TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil – 5th & 6th November 2023

1. ‘உலக உணவு இந்தியா-2023’ என்ற நிகழ்ச்சியை நடத்தும் நகரம் எது?

அ. சென்னை

ஆ. புது தில்லி 🗹

இ. கோயம்புத்தூர்

ஈ. காந்தி நகர்

  • இந்தியப் பிரதமரானவர், ‘உலக உணவு இந்தியா-2023’ என்ற நிகழ்வைத் தேசிய தலைநகரமான புது தில்லியில் உள்ள பாரத் அரங்கில் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கிவைத்தார். இந்த நிகழ்வின்போது, பிரதமர் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான சுயஉதவி குழுக்களுக்கு ஆரம்பகட்ட மூலதன உதவியை வழங்கினார்; அதோடு “உணவு வீதியையும்” அவர் அப்போது திறந்து வைத்தார். இந்த நிகழ்வின் முதல் பதிப்பானது கடந்த 2017ஆம் ஆண்டில் நடைபெற்றது.

2. ‘2023 – ஏற்புத்திறன் இடைவெளி அறிக்கையை’ வெளியிட்ட நிறுவனம் எது?

அ. உலக வங்கி 🗹

ஆ. UNEP

இ. IMF

ஈ. WEF

  • ஐநா சுற்றுச்சூழல் திட்டத்தின், ‘2023-ஏற்புத்திறன் இடைவெளி அறிக்கையில்’ வெளிப்படுத்தப்பட்டுள்ளபடி, கடந்த 2021ஆம் ஆண்டில், உலக வங்கிபோன்ற பலதரப்பு நிறுவனங்கள் மற்றும் இருதரப்பு மூலங்களிலிருந்து (வளர்ச்சி அடைந்த நாடுகள் முதல் வளரும் நாடுகள் வரை) பெறப்படும் காலநிலை ஏற்புத்திறன் நிதி 15% குறைந்துள்ளது.
  • காலநிலை மாற்றம் தொடர்பான COP-26ஆவது மாநாட்டில் உறுதியளிக்கப்பட்டபோதிலும் இந்நிதி குறைந்துள்ளது. 2025ஆம் ஆண்டிற்குள் சுமார் $40 பில்லியன் டாலர்கள் ஆண்டுத்தொகையாகப் பெறுவதை இலக்காகக்கொண்டு, இந்த உறுதிமொழிகள் மொழியப்பட்டன.

3. ‘காலநிலை சேவைகளின் நிலை’ என்பது கீழ்க்காணும் எந்த நிறுவனத்தால் வெளியிடப்படும் ஓர் ஆண்டு அறிக்கையாகும்?

அ. FAO

ஆ. WMO 🗹

இ. UNEP

ஈ. IEA

  • இந்த ஆண்டுக்கான காலநிலை சேவைகளின் நிலைகுறித்த உலக வானிலை அமைப்பின் வருடாந்திர அறிக்கை, ‘சுகாதாரம்’ என்ற தலைப்பில் கவனம் செலுத்துகிறது. அதிகரித்து வரும் கடுமையான வானிலை, மோசமடைந்த காற்றின் தரம், தொற்றுநோய்களின் வடிவங்கள் மற்றும் உணவு மற்றும் நீர் பாதுகாப்பு தொடர்பான சவால்களை கையாள சுகாதாரத்துறைக்கு உதவும் நோக்கில், தனிப்பயனாக்கப்பட்ட காலநிலை தொடர்பான தகவல் மற்றும் சேவைகளுக்கான முக்கியமான தேவையை இந்த அறிக்கை வலியுறுத்தி கூறுகிறது.

4. இந்தியாவில் சிமென்ட் துறை குறித்த சந்தை ஆய்வை தொடங்கியுள்ள நிறுவனம் எது?

அ. NHAI

ஆ. NITI ஆயோக்

இ. இந்திய போட்டி ஆணையம் 🗹

ஈ. RBI

  • இந்தியாவில் உள்ள தலைமை தேசிய போட்டி ஒழுங்குமுறை நிறுவனமான இந்தியாவின் போட்டி ஆணையம், சிமென்ட் துறையின்மீது இந்தியா முழுவதும் விரிவான நாடு தழுவிய சந்தை ஆய்வைத் தொடங்குகிறது. சிமென்ட் விலை, செலவு, உற்பத்தி, திறன் பயன்பாடு மற்றும் இலாபம் போன்றவற்றில் உள்ள பிற போக்குகள் உட்பட சந்தைப் போக்குகளைப் ஆய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

5. 2023இல், ‘நிலையான வர்த்தகம் மற்றும் தரநிலைகளுக்கான சர்வதேச மாநாட்டை’ நடத்திய நாடு எது?

அ. இலங்கை

ஆ. ஜெர்மனி

இ. இந்தியா 🗹

ஈ. ஆஸ்திரேலியா

  • மத்திய வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகத்தின் உள்நாட்டு தொழிற்துறை மேம்பாட்டுத் துறையின்கீழ் உள்ள தன்னாட்சி அமைப்பான இந்திய தர கவுன்சில், புது தில்லியில், ‘நிலையான வர்த்தகம் மற்றும் தரநிலைகள்’ தொடர்பான சர்வதேச மாநாட்டை நடத்தியது. இந்த நிகழ்வானது தனியார் நிலைத்தன்மை தரநிலைகள் குறித்த இந்திய தேசிய தளத்தாலும் இந்திய தர கவுன்சிலால் ஐக்கிய நாடுகளின் நிலைத்தன்மை தரநிலைகள் (UNFSS) உடன் இணைந்தும் நடத்தப்பட்டது.

6. ‘பசிமிகு இடங்கள் குறித்த கண்ணோட்ட அறிக்கையை’ வெளியிட்ட நிறுவனம் எது?

அ. FAO-WFP 🗹

ஆ. UNEP-FAO

இ. FAO-NABARD

ஈ. உலக வங்கி- NABARD

  • 2023 நவம்பர் முதல் 2024 ஏப்ரல் வரையிலான காலப்பகுதிக்கான, ‘பசிமிகு இடங்கள்’ என்ற தலைப்பிலான அறிக்கை அண்மையில் வெளியிடப்பட்டது. ஐநா அவையின் உணவு மற்றும் உழவு அமைப்பு (FAO) மற்றும் உலக உணவுத்திட்டம் (WFP) ஆகியவற்றின் இந்தப் புதிய அறிக்கை, 2024 ஏப்ரல் வரை பதினெட்டு பசிமிகு இடங்களில் கடுமையான உணவுப்பாதுகாப்பின்மை ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விடங்கள் இரண்டு பிராந்திய கொத்துக்கள் உட்பட 22 நாடுகள் அல்லது பிரதேசங்களை உள்ளடக்கியுள்ளது.

7. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘கெப்லர்-385’ என்பதொரு __________?

அ. சிறுகோள்

ஆ. ஏழு-கோள் அமைப்பு 🗹

இ. செயற்கைக்கோள்

ஈ. விண்மீன்

  • வானியலாளர்கள் NASAஇன் ஓய்வுற்ற கெப்லர் விண்வெளி தொலைநோக்கித் தரவைப் பயன்படுத்தி கெப்லர்-385 என்றவொரு புதிரான ஏழு-கோள் அமைப்பைக் கண்டுபிடித்துள்ளனர். அதிலுள்ள அனைத்து கோள்களும் பூமியை விட பெரியவை ஆனால் நெப்டியூனைவிட சிறியவையாகும். இத்தகைய கோள்கள் பிரபஞ்சத்தில் அசாதாரணமான அமைப்பில் உள்ளவையாகும். ஆறுக்கும் மேற்பட்ட உறுதிப்படுத்தப்பட்ட கோள்கள்கொண்ட சிற்சில அமைப்புகளில் கெப்லர்-385உம் ஒன்றாகும்.

8. விரிவான சாதி அடிப்படையிலான மக்கள்தொகை கணக்கெடுப்பை மேற்கொள்ள அனுமதி அளித்துள்ள மாநிலம் எது?

அ. ஆந்திர பிரதேசம் 🗹

ஆ. கர்நாடகம்

இ. கேரளா

ஈ. அஸ்ஸாம்

  • மாநிலத்தில் விரிவான சாதி அடிப்படையிலான மக்கள்தொகைக் கணக்கெடுப்பை மேற்கொள்ள ஆந்திரப் பிரதேச அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தொழிற்சாலைகளை அமைப்பதற்கான புதிய நில ஒதுக்கீடு கொள்கையை அமல்படுத்த அமைச்சரவை முடிவு செய்தது. பல்வேறு துறைகளில் 19,037 கோடி மதிப்பிலான புதிய முதலீடுகளுக்கு மாநில முதலீட்டு ஊக்குவிப்பு வாரியத்தின் ஒப்புதலுக்கும் அது ஒப்புதல் அளித்துள்ளது.

9. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற ஸ்ரீஹரி நடராஜ் என்பாருடன் தொடர்புடைய விளையாட்டு எது?

அ. கிரிக்கெட்

ஆ. நீச்சல் 🗹

இ. செஸ்

ஈ. டென்னிஸ்

  • ஒலிம்பிக் வெற்றியாளரான ஸ்ரீஹரி நடராஜ் 37ஆவது தேசிய விளையாட்டுப் போட்டியில் குழு தொடரோட்டத்தில் நான்கு தங்கம் உட்பட எட்டுத் தங்கங்களுடன் போட்டியை நிறைவு செய்தார். கர்நாடகாவின் தினிதி தேசிங்கு (100 மீ) மற்றும் கேரளாவின் ஹர்ஷிதா ஜெயராம் (100 மீ) ஆகியோரும் தனிப்பட்ட போட்டிகளில் சாதனை படைத்தனர்.

10. சமீபத்தில் எந்நாட்டுடனான பெயர்ச்சி & இடம்பெயர்வு கூட்டாண்மை ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டது?

அ. ஓமன்

ஆ. பஹ்ரைன்

இ. இத்தாலி 🗹

ஈ. சவூதி அரேபியா

  • இந்தியாவும் இத்தாலியும் பெயர்ச்சி மற்றும் இடம்பெயர்வு குறித்த கூட்டாண்மை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. தொழிலாளர்கள், மாணவர்களின் இடம்பெயரலை இந்தக்கூட்டாண்மை ஒப்பந்தம் எளிதாக்கும். சுமார் 1,80,000 பேர் இத்தாலிக்கு இந்தியாவிலிருந்து பெயர்ந்துள்ளனர். இத்தாலியிலுள்ள இந்திய புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை ஐரோப்பாவில் இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்தைத் தொடர்ந்து மூன்றாவது இடத்தில் உள்ளது

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. இந்திய தலைமை தகவல் ஆணையராக ஹீராலால் சாமரியா பதவியேற்பு.

இந்திய தலைமை தகவல் ஆணையராக ஹீராலால் சாமரியா பதவியேற்றார். குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு அவருக்குப் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். தலைமை தகவல் ஆணையர் தலைமையில் செயல்படும் CICஇல் அதிகபட்சமாக பத்துத் தகவலாணையர்கள் இருக்கலாம். தலைமை தகவலாணையர் மற்றும் தகவலாணையர்கள் 65 வயது வரை அப்பதவியில் நீடிக்கலாம். கடந்த அக்.3ஆம் தேதி அன்று இந்திய தலைமை தகவலாணையர் YK சின்ஹாவின் பதவிக்காலம் நிறைவடைந்ததையடுத்து அந்தப் பதவி காலியாக இருந்தது. இந்நிலையில், இந்திய தலைமை தகவல் ஆணையராக ஹீராலால் சாமரியா பதவியேற்றார்.

2. ‘பாரத்’ கோதுமை மாவு கிலோ ஒன்று `27.50-க்கு விற்பனை: தில்லியில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தொடங்கிவைப்பு.

சாதாரண நுகர்வோருக்கு கட்டுபடியாகும் விலையில் கோதுமை மாவு கிடைக்க, ‘பாரத்’ முத்திரையுடன் (பிராண்ட்) ஒரு கிலோ கோதுமை மாவு `27.50-க்கு மிகாமல் சில்லறை விற்பனையகங்களில் கிடைக்க மத்திய நுகர்வோர் பாதுகாப்பு உணவு, பொதுவிநியோகத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இதை முன்னிட்டு இந்தக் கோதுமை மாவு விற்பனைக்கான 100 நடமாடும் விற்பனை வாகனங்களை மத்திய நுகர்வோர்த் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தில்லி கடமைப் பாதையில் கொடியசைத்து தொடங்கிவைத்தார். மேலும், நுகர்வோருக்கு பருப்பும், ‘பாரத்’ பிராண்டில் `60/கிலோவுக்கு வழங்கப்படுகிறது.

IMPORTANT LINKS

TNPSC Current Affairs

Tnpsc Current Affairs 2023 in Tamil & English Monthly Pdf files Download Quiz Online Test

Winmeen: Install the Winmeen App – Daily Free & Premium Tnpsc Study Materials & Online Test

https://play.google.com/store/apps/details?id=co.robin.jbzwb

Winmeen: Winmeen Tnpsc Test Series – Samacheer lesson Wise Test + Previous Year Model Test for Tnpsc Group 1,2, 4 & VAO

https://wp.me/p7JanY-ag8

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!