Tnpsc

Tnpsc exam Constitution of India Notes Material expected questions Part -1

Tnpsc exam Constitution of India Notes Material expected questions Part -1

டிஎன்பிஎஸ்சி நடத்தும் அனைத்து வகையான போட்டித் தேர்வுகளிலும் இந்திய அரசியலமைப்பு (Indian Polity) பகுதி மிக முக்கிய இடம் வகிக்கிறது. லட்சக்கணக்கானோர் பங்கேற்கும் போட்டித் தேர்வுகளில் ஒவ்வொரு மதிப்பெண்ணும் மிக முக்கியம் என்பதால், அரசியலமைப்பு பகுதியில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அத்தியாவசியமாகும்.

குரூப் IV தேர்வில் இந்திய அரசியலமைப்பு பகுதியில் 15 கேள்விகள் வரை கேட்கப்படலாம். குரூப் IV தேர்வை பொருத்தவரை பின்வரும் தலைப்புகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படுகின்றன.

இந்திய அரசியலமைப்பு, அரசியலமைப்பின் முகவுரை, இந்திய அரசியலமைப்பின் சிறப்பியல்புகள், மத்திய, மாநில மற்றும் யூனியன் பிரதேசங்கள், குடியுரிமை, அரசியலமைப்பு சட்ட சீர்திருத்தங்கள், அடிப்படை உரிமைகள், அடிப்படை கடமைகள், மனித உரிமை, நாடாளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி அமைப்புகள், நீதித்துறை, மத்திய தேர்தல் ஆணையம் மற்றும் அதன் பணிகள், தேர்தல் விதிமுறைகள், மாநில தேர்தல் ஆணையம், இந்திய அரசியலமைப்பில் இடம் பெற்றுள்ள அட்டவணை 8-ல் உள்ள மொழிகள், ஊழல், ஊழலை ஒழிக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம், மக்கள் நீதிமன்றம், தீர்ப்பாயங்கள், இந்திய கணக்கு தணிக்கையாளர், தகவல் அறியும் உரிமை சட்டம், மகளிர் மேம்பாடு, நுகர்வோர் பாதுகாப்பு சட்டங்கள் போன்ற பகுதிகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.

அரசியலமைப்பின் முகவுரை பகுதியில், அதில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள், சட்டத்திருத்தம் ஆகியவை முக்கிய பகுதிகள் ஆகும். உதாரணமாக 42-வது அரசியலமைப்பு சட்டத்திருத்தம் மூலம் முகவுரையில் சேர்க்கப்பட்ட Socialist, Secular & Integrity போன்ற வார்த்தைகளுக்கான விளக்கம் கேட்கப் படலாம்.

அடிப்படை உரிமைகள் தலைப்பில் மொத்த அடிப்படை உரிமைகளின் எண் ணிக்கை, கட்டாய கல்வி அறிவு வழங்கும் சட்டம் போன்ற பகுதிகள் மிகவும் முக்கியமானவை.

அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் தலைப்பில் சமூக நீதி, மனித உரிமை, ஒரே மாதிரியான வேலைக்கு ஒரே ஊதியம், வேலை வாய்ப்பை உருவாக்க அரசு செய்ய வேண்டிய செயல்கள், கல்வியறிவு வழங்க அரசு மேற் கொள்ள வேண்டிய செயல் கள், பொது சிவில் சட்டம் போன்றவற்றில் இருந்து கேள்விகள் வரலாம்.

அடிப்படை கடமைகள் தலைப்பில் மொத்தமுள்ள அடிப்படை கடமைகள், அடிப் படை கடமையை இந்திய அரசியலமைப்பில் சேர்க்க பரிந்துரைத்த ஆணையம், அதில் மேற்கொள்ளப்பட்ட சட்டத்திருத்தம் போன்றவை கேட்கப் படலாம்.

குடியரசு தலைவர், குடியரசு துணை தலைவர் போன்ற தலைப்பில் அவர்கள் தேர்ந்தெடுக்கப்படும் முறை, வயது வரம்பு, பதவிக்காலம், அவர்களின் செயல்பாடுகள், குடியரசு தலைவருக்கு உள்ள அவசர சட்டமியற்றும் அதிகாரம், அவசர நிலையை பிரகடனப்படுத்துவதில் அவரது பங்கு பற்றி இப்பகுதியில் இருந்து கேட்கப்படலாம்.

ஆளுநர் தலைப்பில் அவர் நியமனம் செய்யப்படும் முறை, வயது வரம்பு, பதவிக்காலம், அவர்களின் செயல்பாடுகள், அவசர சட்டமியற்றும் அதிகாரம், அவசர நிலையை பிரகடனப்படுத்துவதில் அவரது பங்கு பற்றி கேள்விகளும் வர வாய்ப்பு உள்ளது.

நாடாளுமன்றம் தலைப்பை பொருத்த வரையில் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை, அவர்கள் தேர்ந்தெடுக்கப்படும் முறை, பதவிக்காலம், வயது வரம்பு, பதவி நீக்கம், கட்சி தாவல் போன்ற பகுதிகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். மக்களவையில் குடியரசு தலைவரால் நியமனம் செய்யப்படும் நியமன உறுப்பினர்களின் எண்ணிக்கை, அதே போன்று மாநிலங்களவைக்கு நியமனம் செய்யப்படும் நியமன உறுப்பினர்களின் எண்ணிக்கையும் கேட்கப்படலாம்.

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் வரவு செலவு திட்டம், பண மசோதா பற்றியும் அதில் மக்களவைக்கு, உள்ள அதிகாரம் பற்றியும் கேள்விகள் வரவாய்ப்பு உள்ளது. நாடாளுமன்ற குழுக்கள், இந்திய தலைமை வழக்கறிஞர், இந்திய கணக்கு தணிக்கையாளர் பற்றியும் கேள்விகள் கேட்கப்படும்.

சட்டமன்றத்தை பொருத்தவரை உறுப்பினர்களின் எண்ணிக்கை அவர்கள் தேர்ந்தெடுக்கப்படும் முறை, பதவிக்காலம், கல்வி தகுதி, வயது வரம்பு, பதவி நீக்கம், கட்சி தாவல் போன்ற பகுதிகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். சட்ட மேலவை உள்ள மாநிலங்கள், அதன் செயல்பாடு பற்றியும் கேள்விகள் வர வாய்ப்பு உள்ளது.

நீதிமன்ற தலைப்பில் உச்ச நீதிமன்றம் உயர் நீதிமன்றம், நீதிபதிகள் நியமனம், நீதி மன்றங்களின் பெயர் மாற்றம், நீதித் துறையில் மேற்கொள்ளப்பட்ட சீர் திருத்தங்கள், உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக ஏற்க எழுந்த கோரிக்கை, நீதித்துறை சம்பந்தமான நடப்பு நிகழ்வுகள் கேட்கப்படலாம்.

இந்திய அரசியலமைப்பில் உள்ள ஆணையங்களில் தேர்தல் ஆணையம், தலைமைத் தேர்தல் ஆணையர், இந்திய தேர்தல் ஆணை யத்தால் நடத்தப்படும் தேர்தல்கள், மாநில தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் உள்ளாட்சி தேர்தல் போன்றவை கேட்கப்பட வாய்ப்பு மிக அதிகம். அதிலும் குறிப்பாக நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்கு சதவீதம், தமிழ் நாட்டில் அதிகமாக மற்றும் குறைவான வாக்கு பதிவான சட்டமன்ற தொகுதிகள் பற்றி கேட்க வாய்ப்பு அதிகம்.

நடப்பு நிகழ்வு சம்பந்தமாக நிதி ஆயோக் (NITI Aayog), தேசிய வளர்ச்சி கவுன்சில், ஊதிய குழு, நிதி ஆணையம், 21-வது சட்ட ஆணையம் போன்ற பகுதிகள் மிகவும் முக்கியமானவை.

குரூப் IV தேர்வுக்கு இந்திய அரசிய லமைப்பில் இருந்து பெரும்பாலும் ஷரத் துக்கள் கேட்கப்படுகின்றன. ஆணை யங்கள், அதன் தலைவர்களின் பெயர்கள், அந்த ஆணையங்கள் உருவாக்கப்பட்ட ஆண்டு, அதன் செயல்பாடு போன்ற வினாக்கள் அதிகம் கேட்கப்படும். இந்திய அரசியலமைப்பு சம்பந்தமான வழக்குகள், நடப்பு நிகழ்வு சம்பந்தமான கேள்விகளும் இந்த பகுதியில் கேட்கப்படலாம்.

இந்திய அரசியலமைப்பு பகுதிக்காக பின்வரும் பாடப்புத்தகங்களை படிப்பது சிறந்தது.

மேல்நிலை 11 மற்றும் 12 அரசியல் அறிவியல். ஆங்கில வழியில் பயில்வோர் Indian Polity by Laxmikanth புத்தகத்தை படிப்பது சிறந்தது. தமிழ் வழியில் பயில்வோர் ராம்குமாரின் TNPSC தேர்வுக்கான இந்திய அரசியலமைப்பு புத்தகத்தை படிக்கலாம்.

தேர்வுக்கு விரைவாக படிக்க P. M Bakshi ன் The Constitution of India புத்தகத்தில் உள்ள The Constitution of India in a Nutshell தலைப்பின் கீழ் உள்ள 8 பக்கங்களை படித்தாலே பெரும்பாலான இந்திய அரசியலமைப்பு பற்றிய கேள்விகளுக்கு விடை அளிக்கலாம்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மட்டுமல்லாது மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகள் உட்பட அனைத்து வகையான போட்டித் தேர்வுகளிலும் இந்திய அரசியலமைப்பு (Indian Polity) பகுதி மிக முக்கிய இடம் வகிக்கிறது. போட்டித் தேர்வுகளுக்காக மட்டுமின்றி, இந்திய அரசியலின் இயல்பு, அதன் தத்துவார்ந்த பின்புலம், அதன் செயல்பாடு, அதற்கென உருவாக்கப்பட்ட அமைப்புகள் என இந்திய அரசியலின் இயல்பை புரிந்து கொள்வது அனைவரின் கடமையாகும்.

இந்திய அரசியலமைப்பின் சாராம்சங் களை புரிந்து கொள்ளாமல், போட்டித் தேர்வுகளின் வழியாக அரசு ஊழியராய் தேர்வாவது என்பது சாத்தியமில்லை. லட் சக்கணக்கானோர் பங்கேற்கும் போட்டித் தேர்வுகளில் ஒவ்வொரு மதிப்பெண்ணும் தலைவிதியை மாற்றும் திறனுடையது என்ப தால், இந்திய அரசியலமைப்பு போன்ற சமூக அறிவியல் பகுதிகளில் வரும் அனைத்து கேள்விகளுக்கும் சரியான பதில் அளிப்பது மிகவும் அவசியமாகும்.

கணேச சுப்ரமணியன், கணேஷ் ஐஏஎஸ் அகாடமி

அண்ணா நகர், சென்னை ganiasacademy@gmail.com

போன்: 044-26191661

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!