TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil – 27th February 2024

1. எந்த ஆற்றின் கரையில், ‘ஒற்றுமை சிலை’ அமைந்துள்ளது?

அ. நர்மதை ஆறு

ஆ. தபி ஆறு

இ. சபர்மதி ஆறு

ஈ. லூனி ஆறு

  • சர்தார் வல்லபாய் படேலுக்கென அர்ப்பணிக்கப்பட்ட 182 மீட்டர் உயர சிலையானது, குஜராத்தின் சாது பெட் தீவில், நர்மதா அணைக்கட்டில் அமைந்துள்ளது. ராம் வி சுதாரால் வடிவமைப்பு செய்யப்பட்டு லார்சன் & டூப்ரோவால் கட்டப்பட்ட இந்தச் சிலை, ‘இந்தியாவின் இரும்பு மனிதரை’க் கௌரவிக்கிறது. 20,000 ச மீட்டர் பரப்பளவில் 12 சதுர கிமீகள்கொண்ட செயற்கை ஏரியுடன்கூடிய இந்தத் திட்டத்திற்கு குஜராத் மாநில அரசு `3,050 கோடி நிதியளித்தது.

2. எந்த நிறுவனத்தில், இந்தியாவின் முதல், ‘கதி சக்தி ஆராய்ச்சி இருக்கை’ நிறுவப்பட்டுள்ளது?

அ. IIM அகமதாபாத்

ஆ. IIM ஷில்லாங்

இ. IIT கான்பூர்

ஈ. IIT பம்பாய்

  • துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் மற்றும் IIM ஷில்லாங் ஆகியவை இணைந்து இந்தியாவின் முதல், ‘கதி சக்தி ஆராய்ச்சி இருக்கையை’ நிறுவியுள்ளன. இந்தக் கூட்டு முயற்சியானது வடகிழக்குப் பிராந்தியத்தில் குறிப்பிட்ட கவனஞ்செலுத்தி, பல்வகை போக்குவரவுகளில் கல்வி ஆராய்ச்சியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. திறன்மேம்பாடு மற்றும் தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதன்மூலம் போக்குவரவு தொடர்பான துறைகளில் மாணவர்களை மேம்படுத்துவதை இந்த முயற்சி தனது நோக்கமாகக் கொண்டுள்ளது.

3. 2023 – உலகளாவிய சைபர் கிரைம் அறிக்கையில் இந்தியா அடைந்துள்ள தரநிலை என்ன?

அ. 79ஆவது

ஆ. 80ஆவது

இ. 85ஆவது

ஈ. 84ஆவது

  • 2023ஆம் ஆண்டு அறிக்கையின்படி, இணையவெளிக் குற்றங்கள் மேற்கொள்வதற்காக உலகளவில் அதிகம் குறி வைக்கப்பட்ட நாடுகளில் இந்தியா 80ஆவது இடத்தில் உள்ளது. 2023ஆம் ஆண்டில் 34% இந்திய பயனர்கள் அச்சுறுத்தல்களால் குறிவைக்கப்பட்டதாக இந்த அறிக்கை கூறுகிறது. மொத்தம் 74 மில்லியன் சம்பவங்கள் பதியப்பட் -டுள்ளன. 2023ஆம் ஆண்டில், இந்தியாவில் ஒரு இலட்சம் மக்களுக்கு 129 பேர் என்ற தேசிய இணையவெளிக் குற்றவிகிதம் உள்ளது.

4. இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே 11ஆவது இருதரப்பு தூதரக பேச்சுவார்த்தை நடைபெற்ற இடம் எது?

அ. புது தில்லி

ஆ. கலிபோர்னியா

இ. பெங்களூரு

ஈ. சென்னை

  • இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான 11ஆவது இருதரப்பு தூதரக பேச்சுவார்த்தை புதுதில்லியில் நடைபெற்றது. Dr KJ ஸ்ரீநிவாசா தலைமையிலான இந்தியக்குழு, அமெரிக்க தூதுவர் ரெனா பிட்டர் தலைமையிலான குழுவுக்கு வரவேற்பளித்தது. இந்தப்பேச்சுவார்த்தை தூதரக விவகாரங்களில் இருநாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

5. 2024 – உலக மொபைல் மாநாடு நடத்தப்பட்ட நாடு எது?

அ. இந்தியா

ஆ. ஸ்பெயின்

இ. இத்தாலி

ஈ. பிரான்ஸ்

  • உலக மொபைல் மாநாடானது ஆண்டுதோறும் மொபைல் துறையை வலையமாக்கல் மற்றும் ஒத்துழைப்புக்காக ஒன்றிணைக்கிறது. 2024ஆம் ஆண்டில், மொபைல் நெட்வொர்க் ஆபரேட்டர்களுக்கான உலகளாவிய சங்கமான GSMA, ஸ்பெயினில் உள்ள பார்சிலோனாவில் இந்த நிகழ்வை நடத்தும். தொழில் வல்லுநர்களை இணைக்கவும் கூட்டிணைக்கவும் இந்த ஒன்றுகூடல் ஒரு தளத்தை வழங்குகிறது. மொபைல் தொழில்நுட்பத்தில் அண்மைய நவீன முன்னேற்றங்களையும் இது காட்சிப்படுத்துகிறது.

6. இந்தியாவில் மத்திய கலால் நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?

அ. பிப்ரவரி 23

ஆ. பிப்ரவரி 24

இ. பிப்ரவரி 25

ஈ. பிப்ரவரி 26

  • 1944ஆம் ஆண்டு மத்திய கலால் மற்றும் உப்புச் சட்டம் இயற்றப்பட்டதை நினைவுகூரும் வகையில் பிப்.24ஆம் தேதி இந்தியாவில் மத்திய கலால் நாள் கொண்டாடப்படுகிறது. 1944இல் முதன்முதலில் கொண்டாடப்பட்ட இந்நாள், நாட்டிற்கு CBIC அளிக்கும் பங்களிப்பைப் போற்றுகிறது. தேசிய வளர்ச்சிக்கு இன்றியமையாத குடிமக்களுக்கான வரிக்கடமைகளை இந்த நாள் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. 2024ஆம் ஆண்டில், இந்தியாவின் வரிமுறையை நவீனமயமாக்குவதில் அரசாங்கம் கவனஞ்செலுத்தி வருகிறது.

7. பணியிட வன்முறை மற்றும் துன்புறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் ILO தீர்மானத்தை ஏற்றுக்கொண்ட முதல் ஆசிய நாடு எது?

அ. மியான்மர்

ஆ. பிலிப்பைன்ஸ்

இ. இந்தோனேசியா

ஈ. லாவோஸ்

  • பன்னாட்டு தொழிலாளர் அமைப்பின், ‘வன்முறை & துன்புறுத்தல் உடன்படிக்கை, 2019 (எண்.190)’ஐ ஏற்புறுதிசெய்த முதல் ஆசிய நாடாக பிலிப்பைன்ஸ் ஆனது. இக்குறிப்பிடத்தக்க நடவடிக்கை உலகளவில் பணியிட வன்முறைக்கு தீர்வு காண்கிறது. மேலும் பாதுகாப்பான & மரியாதைக்குரிய பணிச்சூழலை வளர்ப்பதில் நாட்டின் அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக்காட்டுகிறது. இந்த ஏற்புறுதியின்மூலம், பணியிட வன்முறை மற்றும் துன்புறுத்தலுக்கு எதிராக ஏற்புறுதிசெய்த 37 நாடுகளுடன் பிலிப்பைன்ஸ் இணைந்தது.

8. ‘Agasthyagama beddomii’ என்றால் என்ன?

அ. ஓநாய் சிலந்தி

ஆ. கங்காருப்பல்லி

இ. தவளை

ஈ. ஆக்கிரமிப்பு களை

  • இந்திய அறிவியலாளர்கள் குழு, கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில், வடகங்காருப் பல்லியான ‘Agasthyagama edge’ என்ற புதிய உயிரினத்தைக் கண்டுபிடித்துள்ளனர். ‘Agasthyagama’ பேரினத்தின் ஒருபகுதியான இது, முன்னர் ‘Agasthyagama beddomii’ என்ற இனத்திற்காக அறியப்பட்டது. பரிணாம ரீதியாக வேறுபட்ட இது, உலகளவில் அருகி வரும் இனமாகக் குறிக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் வசிக்கும் சிறிய உயிரினம் ஆகும். இருகால் அசைவுக்குப் பெயர்பெற்ற இது கங்காருவைப் போன்ற தனித்துவமான நடையைக் கொண்டுள்ளது.

9. எந்த ஆற்றின்மீது ஷாபூர் கண்டி அணைத் திட்டம் அமைந்துள்ளது?

அ. ராவி

ஆ. பியாஸ்

இ. தபி

ஈ. கிருஷ்ணா

  • பஞ்சாப்-ஜம்மு காஷ்மீர் எல்லையில் ஷாபூர் கண்டி தடுப்பணை கட்டிமுடிக்கப்பட்டதால், ராவி ஆற்றில் இருந்து பாகிஸ்தானுக்குத் தண்ணீர்செல்வது நிறுத்தப்பட்டுள்ளது. ரஞ்சித் சாகர் அணையிலிருந்து கீழ்நோக்கி அமைந்துள்ள ஷாபூர் கண்டி அணைத்திட்டம் பஞ்சாப் மற்றும் ஜம்மு மற்றும் காஷ்மீரில் மின்னுற்பத்தி மற்றும் நீர்ப்பாசனம் மேற்கொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பஞ்சாப் மாநில அரசின் நீர்ப்பாசனத் துறையால் கட்டப்பட்டுள்ள இதன் மொத்த மின்னுற்பத்தித்திறன் 206 மெகாவாட் (MW) ஆகும்.

10. மகா பூஜை விழாவுடன் தொடர்புடையது எது?

அ. வைஷ்ணவம்

ஆ. சமணம்

இ. பௌத்தம்

ஈ. சைவம்

  • தாய்லாந்தில் பௌத்தத்தைத் தழுவியோரால் கொண்டாடப்படும் புனிதமான, ‘மகா பூஜை’ விழா, மதிப்புமிக்க சோமதத் மற்றும் மூத்த துறவிகள் தலைமையில் தொடங்கியது. இந்த விழா கௌதம புத்தரின் போதனைகளைக் குறிக்கிறது. இது மூன்றாவது நிலாத்திங்களின் முழுநிலவு நாளில் கொண்டாடப்படுகிறது. ‘மகா’ என்பது மாதத்தைக் குறிக்கிறது; ‘பூச்சா’ என்றால் பாலி மொழியில் ‘வழிபாடு’ என்று பொருள். நல்ல செயல்களால் மனதைத் தூய்மைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது இந்நாள். கொண்டாட்டங்களில் துறவிகளுக்கு உணவு வழங்குதல் மற்றும் மெழுகுவர்த்தி ஏந்திய ஊர்வலங்கள் ஆகியவை அடங்கும். தாய்லாந்து, லாவோஸ் மற்றும் கம்போடியா போன்ற நாடுகளில் கடைப்பிடிக்கப்படும் தேரவாத பௌத்தத்தின் குறிப்பிடத்தக்க பௌத்த விழா இதுவாகும்.

11. எந்த நாட்டின், ‘KAAN’ என்ற முதல் ஐந்தாம் தலைமுறை விமானம் தனது முதல் பறப்புச் சோதனையை நிறைவு செய்தது?

அ. துருக்கி

ஆ. ஈரான்

இ. ஈராக்

ஈ. மலேசியா

  • துருக்கியின் முதல் ஐந்தாம் தலைமுறை விமானமான KAAN, அங்காராவிற்கு அருகிலுள்ள அகிஞ்சி வான்படைத் தளத்தில் தனது முதல் பறப்புச் சோதனையை நிறைவுசெய்தது. 13 நிமிட பறப்பில் 8,000 அடி உயரம் எட்டப்பட்டது. KAAN, TF & MMU என்றும் அறியப்படுகிற இது துருக்கிய ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் BAE சிஸ்டம்ஸால் உருவாக்கப்பட்ட இரட்டை எஞ்சினைக் கொண்டுள்ளது. அனைத்து வானிலைகளிலும் இந்தப் போர் விமானத்தால் இயங்க முடியும். இது துருக்கிய வான்படையின் F16 Fighting Falcon விமானத்திற்கு மாற்றாக வடிவமைக்கப்பட்டு பிற நாடுகளுக்கும் விற்கப்படும்.

12. ஓர் அண்மைய அறிக்கையின்படி, 2023 டிசம்பர் மாதத்தில் இந்தியாவின் கனிம உற்பத்தி எவ்வளவு சதவீதம் அதிகரித்தது?

அ. 5.1%

ஆ. 5.2%

இ. 5.3%

ஈ. 5.4%

  • இந்திய அரசாங்கத்தின் கூற்றுப்படி, 2022ஆம் ஆண்டு டிசம்பருடன் ஒப்பிடுகையில், 2023 டிசம்பரில் இந்தியாவின் கனிம உற்பத்தி 5.1% அதிகரித்துள்ளது. 2023 டிசம்பர் மாதத்தில் சுரங்கம் மற்றும் குவாரித் துறைக்கான கனிம உற்பத்தியின் குறியீடு 139.4 ஆகும்; இது 2022 டிசம்பர் மாதத்தை விட 5.1% அதிகமாகும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. 554 ரெயில் நிலையங்கள் நவீனமயம்:

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில், ‘அம்ரித் பாரத் ரெயில் நிலையங்கள்’ திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டில் 34 ரயில் நிலையங்கள் உள்பட 554 ரெயில் நிலையங்களை நவீனமயமாக்கும் திட்டத்துக்கு காணொலிமூலம் பிரதமர் நரேந்திர மோதி அடிக்கல் நாட்டினார்.

‘அம்ரித் பாரத் ரெயில் நிலையங்கள்’ திட்டத்தின்கீழ், ஒடிஸாவின் பாலசோர் ரெயில் நிலையமானது புரி ஜெகநாதர் ஆலயத்தின் கருப்பொருளில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சிக்கிம் இரங்க்பூர் ரெயில் நிலையம் உள்ளூர் கட்டடக் கலையைப் பிரதிபலிக்கும். ராஜஸ்தான் மாநிலத்தின் சங்க்னெர் ரெயில் நிலையம் 16ஆம் நூற்றாண்டின் கை அச்சு முறையைப் பிரதிபலிக்கும். தமிழ்நாட்டின் கும்பகோணம் ரெயில் நிலையம் சோழர்களின் ஆட்சியைப் பிரதிபலிக்கும்.

2. பாரத் டெக்ஸ் – 2024.

புது தில்லியில் பிப்.26 அன்று நாட்டின் மிகப்பெரிய உலகளாவிய ஜவுளி நிகழ்வுகளில் ஒன்றான பாரத் டெக்ஸ்-2024ஐ பிரதமர் நரேந்திர மோதி தொடங்கி வைத்தார். பாரத் டெக்ஸ் – 2024 கண்காட்சி பிப்.26 முதல் 29 வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரதமரின் 5F தொலைநோக்குப் பார்வையைக் குறிக்கும் வகையில் Fibre, Fabric, Fashion, Focus ஆகியவற்றின்மூலம் ஒட்டுமொத்த ஜவுளி மதிப்புச் சங்கிலியையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த கட்டமைப்பை உருவாக்குகிறது. இந்திய அரசால் தொடங்கப்பட்ட, ‘கஸ்தூரி பருத்தி’, உலகளவில் இந்தியாவின் வர்த்தக மதிப்பை உருவாக்குவதில் ஒரு பெரிய பங்கை வகிக்கின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!