General TamilGeneral Tamil Previous Questions

Tnpsc General Tamil Previous Question Paper 14

Tnpsc General Tamil Previous Question Paper 14

Tnpsc General Tamil Previous Question Paper 14: Tnpsc Aspirants can use this opportunity to check Tnpsc General Tamil Previous Question Papers For Tnpsc Exam Preparation. General Tamil Previous Question Papers For Tnpsc With Answers Pdf Online Test Quiz is now free to download from our winmeen.com site. Now Tamil Eligibility Test is mandatory for all Tnpsc and Tamilnadu government exams. So these Tnpsc Pothu Tamil Previous Questions are very useful for your preparation. It is also useful to Unit 8 – Tamilnadu History Culture Part.

1. “கன்னல் பொருள் தரும் தமிழே நீ ஓர் பூக்காடு;

நானோர் தும்பி” – என்று தமிழின் மீது காதல் கொண்டு பாடிய கவிஞர்

(அ) பாரதியார்

(ஆ) சுப்புரத்தினம்

(இ) வெ.இராமலிங்கம் பிள்ளை

(ஈ) சுரதா

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) சுப்புரத்தினம்

வினாவில் கொடுக்கப்பட்டுள்ள பாடலைப் பாடியவர் பாரதிதாசன் ஆவர் அவரது இயற்பெயர் கனக சுப்புரத்தினம்

2. எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப்

புள்ளுறு புன்கண் தீர்த்தோன் அன்றியும் —–

-இவ்வரிகள் இடம் பெற்றுள்ள நூல்

(அ) சிலப்பதிகாரம்

(ஆ) மணிமேகலை

(இ) கம்பராமாயணம்

(ஈ) வில்லிபாரதம்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) சிலப்பதிகாரம்

சிலப்பதிகாரம் – மதுரைக்காண்டம்-வழக்குரை காதை

“எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப்

புள்ளுறு புன்கண் தீர்த்தோன் அன்றியும்

வாயிற் கடைமணி நடுநா நடுங்க

ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சுசுடத் தான்தன்

அரும்பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன்

பெரும்பெயர்ப் புகாரென் பதியே அவ்வூர்

ஏசாச் சிறப்பின் இசைவிளங்கு பெருங்குடி

மாசாத்து வாணிகன் மகனை யாகி

வாழ்தல் வேண்டி, ஊழ்வினை துரப்பச்

சூழ்கழல் மன்னா நின்னகர்ப் புகுந்தீங்

கென்காற் சிலம்புபகர்தல் வேண்டி நின்பாற்

கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி”

  • இளங்கோவடிகள்.

பொருள்: “புறாவின் துன்பத்தைப் போக்கிய சிபி மன்னனும், தன் அரண்மனை மணி ஒலித்ததைக் கேட்டுப் பசுவின் துயரை அறிந்து, தன் ஒப்பற்ற மகனையே தேர்ச்சக்கரத்திலிட்டுக் கொன்ற மனுநீதிச் சோழனும் வாழ்ந்த, பெரும்புகழுடைய புகார் நகரமே யான் பிறந்த ஊர். அப்புகார் நகரில் பழியில்லாத சிறப்பினையுடைய புகழ்மிக்க குடியில் தோன்றிய மாசாத்துவான் மகனை மணம் புரிந்தேன். வீரக்கழலணிந்த மன்னனே! ஊழ்வினைப் பயனால், வாழ்வதற்காக நின் மதுரை நகரத்துக்கு வந்து, என் காற்சிலம்பினை விற்க முயன்று, உன்னால் கொலை செய்யப்பட்ட கோவலன் மனைவி நான், கண்ணகி என்பது என்பெயர்” என்று கூறினாள்

3. எளிமையினால் ஒரு தமிழன் படிப்பில்லை யென்றால்

இங்குள்ள எல்லாரும் நாணிடவும் வேண்டும்.

– இவ்வடிகள் இடம் பெற்றுள்ள நூல்

(அ) அழகின் சிரிப்பு

(ஆ) தமிழ் வளர்ச்சி

(இ) இளைஞர் இலக்கியம்

(ஈ) இருண்ட வீடு

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) தமிழ் வளர்ச்சி

தமிழ் வளர்ச்சி

தெளிவுறுத்தும் படங்களோடு சுவடியெல்லாம் செய்து

செந்தமிழைச் செழுந்தமிழாய்ச் செய்வதும் வேண்டும்

எளிமையினால் ஒருதமிழன் படிப்பில்லை யென்றால்

இங்குள்ள எல்லாரும் நாணிடவும் வேண்டும்

-பாரதிதாசன்

4. அரியதாம் உவப்ப உள்ளத் தன்பினால் அமைந்த காதல்

தெரிதரக் கொணர்ந்த என்றால் அமிழ்தினும் சீர்த்தவன்றே

– இவ்வடிகள் இடம்பெறும் நூல்

(அ) பெரிய புராணம்

(ஆ) சிலப்பதிகாரம்

(இ) கம்பராமாயணம்

(ஈ) தேவாரம்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) கம்பராமாயணம்

கம்பராமாயணம் – அயோத்தியா காண்டம் – குகப்படலம்.

“அரியதாம் உவப்ப உள்ளத் தன்பினால் அமைந்த காதல்

தெரிதரக் கொணர்ந்த என்றால் அமிழ்தினும் சீர்த்த வன்றே

பரிவினில் தழீஇய என்னில் பவித்திரம் எம்ம னோர்க்கும்

உரியன இனிதின் நாமும் உண்டனெம் அன்றோ என்றான்”

– கம்பர்.

பொருள்: உள்ளத்து அன்பு முதிர்வினால் எழுந்த பரிவின் காரணமாகக் குகன் கொண்டு வந்த இப்பொருள்கள் கிடைத்தற்கரியன; அமுதத்தைவிடச் சிறந்தன. இவை எத்தகையவையாய் இருப்பினும், அன்பு கலந்ததெனில் தூய்மையானவையே! எம் போன்றோர்க்கும் உரியன; ஆகையால் இனிமையான இவை, நாங்கள் விரும்பி உண்டதற்குச் சமமாகும்.

5. “ஒருவழித் தோன்றியாங்கு என்றும் சான்றோர்

சான்றோர் பாலர் ஆப” –எனக் கூறும் நூல்.

(அ) அகநானூறு

(ஆ) குறுந்தொகை

(இ) கலித்தொகை

(ஈ) புறநானூறு

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) புறநானூறு

புறநானூறு

பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய

மாமலை பயந்த காமரு மணியும்

இடைப்படச் சேய ஆயினும் தொடை புணர்ந்து

அருவிலை நன்கலம் அமைக்கும் காலை

ஒருவழித் தோன்றி யாங்கு என்றும் சான்றோர்,

சான்றோர் பாலர் ஆப

சாலார் சாலார் பாலர் ஆகுபவே

– கண்ணகனார்.

பொருள்: பொன்னும் பவளமும் முத்தும் நிலைத்த பெருமலையில் பிறக்கும் மாணிக்கமும் தோன்றும் இடங்களால் ஒன்றுக்கொன்று தொலைவின் இருப்பினும், மாலையாகக் கோர்த்து மதிப்பு மிக்க அணிகலனாக அமைக்கும் போது தம்முள் ஒருங்குசேரும். அதுபோல, சான்றோர் என்றும் சான்றோர் பக்கமே இருப்பர். சான்றாண்மை இல்லாதவர் தீயவர் பக்கமே சேருவர்.

6. “பள்ளிக்கூடம் வீட்டைப் போன்று இருத்தல் வேண்டும்” என்று சொன்னவர்

(அ) காந்திஅடிகள்

(ஆ) திரு.வி.கல்யாணசுந்தரனார்

(இ) இராமலிங்க அடிகள்

(ஈ) தனிநாயக அடிகள்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) காந்திஅடிகள்

1917-ஆம் ஆண்டு புரோச் நகரில் நடைபெற்ற 2-ஆவது கல்வி மாநாட்டில் காந்தியடிகள் உரை நிகழ்த்திய போது, “பள்ளிக்கூடம் வீட்டைப்போல இருக்க வேண்டும். குழந்தைகளுக்கு வீட்டில் தோன்றும் எண்ணங்களுக்கும் பள்ளியில் ஏற்படும் எண்ணங்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்க வேண்டும். தெரிந்தறியாத ஒரு மொழியின் மூலம் கல்வி கற்பிக்கக் கூடாது” என்று கூறினார்.

7. “கூடலில் ஆய்ந்த ஒண்தீந் தமிழின்” எனத் தமிழ்மொழியைப் போற்றும் நூல்.

(அ) சிலப்பதிகாரம்

(ஆ) புறநானூறு

(இ) பரிபாடல்

(ஈ) திருவாசகம்

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஈ) திருவாசகம்

8. பொருத்துக:

அ. விசும்பு  -1.தந்தம்

ஆ. துலை – 2.நெருப்பு

இ. மருப்பு – 3.துலாக்கோல்

ஈ. கனல் – 4. வானம்

அ ஆ இ ஈ

அ. 4 3 1 2

ஆ. 2 1 3 4

இ. 1 3 4 2

ஈ. 4 3 2 1

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. 4 3 1 2

9. “மன்னனுக்குத் தன்தேச மல்லாற் சிறப்பில்லை கற்றோர்க்குச்

சென்றவிட மெல்லாஞ்சிறப்பு”

– இப்பாடலடிகளை இயற்றிய புலவர்

(அ) திருவள்ளுவர்

(ஆ) ஒளவையார்

(இ) பட்டினத்தார்

(ஈ) காளமேகப்புலவர்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) ஒளவையார்

மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கில்

மன்னனில் கற்றோன் சிறப்புடையன் – மன்னர்க்குத்

தன்தேச மல்லால் சிறப்பில்லை

கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு

– ஒளவையார்.

10. ஒளிப்படம் எடுக்கும் முறை கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு

(அ) 1830

(ஆ) 1840

(இ) 1850

(ஈ) 1820

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) 1830

1830-இல் ஒளிப்படம் எடுக்கும் முறையைக் கண்டுபிடித்த பின்னர் இயக்கத்தைப் படம் பிடிக்க எட்வர்டு மைபிரிட்ஜ் என்ற ஆங்கிலேயர் முயன்றார். அதன் பயனாக ஓடும் குதிரையின் இயக்கத்தினை முதன்முதலில் படம் பிடித்தார்.

11. பொருத்துக:

அ. வட்டி – 1. எருமை

ஆ. யாணர் – 2. பவளம்

இ. துகிர் – 3. பனையோலைப்பெட்டி

ஈ. மேதி – 4. புதுவருவாய்

அ ஆ இ ஈ

அ. 3 2 4 1

ஆ. 3 4 2 1

இ. 2 3 4 1

ஈ. 4 1 2 3

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. 3 4 2 1

12. “வந்தது யாருக்கும் தெரியாது – நீ

வாழ்ந்ததை உலகம் அறியாது”

– இவ்வடிகள் இடம் பெறும் பாடலைப் பாடியவர்

(அ) முத்துக்குமார்

(ஆ) கபிலன்

(இ) தாரா பாரதி

(ஈ) இளைய கம்பன்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) தாரா பாரதி

திண்ணையை இடித்துத் தெருவாக்கு

வந்தது யாருக்கும் தெரியாது – நீ

வாழ்ந்ததை உலகம் அறியாது;

சந்ததி கூட மறந்துவிடும் – உன்

சரித்திரம் யாருக்கும் நினைவு வரும்?

– கவிஞர் தாராபாரதி

General Tamil Study Materials

General Tamil Previous Questions Pdf

13. நாலாயிர திவ்வியப்பிரபந்தத்தைத் தொகுத்தவர்

(அ) நம்பியாண்டார் நம்பி

(ஆ) வேதமுனி

(இ) நாதமுனி

(ஈ)பெரியவாச்சான் பிள்ளை

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) நாதமுனி

நாலாயிர திவ்யப் பிரபந்தம்

திவ்ய-மேலான; பிரபந்தம்-பலவகைப் பாடல்களின் தொகுப்பு.

இது பெருமாளைப் பற்றி பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பாகும். கி.பி. 6-ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி.9ஆம் நூற்றாண்டிற்குள் வாழ்ந்த வைணவ சமய ஆழ்வார்கள் பன்னிருவர்களால் இயற்றப்பட்ட பாடல்கள் கி.பி.10-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த நாதமுனிகள் என்பவரால் தொகுக்கப்பட்டது. பின்னர் வந்த மணவாள மாமுனிகள், நாதமுனிகள் தொகுத்த ஆழ்வார்களின் பிரபந்தத்தோடு, திருவரங்கத்தமுதனார் செய்த “இராமனுஜ நூற்றந்தாதியையும்” சேர்த்து நாலாயிர திவ்யப் பிரபந்தம் என அழைக்கும்படி அருளினார்

14. எட்டுத்தொகை நூல்களில் அகம் சார்ந்த நூல்எண்ணிக்கை எத்தனை?

(அ) 3

(ஆ) 7

(இ) 2

(ஈ) 5

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) 5

எட்டுத்தொகை நூல்கள்

அகப்பொருள் பற்றியவை: நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு.

புறப்பொருள் பற்றியவை: புறநானூறு, பதிற்றுப்பத்து.

அகமும்புறமும் கலந்து வருவது: பரிபாடல்.

15. பொருத்துக:

அ. புள் – 1. எருமை

ஆ. நுதல் – 2. துன்பம்

இ. மேதி – 3. பறவை

ஈ. நடலை – 4. நெற்றி

அ ஆ இ ஈ

அ. 1 3 2 4

ஆ. 3 4 1 2

இ. 4 2 3 1

ஈ. 2 1 4 3

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. 3 4 1 2

16. “முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின் நஞ்சும் உண்பர் நனிநாகரிகர்” என்னும் அடிகள் இடமபெற்றுள்ள நூல்

(அ) நாலடியார்

(ஆ) புறநானூறு

(இ) திருக்குறள்

(ஈ) நற்றிணை

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) நற்றிணை

நற்றிணை (பாடல் எண் 355)

முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின்

நஞ்சும் உண்பர் நனிநா கரிகர்

அம்சில் ஓதிஎன் தோழி தோள்துயில்

நெஞ்சின் இன்புறாய் ஆயினும் அதுநீ

என்கண் ஓடி அறிமதி

நின்கண் அல்லது பிறிதுயாதும் இலளே

– இயற்றியவர் பெயர் அறியப்படவில்லை.

17. ஊழிபெயரினும் தாம் பெயரார் சான்றாண்மைக்(கு)

ஆழி எனப்படு வார் – எனும் குறட்பாவில் “ஊழி” என்பதன் பொருள்.

(அ) கடல்

(ஆ) நிலம்

(இ) காலம்

(ஈ) உலகம்

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஈ) உலகம்

18. அகநானூற்றில் ஒற்றைப்படை எண்களாக வரும் பாடல்களை சார்ந்த திணை

(அ) குறிஞ்சித்திணை

(ஆ) பாலைத்திணை

(இ) முல்லைத்திணை

(ஈ) நெய்தல் திணை

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) பாலைத்திணை

அகநானூறு பாடல் வைப்பு முறை:

1,3,5,7 —- பாலைத்திணை.

2,8,12,18— குறிஞ்சித்திணை.

4,14,24,34 —- முல்லைத்திணை.

6,16,26— மருதத்திணை.

10,20,30,— நெய்தல் திணை.

19. பொருந்தாத சொல்லைத் தெரிவு செய்க:

(அ) கலித்தொகை

(ஆ) குறுந்தொகை

(இ) நெடுந்தொகை

(ஈ) நறுந்தொகை

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) நறுந்தொகை

கலித்தொகை, குறுந்தொகை, நெடுந்தொகை (அகநானூறு) ஆகியவை எட்டுத்தொகை நூல்களாகும்.

நறுந்தொகை என்பது பிற்காலத்தில் எழுந்த நீதிநூல்களுள் ஒன்றாகும். இது வெற்றிவேற்கை எனவும் அறியப்படும். இந்நூலின் ஆசிரியர் அதிவீரராம பாண்டிய மன்னர் ஆவார். இவர் இயற்றிய வேறு நூல்கள் நைடதம், கூர்மபுராணம், இலிங்கபுராணம், காசிக்காண்டம், வாயுசங்கிதை, திருக்கருவை அந்தாதிகள் ஆகியவையாகும். இவர் வடமொழியிலும் வல்லவராக இருந்தார் என்பதை மேற்கண்ட நூல்களை தமிழில் எழுதியது மூலமாக அறிந்து கொள்ள முடிகிறது. இவரின் காலம் கி.பி16-ஆம் நூற்றாண்டு என ஆய்வறிஞர்கள் கருதுகின்றனர்.

1564 முதல் 1604 வரை இவர் ஆட்சி செய்தார் என ஆய்வாளர்கள் கருகின்றனர்.

20. திரிகடுகம் நூலின் ஆசிரியர்

(அ) விளம்பி நாகனார்

(ஆ) நல்லாதனார்

(இ) முன்றுறையரையயார்

(ஈ) பெருவாயின் முள்ளியார்

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) நல்லாதனார்

1 2 3 4 5 6 7 8 9Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!