General StudiesTnpsc

Tnpsc Model Question Paper 27 – General Studies in Tamil & English

1. ——- மனித இனங்களின் அருங்காட்சியம்” என அழைக்கப்படுகிறது

——– is called as the “Museum of human race”.

(a) இங்கிலாந்து / England

(b) இந்தியா / India

(c) அமெரிக்கா / America

(d) சீனா / China

2. பொருந்தாததை தேர்ந்தெடுக்கவும்:

Pick the odd one out:

(a) பாதாமி சாளுக்கியர்கள் / Chalukyas-Badami

(b) வெங்கிச் சாளுக்கியர்கள் / Chalukyas-Vengai

(c) நந்திச் சாளுக்கியர்கள் / Chalukyas-Nandhi

(b) கல்யாணி சாளுக்கியர்கள் / Chalukyas-Kalyani

3. பொருந்தாததை தேர்ந்தெடுக்கவும்:

Pick the odd one out:

(a) சிந்து சமவெளி மக்கள் இரும்பு மற்றும் குதிரையை அறிந்திருக்கவில்லை / Horse and iron were unknown to the Indus people

(b) சிந்து சமவெளி மக்கள் ஆபரணம் செய்ய சிவப்பு நிற மணிக்கற்களைப் பயன்படுத்தினர் / Indus people used the red quartz stone to design jewellery

(c) பொதுவாகப் பட்டு ஆடைகளே சிந்து சமவெளி கலாச்சாரத்தில் பயன்பாட்டில் இருந்தன / Silk dresses were in common use in Indus Culture

(d) சிந்து சமவெளி ஆண், பெண் இருபாலரும் ஆபரணங்களை விரும்பி அணிந்திருந்தனர் / Ornaments were popular among men and women of Indus Culture

4. “விழு!, மூடிக்கொள்! பிடித்துக்கொள்” என்பது எதற்கான ஒத்திகை?

‘Drop, cover, hold’ is a mock drill a vowal for

(a) தீ / Fire (b) சுனாமி / Tsunami

(c) நிலநடுக்கம் / Earthquake

(d) கலவரம் / Riot

5. கீழக்கண்டவற்றுள் எது பணப்பயிர் அல்ல?

Which of the following is not a Cash Crop?

(a) கரும்பு / Sugarcane

(b) காபி / Coffee

(c) புகையிலை / Tobacco

(d) பருத்தி / Cotton

6. தீபகற்ப இந்தியாவில் பாயும் மிக நீளமான ஆறு எது?

Which is longest peninsular river?

(a) மகாநதி / Mahanadi

(b) கோதாவரி / Godavari

(c) கிருஷ்ணா / Krishna

(d) நர்மதா / Narmada

7. தமிழ்நாட்டில் உள்ள பன்னாட்டு விமான நிலையங்கள் ——— ஆகும்

International airports in Tamil Nadu are ——– in number

(a) 4

(b) 3

(c) 2

(d) 1

8. தமிழ்நாட்டில் “இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48” திட்டத்தின் நோக்கம்

Innuyir Kaapoom – Nammai Kaakum 48 scheme was launched in Tamil Nadu with the aim of

(a) புற்றுநோய் மூலம் ஏற்படும் இறப்பைக் குறைத்தல் / Reducing death due to cancer

(b) சாலை விபத்தின் மூலம் ஏற்படும் இறப்பைக் குறைத்தல் / Reducing death due to road accidents

(c) கொரோனா மூலம் ஏற்படும் இறப்பைக் குறைத்தல் / Reducing death due to corona

(d) ஊட்டச் சத்து குறைபாடு மூலம் ஏற்படும் இறப்பைக் குறைத்தல் / Reducing death due to mal nutrition

9. சமூகநீதி எனும் கருத்துருவானது ———–ல் உருவானது

The concept of social justice arose in the

(a) 16-ம் நூற்றாண்டு / 16th Century

(b) 18-ம் நூற்றாண்டு / 18th Century

(c) 19-ம் நூற்றாண்டு / 19th Century

(d) 21-ம் நூற்றாண்டு / 21st Century

10. நீதியை நியாயம் என்று கூறியவர் யார்?

Who has termed justice as fairness?

(a) சாமுவேல் ப்ரிமேன் / Samuel Freeman

(b) தாமஸ் மெர்ட்டன் / Thomas Mertens

(c) ராபர்ட்.கே.மெர்ட்டன் / Robert K.Merton

(d) ஜான் ராவல்ஸ் / John Rawls

11. 1932ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் நாளில் புனித ஜார்ஜ் கோட்டையின் உச்சியில் தேசியக் கொடியை ஏற்றியவர் ——- ஆவார்.

——— hoisted the National Flag atop of Fort St.George on 26th January, 1932

(a) திருப்பூர் குமரன் / Tiruppur Kumaran

(b) ஆரியா (பாஷ்யம்) / Arya (Bhashyam)

(c) T.பிரகாசம் / T.Prakasam

(d) K.நாகேஸ்வர ராவ் / K.Nageswara Rao

12. ———– பிரம்ம ஞானக் கருத்துக்களை தன்னுடைய “நியூ இந்தியா” மற்றும் “காமன்வீல்” செய்தித்தாள்களின் மூலம் பரப்பினார்.

—— spread Theosophical ideas through her newspapers called “New India” and “Common weal”.

(a) அன்னிபெசன்ட் / Annie Besant

(b) சாவித்திரிபாய் / Savitri Bai

(c) அய்யன்காளி / Ayyan Kali

(d) சர் சையது அகமத் கான் / Sir Sayyid Ahmed Khan

13. “மனோன்மணியம்” என்னும் நாடக நூலை இயற்றியவர் —— ஆவார்

The play ‘Manonmaniam’ was written by

(a) மீனாட்சி சுந்தரனார் / Meenakshi Sundaranar

(b) பி.சுந்தரனார் / P.Sundaranar

(c) உ.வே.சாமிநாதர் /U.V.Swaminatha

(d) சி.வை.தாமோதரனார் / C.W.Damotharan

14. தமிழ்நாட்டில் நகரமயமாதல் ——- நூற்றாண்டிலிருந்து தொடங்குகிறது என்பதை கீழடி அகழாய்வு கூறுகின்றது

Keezhadhi excavation suggests that —– century onwards urbanization has been occurred in Tamil Nadu.

a) 3-ம் நூற்றாண்டு பொ.ஆ.மு / 3rd Century BCE

(b) 4-ம் நூற்றாண்டு பொ.ஆ.மு / 4th Century BCE

(c) 5-ம் நூற்றாண்டு பொ.ஆ.மு / 5th Century BCE

(d) 6-ம் நூற்றாண்டு பொ.ஆ.மு / 6th Century BCE

15. அகத்தின் இருளைப் போக்கும் விளக்காக வள்ளுவர் எதனைக் கூறுகின்றார்?

What removes inner negativity of a mankind like a lamp according to Valluvar?

(a) பொய்யா விளக்கு / Lamp with truth’s pure radiance

(b) குடும்ப விளக்கு / Light of the Family

(c) அருள் விளக்கு / Blessed Lamp

(d) தவ விளக்கு / Lamp of Penance

16. புலாலை உணவாக்கிக் கொள்பவரை வள்ளுவர் எவ்வாறு அழைக்கிறார்?

How does Valluvar portray meat eaters?

(a) முறையற்றவர் / Irregular

(b) அருளற்றவர் / Unkind

(c) அறிவற்றவர் / Ignorant

(d) பொருளற்றவர் / Penniless

17. நெருப்பின் நடுவில் கூடப் படுத்துத் தூங்கலாம். ஆனால், எப்போது தூங்க முடியாது?

“The fire outside can envelop one to eternal slepp; ——–

but ———- when cannot one sleep?

(a) வறுமையிலிருக்கும் போது தூங்கமுடியாது / One cannot sleep in the crisis of poverty

(b) செல்வம் நிறைந்திருக்கும்போது தூங்கமுடியாது / One cannot sleep with the hoard of riches

(c) நோயின் கடுமை மிகுந்திருந்தால் தூங்க முடியாது / One cannot sleep afflicted in illness

(d) துன்பம் தொடர்ந்து வந்து கொண்டிருந்தால் தூங்க முடியாது / One cannot sleep in continuous misery

18.சேரும் போது மகிழ்வதும் பிரியும் போது மனம் கலங்குவதும் யாருடைய தொழிலாக வள்ளுவர் குறிப்பிடுகின்றார்?

Who according to Valluvar becomes happy to be together but despairs separation?

(a) புலவர் தொழில் / Profession of Poets

(b) உழவர் தொழில் / Agricultural Industry

(c) மருத்துவர் தொழில் / Medical Field

(d) வணிகர் தொழில் / Trade and Commerce

19. பின்வருவனவற்றைப் பொருத்துக:

அ. சம்பரான் சத்தியாகிரகம் 1. 1922

ஆ. வகுப்புவாத விருது 2. 1932

இ. ஆகமதாபாத் ஆலைத்தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் 3. 1918

ஈ. பர்தோலி தீர்மானம் 4. 1917

Match the following:

a. Champaran Satyagraha 1. 1922

b. Communal Award 2. 1932

c. Ahmedabad Mill strike 3. 1918

d. Bardoli Resolution 4. 1917

a b c d

a. 4 2 3 1

b. 2 3 4 1

c. 1 2 3 4

d. 4 3 2 1

20. 1931 ஆம் ஆண்டு கராச்சியில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் தலைமை வகித்தவர்

The Karachi Session in 1931 of the Indian National Congress was presided over by

(a) அபுல் கலாம் ஆசாத் / Abdul Kalam Azad

(b) வல்லபாய் பட்டேல் / Vallabai Patel

(c) ஜவஹர்லால் நேரு / Jawaharlal Nehru

(d) சரோஜினி / Sarojini

21. கட்டபொம்மன் தூக்கிலிட்டு கொலை செய்வதை நிறைவேற்றியவர்

Kattabomman was hanged to death was executed by

(a) கர்னல் ஹரான் / Col.Heron

(b) மேஜர் பானர்மென் / Major Bannerman

(c) எட்வர்ட் கிளைவ் / Edward Clive

(d) ஜான் கிரடாக் / John Cradock

22. “தி ரேஸ் ஆஃப் மை லைஃப்” என்ற சுயசரிதை யாருடன் தொடர்புடையது?

The autobiography “The Race of My life” is related to

(a) பி.டி.உஷா / P.T.Usha

(b) மில்கா சிங் / Milkha Singh

(c) கபில்தேவ் / Kapil Dev

(d) மஹேந்திர சிங் தோனி / Mahendra Singh Dhoni

23. ——— மெட்ரோ ரயில் அமைப்பு மற்றும் சேவைகள் இந்தியாவில் 2022ஆம் ஆண்டில் செயல்படுகிறது.

—— Metro railway system and services are operational in India in the year 2022

(a) 13

(b) 14

(c) 15

(d) 16

24. மக்களவை மற்றும் ஒவ்வொரு மாநில சட்டமன்றங்களிலும் வயது வந்தோர் வாக்குரிமையின் அடிப்படையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனக் கூறும் இந்திய அரசியலமைப்பின் சட்டப்பிரிவு யாது?

According to which Article, the elections to the Lok Sabha and the Assemblies of every State shall be conducted on the basis of Adult Suffrage?

(a) சட்டப்பிரிவு-234 / Article-234

(b) சட்டப்பிரிவு-263 / Article-263

(c) சட்டப்பிரிவு-326 / Article-326

(d) சட்டப்பிரிவு-363 / Article-363

25. யாஸ் சூறாவளி எங்கு உருவானது?

Yaas cyclone was formed in

(a) அரபிக்கடல் / Arabian Sea

(b) வங்காள விரிகுடா / Bay of Bengal

(c) செங்கடல் / Red Sea

(d) சாக்கடல் / Dead Sea

26. ——- என்பது உறுதியான, தடித்த வெண்ணிற உறையாக அமைந்து கண்ணின் உள்பாகங்களைப் பாதுகாக்கின்றது.

——— is a tough and thick white sheath that protects the inner parts of the eye.

(a) ஸ்க்லெரா / Sclera

(b) கண்ஜங்டிவா / Conjuctiva

(c) கார்னியா / Cornea

(d) ஐரிஸ் / Iris

27. காப்பித் தூளில் சேர்க்கப்படும் கலப்படப் பொருள் ——– ஆகும்

The adulterant added to coffee powder is

(a) சாக்பீஸ் பொடி / Chalk powder

(b) மணல் துகள்கள் / Sand grit

(c) புளிபொடி / Tamarind Powder

(d) மெட்டனில் மஞ்சள் / Metanil yellow

28. இவற்றுள் எந்த விடை தவறானது:

1 மெட்ரிக்டன் என்பது ———

1. 10 குவின்டால்

2. 1000 கிலோகிராம்

Which of this is the wrong answer?

1 metric tonne is

  1. Quintal
  2. 1000 kg

(a) 1 மட்டும் / 1 only

(b) 2 மட்டும் / 2 only

(c) 1 மற்றும் 2 ஆகிய இரண்டும் / both 1 and 2

(d) 1 மற்றும் 2 ஆகியவற்றில் எதுவுமில்லை / Neither 1 nor 2

29. பூமியில் ஒரு மனிதனின் நிறை 50 கி.கி. எனில் அவரின் எடை எவ்வளவு?

If a man has a mass of 50 kg. on Earth, then what is his weight?

(a) 490 நியூட்டன் / 490 N

(b) 490 கி.கி / 490 kg

(c) 50 கி.கி / 50 kg

(d) 50 நியூட்டன் / 50 N

30. வேளாண்மையை அடிப்படையாகக் கொண்ட தொழிற்சாலை எது?

Which one is an example for Agro based Industry?

(a) சர்க்கரை ஆலை / Sugar Mill

(b) சிமெண்ட் ஆலை / Cement

(c) எஃகு தொழிற்சாலை / Steel factory (d) சுரங்கம் தோண்டுதல் / Mining

31. கூற்று மற்றும் காரணம் வகை:

கூற்று (A) : ஒழுங்குப்படுத்தப்படாத துறையில் வேலைவாய்ப்பு வரையறைகள் நிலையானதாக இருக்காது.

காரணம் (R): இத்துறை சுயதொழில் புரியும் ஏராளமான, சிறு அளவில் தொழில் செய்வோரை உள்ளடக்கியது

Assertion and Reason Type:

Assertion (A) : In the unorganized sector the employment terms are not fixed.

Reason (R) : This sector includes a large number of people who are employed on their own and doing small jobs.

(a) கூற்று (A) மற்றும் காரணம் (R) சரி, (A) கூற்றுக்கான காரணம் (R) சரி / Both (A) and (R) are true and (R) explains (A)

(b) கூற்று (A) மற்றும் காரணம் (R) சரி, (A) கூற்றுக்கான காரணம் (R) தவறு / Both (A) and (R) are true and (R) does not explain (A)

(c) கூற்று (A) சரி காரணம் (R) தவறு / (a) is correct and (R) is false

(d) கூற்று (A) தவறு காரணம் (R) சரி / (a) is false and (R) is true

32. வளர்ச்சி விகிதத்தின் அடிப்படையில் வெற்றியடைந்த ஐந்தாண்டுத் திட்டங்கள்

1. முதலாம் ஐந்தாண்டுத்திட்டம்

2. மூன்றாம் ஐந்தாண்டுத்திட்டம்

3. ஐந்தாம் ஐந்தாண்டுத்திட்டம்

4. ஏழாவது ஐந்தாண்டுத்திட்டம்

According to the growth rate the successful five year plans are

1. First Five year plan

2. Third Five year plan

3. Fifth Five year plan

4. Seventh Five year plan

(a) அ, ஆ மற்றும் இ / 1, 2 and 3

(b) ஆ, இ மற்றும் ஈ / 2, 3 and 4

(c) அ, இ மற்றும் ஈ / 1, 3 and 4

(d) அ, ஆ மற்றும் ஈ / 1, 2 and 4

33. உலகத்தில் உள்ள மொத்த ஏழை மக்களில் ——– சதவிகிதம் இந்தியாவில் உள்ளனர்.

India is the home to ——- percent of the World’s poor

(a) 12

(b) 18

(c) 22

(d) 20

34. எந்த ஆண்டு அடிப்படை உரிமைகள் பட்டியலிலிருந்து சொத்துரிமை நீக்கப்ட்டது?

Which year the right to property was removed from the list of Fundamental Rights?

(a) 1976

(b) 1972

(c) 1978

(d) 1975

35. உலகிலேயே எழுதப்பட்ட மற்றும் மிகவும் நீளமான அரசியலமைப்பு எது?

Which of the following Constitution is written and Lengthiest in the World?

(a) அமெரிக்கா / USA

(b) இந்தியா / India

(c) இங்கிலாந்து / England

(d) ஐரிஷ் / Irish

36. கூற்று(A): இந்திய அரசியல் அமைப்பானது தேர்தல் ஆணையம் சுதந்திரமாகச் செயல்பட வழிவகை செய்கிறது.

காரணம் (R): சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நடத்த உறுதி செய்கிறது

Assertion (A) : Indian Constitution provides for an Independent Election Commssion.

Reason (R): To ensure free and fair elections in the country

(a) (A) மற்றும் (R) இரண்டும் சரியானது மற்றும் (R) (A)வை விளக்குகிறது / Both (A) and (R) are true and (R) explains (A)

(b) (A) மற்றும் (R) இரண்டும் சரியானது (R) (A) விளக்கவில்லை / Both (A) and (R) are true and (R) does not explains (A)

(c) (A) சரியானது மற்றும் (R) தவறானது / (A) is correct and (R) is false

(d) (A) தவறானது மற்றும் (R) சரியானது / (A) is false and (R) is true

37. ———- எழுத்துக்களில் காணப்படும் “மெலுஹா” என்ற குறிப்பு சிந்து பகுதியைக் குறிப்பதாகும்.

The mention of the world ‘Meluhha’ in the ——— script is considered to refer to the Indus region

(a) சித்திர எழுத்து / Pictographic

(b) கியூனிபார்ம் / Cuneiform

(c) பிராமி / Brahmi

(d) ஹைரோகிளிபிக் / Hieroglyphic

38. கீழ்க்கண்டவற்றில் எது அரசியல் சமத்துவம் ஆகும்.

Which one of the following comes under Political Equality?

(a) அரசாங்கத்திற்கு மனுசெய்வது மற்றும் பொதுக் கொள்கைகளை விமர்சிப்பது / Right to petition the government and criticize public policy

(b) இனம், நிறம், பாலினம் மற்றும் சாதி அடிப்படையில் சமத்துவமின்மை அகற்றப்படுதல் / Removal of inequality based on race, colour, sex and caste.

(c) சட்டத்தின் முன் அனைவரும் சமம் / All are equal before the law

(d) சட்டம் கைகளில் செல்வம் செறிவு தடுப்பு / Prevention of concentration of wealth in the hands of law.

39. பின்வரும் மசூதிகளில் வெற்றி கோபுரத்தால் மிகவும் பிரபலமான மசூதி எது?

Which one of the following mosque is best known for its tower of victory?

(a) பேகம்பூரி மசூதி / Begumpuri Mosque

(b) குவாத் உல் இஸ்லாம் மசூதி / Quwwat-ul-Islam Mosque

(c) மோட்டி கி-மஸ்ஜித் / Moti Ki masjid (d) ஜமாளி-கமாளி மசூதி / Jamali Kamali Mosque

40. தைமூர் இந்தியா மீது படையெடுத்த ஆண்டு எது?

Timur invaded India during the year

(a) 1396

(b) 1398

(c) 1414

(d) 1451

41. தமிழ்நாட்டில் எந்த மாவட்டம் குறைவான பாலின விகிதம் கொண்டுள்ளது?

In Tamil Nadu the lowest sex ratio has recorded in the district of

(a) வேலூர் / Vellore

(b) கடலூர் / Cuddalore

(c) நீலகிரி / Nilgiri

(d) தர்மபுரி / Dharmapuri

42. இந்தியாவின் முதல் புறநகர் இரயில் போக்குவரத்து எங்குத் தொடங்கப்பட்டது?

Where did the first sub-urban railway started in India?

(a) கொல்கத்தா / Kolkatta

(b) சென்னை / Chennai

(c) டெல்லி / Delhi

(d) மும்பை / Mumbai

43. இந்தியாவின் மிகப் பழமையான மடிப்பு மலைத்தொடர் எது?

Which is the India’s oldest fold mountain range?

(a) சாஸ்கர் மலைத்தொடர் / Zeskar range

(b) காரகோரம் மலைத்தொடர் / Karakoram range

(c) ஆரவல்லி மலைத்தொடர் / Aravalli range

(d) லடாக் மலைத்தொடர் / Ladakh range

44. தமிழ்நாட்டில் கீழ்க்காணும் எந்த இடத்தில் அணுமின் உற்பத்தி நிலையம் அமைந்துள்ளது?

Which nuclear power plant is located in Tamil Nadu?

(a) நரோன் / Naron

(b) கூடங்குளம் / Kudankulam

(c) தாராபூர் / Tarapur

(d) நரோரா / Narora

45. மக்களைத் தேடி மருத்துவம் முதலில் தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் ஏற்படுத்தப்பட்டது?

Makkalai Thedi Maruthuvam (Health care services at people’s doorsteps) was first launched in which district of Tamil Nadu?

(a) தர்மபுரி / Dharmapuri

(b) மதுரை / Madurai

(c) கிருஷ்ணகிரி / Krishnagiri

(d) தேனி / Theni

46. நிதி ஆயோக் (2018) அறிக்கையின் படி சுகாதாரக் குறியீட்டில் தமிழ்நாடு ———- இடத்தை வகிக்கிறது.

Tamil Nadu is placed ——– in health index as per the NITI AAYOG report (2018)

(a) 1st

(b) 8th

(c) 5th

(d) 3rd

47. எந்த மாநிலம் முதன் முதலில் “பஞ்சாயத்து ராஜ்” முறையை செயல்படுத்தியது?

Which state implemented first the Panchayati Raj System?

(a) இராஜஸ்தான் / Rajasthan

(b) பீஹார் / Bihar

(c) கேரளம் / Kerala

(d) தமிழ்நாடு / Tamil Nadu

48. தமிழகத்தில் சட்ட மறுப்பு இயக்கத்தின் போது உப்புச் சட்டங்களை மீறிதற்காக அபராதம் கட்டிய முதல் பெண்மணி யார்?

Who was the first woman to pya penalty for violation of salt laws during the Civil Disobedience Movement in Tamil Nadu?

(a) ருக்மணி லட்சுமிபதி / Rukmani Lakshmipathi

(b) முத்துலட்சுமி அம்மையார் / Muthulakshmi Ammaiyar

(c) மூவலூர் இராமாமிர்தம் / Muvalur Ramamirtham

(d) அன்னிபெசன்ட் / Annie Besant

49. பூலித்தேவரின் கட்டுப்பாட்டிற்குள் இல்லாத கோட்டை ———— ஆகும்.

The Fort that was not controlled by Pulithevar is

(a) நெற்கட்டும்செவல் / Nerkattumseval

(b) வாசுதேவநல்லூர் / Vasudevanallur

(c) பனையூர் / Panayur

(d) சிவகிரி / Sivagiri

50. ஒரிசா நாட்டோடு தொடர்புடைய புலவர் யார்?

Who among the following poet had relations with Odhisa country?

(a) கம்பர் / Kamban

(b) சேக்கிழார் / Sekkilar

(c) ஒட்டக்கூத்தர் / Ottakuthar

(d) செயங்கொண்டார் / Jayamkondan

51. யாருடைய பகையைத் தவிர்க்க வேண்டும்?

Whose enmity should be avoided?

(a) வில்லேர் உழவர் பகை / Hatred of Warriors

(b) சொல்லேர் உழவர் பகை / Hatred of World Ploughers (Writers)

(c) அன்பேர் உழவர் பகை / Hatred of loved ones

(d) பண்பேர் உழவர் பகை / Hatred of righteous men

52. எப்படிப்பட்ட அரசனின் கீழ் மக்கள. தங்கி வாழ்வார்கள் என்று வள்ளுவர் குறிப்பிடுகின்றார்?

According to Valluvar under which King will the citizen prosper happily?

(a) மென்சொல் விரும்புவர் / The one who sustain good words

(b) கடுஞ்சொல் பொறுப்பவர் / The one who bears bitter criticism

(c) கடுஞ்சொல் பொறுக்காதவர் / The one who cannot sustain harsh words

(d) பகைமையை வெல்பவர் / The one who triumphs vengeance

53. “அழுக்காறுடையான் கண் ஆக்கம்போன் றில்லை” – இதில் அழுக்காறு என்பதன் பொருள் யாது?

“Azhukkaarutaiyaan kan Aakkampondru illai”. What is the meaning of “Azhukkaaru”?

(a) சினம் / Wrath

(b) வெகுளாமை / Absence of anger

(c) பொறாமை / Envious

(d) தீமை / Evil

54. காலத்தினால் செய்த நன்றியை வள்ளுவர் எவ்வாறு சுட்டுகிறார்?

To what does Valluvar denote the timely benefit rendered in the Kural “Kaalaththi Naarseydha Nandri”?

(a) அறிவைவிடப் பெரியது / Bigger than Knowledge

(b) கடலைவிடப் பெரியது / Greater than the Ocean

(c) உலகத்தைவிடப் பெரியது / Greater than the Sky

(d) வானைவிடப் பெரியது / Higher than the Sky

55. அறத்திற்கு மட்டுமன்று, மறத்திற்கும் துணை என்றுத் திருவள்ளுவர் எதனைக் கூறுகின்றார்?

What helps virtue and also guards us from all evil?

(a) பொறுமை / Patience

(b) அன்பு / Love

(c) பெருமை / Pride

(d) கல்வி / Education

56. மூவலூர் இராமாமிர்தம் ——– மாவட்டத்தில் பிறந்தார்

Moovalur Ramamirdham was born in the district of

(a) கடலூர் / Cuddalore

(b) மயிலாடுதுறை / Mayiladuthurai

(c) தஞ்சாவூர் / Thanjavur

(d) கன்னியாகுமரி / Kanniyakumari

57. ஈ.வே.ராவிற்கு ———-ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற மகளிர் மாநாட்டில் “பெரியார்” என்ற பட்டம் வழங்கப்பட்டது.

‘Periyar’ the title was conferred on him by Tamil Nadu Women Conference held in Madras on

(a) 1936

(b) 1937

(c) 1938

(d) 1939

58. “நவஜவான் பாரத் சபா” என்ற அமைப்பை நிறுவியவர் ——- ஆவார்

Naujawan Bharat Sabha was founded by

(a) பகத்சிங் / Bhagat Singh

(b) சுபாஷ் சந்திர போஸ் / Subhash Chandra Bose

(c) வீர் சாவர்க்கர் / Veer Savarkar

(d) சந்திர சேகர ஆசாத் / Chandrashekhar Azad

59. பின்வருவனவற்றுள் இந்தியாவின் இரண்டாவது பெரிய துறைமுகம் எது?

Which one of the following is the second largest port in India?

(a) மும்பை / Mumbai

(b) மங்களுர் / Mangalore

(c) சென்னை / Chennai

(c) கொச்சி / Cochin

60. கலைத்துறையில் சாதனைகள் செய்தமைக்காக, 2021-ஆம் ஆண்டிற்கான, தமிழ்நாட்டில் பத்ம விபூஷன் விருது பெற்றவர் யார்?

The Padma Vibushan in the field of Arts for the year 2021 was awarded to ——- in Tamil Nadu

(a) நாராயண் தேவ்நாத் / Narayan Devnath

(b) கே.எஸ்.சித்ரா / K.S.Chitra

(c) பாம்பே ஜெயஸ்ரீ / Bombay Jeyasree

(d) எஸ்.பி.பாலசுப்பிரமணியம் / S.P.Balasubrahamanyam

61. 2020-21 ஆண்டிற்கான இந்தியாவின் நாள் ஒன்றுக்கான தனி மனித பால் இருப்பு ——— ஆகும்.

——— is the percapita availability of milk per day in India for the year 2020-21

(a) 319 கிராம்/நாள் / 319 grams/day

(b) 406 கிராம்/நாள் / 406 grams/day

(c) 427 கிராம்/நாள் / 427 grams/day

(d) 467 கிராம்/நாள் / 467 grams/day

62. 26 ஜனவரி 2021-ல் மகாவீர் சக்ரா விருது ——— அவர்களுக்கு வழங்கப்பட்டது

Maha Vir Chakra award on 26th January 2021 won by

(a) நாயக் திகேந்திர குமார் / Naik Digendra Kumar

(b) மேஜர் விவேக் குப்தா / Major Vivek Gupta

(c) பிரேகிடியர் சாண்ட் சிங் / Brigadier Sant Singh

(d) கர்னல் B.சந்தோஷ் பாபு / Colonel B.Santosh Babu

63. முள்ளெலும்பு மற்றும் குடல்வால் எதற்கு எடுத்துக்காட்டாகும்?

Caudal Vertebrae and Vermiform appendix are example for

(a) இரண்டாம் நிலை உறுப்புகள் / Secondary organs

(b) செயல் ஒத்த உறுப்புகள் / Analogous organs

(c) அமைப்பு ஒத்த உறுப்புகள் / Homologous organs

(d) எச்ச உறுப்புகள் / Vestigial organs

64. தவறாகப் பொருத்தப்பட்டுள்ள குறைபாடு நோயினை கண்டறிக:

Identify the incorrectly matched deficiency disorder.

(a) வைட்டமின் B3 பெலாக்ரா / Vitamins B3-Pellagra

(B) வைட்டமின் B6 – டெர்மாடிட்ஸ் / Vitamins B6 – Dermatitis

(c) வைட்டமின் B2 – பெரிபெரி / Vitamins B2 – Beriberi

(d) வைட்டமின் B12 – உயிரைப்போக்கும் இரத்த சோகை / Vitamins B12 – Perinicious Anaemia

65. வணிக ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததால் இதனைக் “கருப்பு தங்கம்” என அழைக்கின்றனர்

Due to its great commercial importance, it is called ‘Black gold’.

(a) பெட்ரோலியம் / Petroleum

(b) கல்கரி / Coke

(c) கரித்தார் / Coal tar

(d) அம்மோனியா / Ammonia

66. எந்த தனிமத்தை மற்ற தனிமங்களுடன் சேர்த்து வயிற்றுப்போக்கு சிகிச்சைக்கு மருந்தாகப் பயன்படுத்துகின்றனர்?

The element that combines with other elements to make medicine for treating diarrhea

(a) பிஸ்மத் / Bismuth

(b) துத்தநாகம் / Zinc

(c) கால்சியம் / Calcium

(d) தங்கம் / Gold

67. புவியின் இயற்கையான துணைக்கோள்

Natural Satellite of Earth is

(a) அண்டிரோமீடா / Andromeda

(b) நிலவு / Moon

(c) ஸ்புட்னிக் / Sputnik

(d) பால்வெளி வீதி / Milkyway

68. பாரத ரிசர்வ் வங்கியின் முதல் ஆளுநர் யார்?

Who was the first Governor of Reserve Bank of India?

(a) ஓஸ்போர்ன் ஸ்மித் / Osborne Smith

(b) N.K.சிங் / N.K.Singh

(c) A.K.சந்தா / A.K.Chanda

(d) C.ரங்கராஜன் / C.Rangarajan

69. தனிநபர் வருமானத்தின் மீது விதிக்கப்படும் வரி

Tax levied on personal income is

(a) மறைமுக வரி / Indirect tax

(b) சொத்து வரி / Wealth tax

(c) நேர்முக வரி / Direct tax

(d) தேய்வுவீத வரி / Regressive tax

70. மைய வங்கி அல்லது ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா பற்றி பின்வரும் வாக்கியங்களில் எவை சரியானவை?

1. காகிதப் பணத்தை வெளியிடுதல்

2. தொழிற்சாலை உரிமம் வழங்குதல்.

3. அரசுக்கு வங்கியாகச் செயல்படுதல்.

Which of the following statements are true about Central Bank or RBI?

i. The issuer of Currency

ii. The issuer of Industrial license

iii. Banker to the Government

(a) 1 மட்டும் / i only

(b) 1 மற்றும் 2 மட்டும் / i and ii only

(c) 1 மற்றும் 3 மட்டும் / i and iii only

(d) 2 மற்றும் 3 மட்டும் / ii and iii only

71. இந்தியாவின் கூட்டாட்சி முறையை கூட்டுறவுக் கூட்டாட்சி எனக் கூறியவர் யார்?

Who said Indian Constitution oas Cooperative Federalism?

(a) கிரன்வில் ஆஸ்டின் / Granville Austin

(b) டாக்டர் அம்பேத்கர் / Dr.Ambedkar

(c) ஜவஹர்லால் நேரு / Jawaharlal Nehru

(d) வியர் / Wheare

72. நதி நீர் ஆணையச் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு

The River Boards Act was passed in the year

(a) 1956

(b) 1954

(c) 1952

(d) 1950

73. உலக மனித உரிமைகள் தினமாக கொண்டாடப்படும் நாள் எது?

Which day is celebrated as Human Right day universally?

(a) டிசம்பர் 9 / 9th December

(b) டிசம்பர் 10 / 10th December

(c) டிசம்பர் 11 / 11th December

(d) டிசம்பர் 12 / 12th December

74. எந்த ஆண்டு தமிழ்நாடு சட்ட மேலவை நீக்கப்பட்டது?

Which year the Tamil Nadu Legislative Council was abolished?

(a) 1985

(b) 1986

(c) 1987

(d) 1988

75. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் அதன் பிற நீதிபதிகளை நியமனம் செய்கின்றவர்

The Chief Justice and other Judges of the Supreme Court are appointed by

(a) இந்தியக் குடியரசு தலைவர் / The President of India

(b) இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் / The Attorney General

(c) ஆளுநர் / The Governor

(d) இந்தியப் பிரதமர் / The Prime Minister of India

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!