TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil – 20th & 21st April 2024

1. UNCTAD அறிக்கையின்படி, 2024இல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வீதம் என்னவாக இருக்கும்?

அ. 6.3%

. 6.5%

இ. 6.7%

ஈ. 6.9%

  • வர்த்தகம் மற்றும் மேம்பாட்டுக்கான ஐநாஇன் கூட்டமைப்பு (UNCTAD) இந்தியப் பொருளாதாரம் 2023இல் எய்திய 6.7% வளர்ச்சியைத் தொடர்ந்து, 2024இல் 6.5%ஆக இருக்கும் எனக் கணித்துள்ளது. உலகின் மிகவிரைவாக வளரும் பெரிய பொருளாதாரம் என்ற தகுதியை இந்தியா தக்கவைத்துக்கொண்டுள்ளது. ஏற்றுமதியை அதிகரிக்கும் நோக்கில், விநியோகச் சங்கிலிகளை பல்வகைப்படுத்துவதற்காக, பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் உற்பத்தி நடவடிக்கைகளை விரிவுபடுத்துகின்றன. UNCTADஇன் அறிக்கையின்படி, 2023ஆம் ஆண்டின் வளர்ச்சி பொது மூலதன முதலீடு மற்றும் சேவைத்துறை விரிவாக்கத்தால் ஏற்பட்டதாகும்.

2. அண்மையில், DRDOஆல் கீழ்காணும் எந்த இடத்தில், உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட எறிகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது?

அ. சந்திப்பூர், ஒடிசா

ஆ. விசாகப்பட்டினம், ஆந்திர பிரதேசம்

இ. பொக்ரான், இராஜஸ்தான்

ஈ. ஸ்ரீஹரிகோட்டா, ஆந்திர பிரதேசம்

  • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் 2024 ஏப்ரல்.18 அன்று ஒடிஸா கடற்கரையில் உள்ள சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை மையத்தில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட எறிகணையை வெற்றிகரமாக சோதித்துப்பார்த்தது. இச்சோதனையின்போது, அதன் அனைத்து துணை அமைப்புகளும் சரியாகச் செயல்பட்டன. இந்திய வான்படையின் சுகோய்-30-MK-I விமானத்திலிருந்தும் எறிகணை பறப்பது கண்காணிக்கப்பட்டது.
  • இந்த எறிகணையில் மேம்பட்ட ஏவியோனிக்ஸ் மற்றும் சிறந்த செயல்திறனை உறுதிசெய்வதற்கான மென்பொருள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எறிகணையை பெங்களூருவில் உள்ள DRDO ஆய்வக ஏரோநாட்டிகல் மேம்பாட்டு அமைப்பு மற்றும் பிற ஆய்வகங்கள் மற்றும் இந்திய தொழில்துறைகளின் பங்களிப்புடன் உருவாக்கியுள்ளது.

3. 2024 – உலக கல்லீரல் நாளுக்கானக் கருப்பொருள் என்ன?

அ. Keep your liver healthy and disease-free

ஆ. Be Vigilant, Get Regular Liver Check-Ups

இ. Keep your liver healthy and Spread awareness

ஈ. Spreading awareness about liver-related issues

  • உலகளவில் கல்லீரலின் நலம் குறித்த விழிப்புணர்வை ஊக்குவிக்கும் நோக்கோடு ஏப்.19 அன்று உலக கல்லீரல் நாள் கொண்டாடப்படுகிறது. “உங்கள் கல்லீரலை நலமாகவும் நோயற்றதாகவும் வைத்திருங்கள் :: Keep your liver healthy and disease-free” என்பது நடப்பு 2024ஆம் ஆண்டில் வரும் இந்நாளுக்கானக் கருப்பொருளாகும். நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வழக்கமான பரிசோதனைகளின் முக்கியத்துவத்தை இது எடுத்துக்காட்டுகிறது. இந்த முன்னெடுப்பானது கல்லீரல் தொடர்பான கோளாறுகள், வாழ்க்கைமுறை மாற்றங்களை ஊக்குவிப்பது மற்றும் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ஆதரவாக இருப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

4. லக்ஷ்மண தீர்த்த ஆறானது கீழ்காணும் எந்த ஆற்றின் துணையாறாகும்?

அ. கோதாவரி

ஆ. கிருஷ்ணா

இ. நர்மதா

ஈ. காவேரி

  • கடும் வறட்சி மற்றும் கடும் வெப்பம் காரணமாக கர்நாடக மாநிலத்தில் பாயும் காவிரியின் துணையாறான லக்ஷ்மண தீர்த்த ஆறு முற்றிலும் வறண்டுகாணப்படுகிறது. பிரம்மகிரி மலையில் உருவாகி, கிழக்கு நோக்கி பாய்ந்து கிருஷ்ண ராஜ சாகர ஏரியில் காவேரி ஆற்றுடன் இது கலக்கிறது. புகழ்பெற்ற லக்ஷ்மணதீர்த்த அருவி அல்லது இருப்பு அருவி, கேரளத்தின் எல்லைக்கருகில் அதன் வழியில் அமைந்துள்ளது. தலைக்காவேரியில் உற்பத்தியாகும் காவேரி ஆறு, தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ள பூம்புகாரில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது.

5. டிராகன்ஃபிளை சுற்றகவூர்தி திட்டத்துடன் தொடர்புடைய விண்வெளி நிறுவனம் எது?

அ. NASA

ஆ. ISRO

இ. CNSA

ஈ. JAXA

  • $3.35 பில்லியன் திட்ட மதிப்பீட்டில், 2028 ஜூலையில் ஏவப்படவுள்ள சனியின் நிலவான டைட்டனுக்குச் செல்லும் டிராகன்ஃபிளை சுற்றகவூர்தி திட்டத்தை NASA உறுதிப்படுத்தியது. இது டைட்டனின் மேற்பரப்பில், ரேடியோ ஐசோடோப் ஆற்றலைப் பயன்படுத்தி பல்வேறு இடங்களை ஆராயும். 2034இல் பூமிக்கு வர திட்டமிடப்பட்டுள்ள இது, பூமியின் தொடக்ககால நிலைகளை ஒத்த வாழ்வு தொடங்கும் முன்னான வேதி செயல்முறைகளை அங்கு தேடும். சனியின் மிகப்பெரிய நிலவான டைட்டன், பூமிபோன்றே அடர்த்தியான வளிமண்டலத்தைக் கொண்டுள்ளது.

6. அண்மையில், கடற்படையின் அடுத்த தளபதியாக நியமிக்கப்பட்டவர் யார்?

அ. அட்மிரல் கரம்பீர் சிங்

ஆ. அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதி

இ. அட்மிரல் சுனில் லம்பா

ஈ. அட்மிரல் தினேஷ் திரிபாதி

  • கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றிவரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை 2024 ஏப்.30 முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள்ளது. தற்போதைய கடற்படைத் தளபதி அட்மிரல் R ஹரி குமார், 2024 ஏப்.30 அன்று சேவையிலிருந்து ஓய்வுபெறுவதையொட்டி, இந்நியமனம் செய்யப்பட்டுள்ளது.
  • 1964 மே.15-ல் பிறந்த வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதி 1985 ஜூலை.01 அன்று இந்திய கடற்படையின் நிர்வாகப் பிரிவில் நியமிக்கப்பட்டார். தகவல் தொடர்பு மற்றும் மின்னணு போர் நிபுணரான இவர், கிட்டத்தட்ட 39 ஆண்டுகளாக இதில் பணியாற்றியுள்ளார். கடற்படை ஊழியர்களின் துணைத் தளபதியாகப் பொறுப்பேற்பதற்கு முன்பு, அவர் மேற்குக் கடற்படை கட்டளையின் கொடி அதிகாரி கமாண்டிங் இன் சீப் ஆக பணியாற்றினார்.

7. அண்மையில், பிரம்மோஸ் சூப்பர்சோனிக் எறிகணைகளை கீழ்காணும் எந்த நாட்டிற்கு இந்தியா வழங்கியது?

அ. சுவீடன்

ஆ. பிலிப்பைன்ஸ்

இ. எகிப்து

ஈ. வியட்நாம்

  • 2022இல் கையெழுத்திடப்பட்ட $375 மில்லியன் மதிப்பிலான ஒப்பந்தத்தின்கீழ் இந்தியா பிலிப்பைன்சு நாட்டுக்கு பிரம்மோஸ் சூப்பர்சோனிக் எறிகணைகளை வழங்கியது. இந்தியாவின் DRDOஆல் உருவாக்கப்பட்ட பிரம்மோஸ் எறிகணை அமைப்பை வழங்குவதற்கான ஒப்பந்தம் 2022 ஜனவரியில் பிலிப்பைன்சுடன் போடப்பட்டது. இந்த ஆண்டு (2024) இந்தியாவின் ஆயுத விற்பனை மொத்தம் `21,000 கோடியைத் தாண்டியுள்ளது என இந்தியப் பிரதமர் தெரிவித்துள்ளார்.

8. Directionally Unrestricted Ray Gun Array (DURGA) அமைப்பு உருவாக்கிய அமைப்பு எது?

அ. DRDO

ஆ. HAL

இ. ISRO

ஈ. BHEL

  • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) அதன் Directionally Unrestricted Ray Gun Array (DURGA) அமைப்பை சோதனை செய்து வருகிறது. இந்த அமைப்பு லேசர்கள், நுண்ணலைகள் அல்லது துகள் கற்றைகளை பயன்படுத்தி இலக்குகளைச் சேதப்படுத்த அல்லது அழிக்க பயன்படுத்துகிறது; இது வழக்கமான ஆயுதங்களைவிட திறன் மிக்கதாக உள்ளது. இது ஒளியின் வேகத்தில் இயங்குகிறது; மேலும் புவியீர்ப்பு அல்லது வளிமண்டல ஈர்ப்பால் பாதிக்கப்படாது; மேலும் துல்லியமான மற்றும் தனிப்பயனாக்கக்கூடிய விளைவுகளைக் கொண்டுள்ளது.

9. அண்மையில், உலகளவில் மூன்றாவது மிகப்பெரிய வெள்ளி உற்பத்தியாளராக மாறியுள்ள நிறுவனம் எது?

அ. இந்துஸ்தான் ஜிங்க் லிட்

ஆ. சில்வர் ஜிங்க் கார்ப்பரேஷன்

இ. சன்ரைஸ் ஜிங்க் லிட்

ஈ. மேவாட் ஜிங்க் லிட்

  • வேதாந்தா குழுமத்தின் துணை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஜிங்க் லிட், தி சில்வர் நிறுவனத்தின் 2024 – உலக வெள்ளி ஆய்வின்படி, உலகின் மூன்றாவது மிகப்பெரிய வெள்ளி உற்பத்தியாளராக மாறியுள்ளது. இந்நிறுவனத்தின் இராஜஸ்தானில் உள்ள சிண்டேசர் குர்த் சுரங்கம் உலகின் இரண்டாவது மிகப்பெரிய வெள்ளி உற்பத்தி செய்யும் சுரங்கமாகும். 2023ஆம் ஆண்டில், ஹிந்துஸ்தான் ஜிங்க் 45.9 மில்லியன் ஔன்ஸ் வெள்ளியை உற்பத்தி செய்தது; இது முந்தைய ஆண்டைவிட 8% அதிகமாகும்.

10. உலக சுகாதார அமைப்பு (WHO) காற்றின்மூலம் பரவும் நோய்க்கிருமிகளை என்னவென்று அழைக்கிறது?

அ. நீரில் பரவும் நோய்க்கிருமிகள்

ஆ. தொற்று சுவாச துகள்கள்

இ. பன்றிக்காய்ச்சல்

ஈ. பார்கின்சன் நோய்க்குறி

  • COVID-19 தொற்றின்போது பொதுவான சொற்களைப் பயன்படுத்தி அழைப்பாதை தவிர்ப்பதற்காக, காற்றின்மூலம் பரவும் நோய்க்கிருமிகளை விவரிக்க உலக சுகாதார அமைப்பு, ‘தொற்று சுவாசத் துகள்கள்’ (Infectious Respiratory Particles) என்ற பதத்தை அறிமுகப்படுத்தியது. தொற்று சுவாசத் துகள்கள் சுவாசம், பேசுதல், இருமல் அல்லது தும்மல் மூலம் வெளியேற்றப்படும் துகள்களை உள்ளடக்கியது. அனைத்து விதமான அளவுகளில் உள்ள துகால்களையும் இது குறிக்கின்றது. காற்றுவழி பரிமாற்றம் (உள்ளிழுத்தல்) மற்றும் நேரடி படிவு (வெளியேற்றப்பட்ட துகள்களின் படிவு) என இரண்டு வகையாக இது பொருள் தருகிறது.

11. அண்மையில், ‘Vasuki Indicus’ என்ற மிகப்பெரிய பாம்பின் புதைபடிவம் எங்கு கண்டுபிடிக்கப்பட்டது?

அ. கேரளா

ஆ. குஜராத்

இ. மகாராஷ்டிரா

ஈ. மத்திய பிரதேசம்

  • குஜராத் மாநிலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு புதைபடிவ முதுகெலும்பி, 11-15 மீட்டர் நீளமும் 1 டன் எடையும்கொண்ட ‘Vaski Indicus’ என்ற மிகப்பெரிய பாம்பென உறுதிசெய்யப்படுறது. சதுப்பு நிலங்களில் பதுங்கியிருந்து தாக்கும் இது, உலகில் அதிக வெப்பநிலை நிலவியிருந்த காலத்தில் வாழ்ந்ததாகும். 43 அடி நீளமும் ஒரு டன் எடையும்கொண்ட கொலம்பியப் பாம்பு டைட்டனோபோவாவுடன் ஒப்பிடத்தக்கதாகும் இது.

12. அண்மையில் வெளியான, ‘India – the Road to Renaissance: A Vision and an Agenda’ என்ற நூலின் ஆசிரியர் யார்?

அ. அமிஷ் திரிபாதி

ஆ. பீமேஸ்வரா சல்லா

இ. பாவிக் சர்கெடி

ஈ. விக்ரம் சேத்

  • பீமேஸ்வரா சல்லாவின், ‘India – the Road to Renaissance: A Vision and an Agenda’ என்ற நூல் ஹைதராபாத்தில் நடந்த ஒரு நிகழ்வில் வெளியிடப்பட்டது. ஐநா முன்னாள் அதிகாரியான பீமேஸ்வரா சல்லா தனது இந்த நூலில், ஒரு இந்தியாவின் மறுமலர்ச்சிக்கான ஒரு தனித்துவமான முற்போக்கை அளித்துள்ளார். அவரது இந்த நூல், தேர்தல் அரசியலுக்கு அப்பாற்பட்ட அழுத்தமான பிரச்சினைகளை எதிர்கொள்ள வாசகர்களை ஊக்குவிக்கும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. தமிழ்நாட்டில் 69.72% வாக்குகள் பதிவு.

தமிழ்நாட்டில் 69.72 சதவீத வாக்குகள் பதிவானதாக அதிகாரபூர்வ இறுதி அறிவிப்பை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக தருமபுரி மக்களவைத் தொகுதியில் 81.20% வாக்குப்பதிவும், அதேசமயம் குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 53.96% வாக்குப்பதிவு நடைபெற்று உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் மொத்த வாக்குப்பதிவு சதவீதம் 72.29%ஆக இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!