியப்படுகிறது.

9. Cyrtodactylus vairengtensis என்பது கீழ்காணும் எம்மாநிலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய மரப்பல்லி இனமாகும்?

அ. கேரளா

ஆ. மகாராஷ்டிரா

இ. மிசோரம் 🗹

ஈ. ஜார்கண்ட்

  • Cyrtodactylus vairengtensis என்பது மிசோரம் மாநிலத்தில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு மரப்பல்லி இனமாகும். இதன்மூலம் அம்மாநிலத்தில் உள்ள மரப்பல்லி இனங்களின் எண்ணிக்கை ஆறாகவும், நாடு முழுவதும் 22ஆகவும் உள்ளது. இந்தப் புதிய இனத்திற்கு மிசோரமில் உள்ள நகரத்தின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இப்புதிய இனத்துக்கென பரிந்துரைக்கப்பட்ட பொதுவான பெயர், ‘வைரெங்டே வளைந்த கால் மரப்பல்லி’யாகும். உலகம் முழுவதும் 335 மரப் பல்லி இனங்கள் உள்ளன; அவற்றில் 42 இந்தியாவில் காணப்படுகின்றன.

10. தனது ‘இக்லா’ என்ற கையடக்க விமான-எதிர்ப்பு ஏவுகணையை இந்தியாவுக்கு வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடு எது?

அ. அமெரிக்கா

ஆ. ரஷ்யா 🗹

இ. பிரான்ஸ்

ஈ. ஐக்கிய அரபு அமீரகம்

  • ரஷ்யா தனது ‘இக்லா’ என்ற கையடக்க விமான எதிர்ப்பு ஏவுகணையை இந்தியாவுக்கு வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, இந்தியாவில் ‘இக்லா’ விமான எதிர்ப்பு ஏவுகணை அமைப்பை உள்நாட்டிலேயே தயாரிக்க ரஷ்யா அனுமதிக்கும். 2016-2021ஆம் ஆண்டு வரை, இந்தியாவின் ஆயுத இறக்குமதியில் 50%க்கும் மேலான பங்கை ரஷ்ய நாடு கொண்டுள்ளது.

11. ஜனஜாதிய கௌரவ் திவாஸ் என்பது யாரின் பிறந்தநாளன்று கொண்டாடப்படுகிறது?

அ. அடல் பிஹாரி வாஜ்பாய்

ஆ. டாக்டர் பி. ஆர். அம்பேத்கர்

இ. பிர்சா முண்டா 🗹

ஈ. ஷ்யாமா பிரசாத் முகர்ஜி

  • பழங்குடியின விடுதலைப் போராட்ட வீரர் பிர்சா முண்டாவின் பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில், பழங் குடியின பெருமை நாள் என்றும் அழைக்கப்படும் ஜனஜாதிய கௌரவ் திவாஸ் நவ.15 அன்று கொண்டாடப்படுகிறது. அன்றைய நாள் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள உலிஹாட்டு கிராமத்திலிருந்து, ‘விக்சித் பாரத் சங்கல்ப் யாத்திரை’ என்றவொன்றை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

12. ‘உலக நீரிழிவு நோய் நாள்’ அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ. செப்டம்பர் 14

ஆ. அக்டோபர் 14

இ. நவம்பர் 14 🗹

ஈ. டிசம்பர் 14

  • உலகளவில், கடந்த 2014இல் 422 மில்லியன் பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்; இந்த எண்ணிக்கை கடந்த 1980இல் 108 மில்லியனாக இருந்தது. நீரிழிவு நோயின் உலகளாவிய பாதிப்பு 1980ஆம் ஆண்டிலிருந்து கிட்டத்தட்ட இருமடங்காக அதிகரித்துள்ளது. இது வயது வந்தோரில் 4.7%இலிருந்து 8.5%ஆக உயர்ந்துள்ளது. ஒவ்வோர் ஆண்டும் நவம்பர்.14 அன்று ‘உலக நீரிழிவு நோய் நாள்’ அனுசரிக்கப்படுகிறது. 2021-23 உலக நீரிழிவு நாளிற்கான கருப்பொருள், “Access to Diabetes Care” என்பதாகும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. வங்கக்கடலில் உருவாகிறது ‘மிதிலி’ புயல்!

வங்கக்கடலில் உருவாகவுள்ள புதிய புயலுக்கு ‘மிதிலி’ என்று பெயர்சூட்டப்பட்டுள்ளது. இந்தப் பெயரை மாலத்தீவு பரிந்துரைத்துள்ளது.

2. 9 ஆண்டுகளில் நன்னீர் மீன் உற்பத்தி இருமடங்கு உயர்வு.

மத்திய அரசின் சிறப்பான முன்னெடுப்புகளால் கடந்த 9 ஆண்டுகளில் நன்னீர் (கடல் சாராத) மீன் உற்பத்தி இரு மடங்கு உயர்ந்து 131 இலட்சம் டன்களாக உள்ளது என மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ‘உலக மீன்வள நாளை முன்னிட்டு நவம்பர்.21, 22 ஆகிய தேதிகளில், ‘உலக மீன்வள கருத்தரங்கம்-2023’ அகமதாபாதில் நடைபெறவுள்ளது.

2022-23ஆம் ஆண்டில் நாட்டின் மொத்த மீனுற்பத்தி 174 இலட்சம் டன்களாகும். உலகளவிலான மீனுற்பத்தியில் இந்தியா 3ஆவது பெரிய நாடாக உள்ளது. இதனால் உலகின் மொத்த உள்நாட்டு மீன் உற்பத்திக்கு இந்தியாவின் பங்கு 8 சதவீதமாக உள்ளது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மீன்வளத்துறையின் பங்கு 1 சதவீதத்துக்கும் மேலாக உள்ளது. 2022-23ஆம் நிதியாண்டில் $8.09 பில்லியன் டாலர் அளவிலான மீன் மற்றும் மீன்சார்ந்த பொருள்களை இந்தியா ஏற்றுமதி செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

IMPORTANT LINKS

TNPSC Current Affairs

https://www.winmeen.com/tnpsc-tamil-current-affairs/

Winmeen: Install the Winmeen App – Daily Free & Premium Tnpsc Study Materials & Online Test

https://play.google.com/store/apps/details?id=co.robin.jbzwb

Winmeen: Winmeen Tnpsc Test Series – Samacheer lesson Wise Test + Previous Year Model Test for Tnpsc Group 1,2, 4 & VAO

https://wp.me/p7JanY-ag8

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!