TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil – 6th March 2024

1. போஷான் உற்சவத்தை ஏற்பாடு செய்துள்ள மத்திய அமைச்சகம் எது?

அ. வேளாண் அமைச்சகம்

ஆ. ஊரக வளர்ச்சி அமைச்சகம்

இ. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்

ஈ. பாதுகாப்பு அமைச்சகம்

  • மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் இந்தியாவில் நல்ல ஊட்டச்சத்து நடைமுறை மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டை நிவர்த்தி செய்வதற்காக போஷான் உற்சவத்தை ஏற்பாடு செய்தது. மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி மற்றும் பில் கேட்ஸ் கலந்துகொண்ட இந்த நிகழ்வில், தீனதயாள் ஆராய்ச்சி நிறுவனத்தின் ‘போஷான் உற்சவம்’ என்ற நூல் வெளியிடப்பட்டது. இந்த முன்னெடுப்பானது இந்தியாவின் பழங்கால ஊட்டச்சத்து மரபுகளை புதுப்பிப்பதையும் ஊட்டச்சத்து குறைபாட்டை எதிர்த்துப்போராட இந்தியாவின் சமையல் பாரம்பரியத்தை கைகொள்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

2. 2024 – தேசிய பிறவிக்குறைபாடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் மாதத்திற்கானக் கருப்பொருள் என்ன?

அ. Breaking Barriers: inclusive support for children with birth defects

ஆ. Healthy Communities, Healthy Babies

இ. Best for You. Best for Baby

ஈ. Prevent to Protect: Prevent Infections for Baby Protection

  • குழந்தை நலத்தை மேம்படுத்துவதில் பிரதமர் ஜன் ஆரோக்கிய யோஜனாவின் முக்கிய பங்கை வலியுறுத்தி, NITI ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் VK பால், தேசிய பிறவிக்குறைபாடுகள் விழிப்புணர்வு மாதம் – 2024ஐ அறிமுகப்படுத்தினார். இத்திட்டம் இந்தியாவின் ஆரோக்கியத்தில் பாதியை உள்ளடக்கியிருப்பதோடு தற்போதுள்ள ராஷ்ட்ரிய பால் ஸ்வஸ்த்ய காரியக்ரம் திட்டத்திற்கு துணைநிற்கிறது. “Breaking Barriers: inclusive support for children with birth defects” என்ற கருப்பொருளின்கீழ் ஒருமாதகாலம் நீளும் பரப்புரை, பிறவிக்குறைபாடுகளை முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் சரியான நேரத்தில் அதனை நிர்வகிப்பதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.

3. INS ஜடாயு என்ற இந்தியக்கடற்படைத் தளம் அமைந்துள்ள பகுதி எது?

அ. டாமன் & டையூ

ஆ. இலட்சத்தீவுகள்

இ. அந்தமான் & நிக்கோபார்

ஈ. புதுச்சேரி

  • இலட்சத்தீவுகளின் கவரட்டியில் உள்ள INS துவீப்ரக்ஷக்கிற்குப் பிறகு அமைக்கப்படும் இரண்டாவது கடற்படை தளம் INS ஜடாயு ஆகும். லட்சத்தீவுகளில் பாதுகாப்பு உட்கட்டமைப்பை அதிகரிப்பதற்கான கடற்படையின் நடவடிக்கையில் இந்த நிகழ்வு ஒரு முக்கியமான மைல்கல்லைக் குறிக்கிறது. இலட்சத்தீவின் தென்கோடியில் உள்ள மினிக்காய் தீவு முக்கிய கடலெல்லைகளைக் கொண்டுள்ளது. தேவையான உட்கட்டமைப்பு மற்றும் ஆதாரங்களுடன்கூடிய சுதந்திரமான கடற்படைப் பிரிவை உருவாக்குவது இத்தீவுகளில் இந்திய கடற்படையின் ஒட்டுமொத்த செயல்பாட்டுத் திறனை மேம்படுத்தும். மேற்கு அரபிக்கடலில் கடற்கொள்ளை எதிர்ப்பு மற்றும் போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கைகளில் இந்திய கடற்படையின் செயல்பாட்டு முயற்சிகளுக்கு இந்தத் தளம் உதவும்.

4. நைனாதீவு அமைந்துள்ள நீரிணை எது?

அ. பாலி நீரிணை

ஆ. மலாக்கா நீரிணை

இ. பாக் நீரிணை

ஈ. பாஸ் நீரிணை

  • யாழ்ப்பாண தீபகற்பம் அருகில் உள்ள நெடுந்தீவு, நைனாதீவு மற்றும் அனலைதீவுகளில், “கலப்பின புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அமைப்புகளை” அமைப்பதற்காக இலங்கையின் நிலைத்த ஆற்றல் ஆணையம் இந்திய நிறுவனத்துடன் கூட்டிணைந்துள்ளது. யாழ்ப்பாணத்திற்கு அருகிலுள்ள பாக் நீரிணையில் அமைந்துள்ள நைனாதீவு, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும்; இது இந்துக்கள் மற்றும் பௌத்தர்களின் புனிதத்தலமாகும். குறிப்பிடத்தக்க வகையில், இங்குள்ள நாகபூஷணி அம்மன் கோவில், புகழ்பெற்ற தமிழ்க்கடவுளான மீனாட்சிக்கு நிகராக வழிபடப்படுகிறது. மகாவம்சம் நூல், புத்தர் இந்தத் தீவுக்கு வருகை தந்தது குறித்து குறிப்பிடுகிறது.

5. சப்சார் குட் திருவிழா கொண்டாடப்படுகிற மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. அஸ்ஸாம்

இ. மிசோரம்

ஈ. கேரளா

  • ஐஸ்வாலில் உள்ள அஸ்ஸாம் ரைபிள்ஸ் மைதானத்தில் கொண்டாடப்பட்ட மிசோரமின் சப்சார் குட் திருவிழா, செராவ் மற்றும் சாய் நடனங்களுடன் கூடிய துடிப்பான மிசோ மரபுகளைக் கொண்டாடியது. ஜூம் சாகுபடிக்காக காடுகளை தாயராக்குவதன்மூலம் தொடங்கப்படும் இந்த வசந்தகால விழாவில், உள்ளூர்வாசிகள் வண்ணமயமான உடைகள் அணிந்து நாட்டுப்புறப் பாடல்கள் மற்றும் நடனங்கள் நிகழ்த்தி கொண்டாடுகிறார்கள். ஆண்டுதோறும் மார்ச்சில் கொண்டாடப்படும் சப்சார் குட், மிசோ சமூகத்தின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை எடுத்துக்காட்டுகிறது.

6. அண்மையில், பிரதமரின் சூரிய வீடு இலவச மின்சார திட்டத்தின்கீழ் சூரிய தகடுகளை நிறுவுவதற்கு அரசாங்கம் எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது?

அ. ரூ.55,023 கோடி

ஆ. ரூ.75,021 கோடி

இ. ரூ.85,021 கோடி

ஈ. ரூ.65,021 கோடி

  • பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவை, `75,021 கோடி மதிப்பீட்டிலான, ‘பிரதமரின் சூரிய வீடு இலவச மின்சாரம்’ திட்டத்திற்கு 2024 பிப்ரவரி.29 அன்று ஒப்புதல் அளித்தது. சூரிய சக்தி மின்சாரத்தை தயாரிக்கும் இந்த அலகுகளை அமைக்கும் வீடுகள் ஒவ்வொரு மாதமும் 300 அலகு வரை மின்சாரத்தை இலவசமாக பெறலாம். இந்தத் திட்டத்தில் சேருபவர்கள் இரண்டு கிலோ வாட் உற்பத்தி திறன்கொண்ட சூரிய ஆற்றல் அலகை அமைத்தால், 60% மானியம் கிடைக்கும். 2 முதல் 3 கிலோ வாட் உற்பத்தித் திறனுக்கு கூடுதலாக 40 சதவீதம் மானியம் வழங்கப்படும்.
  • அதிகபட்ச வரம்பு 3 கிலோ வாட் உற்பத்தி திறனாகும். 1 கிலோ வாட் அமைப்புக்கு `30,000 மானியம் கிடைக்கும். 2 கிலோ வாட் அமைப்புக்கு `60,000/-உம், 3 கிலோ வாட் மற்றும் அதற்கு மேல் அமைக்கப்படும் அலகுக்கு `78,000/-உம் மானியம் வழங்கப்படும்.

7. உலக வனவிலங்குகள் நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?

அ. மார்ச்.03

ஆ. மார்ச்.04

இ. மார்ச்.05

ஈ. மார்ச்.06

  • ஆண்டுதோறும் மார்ச்.03ஆம் தேதி அன்று கொண்டாடப்படுகிற உலக வனவிலங்கு நாள் உலகளாவிய பல்லுயிர் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. “Connecting People and Planet: Exploring Digital Innovation in Wildlife Conservation” என்பது நடப்பு 2024ஆம் ஆண்டில் வரும் இந்நாளுக்கானக் கருப்பொருளாகும்.
  • பாதுகாப்பு முயற்சிகளில் தொழில்நுட்பத்தின் பங்கை இந்தக் கருப்பொருள் எடுத்துக்காட்டுகிறது. 2013ஆம் ஆண்டு ஐநா பொதுச் சபையில் தாய்லாந்து முன்மொழிந்ததை அடுத்து உருவான இந்த வருடாந்திர நிகழ்வு, உலகளவில் தாவரங்கள் மற்றும் விலங்கினங்களைப் பாதுகாப்பதற்கான முக்கியத்துவத்தை சிறப்பித்துக்காட்டுகிறது.

8. அண்மையில், இந்திய நிதிப் புலனாய்வுப் பிரிவானது பின்வரும் எந்தக் கொடுப்பனவு வங்கிக்கு `5.49 கோடி அபராதம் விதித்தது?

அ. PayTM கொடுப்பனவு வங்கி

ஆ. ஏர்டெல் கொடுப்பனவு வங்கி

இ. ஜியோ கொடுப்பனவு வங்கி

ஈ. ஃபினோ கொடுப்பனவு வங்கி

  • PayTM கொடுப்பனவு வங்கி பணமோசடி தடுப்புச் சட்டத்தை மீறியதற்காக இந்திய நிதிப் புலனாய்வுப் பிரிவிடமிருந்து `5.49 கோடி அபராதத்தை எதிர்கொள்கிறது. இந்த அபராதமானது சட்டவிரோத நடவடிக்கைகளில் குறிப்பாக இணையவழி சூதாட்டம் மற்றும் அதுசார்ந்த நடவடிக்கைகளிலிருந்து பெறப்பட்ட நிதியை தவறாகக் கையாளுதல் போன்றவற்றிற்கு அவ்வங்கி ஆதரவாக இருந்ததை அடுத்து விதிக்கப்பட்டுள்ளது.

9. யார்ஸ் ஏவுகணை என்பது கீழ்காணும் எந்நாடு உருவாக்கிய கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணையாகும்?

அ. ரஷ்யா

ஆ. சீனா

இ. இஸ்ரேல்

ஈ. இந்தியா

  • RS-24 யார்ஸ் என்ற கண்டம் விட்டு கண்டம் பாயும் அணுவாயுத ஏவுகணையின் சோதனையை வெற்றிகரமாக மேற்கொண்டதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது. ரஷ்யாவால் உருவாக்கப்பட்ட, ‘யார்ஸ்’ என்பது ஓர் அணு வெப்பயற்றல் ஆயுதமாகும். 12,000 கிமீ தொலைவு வரம்புகொண்ட இது, 11,000 கிமீ தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கும் திறன்கொண்டது.

10. ‘MH 60R சீஹாக்’ என்றால் என்ன?

அ. அணுவாற்றலால் இயங்கும் நீர்மூழ்கிக்கப்பல்

ஆ. பிளாக்ஹாக் ஹெலிகாப்டரின் கடல்சார் வகை

இ. போக்குவரத்து போர்க்கப்பல்

ஈ. மறைந்திருந்து தாயககும் கப்பல்

  • பிளாக்ஹாக் ஹெலிகாப்டரின் கடல்சார் வகையான, ‘MH 60R SeaHawk’ஐ 2024 மார்ச்.6 அன்று கொச்சியில் உள்ள INS கருடாவில் வைத்து இந்தியக்கடற்படை பணியில் சேர்த்தது. இதற்கான ஒப்பந்தம் கடந்த 2020 பிப்ரவரியில் அமெரிக்க அரசாங்கத்துடன் கையெழுத்தானது. நீர்மூழ்கிக்கப்பல் எதிர்ப்பு, தேடல் & மீட்பு, மருத்துவ உதவி போன்ற செயல்களுடன் இந்தியக் கடற்படையின் ஆற்றலை MH 60R சீஹாக் மேம்படுத்தும். இது மேம்பட்ட ஆயுதங்கள் போன்றவற்றை தன்னகத்தே கொண்டுள்ளது.

11. ‘ADITI’ திட்டத்துடன் தொடர்புடைய துறை எது?

அ. பாதுகாப்பு துறை

ஆ. சுகாதாரத் துறை

இ. கல்வித்துறை

ஈ. நிதித்துறை

  • பாதுகாப்பு அமைச்சர் இராஜ்நாத் சிங், புது தில்லியில் 2023-24 முதல் 2025-26 வரை `750 கோடி நிதி ஒதுக்கீடு பெற்ற, Acing Development of Innovative Technologies with iDEX (ADITI) திட்டத்தை மார்ச்.04 அன்று தொடங்கினார். iDEX கட்டமைப்பின்கீழ் செயல்படும் இந்தத்திட்டம், பாதுகாப்பு தொழில்நுட்ப ஆராய்ச்சிக்காக `25 கோடி வரையிலான மானியத்துடன் புத்தொழில்களை ஆதரிக்கிறது. ADITI தனது முதல் பதிப்பில் பதினேழு சவால்களுடன், 30 தொழில் நுட்பங்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

12. 2023-24 நிதியாண்டில் கணக்குப் பராமரிப்பில் சிறந்த செயல்திறனுக்கான விருதைப் பெற்ற அமைச்சகம் எது?

அ. நிதி அமைச்சகம்

ஆ. வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம்

இ. தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

ஈ. பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகம்

  • இந்திய சிவில் கணக்குகள் சேவையின் 48ஆவது நிறுவன நாளன்று 2023-24 நிதியாண்டில் சிறந்த முறையில் கணக்குகளைப் பாராமரித்ததற்காக, தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்துக்கு சிறந்த செயல்திறனுக்காக விருது வழங்கப்பட்டது. கணக்குகளின் தலைமைக் கட்டுப்பாட்டாளர் அஜய் S சிங் தலைமையில், தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் கணக்கியல் நடைமுறைகளில் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தியது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. புதுமைப்பெண் திட்டத்தால் உயர்கல்வி சேரும் மாணவிகளின் எண்ணிக்கை 34% அதிகரிப்பு.

அரசுப்பள்ளிகளில் 6 முதல் +2 வரை பயின்று, உயர்கல்வி செல்லும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப்பெண் திட்டம் 2022ஆம் ஆண்டு செப்டம்பரில் தொடக்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தின்மூலம் பயன்பெற 6 முதல் +2 வரை அரசுப்பள்ளிகளில் படித்து, உயர்கல்வி பயில்பவராக இருக்க வேண்டும். தனியார் பள்ளிகளில், கல்வி உரிமைச்சட்டத்தின்கீழ் 6-8 வரை பயின்று, பின் 9 முதல் +2 வரை அரசுப்பள்ளிகளில் படித்த மாணவிகளும் இந்தத் திட்டத்தின்கீழ் பயன்பெறலாம். இந்தத் திட்டத்தால் நடப்பாண்டில் மட்டும் மாதந்தோறும் 2.73 லட்சம் மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர். இந்த முயற்சியால் நடப்பு கல்வியாண்டில் அரசுப்பள்ளிகளில் பயின்று, கல்லூரிகளில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கை 34 சதவீதம் அதிகரித்துள்ளது.

2. பேராசிரியர் க. அன்பழகன் விருது: 76 அரசுப்பள்ளிகள் தேர்வு.

சிறந்த செயல்பாட்டுக்கான பேராசிரியர் க. அன்பழகன் விருதுக்கு தமிழ்நாடு முழுவதும் 76 அரசுப்பள்ளிகளுக்கு (மாவட்டத்துக்கு இரண்டு பள்ளிகள் வீதம்) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. கற்றல்-கற்பித்தல், ஆசிரியர் திறன் மேம்பாடு, தலைமைத்துவம், மாணவர் மேம்பாடு என பன்முக வளர்ச்சியை வெளிக்கொணரும் தலைசிறந்த பள்ளிகளுக்கு பேராசிரியர் க. அன்பழகன் விருது வழங்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!