TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil – 8th April 2024

1. பெருங்காமநல்லூர் படுகொலையுடன் தொடர்புடைய மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. மகாராஷ்டிரா

இ. கர்நாடகா

ஈ. ஒடிசா

  • தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் உள்ள பெருங்காமநல்லூரில் நிகழ்ந்த படுகொலையின் 104ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு அரசியல் கட்சியினர் மற்றும் தலைவர்கள் மரியாதை செலுத்தினர். கடந்த 1920 ஏப்.03இல், 1911ஆம் ஆண்டு குற்றப் பரம்பரைச் சட்டத்தின்படி தங்களைக் காவல் நிலையத்தில் பதிவுசெய்துகொள்ளாத ஆயுதம் அற்ற பிரமலைக் கள்ளர் மக்கள்மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 16 பேர் கொல்லப்பட்டனர். இந்நிகழ்ச்சி, ‘தென்னக ஜாலியன் வாலாபாக்’ என அழைக்கப்படுகிறது. ஆங்கிலேயர்கள் தடய அறிதலுக்காகவும் மற்றும் மக்கள்தொகைக் கட்டுப்பாட்டிற்குமாக இச்சட்டத்தைப் பயன்படுத்தினர். இந்தியா விடுதலை அடைந்தபிறகு இந்தச் சட்டம் இரத்துசெய்யப்பட்டது.

2. அண்மையில், iOS சாதனங்களுக்காக, ‘myCGHS’ செயலியை அறிமுகப்படுத்திய அமைச்சகம் எது?

அ. விவசாய அமைச்சகம்

ஆ. சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம்

இ. ஊரக வளர்ச்சி அமைச்சகம்

ஈ. மின்சார அமைச்சகம்

  • ‘எனது மத்திய அரசின் சுகாதாரத் திட்டம்’ iOS செயலியை மத்திய சுகாதார அமைச்சகம் தொடங்கியுள்ளது. இச்செயலி இமாச்சல பிரதேச தேசிய தகவல் மையம் மற்றும் தேசிய தகவல் மைய சுகாதார தொழில்நுட்ப குழுக்களால் உருவாக்கப்பட்டது. இது மத்திய அரசின் சுகாதாரத் திட்டப்பயனாளிகளுக்கு தகவல் & அணுகலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட அம்சங்களை வழங்கும் வசதியான திறன்பேசி செயலியாகும்.

3. அண்மையில், டிஜி யாத்ரா அமைப்பை அறிமுகப்படுத்திய இந்தியாவின் 14ஆவது விமான நிலையம் எது?

அ. ஜெய் பிரகாஷ் நாராயண் விமான நிலையம், பீகார்

ஆ. ஷஹீத் பகத் சிங் சர்வதேச விமான நிலையம், சண்டிகர்

இ. மனோகர் சர்வதேச விமான நிலையம், கோவா

ஈ. தேவி அஹில்யாபாய் ஹோல்கர் விமான நிலையம், மத்திய பிரதேசம்

  • டிஜி யாத்ரா அமைப்பை அறிமுகப்படுத்திய இந்தியாவின் 14ஆம் விமான நிலையமாக கோவா மாநிலம் மோபாவில் உள்ள மனோகர் சர்வதேச விமான நிலையம் மாறியுள்ளது. மத்திய உள்நாட்டு விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவால் தொடங்கப்பட்ட இது, பயணிகளின் சரிபார்ப்பை சீரமைக்கவும், காத்திருப்பு நேரத்தை குறைக்கவும் மற்றும் நடைமுறைகளை எளிதாக்கவும் முக அங்கீகாரத்தைப் பயன்படுத்துகிறது.
  • பயணிகள் டிஜியாத்ரா செயலியை பதிவிறக்கம் செய்து, அதை தங்கள் ஆதார் எண்ணுடன் இணைத்து, பயணச்சீட்டு வாங்குவதற்காக டிஜி யாத்ரா அடையாள எண்ணை உருவாக்குகின்றனர். விமான நிலையத்தில், நுழைவுச் சீட்டை ஸ்கேன் செய்வதன்மூலம் தடையின்றி நுழைவதற்கு இது உதவுகிறது.

4. 2023-24இல் எவ்வளவுக்கு கடல்சார் பொருட்களை ஏற்றுமதிசெய்ய இந்தியா இலக்கை நிர்ணயித்துள்ளது?

அ. $9.1 பில்லியன்

ஆ. $7.7 பில்லியன்

இ. $8.6 பில்லியன்

ஈ. $11.1 பில்லியன்

  • செயலாக்கத்திறன் மற்றும் அதிக மதிப்புள்ள பொருட்கள்மூலம் ஈராண்டுகளில் கடல்சார் உற்பத்தி ஏற்றுமதியை $12 பில்லியன் டாலராக உயர்த்த இந்தியா இலக்கு கொண்டுள்ளது. 2022-23இல், ஏற்றுமதி மதிப்பு மொத்தம் $8.09 பில்லியன் டாலர்களாக இருந்தது. இருப்பினும், 2023-24 ஏப்ரல் முதல் பிப்ரவரி வரை, ஏற்றுமதி 7.5% குறைந்து $6.8 பில்லியனாக இருந்தது; இதற்குக் காரணம் அமெரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் ஏற்றுமதி செய்யப்பட்ட பொருள்களின் அளவு குறைந்ததே ஆகும். 2023-24ஆம் ஆண்டில் $9.1 பில்லியன் டாலர் அளவுக்கு ஏற்றுமதியை மேற்கொள்ள அரசாங்கம் இலக்காகக் கொண்டுள்ளது. உலக அளவில் மீன் உற்பத்தியில் இந்தியா மூன்றாவது இடத்திலும் மீன் வளர்ப்பில் இரண்டாவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

5. PRATUSH தொலைநோக்கியை உருவாக்கிய அமைப்பு எது?

அ. DRDO

ஆ. ISRO

இ. NASA

ஈ. புவி அறிவியல் அமைச்சகம்

  • நிலா மற்றும் அதன் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட உயர்தெளிவுத்திறன்கொண்ட தொலைநோக்கிகள்மூலம் புதிய பேரண்ட நுண்ணறிவுகளை வெளியிடுவதற்கான ஓர் அற்புதமான முயற்சியை வானியலாளர்கள் ஆவலுடன் எதிர்நோக்கிக்கொண்டுள்ளனர். இதற்கு இந்தியாவின் பங்களிப்பாக, PRATUSH (Probing ReionizATion of the Universe using Signal from Hydrogen), என்ற ரேடியோ தொலைநோக்கி உள்ளது. இது நிலவின் தொலைதூரத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. ISROஇன் ஒத்துழைப்புடன் பெங்களூருவில் உள்ள இராமன் ஆராய்ச்சி நிறுவனத்தால் (RRI) உருவாக்கப்பட்ட இது சமிக்ஞைகளைக் கண்டறிவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

6. பொது சுகாதாரத்திற்குச் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் விதமாக, ‘S.A.R.A.H’ என்ற டிஜிட்டல் சுகாதார ஊக்குவிப்பாளரை அறிமுகப்படுத்தியுள்ள அமைப்பு எது?

அ. WHO

ஆ. WTO

இ. ILO

ஈ. UNDP

  • உலக சுகாதார அமைப்பானது, செயற்கை நுண்ணறிவின்மூலம் இயங்கும் டிஜிட்டல் சுகாதார ஊக்குவிப்பாளர் மாதிரியான, ‘S.A.R.A.H’ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. S.A.R.A.H அல்லது Smart AI Resource Assistant for Health ஆனது நலமிகு பழக்கவழக்கங்கள் மற்றும் மனநலம்போன்ற பல்வேறு சுகாதார தலைப்புகளில் தகவல்களை வழங்குவதற்கு மேம்பட்ட மொழி மாதிரிகள் மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. புற்றுநோய், இதய நோய், நுரையீரல் நோய் மற்றும் நீரிழிவுபோன்ற நோய்களுக்கான முக்கிய காரணங்களைப் பற்றிய நுண்ணறிவை இது தெளிவாக வழங்குகிறது.

7. அண்மையில், கீழ்காணும் எந்த இடத்தில் நஞ்சு நிறைந்த ஜெல்லிமீன் திரள்கள் காணப்பட்டன?

அ. பாரதீப் கடற்கரை, ஒடிஸா

ஆ. விசாகப்பட்டினம் கடற்கரை, ஆந்திர பிரதேசம்

இ. உத்கல கடற்கரை, ஒடிஸா

ஈ. மேற்கண்ட எதுவுமில்லை

  • ஆந்திர பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தின் கடற்கரையோரத்தில் நஞ்சு நிறைந்த Pelagia noctilucas அல்லது ஊதாநிற வரிகள்கொண்ட ஜெல்லிமீன்கள் திரள் திரளாகக் காணப்பட்டன. சூடான கடல் வெப்பநிலை காரணமாக அதன் எண்ணிக்கை விரைவாக அதிகரிக்கும்போது இவ்வாறு அவை திரள்கின்றன. இந்தத் திரட்சி மீன்பிடி மற்றும் சுற்றுலாத் தொழிற்துறைகளை மோசமாகப் பாதிக்கின்றன. கடல் மற்றும் காற்று நீரோட்டங்கள்போன்ற இயற்கை காரணிகளும் இந்த நிகழ்வுகளுக்குப் பங்களிக்கின்றன.

8. அண்மையில், இந்தியாவில் லித்தியம்-அயன் மின்கலங்ககளை உற்பத்தி செய்வதற்கான கூட்டு முயற்சியை உருவாக்குவதற்காக, கீழ்காணும் எந்த அமைப்பு பானாசோனிக் எனர்ஜி நிறுவனத்துடன் கூட்டிணைந்துள்ளது?

அ. எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் (ONGC)

ஆ. சர்வதேச அணுசக்தி முகமை (IAEA)

இ. இந்தியன் எண்ணெய் நிறுவனம் (IOCL)

ஈ. பாரத் மிகுமின் நிறுவனம் (BHEL)

  • இந்தியன் எண்ணெய் நிறுவனமானது (IOCL) இந்தியாவில் லித்தியம்-அயன் மின்கலங்கள் உற்பத்திக்கான கூட்டு முயற்சியை நிறுவுவதற்காக, பானாசோனிக் எனர்ஜி நிறுவனத்துடன் கூட்டிணைந்துள்ளது. இந்தக் கூட்டிணைவு, 2070ஆம் ஆண்டிற்குள் நிகர-சுழிய பைங்குடில் வாயு உமிழ்வை அடைவதற்கான இந்தியாவின் இலக்கை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

9. ஆண்டுதோறும், ‘சர்வதேச மனச்சான்று நாள்’ கொண்டாடப்படுகிற தேதி எது?

அ. ஏப்ரல்.05

ஆ. ஏப்ரல்.06

இ. ஏப்ரல்.07

ஈ. ஏப்ரல்.08

  • ஆண்டுதோறும் ஏப்.05 அன்று அனுசரிக்கப்படும் சர்வதேச மனச்சான்று நாள், தனிநபர்கள் தங்கள் மனசாட்சியைப் பற்றி சிந்திக்கவும், தார்மீக விழுமியங்களை நிலைநிறுத்தவும் வலியுறுத்துகிறது. “Promoting a Culture of Peace with Love and Conscience” என்பது நடப்பு 2024ஆம் ஆண்டில் வரும் இந்த நாளுக்கானக் கருப்பொருளாகும். 2020இல் ஐநா.ஆல் நிறுவப்பட்ட இந்த நாள், தீங்குகளைத் தடுப்பதில் விவேகத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.

10. அண்மையில், நடுத்தர தொலைவு செல்லும் எறிகணையான, ‘அக்னி பிரைம்’இன் பறப்புச்சோதனையை வெற்றிகரமாக நடத்திய அமைப்பு எது?

அ. DRDO

ஆ. ISRO

இ. NASA

ஈ. CNSA

  • இந்தியாவின் DRDO மற்றும் வியூகப்படைப் பிரிவானது ஒடிஸாவின் டாக்டர் APJ அப்துல் கலாம் தீவில், ‘அக்னி-பிரைம்’ என்ற எறிகணையை வெற்றிகரமாகச் சோதித்தது. அக்னி-பிரைம் என்பது அணுசக்தித்திறன்கொண்ட ஒரு நடுத்தர தொலைவு செல்லும் எறிகணையாகும். இது அக்னி-I மற்றும் II-க்கு அடுத்ததாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் தாக்கும் தொலைவு 1,000-2,000 கிலோ மீட்டராகும். அக்னி-IV/Vஇலிருந்து மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் இலகுரக மற்றும் வலிமைக்கான கலவைப்பொருட்களையும் இது கொண்டுள்ளது.

11. அண்மையில், கேரள பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் 5200 ஆண்டுகள் பழமையான ஹரப்ப குடியேற்றத்தை, கீழ்காணும் எந்த இடத்தில் கண்டுபிடித்தனர்?

அ. பத்தா பெட், குஜராத்

ஆ. பிர்ரானா, ஹரியானா

இ. தேசல்பூர், குஜராத்

ஈ. ஹிசார், ஹரியானா

  • கேரள பல்கலையின் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அண்மையில் 5200 ஆண்டுகள் பழமையான ஹரப்ப குடியேற்றத்தை குஜராத்தின் ஜூனா காதியாவிற்கு அருகிலுள்ள பத்தா பெட் என்ற இடத்தில் கண்டுபிடித்தனர். இத் தளம் ஆரம்பகால ஹரப்ப இடுகாட்டிற்கு அருகே அமைந்துள்ளது. தாவரங்களை அடையாளம் காணவும் விவசாய நடைமுறைகளைப் புரிந்து கொள்ளவும் தொல்பொருள் மாதிரிகள் அங்கிருந்து சேகரிக்கப்பட்டன. முன்னதாக, 500 புதைகுழிகள்கொண்ட ஒரு பகுதி அருகில் கண்டுபிடிக்கப்பட்டது. அண்மைய அகழ்வாராய்ச்சியில் எலும்புக்கூடுகள், மட்பாண்டங்கள், விலங்குகளின் எலும்புகள், விலையுயர்ந்த கற்கள், டெரகோட்டா நூற்புக் கதிர்கள், தாமிரம் மற்றும் பல்வேறு கருவிகள் கிடைத்தன.

12. 2024 – தேசிய கடல்சார் நாளுக்கானக் கருப்பொருள் என்ன?

அ. Navigating the Future: Safety First

ஆ. Amrit Kaal in shipping

இ. Sustainable Shipping

ஈ. New technologies for greener shipping

  • தேசிய கடல்சார் நாளானது ஆண்டுதோறும் ஏப்.05ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இது உலகளாவிய வர்த்தகத்தில் கடல் போக்குவரத்தின் முக்கிய பங்கை மதிக்கிறது. இது 1919ஆம் ஆண்டு மும்பையிலிருந்து லண்டனுக்கு எஸ்எஸ் லாயல்டியின் பயணத்தை நினைவுபடுத்துகிறது. கூடுதலாக, ‘உலக கடல்சார் நாள்’ செப்டம்பர் கடைசி வியாழன் அன்று கொண்டாடப்படுகிறது; 2024 செப்.26 அன்று இந்த நாள் நிறுவப்பட்டது. “Navigating the Future: Safety First” என்ற நடப்பு 2024ஆம் ஆண்டு தேசிய கடல்சார் நாளுக்கானக் கருப்பொருளை, மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம் அண்மையில் அறிவித்தது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. வாக்களிப்பதை ஊக்குவிக்க சமூக வலைதளங்களில் தேர்தல் ஆணையம் பிரசாரம்.

முதல் முறை வாக்காளர்கள் மற்றும் இளையோர்களை நோக்கமாகக் கொண்டு, ‘18 வயது வாக்காளர்’ என்ற விழிப்புணர்வு பிரசாரத்தை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.ஒவ்வொரு தனிநபரும் அர்ப்பணிப்புடன் செயல்படுவதை வலியுறுத்தும், ‘நீங்களும் ஒருவர்’ என்ற பிரசாரத்தில் கதைசொலல் மற்றும் காணொளிக்காட்சிகள் பயன்படுத்தப்படுகின்றன.

2. ‘சுவிதா’ வலைதளம்.

‘சுவிதா’ வலைதளம் என்பது தேர்தல் பிரசார நடைமுறைகளுக்காக அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களிடம் இருந்து அனுமதிகள் மற்றும் செயல்முறையை நெறிப்படுத்த இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஒரு தொழில்நுட்ப தீர்வாகும்.

இந்த வலைத்தளம் தேர்தல் செயல்பாட்டின் செயல்திறனை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், கட்சிகளும் வேட்பாளர்களும் வாக்காளர்களைச் சென்றடைவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடும் தேர்தல் பிரசாரக் காலத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து, விண்ணப்பங்களின் நிகழ்நேர கண்காணிப்பு, அனுமதி புதுப்பிப்புகள், மற்றும் குறுந்தகவல்மூலம் தொடர்புகொள்வது என பலவிதமான அனுமதிகோரிக்கைகளை வெளிப்படையாக வழங்குகிறது. 543 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்.19 தொடங்கி ஜூன்.01 வரை 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை ஜூன்.04ஆம் தேதி நடைபெறவுள்ளது.

3. சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்துக்கு விஸ்வகர்மா விருது.

இந்திய அரசின் கட்டுமானத்தொழில் மேம்பாட்டுக் கழகம், சிறந்த கட்டுமான திட்டங்களை செயல்படுத்தி வரும் நிறுவனங்களுக்கு விருதுகளை வழங்கி சிறப்பித்து வருகிறது. அந்த வகையில், இந்திய அளவில் மெட்ரோ ரெயில் நிறுவனத்தில், சிறந்த மெட்ரோ ரெயில் சேவைக்கான நகர்ப்புற போக்குவரத்து உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றிவரும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு இந்தாண்டுக்கான, ‘சிஐடிசி விஸ்வகர்மா விருது’ வழங்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!