General StudiesTnpsc

Tnpsc Model Question Paper 23 – General Studies in Tamil & English

1. பெருக்கல் வாய்ப்பாடு மற்றும் ஆங்கில எழுத்துக்கள் கற்றலுக்கு உதாரணமாக அமைவது

Learning multiplication tables and English alphabets is an example of

(a) கருத்து கற்றல் / Concept learning

(b) பொருள் உணராமல் கற்றல் / Rote learning

(c) விதிவரு கற்றல் / Inductive learning

(d) கண்டறி கற்றல் / Heuristic learning

2. X கதிர்கள் உருவாக்கத்தில், உயர் அணு எண் கொண்ட உலோகங்கள் இலக்கு பொருளாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஏன்?

Metals with high atomic numbers are used as targets for the production of X-rays. Why?

(a) செயல்முறையின் போது உடையாமல் இருக்க / They will not be broken during the process

(b) தொடர்ந்த எலக்ட்ரான் தாக்குதலிலும் குளிர்ந்து இருக்க / They will remain cooled even by continuous electron bombardment

(c) அதிக ஆற்றல் வாய்ந்த, செறிவு மிக்க X-கதிர்களை உருவாக்க / They will give more energetic and intense X-rays

(d) வெப்பநிலை அதிகரிப்பால் உருகாமல் இருக்க / They will not melt by the increase in temperature

3. பின்வருவனவற்றுள் எது அறிவுசார் செயல்முறை அல்ல?

Which one of the following process is not cognitive?

(a) கண்டுணர்தல் / Recognition

(b) பொருளுணரா மனப்பாடம் / Rote memory

(c) தெரிந்தெடுக்கிற நினைவு கூர்தல் / Selective Recall

(d) பகுப்பு / Analysis

4. கீழ்க்கண்டவற்றுள் எவை கதிரியக்கத் தன்மையை பாதிப்பதில்லை?

1. வெப்பநிலை.

2. அழுத்தம்.

3. கனஅளவு

Which of the following do not affect radioactivity?

I. Temperature

II. Pressure

III. Volume

(a) 1 மற்றும் 2 / I and II

(b) 1 மற்றும் 3 / I and III

(c) 2 மற்றும் 3 / II and III

(d) 1, 2 மற்றும் 3 / I, II and III

5. பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திலுள்ள சுற்றுச்சூழல் பூங்காவின் பரப்பு அளவு

The area of Pallikaranai Marshaland Ecological Park is

(a) 3.5 ஏக்கர் / 3.5 Acre

(b) 2.5 ஏக்கர் / 2.5 Acre

(c) 4.5 ஏக்கர் / 4.5 Acre

(d) 5 ஏக்கர் / 5.0 Acre

6. உலக மிஸ் அமெரிக்கா என்று 2021-ம் ஆண்டு முடிசூட்டப்பட்ட முதல் இந்திய அமெரிக்கர்

The first Indian American to become the Miss World America in 2021 was

(a) ஸ்ரீநந்திகா / Sri Nandhika

(b) ஸ்ரீ சைணி / Shree Saini

(c) திவ்யா ஜான் / Dhivya John

(d) விக்டோரியா / Voctoria

7. NITI ஆயோக்கில் பின்வருவனவற்றில் எது சரியாகப் பொருந்தவில்லை?

Which of the following is not matched correctly about NITI Aayog?

(a) NITI அயோக் தலைமை அலுவலகம் : டெல்லி / NITI Aayog Head Office : Delhi

(b) NITI ஆயோக்கின் தலைவர் : பிரதமர் / NITI Aayog Chairman : Prime Minister

(c) NITI ஆயோக் தாய் நிறுவனம் : இந்திய அரசு / Parent Agency : Government of India

(d) NITI ஆயோக் மாற்றப்பட்டது : தேசிய வளர்ச்சிக் கவுன்சில் / NITI Aayog Replaced : National Development Council

8. மக்கள் தொகை வெடிப்பு பெரும்பாலும் பின்வருவனவற்றில் ஒரு காரணமாகும்.

Which one of the following reasons is the main cause for population explosion?

(a) மேம்பட்ட மருத்துவ சேவைகள் / Improved Medical Services

(b) மருத்துவ சேவைகளின் பற்றாக்குறை / Lack of Medical Services

(c) அதிக கருவுறுதல் வீதம் / High fertility rate

(d) மேற்கூறிய இவற்றில் எதுவுமில்லை / None of the above

9. பின்வரும் நதிகளில் உப்பு நதி எனவும் மாற்றாக அறியப்படுவது எது?

Which of the following rivers is also known as “Saline River”?

(a) சபர்மதி / Sabarmathi

(b) மகி / Mahi

(c) லூனி / Luni

(d) சாம்பல் / Chambal

10. இந்தியாவில் குளிர்காலத்தில் வெப்பநிலை அதிக அளவில் காணப்படும் இடம்

The highest temperature in India during the winter season occurs at

(a) சென்னை / Chennai

(b) ஹைதராபாத் / Hyderabad

(c) பெங்களுர் / Banglore

(d) திருவனந்தபுரம் / Thiruvannanthapuram

11. 1657-ல் ஒளரங்கசீப் தாராஷீக்கோவை தோற்கடித்த போர்க்களம்

In 1657 Aurangazeb defeated Dara Shikoh at the Battle of

(a) தார்மட் / Dharmat

(b) சர்ஹிந்த் / Sarhin

(c) உதய்பூர் / Udaipur

(d) ஜோத்பூர் / Jodhpur

12. தென்னிந்திய ஓவியங்கள் பற்றி கட்டுரை

A treatise on South Indian Paintings

(a) தட்சிணாசித்ரா / Dakshinachitra

(b) மத்தவிலாசபிரகசனம் / Mattavilasaprahasam

(c) நந்திக்கலம்பகம் / Nandikkalambagam

(d) பரதவெண்பா / Bharathavenba

13. ஹரிசேனர் இவரது அவைப் புலவர்

Harisena was the court poet of

(a) சமுத்திர குப்தர் / Samudra Gupta

(b) ஸ்கந்த குப்தர் / Skanda Gupta

(c) இரண்டாம் சந்திர குப்தர் / Chandra Gupta II

(d) குமார குப்தர் / Kumara Gupta

14. டெல்லி சுல்தான்கள் ஆட்சியின் போது காசி-இ-முமாலிக் என்பவர் யார்?

Who was Qazi-Mumali during rule of Delhi Sultanate?

(a) பொதுக்கணக்கர் / Account General

(b) தலைமை நீதிபதி / Chief Justice

(c) இணை அமைச்சர் / Deputy Minister

(d) முதலமைச்சர் / Chief Minister

15. குடிமக்களுக்கு பொது சிவில் சட்டத்தைப் பற்றி கூறும் அரசியலமைப்பு விதி எது?

Which article of the Constitution Provides Uniform Civil Code for the citizens?

(a) விதி 42 / Article 42

(b) விதி 43 / Article 43

(c) விதி 44 / Article 44

(d) விதி 45 / Article 45

16. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க:

கூற்று (கூ): இந்திய அரசியலமைப்பின் பொது சிவில் சட்டம் நிறைவேற்றப்பட உள்ளது.

காரணம் (கா): வழிகாட்டு நெறிமுறை கோட்பாடானது நீதிதுறைக்கு அப்பாற்பட்டது.

Consider the following statement:

Assertion (A) : The adoption of uniform Civil Code though mentioned in the Constitution of India is yet to be accomplished.

Reason (R) : Directive principles are Non-Justiciable

(a) (கூ) மற்றும் (கா) இரண்டும் சரி, மற்றும் (கா), (கூ) விற்கு சரியான விளக்கம் / Both (A) and (R) are true and (R) is the correct explanation of (A)

(b) (கூ) மற்றும் (கா) இரண்டும் சரி, மற்றும் (கா), (கூ)விற்கு சரியான விளக்கம் அல்ல / Both (A) and (R) are true, but (R) is not the correct explanation of (A)

(c) (கூ) சரியானது, ஆனால் (கா) தவறு / (A) is true, but (R) is fales

(d) (கூ) தவறு ஆனால் (கா) சரியான கூற்று / (A) is false, but (R) is true

17. உலகளாவிய மனித உரிமைகள் ஆவண பிரகடனத்தின் தலைவராக 1947-ல் இருந்தவர்

The Chairperson of the Universal Declaration of Human Rights in 1947 is

(a) காரல் வாசக் / Karel Vasak

(b) ஆலன் கார்ல்சன் / Allan Carlson

(c) எலனர் ரூஸ்வெல்ட் / Eleanor Ressevelt

(d) ஹான்சா மேத்தா / Hansa Mehta

18. சேஃபாலஜி என்பது ——— பற்றிய ஆய்வாகும்

Psephology is the study of

(a) சர்வதேச உறவுகள் / International relations

(b) உள்ளுர் அரசாங்கம் / Local government

(c) தேர்தல் / Elections

(d) சமூக நீதி / Social justice

19. கீயின்ஸின் கருத்துப்படி, நிதிக் கொள்கை இதனை நோக்கமாக கொண்டது

1. விலைகளை நிலைப்படுத்துதல்.

2. வளர்ச்சி விகிதத்தை நிலைப்படுத்துதல்.

3. வேலைவாய்ப்பை நிலைப்படுத்துதல்

According to Keynes, fiscal policy is intended for

I. Stabilisation of Prices

II. Stabilisation of rate of growth

III. Stabilisation of employment

(a) 1 மற்றும் 2 மட்டும் சரி / I and II are correct

(b) 2 மற்றும் 3 சரி / II and III are correct

(c) 1 மட்டும் சரி / I only correct

(d) 2 மட்டும் சரி / II only correct

20. கூட்டாண்மை நிதி எதனுடன் தொடர்புடையது?

Federal Finance deals with

(a) மாநில நிதி நிலை / State Finance

(b) இரயில்வே நிதி நிலை / Finance of Railways

(c) உள்ளாட்சி அமைப்புகள் / Local Bodies

(d) மத்திய மாநில நிதி உறவுகள் பற்றியது / Centre and State Financial relations

21. சிந்திரி ——- உற்பத்திக்கு பெயர் பெற்றது

Sindri is known for the production of

(a) உரங்கள் / Fertilisers

(b) பால் / Milk

(c) எண்ணெய் வித்துக்கள் / Oil Seeds

(d) மின் ஆலைகள் / Power plants

22. பின்வருபவர்களில் 1947 இந்திய சுதந்திர தின அதிகாரப்பூர்வ நிகழ்வுகளில் பங்கேற்காதவர் யார்?

Who among the following did not participate in the official events of Indian Independence Day 1947?

(a) சர்தார் வல்லபாய் படேல் / Sardar Vallabhabhai Patel

(b) டாக்டர் ராஜேந்திர பிரசாத் / Dr.Rajendra Prasad

(c) மகாத்மா காந்தி / Mahatma Gandhi

(d) டாக்டர்.B.R.அம்பேத்கார் / Dr.B.R.Ambedkar

23. சுதந்திர இந்தியா தன்னை ஓர் இறைமையுள்ள குடியரசாகப் பிரக்டனப்படுத்திய பொழுது ——– என்பதை அதனுடைய தேசியத் தாரக மந்திரமாக ஏற்றுக்கொண்டது

The independent India adopted ———- as its National Motto when she declared herself a Sovereign Republic.

(a) சர்வ பவந்து சுகினா / Sarve Bhavantu Sukhina

(b) யதோ தர்மஸ் ததோ ஜெயஹ் / Yato Dharmas-Tato Jayah

(c) சத்யமேவ ஜெயதே / Sathyameva Jayate

(d) ப்ராத்னாகிர் திமாபவ்ரினு / Pratnakir Timapavrinu

24. பின்வரும் அறிக்கையில் எது/எவை சரியானது?

1. பம்பாய் பிரசிடென்சியின் முதல் அரசியல் நிறுவன அமைப்பு பாம்பே அசோசியேஷன்.

2. மெட்ராஸ் பிரசிடென்சியின் முதல் அமைப்பு மெட்ராஸ் மகாஜன சபா.

3. மேரி கார்பெண்டர் இராஜாராம் மோகன்ராயின் ஆலோசனையின்படி பூனா சர்வஜனிக் சபாவை நிறுவனார். கொடுக்கப்பட்ட விருப்பங்களிலிருந்து சரியான விருப்பத்தை தேர்வ செய்க:

Which among the following statements is/are correct?

1. The first Political Organisation of the Bombay Presidency was the Bombay Association

2. The first Organisation in the Madras Presidency was Madras Mahajana Sabha.

3. Mary Carpenter established Poona Sarvajanik Sabha on the advice of Raja Ram Mohan Roy.

Choose the correct option from the following:

(a) 1 மட்டுமே / 1 only

(b) 1 மற்றும் 2 மட்டுமே / 1 and 2 only

(c) 2 மற்றும் 3 மட்டுமே / 2 and 3 only

(d) 1, 2 மற்றும் 3 இவை மூன்றும் / 1, 2 and 3 all the three

25. சுபாஷ் சந்திர போஸ்க்கு நேதாஜி என்ற பட்டம் எந்த நாட்டு இந்தியர்களால் வழங்கப்பட்டது?

The title of “Netaji” was given to Subash Chandra Bose by Indans who lived in the country.

(a) பிரான்ஸ் / France

(b) ஜெர்மனி / Germany

(c) மலேசியா / Malaysia

(d) சிங்கப்பூர் / Singapore

26. “நான் கண்ட பாரதம்” எனும் நூலை எழுதியவர்

The Novel “Nan Kanda Bharatham” was written by

(a) அம்புஜத்தம்மாள் / Ambujathammal

(b) அஞ்சலையம்மாள் / Anjalaiammal

(c) கிருஷ்ணம்மாள் / Krishnammal

(d) ருக்மணி லஷ்மிபதி / Rukmani Lakshmipathy

27. சங்க கால சமுதாயத்தில் கூறப்பட்டுள்ள “திணை” எனும் நிலப்பரப்புப் பிரிவுகளைச் சரியாக இணைப்படுத்துக:

அ. குறிஞ்சி 1. கடலோரப்பகுதி

ஆ. முல்லை 2. விவசாயப்பகுதி

இ. மருதம் 3. பாலைவனப் பகுதி

ஈ. நெய்தல் 4. மலைப்பகுதி

உ. பாலை 5. காடும் காடு சார்ந்த மேய்சல் பகுதி

Match the topographical divisions to their lands, called “Thinais” in Sangam society.

a. Kurinji 1. Coastal area

b. Mullai 2. Agricultural area

c. Marudham 3. Desert area

d. Neithal 4. Hilly tracts

e. Palai 5. Pastoral area

a b c d e

a. 1 2 3 4 5

b. 2 3 4 5 1

c. 3 5 4 1 2

d. 4 5 2 1 3

28. “நீங்கள் என்னை புகழக்கூடாது. ஒரு அரசியலவாதியைக் காட்டிலும், ஆசிரியரும், விஞ்ஞானியுமே முக்கியமானவர்கள்” என யார் கூறியது?

“You should not praise me. It is the teacher and the Scientists who are more important than a Politician” Who said this?

(a) காமராஜர் / Kamaraj

(b) ஜவஹர்லால் நேரு / Jawaharlal Nehru

(c) C.N.அண்ணாதுரை / C.N.Annadurai

(d) ஜெயபிரகாஷ் நாராயண் / Jayaprakash Narayan

29. தமிழக அரசியலில் கீழ்க்கண்டவைகளில் எது அண்ணாவின் கொள்கையாகும்.

1. தமிழரின் தனித்தன்மையை நிலைநாட்டுதல்.

2. மாநில சுயாட்சி.

3. கூட்டுறவு கூட்டாட்சி.

4. விஞ்ஞான சோஸியலிசம்

Which one of the following is the policy of Anna in the Tamilnadu politics?

1. Establish the identity of Tamils

2. State Autonomy

3. Co-operative federalism

4. Scientific Socialism

(a) 1 மட்டும் / 1 only

(b) 1, 2 மட்டும் / 1, 2 only

(c) 1, 2, 3 மட்டும் / 1, 2, 3 only

(d) 1, 2, 3, 4

30. “நாளுக்குநாள் சாகின்றோமால்

நமக்குநாம் அழாதது என்னோ”,

என்ற தத்துவத்தை வெளிப்படுத்தும் பாடல் வரிகள் இடம் பெற்றுள்ள காப்பியம் எது?

“Naaluku Naal sakindromal

Namakkunaam allathathu ennoh”

Which epic brings out these above Philosopic lines?

(a) நாககுமார காப்பியம் / Nagakumara Kappium

(b) யசோதர காப்பியம் / Yasodara Kappium

(c) குண்டலகேசி / Kundalakesi

(d) நீலகேசி / Neelakesi

31. “நெடுந்தொகை” என அழைக்கப்படுவது எது?

Name the book that is also called as “Nedunthogai”

(a) நற்றிணை / Nattrinai

(b) அகநானூறு / Agananooru

(c) குறுந்தொகை / Kurunthogai

(d) ஐங்குறுநூறு / Aingurunooru

32. “நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்

அல்லது செய்தல் ஓம்புமின்”

என்று பாடிய புலவர் யார்?

“Nallathu seithal aatreer aayinum

Allathu seithal Oompumin”

Who sang this song?

(a) கணியன் பூங்குன்றனார் / Kaniyan Poongundranar

(b) நரிவெரூஉத்தலையார் / Nariverromthalaiyar

(c) இடைக்குன்றூர்க்கிழார் / Idaikundroor Kilar

(d) இறையனார் / Iraiyanar

33. 1925-ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட எந்த இதழ் சுயமரியாதை இயக்கக் கருத்துக்களை பரப்பியது?

The Magazine started in 1925, to have initiated the spread of self respect movement ideology is

(a) சுதேச மித்ரன் / Sudesa Mithiran

(b) விடுதலை / Viduthalai

(c) குடியரசு / Kudiarasu

(d) முரசொலி / Murasoli

34. மூன்றாம் பாலின நல வாரியத்தை நிறுவிய முதல் மாநிலம் எது?

Which was the first state to establish third gender welfare board?

(a) தமிழ்நாடு / Tamil Nadu

(b) கர்நாடகா / Karnataka

(c) கேரளா / Kerala

(d) மகாராஷ்டிரா / Maharastra

35. பின்வரும் இடங்களை அவற்றோடு தொடர்புடையவற்றோடு பொருத்துக:

அ. ராணிப்பேட்டை 1. கோழிப்பண்ணை

ஆ. சேலம் 2. மஞ்சள்

இ. ஈரோடு 3. தோல்

ஈ. நாமக்கல் 4. உருக்கு இரும்பு

Match the following places with its corresponding products:

a. Ranipet 1. Poultry

b. Salem 2. Turmeric

c. Erode 3. Leather

d. Namakkal 4. Steel

a b c d

a. 4 2 1 3

b. 1 3 4 2

c. 2 4 3 1

d. 3 4 2 1

36. நிதி ஆயோக் 2018-அறிக்கையின்படி தமிழ்நாடு பின்வரும் எதில் மூன்றாம் இடத்தில் உள்ளது?

According to NITI Aayog report 2018 Tamilnadu ranks third in

(a) தொழிற்துறை வளர்ச்சிக் குறியீடு / Industrial Development Index

(b) ஆரோக்கியக் குறியீடு / Health Index

(c) வறுமைக்குறியீடு / Poverty Index

(d) வாழ்க்கைத் தர குறியீடு / Standard of living Index

37. “தென்னிந்தியாவின் புனிதமான நதி”

The “Scared River of South India” is

(a) திருமணிமுத்தாறு / Thirumanimutharu

(b) வெள்ளாறு / Vellaru

(d) காவிரி / Cauvery

(d) நொய்யல் / Noyyal

38. கீழ்க்காணும் எந்த ஒரு வினையின் காரணமாக சூரியன் ஒளியையும், வெப்பத்தையும் தருகிறது?

Sun gives light and heat energy due to one of the following reactions

(a) யுரேனியம் அணுக்கரு பிளவு / Fusion of Uranium

(b) ஹைட்ரஜன் மற்றும் அதன் ஐசோடோப்புக்களின் அணுக்கரு பிணைப்பு / Fusion of hydrogen and its isotopes

(c) கார்பன், நைட்ரஜன் அணுபிணைப்பு / Fusion of Carbon, nitrogen

(d) புளுட்டோனியம் சிதைவுறுதலால் / Disintegration of Plutonium

39. தொல்லியல் துறையில் பொருட்களின் ஆயுளை கணக்கிட ——- பயன்படுகிறது

—— is used to find age estimation in the archaeology.

(a) Co60

(b) C14

(c) I131

(d) Na24

40. மண்ணில்லாமல் தாவரம் பயிரிடுவதற்கும் இந்த சொல் பயன்படுத்துகிறது

What term is used to describe the cultivation of plants without soil?

(a) ஏரோபோனிக்ஸ் / Aeroponics

(b) லித்தோபோனிக்ஸ் / Lithoponics

(c) பாக்போனிக்ஸ் / Fogponics

(d) ஹைட்ரோபோனிக்ஸ் / Hydroponics

41. கீழ்க்கண்டவற்றுள், எந்த விசையினால், ஒரு அணுக்கருவில், புரோட்டான்களும் நியூட்ரான்களும் ஒன்றாக இருக்க முடிகிறது?

In a nucleus, protons and neutrons can exist together due to, which of the following forces?

(a) யுக்காவா விசைகள் / Yukawa forces

(b) வேண்டர்வால் விசைகள் / vander Waals forces

(c) கூலூம் விசைகள் / Coulomb forces

(d) நியூட்டன் விசைகள் / Newton’s forces

42. 2021-ல் தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கழகத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட உயர்தர ரக சிமெண்ட்டின் பெயர்

Name the High grade cement which was introduced by the Tamilnadu Cement Croproation Limited in the year 2021

(a) வலிமை / Valimai

(b) அரசு / Arasu

(c) அன்னை / Annai

(d) தரம் / Tharam

43. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் 2022ஆம் ஆண்டின் முதல் ஏவுதல் பணியில் ஏவப்பட்ட செயற்கைக்கோள் எது?

The satellite launched in the first launch mission of ISRO for the year 2022 is

(a) இஓஎஸ்-04 / EOS-04

(b) இஓஎஸ்-01 / EOS-01

(c) ரிசாட்-2பிஆர்1 / RISAT-2BR1

(d) கார்ட்டோசாட்-3 / Cartosat-3

44. ———அன்று அருணாச்சலப்பிரதேசம் ஒரு முழு மாநிலமாக மாறியது

Arunachal Pradesh became a full fledged State on

(a) 20 பிப்ரவரி 1987 / 20 February 1987

(b) 20 ஏப்ரல் 1987 / 20 April 1987

(c) 23 ஜீன் 1987 / 23 June 1987

(d) 23 டிசம்பர் 1987 / 23 December 1987

45. பொது விநியோக முறையைப் பற்றி பின்வருவனவற்றில் எது/எவை சரியானது?

1. இது நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் நிறுவப்பட்ட இந்திய உணவு பாதுகாப்பு அமைப்பு ஆகும்.

2. இது நாட்டின் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதிப்படுத்த உதவுகிறது.

3. இது கிடங்கில் இருப்பு மற்றும் உணவு தானியங்களை பராமரிக்கிறது.

Which of the following is/are correct about the Public Distribution system?

1. It is an Indian food security system established under the ministry of consumer affairs, and public distribution

2. It helps in ensuring the Food and Nutritional Security of the Nation

3. It maintains the buffer stock of food grains in the warehouse

(a) 1 மற்றும் 2 / 1 and 2

(b) 2 மற்றும் 3 / 2 and 3

(c) 1 மற்றும் 3 / 1 and 3

(d) 1, 2 மற்றும் 3 / 1, 2 and 3

46. கீழ்க்கண்டவற்றுள் ஒன்று செயற்கையான துறைமுகம்?

One of the following is artificial harbour

(a) சென்னை / Chennai

(b) எண்ணூர் / Ennore

(c) விசாகப்பட்டிணம் / Vishakhapatnam

(d) மும்பை / Mumbai

47. பருத்தி விளையும் கரிசல் மண்ணின் மற்றொரு பெயர் ——— என அழைக்கப்படுகின்றது.

Black cotton soil is also known as

(a) பாங்கார் / Bhangar

(b) காதர் / Khadar

(c) ரெகூர் / Regur

(d) காங்கர் / Kankar

48. முகலாயர் காலத்தில் “பான்ஜராஸ்” என்ற சொல் குறிப்பது

During the Mughal period the word “Banjaras” refers to

(a) விவசாயிகள் / Peasants

(b) வணிகர்கள் / Traders

(c) படை வீரர்கள் / Solidiers

(d) ஆசிரியர்கள் / Teachers

49. விஜய நகர பேரரசில் கொண்டாடப்படும் முக்கிய விழா

The most famous state festival of the Vijayanagara empire was

(a) பிரம்மமோட்சவம் / Brahmotsavam

(b) மகாநவமி / Mahanavami

(c) வசந்தவிழா / Spring (Vasant) Festival

(d) ரமனாவைடி / Ramana Vaidi

50. “தசகுமாரசரித்திரம்” என்னும் நூலின் ஆசிரியர்

The book “Dasakumara Charita” was written by

(a) அமரசிங் / Amar Singh

(b) காளிதாஸர் / Kalidasa

(c) தண்டின் / Dandin

(d) வாத்ஸ்யாயனார் / Vatsayana

51. இரண்டாம் சந்திரகுப்தருக்கு பின் ஆட்சிக்கு வந்தவர் யார்?

Chandra Gupta II was succeeded by whom?

(a) ஸ்கந்த குப்தர் / Skanda Gupta

(b) புரு குப்தர் / Pura Gupta

(c) கடோத்கஜ குப்தர் / Katothkaja Gupta

(d) முதலாம் குமாரகுப்தர் / Kumara Gupta I

52. புதிய நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த ஆண்டு

When did the New Consumer Protection Act came into force?

(a) ஏப்ரல் 1, 2019 / 1 April 2019

(b) மார்ச் 1, 2020 / 1 March 2020

(c) மே 1, 2019 / 1 May 2019

(d) ஜீலை 20, 2020 / 20th July 2020

53. கீழ்கண்டவற்றுள் வரவு செலவு திட்ட தயாரிப்பில் சம்பந்தப்படாதவை எவை/எது?

Which of the following is not involved in the preparation of budget?

(a) நிதி அமைச்சகம் / Finance Ministry

(b) நிதி ஆணையம் / Finance Commission

(c) நிதி அயோக் / NITI Aayog

(d) தலைமைக் கணக்கு மற்றும் தணிக்கை அலுவலர் / Comptroller and Auditor General of India

54. கீழ்க்கண்ட கூற்றைக் கருதவும்.

1. “செயலாட்சி அதிகாரம்” என்ற கருத்து அரசியலமைப்பால் வரையறுக்கப்பட்டுள்ளது.

2. குடியரசு தலைவரின் செயலாட்சி அதிகாரம் மத்திய பாராளுமன்ற அதிகாரத்துக்கு இணையான அளவில் செயற்படுத்தப்படக் கூடியதாகும்.

3. “செயலாட்சி அதிகாரம்” என்பது அரசாங்க கொள்கையை தீர்மானிக்கும் அதிகாரத்தையும் உள்ளடக்கியதாகும்.

4. குடியரசு தலைவர் பதவிக்கு தோந்தெடுக்கப்படுவதற்கு ஒருவர், குறிப்பானதொரு சட்டமன்ற தொகுதியில் ஒருவாக்காளராக பதிவு செய்திருக்க வேண்டும்.

சரியான விடையை தேர்ந்தெடு:

Consider the following statements:

I. The concept “executive power” is defined in the constitution

II. The executive power of the president is co-extensive with that of the legislature powers of the Union

III. The “Executive Power” also includes determination of the Government Policy

IV. To be elected to the office of the President a person must be registered as a voter in Parliamentary Assembly

Choose the correct answer:

(a) 1 மற்றும் 2 மட்டும் / I and II only

(b) 2 மற்றும் 3 மட்டும் / II and III only

(c) 3 மட்டும் / III only

(d) 1 மற்றும் 4 மட்டும் / I and IV only

55. 1976-ம் ஆண்டின் அரசியல் சாசன திருத்தல் சட்டம் மூலம் முகவுரையில் திருத்தம் செய்யப்பட்டு ———–, ———– மற்றும் ——— என்ற சொற்றொடரை சேர்க்கப்பட்டது.

The Preamble was amended in 1976 to include the terms ——–, ——- and ——-

(a) சமதருமம், மக்களாட்சி, குடியரசு / Socialist, Democratic and Republic

(b) மதசார்பின்மை, சமதர்மம், மக்களாட்சி / Secular, Socialist and Democratic

(c) சமதர்மம், மதசார்பின்மை, ஒருமைப்பாடு / Socialist, Secular and Integrity

(d) ஒருமைப்பாடு, மதசார்பின்மை, குடியரசு / Integrity, Secular and Republic

56. எட்டாவது ஐந்தாண்டுத் திட்டம் ——– வகையான திட்டமாகும்.

The eight five year plan is ———— type of planning.

(a) சர்வாதிகாரமானது / Totalitarian

(b) கட்டாயமானது / Imperative

(c) சுட்டிக்காட்டுவது / Indicative

(d) ஆண்டுதோறும் / Annual

57. பின்வருவனவற்றைப் பொருத்துக:

அ. எட்டாவது நிதிக்குழு 1. Dr.விஜய் கேல்கர்

ஆ. பன்னிரண்டாவது நிதிக்குழு 2. Dr.Y.V.ரெட்டி

இ. பதிமூன்றாவது நிதிக்குழு 3. Y.B.சவான்

ஈ. பதினான்காவது நிதிக்குழு 4. Dr.C.ரங்கராஜன்

Match the following:

a. Eighth Finance Commission 1. Dr.Vijay Kelkar

b. Twelfth Finance Commission 2. Dr.Y.V.Reddy

c. Thirteenth Finance Commission 3. Y.B.Chavan

d. Fourteenth Finance Commission 4. Dr.C.Rangaraja

a b c d

a. 3 4 1 2

b. 1 2 3 4

c. 2 3 4 1

d. 4 1 2 3

58. “ஜன் அவுஷாதி” திட்டத்தின் முக்தி நோக்கமானது

The main aim of Jan Aushodhi campaign is

(a) ஆறுகள் மற்றும் துணை ஆறுகளைச் சுத்தப்படுத்துதல் / Cleaning the rivers and its tributaries

(b) நகரப்பகுதிகளைச் சுத்தப்படுத்துதல் / Clean up urban areas

(c) ஒவ்வொரு பயிர் வளர்க்கும் நிலத்திற்கும் தண்ணீர் / Providing water for every farm

(d) தரமுள்ள மருந்துகளைப் பெறக்கூடிய விலையில் தருவது / Providing quality medicine at affordable prices

59. ——– என்பது சமூக நீதியின் பார்வையில் விவசாய உற்பத்தியை உயர்த்துவது மற்றும் உரிமையை மறுபகிர்வு செய்வதை உள்ளடக்கியது.

———– including the measures of redistributing ownership of holding from the point of view of social justice and raising agricultural productivity.

(a) பஞ்சாயத் ராஸ் அமைப்பு / Panchayat Raj System

(b) கிராமப்புறத் தொழில் / Rural Industrialisation

(c) நில சீர்த்திருத்தம் / Land Reforms

(d) வறுமை ஒழிப்பு திட்டம் / Anti Poverty Programme

60. பின்வரும் கூற்றுகளிலிருந்து சரியானவற்றைத் தேர்வு செய்க:

1. அலிகார் இயக்கத்தைத் தோற்றுவித்த சர் சையது அகமதுகான் தொடக்கத்தில் காங்கிரசை ஆதரித்தார்.

2. 1909இல் தோற்றுவிக்கப்பட்ட பஞ்சாப் இந்து சபையானது இந்துமத வகுப்புவாத அரசியலுக்கு அடித்தளமிட்டது.

Find out the correct answer from the following:

i. Sir Syed Ahmed Khan, the founder of Aligarh movement, was initially supportive of the congress.

ii. The Punjab Hindu Sabha founded in 1909 laid the foundation for Hindu communal politics

(a) கூற்று 1 மற்றும் 2 சரி / Statement (i) and (ii) are correct

(b) கூற்று 1 சரி 2 தவறு / Statement (i) correct (ii) wrong

(c) கூற்று 1 தவறு 2 சரி / Statement (i) wrong (ii) correct

(d) கூற்று 1 மற்றும் 2 தவறு / Statement (i) and (ii) are wrong

61. வன்முறை இல்லாமல் அநீதியை எதிர்த்துப் போராடும் புதிய ——- வழியை காந்தி மக்களுக்குக் காட்டினார்

Gandhiji showed the people a new way of fighting against injustice without violence is called as

(a) சத்யா / Satya

(b) அஹிம்சை / Ahmsa

(c) சத்தியாகிரகம் / Satyagraha

(d) காவிஸ்டி / Gavisti

62. பின்வரும் தேசிய தலைவர்களில் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக தனது குடிமைப்பணியை விட்டு விலகியவர் யார்?

Who among the following National Leader resigned from civil service to join in the freedom struggle?

(a) சி.ஆர்.தாஸ் / C.R.Das

(b) சுபாஷ் சந்திர போஸ் / Subash Chandra Bose

(c) மோதிலால் நேரு / Motilal Nehru

(d) டபுள்யூ.சி.பானர்ஜி / W.C.Banerjee

63. கீழ்வருவனவற்றுள் எது மக்களின் வாழ்வையும், பொருள் பயன்பாட்டுப் பண்பாட்டையும் குறித்து விளக்குகிறது?

Which of the following deals with the study of living people and their material culture?

(a) இனத் தொல்லியல் / Ethno Archaelogy

(b) வரலாற்றுத் தொல்லியல் / Historical Archaelogy

(c) பொருளாதாரத் தொல்லியல் / Economic Archaelogy

(d) வரலாற்றுக்கு முந்தைய தொல்லியல் / Pre-historic Archaelogy

64. உழவுத் தொழிலுக்கு அடுத்தபடியாக பழங்கால தமிழர்கள் ———— தொழிலில் ஈடுபட்டிருந்தனர்.

Ancient Tamil people were involved in ———– occupation next to agriculture.

(a) நெசவு / Weaving

(b) வாணிபம் / Trading

(c) மீன்பிடித்தல் / Fishing

(d) வேட்டையாடுதல் / Hunting

65. கீழ்க்காணும் நாளேடுகளில் நீதிக்கட்சிகளுடன் தொடர்புடைய நாளேடுகள் இவை:

1. ஜஸ்டிஸ்.

2. திராவிடன்.

3. ஆந்திரா பிரகாசா.

5. புரட்சி

Which of the following news papers were associated with the justice party.

I. Justice

II. Dravidan

III. Andhara Prakasa

IV. Revolt

(a) 1 மட்டும் சரி / I is correct

(b) 1, 2 சரி / I, II are correct

(c) 1, 2 மற்றும் 3 சரி / I, II and III are correct

(d) 1, 2, 3 மற்றும் 4 சரி / I, II, III and IV are correct

66. “பழையன கழிதலும் புதியன புகுதலும்

வழுவல கால வகையி னானே”

எனும் நூற்பா இடம்பெறும் நூல் எது?

“The Passing of the old

The ascendance of the new

Is the unchanging order of time”

These lines are occurring in which book?

(a) தொல்காப்பியம் / Tholkappiyam

(b) நன்னூல் / Nannul

(c) புறப்பொருள் வெண்பாமாலை / Pura Porul Venba Malai

(d) நம்பியகப் பொருள் / Nambiyaga Porul

67. “மரப்பசு” என்னும் புதினத்தை எழுதியவர் யார்?

Who wrote the novel titled “Marappasu”?

(a) தி.ஜானகிராமன் / T.Janakiraman

(b) ராஜம் கிருஷ்ணன் / Rajam Krishnan

(c) அம்பை / Ambai

(d) ஜெயகாந்தன் / Jeyakanthan

68. பாரதியார் சொந்தமாக நடத்திய இதழ் எது?

Which Magazine was run by Bharathiar?

(a) சுதந்திரச்சங்கு / Suthanthira Sangu

(b) இந்தியா / India

(c) சுதேசமித்திரன் / Swadeshmithran

(d) நவசக்தி / Navaskthi

69. மகளிர் மடலேறுதல் தமிழர் மரபன்று; அது

வடநாட்டார் மரபென்று குறிப்பிடும் நூல் எது?

“Magalir madaleruthal thamilar marabandru

Vadanatar Marabu”

Which book says this?

(a) திருநெடுந்தாண்டகம் / Thiruneduthandagam

(b) பெரிய திருமடல் / Periya Thirumadal

(c) சிறிய திருமடல் / Siriya Thirumadal

(d) திருப்பல்லாண்டு / Thirupallandu

70. தமிழில் சிறந்த நீதி நூலாக கருதப்படுவது எது?

Which one is the great justice text among all the four?

(a) நீதி நெறி விளக்கம் / Neethineri Villakkam

(b) திருக்குறள் / Thirukural

(c) நாலடியார் / Naaladiyaar

(d) ஆத்தி சூடி / Aathi Soodi

71. சிவகாசியை “குட்டி ஜப்பான்” என்று அழைத்தவர் யார்?

Who called Sivakasi as a Little Japan?

(a) ஜவஹர்லால் நேரு / Jawaharlal Nehru

(b) காந்திஜி / Gandhiji

(c) கு.காமராஜ் / Kamaraj

(d) இராஜாஜி / Rajaji

72. அனைத்து இந்திய உயர்கல்விக்கான கணக்கெடுப்பு 2019-இன் படி 2018-ஆம் ஆண்டில் அதிகபட்ச எண்ணிக்கையிலான பி.எச்.டி-களை (முனைவர்களை) உருவாக்கியுள்ள மாநிலம்

According to All India survey for Higher Education 2019, the State which produced the maximum number of in the country in 2018 is

(a) குஜராத் / Gujarat

(b) கேரளா / Kerala

(c) மகாராஷ்டிரா / Maharashtra

(d) தமிழ்நாடு / Tamilnadu

73. தமிழ்நாடு புதிய ஒருங்கிணைந்த ஜவுளிக் கொள்கை எந்த ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது?

Tamil Nadu new integrated textile policy was launched in the year

(a) 2016

(b) 2017

(c) 2018

(d) 2019

74. பின்வருவனவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு:

கூற்று (A): தமிழ்நாட்டில் சராசரி ஆயுட்காலம் உயர்ந்துள்ளதால் அறுபது வயதைக் கடந்தோர் கணிசமாக உயர்ந்துள்ளனர்.

காரணம் (R): தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரம் கணிசமாக உயர்ந்துள்ளது.

Choose the right answer from the following assertion:

Assertion (A): Due to the increase in life expectancy, the number of people over sixty has increased substantially in Tamil Nadu.

Reason (R): The standard of living of the people of Tamilnadu has increased substantially.

(a) (A) சரி, ஆனால் (R) தவறு / (A) is true but (R) is false

(b) (A) மற்றும் (R) சரி. மேலும் (A) என்பதற்கு (R) சரியான விளக்கமாகும் / Both (A) and (R) are true and (R) is the correct explanation of (A)

(c) (A) மற்றும் (R) இரண்டும் சரி. ஆனால் (A) என்பதற்கு (R) சரியான விளக்கமில்லை / Both (A) and (R) are true, but (R) is not the correct explanation of (A)

(d) (A) தவறு, ஆனால் (R) சரி / (A) is false, (R) is true

75. எந்த சட்டப்பிரிவின் படி ஆளுநர் மாநில நிர்வாகத்தின் அதிகாரங்கள் மற்றும் பணிகளில் அதிகாரம் பெற்றவராக திகழ்கிறார்.

——— Article, In the exercise of functions and powers the governor of the State.

(a) சட்டப்பிரிவு 192-ன் படி / Under the Article 192

(b) சட்டப்பிரிவு 163-ன் படி / Under the Article 163

(c) சட்டப்பிரிவு 110-ன் படி / Under the Article 110

(d) சட்டப்பிரிவு 162-ன் படி / Under the Article 162

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!