General StudiesTnpsc

Tnpsc Model Question Paper 12 – General Studies in Tamil & English

1. பின்வருவனவற்றை பொருத்தவும்.

a. IIPGCMS 1. மின் ஆளுமை மற்றும் பாதுகாப்பு

b. CERT-TN 2. MSMEக்கான தொழில் கடன்

c. ECLGS 3. கிராமப்புற தொழில்களுக்கு புத்துயிர்

d. TNRTP 4. உதவி மைய மேலாண்மை

Match the following:

(a) IIPGCMS 1. E-governance and security

(b) CERT-TN 2. Business credit for MSMEs

(c) ECLGS 3. Rejuvenate rural Industries

(d) TNRTP 4. Helpline Management System

a b c d

a. 4 1 2 3

b. 3 2 4 1

c. 3 4 1 2

d. 2 3 4 1

2. தமிழக கல்லூரிகளில் தமிழை பயிற்று மொழியாக அறிமுகப்படுத்திய ஆண்டு

The Tamil language was introduced as a medium of instruction in the college of Tamilnadu in the year

(a) 1980

(b) 1972

(c) 1982

(d) 1970

3. ஓய்வூதியதாரர்களுக்கான மின்னணு ஆயுள் சான்றிதழின் பெயர் என்ன?

What is the name of the Digital Life Certificate for Pensioners?

(a) ஜீவன் ஜோதி / Jeevan Jyoti

(b) ஜீவன் பிரமாண் / Jeevan Pramaan

(c) இந்திர தனுஷ் / Indra Dhanush

(d) நிதி ஆயோக் / NITI Aayog

4. தமிழகத்தின் உள்ள மொத்த இட ஒதுக்கீடு ———— சதவீதம்

The total percentage of reservation given in Tamilnadu

(a) 69

(b) 67

(c) 68

(d) 70

5. கிராமப்புற பெண்கள் பொருளாதார ரீதியில் அதிகாரமடைத்தலுக்கென, ஸ்திரி சக்தி திட்டம், ———– மாநில அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.

The Stree Shakti Scheme was introduced by ———— government to empower rural women economically.

(a) தமிழ்நாடு / Tamilnadu

(b) கேரளா / Kerala

(c) கர்நாடகா / Karnataka

(d) ஆந்திர பிரதேசம் / Andhra Pradesh

6. 1937-40ல் நடைபெற்ற முதல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டவர் யார் என்பதைத் தேர்ந்தெடுத்து எழுதுக:

Among the following who participated in the first Anti Hindi Agitation of 1937-40

(a) பத்மாவதி ஆஷார் / Padmavathy Ashar

(b) லீலாவதி / Leelavathy

(c) ருக்மணி இலக்ஷ்மிபதி / Rukmani Lakshmipathy

(d) மூவலூர் இராமமிர்தம் / Muvalur Ramamirtham

7. ஜஸ்டிஸ் கட்சியின் முந்தைய பெயர்

Early name of the Justice Party was

(a) மதராஸ் மகாஜன சபை / Madras Mahajana Sabha

(b) மதராஸ் நேட்டிவ் அசோசியேஷன் / Madras Native Association

(c) தென்னிந்திய விடுதலை கூட்டமைப்பு / South Indian Liberal Federation

(d) திராவிடர் கழகம் / Dravidar Kazhagam

8. பட்டியல் I-ஐ பட்டியல் II-உடன் பொருத்தி, கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையை தெரிவு செய்க:

பட்டியல் – I சுதந்திர போராட்ட வீரர்கள் பட்டியல்-II பிறந்த இடம்

a. செண்பகராமன் 1. செங்கோட்டை

b. மாடசாமி 2. வத்தலகுண்டு

c. வாஞ்சிநாதன் 3. நாஞ்சில் நாடு

d. சுப்ரமணிய சிவா 4. ஓட்டபிடாரம்

Match List I with List II and select the correct answer using the codes given below:

List I – Freedom Fighters List II – Birth Place

a. Chenbagaraman 1. Sengottai

b. Madasamy 2. Vathalagundu

c. Vanchinathan 3. Nanjilnadu

d. Subramaniya Siva 4. Ottapidaram

a b c d

a. 3 4 1 2

b. 4 3 2 1

c. 2 4 3 1

d. 1 2 3 4

9. மக்கட் பண்பு இல்லாதவர்கள் எதற்குச் சமமானவர்கள்? என்கிறார் வள்ளுவர்

According to Thiruvalluvar those who do not have good humane nature are compared to

(a) எலும்புதோல் போர்த்தவர் / a skeleton covered by skin

(b) மரம் போன்றவர் / a tree

(c) நடை பிணம் போன்றவர் / a body without soul

(d) விலங்கு போன்றவர் / An animal

10. வள்ளுவர் கூற்றுப்படி மழலைச் சொல் கேளாதவர் எவற்றை இனிது என்பார்கள்?

What will be the sweetest one to those who have not heard the words of a baby according to Thiruvalluvar?

(a) குழலிசை, யாழிசை / Music of Flute, Music of Yaazh (Yazhisai)

(b) குழலிசை, மத்தள இசை / Music of Flute, Music of Drums

(c) யாழிசை, வீணையிசை / Music of Yazh, Music of Veena

(d) வீணையிசை, குழலிசை / Music of Veena, Music of Flute

11. தமிழுக்கு “கதி” என்று அழைக்கப்படுபவர்கள்

Identify the writers who are referred to as the “Kathi” of Tamil.

(a) இளங்கோ, புகழேந்தி / Elango, Pugazhendhi

(b) கம்பர், திருவள்ளுவர் / Kambar, Thiruvalluvar

(c) ஒளவையார், பரணர் / Aavaiyar, Paranar

(d) கபிலர், பரணர் / Kapilar, Paranar

12. இரவலர்க்குக் குதிரைகள் நல்கிய கடையெழு வள்ளர் யார்?

Who among the Kadai elu vallal offered horses to the needy people?

(a) அதியமான் / Athiyamaan

(b) பாரி / Paari

(c) காரி / Kaari

(d) ஆய்அண்டிரன் / Aai Andiran

13. தமிழகத்தில் எவ்விடத்தில் ரோமானிய குடியரசு காசுகள் கிடைத்தன?

Where are the earliest Republic of Roman coins available in Tamilnadu?

(a) சென்னை / Chennai

(b) கரூர் / Karur

(c) மதுரை / Madurai

(d) தஞ்சாவூர் / Thanjavur

14. மருத குலத்தில் வாழும் மக்கள்

The inhabitants of Marudam lands were:

(a) குறவர் / Kuravar

(b) உழவர் / Ulavar

(c) இடையர் / Idayar

(d) ஆயர் / Ayar

15. கீழ்கண்ட பத்திரிக்கைகளில் மகாத்மா காந்தி ஆரம்பிக்காத அவரோடு தொடர்பற்ற பத்திரிக்கை எது?

Which one of the following journal not started and associated with Mahatma Gandhi?

(a) இந்தியன் ஒப்பினியன் / Indian Opinion

(b) எங் இந்தியா / Young India

(c) நவஜீவன் / Navajeevan

(d) ஹிந்துஸ்தான் டைம்ஸ் / Hindustan times

16. ஆங்கிலேயர்கள் தங்கள் கவனத்தை வ.உ.சிதம்பரம் பெயரில் செலுத்தக் காரணம் எது?

How did V.O.Chidambaram attracted the attention of the British?

(a) வ.உ.சி. கடல் கடந்த வாணிபத்தின் பண்டைய பெருமையை மீண்டும் ஏற்படுத்தினார் / V.O.C. reestablished the maritime glory of the past.

(b) நீராவி கப்பல் கம்பெனியின் பங்குகளை விற்றார் / Sold the shares of the Steam Navigation Company

(c) வ.உ.சி. மக்களின் கவனத்தை சுதேசி இயக்கத்தின் பால் ஈர்த்தார் / V.O.C. turned the public opinion infavour of the Swadeshi Movement.

(d) சுதேசி நீராவி கப்பல் கம்பெனியை தொடங்கினார் / Launched a Swadeshi Steam Navigation Company.

17. ——— என்பவர் பகத்சிங்-ன் மாமா மற்றும் பாரத மாதா கழகம் என்ற அமைப்பை தோற்றுவித்தவராவார்.

———– was the uncle of Bhagat Singh who founded the “Revolutionary Bharat Mata Society”

(a) அர்ஜீன் சிங் / Arjun Singh

(b) அஜித் சிங் / Ajit Singh

(c) பல்பீர் சிங் / Balbir Singh

(d) குல்தீப் சிங் / Kuldeep Singh

18. சுயராஜ்ய கட்சியை ஆரம்பித்தவர்

Founder of the Swaraj Party

(a) பால கங்காதர திலகர் / Bala Gangadhara Tilak

(b) சித்தரஞ்சன் தாஸ் மற்றும் மோதிலால் நேரு / Chittaranjan Dass and Motilal Nehru

(c) பிபின் சந்திர பால் / Bipin Chandra Pal

(d) அன்னிபெசண்ட் / Annie Besant

19. எந்த ஐந்தாண்டுத் திட்டமானது “விரைவான நிலையான மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சி” என்பதை நோக்கம் மற்றும் உத்தியாகக் கொண்டிருந்தது?

Which Five Year Plan has the vision and strategy to “Achieve Faster, Sustainable and more inclusive growth”?

(a) 10வது திட்டம் / Tenth Plan

(b) 12 வது திட்டம் / Twelfth Plan

(c) 9 வது திட்டம் / Ninth Plan

(d) 8 வது திட்டம் / Eighth Plan

20. பின்வருவனவற்றுள் எது விவசாய பொருட்களின் விலைக் கொள்கை கருவிகள் இல்லை?

Which of the following is not an instrument of Agriculture price policy?

(a) இடையக பங்கு / Buffer stocks

(b) ஆதரவு விலைகள் / Support prices

(c) கொள்முதல் விலைகள் / Procurement prices

(d) விவசாயிகளுக்கு கடன் வசதி செய்து தருதல் / Credit facility to farmers

21. மானிய உதவி மாநிலங்களுக்கு வழங்கப்படுவது ஏன்?

The grant-in-aid are given to the states for

(a) மத்திய-மாநிலங்களுக்கு இடையே நல்ல உறவுகளை பராமரித்தல் / Maintaining cordial Centre-State Relation

(b) மாநில வரவு செலவுத் திட்டங்களில் வழக்கமான இடைவெளிகளை நிரப்புவதற்காக / Covering routine gaps in state budgets

(c) மாநில திட்டங்களுக்கு நிதியளிக்க / To finance state plans

(d) அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநிலங்களுக்கு உதவுதல் / Assisting states to undertake development activities and welfare schemes.

22. இந்திய கூட்டாட்சி முறையை “கூட்டுறவுக் கூட்டாட்சி” என விவரித்தவர் யார்?

Who described Indian Constitution as Co-Operative Federalism?

(a) கிரான்வில் ஆஸ்டின் / Granville Austin

(b) டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர் / Dr.B.R.Ambedkar

(c) ஜவஹர்லால் நேரு / Jawaharlal Nehru

(d) D.C.வேரீ / D.C.Wheree

23. கீழ்கண்டவற்றுள் எது ஒரு குடிமகனின் கடமையல்ல?

Which one of the following is not a duty of every citizen?

(a) அரசியலமைப்புக்கு ஏற்ப நடந்து அதனுடைய கோட்பாடுகள் நிறுவனங்கள், தேசிய கொடி மற்றும் தேசிய கீதம் ஆகியவற்றை மதித்து நடத்தல் / To abide by the constitution and represent the ideas and institution National flag and National Anthem

(b) இந்தியாவின் இறைமை, ஒற்றுமை, ஒருமைப்பாடு ஆகியவற்றை பேணி பாதுகாக்க வேண்டும் / To uphold and protect the sovereignty, unity and integrity of India

(c) தேவைப்படும் போது எல்லாம் நாட்டை பாதுகாப்பதும், நாட்டுக்கு சேவை செய்யவும் வேண்டும் / To defend the country and render national service when called upon to do so

(d) கட்டாய இராணுவ சேவை செய்ய வேண்டும் / To do compulsory military service.

24. பஞ்சாயத்து ராஜ் பற்றிய குழுக்களை அதன் தலைவருடன் பொருத்துக:

பஞ்சாயத்து தலைவர்

a. பஞ்சாயத்து ராஜ் தேர்தல் 1. ஜி.ராமச்சந்திரன்

b. பஞ்சாயத்து ராஜ் பயிற்சி மையங்கள் 2. வி.ஆர்.ராவ்

c. சமுதாய மேம்பாடும் பஞ்சாயத்துராஜீம் 3. கே.சந்தானம்

d. பஞ்சாயத்துராஜின் புள்ளியியல் பகுப்பாய்தல் 4. திருமதி தயா சவுபே

Match the following committees on Panchayat Raj with their Chair persons.

Committee Chairman

a. Panchayat Raj Elections 1. G.Ramachandran

b. Panchayat Raj Training Centres 2. V.R.Rao

c. Community development and Panchayat Raj 3. K.Santhanam

d. Rationalisation of Panchayat Statistics 4. Smt. Daya Choubey

a b c d

a. 3 4 1 2

b. 3 1 4 2

c. 4 1 2 3

d. 1 3 4 2

25. இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படை வடிவத்தை மாற்ற இயலாது என்று கூறிய வழக்கு எது?

Name the case which held that the basic structure of the Indian Constitution cannot be destroyed.

(a) சங்கரி பிரசாத் Vs. இந்திய ஒன்றியம் / Shankari Prasad Vs. Union of India

(b) கோலக் நாத் Vs. பஞ்சாப் மாநிலம் / Golaknath Vs. State of Punjab

(c) கேசவானந்த பாரதி Vs. கேரள அரசு / Kesavanand Bharathi Vs. State of Kerala

(d) மினர்வா மில் Vs. இந்திய ஒன்றியம் / Minerva Mills Vs. Union of India

26. இந்தியாவிலுள்ள “சாங்போ” இனத்தவரை குறிப்பிடுகையில் கீழே உள்ள அறிக்கைகளில் எது சரியானதாக கருதப்படுகிறது.

1. அவர்கள் முக்கியமாக உத்ரகாண்ட் மாநிலத்தின் வாழ்கிறார்கள்.

2. அவர்கள் பஸ்நினா என்ற வெள்ளாட்டிலிருந்து அதிகப்படியான கம்பளியை பெறுகின்றனர்.

3. அவர்கள் மலைவாழ் இனத்தவர் என்ற பிரிவில் இருக்கின்றனர்.

With reference to “Changpa” community of India, consider the following statement:

i. They live mainly in the state of Uttarakhand

ii. They rear the pashmina goat that yield a fine wool

iii. They are kept in the category of scheduled tribe

Which of the statements given above is/are correct?

(a) 1 மட்டும் / i only

(b) 2 மற்றும் 3 மட்டும் / ii and iii only

(c) 3 மட்டும் / iii only

(d) 1, 2 மற்றும் 3 / i, ii and iii

27. விஜய நகர பேரரசின் வளத்தை குறிப்பிடும்பொழுது கீழ்வருவனவற்றை கவனிக்கவும்.

1. விஜய நகர பேரரசின் வளர்ச்சிக்கு காரணம் அதன் விவசாயம், தொழிற்சாலை, வாணிபம்.

2. மாநிலங்கள் நீர்ப்பாசன முறையை கடைப்பிடித்தது.

3. தொழிற்சலைகளுக்கு மாநிலம் முக்கியத்துவம் கொடுத்தது.

4. வாணிபம் உள்நாடு, கடற்கரை ஓரம், வெளிநாட்டைச் சார்ந்தது.

மேலே கூறப்பட்டுள்ள கூற்றின் கால நிகழ்வில் எது சரியானவை?

With reference to the prosperity of the Vijayanagar Empire, consider the following statements and organize it with chronological sequences.

i. The prosperity of the Vijayanagar Empire was due to the growth of Agriculture, Industries, Trade and Commerce

ii. The state followed an irrigation policy

iii. Industries were also encouraged by the state

iv. commerce was in land coastal and overseas

(a) 1-2-3-4 / i-ii-iii-iv

(b) 4-3-2-1 / iv-iii-ii-I

(c) 2-3-4-1 / ii-iii-iv-i

(d) 3-1-4-2 / iii-i-iv-ii

28. சிந்து சமவெளி மக்களின் சமய நம்பிக்கையில் கீழ்க்கண்ட கூற்றில் எவை சரியானவை?

1. தாய் வழிபாடு கலாச்சாரம் சமுதாயத்தில் உள்ளது.

2. உருவ வழிபாட்டில் கடவுள் வழிபாடு என்று வெளிச்சத்துக்கு கொண்டு வரப்பட்டது.

Indicate whether the following statements are correct regarding the religious faiths and beliefs of the people of Indus Valley Civilization

i. The cult of the Divine Mother seems to have been widely prevalent

ii. Many figurines of the Mother-Goddess have come to light

(a) 1 மற்றும் 2 / i and ii

(b) 1 / i

(c) 2 / ii

(d) 1ம் அல்ல 2ம் அல்ல / Neither i or ii

29. ஒளி வேதிப்புகை மூட்டத்தில் உள்ள முக்கிய வாயுக்கூறுகள் யாவை?

The main constituents of photo chemical – smog are

(a) நைட்ரஜன் ஆக்ஸைடுகள், CO மற்றும் SO2 / oxides of nitrogen, CO and SO2

(b) நைட்ரஜன் ஆக்ஸைடுகள், CO மற்றும் H2S / oxides of nitrogen, CO and H2S

(c) நைட்ரஜன் ஆக்ஸைடுகள், ஓசோன் ஹைட்ரோ கார்பன்கள் / oxides of nitrogen, ozone and hydrocarbons

(d) நைட்ரஜன் ஆக்ஸைடுகள், SO2 மற்றும் ஹைட்ரோ கார்பன்கள் / oxides of nitrogen, SO2 and hydrocarbons

30. பசுமை மாறாக் காடுகள் காணப்படும் மாநிலம்

The evergreen forests are found in the state of

(a) அருணாச்சலப் பிரதேசம் / Arunachal Pradesh

(b) ஒடிசா / Odissa

(c) மேற்கு வங்காளம் / West Bengal

(d) ஆந்திரப்பிரதேசம் / Andhra Pradesh

31. இந்திய திட்ட நேரத்தை கணக்கிட பயன்படுத்தப்படும் தீர்க்கரேகையானது

The longitude used to determine the standard time of India is

(a) 37o 6’ கி / 37o 6’ E

(b) 68 o 7’ கி / 68 o 7’ E

(c) 97 o 25’ கி / 97 o 25’ E

(d) 82 o 30’ கி / 82 o 30’ E

32. FAME திட்டத்தின் நோக்கம்

FAME scheme aims at

(a) பொது போக்குவரத்தை மின்மயமாக்க / Electrification of public transportation

(b) கிராமப்புறங்களில் உள்ள குடும்பங்களை மின்மயமாக்க / Electrification of households in rural areas

(c) நகர்ப்புறங்களில் உள்ள குடும்பங்களை மின்மயமாக்க / Electrification of households in urban areas

(d) பூங்காக்கள் மற்றும் கடற்கரையை மின்மயமாக்க / Electrification of parks and beaches

33. “குடியரசு” எனும் பதம் முதன் முதலில் சொல்லப்பட்ட இடம்

The term “Republic” was first coined in

(a) கிரேக்கம் / Greek

(b) ரோம் / Rome

(c) ஜெர்மனி / Germany

(d) பிரான்சு / France

34. கீழ்காணப்படும் பழங்குடியினர் மற்றும் அவர்களின் இருப்பிடம், எது/எவை சரியாக பொருத்தப்பட்டுள்ளன?

பழங்குடியினர் (பெயர்) இருப்பிடம்

அ. ஜாராஸ் அந்தமான் நிகோபார் தீவுகள்

ஆ. காக்ரா உத்திரப்பிரதேசம்

இ. கோராகா தமிழ்நாடு

ஈ. ரத்தவா பீஹார்

Which of the following tribes and their location is/are correctly matched?

Tribes (Name) Location

(a) Jarawas Andaman and Nicobar Islands

(b) Gagra Uttar Pradesh

(c) Koraga Tamilnadu

(d) Rathawa Bihar

(a) அ மற்றும் இ / a and c

(b) ஆ மற்றும் ஈ / b and d

(c) அ மற்றும் ஆ / a and b

(d) இ மற்றும் ஈ / c and d

35. விலங்குகளின் ஒரு பகுதி மற்றொரு பகுதியோடு அடிப்படையில் ஒத்திருப்பது ———– என்று அழைக்கப்படுகிறது.

The fundamental similarity of structures between one part of an animal and other part of the same animal is called as

(a) சீரியல் ஹோமாலஜி / Serial Homology

(b) சீரியல் இணையுறுப்புகள் / Serial appendages

(c) சீரியல் வாயுறுப்புகள் / Serial mouth parts

(d) வெஸ்டிஜியல் உறுப்புகள் / Vestigial organs

36. d-தொகுதி தனிமங்கள் இவ்வாறு அழைக்கப்படுகிறது

d-block elements are called as

(a) உள்இடைநிலைத் தனிமங்கள் / Inner transition metals

(b) இடைநிலைத் தனிமங்கள் / Transition metals

(c) கார உலோகங்கள் / Alkali metals

(d) கார மண் உலோகங்கள் / Alkaline earth metals

37. கீழ்காண்பவற்றுள் எது சரியான கூற்று?

Which of the following statement is correct?

(a) எந்த பொருளும் ஒளியின் வேகத்தை தாண்டாது / No material body can exceed the speed of light

(b) ஒரு பொருளின் எடை எப்போதும் மாறாதது / The mass of an object is always invariant

(c) ஒரு பொருளின் எடை அதன் வேகத்தை பொறுத்ததல்ல / The mass of an object is independent of its velocity

(d) சுழி நிலை எடையுள்ள எந்தத் துகளும் இல்லை / No particles with zero rest mass

38. பொருள் உணராமல் கற்றல் எங்கு பயன்படுத்தப்படலாம் என்பதை அடையாளம் காண்க:

Identify where rote learning can be used

(a) அணுக்கள் மற்றும் கூறுகளைப் பற்றி கற்றல் / Learning about atoms and elements

(b) பெருக்கல் அட்டவணைகளை கற்றல் / Learning multiplication tables

(c) ஒரு கனச்செவ்வகம் பற்றி கற்றல் / Learning about cuboid

(d) சமநிலை பற்றி கற்றல் / Learning about balance

39. கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றை கருத்தில் கொள்க:

1. மாநில அரசின் பல்வேறு துறைகளில் மின்-ஆளுமை அமலாக்கத்திற்கு வழிகாட்டுதல்.

2. தமிழ் மொழி மற்றும் தமிழ் யூனிகோட் பயன்பாட்டை ஊக்குவித்தல்.

3. அரசின் உறபத்தி திறன் அளவை ஊக்குவித்தல்.

4. B2B மற்றும் B2C-யின் தடையில்லா பணிகளுக்கு ஆதரவளித்தல்.

5. G2G மற்றும் G2C-யின் தடையில்லா பணிகளுக்கு ஆதரவளித்தல்.

6. அகண்ட அலைவரிசை பயன்பாட்டை அதிகரித்தல்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ளவற்றுள் தமிழக அரசின் மின் ஆளுமைக் கொள்கை 2017-ன் நோக்கங்களை கண்டறிந்து குறிப்பிடு

Consider the following statements:

i. Provide direction to e-governance implementation in the various department of State Govt.

ii. Promote the use of Tamil language and Tamil Unicode standard.

iii. Improve productivity levels within the Govt.

iv. To support seamless services of B2B and B2C.

v. To support seamless services of G2G and G2C.

vi. Increase the broadband connectivity.

Identify the objectives of e-Governance Policy (2017) of Tamil Nadu Government.

(a) 1, 2, 4, 5 மற்றும் 6 / i, ii, iv, v and vi

(b) 1, 2 மற்றும் 4 மட்டும் / i, ii and iv only

(c) 1, 2, 3, 4 மற்றும் 6 / i, ii, iii, v and vi

(d) 1, 4 மற்றும் 6 மட்டும் / ii, iv and vi only

40. இந்தியாவில் மொத்தம் 13 பெரிய துறைமுகங்கள் உள்ளன. அவற்றில் 12 அரசு துறைமுகங்கள் ———- ஒன்று மட்டும் பெரு நிறுவன துறைமுகமாகும்.

There are 13 major sea ports in India. Out of which 12 are government ports, ———- is the only corporate port.

(a) தூத்துக்குடி துறைமுகம் / Tuticorin Port

(b) போர்ட் பிளைர் துறைமுகம் / Port Blair

(c) எண்ணூர் துறைமுகம் / Ennore port

(d) சென்னை துறைமுகம் / Chennai Port

41. கீழ்க்கண்டவற்றைப் பொருத்துக:

திட்டம் பெயர்

a. மகப்பே றுநல உதவித்திட்டம் 1. அன்னை தெரசா

b. வளரிளம் பெண்கள் மேம்பாட்டுத் திட்டம் 2. சத்தியவாணி முத்து அம்மையார்

c. இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் 3. ராஜீவ் காந்தி

d. ஆதரவற்ற பெண்களுக்கு திருமண நிதி உதவித்திட்டம் 4. இந்திரா காந்தி

Match the following:

Scheme Name

a. Maternity Benefit Scheme 1. Annai Therasa

b. Adolescent Girls Empowerment Scheme 2. Sathiyavani Muthu Ammaiyar

c. Free Sewing machine scheme 3. Rajiv Gandhi

d. Marriage Assistance for orphan girls 4. Indira Gandhi

a b c d

a. 1 3 2 4

b. 4 2 3 1

c. 1 4 2 3

d. 4 3 2 1

42. டாக்டர் முத்துலெட்சுமி எந்த சமுதாய தீமைக்கு எதிராக போராடினார்?

Dr.Muthulakshmi fought against which social evil?
(a) குழந்தைத் திருமணம் / Child Marriage

(b) தேவதாசி அமைப்பு / Devadasi System

(c) வரதட்சணை அமைப்பு / Dowry System

(d) பலதார மணம் / Polygamy

43. “பெண் வேலை பங்கேற்பு விகிதம்” அதிகம் கொண்ட மாவட்டம்

The highest female work participation rate is in the district of Tamilnadu

(a) காஞ்சிபுரம் / Kancheepuram

(b) சென்னை / Chennai

(c) கோயம்புத்தூர் / Coimbatore

(d) பெரம்பலூர் / Perambalur

44. காமராஜர் தமிழக முதலமைச்சராக எத்தனை ஆண்டுகள் பணியாற்றினார்?

How many years Kamarajar served as Chief Minister of Tamilnadu?

(a) 5

(b) 7

(c) 9

(d) 15

45. தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவருமானவர் – உப்பு சத்தியாகிரகத்தை எடுத்து நடத்தி கைது செய்யப்பட் முதல் பெண்மணி

Name the first lady who was arrested in connection with Salt Satyagraha and the president of the Tamilnadu provincial congress committee

(a) திருமதி.ருக்மணி லட்சுமிபதி / Smt. Rukmani Lakshmipati

(b) சரோஜினி நாயுடு / Sarojini Naidu

(c) அம்புஜம்மாள் / Ambujammal

(d) பார்வதி தேவி / Parvathi Devi

46 எல்லா உயிர்களாலும் கைகூப்பித் தொழப்படுபவர் யார்?

Who will be adored with clasped hands by all living beings?

(a) தவம் செய்தவன் / One who does penance

(b) அரசன் / King

(c) கொல்லான் புலால் மறுத்தான் / One who slays not, flesh rejects

(d) நுண்மான் நுழைபுலம் இல்லான் / One who talks power of subtle penetrating sense

47. நூலோர் தொகுத்த அறங்களுள் தலையாய அறமாகத் திகழ்வது எது எனத் திருக்குறள் வலியுறுத்துகிறது?

Which is considered the Chief of all virtues as told by the sages in their writings according to Thirukural?

(a) பிற உயிர்களின் துன்பத்தை நீக்குதல் / Taking away the troubles of other living beings

(b) பிறர் மனைவியை விரும்பாமல் இருத்தல் / Not coveting others wives

(c) பிற உயிர்களிடத்து அன்பு செலுத்துதல் / Being kind to other living beings

(d) பகிர்ந்து உண்டு உயிர்களைப் பாதுகாத்தல் / To share your food and protect others

48. ஆபுத்திரனே!

அமுதசுரபியைத் தான்

நீ தந்து சென்றாய்

இப்போது

எங்கள் கையில் இருப்பதோ

பிச்சைப்பாத்திரம்

– ஆபுத்திரன் யார்? அமுதசுரபி எது?

Aaputhirane!

You bestowed and left us

Amuthasurabhi

Now

In our hands we hold a

Begging bowl

Who is “Aaputhiran” and what does the poet mean by “Amuthasurabhi”?

(a) அரசன், அட்சயபாத்திரம் / King, Atchayapaathiram

(b) காந்தியடிகள், விடுதலை / Gandhiji, Freedom

(c) மணிமேகலை, அட்சயபாத்திரம் / Manimekalai, Atchayapaathiram

(d) காமதேனு, கற்பகத்தரு / Kaamadhenu, Karpagatharu

49. “வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளும்

கீழ்ப்பால் ஒருவன் கற்பின்

மேற்பால் ஒருவனும் அவன்கட் படுமே”

– என்ற புறநானூற்றுப் பாடலில் கீழ்ப்பால், மேற்பால் என்பதன் உட்கருத்து யாது?

“Though a mother gave birth four different children, the lowest one if he be an educated the highest one though he is an elder may bow and obey to him”

Find out the real meaning of the term “lowest and highest” in the above puranaanuru song.

(a) வறுமை, வளமை / Drought and fertile

(b) இனப்பாகுபாடு / Caste discrimination

(c) பிறப்பினால் வரும் சிறப்பினும் கல்வி அறிவினால் எய்தும் பெருமை / The one who attains fame and name not by birth but by education

(d) எல்லோரும் கல்வி கற்று மேம்பட வேண்டும் / All must be educated

50. கூற்று (A): அதுவரை நாட்டைப் பிரிவினை செய்யும் முயற்சிக்கு எதிராக இருந்த காந்தியடிகள் முஸ்லீம் லீக்கின் பாகிஸ்தான் கோரிக்கையை ஏற்றார்.

காரணம் (R): லீக் “நேரடி நடவடிக்கை நாளில் ஈடுபட அழைத்ததோடு கல்கத்தாவில் கலவரங்களும் கொள்ளைகளும் நடந்தேரின”

Assertion (A) : Gandhi who was centil then resisting any effort to vivisect the country had to accept the demand of the Muslim League for creation of Pakistan.

Reason (R) : While observing “Direct Action Day” by Muslim League the rioting and killing that took place in Calcutta led to a terrible violence.

(a) கூற்று (A) சரி காரணம் (R) கூற்றை விளக்குகிறது / (A) is correct and (R) explains (A)

(b) கூற்று (A) சரி காரணம் (R) தவறு / (A) is correct and (R) are wrong

(c) கூற்று (A) தவறு காரணம் (R) சரி / (A) is wrong and (R) correct

(d) கூற்று (A) சரி ஆனால் காரணம் (R) கூற்றை விளக்கவில்லை / (A) is correct and (R) does not explains (A)

51. இந்திய தேசிய காங்கிரசில் நீண்ட காலம் தலைவராக இருந்தவர் யார்?

Who was the longest President of Indian National Congress?

(a) பானர்ஜி / W.G.Banerjee

(b) ராஷ் பிகாரி கோஷ் / Rash Behari Ghosh

(c) அபுல்கலாம் ஆசாத் / Abul Kalam Azad

(d) அன்னிபெசண்ட் / Annie Besant

52. கீழ்க்கண்ட கூற்றுகளில் எ.ஓ.ஹீயமை பற்றி சரியான கூற்று யாது?

1. 1883 மற்றும் 1884 ஹீயும், ரிப்பன் பிரபுவிற்கு ஆலோசகராக பணிபுரிந்தார்.

2. பிரம்மஞான சபை என்ற அமைப்போடு நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார்.

3. 1884இல் இந்திய தேசிய யூனியனை ஆரம்பித்தார்.

4.இந்திய தேசிய யூனியனின் நோக்கம் இந்திய தேசியமாக இருந்தது.

Which of the following statement is correct regarding A.O.Hume?

i. In 1883 and 1884 Hume acted as an advisor to the Viceroy Lord Ripon.

ii. He closely associated with Theosophical Society.

iii. In 1884 he formed the Indian National Union.

iv. The object of the Indian National Union was “Indian Nationalism”

(a) 1, 2, 3 சரியான கூற்று 4வது கூற்று தவறானது / i, ii ii are correct iv is incorrect

(b) 1, 2 கூற்று சரியானது 3, 4 கூற்று தவறானது / i, ii are correct iii, iv are incorrect

(c) 1, 4 கூற்று சரியானது, 3, 2 கூற்று தவறானது / i, iv are correct iii, ii are incorrect

(d) 1, 2, 3, 4 கூற்று சரியானது / i, ii, iii, iv are correct

53. மனிதவள மேம்பாட்டு குறியீடு எதை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படுகிறது?

1. கல்வி நிலை.

2.ஆயுட்காலம்.

3.வாழ்க்கைத் தரம்.

4. இடப்பெயர்ச்சி இல்லாமை

On what basis, the human development index is formed?

i. Level of education.

ii. Life expectancy.

iii. Standard of living.

iv. Non-migration

(a) 1, 2 மற்றும் 4 / i, ii and iv

(b) 1, 3 மற்றும் 4 / i, iii and iv

(c) 2, 3 மற்றும் 4 / ii, iii and iv

(d) 1, 2 மற்றும் 3 / i, ii and iii

54. குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவன வளர்ச்சி சட்டம் 2006ன் கூற்றுப்படி சிறு நிறுவனத்தின் மூலதனத் தொகை ———– ஆகும்.

According to Micro, Small and Medium Enterprise development Act 2006, the investment for Small Enterprise is

(a) 1 லட்சம் – 25 லட்சம் / 1 lakh – 25 lakh

(b) 25 லட்சம் – 5 கோடி / 25 lakh – 5 crs

(c) 5 கோடி – 10 கோடி / 5 crs – 10 Crs

(d) 10 கோடிக்கு மேல் / above 10 crs

55. “ஒரு நாடு அதன் செலவுகளைக் கட்டுக்குள் வைத்திருக்கும் பட்சத்தில், அதன் வருமானம் குறைவாக இருந்தாலும் பாதகமில்லை” – இந்தக் கூற்றை கூறியவர்.

“Budget for a surplus if possible, balances the budget at other times, but never budget for a defit” – this statement was given by

(a) மகாத்மா காந்தியடிகள் / Mahatma Gandhi

(b) டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர் / Dr.B.R.Ambedkar

(c) திருவள்ளுவர் / Thiruvalluvar

(d) ஜவஹர்லால் நேரு / Jawaharlal Nehru

56. பின்வரும் கூற்றை கவனிக்க:

1. பிமரு மாநிலங்கள் அதிக மக்கட் தொகை கொண்டுள்ளன.

2. பிமரு மாநிலங்கள் குறைவான மக்கட் தொகை கொண்டுள்ளன.

3. பிமரு மாநிலத்தில் எழுத்தறிவு விகிதம் அதிகமாக உள்ளது.

4. இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் பிமரு மாநிலங்களில் தலா வருமானம் அதிகம்.

மேலே கண்டவற்றுள் எவை சரியான கூற்று?

Consider the following statement:

i. BIMARU states have high population.

ii. BIMARU states are low population.

iii. Literacy ratio is high in BIMARU state.

iv. Per capita income is high is BIMARU state, when compared to other states in India.

Among these, which of the following statement are correct?

(a) 2 மற்றும் 3 / ii and iii

(b) 3 மற்றும் 4 / iii and iv

(c) 1 மற்றும் 2 / i and ii

(d) 1 மட்டும் / i only

57. பின்வரும் வாக்கியம் I மற்றும் II கவனிக்கவும்.

சரியான விடையை தேர்வு செய்க:

1. பாராளுமன்றம் மத்திய பட்டியலில் சட்டம் இயற்றும் அதிகாரம் பெற்றது.

2 பொதுப்பட்டியல் மற்றும் மாநில பட்டியலில் இடம் பெறாதவைகளில் பாராளுமன்றமே சட்டம் இயற்றும் அதிகாரம் பெற்றுள்ளது.

Consider the following statement i and ii.

Choose correct answer:

i. Parliament is competent to make laws on matters enumerated in the Union List.

ii. Parliament alone has power to make Laws on matters not included in state or concurrent list.

(a) 1 உண்மை 2 தவறு / i True ii False

(b) 1 தவறு 2 உண்மை / i False ii True

(c) 1 மற்றும் 2 உண்மை / i and ii True

(d) 1 மற்றும் 2 தவறு / i and ii False

58. கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்தியாவின் உயர்நீதி மன்றங்களை கவனிக்கவும்:.

1. தில்லி உயர்நீதிமன்றம்.

2.ராஜஸ்தான் உயர்நீதிமன்றம்.

3. பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம்.

4. ஓரிசா உயர்நீதிமன்றம்.

இவை தொடங்கப்பட்ட காலத்தின் அடிப்படையில் வரிசைப்படுத்தவும்.

Consider the following High Courts in India:

i. Delhi High Court.

ii. Rajasthan High Court.

iii. Punjab and Haryana High Court.

iv. Orissa High Court.

Which one of the following is the correct chronology based on their formation?

(a) 4, 3, 2 மற்றும் 1 / iv, iii, ii and I

(b) 2, 3, 4 மற்றும் 1 / ii, iii, iv and i

(c) 3, 4, 2 மற்றும் 1 / iii, iv, ii and i

(d) 1, 3, 2 மற்றும் 4 / i, iii, ii and iv

59. கீழ்காணும் இவர்களில் எந்த பிரதம மந்திரி நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பின் மூலம் ராஜினாமா செய்யவில்லை.

Which of the following Prime Minister did not resign from his office due to No Confidence motion?

(a) H.D.தேவகவுடா / H.D.Deva Gowda

(b) வி.பி.சிங் / V.P.Singh

(c) மன்மோகன் சிங் / Manmohan Singh

(d) ஏ.பி.வாஜ்பாய் / A.B.Vajpayee

60. அரசியலமைப்பு 44வது திருத்த சட்டம் 1978, சொத்துரிமையை

1. அடிப்படை உரிமையிலிருந்து சட்ட உரிமையாக மாற்றியது.

2. சட்ட உரிமையிலிருந்து அடிப்படை உரிமையாக மாற்றியது.

3. அடிப்படை உரிமையிலிருந்து அரசியலமைப்பின் அடிப்படை கூறாக மாற்றியது.

மேற்கண்ட கூற்றுகளில் எது/எவை சரியானது?

The Constitution 44th Amendment Act 1978 changed the right to property from

i. Fundamental right to Legal Right.

ii. Legal Right to Fundamental Right.

iii. Fundamental Right to basic features of the Constitution.

Which one of the given statement is/are correct?

(a) 1 மட்டும் / i only

(b) 2 மட்டும் / ii only

(c) 3 மட்டும் / iii only

(d) 2 மற்றும் 3 மட்டும் / ii and iii only

61.”வேற்றுமையில் ஒற்றுமை” என்ற கருத்தில், இந்தியா இனங்களின் அருங்காட்சியகம் என்று உள்ளது கீழே கூறப்பட்டுள்ள கூற்றில் எது சரியானவை?

1. இந்தியாவில் பெரும்பான்மை மக்கள், இமயமலையிலிருந்து வந்த மக்களின் வழித் தோன்றல்கள்.

2.வேறுபட்ட இனமக்கள் பொதுவான இயற்கை உடல் அமைப்பு மற்றும் உணவு பழக்கத்தையும் கொண்டு இருந்தனர்.

With reference to “Unity in diversity”, India is an ethnological museum. Which of the following is the correct statement?

i. Majority of the people of India are descendants of immigrants from across the Himalayas.

ii. People belonging to different racial stocks have common physical appearance and food habits.

(a) 1 / i

(b) 2 / ii

(c) 1 மற்றும் 2 / both i and ii

(d) 1ம் அல்ல 2ம் அல்ல / Neither i nor ii

62. இந்தியாவில் முதன்முதலில் நிலக்கொடை பற்றிப் பேசும் கல்வெட்டு அமைந்துள்ள இடம் எது?

Where the first Indian inscription speaking of the gift of land is located

(a) அலகாபாத் / Allahabad

(b) கிர்னார் / Girnar

(c) நாசிக் / Nasik

(d) பாட்னா / Patna

63. 1739ம் ஆண்டு பெர்சிய மன்னர் நாதிர்ஷா இந்தியாவின் மீது படையெடுத்த பொழுது இந்தியாவை ஆட்சி செய்த முகலாய மன்னரின் பெயரைக் குறிப்பிடுக:

Mention the name of the Mughal ruler in India when the Persian ruler Nadir Shah invaded India in 1739

(a) பகதூர்ஷா -I / Bahadur Shah I

(b) பருக்க்ஷயர் / Farukksiyar

(c) முகம்மது ஷா / Muhammad Shah

(d) அகம்மது ஷா / Ahamed Shah

64. யாருடைய காலம் “சூத்திர கிரந்த காலம்” என்று அழைக்கப்படுகிறது?

Whose period was called the period of “Sutra Granthas”?

(a) மௌரியர்கள் காலம் / Mauryas

(b) குப்தர்களின் காலம் / Guptas

(c) சாளுக்கியர்களின் காலம் / Chalukyas

(d) சோழர்களின் காலம் / Cholas

65. கீழே கொடுக்கப்பட்டுள்ள ஹரப்பா பற்றிய கூற்றுகளில் எது தவறானது?.

1. ஹரப்பாவின் சுவர்கள் வலிமையற்றவை.

2. டேக்டானிக் குளறுபடிகளால் நகரம் அழிவுற்றது.

3. சிறிய தலையையுடைய அர்மீனிய மண்டை ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

4. ஹரப்பா கி.மு.1750-க்குப் பிறகு அழிவுற்றது.

Which of the following statement about Harappa are false?

i. The walls of Harappa were not strengthened.

ii. Tectonic disturbance caused the ruin.

iii. Short-headed Armenoid skulls were found.

iv. Harappa disappeared by about 1750 B.C.

(a) 1 மற்றும் 2 சரி 3 மற்றும் 4 தவறு / i and ii true iii and iv false

(b) 1 சரி 2, 3 மற்றும் 4 தவறு / i is true ii, iii and iv are false

(c) 1 தவறு 2, 3 மற்றும் 4 சரி / i is false ii, iii and iv are true

(d) 1, 2 மற்றும் 3 தவறு 4 சரி / i, ii and iii are false iv is true

66. சர்வதேச சுனாமி தகவல் மையம் அமைந்துள்ள இடம்

International Tsunami information centre is located in

(a) ஜகார்த்தா, இந்தோனேசியா / Jakarta, Indonesia

(b) ஹொனலுலு, அமெரிக்கா / Honolulu, USA

(c) புதுச்சேரி, இந்தியா / Puducherry, India

(d) கொலராடோ, அமெரிக்கா / Colorado, USA

67. 18ஆம் நூற்றாண்டின் புளுமென்பெக்கின் 5 வகையான உலக மனித இன வகைபாடு இதன் அடிப்படையிலானது.

Blumenbach classified 5 main races of the world during 18th Century, which is based on

(a) சிகை வடிவம் / Hair form

(b) மூக்கின் வடிவம் / Nose Shape

(c) விழி வண்ணம் / Eye colour

(d) சரும நிறம் / Skin colour

68. ஜோரம் பெரிய உணவு பூங்கா அமைந்துள்ள இடம்

Zoram Mega food park is in

(a) ஆந்திரப்பிரதேசம் / Andhra Pradesh

(b) திரிபுரா / Tripura

(c) மிசோரம் / Mizoram

(d) உத்திரப்பிரதேசம் / Uttar Pradesh

69. இந்தியாவில் காணப்படும் மிகப்பெரிய உப்பங்கழி ஏரி

The largest lagoon lake in India is

(a) பழவேற்காடு ஏரி / Pulicat lake

(b) கொல்லெரு ஏரி / Kolleru lake

(c) நாராயண் சரோவர் ஏரி / Narayan Sarovar lake

(d) சில்கா ஏரி / Chilka lake

70. கீழ்கண்டவற்றைப் பொருத்துக:

புகழ்பெற்ற நபர் தனித்துறை

a. சத்யா நாதெல்லா 1. தொலையுணர்வு

b. சித்தார்த் முகர்ஜி 2. பொருளாதாரம்

c. கீதா கோபிநாத் 3. மேகத்தொகுப்பு

d. S.K.சிவக்குமார் 4. மருத்துவம்

Match the following:

Personality Specialisation

a. Sathiya Nathella 1. Remote sensing

b. Sidhartha Mukerjee 2. Economics

c. Geetha Gopinath 3. Cloud computing

d. S.K.Siva Kumar 4. Medicine

a b c d

a 1 2 3 4

b. 3 4 2 1

c. 4 3 1 2

d. 2 1 4 3

71. பொறியியல், மானிடவியல், சமூக அறிவியல் போன்ற பாடத் தொகுதிகளை தேசிய அளவில் திறந்த இணைய வழி கல்வியாக அளித்துக் கொண்டிருக்கும் திட்டம் இதுவாகும்.

The scheme which offers many open online course at national level covering Engineering, Humanities, Social Science etc is known as

(a) சுபம் / Subam

(b) ஸ்வயம் / Swayam

(c) சுயம் / Suyam

(d) ஸ்வத்யம் / Swasthyam

72. ——— பாக்டீரியாவால் கம்பளி பிரிப்போர் நோய் உருவாகிறது.

Woolsorter’s disease is caused by

(a) பேசிலஸ் ஆந்த்ராசிஸ் / Bacillus Anthracis

(b) பேசிலஸ் செரியஸ் / Bacillus Cereus

(c) பேசிலஸ் மெகாட்டேரியம் / Bacillus Megaterium

(d) பேசிலஸ் சப்டிலிஸ் / Bacillus Subtilis

73. புளுமின் கற்பித்தல் நோக்கங்களின் வகைப்பாடு விளக்குவது (விவரிப்பது)

Bloom’s Taxonomy of Educational objectives describe about

(a) அறவுசார் மற்றும் உளசார் களங்கள் / Cognitive and Affective Domains

(b) அறிவுசார் மற்றும் உள-இயக்கம் சார் களங்கள் / Cognitive and Psycho – motor Domains

(c) அறிவுசார், உளசார் மற்றும் உள-இயக்கம் சார் களங்கள் / Cognitive, Affective and Psycho – Motor Domains

(d) உளசார் மற்றும் உள-இயக்கம் சார் களங்கள் / Affective and Psycho – motor Domains

74. கீழ்காண்பவற்றுள் எது காந்த சேமிப்பு சாதனம் ஆகும்?

Which of the following is a magnetic storage device?

(a) DVD

(b) பென் டிரைவ் / Pen Drive

(c) குறுந்தகடு / Compact Disc

(d) பிளாப்பி தகடு / Floppy Disc

75. சாதாரண நிலையிலிருந்து மீக்கடத்து நிலைக்கான மாற்றம் வெப்ப இயக்கவியலின் படி

The transition between normal and super conducting state is thermodynamically

(a) சுழியானது / Zero

(b) தொடர்ச்சியற்றது / Discontinues

(c) மீள முடியாதது / Irreversible

(d) மீளக்கூடியது / Reversible

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!