TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil – 19th December 2023

1. எந்தத் தேதியில் ஆண்டுதோறும் சர்வதேச நடுவுநிலைமை நாள் அனுசரிக்கப்படுகிறது?

அ. டிசம்பர் 10

ஆ. டிசம்பர் 12

இ. நவம்பர் 21

ஈ. ஜனவரி 24

  • சர்வதேச நடுவுநிலைமை நாளானது ஆண்டுதோறும் டிசம்பர்.12 அன்று அனுசரிக்கப்படுகிறது. இது உலகெங்கிலும் உள்ள நாடுகளிடையே நடுவுநிலைமையை மேம்படுத்துவதற்காக ஐக்கிய நாடுகள் சபையால் நியமிக்கப்பட்ட ஒரு நாளாகும். ஐநா பொதுச்சபை தீர்மானத்தின்மூலம் 2017இல் இந்த நாள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

2. வரவிருக்கும் அஜந்தா-எல்லோரா திரைப்பட விழா – 2024இல் பத்மபானி வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெறவுள்ளவர் யார்?

அ. குல்சார்

ஆ. பிரசூன் ஜோஷி

இ. ஜாவேத் அக்தர்

ஈ. பரேஷ் ராவல்

  • பிரபல பாடலாசிரியர்-திரைக்கதை எழுத்தாளரான ஜாவேத் அக்தருக்கு, வரவிருக்கும் அஜந்தா-எல்லோரா திரைப்பட விழாவில், ‘பத்மபானி வாழ்நாள் சாதனையாளர்’ என்ற விருது வழங்கப்படவுள்ளது. இந்தியத் திரையுலகில் அவரது கணிசமான பங்களிப்பிற்காக அங்கீகரிக்கப்பட்ட அக்தர், ‘ஜன்ஜீர்’, ‘தீவார்’, ‘ஷோலே’, ‘டான்’ ‘காலா பத்தர்’ மற்றும் ‘மிஸ்டர் இந்தியா’ போன்ற சின்ன சின்ன ஹிந்தி படங்களில் பணியாற்றியதற்காக அறியப்படுகிறார். ஜனவரி.03, 2024 அன்று சத்ரபதி சாம்பாஜிநகரில் உள்ள எம்ஜிஎம் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் விழாவின் ஒன்பதாவது பதிப்பின் தொடக்க நாள் விழாவில் அவருக்கு இந்த விருது வழங்கப்படும்.

3. இந்தியா-வியட்நாம் உறவுகளின் பின்னணியில், ‘VINBAX’ என்பதை எதைக் குறிக்கின்றது?

அ. இருதரப்பு இராணுவப்பயிற்சி

ஆ. கலாச்சார பரிமாற்ற திட்டம்

இ. பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம்

ஈ. அறிவியல் ஆராய்ச்சி ஒத்துழைப்பு

  • ‘VINBAX’ என்பது இந்தியாவிற்கும் வியட்நாமிற்கும் இடையிலான கூட்டு ராணுவப்பயிற்சியாகும். இப்பயிற்சியானது இருநாடுகளுக்கும் இடையே ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், இயங்குதன்மையை மேம்படுத்துதல் மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்துகொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது இராணுவ திறன்களை வலுப்படுத்துவ -தையும், அமைதிகாத்தல் மற்றும் பாதுகாப்பு முயற்சிகளுக்கான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தப் பயிற்சியின் நான்காவது பதிப்பு வியட்நாமின் ஹனோய் நகரில் டிசம்பர் 11-21, 2023 வரை நடைபெறுகிறது. இந்தப் பயிற்சியில் 45 இந்திய ஆயுதப்படை வீரர்கள் பங்கேற்கின்றனர்.

4. எந்த மாநிலத்தில் ஆண்டுதோறும், ‘ஷார் அமர்தலா தோர்க்யா’ என்ற விழா கொண்டாடப்படுகிறது?

அ. மேற்கு வங்காளம்

ஆ. மத்திய பிரதேசம்

இ அருணாச்சல பிரதேசம்

ஈ. கர்நாடகா

  • அருணாச்சல பிரதேசம், அசாம் ஆகிய மாநிலங்கள் மற்றும் பூடான் நாட்டின் எல்லையில் அமைந்துள்ள அருணாச்சல பிரதேச மாநிலத்தின் மேற்கு கமெங் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய குக்கிராமமான பலேமுவில் உள்ள தெக்ட்சே சாங்யே சோய் லாங் மடாலயத்தில் ஆண்டுதோறும் நடைபெறும், ‘ஷர் அமர்தலா தோர்க்யா’ என்ற திருவிழாவில் அருணாச்சல பிரதேச மாநில முதலமைச்சர் பேமா கந்து கலந்துகொண்டார்.

5. அண்மையில், செயற்கை நுண்ணறிவுக்கான உலகளாவிய கூட்டாண்மையை நடத்திய நாடு எது?

அ. ஜப்பான்

ஆ. இந்தியா

இ. பிரான்ஸ்

ஈ. சீனா

  • அண்மையில், 2022-23ஆம் ஆண்டிற்கான செயற்கை நுண்ணறிவுக்கான (AI) உலகளாவிய கூட்டாண்மையின் தலைமைப் பொறுப்பானது ஜப்பானில் நடந்த அதன் மூன்றாவது ஆண்டு உச்சி மாநாட்டின்போது பிரான்ஸிடம் இருந்து பெற்று இந்தியாவுக்கு வழங்கப்பட்டது. இது உலகின் மிகப்பெரிய பொருளாதாரங்களின் கூட்டமைப்பான G20இன் தலைமைப்பதவியை ஏற்றுக்கொண்டதன் பின்னணியில் வருகிறது. இந்த உச்சிமாநாட்டை நடத்தும் முதல் ஆசிய நகரம் டோக்கியோ ஆகும். இந்தக் கூட்டத்தில் பொறுப்பான AI, தரவு நிர்வாகம், பணியின் எதிர்காலம், புதுமை மற்றும் வணிகமயமாக்கல் ஆகிய நான்கு கருப்பொருள்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.

6. விவசாயத்தில் பயன்படுத்தப்படும் டிரோன்கள்மூலம் கிராமப்புறங்களில் உள்ள பெண்களுக்கு அதிகாரமளிக்கும் வகையில் தொடங்கப்பட்ட திட்டம் எது?

அ. டிரோன் சக்தி திட்டம்

ஆ. டிரோன் தீதி திட்டம்

இ. டிரோன் மகிளா கிருஷக் திட்டம்

ஈ. கிராமப்புற பெண்களை மேம்படுத்துவதற்கான டிரோன் திட்டம்

  • ‘நமோ டிரோன் சகோதரிகள்’ திட்டமானது அண்மையில் மத்திய அரசு திட்டங்களின் பயனாளிகளுடனான கலந்துரையாடலின்போது பிரதம அமைச்சரால் தொடங்கப்பட்டது. நமோ டிரோன் சகோதரிகள் முன்னெடுப்பானது உழவு நோக்கங்களுக்காக உழவர்களுக்கு வாடகைக்கு டிரோன்கள் வழங்குவதை நோக்கமெனக் கொண்டுள்ளது. இதற்காக 15,000 டிரோன்கள் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்படவுள்ளது.

7. அண்மையில் நாரி சக்தி சேமிப்புக் கணக்கை தொடங்கிய வங்கி எது?

அ. ICICI

ஆ. HDFC

இ. பாங்க் ஆஃப் இந்தியா

ஈ. இந்தியன் வங்கி

  • பாங்க் ஆஃப் இந்தியா சார்பற்ற வருமானங்கொண்ட பெண்களுக்காக சேமிப்புக்கணக்கைத் தொடங்கியுள்ளது. ‘நாரி சக்தி’ என்ற இந்தச் சேமிப்புக்கணக்கு தனிநபர் விபத்துக் காப்பீடு, சில்லறை கடன்களுக்கான சலுகை வட்டி வீதம், மலிவு விலை சுகாதாரக்காப்பீடு மற்றும் நலப்பொருட்கள் மற்றும் பெட்டக வசதிகள் ஆகியவற்றை வழங்குகிறது.

8. 2023 டிசம்பரில், இத்தாலிய குடிமக்களின் மிகவுயர்ந்த விருதான, ‘ஆர்டர் ஆஃப் மெரிட் ஆஃப் தி இத்தாலிய குடியரசு விருது’ (மெரிடோ டெல்லா ரிபப்ளிகா இத்தாலினா) கீழ்காணும் எந்த நடிகருக்கு வழங்கப்பட்டது?

அ. அனுபம் கெர்

ஆ. கபீர் பேடி

இ. நசிருதீன் ஷா

ஈ. பரேஷ் ராவல்

  • 2023 டிசம்பரில் மும்பையில் நடைபெற்ற ஒரு தனியார் விழாவில், புகழ்பெற்ற நடிகரான கபீர் பேடிக்கு, இத்தாலியின் உயரிய குடிமக்கள் விருதான, “ஆர்டர் ஆஃப் மெரிட் ஆஃப் தி இத்தாலிய குடியரசு” (மெரிடோ டெல்லா ரிபப்ளிகா இத்தாலினா) என்ற விருது வழங்கப்பட்டது. இத்தாலியின் அதிபர் மட்டரெல்லா கடந்த முப்பதாண்டுகளாக இந்தியா-இத்தாலி உறவுகளை மேம்படுத்துவதில் பேடியின் குறிப்பிடத்தக்க பங்கினைப் போற்றிப் பாராட்டினார்.

9. அண்மையில், உலகின் முதல் 4ஆவது தலைமுறை அணு உலையை அறிமுகப்படுத்திய நாடு எது?

அ. அமெரிக்கா

ஆ. சீனா

இ. ரஷ்யா

ஈ. பிரான்ஸ்

  • அண்மையில், கீழை ஷான்டாங் மாகாணத்தில் உள்ள ஷிடாவ் பே அணுமின் நிலையம் தனது வணிக ரீதியிலான நடவடிக்கைகளைத் தொடங்கியது. வளியால் குளிரூட்டப்படும் அடுத்த தலைமுறை அணு உலைகளின் சகாப்தம் இதன்மூலம் தொடங்கப்பட்டுள்ளது. கரியமில வாயு உமிழ்வைக் குறைக்கவும் நிலையான ஆற்றல் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்குமான சீனாவின் உறுதிப்பாட்டிற்கு இந்த வளர்ச்சி முக்கியமானதாக கருதப்படுகிறது.

10. ஈராண்டுக்கொரு முறை நடத்தப்படும் முதல் இந்திய கலை, கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்பு கண்காட்சி நடைபெற்ற இடம் எது?

அ. ஹைதராபாத்

ஆ. சென்னை

இ. புது தில்லி

ஈ. மும்பை

  • முதல் இந்திய கலை, கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்பு கண்காட்சியானது (IAADB) 2023 டிசம்பர்.09-15 வரை புது தில்லியில் உள்ள செங்கோட்டையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்தியக் கலை, கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்புக் கண்காட்சி தில்லியில் கலாச்சார வெளிக்கு ஒரு அறிமுகமாக செயல்படும். இந்த நிகழ்வில் சாமுன்னாட்டி எனப்படும் மாணவர் கண்காட்சியும் மற்றும் “ஆத்மநிர்பார் பாரத் மையத்திற்கான வடிவமைப்பு” ஆகியவையும் தொடங்கப்பட்டது.

11. கோயா பழங்குடியினம் சார்ந்த மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. மேகாலயா

இ. அந்தமான் & நிக்கோபார்

ஈ. ஆந்திர பிரதேசம்

  • ஆந்திர பிரதேசத்தில் உள்ள பழங்குடியான கோயா பழங்குடியினர், பாபிகொண்டா மலைத்தொடரில் வசிக்கின்றனர். இந்திய காட்டெருமைகளை (Bos gaurus) பாதுகாப்பதற்கான சுற்றுச்சூழலுக்கு உகந்த நடைமுறைகளை அவர்கள் ஏற்றுக்கொண்டனர். கோயா பழங்குடியினர் தங்கள் பாரம்பரிய புல்லாங்குழலான பெர்மகோரை வடிவமைக்க பாரம்பரிய இந்திய காட்டெருமைகளின் கொம்புகளை பயன்படுத்தி வந்தனர். தற்போது அதற்கு மாற்றாக பனை ஓலைகளை பயன்படுத்தவுள்ளதாக உறுதியளித்துள்ளனர். பெர்மகோர் என்பது ஒரு பாரம்பரிய புல்லாங்குழல் ஆகும். இது அவ்வின மக்கள் கொண்டாடும் திருவிழாக்களின்போது பயன்படுத்தப்படுகிறது.

12. DURF எனப்படும் உலகின் மிக ஆழமான மற்றும் மிகப்பெரிய நிலத்தடி ஆய்வகத்தை திறந்துள்ள நாடு எது?

அ. அமெரிக்கா

ஆ. சீனா

இ. இந்தியா

ஈ. ஜப்பான்

  • Deep Underground and Ultra-low Radiation Background Facility for Frontier Physics Experiments (DURF) என அழைக்கப்படும் உலகின் மிக ஆழமான மற்றும் மிகப்பெரிய நிலத்தடி ஆய்வகத்தைத் திறந்து வைத்ததன்மூலம் சீனா இயற்பியலில் குறிப்பிடத்தக்க சாதனையைப் பதிவுசெய்துள்ளது. 2,400 மீட்டர் ஆழத்தில் அமைந்துள்ள DURF என்பது சிங்குவா பல்கலைக்கழகம் மற்றும் யலோங் ரிவர் ஹைட்ரோபவர் டெவலப்மென்ட் கம்பெனி லிமிடெட் ஆகியவற்றுக்கு இடையேயான கூட்டு முயற்சியாகும். இந்த வசதி வேறு எங்கும் கிடைக்காத பிரத்யேக சோதனை சூழ்நிலைகளை வழங்குகிறது; ஒளி / மின்காந்த புலத்துடன் வரையறுக்கப்பட்ட தொடர்புகளை வெளிப்படுத்துகிறது.

13. அண்மைச் செய்திகளில் இடம்பெறும், ‘AIRAWAT’ என்றால் என்ன?

அ. நீர்மூழ்கிக்கப்பல்

ஆ. AI சூப்பர் கம்ப்யூட்டர்

இ. 5G வசதிகொண்ட டிரோன்

ஈ. சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட புறக்கோள்

  • AIRAWAT என்பது மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள அதிநவீன கணினி மேம்பாட்டு மையத்தில் (C-DAC) நிலைநிறுத்தப்பட்டுள்ள நாட்டின் விரைவான மற்றும் மிக விரிவான செயற்கை நுண்ணறிவு (AI) திறனுடைய மீத்திறன் கணினியாகும். இது 13,170 டெராஃப்ளாப் வேகத்தை கொண்டதாகும். சிறந்த 500 குளோபல் சூப்பர் கம்ப்யூட்டிங் பட்டியலின் 61ஆவது பதிப்பு AIRAWATஐ உலகளவில் 75ஆவது இடத்தில் பட்டியலிட்டுள்ளது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. ஜெஎன்.1 வகை கரோனா.

நாட்டிலேயே முதன்முறையாக கேரள மாநிலத்தில் ஜெஎன்.1 என்ற புதிய வகை கரோனா திரிபு கண்டறியப்பட்டு உள்ளது. தற்போதைய சான்றுகளின் அடிப்படையில் ஜெஎன்.1ஆல் ஒட்டுமொத்தமாக மக்களுக்கு ஏற்படும் ஆபத்து குறைவாகவே உள்ளதாக உலக சுகாதார அமைப்பு விளக்கமளித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!