TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil – 6th October 2023

1. 2023ஆம் ஆண்டு உலக இருதய நாளுக்கானக் கருப்பொருள் என்ன?

அ. Use Heart, Know Heart 🗹

ஆ. Prevent Heart Diseases

இ. Exercise Daily

ஈ. Healthy Food Habits

  • உலக இருதய நாளானது ஒவ்வோர் ஆண்டும் செப்.29 அன்று அனுசரிக்கப்படுகிறது. இருதய நோய் மற்றும் இருதய நோய்களை நிர்வகிப்பதற்கான அதன் தடுப்பு நடவடிக்கைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் உலகளவில் பல்வேறு நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதன்மூலம் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. “Use Heart, Know Heart” என்பது நடப்பு 2023ஆம் ஆண்டில் அனுசரிக்கப்பட்ட உலக இருதய நாளுக்கானக் கருப்பொருளாகும்.

2. நாடுகடந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கான அமைச்சர்களின் மாநாட்டிற்கு எதிரான ஐ நா மாநாட்டை நடத்திய நாடு எது?

அ. சீனா

ஆ. இந்தியா

இ. இத்தாலி 🗹

ஈ. அமெரிக்கா

  • அண்மையில், நாடுகடந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கான அமைச்சர்களின் மாநாட்டுக்கு எதிரான இரண்டு நாள் ஐநா மாநாடு இத்தாலியில் உள்ள பலேர்மோவில் நடந்தது. இது இத்தாலி அரசாங்கம் மற்றும் ஐநா போதைப் பொருள் மற்றும் குற்றங்களுக்கான அலுவலகத்தின் (UNDOC) செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது. நாடுகடந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கு எதிரான ஐநா மாநாட்டின் (UNTOC) 20ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் மாநாட்டில் உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் இராய் கலந்துகொண்டார்.

3. ‘இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு நிறுவனம்’ என்பது எந்த மத்திய அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு பொதுத்துறை நிறுவனமாகும்?

அ. மின்சார அமைச்சகம்

ஆ. புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் 🗹

இ. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம்

ஈ. வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

  • அண்மையில், இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமை லிமிடெட் (IREDA), இந்தியாவின் மிகப்பெரிய சிறப்புப் பசுமை நிதி நிறுவனமான வங்கி சாரா நிதி நிறுவனம், மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள ‘அட்டவணை B’ பிரிவில் இருந்து மதிப்புமிக்க ‘அட்டவணை B’ வகைக்கு மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலை உயர்வு நிதி அமைச்சகத்தின் பொது நிறுவனங்களின் துறையால் வெளியிடப்பட்ட அலுவலக குறிப்பாணைமூலம் முறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் இந்த மேம்படுத்தலை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.

4. சமீப செய்திகளில் காணப்பட்ட ஸ்கோ பள்ளத்தாக்கு அமைந்துள்ள மாநிலம்/யூனியன் பிரதேசம் எது?

அ. லடாக் 🗹

ஆ. அருணாச்சல பிரதேசம்

இ. உத்தரகாண்ட்

ஈ. சிக்கிம்

  • லடாக்கிற்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்காக மத்திய உள்துறை அமைச்சகம், ‘மார்செமிக் லா மற்றும் ஸ்கோ பள்ளத்தாக்கு’ ஆகிய இரண்டு எல்லைப்புறச் சுற்றுலாத் தலங்களை திறந்துள்ளது. முன்னர் தடைசெய்யப்பட்ட இந்தப் பகுதிகள் லடாக்கில் உள்ள பாங்காங் ஏரிக்கு வடக்கே உத்திசார் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியான சாங் சென்மோ அருகில் உள்ளன. இவ்வுயரமான பள்ளத்தாக்கு வழியாக சுற்றுலாப்பயணிகள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள்.

5. “5G சுற்றுச்சூழல் அமைப்புமூலம் டிஜிட்டல் மாற்றம்” குறித்த ஆலோசனைக் கட்டுரையை வெளியிட்ட நிறுவனம் எது?

அ. NITI ஆயோக்

ஆ. NASSCOM

இ. TRAI 🗹

ஈ. CDAC

  • இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) சமீபத்தில் “5G சுற்றுச்சூழல் அமைப்புமூலம் டிஜிட்டல் மாற்றம்” குறித்த ஆலோசனைக் கட்டுரையை வெளியிட்டுள்ளது. இந்த விவாத ஆவணத்தின் நோக்கம், கொள்கை தடைகளை அடையாளங்கண்டு, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களின் ஒருங்கிணைப்பு மற்றும் திறமையான பயன்பாட்டை விரைவுபடுத்துவதற்கு பொருத்தமான கொள்கை கட்டமைப்பை முன்மொழிவதுடன், 5G சுற்றுச்சூழல் அமைப்புமூலம் விரிவான மற்றும் நிலையான பொருளாதார முன்னேற்றத்தை வளர்ப்பதாகும்.

6. ‘உத்பவ் திட்டத்தை’ ஏற்பாடு செய்கிற நிறுவனம் து?

அ. NITI ஆயோக்

ஆ. இந்திய இராணுவம் 🗹

இ. இந்திய ரிசர்வ் வங்கி

ஈ. SEBI

  • இந்திய இராணுவம், யுனைடெட் சர்வீஸ் இன்ஸ்டிடியூஷன் ஆஃப் இந்தியாவுடன் இணைந்து, உத்பவ் திட்டத்தின் ஒருபகுதியாக சமீபத்தில் ஒரு குழு விவாதத்தை மேற்கொண்டது. ‘புராஜெக்ட் உத்பவ்’, இந்திய இராணுவத்தால் தொடங்கப்பட்டது; இது உத்திசார் முக்கியத்துவம் வாய்ந்த இந்திய உத்திசார் மரபுகளை மீட்டமைப்பு செய்ய வடிவமைக்கப்பட்ட ஒரு திட்டமாகும். இது போர், ராஜதந்திரம் மற்றும் பேருத்திகளை பண்டைய இந்திய நூல்களில் இருந்து பெறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

7. ’இராணுவ ரேஷன் மற்றும் குறிப்பிட்ட ஊட்டச்சத்து தேவைகளுக்கான தினைகள்’ என்ற மாநாட்டை ஏற்பாடு செய்த நிறுவனம் எது?

அ. DRDO 🗹

ஆ. HAL

இ. NABARD

ஈ. FAO

  • ‘இராணுவ ரேஷன் மற்றும் குறிப்பிட்ட ஊட்டச்சத்து தேவைகளுக்கான தினை’ மாநாடு சமீபத்தில் கர்நாடக மாநிலம் மைசூருவில் நடைபெற்றது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (DRDO) மைசூருவைத் தளமாகக் கொண்ட ஆய்வகமான டிஃபென்ஸ் ஃபுட் ரிசர்ச் லேபரேட்டரி இம்மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது. படைகளுக்கு தினை அடிப்படையிலான உணவை வழங்குவது, நீடித்த ஊட்டச்சத்து மற்றும் உணவுப் பாதுகாப்பிற்காக அவற்றை பாதுகாத்தல் மற்றும் சேமிப்பது குறித்து இதில் விவாதிக்கப்பட்டது.

8. POCSO சட்டம், 2012இன்கீழ் பாலியல் சம்மதம் தெரிவிக்கும் (age of consent) வயது என்ன?

அ. 18 🗹

ஆ. 19

இ. 20

ஈ. 21

  • இந்திய சட்ட ஆணையத்தின் அறிக்கை எண். 283, ‘பாலியல் குற்றங்களிலிருந்து சிறார்களைப் பாதுகாக்கும் சட்டம், 2012’இன்கீழ் பாலியல் சம்மதம் தெரிவிக்கும் வயது குறித்த அறிக்கை, அண்மையில் மத்திய சட்ட அமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. குற்றவியல் சட்டத்திலிருந்து இளம் பருவத்தினரிடையே நடைபெறும் பாலியல் செயல்களுக்கு விலக்கு அளிக்க, POCSO சட்டத்தின்கீழ் 18 வயதாக இருக்கும் தற்போதைய பாலியல் சம்மதம் தெரிவிக்கும் வயதை மாற்றுவதற்கு எதிராக அது அறிவுறுத்தியுள்ளது.
  • அதற்குப் பதிலாக, குழந்தைகளின் சிறப்பு நலன்களைப் பாதுகாக்கும் ஒரு சமநிலையான அணுகுமுறையை உறுதி செய்வதற்காக, 16-18 வயதுடையவர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளுக்கு, “தண்டனை வழங்குவதில் வழிகாட்டப்பட்ட நீதித்துறையின் விருப்பத்தை” அறிமுகப்படுத்த அது பரிந்துரைக்கிறது.

9. சிறைக்கு வருபவர்களின் ஆதாரை சரிபார்ப்பதை கட்டாயமாக்கியுள்ள மத்திய அமைச்சகம் எது?

அ. பாதுகாப்பு அமைச்சகம்

ஆ. உள்துறை அமைச்சகம் 🗹

இ. வெளியுறவு அமைச்சகம்

ஈ. நிதி அமைச்சகம்

  • நாடு முழுவதுமுள்ள சிறை அதிகாரிகள், கைதிகளை காணவரும் அனைத்து பார்வையாளர்களின் பின்னணியை சரிபார்ப்பதற்கு அவர்களின் ஆதாரை சரிபார்க்க வேண்டும் என அண்மையில் மத்திய உள்துறை அமைச்சகம் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சிறைக்கைதிகளை காணவரும் பார்வையாளர்களின் முந்தைய நடத்தைகளை சரிபார்க்கவும் அவ்வமைச்சகம் அறிவித்துள்ளது.

10. 2023இன்படி, ‘இந்திய சட்ட ஆணையத்தின்’ தலைவர் யார்?

அ. நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி 🗹

ஆ. நீதிபதி கே டி ஷங்கரன்

இ. பேராசிரியர் ஆனந்த் பாலிவால்

ஈ. பேராசிரியர் டி பி வர்மா

  • மின்னணு முறையிலான முதல் தகவல் அறிக்கைகளை (e-FIRS) பதிவு செய்ய இந்திய சட்ட ஆணையம் ஆதரவு தெரிவித்துள்ளது. கர்நாடக உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி தலைமையிலான இந்த ஆணையம் தனது 292ஆவது அறிக்கையில் இதைப் பரிந்துரைத்தது. இந்த அணுகுமுறை தாமதமான FIR பதிவின் சிக்கலுக்குத் தீர்வுகாணும், மக்கள் குற்றங்களை உடனடியாகப் புகாரளிக்க அனுமதிக்கும் மற்றும் வெளிப்படைத் தன்மையை அதிகரிக்கும் என்று அது கூறியது.

11. இந்திய வான் படையானது எந்த நிறுவனத்துடன் இணைந்து ‘பிரசாந்த்’ என்ற இலகுரக போர் ஹெலிகாப்டரை வாங்கவுள்ளது?

அ. HAL 🗹

ஆ. DRDO

இ. BHEL

ஈ. BDL

  • இந்திய வான்படையும் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிட்டும் இணைந்து 156 கூடுதல், ‘பிரசாந்த்’ என்ற போர்களில் பயன்படுத்தக்கூடிய இலகுரக ஹெலிகாப்டர்களை வாங்கவுள்ளது. இந்த ஹெலிகாப்டர்கள் இந்திய வான்படை மற்றும் இந்திய இராணுவத்தால் சீன மற்றும் பாகிஸ்தான் எல்லைகளில் சேவையில் ஈடுபடுத்தப்படும்.

12. கீழ்காணும் எந்த நிறுவனத்தின் தலைவராக KN சாந்த குமார் நியமிக்கப்பட்டுள்ளார்?

அ. பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா 🗹

ஆ. பத்திரிகை தகவல் பணியகம்

இ. மத்திய புலனாய்வுப் பணியகம்

ஈ. மத்திய சேமக்காவல் படை

  • தி பிரிண்டர்ஸ் (மைசூரு) நிறுவனத்தைச் சேர்ந்த KN சாந்த குமார், பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியாவின் இயக்குநர்கள் குழுவின் தலைவராக ஓராண்டு காலத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் இருபதாண்டுகளுக்கும் மேலாக இந்திய செய்தித்தாள் சங்கத்தின் நிர்வாகக் குழுவின் உறுப்பினராகவும், செய்தித்தாள் தணிக்கை பணியகத்தின் தலைவராகவும் இருந்தார். PTI வாரியத்தின் தலைவராக அவர் பணியாற்றுவது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்பு கடைசியாக 2013 முதல் 2014 வரை தலைவராக அவர் பணியாற்றியுள்ளார்.

13. இந்தியாவில் தேர்தல் பத்திரங்களின் அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளராக உள்ள நிறுவனம் எது?

அ. இந்திய ரிசர்வ் வங்கி

ஆ. பாரத வங்கி (SBI) 🗹

இ. NITI ஆயோக்

ஈ. இந்திய தேர்தல் ஆணையம்

  • பாரத வங்கியின் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கிளைகளிலும் அக்டோபர்.04ஆம் தேதி தொடங்கி அக்டோபர்.13ஆம் தேதியுடன் முடிவடையும் 28ஆவது தவணை தேர்தல் பத்திர விற்பனை 10 நாட்களுக்கு மேற்கொள்ளப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு ஜனவரியில், “நாட்டில் அரசியல் நிதியளிப்பு முறையைத் தூய்மைப்படுத்துவதற்காக” இந்தப் பத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. ஸ்குவாஷில் 1, வில்வித்தையில் 2 தங்கம் இந்தியா வென்றது

ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் இறுதிச்சுற்றில் இந்தியாவின் தீபிகா பல்லிக்கல்-ஹரிந்தர் பால்சிங் இணை 11-10, 11-10 என்ற புள்ளிக்கணக்கில் மலேசியாவின் அய்பா பின்டி-முகமது யாபிக் இணையை வீழ்த்தி தங்கம் வென்றது.

வில்வித்தை: இந்தியாவுக்கு இரட்டை தங்கம்

வில்வித்தை மகளிர் காம்பவுண்ட் பிரிவில் நடப்பு உலக சாம்பியன்களான ஜோதி சுரேகா, அதிதி சுவாமி, பர்னீத் கௌர் அடங்கிய இந்திய அணி 230-229 என்ற புள்ளிக்கணக்கில் சீன தைபே அணியினரை வீழ்த்தி தங்கம் வென்றனர். ஏற்கெனவே கலப்பு அணிகள் பிரிவில் ஜோதி சுரேகா-ஓஜாஸ் இணை தங்கம் வென்றிருந்தது.

2. செப்டம்பரில் உச்சம் தொட்ட வெப்பம்!

கடந்த செப்டம்பர் மாதத்தில் உலக வளிமண்டலத்தின் சராசரி வெப்பநிலை 16.38 டிகிரி செல்சியசாக (61.5 டிகிரி F) பதிவாகியுள்ளது. இதனை ஐரோப்பிய யூனியனின் பருவநிலைக் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

1850-1900 காலகட்டத்தின் சராசரி மாதாந்திர வெப்பநிலையுடன் ஒப்பிடுகையில், கடந்த செப்டம்பரில் பதிவாகியுள்ள சராசரி வெப்பநிலை 1.75 டிகிரி செல்சியஸ் அதிகமாகும். இதன்மூலம், பருவநிலை மாற்றம் என்பது இன்னும் 10 ஆண்டுகளுக்குப் பிறகு வரப்போவதில்லை; இப்போதே வந்துவிட்டது என்பதை அனைவரும் உணரந்துகொள்ள வேண்டும் என்று ஐரோப்பிய யூனியனின் பருவநிலைக் கண்காணிப்பு அமைப்பு எச்சரித்துள்ளது.

பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதற்காக பிரான்ஸ் தலைநகரம் பாரீஸில் கடந்த 2015ஆம் ஆண்டு நடந்த வருடாந்திர ஐநா மாநாட்டில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. அதில், தொழிற்புரட்சிக்கு முன்பு இருந்ததைவிட 1.5 டிகிரி செல்சியஸுக்கு மேல் உலகின் வெப்பநிலை உயராமல் கட்டுப்படுத்தவும், அதற்காக காற்றில் கலக்கும் கரியமில வாயுவின் அளவை படிப்படியாகக் குறைக்கவும் இந்தியா உள்ளிட்ட 195 நாடுகள் ஒப்புக்கொண்டன.

3. பேறுகால இறப்பு தடுப்பு சிகிச்சை: சிங்கப்பூருடன் தமிழ்நாடு ஒப்பந்தம்

மகப்பேறு அவசர சிகிச்சைகள், பேறுகால இறப்புகளைத் தடுக்கும் பயிற்சிகளை ஒருங்கிணைந்து மேற்கொள்தற்காக சிங்கப்பூர் சர்வதேச குழுமத்துடன் தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

தமிழநாட்டில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் அவசரகால மகப்பேறு சிகிச்சைகள், பச்சிளங்குழந்தைகள் உயிர்ப்பித்தல் திறன்களை மேம்படுத்துவதற்கும், தாய் மரணம் விகிதம் மற்றும் சிசு மரணம் விகிதத்தை மேலும் குறைப்பதற்கும் இதுபோன்ற சர்வதேச குழுமத்திடம் இணைந்து செயல்படும் திட்டம் பேரளவில் உறுதுணையாக இருக்கும். கடந்த காலங்களில் ஒரு இலட்சம் பிரசவங்களில் பேறுகால இறப்பு 90ஆக இருந்தது. தற்போது அந்த எண்ணிக்கை 52-ஆக குறைந்திருக்கிறது. சிங்கப்பூரை பொருத்தவரை பேறுகால மரணங்கள் இலட்சத்துக்கு 10ஆக உள்ளது.

4. இலக்கியம்: நார்வே எழுத்தாளருக்கு நோபல்

நடப்பாண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு, நார்வே நாட்டின் புகழ்பெற்ற எழுத்தாளர் ஜான் ஃபோஸேவுக்கு (64) அறிவிக்கப்பட்டுள்ளது. நாடகங்கள், நாவல்கள், கவிதைகள், குழந்தைகளுக்கான நூல்கள் வரை தனது பரந்துபட்ட எழுத்துகளின்மூலம் இதுவரை பேசப்படாத கருத்துகளை வெளிக்கொண்டு வந்ததற்காக, அவருக்கு இக்கெளரவம் அளிக்கப்பட்டுள்ளது.

நோபல் வென்ற 4-ஆவது நார்வே எழுத்தாளர்: நார்வே நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர்கள் கடந்த 1903, 1920, 1928 ஆகிய ஆண்டுகளில் நோபல் பரிசை பெற்றனர். இப்போது நோபல் வென்றுள்ள 4ஆவது நார்வே எழுத்தாளர் ஜான் ஃபோஸே ஆவார். அவரது ‘ஏ நியூ நேம்: செப்டோலஜி VI-VII’, கடந்த 2022ஆம் ஆண்டில் சர்வதேச புக்கர் பரிசுக்கான இறுதித்தேர்வுகளில் ஒன்றாக இருந்தது. இப்புத்தகம், ஜான் ஃபோஸேயின் மகத்தான படைப்பு என்று நோபல் இலக்கிய கமிட்டியின் தலைவர் ஆண்டர்ஸ் ஆல்ஸன் புகழாரம் சூட்டியுள்ளார்.

5. தேசிய வனவிலங்கு வாரம்: அக்டோபர்.02-08.

கருப்பொருள்: Partnerships for Wildlife Conservation.

6. உடன்குடி கருப்பட்டிக்கு புவிசார் குறியீடு.

உலகப்புகழ்பெற்ற உடன்குடி கருப்பட்டிக்கு (பனை வெல்லம்) புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. புவிசார் குறியீடு (GI) என்பது ஒரு குறிப்பிட்ட புவியியல் இருப்பிடத்தை ஒத்திருக்கும் சில தயாரிப்புகளில் பயன்படுத்தப்படும் பெயர் ஆகும். மேலும், அங்கீகரிக்கப்பட்ட பயனர்களாக பதிவுசெய்யப்பட்டவர்களைத் தவிர வேறு யாரும் பிரபலமான தயாரிப்பு பெயரைப் பயன்படுத்த அனுமதியில்லை என்பதை GI குறிச்சொல் உறுதி செய்கிறது.

Tnpsc Current Affairs – https://www.winmeen.com/tnpsc-tamil-current-affairs/

Winmeen: Install the Winmeen App – Daily Free & Premium Tnpsc Study Materials & Online Test – https://play.google.com/store/apps/details?id=co.robin.jbzwb

Winmeen: Winmeen Tnpsc Test Series – Samacheer lesson Wise Test + Previous Year Model Test for Tnpsc Group 1, 2, 4 & VAO: https://wp.me/p7JanY-ag8

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!