TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil – 29th February 2024

1. ஆதித்யா L1 செயற்கைக்கோளின் எந்த ஆய்வுக்கருவி, சூரியக்காற்றில் ஒளிவட்ட நிறை வெளியேற்றங்களின் தாக்கத்தைக் கண்டறிந்தது?

அ. Visible Emission Line Coronagraph (VELC)

. Plasma Analyser Package for Aditya (PAPA)

இ. Solar Ultra-violet Imaging Telescope (SUIT)

ஈ. Aditya Solar wind Particle Experiment (ASPEX)

  • ஆதித்யா-L1 செயற்கைக்கோளில் உள்ள Plasma Analyser Package for Aditya (PAPA) என்ற ஆய்வுக்கருவி சூரியக் காற்றில் ஒளிவட்ட நிறை வெளியேற்றங்களின் தாக்கத்தைக் கண்டறிந்தது. PAPA ஆய்வுக்கருவி என்பது சூரியக் காற்றின் எதிர்மின்னிகள் மற்றும் அயனிகளை அளவிடும் ஆற்றல் மற்றும் நிறை பகுப்பாய்வி ஆகும். இதில், Solar Wind Electron Energy Probe (SWEEP) மற்றும் Solar Wind lon Composition Analyser (SWICAR) என்று இரண்டு உணரிகள் இடம்பெற்றுள்ளன.

2. இந்தியப் பிரதமர் அண்மையில் எந்த நகரத்தில், ‘நிசார்க் கிராம்’ என்ற தேசிய இயற்கை மருத்துவ நிறுவனத்தை (NIN) திறந்து வைத்தார்?

அ. புனே

ஆ. போபால்

இ. மதுரை

ஈ. தென்காசி

  • மகாராஷ்டிர மாநிலம் புனேவில், ‘நிசார்க் கிராம்’ என்ற தேசிய இயற்கை மருத்துவ நிறுவனத்தை (NIN) பிரதமர் நரேந்திர மோதி திறந்து வைத்தார். மகாத்மா காந்தியின் இயற்கை முறையிலான தீர்வின் அடிப்படையில் இந்த வளாகத்தில் மருத்துவமனை, பல்துறை ஆராய்ச்சி மையம், சேவை மையம் மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி ஆகியவை இடம்பெற்றுள்ளன. இந்நிறுவனம் இயற்கையான சிகிச்சை முறைகள் மற்றும் முழுமையான நலத்தை மேம்படுத்துவதில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.

3. அழிந்துவரும் முதலை இனமான இந்திய சொம்புமூக்கு முதலையானது அண்மையில் எந்தத் தேசியப்பூங்காவில் காணப்பட்டது?

அ. நம்தபா தேசியப்பூங்கா

ஆ. காசிரங்கா தேசியப்பூங்கா

இ. மானஸ் தேசியப்பூங்கா

ஈ. நோக்ரெக் தேசியப்பூங்கா

  • அண்மையில், காசிரங்கா தேசியப்பூங்காவில் அழிந்துவரும் முதலை இனமான கங்கைநீர் முதலை (அ) சொம்பு மூக்கு முதலை (Gavialis gangeticus) தென்பட்டது. 2022ஆம் ஆண்டில் திப்ரு-சைகோவா தேசியப்பூங்காவில் இந்த முதலை இனம் முதன்முதலில் தென்பட்டதாக பதிவு செய்யப்பட்டது. சொம்பு மூக்கு முதலை என்பது ஆற்றில் வாழும் உலகின் மிகப்பெரிய முதலை இனங்களில் ஒன்றாகும்; இது அழிவின் விளிம்பில் உள்ள ஓர் உயிரினமாகும். கிர்வா, சோன், ராமகங்கா, கந்தக், சம்பல் மற்றும் மகாநதி ஆகிய ஆறுகள் உட்பட கங்கைநதியமைப்பின் துணையாறுகளில் இந்த வகை சொம்பு மூக்கு முதலைகளைக் காணலாம்.

4. இந்திய சுற்றுலாப் பயணிகளின் பயண மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதற்காக ஐந்தாண்டு கால பல-நுழைவு விசாவை அறிமுகப்படுத்திய நகரம் / நாடு எது?

அ. ஓமன்

ஆ. துபாய்

இ. பாரிஸ்

ஈ. ஈராக்

  • துபாயின் பொருளாதாரம் மற்றும் சுற்றுலாத்துறையானது இந்தியாவிற்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் (UAE) இடையிலான போக்குவரத்தை அதிகரிக்கும் நோக்கோடு ஐந்தாண்டு பல-நுழைவு விசாவை அறிமுகப்படுத்துகிறது.
  • துபாய்க்குச் சுற்றுலா வருவோருள் பெரும்பாலானோர் இந்திய சுற்றுலாப்பயணிகள் என்பதாலும் அதிகரித்து வரும் இந்திய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்பவும் இந்த விசா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 2-5 நாட்களில் செயலாக்கப்படும் இவ்விசா, 90 நாட்கள் வரை தங்குவதற்கு பயணிகளை அனுமதிக்கிறது; மேலும் 90 நாட்களுக்கு வேண்டுமானால் நீட்டித்துக்கொள்ளலாம். ஆனால் ஓராண்டில் அதிகபட்சம் 180 நாட்கள் வரையே இதனை நீட்டிக்க முடியும். இந்த முன்னெடுப்பு இருநாடுகளுக்கும் இடையே சுற்றுலாவை மேம்படுத்துவதையும், ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

5. இந்தியக் குடியரசுத்தலைவரால் அண்மையில் தொடங்கப்பட்ட, ‘ஊதா திருவிழா’வின் நோக்கம் என்ன?

அ. பெண்கள் தொழில்முனைவை ஊக்குவிப்பதற்காக

ஆ. மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளிப்பதற்காக

இ. பண்டைய கலாச்சாரத்தை வெளிப்படுத்துவதற்காக

ஈ. லாவெண்டர் விழாவைக் கொண்டாடுவதற்காக

  • குடியரசுத்தலைவர் மாளிகையில் உள்ள அமிர்த தோட்டத்தில் பிப்.26 அன்று மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற, ‘ஊதா திருவிழா’ நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. மாற்றுத்திறனாளிகளின் உணவு திருவிழா, மாற்றுத்திறனாளிகளின் அனுபவங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுகள்போன்ற பல்வேறு நடவடிக்கைகள் இதன்சமயம் ஏற்பாடு செய்யப்பட்டன. இந்த விழாவில் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட, ‘ஊதா திருவிழா’, பல்வேறு குறைபாடுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளைப் புரிந்துகொண்டு அவர்களை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

6. ‘ஹோமோசெப் ஆட்டம் – Homosep Atom’ என்றால் என்ன?

அ. பண்டைய நீர்ப்பாசன நுட்பம்

ஆ. மலம் மக்கும் தொட்டியைச் சுத்தம் செய்யும் ரோபோ

இ. அணுவெறியும் நீர்மூழ்கிக்கப்பல்

ஈ. பண்டைய மருத்துவ நடைமுறை

  • IIT மெட்ராஸ் நிறுவனத்தின் ஆதரவில் உள்ள ஒரு புத்தொழில் நிறுவனமான சோலினாஸ், ‘ஹோமோசெப் ஆட்டம்’ என்ற இந்தியாவின் முதல் மலம் மக்கும் தொட்டியைச் சுத்தம் செய்யும் ரோபோவை உருவாக்கியுள்ளது. இது கைமுறையாக மலம் மக்கும் தொட்டியைச் சுத்தம் செய்யும் போக்கிற்குத் தீர்வுகாண்கிறது. Endobot மற்றும் Swasth AI போன்ற சோலினாஸ் நிறுவனத்தின் பிற தொழில்நுட்பங்கள் நீர் மாசுபாடு, அடைப்புகள் மற்றும் கழிவுநீர் வழிதல் ஆகியவற்றைக் கண்டறிந்து அவற்றுக்குத் தீர்வுகாணுகிறது.

7. 2024 – உலக NGO நாளுக்கானக் கருப்பொருள் என்ன?

அ. Building a Sustainable Future: The Role of NGOs in Achieving the SDGs

ஆ. Building a More Equitable World

இ. Empowering Communities for Sustainable Development

ஈ. Celebrating Community Heroes

  • ஆண்டுதோறும் பிப்.27 அன்று கொண்டாடப்படும் உலக NGO நாள், உலக அளவில் அரசு சாரா நிறுவனங்களின் (NGOs) முக்கிய பங்கை அங்கீகரிக்கிறது. இந்த நாள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் செயல்பாட்டை ஊக்குவிக்கிறது, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொது-தனியார் துறைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பிற்காக வாதிடுகிறது, மேலும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் தாக்கத்தை ஏற்படுத்தும் பணிகள் குறித்து தேவைப்படுபவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. 2024 – உலக NGO நாளுக்கானக் கருப் பொருள், “Building a Sustainable Future: The Role of NGOs in Achieving the SDGs” என்பதாகும்.

8. அண்மையில் இந்தியப் பிரதமரால் அடிக்கல் நாட்டப்பட்ட சிக்கிமின் முதல் ரெயில் நிலையத்தின் பெயர் என்ன?

அ. காங்டாக் ரெயில் நிலையம்

ஆ. ரங்போ ரெயில் நிலையம்

இ. நாம்ச்சி ரெயில் நிலையம்

ஈ. பெல்லிங் ரெயில் நிலையம்

  • இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி சிக்கிம் மாநிலத்தின் முதல் ரெயில் நிலையம் அமையவுள்ள ரங்போவில் அடிக்கல் நாட்டினார். இந்த நிலையத்தின் வடிவமைப்பு, சிக்கிமின் உள்ளூர் கலாச்சாரம் மற்றும் இமயமலை நிலப்பரப்பால் ஈர்க்கப்பட்டதாகவும், சிக்கிமின் வளமான மரபுகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும் உள்ளது. `41,000 கோடி மதிப்பிலான ரெயில் உட்கட்டமைப்புத் திட்டங்களுடன் இணைந்த இந்தத் திட்டம், நாடு முழுவதும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துதலை நோக்கமாகக் கொண்டுள்ளது.

9. பாகிஸ்தானின் மேற்குப் பஞ்சாப் மாநிலத்தின் முதல் பெண் முதலமைச்சராக ஆனவர் யார்?

அ. மரியம் நவாஸ்

ஆ. மஹிரா கான்

இ. பாத்திமா பூட்டோ

ஈ. முனிபா மசாரி

  • 2024 பிப்.26 அன்று பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் முதல் பெண் முதலமைச்சராக மரியம் நவாஸ் ஆனார். பஞ்சாப் ஆளுநர் மாளிகையில் பதவியேற்ற அவர், தனது தந்தை நவாஸ் ஷெரீப் மற்றும் மாமா ஷாபாஸ் ஷெரீப் முன்னிலையில் பதவியேற்றார். எந்தவொரு பாகிஸ்தானிய மாநிலத்திலும் இத்தகைய பதவியை வகிக்கும் முதல் பெண்மணி மரியம் ஆவார். பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் (PML-N) கட்சியின் மூத்த துணைத் தலைவராகவும் அவர் உள்ளார்.

10. ‘உத்கர்ஷ்’ திட்டத்துடன் தொடர்புடைய நோய் எது?

அ. டைபாய்டு

ஆ. காலரா

இ. இரத்த சோகை

ஈ. ஜப்பானிய மூளையழற்சி

  • ஆயுஷ் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பான, ‘உத்கர்ஷ்’ திட்டமானது, இரத்த சோகையை எதிர்த்துப் போராடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆரம்பத்தில் ஐந்து மாவட்டங்களில் தொடங்கப்பட்ட இது, தற்போது மாவட்டங்களை உயர்த்துவதில் கவனஞ்செலுத்தி வருகிறது. அஸ்ஸாம், சத்தீஸ்கர், ஜார்கண்ட், மகாராஷ்டிரா & இராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் உள்ள இளம்பெண்களில் (14-18 வயது) இரத்த சோகை நிலையை குறைப்பதை இந்தச் சோதனைக்கட்டம் இலக்காகக் கொண்டுள்ளது.

11. ‘INDRA RV25: 240N’ என்றால் என்ன?

அ. நுண் சுழல் தாரை இயந்திரம் (Micro TurboJet Engine)

ஆ. செயற்கைக்கோள்

இ. சிறுகோள்

ஈ. புறக்கோள்

  • ஐதராபாத்தைச் சேர்ந்த ரகு வம்சி மெஷின் டூல்ஸ் நிறுவனம் அதன் உள்நாட்டு மைக்ரோ டர்போஜெட் எஞ்சினான, ‘INDRA RV25: 240N’ஐ அறிமுகப்படுத்தியது. ஐஐடி ஹைதராபாத் ஆதரவுடன் உருவாக்கப்பட்ட இந்த மைக்ரோ டர்போஜெட் எஞ்சின் ஆளில்லா வான்வழி வாகனங்கள், வான்வழி வாடகையுந்துகள் மற்றும் மின்னுற்பத்திக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. முழுவதும் உள்நாட்டுத்தொழினுட்பத்தில் உருவாக்கப்பட்ட இந்த எஞ்சின், இந்தியாவின் விண்வெளித் திறன்களில் குறிப்பிடத்தக்க சாதனையைக் குறிக்கிறது.

12. நொய்டாவில் மேல் யமுனை ஆற்று வாரியத்தின் கட்டிடத்தை திறந்துள்ள அமைச்சகம் எது?

அ. உள்துறை அமைச்சகம்

ஆ. ஜல் சக்தி அமைச்சகம்

இ. வேளாண்மை அமைச்சகம்

ஈ. பாதுகாப்பு அமைச்சகம்

  • நொய்டாவில் மேல் யமுனை ஆற்று வாரிய கட்டிடத்தை மத்திய ஜல் சக்தி அமைச்சர் திறந்து வைத்தார். 1994ஆம் ஆண்டு இமாச்சல பிரதேசம், ஹரியானா, உத்தர பிரதேசம், இராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் மற்றும் தில்லியின் முதலமைச்சர்களிடையே போடப்பட்ட ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்மூலம் நிறுவப்பட்ட மேல் யமுனை ஆற்று வாரியம், யமுனையை அதன் தோற்றுவாயிலிருந்து தில்லியில் உள்ள ஓக்லா தடுப்பணை வரை கண்காணிக்கிறது. ஜல் சக்தி அமைச்சகத்தின் நீர்வளத்துறையின்கீழ் ஒரு துணை அலுவலகமாக உள்ள மேல் யமுனை ஆற்று வாரியம் குறிப்பிடப்பட்ட மாநிலங்களுக்கிடையே நீர்மேலாண்மை மற்றும் ஒத்துழைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. தூத்துக்குடியில் `17,300 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடக்கிவைத்தார் பிரதமர் நரேந்திர மோதி!

என்னென்ன திட்டங்கள்?

தூத்துக்குடி வ உ சிதம்பரனார் துறைமுகத்தில் சரக்குப்பெட்டக முனையத்துக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

வ உ சிதம்பரனார் துறைமுகத்தை நாட்டின் முதலாவது பசுமை ஹைட்ரஜன் துறைமுகமாக மாற்றும் வகையில் கட்டமைக்கப்பட இருக்கும் கடல்நீரைக் குடிநீராக்கும் ஆலை, ஹைட்ரஜன் உற்பத்தி மையம் போன்ற பல்வேறு உட்கட்டமைப்புத் திட்டங்களை தொடக்கி வைத்தார்.

முழுமையாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்தியாவின் முதல் பசுமை ஹைட்ரஜன் எரிபொருள் உள்நாட்டு நீர் வழிக்கப்பலின் செயல்பாட்டை பிரதமர் தொடக்கி வைத்தார். இந்தக் கப்பல் கொச்சி கப்பல் தளத்தில் தயாரிக்கப்பட்டது.

2. அரசு அதிகாரிகளுக்கான பயிற்சி நிறுவனங்களின் தரத்தை மதிப்பீடு செய்ய ‘ஐ கேர்’ நிறுவனம் தேர்வு.

கர்மயோகி திட்டத்தின்கீழ் மத்திய அரசுப் பணியாளர்களுக்கு பயிற்சியளித்து வரும் நிறுவனங்களின் தரத்தை மதிப்பீடு செய்ய சென்னையைச் சேர்ந்த, ‘ஐ கேர்’ என்ற நிறுவனம் மத்திய அரசால் தேர்வுசெய்யப்பட்டுள்ளது. ‘கர்மயோகி’ என்னும் திட்டம் மத்திய அரசால் கடந்த 2020ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை சார்பில், ‘தமிழ்நாடு காலநிலை உச்சிமாநாடு 2.0’ தொடக்க விழா கிண்டியில் நடைபெற்றது. காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள நடப்பாண்டு சுமார் 10 லட்சம் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளதாக அப்போது அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!