TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil – 21st & 22nd October 2023

1. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘APAR’ கணக்குப் பதிவுடன் தொடர்புடையது எது?

அ. மூலதன சந்தை

ஆ. ஆட்டோமொபைல்

இ. கிரிப்டோகரன்சி

ஈ. கல்வி 🗹

  • ‘APAAR’ எனச் சுருக்கமாக அழைக்கப்படும் தானியங்கு நிரந்தரக் கல்விக் கணக்குப் பதிவேட்டைச் (Automated Permanent Academic Account Registry) செயல்படுத்தத் தொடங்குமாறு மத்திய கல்வி அமைச்சகம் அண்மையில் மாநிலங்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. ‘ஒரே நாடு, ஒரே மாணாக்கர் ID’ என்றும் அறியப்படும் தானியங்கு நிரந்தர கல்விக் கணக்குப் பதிவேடு (APAAR), கல்விச் சூழல் அமைப்புப் பதிவேடாகச் செயல்படுகிறது; இது ‘EduLocker’ என்றும் குறிப்பிடப்படுகிறது.

2. ‘High Cost of Cheap Water’ என்ற தலைப்பிலான அறிக்கையை வெளியிட்ட நிறுவனம் எது?

அ. WWF 🗹

ஆ. UNEP

இ. NITI ஆயோக்

ஈ. WAPCOS

  • அக்.16 அன்று வந்த உலக உணவு நாளையொட்டி, இயற்கைக்கான உலகளாவிய நிதியம் (WWF) “High Cost of Cheap Water” என்ற தலைப்பிலான் ஓர் அறிக்கையை வெளியிட்டது. அண்மையில் வெளியிடப்பட்ட இந்த அறிக்கை, வளர்ந்துவரும் உலகளாவிய நீர் நெருக்கடி $58 டிரில்லியன் மதிப்பிலான பொருளாதார மதிப்பு, உணவுப் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மைக்கு அச்சுறுத்தலாக உள்ளதாக மதிப்பிட்டுள்ளது.

3. அண்மையில் வெளியிடப்பட்ட, ‘அமிர்த காலப் பார்வை – 2047’ உடன் தொடர்புடைய துறை எது?

அ. நிலக்கரி தொழில்

ஆ. கடல்சார் தொழில் 🗹

இ. மின்னணுப் பொருட்கள் உற்பத்தி

ஈ. செயற்கை நுண்ணறிவு

  • பிரதமர் நரேந்திர மோடி, உலக கடல்சார் இந்தியா உச்சிமாநாடு-2023ஐ காணொலி வாயிலாக தொடக்கிவைக்கும் போது, ‘அமிர்த காலப் பார்வை-2047’ஐ அறிமுகப்படுத்தினார். இந்தியாவின் கடல்சார் நீலப் பொருளாதாரத்திற்கான இந்நீண்டகாலத்திட்டம், துறைமுக உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும், நிலைத்தன்மையை ஊக்குவிப்பதற்கும் மற்றும் வளர்ப்பதற்கும் உத்திசார் முன்னெடுப்புகளை எடுத்துக்கூறுகிறது.

4. 2023 – ஆயுர்வேத நாளுக்கானக் கருப்பொருள் என்ன?

அ. Ayurveda for One Health 🗹

ஆ. Integrated Medicine

இ. Vasudaiva Kutumbakam

ஈ. Ayurveda Amrit Kaal

  • ‘ஆயுர்வேத நாள்’ 2023 நவ.10 அன்று கொண்டாடப்படும் என்று மத்திய ஆயுஷ் அமைச்சகம் அறிவித்துள்ளது. இது பன்னாட்டளவில் அனுசரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு ஆண்டில் (2023) வரும் இந்த நாளுக்கானக் கருப்பொருள் “Ayurveda for One Health” என்பதாகும்.

5. 2023இல், ‘மேம்பட்ட போக்குவரத்து மேலாண்மை முறைமையை (ATMS)’ அறிமுகப்படுத்திய அமைப்பு எது?

அ. NHAI 🗹

ஆ. NASSCOM

இ. AAI

ஈ. இந்திய ரெயில்வே

  • இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையமானது அதன் மேம்பட்ட போக்குவரத்து மேலாண்மை அமைப்புக்கான (Advanced Traffic Management System – ATMS) புதிய தரநிலைகள் மற்றும் விவரக்குறிப்புகளை வெளியிட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் சமீபத்திய முன்னேற்றங்களை இதில் உள்ளிடும் பொருட்டோடு இந்த மேம்படுத்தல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த முன்முயற்சியின் முதன்மையான குறிக்கோள், சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துதல், சம்பவத்தின் பதிலளிப்பு நேரத்தைக் குறைத்தல் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவுச் சாலைகளில் டிஜிட்டல் அமலாக்கத்தை மேம்படுத்துதல் ஆகும்.

6. சர்வதேச வறுமை ஒழிப்பு நாள் அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ. அக்டோபர் 10

ஆ. அக்டோபர் 15

இ. அக்டோபர் 17 🗹

ஈ. அக்டோபர் 19

  • அபிவிருத்தி பொருளாதார ஆராய்ச்சிக்கான ஐக்கிய நாடுகளின் பல்கலைக்கழக உலக நிறுவனத்தின் (UNU-WIDER) அறிக்கையின்படி, வறுமை ஒழிப்பு என்பது முன்னர் மதிப்பிடப்பட்டதைவிட மெதுவான வேகத்தில் நிகழும் என்று கணிக்கப்பட்டுள்ளது. சர்வதேச வறுமை ஒழிப்பு நாள் அக்டோபர் 17 அன்று அனுசரிக்கப்படுகிறது. 2030ஆம் ஆண்டளவில் 600 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கடுமையான வறுமையை அனுபவிக்கக்கூடும் என்றும், தொற்றுநோய்க்கு முன் ஏற்பட்ட முன்னேற்றம் பலவீனமடையக்கூடும் என்றும், இதன் விளைவாக 665 மில்லியன் மக்கள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படுவார்கள் என்றும் அந்த ஆய்வறிக்கை எச்சரித்துள்ளது.

7. ‘அப்னா சந்திரயான்’ வலைத்தளத்தைத் தொடங்கிய மத்திய அமைச்சகம் எது?

அ. பாதுகாப்பு அமைச்சகம்

ஆ. கல்வி அமைச்சகம் 🗹

இ. வெளியுறவு அமைச்சகம்

ஈ. இளையோர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம்

  • மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான், ‘அப்னா சந்திரயான்’ வலைத்தளத்தை திறந்துவைத்தார். சந்திரயான்-3 திட்டத்தில் ஆர்வமுள்ள பள்ளி மாணாக்கருக்காக வடிவமைக்கப்பட்ட வினாடி-வினாக்கள், புதிர்கள் போன்ற செயல்பாடு சார்ந்த தகவல்களை இந்த வலைத்தளம் வழங்குகிறது.

8. WorldSkills திட்டத்திற்கு முன்னோடியாக திறன் மேம்பாட்டு அமைச்சகத்தால் தொடங்கப்பட்ட திட்டத்தின் பெயர் என்ன?

அ. இந்திய திறன்கள் 2023-24 🗹

ஆ. பாரத் உதயம் 2023-24

இ. திறன் மேம்பாடு 2023-24

ஈ. திறன் உயர்வு 2023-24

  • மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சர் தர்மேந்திர பிரதான், இந்திய திறன்கள் 2023-24 திட்டத்தை அதிகாரப்பூர்வமாக தொடக்கிவைத்தார்; அதோடு WorldSkills – 2022 வெற்றியாளர்களையும் அவர் அப்போது கௌரவித்தார். பங்கேற்பாளர்களின் எண்ணிக்கையை கடந்த ஆண்டு இருந்த 0.25 மில்லியனிலிருந்து 2.5 மில்லியனாக அதிகரிக்க அவர் கேட்டுக்கொண்டார். WorldSkills இன்டர்நேஷனலால் நடத்தப்படும் உலகின் மிகப்பெரிய இந்தத் திறன் போட்டி, ஈராண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது.

9. கதி பிகு விழா கொண்டாடப்படுகிற மாநிலம்/யூனியன் பிரதேசம் எது?

அ. அருணாச்சல பிரதேசம்

ஆ. அஸ்ஸாம் 🗹

இ. கேரளா

ஈ. கோவா

  • கதி பிகு என்பது அஸ்ஸாம் மாநிலத்தில் கொண்டாடப்படும் ஒரு திருவிழா. இது நெல் நாற்றுகளை இடம்மாற்றி நடவு செய்யும் ஒரு விழாவாகும். இது கொங்கலி பிகு என்றும் அழைக்கப்படுகிறது. அஸ்ஸாம் மாநிலத்தில் இது இல்லாமல் பிற இரு பிகு விழாக்களும் கொண்டாடப்படுகின்றன. போகலி அல்லது மாக் பிகு ஜனவரியிலும் ரோங்காலி அல்லது போகாக் பிகு ஏப்ரல் மாதத்திலும் கொண்டாடப்படுகிறது.

10. 13 கிகாவாட் (GW) புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்திற்கான பசுமை எரிசக்தி வழித்தடமானது கீழ்காணும் எந்த மாநிலம்/யூனியன் பிரதேசத்திற்கென ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது?

அ. தமிழ்நாடு

ஆ. லடாக் 🗹

இ. குஜராத்

ஈ. பாண்டிச்சேரி

  • லடாக்கில் 13 கிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்திற்கு, மாநிலங்களுக்கு இடையேயான பரிமாற்ற அமைப்பு – பசுமை எரிசக்தி வழித்தடம் கட்டம்-2க்கு பிரதமர் தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக்குழு ஒப்புதல் அளித்தது. 2029-30ஆம் நிதியாண்டிற்குள் இத்திட்டத்தை மத்திய அரசின் நிதியுதவி 40 சதவீதம் அதாவது `8,309.48 கோடி என்பதுடன், மொத்தம் `20,773.70 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

11. 2023இல் 53ஆவது தாதா சாகேப் பால்கே விருது பெற்ற இந்திய திரைக்கலைஞர் யார்?

அ. கமல்ஹாசன்

ஆ. மோகன் லால்

இ. வஹீதா ரஹ்மான் 🗹

ஈ. மனோரமா

  • இந்தியக்குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு 2021ஆம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகளை பல்வேறு பிரிவுகளின்கீழ் வழங்கினார். அப்போது மூத்த இந்தி திரையுலக நடிகை வஹீதா ரஹ்மானுக்கு 2023ஆம் ஆண்டு 53ஆவது தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது.

12. அண்மையில் நிணநீர் யானைக்கால் நோயை ஒழித்ததாக WHOஆல் அறிவிக்கப்பட்ட நாடு எது?

அ. இந்தியா

ஆ. நேபாளம்

இ. லாவோஸ் 🗹

ஈ. இந்தோனேசியா

  • உலக நலவாழ்வு அமைப்பின் (WHO) கூற்றுப்படி, லாவோஸ் மக்களாட்சிக்குடியரசு நிணநீர் யானைக்கால் நோயை வெற்றிகரமாக ஒழித்துள்ளது. இந்தச் சாதனையானது, 2017இல் பொது சுகாதாரச் சிக்கலாக இருந்த கண்ணிமை நோயை ஒழித்ததைத் தொடர்ந்து, வெறும் ஆறு ஆண்டுகளில் புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோயான நிணநீர் யானைக்கால் நோய்க்கு எதிரான அந்நாட்டின் இரண்டாவது வெற்றியைக் குறிக்கிறது.

13. நீரிழிவு நோயாளிகளுக்கு இலவசமாக இன்சுலின் சிகிச்சையளிக்கும், ‘மிட்டாயி’ என்ற திட்டத்தைத் தொடங்கிய மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. கேரளா 🗹

இ. தெலுங்கானா

ஈ. ஒடிசா

  • கேரள மாநில அரசு, கேரள சமூகப் பாதுகாப்பு இயக்கத்தின்மூலம், 2018இல் ‘மிட்டாயி’ திட்டத்தைத் தொடங்கியது. இத்திட்டம் வகை-1 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு இலவச இன்சுலின் சிகிச்சையும் தொடர்ச்சியான குளுக்கோஸ் அளவு சரிபார்ப்பு சாதனங்களை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள பதினெட்டு வயதுக்குட்பட்ட சுமார் 1200 குழந்தைகள், வகை-1 நீரிழிவு நோயாளிகளுக்கு உதவுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள மாநில அரசின் ‘மிட்டாயி’ திட்டத்திற்கு தகுதிபெறவில்லை. பெற்றோரின் ஆண்டு வருமானம் `2 இலட்சத்தை தாண்டியதால் அவர்கள் இதற்கு தகுதி பெறவில்லை.

14. ‘உலக உணவு இந்தியா-2023’ என்ற நிகழ்வை இந்தியாவுடன் இணைந்து நடத்தும் நாடு எது?

அ. இலங்கை

ஆ. பிரான்ஸ்

இ. நெதர்லாந்து 🗹

ஈ. ஆஸ்திரியா

  • நவ.03 முதல் 05 வரை பிரகதி மைதானத்தில் நடைபெறவுள்ள உலக உணவு இந்தியா-2023இன் இரண்டாவது பதிப்பை புது தில்லி நடத்துகிறது. இந்நிகழ்ச்சியை மத்திய உணவுப் பதப்படுத்தும் தொழிற்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது. உலக உணவு இந்தியாவின் இந்தப்பதிப்பில் நெதர்லாந்து கூட்டாளர் நாடாகவும், ஜப்பான் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகள் குவி நோக்க நாடுகளாகவும் (Focus Countries) இருக்கும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. ஆதித்யா-L1 விண்கலம் ஜனவரி முதல் செயல்படத் தொடங்கும்.

ஆதித்யா-L1 விண்கலம் ஜன. முதல் வாரத்தில் செயல்படத்தொடங்கும் என அதன் திட்ட இயக்குநர் நிகர் ஷாஜி தெரிவித்தார். ஆதித்யா-L1 விண்கலம் 12,00,000 கி.மீட்டரைத் தாண்டி வெற்றிகரமாகச் சென்று கொண்டிருக்கிறது. ஜனவரி முதல் வாரத்தில் இந்த விண்கலம் சூரியனின் சுற்றுவட்டப் பாதைக்குச் சென்று, வெற்றிகரமாக செயல்படத் தொடங்கும். சூரியனில் நிலவும் காற்று, இரும்புத்துகள்கள் வெளியேறல், வெப்பம் வெளியேற்றுதல் போன்றவற்றை ஆதித்யா-L1 விண்கலம் தொடர்ச்சியாக ஆராயும்.

2. இந்திய இராணுவம் மற்றும் இந்திய யுஎஸ்ஐ ஆகியவற்றின் கூட்டு முயற்சியான ‘உத்பவ்’ திட்டத்தை பாதுகாப்புத் துறை அமைச்சர் தொடக்கிவைத்தார்.

பண்டையகால இந்தியாவில் பல்வேறு அரசுகள் பின்பற்றிய பராம்பரிய இராணுவ கலைகள், போர்க்கலைகள், ராஜதந்திரங்கள், அரசியல் உத்திகள் உள்ளிட்டவற்றை மீண்டும் கண்டறிந்து தற்கால இராணுவ செயல்பாடுகளில் பயன்படுத்துவதற்கும், எதிர்காலத்தில் வருகின்ற சவால்களை சமாளிக்கும் நோக்கிலான ‘உத்பவ்’ திட்டத்தையும், முதலாவது ‘இந்திய இராணுவ பாரம்பரிய திருவிழாவையும்’ தில்லியில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் இராஜ்நாத் சிங் தொடக்கி வைத்தார். இந்திய இராணுவம், இந்திய ஐக்கிய சேவை நிறுவனத்துடன் இணைந்து இத்திட்டத்ததை தொடங்கியுள்ளது.

3. தேசிய காவலர் வீரவணக்க நாள்.

இந்திய எல்லையான லடாக்கில் கடந்த 1959ஆம் ஆண்டு அக்.21ஆம் தேதி இந்தியா-சீனா இடையே நிகழ்ந்த மோதலில் நாட்டின் எல்லையில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த காவலர்களில் 10 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை நினைவுகூரும் விதமாக ஆண்டுதோறும் அக்.21 தேசிய காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

4. அரபிக்கடலில் உருவானது ‘தேஜ்’ புயல்.

தென்மேற்கு அரபிக்கடலில் புயல் உருவானதாக இந்தியா வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்தப் புயல் சின்னத்திற்கு இந்தியா வழங்கிய ‘தேஜ்’ என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

5. ‘ஹாமூன்’ புயல் வங்கதேசம் அருகே கரையைக் கடந்தது!

மத்திய மேற்கு வங்கக்கடலில் உருவான தீவிர புயலான, ‘ஹாமூன்’ புயலாக வலுவிழந்து வங்கதேசம் அருகே கரையைக் கடந்தது. இந்தத் தீவிரப் புயலுக்கு ஈரான் ‘ஹாமூன்’ எனப் பெயரிட்டது. ‘ஹாமூன்’ என்பது பாரசீகச் சொல்லாகும்; இது உள்நாட்டு பாலைவன ஏரிகள் / சதுப்புநிலங்களைக் குறிக்கிறது. ஹெல்மண்ட் படுகையை ஒட்டிய பகுதிகளில் இயற்கையான பருவகால நீர்த்தேக்கங்களாக அவை உருவாகின்றன.

6. நாட்டின் முதல் ‘நமோ பாரத்’ இரயில் சேவை.

காஜியாபாத் – மீரட்டுக்கு இடையேயான நாட்டின் முதல் ‘நமோ பாரத்’ இரயில் சேவையை பிரதமர் மோடி உத்தர பிரதேசத்தில் கொடியசைத்து தொடக்கிவைத்தார். இந்த இரயில்களுக்கு முன்னர் ‘ரேபிட்எக்ஸ்’ எனப் பெயர் வழங்கப்பட்டு வந்தது.

IMPORTANT LINKS

TNPSC Current Affairs

https://www.winmeen.com/tnpsc-tamil-current-affairs/

Winmeen: Install the Winmeen App – Daily Free & Premium Tnpsc Study Materials & Online Test

https://play.google.com/store/apps/details?id=co.robin.jbzwb

Winmeen: Winmeen Tnpsc Test Series – Samacheer lesson Wise Test + Previous Year Model Test for Tnpsc Group 1,2, 4 & VAO

https://wp.me/p7JanY-ag8

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!