TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil – 4th March 2024

1. டிஜிட்டல் பொருளாதார நிதியத்தில் (WEIDE) பெண் ஏற்றுமதியாளர்களை அறிமுகப்படுத்துவதற்காக அண்மையில் கூட்டிணைந்த நிறுவனங்கள் எவை?

அ. பன்னாட்டு செலாவணி நிதியம் (IMF) மற்றும் உலக வங்கி

. பன்னாட்டு வர்த்தக மையம் (ITC) மற்றும் உலக வர்த்தக அமைப்பு (WTO)

இ. பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு (ILO) மற்றும் உலக வங்கி

ஈ. உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் பன்னாட்டு செலாவணி நிதியம் (IMF)

  • பன்னாட்டு வர்த்தக மையம் மற்றும் உலக வர்த்தக அமைப்பு ஆகியவை இணைந்து $50 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான முதலீட்டில் பெண் ஏற்றுமதியாளர்களை டிஜிட்டல் பொருளாதார நிதியத்தில் (WEIDE) அறிமுகப்படுத்தியுள்ளன. இந்த நிதியமானது டிஜிட்டல் தொழில்நுட்பங்கள்மூலம் வளரும் நாடுகள் மற்றும் குறைந்த வளர்ச்சியடைந்த நாடுகளில் பெண்கள் தலைமையிலான வணிகங்கள் மற்றும் தொழில்முனைவுக்கு ஆதரவு வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

2. பஞ்சேஷ்வர் பல்நோக்கு திட்டம் என்பது எந்த இருநாடுகளுக்கு இடையேயான இருநாட்டு நீர்மின் திட்டமாகும்?

அ. இந்தியா மற்றும் பூட்டான்

ஆ. இந்தியா மற்றும் நேபாளம்

இ. இந்தியா மற்றும் வங்கதேசம்

ஈ. இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான்

  • அண்மைய இந்திய-நேபாள ஒப்பந்தம் இருந்தபோதிலும், பஞ்சேஷ்வர் பல்நோக்கு திட்டம் குறித்த விவாதங்கள் நடைபெறாமலேயே உள்ளன. 1996ஆம் ஆண்டு மாகாளி ஒப்பந்தத்தின்மூலம் நிறுவப்பட்ட பஞ்சேஷ்வர் பல்நோக்கு திட்டம் என்பது மாகாளி ஆற்றில் ஏற்படுத்தப்பட்ட இருநாட்டு நீர்மின்னுற்பத்தி திட்டமாகும். இருநாடுகளிலும் ஆற்றல் உற்பத்தி மற்றும் நீர்ப்பாசனத்தை மேம்படுத்தும் குறிக்கோளுடன் 315-மீட்டர் நீள அணை (இந்தியாவில் சாரதா) அவ்வாற்றின் குறுக்கே கட்டப்பட்டது. 6,480 மெகாவாட் உற்பத்தியை நோக்கமாகக் கொண்டுள்ள இந்தத் திட்டம், உற்பத்தி செய்யப்படும் மின்னாற்றலை சமமாகப் பகிர்ந்துகொள்ளும் நோக்கமுடையதாகும்.

3. எத்தனை ஆற்றுப்படுகைகளின் மேலாண்மைக்காக, பன்னிரண்டு தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களுடனான ஓர் ஒப்பந்தத்தில், மத்திய ஜல் சக்தி அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது?

அ. 5

ஆ. 6

இ. 7

ஈ. 8

  • தேசிய ஆறுகள் பாதுகாப்புத் திட்டத்தின் ஒருபகுதியாக நர்மதை, கோதாவரி, மகாநதி, கிருஷ்ணா, காவிரி மற்றும் பெரியாறு ஆகிய ஆறு ஆறுகளின் படுகை மேலாண்மைக்கான கல்வி மற்றும் ஆராய்ச்சி முயற்சிகளில் ஒத்துழைக்க ஜல் சக்தி அமைச்சகம் 12 தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்துள்ளது. அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், ‘நமாமி கங்கை’ இயக்கத்திற்கு UNESCO அங்கீகாரம் கிடைத்தது குறித்தது குறிப்பிட்டார்.

4. சமீபத்தில், ஐக்கிய இராச்சியத்தின் மன்னர் மூன்றாம் சார்லஸிடமிருந்து கௌரவ வீரத்திருமகன் பட்டம் பெற்ற இந்தியர் யார்?

அ. ராஜன் பார்தி மிட்டல்

ஆ. சுனில் பார்தி மிட்டல்

இ. சுஷில் குமார் சாயல்

ஈ. அகில் குப்தா

  • பார்தி நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவரான சுனில் பார்தி மிட்டலுக்கு ஐக்கிய இராச்சியத்தின் மன்னர் மூன்றாம் சார்லஸ், கௌரவ வீரத்திருமகன் விருதை வழங்கினார். பிரிட்டிஷ் இறையாண்மையால் குடிமக்களுக்கு வழங்கப்படும் மிகவுயர்ந்த கௌரவங்களுள் ஒன்றான இந்த விருது, ‘Knight Commander of the Most Excellent Order of the British Empire (KBE)’ என்ற தலைப்பில் வழங்கப்படுகிறது.

5. ‘விக்ரமாதித்யா’ என்ற பெயருடைய வேத கடிகாரம் அமைந்துள்ள நகரம் எது?

அ. உஜ்ஜயினி

ஆ. இந்தூர்

இ. பிகானேர்

ஈ. லக்னோ

  • உஜ்ஜயினியில் உள்ள ஜந்தர் மந்தரில், ‘விக்ரமாதித்யா’ என்ற பெயரில் நிறுவப்பட்ட வேத கடிகாரத்தை பிரதமர் மோதி திறந்து வைத்தார். உலகின் முதல் ‘வேதி கடிகாரமான’ இது பாரம்பரிய இந்திய பஞ்சாங்கத்தைப் பயன்படுத்தி நேரத்தைக் காட்டுகிறது. 85 அடி கோபுரத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ள இது கிரக நிலைகள், முகூர்த்தம், ஜோதிடக் கணக்கீடுகள், IST மற்றும் GMT ஆகியவற்றை காட்டுகிறது. லக்னோவைச் சேர்ந்த சன்ஸ்தா அரோஹனால் உருவாக்கப்பட்ட இது, திறன்பேசி செயலிமூலம் இணையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

6. 2024 – உலகளாவிய கழிவு மேலாண்மை கண்ணோட்டத்தை வெளியிடுகிற நிறுவனம் எது?

அ. UNEP

ஆ. UNDP

இ. UNESCO

ஈ. IMF

  • UNEP மற்றும் ISWA இணைந்து வெளியிட்ட உலகளாவிய கழிவு மேலாண்மை கண்ணோட்டம் – 2024, முக்கிய போக்குகளை எடுத்துக்காட்டுகிறது. 2050இல் நகராட்சி திடக்கழிவுகள் 2.3 முதல் 3.8 பில்லியன் டன்களாக உயரும் என்று கணிப்புகள் தெரிவிக்கின்றன. உலகளாவிய கழிவு மேலாண்மைக்கான நேரடி செலவு, 2020இல் $252 பில்லியன் டாலராக இருந்தது; இதுவே 2050இல் கிட்டத்தட்ட இருமடங்காக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

7. மதிப்புமிக்க, ‘சரியான உணவு வசதிகொண்ட ரெயில் நிலையம்’ என்ற சான்றிதழைப் பெற்றுள்ள ரெயில் நிலையங்கள் எண்ணிக்கை என்ன?

அ. 157

ஆ. 154

இ. 152

ஈ. 150

  • பயணிகளுக்கு ரெயில் நிலையங்களில் உள்ள உணவகங்களில் பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான உணவு கிடைப்பதை உறுதிசெய்ய, ‘சரியான உணவு வசதி கொண்ட ரெயில் நிலையங்கள்’ (ஈட் ரைட் ஸ்டேஷன்) என்ற முயற்சியை FSSAI முன்னெடுத்து வருகிறது. இதுவரை 150 ரெயில் நிலையங்கள் இத்தகைய சான்றிதழைப் பெற்றுள்ளன. சரியான உணவு வசதிக்கான சான்றிதழை வழங்குவதற்கு பல்வேறு கடுமையான நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. தமிழ்நாட்டிலிருந்து சென்னை புரட்சித்தலைவர் எம் ஜி இராமச்சந்திரன் மத்திய ரெயில் நிலையம் இந்தச் சான்றிதழைப் பெற்றுள்ளது.

8. ‘Melanochlamys Droupadi’ என்பது சார்ந்த இனம் எது?

அ. ஆக்டோபஸ்

ஆ. கடலட்டை

இ. நண்டு

ஈ. ஆமை

  • இந்திய விலங்கியல் ஆய்வுமையத்தின் ஆராய்ச்சியாளர்கள், ஒடிஸா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் கடற்கரையில், ‘Melanochlamys Droupadi’ என்ற புதிய கடலட்டை இனத்தை அடையாளம் கண்டுள்ளனர். 7 மிமீ வரை உள்ள இது பழுப்பு-கருப்பு நிறத்துடன் ஒரு தனித்துவமான சிவப்புப் புள்ளியுடன் காணப்படுகிறது. இது ஒரு முதுகெலும்பில்லா பிராணியாகும். ஈரமான கடற்கரை மணல்களில் வசிக்கும் இந்தக் கடலட்டைகள், ஒரு பாதுகாப்பு கோழை உறையை உருவாக்கி மணலுக்கடியில் நகரும்போது ஒரு பாதையை ஏற்படுத்திச் செல்கிறது.

9. அண்மையில், தேசிய பாதுகாப்புப் படையின் தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டவர் யார்?

அ. அனுப் குமார் சிங்

ஆ. சுதிர் பிரதாப் சிங்

இ. தல்ஜித் சிங் சவுத்ரி

ஈ. சுபாஷ் ஜோஷி

  • 1990ஆம் ஆண்டு இ கா ப அதிகாரியான தல்ஜித் சிங் சௌத்ரி, இந்தியாவின் பாதுகாப்பில் முக்கியப் பங்காற்றும் தேசிய பாதுகாப்புப் படையின் (NSG) தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது சஷாஸ்த்ரா சீமா பால் படையின் தலைமை இயக்குநராக இருந்து வரும் அவர், ‘கருப்புப்பூனைப்படை’ என்று அழைக்கப்படும் NSGஐ வழிநடத்தும் கூடுதல் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார்.

10. அண்மையில், வளர்ச்சிக்கான முதலீட்டு வசதி உடன்படிக்கையை முறையாக எதிர்த்த நாடுகள்?

அ. இந்தியா மற்றும் சிங்கப்பூர்

ஆ. இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா

இ. இந்தியா மற்றும் சீனா

ஈ. இந்தியா மற்றும் ரஷ்யா

  • பிப்.28 அன்று நடந்த உலக வர்த்தக அமைப்பின் 13ஆவது அமைச்சர்கள் அளவிலான மாநாட்டில், வளர்ச்சிக்கான முதலீட்டு வசதி உடன்படிக்கையை இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் எதிர்த்தன. பிப்.26-29 வரை அபுதாபியில் நடைபெற்ற இம்மாநாட்டில், முதலீடு மற்றும் வணிகச்சூழலை மேம்படுத்துவதற்கான இந்த உடன்படிக்கைக்கு 120 நாடுகளுக்கு மேல் ஆதரவு தெரிவித்தன. வளர்ச்சிக்கான முதலீட்டு வசதி என்பது பலதரப்பு வர்த்தக அமைப்பின் கட்டமைப்பிற்கு வெளியே உள்ள ஒரு வர்த்தகம் சாராத பிரச்சினை என்று இந்தியா வாதிட்டது.

11. உலக கடற்புல் நாள் கடைப்பிடிக்கப்படுகிற தேதி எது?

அ. 01 மார்ச்

ஆ. 02 மார்ச்

இ. 03 மார்ச்

ஈ. 04 மார்ச்

  • ஆண்டுதோறும் மார்ச்.01ஆம் தேதி கடைப்பிடிக்கப்படும் உலக கடற்புல் நாள், கடல்சார் சுற்றுச்சூழல் அமைப்புகளில் கடற்பாசியின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. “Healthy Seagrass, Healthy Planet – நலமான கடற்புல், நலமான கோள்” என்பது 2024ஆம் ஆண்டில் வரும் இந்நாளுக்கானக் கருப்பொருளாகும். கடல் சூழலில் உள்ள ஒரே பூக்கும் தாவரமான கடற்புல், உலகளவில் 60க்கும் மேற்பட்ட இனங்களை உள்ளடக்கியுள்ளது. பயனுள்ள கரிமத்தேக்கிகளாக செயல்படும் இது, முதன்மை ஊட்டச்சத்துகளுடன் கடல்சார் வாழ்வை ஆதரிக்கிறது.

12. 2024 – பாகுபாடுகள் ஒழிப்பு நாளுக்கானக் கருப்பொருள் என்ன?

அ. Remove laws that harm, create laws that empower

ஆ. Save lives: Decriminalise

இ. To protect everyone’s health, protect everyone’s rights

ஈ. Open Up, Reach Out

  • பாகுபாடுகள் ஒழிப்பு நாள் என்பது UNAIDS மற்றும் பிற சர்வதேச அமைப்புகளால் கொண்டாடப்படும் ஒரு சிறப்பு நாள் ஆகும். உலக நாடுகளில் சட்டத்திலும், நடைமுறையிலும் மனித சமுதாயத்தில் தொடர்கிற பாகுபாடுகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க அறைகூவல் விடுக்கும் நாளாக இது உள்ளது. இந்நாள் 2014 மார்ச்.01ஆம் தேதியன்று முதன்முதலில் கொண்டாடப்பட்டது. “To Protect Everyone’s Health, Protect Everyone’s Rights – அனைவரின் நலத்தையும் பாதுகாக்க, அனைவரின் உரிமைகளையும் பாதுகாக்க வேண்டும்” என்பது நடப்பு 2024ஆம் ஆண்டில் வரும் இந்த நாளுக்கானக் கருப்பொருளாகும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. வாக்குச்சீட்டு முதல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (EVM) வரை: இந்திய தேர்தல் ஆணையத்தின் பரிணாம வளர்ச்சி.

சுதந்திரத்துக்குப் பிறகு, 1951-52ஆம் ஆண்டு காலகட்டத்தில் நாட்டில் முதல் பொதுத்தேர்தல் நடத்தப்பட்டது.

தேர்தல் ஆணையத்தின் தோற்றம்: கடந்த 1950ஆம் ஆண்டு, ஜனவரி.25ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கப்பட்டது. மேற்கு வங்கத்தின் தலைமைச் செயலராகப் பணியாற்றி வந்த ICS அதிகாரியான சுகுமார் சென், இந்தியாவின் முதல் தலைமைத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.

இந்திய தேர்தல்களின் பரிணாம வளர்ச்சி: கடந்த 1951-52ஆம் ஆண்டில் 489 இடங்களுக்காக நடைபெற்ற முதல் பொதுத்தேர்தலில், இரும்பு வாக்குப்பெட்டிகள் பயன்படுத்தப்பட்டன. இந்தியாவில் கடந்த 1998ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில்தான் முதன்முதலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (EVM) பயன்படுத்தப்பட்டது.

தேர்தல் நடத்தை விதிகள் (1961) கடந்த 2013ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் திருத்தப்பட்டு அறிவிக்கப்பட்ட பின்னர், யாருக்கு வாக்களித்தோம் என்பதை காட்சிப்படுத்தும் ‘VVPAT’ இயந்திர முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற 2014 மக்களவைத் தேர்தல் முதல், யாருக்கும் வாக்களிக்க விரும்பாத வாக்காளர்கள் தேர்வு செய்ய ‘NOTANone of the Above’ என்ற வாக்குமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. தேர்தல் செயல்முறையை வெளிப்படையானதாகவும் அனைவரையும் உள்ளடக்கியதாகவும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டு, ‘cVIGIL’ போன்ற பல்வேறு கைப்பேசி செயலிகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

எண்ணும் எழுத்தும் திட்டத்தின்கீழ் தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான சிறப்புப்பயிற்சி மார்ச்.05) தொடங்குகிறது.

2. நீங்கள் நலமா? திட்டம்.

தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் திட்டங்களின் பயன்கள் உரியமுறையில் மக்களைச் சென்றடைகிறதா என்பதை உறுதிசெய்வதற்காக, ‘நீங்கள் நலமா?’ திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தின்கீழ் மாவட்ட ஆட்சியர்கள், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர், அனைத்து துறைச் செயலாளர்கள் மக்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு கருத்துகளைக் கேட்டறிவார்கள். மாண்புமிகு முதலமைச்சரும் நேரடியாக மக்களை தொடர்புகொண்டு பேசுவார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!