TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil – 2nd April 2024

1. அண்மையில், ‘கலாம்-250’ஐ ISROஇன் உந்துவிசைப் பரிசோதனை தளத்தில் வெற்றிகரமாகச் சோதனை செய்த விண்வெளி நிறுவனம் எது?

அ. பெல்லாட்ரிக்ஸ் ஏரோஸ்பேஸ்

ஆ. அக்னிகுல் காஸ்மோஸ்

இ. ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்

ஈ. காவா ஸ்பேஸ்

  • ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் என்ற விண்வெளிசார் நிறுவனம் அண்மையில் ISROஇன் சதீஷ் தவான் விண்வெளி மையத்தில், ‘கலாம்-250’ஐ வெற்றிகரமாக பரிசோதித்தது. விக்ரம்-1 விண்வெளி ஏவுகலத்தின் இந்த 2ஆம் நிலை கார்பன் கலவை இராக்கெட் மோட்டாரானது EPDM வெப்பப்பாதுகாப்பு மற்றும் துல்லியமான உந்துதல் திசையன் கட்டுப்பாடு ஆகியவற்றை தன்னகத்தே கொண்டுள்ளது. ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இது, ஏவுகலத்தை வளிமண்டலத்தில் இருந்து விண்வெளிக்குக் கொண்டு செல்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

2. ஐக்கிய நாடுகள் (UN) சபையின் பொதுச்செயலரால், பேரிடர் அபாயத்தைக் குறைப்பதற்கான சிறப்புப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள இந்தியர் யார்?

அ. நிகில் சேத்

ஆ. கமல் கிஷோர்

இ. ஷைலேஷ் தினகர்

ஈ. சத்யா S திரிபாதி

  • இந்திய நாட்டின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரியான கமல் கிஷோர், பேரிடர் அபாயத்தைக் குறைப்பதற்கான சிறப்புப் பிரதிநிதியாக ஐநா பொதுச்செயலர் அன்டோனியோ குட்டெரஸால் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு முன் மாமி மிசுடோரி அப்பதவியிலிருந்தார். கமல் கிஷோர், தற்போது இந்திய அரசாங்கத்தின் NDMAஇன் செயலாளராகப் பணியாற்றி வருகிறார். UNDRRஇல் பேரிடர் அபாயத்தைக் குறைப்பதற்கான உதவிச்செயலராகவும், பொதுச்செயலாளரின் சிறப்புப் பிரதிநிதியாகவும் நியமிக்கப்பட்டுள்ள கமல் கிஷோரின் பங்கு உலகளாவிய பேரிடர் தணிப்பு முயற்சிகளில் முக்கியமானது என்று ஐநா செய்தித்தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் அறிவித்துள்ளார்.

3. குட்டநாடு சதுப்புநில அமைப்பு அமைந்துள்ள மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. கேரளா

இ. கர்நாடகா

ஈ. மகாராஷ்டிரா

  • கடல் மட்டத்திற்குக்கீழே நெல் சாகுபடி செய்வதற்கு பெயர் பெற்ற குட்டநாடு, மாசுபாடு, உப்புத்தன்மை மற்றும் சீரற்ற வானிலை காரணமாக கடுமையான நீர்ப்பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளது. கேரளத்து மேற்குக்கடற்கரையில் உள்ள கழிமுகமான குட்டநாடு, தனித்துவமான குட்டநாடு விவசாய முறையை பின்பற்றி நெல் சாகுபடியை செய்து வருகிறது. இது காரபாடம், காயல் மற்றும் காரி வயல்களை உள்ளடக்கிய, ‘புன்செய் வயல்களில்’ கடல் மட்டத்திற்குக் கீழே நெல்சாகுபடியை மேற்கொள்கிறது. இந்தப்பகுதி ராம்சர் தளமான வேம்பநாடு ஈரநில சுற்றுச்சூழல் அமைப்பின் ஒருபகுதியாக உள்ளது.

4. தீவிர வெப்பம்குறித்த உலகளாவிய உச்சிமாநாட்டை நடத்திய அமைப்புகள் எவை?

அ. USAID மற்றும் செஞ்சிலுவை சங்கம்

ஆ. UNICEF மற்றும் UNDP

இ. UNEP மற்றும் WTO

ஈ. WHO மற்றும் ILO

  • பன்னாட்டு மேம்பாட்டுக்கான அமெரிக்க முகமை (USAID) மற்றும் செஞ்சிலுவை சங்கம் மற்றும் அதன் சங்கங்களின் சர்வதேச கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த தீவிர வெப்பம்குறித்த முதல் உச்சிமாநாடு, கடந்த 2023ஆம் ஆண்டில் நிலவிய அதிக வெப்பநிலையின் தாக்கங்களுக்குத் தீர்வுகாண்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. IFRC மற்றும் USAID தீவிர வெப்பத்துக்கு தீர்வு காண்பதற்கான மையம், ஃபயர் கிராண்ட் சேலஞ்ச் பரிசு, FEWS NET ஆகியவற்றின் முன்னெடுப்புகளும் இதில் அடங்கும்.

5. கோரமங்களா-சல்லகட்டா பள்ளத்தாக்கு திட்டத்துடன் தொடர்புடைய மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. கர்நாடகா

இ கேரளா

ஈ. கோவா

  • கழிவுநீரை மறுபயன்பாடு செய்வதற்கான கர்நாடகாவின் கோரமங்களா-சல்லகட்டா பள்ளத்தாக்கு திட்டத்தை நாடு முழுவதும் விரிவுபடுத்த நடுவண் அரசு இலக்குவைத்துள்ளது. இது பெங்களூரு-கிராமப்புறம், கோலாரு மற்றும் சிக்கபல்லாபுரா போன்ற வறண்ட மாவட்டங்களில் உள்ள ஏரிகளை நிரப்புகிறது.
  • நிலத்தடி நீரை மீளுருவாக்கம் செய்வதில் வெற்றிகண்ட இந்தத் திட்டத்தினை அடிப்படையாகக் கொண்டு, பல்வேறு மாநிலங்கள் முழுவதும் உள்ள ஏரிகளை புத்துயிர் பெறச்செய்ய அமைச்சகம் பரிசீலித்து வருகிறது. இது அடல் பூஜல் திட்டத்தின்கீழ் பகுதியளவான நிதியைப் பெறுகிறது. இந்தியா நாள்தோறும் 72,368 MLD கழிவுநீரை உற்பத்தி செய்கிறது. சுஜலம் 2.0 என்ற கழிவுநீர் மறுசுழற்சி திட்டமானது சமையல், குளியல் மற்றும் சலவைக் கழிவுநீர்களை மறுபயன்பாடு செய்வதற்காக அண்மையில் தொடங்கப்பட்டது.

6. கௌதா புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பூங்கா அமைந்துள்ள மாநிலம் எது?

அ. குஜராத்

ஆ. இராஜஸ்தான்

இ. ஒடிசா

ஈ. ஹரியானா

  • அதானி பசுமை ஆற்றல் நிறுவனம், குஜராத் மாநிலத்தின் ரான் ஆப் கட்ச்சில் உள்ள கௌதா புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பூங்காவில் 1,000 மெகாவாட் சூரிய ஆற்றல் உற்பத்தியைத் தொடக்கியுள்ளது. 726 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட இப்பூங்கா, காற்றாலைகள் மற்றும் சூரியவொளித்தகடுகளைக்கொண்ட உலகின் மிகப்பெரிய கலப்புமுறை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பூங்காவாகும். 2026 டிசம்பருக்குள் முழுமையாகச் செயல்பாட்டுக்கு வரும் இந்தப் பூங்கா, விண்வெளியில் இருந்து தெரியும்படி அமைக்கப்பட்டுள்ளது. இது 30 ஜிகாவாட் (GW) பசுமை ஆற்றலை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் ஆண்டுதோறும் 16.1 மில்லியன் வீடுகளுக்கு மின்சாரம் வழங்க முடியும்; 58 மில்லியன் டன்கள் CO2 உமிழ்வைத் தவிர்க்க முடியும்.

7. TATA மோட்டார்ஸ் மற்றும் HPCL ஆகியவை இணைந்து 2024ஆம் ஆண்டு இறுதிக்குள் எத்தனை EV மின்னேற்ற நிலையங்களை அமைக்க திட்டமிட்டுள்ளன?

அ. 5000

ஆ. 3000

இ. 8000

ஈ. 18000

  • TPEM மற்றும் HPCL ஆகியவை இணைந்து நாடு முழுவதும் EV மின்னேற்ற நிலையங்களை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் 2024 மார்ச்.27 அன்று கையொப்பமிட்டன. டிசம்பருக்குள் HPCL நிலையங்களில் 5000 மின்னேற்றிகளை நிறுவுவது இதன் இலக்காகும். இந்தியா முழுவதும் 21,500 நிலையங்களுடன், மின்னேற்ற பயன்பாட்டுத் தரவைச் சேகரிப்பதன்மூலம் வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்தவும் HPCL திட்டமிட்டுள்ளது. TPEM ஆனது மின்னேற்றிகளை நிறுவுவாதற்கான இடங்களைத் தேர்ந்தெடுக்கும்.

8. கியால்சங் திட்டத்துடன் தொடர்புடைய நாடு எது?

அ. நேபாளம்

ஆ. மியான்மர்

இ. பூடான்

ஈ. இலங்கை

  • கியால்சங் திட்டத்தின்கீழ் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக 2ஆவது தவணையாக `500 கோடியை பூடானுக்கு இந்தியா வழங்கியது. பிரதமர் நரேந்திர மோதியின் சமீபத்திய பூடான் பயணம், மார்ச்.23 அன்று நிறைவடைந்தது மற்றும் பூடானின் வளர்ச்சிக்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை அது வலியுறுத்தியது. பூடானுக்கு ஐந்தாண்டுகளில் `10,000 கோடி நிதி வழங்கப்படும் எனப் பிரதமர் நரேந்திர மோதி உறுதியளித்தார். இது அண்டை நாடுகளின் வளர்ச்சி, இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துதல் மற்றும் பிராந்திய ஒத்துழைப்பிற்கான இந்தியாவின் ஆதரவை மறு உறுதி செய்கிறது.

9. ‘MEGHAYAN-24’ என்ற METOC கருத்தரங்கின் கருப்பொருள் என்ன?

அ. At the Frontline of Climate Action

ஆ. The Future of Weather, Climate and Water across Generations

இ. Early Warning and Early Action

ஈ. The Ocean, Our Climate and Weather

  • வானிலை ஆய்வாளர்களின் முக்கிய பங்கை அங்கீகரிக்கும் வகையிலும் 1950ஆம் ஆண்டில் உலக வானிலை அமைப்பு நிறுவப்பட்டதை நினைவுகூரும் விதமாகவும் மார்ச்.23 அன்று உலக வானிலை நாள் கொண்டாடப்பட்டது. அண்மையில், ‘MEGHAYAN-24’ என்ற METOC கருத்தரங்கு, இந்தியக் கடற்படை வானிலை ஆய்வுமையத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது. இதன்சமயம் அட்மிரல் R ஹரி குமார், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதன் அவசரத்தை வலியுறுத்தினார். “At the Frontline of Climate Action” என்பது இந்தக் கருத்தரங்கிற்கானக் கருப்பொருளாகும்.

10. அண்மையில், யுன்ஹாய்-3 02 என்ற சுற்றுச்சூழல் கண்காணிப்பு செயற்கைக்கோளை ஏவிய நாடு எது?

அ. ரஷ்யா

ஆ. சீனா

இ. ஜப்பான்

ஈ. இந்தியா

  • ஷாங்சி மாகாணத்தில் உள்ள தையுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்திலிருந்து சுற்றுச்சூழல் கண்காணிப்பிற்காக யுன்ஹாய்-3 02 என்ற செயற்கைக்கோளை சீனா ஏவியது. இச்செயற்கைக்கோள், வளிமண்டலம் மற்றும் கடற்புறச் சூழல் கண்காணித்தல், விண்வெளிச் சூழல் கண்காணிப்பு, பேரிடர் தடுப்பு மற்றும் அறிவியல் மற்றும் ஆராய்ச்சி ஆகியவற்றில் கவனம் செலுத்தும்.

11. கம்பம் பள்ளத்தாக்கு அமைந்துள்ள மாவட்டம் எது?

அ. மதுரை

ஆ. தென்காசி

இ. தேனி

ஈ. நீலகிரி

  • “தென்னிந்தியாவின் திராட்சை நகரம்” என்றழைக்கப்படும் கம்பம் பள்ளத்தாக்கு, நாட்டின் 85% ‘பன்னீர் திராட்சை’ உற்பத்திக்குப் பெயர் பெற்றதாகும். 1832இல் ஒரு பிரெஞ்சு பாதிரியாரால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திராட்சைகள் பிற இடங்களைப் போலல்லாமல் ஆண்டு முழுவதும் செழித்து வளரும் தன்மையுடையன. அதன் விரைவான வளர்ச்சி மற்றும் முன்கூட்டிய பழுத்தலுக்காக அங்கீகரிக்கப்பட்ட இது, 2023இல் புவிசார் குறியீட்டைப்பெற்றது. கம்பம் பள்ளத்தாக்கில் விளையும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பன்னீர் திராட்சைகள் தேறல், மதுபானங்களின் உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகின்றன. தமிழ்நாட்டின் மேற்குத்தொடர்ச்சி மலையில் தேனி மாவட்டத்தில் இது அமைந்திருப்பது அதன் வசீகரத்தை மேலும் கூட்டுகிறது.

12. அண்மையில் எந்த இடத்தில், இந்திய வான்படையால், ‘ககன் சக்தி – 2024’ என்ற பயிற்சி நடத்தப்பட்டது?

அ. ஜெய்ப்பூர்

ஆ. பொக்ரான்

இ. ஜோத்பூர்

ஈ. அஜ்மீர்

  • இந்திய வான்படையானது அனைத்து விமானப்படை நிலையங்களையும் உள்ளடக்கிய நாட்டின் மிகப்பெரிய வான் இராணுவப்பயிற்சியான, ‘ககன் சக்தி-2024’ஐ அண்மையில் தொடங்கியது. 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் இது, 2024 ஏப்.01 அன்று பொக்ரான் தளத்தில் தொடங்கியது. ஏறக்குறைய 10,000 வான்படை வீரர்கள் பங்கேற்கும் இந்தப் பயிற்சியில், மேற்கு மற்றும் வடபுறங்களில் பயிற்சிகள் மேற்கொள்ளப்படும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. கர்ப்பிணிகள் நிதியுதவி திட்டம்: புதிய நடைமுறை அமல்.

டாக்டர் முத்துலட்சுமி அம்மையார் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டில் கர்ப்பிணிகளுக்கு நிதியுதவி வழங்குவதில் புதிய நடைமுறை ஏப்.1 முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, இதுவரை ஐந்து தவணைகளாக வழங்கப்பட்டு வந்த நிதியுதவி இனி மூன்று தவணைகளாக வழங்கப்படவுள்ளது.

தமிழ்நாடு அரசு சார்பில் Dr முத்துலட்சுமி அம்மையார் மகப்பேறு நிதியுதவி திட்டத்தின்கீழ், கர்ப்பிணிகள் கருத்தரித்த 12 வாரத்துக்குள் ஆரம்ப சுகாதார செவிலியர்களிடம் ஆதார் அட்டை, வங்கிக்கணக்கு எண் விவரங்களை தெரிவித்து, பெயரைப் பதிவுசெய்து, ‘பிக்மி’ எண் பெறவேண்டும்.

பிரதமர் மாத்ரு வந்தனா யோஜனா திட்டத்தின் நிதிப்பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தில் தற்போது சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி, இதற்கு முன்பு வரை ஐந்து தவணைகளாக வழங்கப்பட்டு வந்த `14,000 நிதியுதவி இனி மூன்று தவணைகளில் வழங்கப்படவுள்ளது. கர்ப்ப காலத்தின் நான்காவது மாதத்தில் `6 ஆயிரமும், குழந்தை பிறந்த நான்காவது மாதத்தில் `6 ஆயிரமும், குழந்தை பிறந்த 9ஆவது மாதத்தில் `2 ஆயிரமும் வழங்கப்படவுள்ளது. அதேபோன்று பேறுகாலத்தில் மூன்றாவது மற்றும் ஆறாவது மாதங்களில் இருமுறை ஊட்டச் சத்து பெட்டகங்கள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2. சூரியக்கூடார உலர்த்தி அமைக்க மானியம்: வழிமுறைகள் வெளியீடு.

உழவர்களுக்கு மானியத்துடன் சூரியக்கூடார உலர்த்திகள் அமைக்கும் வழிமுறையை தமிழ்நாடு வேளாண்துறை வெளியிட்டுள்ளது. உழவர்கள் சாலைகளில் பயிர்களை உலர்த்துவதை தடுக்கும் வகையிலும், பயிர்களின் தரத்தை உயர்த்தும் வகையிலும் சூரியக்கூடார உலர்த்தி அமைக்க வேளாண்துறை சார்பில் மானியம் வழங்கப்படுகிறது.

சூரியக்கூடார உலர்த்திகள் அமைக்க (400 முதல் 1000 அடி வரை) சிறு, குறு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு 60 சதவீதமும், பிற விவசாயிகளுக்கு 40 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!