General StudiesTnpsc

Tnpsc Model Question Paper 16 – General Studies in Tamil & English

1. ஈஸ்டில் காணப்படும் ஸ்டீராய்டின் பெயர் என்ன?

Name the steroid found in yeast.

(a) லானோஸ்டீரால் / Lanosterol

(b) பித்த அமிலம் / Bile acids

(c) எர்கோஸ்டீரால் / Ergosterol

(d) ஆஸ்டிரியோஸ்டீரால் / Ostreasterol

2. பூச்சிகளின் ஹீமோலிம்பில் காணப்படும் சர்க்கரை ———- ஆகும்

The sugar found in insect haemolyph is

(a) செல்லோபயோஸ் / Cellobiose

.(b) மால்டோஸ் / Maltose

(c) டிரக்கலோஸ் / Trehalose

(d) குளுக்கோஸ் / Glucose

3. தற்கால உலகம் என்பது ————ஆல் உருவாக்கப்பட்டுள்ளது

The present form of the World was created by

(a) பரிணாம சக்திகளால் / Evolutionary forces

(b) கனிம மற்றும் கரிம பொருள்களால் / Inorganic and Organic Materials

(c) கடவுளால் / Almighty

(d) கரிம பரிணாமத்தால் / Organic evolution

4. ஜாவா குரங்கு மனிதனின் புதைபடிவமான பித்திகேன்தோரோபஸ் எரக்டஸ்யை கண்டுபிடித்தவர்.

The fossil of Java-Ape-Man Pithecanthropus erectus was discovered by

(a) மாயர் / Mayr

(b) சிம்சன் / Simpson

(c) எல்.எஸ்.பி.லீக்கி / L.B.Leakey

(d) டிபாயிஸ் / Dubois

5. ஒரு தனிமத்தின் பொருண்மை எண் “A”. அதன் அணுக்கருவின் பருமன் எந்த விகிதம்?

If “A” is the mass number of an element, then volume of the nucleus of an atom of this element is proportional to

(a) A

(b) A2

(c) A3

(d) A1/3

6. பின்வரும் துகள்களில் எலக்ட்ரானின் அதே அளவு நிறை கொண்ட துகள் எது?

Which of the following particles has same mass as that of the electron?

(a) புரோட்டான் / Proton

(b) நியூட்ரான் / Neutron

(c) பாசிட்ரான் / Positron

(d) நியூட்ரினோ / Neutrino

7. அறுவை சிகிச்சை செய்ய லேசர் கற்றை பயன்படுத்தப்படுகிறது ஏனெனில் அது

A laser beam is used for carrying out surgery because it

(a) மிகவும் ஓரியல் கற்றையாகும் / is highly coherent beam

(b) மிகவும் திசை கற்றை ஆகும் / is highly directional beam

(c) கூர்மையான குவியம் கொண்டது / is sharply focused

(d) மிகவும் ஒற்றை நிறமுடையது / is highly monochromatic

8. சோடியம் ஃப்ளோரோ அசிட்டேட், ஆல்பா நாப்தைல் யூரியா, நார்போர்மைடு மற்றும் தாலியம் சிட்டேட் ஆகியவற்றுள் கொறித்துண்ணிகளான எலிகளுக்கு மிகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட கொல்லியை தேர்ந்தெடு

Choose a highly selective rodenticide for rats among sodium fluro acetate, alpha naphthyl urea, norbormide and thallium acetate.

(a) சோடியம் ஃப்ளோரோ அசிடேட் / Sodium fluro acetate

(b) ஆல்பா நாப்தைல் யூரியா / Alpha naphthyl urea

(c) நார்போர்மைடு / Norbormide

(d) தாலியம் அசிட்டேட் / Thallium acetate

9. இந்திய விலங்கினம் கணக்கெடுப்பு மையத்தால் கீழ்க்கண்டவற்றுள் எது கஞ்சம் மாவட்டத்தில் உள்ள ருசிகுல்யா நதி வாய் வழியாக வலசைபோகும் அழிந்து வரும் இனங்களை ஆராய குறியீடு செய்யப்பட்டுள்ளது.

The zoological survey of India has recommended to tag which of these turtle along the Rushikulya river mouth in Ganjam district for studying the migration route of these endangered species.

(a) இந்திய கருப்பு ஆமை / Indian Black Turtle

(b) பச்சை கடல் ஆமை / Green Sea Turtle

(c) ஆலிவ் ரிட்லி ஆமை / Olive Ridleys Turtle

(d) இந்திய நட்சத்திர ஆமை / Indian Star Turtle

10. கங்கை நதியை சுத்தம் செய்வதற்காக கீழ்கண்ட திட்டங்களில் எது மத்திய அரசால் தொடங்கப்பட்டுள்ளது?

Which of the following programme has been launched by Central Government for the cleaning of River Ganga?

(a) கங்கா செயல் திட்டம் / Ganga Action Plan

(b) நமாமி கங்கே / Namami Gangae

(c) கங்கே நமாமி செயல்திட்டம் / Gangae Namami Action Plan

(d) கங்கையை சுத்தம் செய்யும் பணி / Ganga Cleaning Mission

11. 2021 ஜீன் 4ஆம் தேதி அறிவுசார் பொருளாதார மிஷன் எந்த அரசால் நிறுவப்பட்டது?

2021 Knowledge Economy mission was launched by ——— government on June 4th 2021

(a) மத்திய பிரதேசம் / Madhya Pradesh

(b) தமிழ்நாடு / Tamil Nadu

(c) உத்தர பிரதேசம் / Uttar Pradesh

(d) கேரளா / Kerala

12. அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு முதுமைப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பின்வருவனவற்றுள் இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம்

Which of the following schemes is introduced by government of India to ensure old age protection for unorganized workers?

(a) பிரதமரின் யுவா திட்டம் / Prime Minister’s Yuva Yojana

(b) பிரதமரின் ஸ்ரம் யோகி மன்-தன் திட்டம் / Prime Minister’s Shram Yogi Maan-Dhan Yojana

(c) பிரதமரின் வய வந்தனா திட்டம் / Prime Minister’s Vyay Vandana Yojana

(d) பிரதமரின் முத்ரா திட்டம் / Prime Minister’s Mudra Yojana

13. தோலாவிரா பழமையான ——– நகரம்

“Dholavira” is an ancient ———- city

(a) ஹரப்பன் / Harappan

(b) மொஹஞ்சதாரோ / Mohenjadaro

(c) கீழடி / Keeladi

(d) லோதல் / Lothal

14. வந்தே மாதரம் என்ற பாடல் ————- மொழியில் பங்கிம் சந்திர சட்டர்ஜியால் இயற்றப்பட்டது.

The Song Vante Mataram was composed in ——- language by Banki Chandra Chatterji

(a) வங்காளம் / Bengali

(b) ஹிந்தி / Hindi

(c) உருது / Urdu

(d) சமஸ்கிருதம் / Sanskrit

15. “சமத்துவச் சிலை” அமையப் பெற்ற நகரம்

“Statue of Equality” is located in the city of

(a) ஒரிசா / Orissa (b) டில்லி / Delhi

(c) ஹைதராபாத் / Hyderabad

(d) குஜராத் / Gujarat

16. கீழ்கண்டவற்றுள் எது விஜயநகர் இரும்பு எஃகு ஆலையுடன் பொருந்தாது?

Which one of the following is not correct about the Vijaya Nagar Steel Plant?

(a) இது கர்நாடகாவின் பெல்லாரி மாவட்டத்தில் அமைந்துள்ளது / It is located in the Bellary District of Karnata

(b) இதற்கு ஜாரியாவிலிருந்து நிலக்கரி பெறுகிறது / It obtains coal from Jharia

(c) இதற்கு துங்கபத்ரா நீர்மின் சக்தியிலிருந்து நீர்மின் சக்தி கிடைக்கிறது / It obtain hydroelectricity from the Tungabhadra Project

(d) இங்கு நிலக்கரியானது கோரக்ஸ் முறையில் பயன்படுத்தப்படுகிறது / It makes use of coal known as corex process

17. கீழே கொடுக்கப்பட்ட விலங்குகளை அவற்றின் சரியான இனங்களுடன் பொருத்துக:

(a) ஆபத்தான இனங்கள் 1. காட்டு எருமை
(b) பாதிக்கப்படக்கூடிய இனங்கள் 2. ஆசிய புலி

(c) அரிதான இனங்கள் 3. முதலை

(d) அழிந்து போன இனங்கள் 4. டால்ஃபின்

Match the given animals with their respective species.

a. Endangered species 1. Wild buffalo

b. Vulnerable species 2. Asiatic cheetah

c. Rare species 3. Crocodile

d. Extinct Species 4. Dolphines

a b c d

a. 3 4 1 2

b. 2 4 1 3

c. 3 1 4 2

d. 2 3 4 1

18. இந்தியாவில் எத்தனை உயிர் கோள காப்பகங்கள் உள்ளன?

How many biosphere reserves are there in India?

(a) 22

(b) 23

(c) 18

(d) 16

19. இந்தியாவில், தேசிய நதி பாதுகாப்பு திட்டத்தின் கீழ் எத்தனை நகரங்கள் மற்றும் இடைநிலை ஆறுகள் உள்ளடக்கப்பட்டன?

In India how many towns and interstate rivers were covered under the National river conservation plan?

(a) 152 நகரங்கள் மற்றும் 27 இடைநிலை ஆறுகள் / 152 towns and 27 interstate rivers

(b) 125 நகரங்கள் மற்றும் 30 இடைநிலை ஆறுகள் / 125 towns and 30 interstate rivers

(c) 512 நகரங்கள் மற்றும் 33 இடைநிலை ஆறுகள் /512 towns and 33 interstate rivers

(d) 215 நகரங்கள் மற்றும் 25 இடைநிலை ஆறுகள் / 215 towns and 25 interstate rivers

20. புவிவெப்ப சக்தி உற்பத்தி செய்யப்படும் இடம்

Geothermal energy is produced in

(a) அமைதி பள்ளத்தாக்கு / Silent valley

(b) தப்தி பள்ளத்தாக்கு / Tapti Valley

(c) புகா பள்ளத்தாக்கு / Puga Valley

(d) அரக்கா பள்ளத்தாக்கு / Araka Valley

21. கூற்று (A): சிந்து வியாபாரிகள் மெசபடோமியாவில் தங்கினர்.

காரணம் (R): பருத்தியை தங்களுடன் கொண்டு சென்றனர்

Assertion (A) : The idus traders resided in Mesopotamia. Reason (R) : They took cotton for sal

(a) (A) சரி (R) தவறு / (A) is right (R) is wrong

(b) (A) (R) இரண்டும் சரி / Both (A) and (R) are right

(c) (A) தவறு (R) சரி / (A) is wrong (R) is right

(d) (A) சரி ஆனால் (R) (A) யின் சரியான விளக்கமல்ல / (A) is right but (R) is not the correct explanation of (A)

22. இந்தோ-இஸ்லாமிய கவிஞர்களில் மிகப்பெரியவர். ஏழு மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் வாழ்ந்தவர். மேலும் அலாவுதீன் அரச அவையில் நீண்ட காலம் தொடர்பு உடையவர். அவர் யார்?

The greatest of Indo-Islamic poets lived during the reign of seven monarchs, and associated in the royal court of Alauddin for a long period. Who was he?

(a) அமிர் குஸ்ரு / Amir Khusrau

(b) பரணி / Barani

(c) கபீர் / Kabir

(d) ஹனிபா டீன் / Hanifa Deen

23. “சிபார்ஸ்” என்ற சொல் எதை குறிக்கின்றது?

The term “Shibars” denotes that

(a) துப்பாக்கியுடன் கூடிய படகுகள் / Gun boats

(b) வலிமையான வாணிப கப்பல்கள் / Strong trading vessels

(c) வணிக படகுகள் / Trading boats

(d) கப்பல் பணியாளர்கள் / Sailors

24. 1303 ஆம் ஆண்டில் வங்காளத்தின் வழியாக வாரங்கலுக்கு எதிராக அலாவுதின் கில்ஜியின் தெற்கு படையெடுப்பை வழி நடத்தியது யார்?

Who lead out the South expedition of Alauddin Khilji against Warangal by way of Bengal in 1303?

(a) பிர்துல் / Bir Dhur

(b) ஜலாலுதின் பிருஸ்/ Jalaluddin Firuz

(c) மாலிக்கபூர் / Malikafur

(d) ஷிகாபுதின் ஒமர் / Shihabuddin Omar

25. இந்தியாவில் இந்து பண்பாடு ——— ஆட்சியில் கீழ் உச்சத்தை அடைந்தது.

Hindu culture reached its Zenith in India under the reign of the

(a) மௌரியர்கள் / Mauryas

(b) குப்தர்கள் / Guptas

(c) குஷாணர்கள் / Kushanas

(d) ஹர்ஷர்கள் / Harshas

26. இந்தியாவில் அதன் பித்தளை பொருட்களின் வரம்பிற்கு உலகப்புகழ் பெற்ற இடத்தின் பெயரைக் குறிப்பிடவும்

Name the place which is having the world famous for its range of brass items in India

(a) பனாரஸ் / Banaras

(b) ஜெய்ப்பூர் / Jaipur

(c) மொராதாபாத் / Moradabad

(d) பலித்தானா / Palitana

27. கி.பி.5-ம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட உலகின் பழமையான பல்கலைக்கழகத்தின் பெயர் என்ன?

Name the world’s oldest university founded in the 5th Century A.D

(a) நாலந்தா / Nalanda

(b) வாதாபி / Vatabhi

(c) தட்சசீலம் / Takshashila

(d) விக்ரமஷிலா / Vikramashila

28. பட்டியல் Iஐ பட்டியல் II உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள வரிசையிலிருந்து சரியான பதிலை தேர்ந்தெடுக்கவும்

பட்டியல் I பட்டியல் II

a. டெப்ஸா கணவாய் 1. உத்தரகாண்ட்

b. லிகாபனி கணவாய் 2. ஹிமாச்சல பிரதேசம்

c. நாது லா கணவாய் 3. அருணாச்சல பிரதேசம்

d. முலிங் லா கணவாய் 4. சிக்கிம்

Match List I with List II and select the correct answer from the order given below:

List I List II

a. Debsa pass 1. Uttarakhand

b. Likhapani pass 2. Himacahl Pradesh

c. Nathu La pass 3. Arunachal Pradesh

d. Muling La pass 4. Sikkim

a b c d

a. 2 3 4 1

b. 4 2 3 1

c. 2 3 1 4

d. 4 2 1 3

29. இந்திய அரசியலமைப்பு விதி 94 விளக்குவது

Article 94 of Indian Constitution deals with

(a) சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் நீக்கம் / Removal of the Speaker and Deputy speaker

(b) உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி நீக்கம் / Removal of Chief judge of Supreme Court

(c) தலைமை தேர்தல் ஆணையர் நீக்கம் / Removal of Chief Election Commissioner

(d) துணைக் குடியரசுத் தலைவர் நீக்கம் / Removal of Vice-President

30. இந்திய அரசியலமைப்பின் எந்த உறுப்பு மனித கடத்தல் மற்றும் கட்டாய உழைப்பை தடை செய்கிறது?

Which article of Indian constitution prohibits traffic in human beings and forced labour?

(a) உறுப்பு 21 / Article 21

(b) உறுப்பு 22 / Article 22

(c) உறுப்பு 23 / Article 23

(d) உறுப்பு 24 / Article 24

31. அடிப்படைக் கடமைகள் பற்றிய கீழ்கண்ட கூற்றுகளில் எது/எவை சரி?

1. உரிமைகளை அனுபவிக்கின்ற குடிமக்களுக்கு, அவர்களின் கடமைகள் பற்றிய நினைவூட்டலாக இது அமைந்துள்ளது.

2. தேச விரோதிகளுக்கு ஓர் எச்சரிக்கையாக இது அமைந்துள்ளது.

3. குடிமக்களுக்கு ஊக்கத்தின் ஆதாரமாகவும், அவர்களிடம் ஒழுங்கை மேம்படுத்துமாறும் இது அமைந்துள்ளது.

4. இது சட்டத்தின் மூலம் நிலை நாட்டக்கூடியது.

Which among the following statements on fundamental duties is/are correct?

i. They serve as a reminder to the citizens that while enjoying their rights, also to be conscious of duties.

ii. They serve as a warning against the antinationals.

iii. They serve as a source of inspiration for the citizens and promote sense of discipline.

iv. They are enforceable by law.

(a) 1, 2 மற்றும் 3 சரியானது / i,ii and iii are correct

(b) 1, 3 மற்றும் 4 சரியானது / i,iii and iv are correct

(c) 1 மற்றும் 2 சரியானது / i and ii are correct

(d) அனைத்தும் சரியானது / All are correct

32. “கிழக்கு நோக்கும் கொள்கையை” துவக்கிய இந்திய பிரதமர் யார்?

Name the Prime Minister of India who initated the “Look-East Policy”?

(a) P.V.நரசிம்ம ராவ் / P.V.Narasimha Rao

(b) அடல் பிகாரி வாஜ்பாய் / Atal Bihari Vajpayee

(c) மன்மோகன் சிங் / Manmohan Singh

(d) குஜ்ரால் / I.K.Gujral

33. சட்டமன்ற மேலவையை உருவாக்கவும் மற்றும் நீக்கவுமான அதிகாரம் யாரிடம் உள்ளது?

The power to create or abolish a legislative council is vested with

(a) குடியரசு துணைத் தலைவர் / The Vice president

(b) மாநில சட்டமன்றம் / State Legislature

(c) குடியரசு தலைவர் / The President

(d) நாடாளுமன்றம் / The Parliament

34. மத்திய நிர்வாக தீர்ப்பாயம் உருவாக்கப்பட்ட ஆண்டு

The Central Administrative tribunal was setup on

(a) 1984

(b) 1985

(c) 1986

(d) 1987

35. “பொது நல வழக்கு” முதன் முதலாக எந்த நாட்டில் கொண்டுவரப்பட்டது?

Originally which country used the concept of “Public Interest Litigation”?

(a) அமெரிக்கா / United States of America (USA)

(b) இங்கிலாந்து / The United Kingdom

(c) கனடா / Canada

(d) ஜப்பான் / Japan

36. கீழே உள்ளவற்றினைப் பொருத்தி சரியான விடை எழுதுக:

சட்டம் வருடம்

a. ஆதார் சட்டம் 1. 1997

b. நிதி ஆயோக் 2. 1999

c. ஐ.ஆர்.டி.ஏ.சட்டம் 3. 2015

d. டிராய் சட்டம் 4. 2016

Match the following and choose the correct answer:

Act Year

a. Aadhar Act 1. 1997

b. Niti Aayog 2. 1999

c. IRDA Act 3. 2015

d.TRAI Act 4. 2016

a b c d

a. 4 3 2 1

b. 3 2 4 1

c. 3 2 1 4

d. 4 1 3 2

37. பதினோறாவது ஐந்தாண்டு திட்டத்தின் முக்கிய நோக்கம்

The main objective of the Eleventh Five year plan was

(a) நிலைத்தன்மையுடனான வளர்ச்சி / Growth with stability

(b) வேகமான மற்றும் மேலும் உள்ளடக்கிய வளர்ச்சி / Faster and more inclusive growth

(c) வறுமையை ஒழித்தல் / Removal of poverty

(d) தற்சார்பு அடைதல் / Attainment of self-reliance

38. பட்டியல் I மற்றும் II-ஐ பொருத்தி கீழே கொடுக்கப்ட்டுள்ள சரியான விடையை தேர்வு செய்க:

பட்டியல் I பட்டியல் II

a. எம்.என்.ராய் 1. காந்திய திட்டம்

b. ஸ்ரீமன் நாராயன் 2. பம்பாய் திட்டம்

c. எட்டு தொழிலதிபர்கள் 3. மக்கள் திட்டம்

Match theList Iwith List II and select the correct answer using the codes given below:

List I List II

(a) M.N.Roy 1. Gandhian Plan

(b) Shriman Narayan 2. Bombay plan

(c) Eight Industrialist 3. People’s plan

a b c

a. 2 3 1

b. 3 1 2

c. 1 3 2

d. 3 2 1

39. கீழே காணப்படும் இனங்களில் மாநில அரசின் வரி வருவாய் மூலம் இல்லாதது எது?

The following one is not a source of the State Tax Revenue?

(a) நில வருவாய் / Land Revenue

(b) மோட்டார் வாகன வரி / Motor Vehicles Tax

(c) பொழுதுபோக்கு வரி / Entertainment Tax

(d) வணிக நிறுவன வரி / Corporate Tax

40. கீழ்கண்ட இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவுகளில் நிதிக்குழு எந்த பிரிவின் கீழ் உருவாக்கப்பட்டது?

Name the following articles of the Indian Constitution authorizes the appointment of Finance commission?

(a) பிரிவு 252 / Article 252

(b) பிரிவு 268 / Article 268

(c) பிரிவு 272 / Article 272

(d) பிரிவு 280 / Article 280

41. பட்டியல் I மற்றும் II-ஐ பொருத்தி கீழே கொடுக்கப்ட்டுள்ள சரியான விடையை தேர்வு செய்க:

பட்டியல் I பட்டியல் II

a. NABARD 1. தொழில் நிதி அல்லது (கடன்)

b. HDFC 2. நுண்ணிய நிதி அல்லது (கடன்)

c. IDBI 3. வீட்டு நிதி அல்லது (கடன்)

d. SHG 4. விவசாய நிதி அல்லது (கடன்)

Match theList Iwith List II and select the correct answer using the codes given below:

List I List II

a. NABARD 1. Industrial Finance or (Loan)

b. HDFC 2. Micro Finance or (Loan)

c. IDBI 3. Housing Finance or (Loan)

d. SHG 4. Agriculture Finance or (Loan)

a b c d

a. 4 2 3 1

b. 3 1 2 4

c. 2 1 4 3

d. 4 3 1 2

42. “இந்தியாவில் செய்யுங்கள்” திட்டம் தொடங்கப்பட்ட நாள் மற்றும் ஆண்டு

The date and year of launched the programme: “Make in India”

(a) மார்ச் 25, 2012 / March 25, 2012

(b) ஏப்ரல் 20, 2014 / April 20, 2014

(c) செப்டம்பர் 25, 2014 / September 25, 2014

(d) டிசம்பர் 12, 2016 / December 12, 2016

43. நகர்ப்புறத்தில் உள்ள அடிப்படை வசதிகளை கிராமப்புறத்தில் வழங்குதல் (PURA) திட்டமானது 2003ல் ——— கிராம வளர்ச்சி வட்டாரங்களில் செயல்படுத்தப்பட்டது.

Providing Urban Amenities in Rural Areas (PURA) scheme was launched in 2003 for ——- Rural Development Blocks.

(a) 2000 வட்டாரங்கள் / 2000 Blocks

(b) 3000 வட்டாரங்கள் / 3000 Blocks

(c) 5000 வட்டாரங்கள் / 5000 Blocks

(d) 6000 வட்டாரங்கள் / 6000 Blocks

44. பின்வருவனவற்றுள் எது சரி?

கூற்று (A): அந்நிய ஆட்சிக்கு எதிராக நடந்த முதல் கிளர்ச்சி 1770ல் வங்காளத்தில் வெடித்தது.

காரணம் (R): இதற்கான முக்கிய காரணம் அழிவை ஏற்படுத்தி பஞ்சமும் மற்றும் விவசாயிகள் சுரண்டப்பட்டதும் ஆகும்.

Which one of the following is correct?

Assertion (A) : The first uprising against the alien rule broke out in Bengal in 1770.

Reason (R) : The main cause was destructive famine and the exploitation of the farmers.

(a) (A) மற்றும் (R) சரி, மற்றும் (R) (A) க்கான சரியான விளக்கம் அல்ல / Both (A) and (R) are true and (R) is not the correct explanation of (A)

(b) (A) சரி, ஆனால் (R) தவறு / (A) is true, but (R) is false

(c) (A) மற்றும் (R) சரி, மற்றும் (R), (A) க்கான சரியான விளக்கம் / Both (A) and (R) are true and (R) is the correct explanation of (A)

(d) (A) தவறு, ஆனால் (R) சரி / (A) is false, but (R) is true

45. கூற்று (A): தாதாபாய் நௌரோஜி கிழக்கிந்தியக் கழகத்தை லண்டனில் உருவாக்கினார்.

காரணம் (R): பிரிட்டிஷ் பொதுமக்கள் கருத்தின் மீது செல்வாக்கு ஏற்படுத்த விரும்பினார்

Assertion (A) : Dadabai Naoroji organized the East India Association in London.

Reason (R) : He wanted to influence the British Public opinion.

(a) (A) மற்றும் (R) சரி, மற்றும் (R) (A)க்கான சரியான விளக்கம் / (A) and (R) are true and (R) is the correct explanation of (A)

(b) (A) சரி, ஆனால் (R) தவறு / (A) is true, but (R) is false

(c) (A) தவறு, ஆனால் (R) சரி / (A) is false, but (R) is true

(d) (A) மற்றும் (R) சரி, மற்றும் (R), (A)க்கான சரியான விளக்கமல்ல / (A) and (R) are true and (R) is not the correct explanation of (A)

46. சரியானவற்றை பொருத்துக:

1. இந்திய தேசியத்தின் தூதுவர் – இராஜாராம் மோகன்ராய்.

2. மக்களின் சிறந்த பாரம்பரியத்தை

தெரிந்து கொண்டு எழுச்சி பெற “வேதங்களை

நோக்கி செல்லும்” – சுவாமி விவேகானந்தா.

3. R.G. பிரதான் இவரை இந்திய “தேசியத்தின்

தந்தை” என்றழைத்தார் – சுவாமி தயானந்த சரஸ்வதி.

4. “சுயராஜியம் எனது பிறப்புரிமை” என்று

கூறியவர் – பாலகங்காதர் திலகர்

Choose the right matches:

1. The prophet of Indian nationalism – Raja Ram Mohan Roy

2. To rouse pride of people in their rich heritage gave a call “back to vedas” – Swami Vivekananda

3. R.G.Pradhan called him the father of Indian Nationalism – Swami Dayanand Saraswathi

4. “Swaraj is my birth right” is a statement of – Bal Gangadhar Tilak

(a) 1 மற்றும் 2 சரி / 1 and 2 are correct

(b) 2 மற்றும் 3 சரி / 2 and 3 are correct

(c) 3 மற்றும் 4 சரி / 3 and 4 are correct

(d) 1 மற்றும் 4 சரி / 1and 4 are correct

47. பின்வரும் வார்த்தைகளைக் கூறியவர் யார்?

“இரும்பை உருக்கி, எஃகு உருவாக்கி, உறுதியான இயந்திரங்களை உருவாக்கு”

Who said the following words? “Melt the iron and make steel, forge machines”

(a) வ.உ.சிதம்பரனார் / V.O.Chidambaranar

(b) பகத்சிங் / Bhagat Singh

(c) சுப்ரமண்ய பாரதி / Subramania Bharathi

(d) சுபாஷ் சந்திர போஸ் / Subash Chandra Bose

48. பின்வரும் கூற்றினை கூறியவர் யார்?

“வன்முறையில்லாமல் விடுதலை அடைந்துவிட்டால் மிக நல்லது; இல்லை என்றால் தேசத்திற்கு படையை வைத்து அந்நியரை விரட்டும் உரிமை உண்டு”

Who said the following words? “If freedom could be attained without violence it was well and good, if not, the nation has the right to expel the foreigner by force”.

(a) பகத்சிங் / Bhagat Singh

(b) மௌலானா அபுல் கலாம் ஆசாத் / Maulana Abul Kalam Azad

(c) சுபாஷ் சந்திர போஸ் / Subash Chandra Bose

(d) குர்தியால் சிங் திலான் / Gudial Singh Dhillon

49. சத்தியாகிரக உத்தி பல்வேறு முறைகளை உள்ளடக்கியது.

பின்வருவனவற்றுள் எது/எவை காந்தியால் சேர்க்கப்படவில்லை?

1. உண்ணாவிரதம்.

2. வேலை நிறுத்தம்.

3. எரிந்த பூமி கொள்கை.

4. நிலத்தடி நடவடிக்கை

The technique of Satyagraha included various methods.

Which of the following was/were not included by Gandhi?

i. Fasting.

ii. Hartals.

iii. Scroched earth policy.

iv. Underground activities.

(a) 1 மற்றும் 4 / i and iv

(b) 3 மற்றும் 4 / iii and iv

(c) 1 மற்றும் 3/ i and iii

(d) 2 மற்றும் 4 / ii and iv

50. பின்வருவனவற்றுள் எக்கருத்து/கள் சரி?

கூற்று (A): அலிகார் இயக்கம் சர் சையத் அகமத் கான் தலைமையின் கீழ் வகுப்புவாதத்தை உருவாக்கியது. அது பாகிஸ்தான் உருவாவதற்கு உறுதுணை செய்தது.

காரணம் (R): சர் சையத் அகமத் கான் தன்னுடைய நடவடிக்கைகளுக்கு பிரிட்டிஷாரை சார்ந்து இருந்தார். இது பிரிட்டிஷார் முஷ்லீம் வகுப்புவாதம் கொண்டு வர வைத்தது.

Which of the following statement/s is/are true?

Assertion (A): The Aligarh movement became communal under Sir Syed Ahmad Khan’s guidance, which helped in the creation of Pakistan.

Reason (R) : Sir syed Ahmad Khan depended on the British for his activities and the British borought in Muslim communalism.

(a) (a) மற்றும் (R) சரி (R), (A) க்கான சரியான விளக்கம் / (A) and (R) are true, (R) is the correct explanation of (A)

(b) (A) சரி (R) தவறு / (A) is true, (R) is false

(c) (A) மற்றும் (R) சரி (R), (A) க்கான சரியான விளக்கமல்ல / (A) and (R) are true, (R) is not the correct explanation of (A)

(d) (A) தவறு (R) சரி / (A) is false, (R) is true

51. கீழ்வருவனவற்றுள் ஒன்று பல்லவர்களது கிராம நிர்வாகத்தை கூறும் கல்வெட்டு ஆகும்.

One among the following inscriptions speaks about the village administrations of the Pallavas.

(a) மானூர் கல்வெட்டு / Manur Inscription

(b) திருச்சிராப்பள்ளி கல்வெட்டு / Thiruchirapalli Inscription

(c) கழுகுமலை கல்வெட்டு / kalugumalai Inscription

(d) ஏர்வாடி கல்வெட்டு / Ervadi Inscription

52. கூற்று (A): தமிழர்கள் ரோமானியர்களுடன் வாணிபத்தொடர்பு கொண்டிருந்தனர்.

காரணம் (R): ரோமன் நாட்டு பானை ஓடுகளும் தங்க நாணயங்களும் அரிக்கமேட்டில் நடந்த அகழ்வாய்வில் கிடைத்துள்ளன.

Assertion (A) : The trade contacts of the Tamils with the Roman Empire.

Reason (R) : The Roman pottery and gold coins unearthed in the Arikkamedu excavation.

(a) (A) மற்றும் (R) சரி இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கான சரியான விளக்கம் / (A) and (R) are true, and (R) is correct explanation (A)

(b) (A) சரி ஆனால் (R) தவறு / (A) is true, but (R) is false

(c) (A) மற்றும் (R) இரண்டும் தவறு / (A) and (R) are false

(d) (A) தவறு ஆனால் (R) சரி / (A) is false but (R) is true

53. கீழ்கண்டவற்றை பொருத்தி சரியான விடையைத் தேர்க:

புலவர்கள் பகுதிகள்

a. மருதனார் 1. ஓரகடம் (செங்கை)

b. வங்கனார் 2. இடைக்காடு (குமரி)

c. காடனார் 3. ஆலங்குடி (புதுக்கோட்டை)

d. சுந்தரத்தனார் 4. குருங்குடி (நெல்லை)

Match the following and select the correct answer:

Poets Region

a. Marudhanar 1. Orakadam (Chengai)

b. Vanganar 2. Edaikadu (Kumari)

c. Kadanar 3. Alangudi (Pudukottai)

d. Kandarathanar 4. Kurungudi (Nellai)

a b c d

a. 2 1 4 3

b. 4 3 2 1

c. 1 2 3 4

d. 4 2 3 1

54. வரிசை Iஐ வரிசை II-உடன் பொருத்தி விடையை காண்க:

வரிசை (படைப்புகள்) வரிசை (ஆசிரியர்கள்)

a. பெரியபுராணம் 1. ஓளவையார்

b. கொன்றை வேந்தன் 2. ஜெயங்கொண்டார்

c. கலிங்கத்துப்பரணி 3. கங்காதேவி

d. மதுராவிஜயம் 4. சேக்கிழார்

Match List I with List II and select the correct Answer:

List I – (Works) List II – (Authors)

a. Periyapuranam 1. Avvaiyar

b. Konrai Venthan 2. Jayakondar

c. Kalingathuparani 3. Gangadevi

d. Madura Vijayam 4. Sekkilar

a b c d

a. 1 2 3 4

b. 4 1 2 3

c. 2 3 4 1

d. 4 3 2 1

55. கீழ்க்கண்ட கூற்றுகளில் பாரதிதாசனிடம் தொடர்பில்லாத நூல் எது?

Which one of the following work is not related to Bharathidasan?

(a) பாண்டியன் பரிசு / Pandian Parisu

(b) அழகின் சிரிப்பு / Azhakin Sirippu

(c) மலரும் மாலையும் / Malarum Malaiyum

(d) இருண்ட வீடு / Irundaveedu

56. கூற்று (A): திருக்குறள் மனிதர்களின் அன்றாட வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

காரணம் (R): மனிதர்கள் திருக்குறளின் மூலப்பொருளான அகிம்சை, மதச்சார்பின்மை, சகோதரத்துவம் ஆகியவற்றை பின்பற்றுகின்றனர்.

Assertion (A) : Thirukkural is influence on our every day life.

Reason (R) : Through it, human beings can follow the principles of non-violence, castelessness secularism and brotherhood

(a) (A) சரி ஆனால் (R) தவறு / (A) is true but (R) is wrong

(b) (A) தவறு ஆனால் (R) சரி / (A) is wrong but (R) is true

(c) (A) மற்றும் (R) இரண்டும் தவறு / Both (A) and (R) are wrong

(d) (A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R), (A) விற்கான சரியான விளக்கமாகும் / Both (A) and (R) are true and (R) is correct explanation of (A)

57. “…யிவ்விரண்டும் கண்ணெண்ப வாழும் உயிர்க்கு”

மேற்காணும் திருக்குறளில் இந்த இரண்டை திருவள்ளுவர் கண்களுக்கு ஒப்பாகக் கூறுகிறார்.

“—- are the eyes of all human beings”

In the above Thirukkural, one among the below are identified by Thiruvalluvar as the eyes of all human beings.

(a) அறமும் பொருளும் / Virtue and wealth

(b) நடுவுநிலைமையும் அடக்கமுடைமையும் / Impartiality and self control

(c) பொருளும் இன்பமும் / Wealth and love

(d) எண்ணும் எழுத்தும் / Numbers and letters

58. 1.”பொய்மையும் வாய்மை யிடத்த—“

2. “புறந்தூய்மை நீராலமையு மகந்தூய்மை”

இவ்விரண்டு குறள்களையும் ஒரு சேர மனதில் கொண்டு கீழ்க்கண்ட எந்த விளைவு மிகுந்த முக்கியத்துவம் உள்ளதாகக் கருதுவீர்?

i. “What is called Truth of True word…”

ii. “External cleanliness can be had by use of …”

(a) பொய்மை / Falsehood

(b) வாய்மை / Truthfulness

(c) புறந்தூய்மை / External Cleanliness

(d) புரை தீர்ந்த நன்மை / Blameless good

59. முதல் கர்நாடகப் போரின் போது ஐரோப்பாவில் நடந்த போர் எது?

Which of the following European wars is associated with first Carnatic war?

(a) ஏழாண்டுப்போர் / The seven years war

(b) ஆஸ்திரிய-பிரஸயப்போர் / The Austro-Prussian war

(c) ரோஜாப்பூ போர் / The war of Roses

(d) ஆஸ்திரிய வாரிசுரிமைப்போர் / The war of the Austrian succession

60. கீழ்க்கண்டவற்றை கால் வரிசைப்படுத்தி விடையை தேர்ந்தெடு:

1. வேலூர் கலகம்.

2. கட்டபொம்மனை தூக்கிலிடுதல்.

3. பழனி சதிதிட்டம்.

4. பாண்டிச்சேரி உடன்படிக்கை

Arrange the following in chronological order.

1. Vellore mutiny.

2. Executed the hanging of Kattabomman.

3. Palani conspiracy.

4. Treaty of Pondichery

(a) 1,2,3,4

(b) 4,3,2,1

(c) 2,3,4,1

(d) 4,2,3,1

61. 1934ம் ஆண்டு மெட்ராஸ் தொகுதியில் நடைபெற்ற ஒன்பதாவது பெண்கள் மாநாட்டுக்கு தலைமை தாங்கிய பெண்மணியின் பெயரைக் குறிப்பிடுக

Name the person who president over the Nineth conference of the Madras constituency of the All India Women’s conference of the year 1934

(a) டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி / Dr.Muthulakshmi Reddy

(b) திருமதி. மார்க்கெரட் கசின்ஸ் / Mrs.Margaret Cousins

(c) பேகம் ஷரிஜா ஹமித் அலி / Begum Shareejah Hamid Ali

(d) திருமதி.அன்னிபெசன்ட் / Mrs. Annie Besant

62. கீழ்கண்டவற்றுள் எது உண்மையான கூற்று அல்ல?

Which one of the following statements is not true?

(a) சட்ட மேலவையில் நீதிக்கட்சி 98க்கு 63 தேர்தல் இடங்களை வென்றது / Justice party won 63 out of 98 elective seats in Legislative council

(b) சென்னை மாகாணத்தில் A.சுப்புராயன் முதல் முதலமைச்சராக ஆனார் / A.Subburayan became the first Chief Minister of Madras Presidency

(c) 1919-ஆம் ஆண்டு சட்டத்தின் அடிப்படையில் தேர்தல் நடைபெற்றது / The election was held based on 1919 Act

(d) 1920-ஆம் ஆண்டுத் தேர்தலில் நீதிக்கட்சி காங்கிரஸ் கட்சியை முழுமையாக தோற்கடித்தது / Indian National Congress was totally defeated by Justice party in 1920 election

63. நீதிக்கட்சியின் முக்கியமான நோக்கம் எது?

What was the main objective of the Justice party?

(a) முஸ்லீம் லீக்கிற்கு எதிராகப் போராடுதல் / To fight against the Muslim league

(b) அரசுப் பணிகளில் பிராமணர் அல்லாதவர்களை பங்கேற்கச் செய்தல் / To secure greater and due representation for Non Brahmins in Government services.

(c) ஜமின்தார்களின் சர்வாதிகாரத்திலிருந்து விவசாயிகளை காப்பாற்றுதல் / To free the Peasants from the tyanny of Zamindars.

(d) பொதுப்பிரச்சை பற்றி விவாதி / To discuss the public questions

64. கூற்று (A): E.V.இராமாசமி 20-ம் நூற்றாண்டின் சிறந்த சமூக சீர்திருத்தவாதியாவார்.

காரணம் (R): அவர் சுயமரியாதை இயக்த்தின் மூலம் ஒதுக்கப்பட்ட மக்களின் நலனைக் காக்க பாடுபட்டார்.

Assertion (A) : E.V.Ramasamy was one of the great social reformer of the twentieth century in Tamil Nadu.

Reason (R) : He started Self-Respect movement in an attempt safeguard the downtrodden communities.

(a) (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A)விற்கான சரியான விளக்கமாகும் / Both (A) and (R) are true, and (R) is correct explanation of (A)

(b) (A) சரி ஆனால் (R) தவறு / (A) is true, but (R) is false

(c) (A) மற்றும் (R) இரண்டும் தவறு / Both (A) and (R) are false

(d) (A) மற்றும் (R) இரண்டும் சரி / Both (A) and (R) are true

65. கீழ்க்கண்ட கூற்றுகளில் E.V.இராமசாமி பற்றிய தவறான கூற்று எது?

Which of the following statement is false about E.V.Ramasamy?

(a) E.V.இராமசாமி “வைக்கம் வீரர்” என அழைக்கப்படுகிறார் / E.V.Ramasamy is known as “Hero of Vaikkam”

(b) இவர் “குருகுல” கல்வி முறையை ஆதரித்தார் / He accepted the “Gurukula” System

(c) இவர் “சுயமரியாதை இயக்கத்தை” தோற்றுவித்தார் / He was the founder of Self Respect Movement

(d) இவர் “சுயமரியாதை திருமணத்திற்கு” ஆதரவு தந்தார் / He accept the Self Respect Marriage

66. சமுதாய காரணிகளான ஒருவர் உயிர் வாழும் வாய்ப்புள்ள அளவு, கல்வி அறிவு மற்றும் வருமானம் ஆகியவைகளை கொண்டு கணிக்கும் குறியீடு

The index which combines social indicators of life expectancy, literacy and income of the people is called

(a) அத்தியாவசிய தேவை குறியீடு / Basic need index

(b) வாங்கும் திறன் குறியீடு / Purchasing power

(c) மனித மேம்பாட்டு குறியீடு / Human development index

(d) நல குறியீடு / Welfare index

67. பட்டியல் I மற்றும் பட்டியல் II-ஐ பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள சரியான விடையை தேர்வு செய்க:

பட்டியல் I பட்டியல் II

a. தியோசோபிகல் சங்கம் 1. 1865

b. சுத்தி இயக்கம் 2. 1897

c. இராமகிருஷ்ண மிஷன் 3. மேடம் பிளவாட்ஸ்கி

d. சுமரச சுத்த சன்மார்க்கம் 4. தயானந்த சரஸ்வதி

Match List I with List II and select the correct answer using the codes given below:

List I List II

a. Theosophical society 1. 1865

b. Suddhi Movement 2. 1897

c. Ramakrishna Mission 3. Madam Blavatsky

d. Samaraja Suddha Sanmarg 4. Dayanand Saraswati

a b c d

a. 3 4 2 1

b. 2 1 3 4

c. 4 2 3 1

d. 3 4 1 2

68. “சட்டமும் விதிகளும் மக்களுக்காக தான், ஆனால் மக்கள் சட்டத்திற்காகவும் விதிகளுக்காகவும் அல்ல” என்று கூறியவர்

“Law and rules are only for the people, people are not for the law and the rules” said by

(a) அண்ணாதுரை / Annaduari

(b) பெரியார் ஈ.வே.ராமசாமி / Periyar.E.V.Ramasamy

(c) ராஜாஜி / Rajaji

(d) காமராசர் / Kamaraj

69. தமிழ்நாட்டில் 1923ஆம் ஆண்டில் மே தினத்தின் முதல் கொண்டாட்டம் ———— ஏற்பாடு செய்யப்பட்டது.

In Tamil Nadu the first ever celebration of May Day was organized in 1923 by

(a) சிங்காரவேலர் / Singaravelar

(b) ஈ.வே.ரா / E.V.R

(c) காமராஜர் / Kamarajar

(d) ராஜாஜி / Rajaji

70. “இந்திய முத்திரை பலம் அமைப்பு” – யாரால் நிறுவப்பட்டது?

India Brand Equity Foundation (IBEF) is established by

(a) நிதி அமைச்சகம் / Ministry of Finance

(b) வாணிபம் மற்றும் தொழில் அமைச்சகம் / Ministry of commerce and Industry

(c) தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் / Ministry of Information Technology

(d) மனித வள வளர்ச்சி அமைச்சகம் / Ministry of Human Resource Development

71. பட்டியல் I மற்றும் IIஐ பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள சரியான விடையைத் தேர்வு செய்க:

பட்டியல் I – திட்டம் பட்டியல் II – அமைச்சகம்

a. சுவாஜல் திட்டம் 1. பண்பாட்டு

b. சமக்ரா சிக்ஷா 2. முனிதவள மேம்பாடு

c. சேவா போஜ் யோஜனா 3. தகவல் தொடர்பு

d. சும்பூர்ண பீமா கிராம் யோஜனா 4. குடிநீர் மற்றும் சுகாதாரம்

Match List I with List II and select the correct answer from the order given below:

List I – Programme List II – Ministry of

a. Swajal Programme 1. Culture

b. Samagra Siksha 2. Human Resource Development

c. Seva Bhoj Yojana 3. Communications

d. Sampoorna Bima Gram Yojana 4. Drinking Water and Sanitation

a b c d

a. 3 1 2 4

b. 1 2 4 1

c. 1 4 3 2

d. 4 2 1 3

72. தமிழ் நாட்டில் உள்ள அனைத்து பொது சுகாதார மையங்களிலும் மருந்துகள் மற்றும் மருத்துவ சேவைகள் கிடைப்பதை உறுதி செய்யும் அமைப்பு

The function of ensuring the availability of drugs and medical facilities at all Government Medical Institutions in Tamil Nadu is under the control of

(a) மருத்துவ கல்வி இயக்குநரகம் / Directorate of Medical Education

(b) மருத்துக மற்றும் கிராமப்புற சுகாதார சேவைகள் இயக்குநரகம் / Directorate of Medical and Rural Health Services

(c) தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் / Tamil Nadu Medical Services Corporation Limited (TNMSC)

(d) பொது சுகாதார மற்றும் தடுப்பு மருத்துவ இயக்குநரகம் / Directorate of Public Health and Preventive Medicine

73. “கொடிவேரி அணை” எந்த நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது?

Kodiveri Dam is constructed across

(a) நொய்யல் ஆறு / Noyal River

(b) பவானி ஆறு / Bhavani River

(c) காவிரி ஆறு / Cauvery River

(d) தாமிரபரணி ஆறு / Thamirabarani River

74. தமிழகத்தில் இந்திரா காந்தி தேசிய பூங்கா (ஆனைமலை புலிகள் காப்பகம்) அமைந்துள்ள மாவட்டங்கள்

In Tamil Nadu Indira Gandhi National Park (Anamalai Tiger Reserve) is located at ——— District/s

(a) கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் / Coimbatore and Tiruppur

(b) நீலகிரி / Nilgiris

(c) ஏலகிரி / Elagiri

(d) கொடைக்கானல் / Kodaikanal

75. ஜனவரி 2020-ல் இந்தியாவின் மென்பொருள் ஏற்றுமதியில் தமிழ் நாட்டின் பங்களிப்பு —— சதவீதம் ஆகும்.

Tamil Nadu accounts for ——% of India’s software exports in January, 2020

(a) 16.05%

(b) 17.00%

(c) 18.05%

(d) 19.00%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!