TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil – 28th March 2024

1. 2024 – உலக காசநோய் நாளுக்கானக் கருப்பொருள் என்ன?

அ. Invest to End TB. Save lives

. Yes! We Can End TB!

இ. The clock is Ticking

ஈ. Wanted: Leaders for a TB-free World

  • உலக காசநோய் நாளானது ஆண்டுதோறும் மார்ச்.24ஆம் தேதியன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இது தொற்றக்கூடிய நுரையீரல் நோயான காசநோய்பற்றி உலகளவில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 2024ஆம் ஆண்டில் வரும் இந்த நாளுக்கானக் கருப்பொருள், “Yes! We Can End TB! – ஆம்! காசநோயை நாம் முடிவுக்குக் கொண்டுவரலாம்” என்பதாகும். விழிப்புணர்வு மற்றும் நீடித்த நடவடிக்கைமூலம் இக்கொடிய நோயை முற்றாக ஒழிப்பதற்கான முயற்சிகளை இந்தக் கருப்பொருள் வலியுறுத்துகிறது.
  • 1882இல் இதே நாளில் Dr இராபர்ட் கோச் காசநோயை உண்டுபண்ணும் பாக்டீரியாவைக் கண்டுபிடித்ததை நினைவுகூரும் விதமாக இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. கடந்த 1983ஆம் ஆண்டு முதல், காசநோயை எதிர்த்துப் போராடுவதற்காக உலக காசநோய் நாள் உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

2. 2024 – பாரிஸ் ஒலிம்பிக்கின் தொடக்க விழாவில் இந்திய மூவர்ணக் கொடியை ஏந்தவுள்ளவர் யார்?

அ. G சத்தியன்

ஆ. சரத் கமல்

இ. அங்கிதா தாஸ்

ஈ. சௌம்யஜித் கோஷ்

  • காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் டேபிள் டென்னிஸில் இரண்டு முறை தங்கப்பதக்கம் வென்ற சரத் கமல், 2024 – பாரிஸ் கோடைகால ஒலிம்பிக்கின் தொடக்க விழாவில் இந்தியா மூவர்ணக் கொடியை ஏந்தி இந்தியக் குழுவை வழிநடத்துவார் என இந்திய ஒலிம்பிக் குழுமம் அறிவித்துள்ளது. 32வது கோடைகால ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை.26 முதல் ஆக.11 வரை பாரிஸில் நடைபெறவுள்ளன. 2012 லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற மேரி கோம், அணித்தலைவராகவும், சிவ கேசவன் அணியின் துணைத்தலைவராகவும் பணியாற்றுவார்கள்.

3. அண்மையில், பசிபிக் பெருங்கடலில் உள்ள அணுக முடியாத பெருங்கடல் துருவமான நீமோ புள்ளியை அடைந்த முதல் நபர் யார்?

அ. கிறிஸ் பிரவுன்

ஆ. ஹ்ர்வோஜே லுகாடேலா

இ. ஜூல்ஸ் வெர்ன்

ஈ. வில்ஜல்மூர் ஸ்டீபன்சன்

  • பிரித்தானியாவைச் சேர்ந்த கிறிஸ் பிரவுன், பசிபிக் பெருங்கடலில் உள்ள அணுக முடியாத பெருங்கடல் துருவமான நீமோ புள்ளியை அடைந்த முதல் நபர் என்ற வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ளார். நிலத்திலிருந்து வெகு தொலைவில் அமைந்துள்ள நீமோ புள்ளி 48°52.6′ தென் அட்சரேகை மற்றும் 123°23.6′ மேற்குத் தீர்க்கரேகையில் ஆயத்தொலைவுகளில் அமைந்திருக்கிறது. கிறிஸ் பிரவுன் தனது சாதனையை இன்ஸ்டாகிராம் வழியாக 2024 மார்ச்.20 அன்று அறிவித்தார். அருகிலுள்ள நிலப்பகுதிகளான டூஸி தீவு, மோடூ நூயி தீவு மற்றும் மாஹேர் தீவு ஆகியவை ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளன.

4. இந்தியா அணுசக்திக் கழகமானது சமீபத்தில் அணுசக்தியின் அமைதியான பயன்பாட்டை மேம்படுத்துவதற்காக கீழ்காணும் எதனுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது?

அ. ரெயில்வே பாதுகாப்புப் படை (RPF)

ஆ. தேசிய மாணவர் படை (NCC)

இ. மத்திய தொழிற்துறை பாதுகாப்புப் படை (CISF)

ஈ. அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றம் (CSIR)

  • தேசிய மாணவர் படை, இந்திய அணுசக்திக் கழகம் இடையே 2024 மார்ச்.21 அன்று புது தில்லியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. பல்வேறு திட்டங்கள் மூலம் அணுசக்தியை அமைதியான முறையில் பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேசிய மாணவர் படையின் (NCC) தலைமை இயக்குநர் லெப்டினன்ட் ஜெனரல் குர்பீர்பால் சிங், இந்திய அணுசக்திக் கழக நிர்வாக இயக்குநர் BVS சேகர் ஆகியோர் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
  • இந்திய அணுசக்திக் கழகம் தொடர்புடைய நபர்களை தேசிய மாணவர் படையுடன் முகாம்களின் போது ஈடுபடுத்தி தேசிய மாணவர் படையினருக்கு அணுசக்தி குறித்த பல்வேறு செயல்பாடுகளை அளிக்கும். இந்த ஒப்பந்தம், நாடு முழுவதுமுள்ள இந்திய அணுசக்திக் கழகத்தின் பல்வேறு வசதிகளை தேசிய மாணவர் படையினர் பார்வையிடத் தனித்துவமான வாய்ப்பை ஏற்படுத்தித்தருவதுடன், அணுசக்தியை அமைதியான முறையில் பயன்படுத்துதல் முறை மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் குறித்த நேரடி அனுபவத்தை அளிக்கும்.

5. 2024 – உலக வானிலை நாளுக்கானக் கருப்பொருள் என்ன?

அ. At the frontline of climate action

ஆ. Early Warning and Early Action

இ The Ocean, Our Climate and Weather

ஈ. Climate and Water

  • சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் பூமியில் மனிதகுலத்தின் பெருந்தாக்கத்தை எடுத்துக்காட்டும் விதமாக உலக வானிலை நாளானது ஆண்டுதோறும் மார்ச்.23 அன்று கொண்டாடப்படுகிறது. இது உலக வானிலை அமைப்பு (WMO) நிறுவப்பட்டதையும் குறிக்கிறது. வானிலை மற்றும் அதன் தற்போதைய மாற்றங்கள்பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த நாளின் நோக்கம். “At the frontline of climate action” என்பது நடப்பு 2024இல் வரும் இந்த நாளுக்கானக் கருப்பொருளாகும். உலகளவில் தட்பவெப்பநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் வானிலை ஆய்வின் முக்கிய பங்கை இந்தக் கருப்பொருள் வலியுறுத்துகிறது.

6. அண்மையில், 2024 – மின்சார வாகன ஊக்குவிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்திய அமைச்சகம் எது?

அ. வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம்

ஆ. பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம்

இ. மின்துறை அமைச்சகம்

ஈ. கனரக தொழிற்துறை அமைச்சகம்

  • FAME-II ஆனது 2024 மார்ச்.31இல் முடிவடைந்ததைத் தொடர்ந்து கனரக தொழிற்துறை அமைச்சகம் (MHI) மின்சார வாகன ஊக்குவிப்புத் திட்டம் (EMPS), 2024ஐத் தொடங்கியது. பசுமைப் போக்குவரத்து மற்றும் மின்சாரத்தில் இயங்கும் 2 மற்றும் 3 சக்கர வாகனங்களின் வாங்கலை விரைவுபடுத்துவதை EMPS நோக்கமாகக் கொண்டுள்ளது. 2024 ஏப்.01 முதல் ஜூலை.31 வரையிலான நான்குமாத கால அவகாசத்துடன், EMPS மானியங்களை வழங்குகிறது.

7. அண்மையில், முதல் ‘உலகளாவிய சமத்துவமின்மை ஆராய்ச்சி விருதுகள் – 2024’ஐ வென்றவர் யார்?

அ. அபர்ணா மெஹ்ரோத்ரா மற்றும் மசூத் கரிமிபூர்

ஆ. சில்வி பெர்ட்ராண்ட் மற்றும் கரின் எஸ்போசிட்டோ

இ. பினா அகர்வால் மற்றும் ஜேம்ஸ் பாய்ஸ்

ஈ. மைக்கேல் மார்ட்டின் மற்றும் கு டோங்யு

  • முதல் ‘உலகளாவிய சமத்துவமின்மை ஆராய்ச்சி விருதுகளை’ வென்றவர்களான பீனா அகர்வால் மற்றும் ஜேம்ஸ் பாய்ஸ் ஆகியோர் உலகளாவிய சமத்துவமின்மைகள், குறிப்பாக சமூக மற்றும் சுற்றுச்சூழல் களங்களில் ஆழமான அவர்களின் நுண்ணறிவுக்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். 2024 – இலையுதிர் மற்றும் வசந்த காலத்தில் பாரிஸில் நடக்கும் நிகழ்வில் அவர்கள் கௌரவிக்கப்படுவார்கள்.

8. 2024 – உலகளாவிய மின்னணுக் கழிவு கண்காணிப்பு அறிக்கையை வெளியிடும் அமைப்பு எது?

அ. UNEP

ஆ. UNDP

இ. UNITAR

ஈ. உலக வங்கி

  • ஐநா பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (UNITAR) மற்றும் சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம் (ITU) ஆகியவை இணைந்து 2024 மார்ச்சில், ‘Global e-waste Monitor-2024’ என்ற அறிக்கையை வெளியிட்டன. மறுசுழற்சி செய்யப்படும் மின்னணுக்கழிவுகளின் அளவைவிட அதன் உற்பத்தி அளவு 5 மடங்கு வேகமாக வளர்ந்து வருவதாக இந்த அறிக்கை கூறுகிறது. உலகளவில் ஆண்டுதோறும் 62 மில்லியன் டன் மின்னணுக்கழிவுகள் உருவாகின்றன என்றும், இது 2010இலிருந்து 82% அதிகரித்துள்ளது என்றும் இவ்வறிக்கை கூறுகிறது.

9. அண்மையில், சிறைப்பிடிக்கப்பட்ட யானை (இடமாற்றம் செய்தல்) விதிகள், 2024ஐ அறிவித்துள்ள அமைச்சகம் எது?

அ. சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம்

ஆ. சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம்

இ. வேளாண் அமைச்சகம்

ஈ. பாதுகாப்பு அமைச்சகம்

  • சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகமானது வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம், 1972இன்கீழ், சிறைப்பிடிக்கப்பட்ட யானை (இடமாற்றஞ்செய்தல்) விதிகள், 2024ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த விதிகளின்படி, யானைகளை இடமாற்றம் செய்ய விரும்புவோர், துணை வனப்பாதுகாவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும். அவர் விண்ணப்பத்தைச் சரிபார்த்து, கோரிக்கையை தலைமை வனவிலங்குக் காப்பாளருக்கு அனுப்புகிறார். அவர் ஏழு நாட்களுக்குள் இடமாற்றத்திற்குரிய நிலைகளை அங்கீகரித்து விண்ணப்பத்தை இறுதி செய்வார்.

10. கோக்ரஜார்-கெலேபு ரெயில் வழித்தடமானது பின்வரும் எந்த நாட்டை இந்தியாவுடன் இணைக்கிறது?

அ. நேபாளம்

ஆ. பூடான்

இ. மியான்மர்

ஈ. வங்காளதேசம்

  • இந்தியாவும் பூடானும் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் எரிசக்தி, வணிகம், எண்ம இணைப்பு, விண்வெளி மற்றும் வேளாண்மையை உள்ளடக்கிய ஒப்பந்தங்கள்மூலம் இருதரப்பு உறவுகளையும் வலுப்படுத்தி உள்ளன. குறிப்பாக, கோக்ரஜார்-கெலேபு மற்றும் பனார்கட்-சம்சே வழித்தடங்கள் உட்பட ரெயில் இணைப்புகளை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தையும் இறுதிசெய்துள்ளன. கூடுதலாக, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையம் பூடான் உணவு மற்றும் மருந்துப்பொருட்கள் ஆணையத்தின் கட்டுப்பாட்டை அங்கீகரிக்கும்; அது இருநாடுகளுக்கும் இடையிலான வணிகம் மற்றும் இணக்கச்செலவுகளை எளிதாக்கும்.

11. அண்மையில் செயற்கை நுண்ணறிவு (AI) மீதான முதல் உலகளாவிய தீர்மானத்தை ஏற்றுக்கொண்ட அமைப்பு எது?

அ. ஐக்கிய நாடுகள் பொதுச் சபை

ஆ. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை

இ. ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டம்

ஈ. உலக சுகாதார அமைப்பு

  • ஐநா பொதுச்சபையானது நீடித்த வளர்ச்சி இலக்குகளுடன் (SDG’s) ஒத்திசைந்த பாதுகாப்பான மற்றும் நம்பகமான செயற்கை நுண்ணறிவு (AI) அமைப்புகளை ஆதரிக்கும் தீர்மானத்தை ஏற்றுக்கொண்டுள்ளது. இது AI வளர்ச்சியில் மனித உரிமைகளை ஈடுபடுத்துவதை வலியுறுத்துகிறது. AIஐ ஒழுங்குபடுத்துவதில் முதல் தீர்மானமான இது, மனித உரிமைகளை மீறும் AI அமைப்புகளுக்கு எதிராக உள்ளது. அமெரிக்காவின் தலைமையில் கொண்டுவரப்பட்ட இந்தத் தீர்மானம், 120 உறுப்புநாடுகளின் ஆதரவுடன் நிறைவேறியது.

12. அண்மையில், இந்திய தேர்தல் ஆணையம் 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 40% இயலாமை உள்ள மாற்றுத்திறனாளிகள் எளிதாக வாக்களிக்கும் வகையில் எந்தச் செயலியை அறிமுகப்படுத்தியது?

அ. மதத் செயலி

ஆ. சங்கல்ப் செயலி

இ. சக்ஷம் செயலி

ஈ. கவாச் செயலி

  • 85 வயதுக்கு மேற்பட்டோரும் 40% இயலாமை உள்ள மாற்றுத்திறனாளிகளும் வீட்டிலிருந்தே வாக்களிக்க உதவும் வகையில், ‘சக்ஷம்’ என்ற செயலியை இந்திய தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்காக வாக்குச் சாவடிகள் தன்னார்வலர்கள், சக்கர நாற்காலிகள் மற்றும் போக்குவரத்து வசதி போன்றவற்றை வழங்கும். இந்தச் செயலி ஆனது மாற்றுத்திறனாளிகள் தங்களின் வாக்குகளைச் செலுத்த உதவுகிறது.
  • பள்ளிகளில் நிரந்தர உறுதியளிக்கப்பட்ட குறைந்தபட்ச வசதிகள் (Permanent Assured Minimum Facilities) தேர்தல் செயல்முறைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. 105 கோடி மெட்ரிக் டன் உணவை வீணடித்த உலகம்!

உணவு வீணடிக்கப்படுவது குறித்து ஐநா சுற்றுச்சூழல் திட்டப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2022ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் உற்பத்தி செய்யப்பட்ட சுமார் 105 கோடி மெட்ரிக் டன் உணவு யாருக்கும் பயனின்றி வீணடிக்கப்பட்டுள்ளது. இது, அந்த ஆண்டின் மொத்த உணவு உற்பத்தியில் 19% ஆகும் என்று கூறப்பட்டுள்ளது.

வரும் 2030ஆம் ஆண்டுக்குள் உணவுப்பொருள்கள் வீணாவதை பாதிகாகக் குறைப்பதை இலக்காகக்கொண்டு இந்த அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. வீடுகள், உணவு தொடர்பான சேவை நிறுவனங்கள், சில்லறை விற்பனையாளர்கள் அளிக்கும் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. இந்த ஆய்வின்படி, ஒவ்வொரு நபரும் ஆண்டுதோறும் சுமார் 79 கிலோ உணவை வீணாக்குவது கண்டறியப்பட்டுள்ளது.

2. 100 நாள் வேலைத் திட்டம் ஊதியம் உயர்வு: தமிழ்நாட்டுக்கு `319!

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தின் (MGNREGA) ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு தற்போது நாளொன்றுக்கு `294 வழங்கப்பட்டு வரும் நிலையில், `319ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ஹரியானா மற்றும் சிக்கிம் மாநிலங்களுக்கு நாளொன்றுக்கு `374ஆக ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கோவாவுக்கு `356, நிக்கோபாருக்கு `347, அந்தமானுக்கு `329, புதுச்சேரிக்கு `319, இலட்சத்தீவுக்கு `315 ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!