TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil – 7th October 2023

1. ‘தொழில்நுட்பம் மற்றும் பாரதிய பாஷா உச்சிமாநாட்டை’ ஏற்பாடு செய்த மத்திய அமைச்சகம் எது?

அ. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம்

ஆ. கல்வி அமைச்சகம் 🗹

இ. திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்

ஈ. கலாச்சார அமைச்சகம்

  • பாரதிய பாஷா உத்சவத்தின் ஒருபகுதியாக இரண்டு நாள் தொழில்நுட்பம் மற்றும் பாரதிய பாஷா உச்சிமாநாடு புது தில்லியில் மத்திய கல்வி அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது. இவ்வுச்சிமாநாட்டின் நோக்கம், தேசிய கல்விக் கொள்கை-2020இன் தொலைநோக்குப் பார்வைக்கேற்ப, தற்போதைய கல்விச் சூழல் அமைப்பிலிருந்து இந்திய மொழிகளில் அதனை சுமூகமாக மாற்றுவது மற்றும் கல்வியில் இந்திய மொழிகளுக்கு தொழில்நுட்ப ரீதியாக பிரகாசமான எதிர்காலத்திற்கான பாடத்திட்டத்தை அமைப்பதாகும்.

2. NABARD, மும்பை பங்குச்சந்தையில், ‘சமூகப் பத்திரங்களை’ பட்டியலிட்டுள்ளது. இதன்மூலம் திரட்டப்படும் நிதி கீழ்காணும் எந்தத் திட்டத்திற்கு மறுநிதியளிப்பு செய்ய பயன்படுத்தப்படும்?

அ. PMAY

ஆ. PM SVANIDHI

இ. ஜல் ஜீவன் இயக்கம் 🗹

ஈ. PMGSY

  • வேளாண்மை மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக்கான தேசிய வங்கி (NABARD) அதன் ‘சமூகப் பத்திரங்களை’ மும்பை பங்குச்சந்தையில் (BSE) பட்டியலிட்டுள்ளது. இதன்மூலம் `1,040 கோடியை அவ்வங்கி திரட்டியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் ஜல் ஜீவன் இயக்கத்திற்கு (மத்திய அரசின் குடிநீர் திட்டம்) மறுநிதியளிப்பு செய்வதற்கு இந்த நிதி பயன்படுத்தப்படும்.

3. ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், 72 ஆண்டுகளில் இந்தியாவின் முதல் பதக்கத்தை வென்ற கிரண் பலியான் சார்ந்த விளையாட்டு எது?

அ. பளு தூக்குதல்

ஆ. குண்டெறிதல் 🗹

இ. வாள் சண்டை

ஈ. நீச்சல்

  • மீரட்டைச் சேர்ந்த கிரண் பாலியன், கடந்த 72 ஆண்டுகளில் பெண்களுக்கான குண்டெறிதலில் நாட்டின் முதல் பதக்கத்தை ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வென்றார். பாலியன் தனது மூன்றாவது முயற்சியில் 17.36 மீ தூரம் குண்டெறிந்து சீனாவின் ஒலிம்பிக் சாம்பியனான லிஜியாவ் காங் மற்றும் ஜியாயுவான் சாங் ஆகியோரைத் தொடர்ந்து மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.

4. பசிபிக் ஆசியா டிராவல் அசோசியேஷன் (PATA) டிராவல் மார்ட் 2023-ஐ நடத்தும் நாடு எது?

அ. இலங்கை

ஆ. வங்காளதேசம்

இ. இந்தியா 🗹

ஈ. ஆஸ்திரேலியா

  • பசிபிக் ஆசியா டிராவல் அசோசியேஷன் (PATA) டிராவல் மார்ட்-2023 ஆனது புது தில்லியில் மத்திய சுற்றுலா அமைச்சகத்தால் தொடங்கப்பட்டது. PATA ஒரு இலாப நோக்கற்ற அமைப்பாகும்; இது ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் பொறுப்பான பயணம் மற்றும் சுற்றுலா வளர்ச்சியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

5. செவ்வாய் சுற்றுக்கலன் திட்டத்துக்குப் பிறகு பூமியின் ஆதிக்க கோளத்திலிருந்து வெற்றிகரமாக வெளியேறிய விண்கலம் எது?

அ. ஆதித்யா-எல்1 🗹

ஆ. ஒன் வெப் இந்தியா-2

இ. என்விஎஸ்-01

ஈ. DS-SAR

  • ஆதித்யா-எல்1 விண்கலம் பூமியிலிருந்து 9.2 லட்சம் கிமீ தொலைவுக்கு அப்பால் பயணித்து, செவ்வாய் சுற்றுக்கலன் திட்டத்துக்குப் பிறகு பூமியின் ஆதிக்க கோளத்திலிருந்து வெற்றிகரமாக வெளியேறிய விண்கலம் ஆனது. இந்த விண்கலம் பூமியிலிருந்து 1.5 மில்லியன் கிமீ தொலைவில் உள்ள L1 சுற்றுவட்டப்பாதையில் சூரியனின் கரோனா மற்றும் பிற அம்சங்களை இடையூறுகள் இல்லாமல் கண்காணிக்கும்.

6. ஜம்மு & காஷ்மீரில் ‘கழிவுகளுக்கு எதிரான போர்’ என்பதன் தூதராக பரிந்துரைக்கப்பட்டவர் யார்?

அ. சச்சின் டெண்டுல்கர்

ஆ. வித்யா பாலன்

இ. கேப்டன் பானா சிங் 🗹

ஈ. விஸ்வநாதன் ஆனந்த்

  • ஜம்மு & காஷ்மீரில் உள்ள கிராமப்புற சுகாதார இயக்குநரகம், வீரதீரச் செயலுக்கான நாட்டின் மிக உயர்ந்த விருதான ‘பரம்வீர் சக்ரா’ விருது பெற்ற, கேப்டன் பனா சிங் அவர்களை, ஜம்மு & காஷ்மீரின் ‘கழிவுகளுக்கு எதிரான போர்’ என்பதன் தூதராக நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. 2023 ஸ்வச்சதா ஹி சேவா பிரச்சாரத்தின் கருப் பொருளான, ‘குப்பை இல்லாத இந்தியா’ என்பது தூய்மைப் பணியாளர்களின் தூய்மை மற்றும் நலனில் கவனம் செலுத்துகிறது.

7. மருத்துவ-ஜவுளிப் பொருட்களுக்கான தரக் கட்டுப்பாட்டு ஆணைகளை அறிமுகப்படுத்திய அமைச்சகம் எது?

அ. வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

ஆ. MSME அமைச்சகம்

இ. ஜவுளி அமைச்சகம் 🗹

ஈ. நிதி அமைச்சகம்

  • மத்திய ஜவுளி அமைச்சகம் ஆறு மருத்துவ ஜவுளி மற்றும் 20 விவசாய ஜவுளிப் பொருட்களுக்கான தரக் கட்டுப்பாட்டு ஆணைகளை அறிமுகப்படுத்தியது. சானிட்டரி பேட்ஸ் மற்றும் பேபி டயப்பர்கள் போன்ற மருத்துவ ஜவுளிகளில், சுயஉதவி குழுக்களுக்கு தரக்கட்டுப்பாட்டு ஆணைகளிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது; அதே சமயம் மைக்ரோ மற்றும் சிறிய பிரிவுகளுக்கு ஓராண்டு மட்டும் தளர்வு அளிக்கப்படுகிறது.

8. ஆன்லைன் கேமிங் நிறுவனங்கள் பந்தயத்தின் முழு மதிப்பின்மீது 28% GST வசூலிக்கும் நடைமுறையானது எந்தத் தேதியிலிருந்து அமலுக்கு வரும்?

அ. அக்டோபர் 1, 2023 🗹

ஆ. ஜனவரி 1, 2024

இ. ஏப்ரல் 1, 2024

ஈ. அக்டோபர் 1, 2024

  • அக்டோபர்.1 முதல், ஆன்லைன் கேமிங் நிறுவனங்கள் பந்தயத்தின் முழு மதிப்பின்மீது 28% ஜிஎஸ்டி வசூலிக்கும், அதே சமயம் ஆஃப்ஷோர் பிளாட்ஃபார்ம்களும் இந்தியாவில் செயல்பட ஜிஎஸ்டி பதிவு வைத்திருக்க வேண்டும். பல மாநிலங்கள் அந்தந்த மாநில ஜிஎஸ்டி சட்டங்களில் இன்னும் திருத்தங்களை நிறைவேற்றாத நிலையில், மத்திய நிதி அமைச்சகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

9. முகமது முய்சு என்பவர் எந்த நாட்டின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்?

அ. மொரிஷியஸ்

ஆ. தென்னாப்பிரிக்கா

இ. மாலத்தீவுகள் 🗹

ஈ. இஸ்ரேல்

  • முகமது முய்சு அண்மையில் மாலத்தீவு அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போதைய எதிர்கட்சி வேட்பாளரான தற்போதைய அதிபர் இப்ராகிம் முகமது சோலியை இந்தியாவுக்கு ஆதரவாகக் கருதுகிறார்.

10. இந்தியா சமீபத்தில் எந்த நாட்டுடனான ‘சமூக பாதுகாப்பு ஒப்பந்தத்தில்’ கையெழுத்திட்டது?

அ. இலங்கை

ஆ. அர்ஜென்டினா 🗹

இ. ஆஸ்திரேலியா

ஈ. பிரான்ஸ்

  • இந்தியாவும் அர்ஜென்டினாவும் தொழில் வல்லுநர்களின் சட்டப்பூர்வ உரிமைகளை உறுதிசெய்வதற்கான ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டன; இது இடரில்லா சர்வதேச இயக்கத்திற்கு உதவும். இந்திய தூதரகத்தின் கூற்றுப்படி, ‘சமூக பாதுகாப்பு ஒப்பந்தம்’ அர்ஜென்டினாவில் பல்வேறு இந்திய மற்றும் சர்வதேச அளவில் பணிபுரியும் இந்திய நாட்டினரின் உரிமைகளை உறுதிசெய்வதையும், இந்தியாவில் வேலைதேடும் அர்ஜென்டினா நாட்டினரின் உரிமைகளை உறுதிசெய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

11. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற அபய் சிங்குடன் தொடர்புடைய விளையாட்டு எது?

அ. கிரிக்கெட்

ஆ. ஸ்குவாஷ் 🗹

இ. ஹாக்கி

ஈ. சதுரங்கம்

  • ஹாங்சோவில் நடந்து வரும் 19ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய ஆடவர் ஸ்குவாஷ் அணி தங்கம் வென்றது. மூன்றாவது மற்றும் கடைசி போட்டியில் அபய் சிங் 11-7, 9-11, 8-11, 11-9, 12-10 என்ற செட் கணக்கில் நூர் ஜமானை தோற்கடித்தார். கடந்த 2010ஆம் ஆண்டு குவான்சோவில் நடந்த போட்டியில் பாகிஸ்தான் அணி தங்கம் வென்ற நிலையில், 2014ஆம் ஆண்டு ஆண்களுக்கான ஸ்குவாஷ் போட்டியில் இந்தியா தங்கம் வென்றது.

12. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற ருதுஜா போசலேவுடன் தொடர்புடைய விளையாட்டு எது?

அ. ஸ்குவாஷ்

ஆ. சதுரங்கம்

இ. பூப்பந்து

ஈ. டென்னிஸ் 🗹

  • கலப்பு இரட்டையர் ஜோடியான ரோஹன் போபண்ணா மற்றும் ருதுஜா போசலே, சீன தைபே ஜோடியான என்-சுவோ லியாங் மற்றும் சுங்-ஹாவோ ஹுவாங்கை இறுதிப்போட்டியில் தோற்கடித்து ஹாங்சோவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றது. முன்னதாக ஆடவர் இரட்டையர் பிரிவில் மற்றொரு இந்திய ஜோடியான இராமநாதன் இராம்குமார், சாகேத் மைனேனி ஜோடி வெள்ளி வென்றது.

13. ‘யஷஸ்வினி’ என்பது எந்நிறுவனத்தைச் சேர்ந்த பெண் பைக்கர்களின் குழுவாகும்?

அ. இந்திய கடற்படை

ஆ. CRPF 🗹

இ. CISF

ஈ. இந்திய இராணுவம்

  • ஷில்லாங்கைச் சேர்ந்த CRPF பெண் பைக்கர்களின் குழுவான யஷஸ்வினியின் நாடு கடந்த பைக் பயணத்தை முதல்வர் ஸ்ரீ கான்ராட் கே சங்மா கொடியசைத்து தொடங்கி வைத்தார். சிஆர்பிஎஃப், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்துடன் இணைந்து நாட்டில் பெண்களின் சக்தியைக் கொண்டாடும் வகையில் இந்த பைக் பேரணியை நடத்துகிறது.

14. இந்தியாவில் செப்டம்பர் மாத ஜிஎஸ்டி வசூல் எவ்வளவு?

அ. ரூ.1.627 லட்சம் கோடி 🗹

ஆ. ரூ.1.527 லட்சம் கோடி

இ. ரூ.1.427 லட்சம் கோடி

ஈ. ரூ.1.727 லட்சம் கோடி

  • இந்தியாவில் செப்டம்பர் மாத சரக்கு மற்றும் சேவைகள் வரி (GST) வசூல் ஆகஸ்ட் மாத வருவாயைவிட 2.3% அதிகரித்து `1,62,712 கோடியைத் தொட்டுள்ளது. இருப்பினும், மொத்த GST வருவாயின் வளர்ச்சி 27 மாதங்களில் இல்லாத அளவுக்கு செப்டம்பர் மாதத்தில் 10.2%ஆக குறைந்தது; அது முந்தைய இரண்டு மாதங்களில் 10.8%ஆக இருந்தது. 2023-24 ஆம் ஆண்டில் மொத்த ஜிஎஸ்டி வசூல் `1.60 லட்சம் கோடியைத் தாண்டியது என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. காற்றாலைமூலம் 10,200 MW மின்சார உற்பத்தியில் நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடம்.

தமிழ்நாட்டில் காற்றாலை மூலம் 10,200 MW மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதாகவும், காற்றாலை உற்பத்தியில் நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாகவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத் தலைவர் இராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.

2. தமிழ்நாட்டில் இஸ்ரோ ஏவுதளம் அமையும் பகுதி தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பு

இஸ்ரோவின் SSLV ஏவுகலம் திட்டத்துக்காக புதிய ஏவுதளம் தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைக்கப்பட உள்ளது. இந்நிலையில், அலுவல் இரகசியங்கள் சட்டம்-1923, பிரிவு 2-இல் உள்ள விதிகளின்படி, இந்தப் பகுதி தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனுமதி பெறாத நபர்கள் இப்பகுதியைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டது என மத்திய அரசு தெரிவித்தது.

3. ககன்யான் திட்டத்தின் மாதிரி கலனை வடிவமைத்த சென்னை நிறுவனம்

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்துக்கான தொழில்நுட்ப உபகரண கட்டமைப்பை வடிவமைத்துள்ள சென்னையைச் சேர்ந்த கேசிபி நிறுவனம், அதை இஸ்ரோவிடம் வழங்கவுள்ளது. புவியின் தாழ்வட்டப் பாதைக்கு விண்கலம்மூலம் மனிதர்களை அனுப்பி 3 நாள்கள் ஆய்வு மேற்கொண்டு அதன்பின்னர் மீண்டும் அவர்களை பாதுகாப்பாக பூமிக்கு கொண்டு வருவது ககன்யான் திட்டத்தின் நோக்கம்.

4. ஈரானிய சமூக செயற்பாட்டாளர் நர்கிஸ் முகம்மதிக்கு அமைதிக்கான நோபல்

ஈரானில் பெண்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராகவும், ஜனநாயகத்தை வலியுறுத்தியும் போராடிவரும் மனித உரிமை ஆர்வலர் நர்கீஸ் முகமதிக்கு (51) நடப்பாண்டு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைதிக்கான நோபல்: 19ஆவது பெண்

அமைதிக்கான நோபல் பரிசு பெறும் 19ஆவது பெண் நர்கீஸ் முகமதி ஆவார். இதேபோல், நோபல் வெல்லும் ஈரான் நாட்டைச் சேர்ந்த 2ஆவது பெண்ணும் ஆவார். கடந்த 2003இல் ஈரானைச் சேர்ந்த மனித உரிமைகள் ஆர்வலர் ஷிரின் எபாடி அமைதிக்கான நோபல் பரிசை வென்றிருந்தார். 122 ஆண்டுகால நோபல் வரலாற்றில் சிறையில் உள்ள ஒருவருக்கு அமைதிக்கான பரிசு அளிக்கப்படுவது இது 5ஆவது முறையாகும்.

IMPORTANT LINKS

TNPSC Current Affairs

Tnpsc Current Affairs 2023 in Tamil & English Monthly Pdf files Download Quiz Online Test

Winmeen: Install the Winmeen App – Daily Free & Premium Tnpsc Study Materials & Online Test

https://play.google.com/store/apps/details?id=co.robin.jbzwb

Winmeen: Winmeen Tnpsc Test Series – Samacheer lesson Wise Test + Previous Year Model Test for Tnpsc Group 1,2, 4 & VAO

https://wp.me/p7JanY-ag8

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!