General StudiesTnpsc

Tnpsc Model Question Paper 35 – General Studies in Tamil & English

1. எந்த ஆண்டு 15வது நிதிக்குழு ஏற்படுத்தப்பட்டது?

In which year 15th Finance Commission established?

(a) 2015

(b) 2017

(c) 2019

(d) 2021

2. GSTயின் உள்ளடக்கம் என்பது

Components of GST are of

(a) 3 வகைப்படும் / 3 Types

(b) 2 வகைப்படும்/ 2 Types

(c) 5 வகைப்படும் / 5 Types

(d) பல வகைப்படும் / Multiple Types

3. சுய உதவிக்குழுக்கள் வங்கி இணைப்பு திட்டம் (SBLP) ஆரம்பிக்ப்பட்ட ஆண்டு

Self-Help Groups Bank Linked Programme (SBLP) started in

(a) 1996

(b) 2006

(c) 1992

(d) 2002

4. பொருத்துக:

அ. மக்கள் தொகை பெரும் பிரிவினை ஆண்டு 1. 2011

ஆ. மக்கள் தொகை சிறு பிளவு ஆண்டு 2. 1961

இ. மக்கள் தொகை வெடிப்பு ஆண்டு 3. 1951

ஈ. மக்கள் தொகை மாறுதல் 4. 1921

Match

a. Year of Great Divide 1. 2011

b. Year of Small Divide 2. 1961

c. Year of Population Explosion 3. 1951

d. Demographic transition 4. 1921

a b c d

a. 4 2 3 1

b. 4 3 1 2’

c. 2 3 1 4

d. 4 3 2 1

5. கீழ்கண்டவற்றுள் எது சரியான இணையல்ல

1. மோனோசோமி – 2n-2

2. டிரைசோமி – 2n + 1

3. டெட்ராசோமி – 2n + 2

4. நல்லிசோமி – 2n + 3

Which of the following is incorrectly paired?

1. Monosomy – 2n-2

2. Trisomy – 2n+1

3. Tetrasomy – 2n+2

4. Nullisomy – 2n+3

(a) 1 மற்றும் 2 /1 and 2

(b) 1 மற்றும் 3/1 and 3

(c) 2 மற்றும் 4/ 2 and 4

(d) 1 மற்றும் 4/ 1 and 4

6. கீழ்க்கண்டவற்றுள் எது நைட்ரஜனை பெற்றுள்ள உரம்?

Among the following which is a nitrogenous fertilizer?

(a) யூரியா / Urea

(b) பொட்டாசியம் சல்பேட் / Potassium Sulphate

(c) எலும்புச் சாம்பல் / Bone Ash

(d) ஜிப்சம் / Gypsum

7. அலுமினியம் சோடியம் ஹைட்ராக்சைடுடன் வினைபுரிந்து தருவது

Aluminium reacts with Sodium hydroxide to give

(a) சோடியம் ஆக்ஸைடு + அலுமினா + ஹைட்ரஜன் / Sodium Oxide + Alumina + Hydrogen

(b) சோடியம் மெட்டா அலுமினேட்+ நீர் / Sodium Meta Aluminate + Water

(c) உலோக சோடியம் + அலுமினியம் ஹைட்ராக்ஸைடு / Metallic Sodium + Aluminium Hydroxide

(d) சோடியம் மெட்டா அலுமினேட் + ஹைட்ரஜன் / Sodium Meta Aluminate + Hydrogen

8. 5 கி.கி நிறையுளள பொருளொன்றின் நேர்க்கோட்டு உந்தம் 2.5 கி.கி மீவி-1 எனில், அதன் திசை வேகத்தை கண்ககிடுக:

Calculate the velocity of a moving body of mass 5 kg whose linear momentum is 2.5 kg ms-1

(a) 0.2 மீவி-1 / 0.2 ms-1

(b) 0.7 மீவி-1 / 0.7 ms-1

(c) 0.5 மீவி-1 / 0.5 ms-1

(c) 1.2 மீவி-1 / 1.2 ms-1

9. 5 Ω மின்தடை கொண்ட மின் சுடேற்றி ஒரு மின் மூலத்துடன் இணைக்கப்படுகிறது. 6A மின்னோட்டமானது இந்த சூடேற்றி வழியாக பாய்கிறது எனில் 5 நிமிடங்களில் உருவாகும் வெப்பத்தின் அளவை காண்க:

An electric heater of resistance 5 Ω is connected to an electric source. If a current of 6 A flows through the heater, then find the amount of heat produced in 5 minutes.

(a) 9000 J

(b) 25000 J

(c) 54000 J

(d) 84000 J

10. இந்திய இராணுவத்தில் முதன்முதலாக பெண் இராணுவ போலீசார் எந்த ஆண்டு ———– சேர்க்கபட்டனர்.

The first batch of Women Military Police was inducted into the Indian army in ——-

(a) ஏப்ரல் 2021/ April 2021

(b) மே 2021 / May 2021

(c) ஜீன் 2021 / June 2021

(d) ஜீலை 2021/ July 2021

11. இந்தியாவின் தேசிய மலர், தாமரை, தாவரவியல் ரீதியாக ——- என்று அறியப்படுகிறது

The National Flower of India, Lotus is botanically known as

(a) சென்டோரியா / Centaurea

(b) நெலம்போ நியூசிஃபா / Nelumbo Nucifera

(c) அகாஷியா / Acacia

(d) லைசியாந்தஸ் / Lisianthus

12. இந்தியாவில் அரசியல் கட்சிகளுக்கு அதிகாரப் பூர்வமாக அங்கீகாரம் வழங்குவது

In India, the political parties are given official recognition by

(a) குடியரசு தலைவர் / The president

(b) பாராளுமன்றம் / Parliament

(c) தேர்தல் ஆணையம் / Election Commission

(d) அனைத்து கட்சி பாராளுமன்ற குழு / All party parliamentary Committee

13. மாநிலங்களவையில் ஜனாதிபதியால் எத்தனை உறுப்பினர்கள் நியமனம் செய்யப்படுகின்றனர்?

How many members are being nominated by the President to the Rajya Sabha?

(a) 21

(b) 12

(c) 18

(d) 20

14. வரலாற்றிற்கு முந்தைய காலத்திலேயே மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட முதல் உலோகம் எது?

Which is the first metal that prehistoric man has started using for many purposes?

(a) இரும்புத்தாது / Iron Ore

(b) தங்கம் / Gold

(c) வெள்ளி / Silver

(d) தாமிரம் / Copper

15. துங்கபத்ரா திட்டத்திலிருந்து பயனடையும் மாநிலங்கள் யாவை?

Which states are benefited from Tungabhadra Project?

(a) ஆந்திரப்பிரதேசம் மற்றும் தமிழ்நாடு / Andhra Pradesh and Tamil Nadu

(b) ஆந்திரப்பிரதேசம் மற்றும் கர்நாடகா / Andhra Pradesh and Karnataka

(c) ஆந்திரப்பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா / Andhra Pradesh and Maharashtra

(d) ஆந்திரப்பிரதேசம் மற்றும் ஒடிசா / Andhra Pradesh and Odisha

16. பவன்-ஹான்ஸ் வானுலங்கு ஊர்தி (ஹெலிகாப்டர்) நிறுவனத்தின் தலைமையிடம் ——— ஆகும்

The headquarter of Pavan-Hans Helicopter Ltd. is

(a) கொல்கத்தா / Kolkatta

(b) மும்பை / Mumbai

(c) புதுடெல்லி / New Delhi

(d) சென்னை / Chennai

17. சிந்து சமவெளி நாகரிகத்தின் தளங்களை அதன் இருப்பிடத்துடன் சரியாக பொருத்துக:

அ. ஹரப்பா 1. சிந்து

ஆ. மொஹெஞ்சதாரோ 2. குஜராத்

இ. காளிபங்கன் 3. பஞ்சாப்

ஈ. லோத்தல் 4. ராஜஸ்தான்

Match correctly the following Indus Valley Civilization sites with its locations.

a. Harappa 1. Sindh

b. Mohenjadaro 2. Gujarath

c. Kalibangan 3. Punjab

d. Lothal 4. Rajasthan

a b c d

a. 2 4 1 3

b. 3 1 4 2

c. 3 4 2 1

d. 2 1 4 3

18. காம்ரான், அஸ்காரி, ஹிண்டால் யாருடைய சகோதரர்கள்?

Kamran, Askari, Hindal are brothers of

(a) அக்பர் / Akbar

(b) ஹீமாயூன் / Humayun

(c) ஷாஜகான் / Shajahan

(d) ஒளரங்கசீப் / Aurangzeb

19. கீழ்க்காண்பனவற்றில் இரண்டாம் புலிகேசியின் வெற்றிகளை விவரிக்கும் கல்வெட்டு எது?

Which of the following inscriptions describes the victories of Pulakesin II?

(a) அய்கோல் / Aihole

(b) சாரநாத் / Saranath

(c) சாஞ்சி / Sanchi

(d) ஜீனாகத் / Junagath

20. காக்கசாய்டு என்பவர்கள் ——– இனத்தவர்

The causcasoid is known as ——— race.

(a) ஆசியர்கள் / Asian

(b) ஐரோப்பியர்கள் / European

(c) ஆப்பிரிக்கர்கள்/ African

(d) ஆஸ்திரேலியர்கள் / Australian

21. சமயச்சார்பற்ற என்ற வார்த்தை 42-வது அரசியலமைப்புத் திருத்தச்சட்டத்தின் மூலம் முகவுரையில் சேர்க்கப்பட்ட ஆண்டு

The word “Secularism” was added into the Preamble by the 42nd Constitutional Amendment Act of

(a) 1950

(b) 1947

(c) 1976

(d) 1956

22. இந்திய அரசயில் அமைப்புச் சட்டத்தின் எந்தப் பிரிவு மற்றும் பிரிவுகள் குடியுரிமை இழத்தல் பற்றிக் குறிப்பிடுகின்றன?

Which Article and Part of the Constitution of India deals with loss of Indian Citizenship?

(a) பிரிவு III / Part III

(b) பிரிவு II அரசியல் அமைப்பு சட்டம் 5 முதல் 11 வரை / Part II Article 5-11

(c) பிரிவு II அரசியல் அமைப்பு சட்டம் 5 முதல் 6 வரை / Part II Article 5-6

(d) பிரிவு IV அரசியல் அமைப்பு சட்டம் 12 / Part IV Article 12

23. தவறானக் கூற்றினைக் காட்டுக:

இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதிகள்

Choose the False Statement with respect to the qualification for the election of Indian President.

(a) இந்திய குடிமகனாக/குடிமகளாக இருத்தல் வேண்டும் / He/She should be a citizen of India

(b) 40 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும் / He/She must have completed the age of forty years.

(c) நடுவண் அரசிலோ, மாநில அரசிலோ, அல்லது உள்ளாட்சி அமைப்புகளிலோ ஊதியம் பெறும் பதவியில் இருத்தல் கூடாது / He/She must not hold any office of Profit under the Union, State or Local Government

(d) மக்களவை உறுப்பினராவதற்கான தகுதியினைப் பெற்றிருத்தல் வேண்டும் / He/She should have the other qualifications required to become a member of the Lok Sabha

24. “பெண்களைப் பலவீனமான பாலினம் என்று சொல்வது ஒரு அவதூறு; அது பெண் இனத்திற்கு ஆணினம் இழைக்கும் அநீதியாகும்” என்று கூறியவர் யார்?

Who said that “To call woman the weaker sex is a libel; it is man’s injustice to Woman”?

(a) ஜவஹர்லால் நேரு / Jawaharlal Nehru

(b) மகாத்மா காந்தி / Mahatma Gandhi

(c) சுவாமி விவேகானந்தர் / Swami Vivekanandar

(d) சாவித்ரிபாய் பூலே / Savitribai Phule

25. தமிழ்நாட்டில் சுதேசி இயக்கம் ——– தலைமையில் நடைபெற்றது

Swadeshi movement led by ———- in Tamilnadu

(a) வ.உ.சி / V.O.C.

(b) வ.வே.சு ./ V.V.S

(c) வாஞ்சிநாதன் / Vanjinathan

(d) நீலகண்ட பிரம்மச்சாரி / Neelanganda Brahmachari

26. வட்டார மொழிப் பத்திரிக்கை சட்டம், லிட்டன் பிரபுவால் இயற்றப்பட்ட ஆண்டு

In which year was the Vernacular Press Act passed by Lord Lytton

(a) 1875

(b) 1885

(c) 1877

(d) 1878

27. பகத்சிங்கின் தாயார் பெயர்

What is the name of Bhagatsingh’s Mother?

(a) லீலாவதி / Lilavati

(b) வித்யாவதி / Vidyavati

(c) புவனேஸ்வரி / Bhuvaneswari

(d) லட்சுமி கவுர் / Lakshmi Kaur

28. 27 மே, 1964-ல் இறந்த இந்தியாவின் தேசியத் தலைவர் யார்?

Which National Leader of India who died on 27 May 1964?

(a) B.R.அம்பேத்கர் / B.R.Ambedkar

(b) E.V.ராமசாமி / E.V.Ramasamy

(c) அபுல்கலாம் ஆசாத் / Abulkalam Azad

(d) ஜவஹர்லால் நேரு / Jawaharlal Nehru

29. பொருத்துக:

அ. திராவிடர் இல்லம் 1. மறைமலையடிகள்

ஆ. தொழிலாளன் 2. இரட்டைமலை சீனிவாசன்

இ. தனித்தமிழ் இயக்கம் 3. சிங்கார வேலர்

ஈ. ஜீவிய சரித சுருக்கம் 4. நடேசனார்

Match the following:

a. Dravidian Home 1. Maraimalai Adigal

b. Thozhilalan 2. Rettaimalai Srinivasan

c. Tani Tamil Iyakkam 3. Singaravelan

d. Jeeviya Saritha Surukkam 4. Natesanar

a b c d

a. 4 3 1 2

b. 3 2 4 1

c. 4 2 1 3

d. 2 1 3 4

30. மன்னுயிர்க்கு எல்லாம் இனிது எது?

What is the most sweetest thing that makes men happy? From the Kural “Mannuyirk Kellam Indhu”?

(a) தந்தை மகற்காற்றும் நன்றி / Benefits a father confers on his son

(b) மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி / Benefits a son confers to his parents

(c) தம்மின் தம்மக்கள் அறிவுடைமை / Knowing that the progeny excels them in knowledge

(d) தன் மகனை மாவீரன் எனக் கேட்டல் / Hearing the son as great hero

31. ஊரின் நடுவே வளர்ந்து மருந்தாகும் மரத்தை வள்ளுவர் யாரோடு ஒப்பிடுகிறார்?

What is compared to the herbal tree grown at the center of a home town in the “Kural”?

(a) அறிவுடையோர் / Knowledgeable Person

(b) பெருந்தகையார் / Generous Man

(c) சான்றோர் / Noble Person

(d) அரசர் / King

32. கீழ்க்கண்டவற்றில் எந்த இணை தவறானது?

1. இளஞ்சேட்சென்னி – செங்குட்டுவன்

2. மாங்குளம் – தமிழ் பிராமி கல்வெட்டு

3. உருத்திரங்கண்ணனார் – பட்டினப்பாலை

4. வேளிர்குல சிற்றரசர் – திதியன்

Which of the following pairs is not correct?

i. Ilanjetchenni – Chenguttuvan

ii. Mangulam – Tamil Brahmi inscription

iii. Uruttirankannanar – Pattinappalai

iv. Velir Chieftains – Thithiyan

(a) 1 மட்டும்/ i only

(b) 2 மட்டும் / ii only

(c) 3 மட்டும் / iii only

(d) 4 மட்டும்/ iv only

33. சோட்டா நாக்பூர் பகுதியில் நடந்த மிகப்பெரிய பழங்குடியினர் கிளர்ச்சி

Name the major tribal revolt took place in Chotanagpur region.

(a) வஹாபி கிளர்ச்சி / Wahhabi Rebellion

(b) சாந்தலர்களின் கிளர்ச்சி / Santhal Hool

(c) கோல் கிளர்ச்சி / Kol Revolt

(d) முண்டா கிளர்ச்சி / Munda Rebellion

34. கேப்டன் லட்சுமி செகல் எங்கு பிறந்தவர்

Where was Captain Lakshmi Sehgal born?

(a) சென்னை / Chennai

(b) கல்கத்தா / Calcutta

(c) தஞ்சாவூர் / Tanjavur

(d) சிங்கப்பூர் / Singapore

35. ஒருவருடைய செல்வம் குறையாமல் இருக்க வள்ளுவர் கூறும் வழி யாது?

What according to Valluvar is the way that will not destroy one’s own wealth?

(a) களவு செய்யாமை / Avoid theft

(b) பிறர் பொருள் விரும்பாமை / Being free from covetousness

(c) பொய் சொல்லாமை / Shun falsehood

(d) நட்பு பாராட்டாமை / Be unfriendly

36. சதி நடைமுறை பற்றிய சரியான கூற்றினை/கூற்றுகளைத் தேர்ந்தெடுக்கவும்

1. ராஜா ராம் மோகன் ராய் இந்த சதி எனும் நடைமுறையை ஒழிக்க உறுதிமொழி எடுத்தார்

2. இந்த நடைமுறையை ஒழிக்க வில்லியம் பெண்டிக்-கிற்கு உதவினார்

3. சதி பழக்கம் தண்டனைக்குரிய குற்றமாக 1829இல் அறிவிக்கப்பட்டது

Which statement is true about the practice of Sati?

i. Raja Ram Mohan Roy took the oath to abolish the Sati.

ii. He helped William Bentinck to abolish this practice

iii. The practice of Sati a punishable offence was declared in 1829

(a) 1 மட்டும் / Only i

(b) 2 மட்டும் / Only ii

(c) 3 மட்டும் / Only iii

(d) 1, 2, மற்றும் 3/ i, ii and iii

37. 2713 அரசு ——-களுக்கு உயர்தர கணினி ஆய்வகங்கள் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

The Government of Tamil Nadu announced that 2713 Government ——— will get hi-tech computer labs.

(a) ஆரம்பப்பள்ளி / Primary Schools

(b) நடுநிலைப்பள்ளி / Middle Schools

(c) மேல்நிலைப்பள்ளி / Secondary Schools

(d) உயர்நிலைப்பள்ளி / Higher Secondary Schools

38. ஆங்கிலேயர் ஆட்சியில் கல்விக் கொள்கை பற்றிய தவறான கூற்றினைத் தேர்ந்தெடுக்கவும்

1. நான்கு காலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

2. 1845இல் சர் சார்லஸ் வூட் டெஸ்பேட்ச் தொடங்கப்பட்டது

3. இது மாக்னா கார்ட்டா என்றும் அழைக்கப்படுகிறது

Choose the wrong statement about Education Policy in the British Rule.

i. Divided into 4 periods

ii. Commenced with Sir Charles Wood’s Despatch in 1845

iii. It is also called “Magna Carta”

(a) 1 மட்டும் / Only i

(b) 2 மட்டும் / Only ii

(c) 1 மற்றும் 2 மட்டும் / Only i and ii

(d) 3 மட்டும் / Only iii

39. கீழ்கண்டவற்றுள் தவறான கூற்றினை குறிப்பிடுக:

1. காபி உற்பத்தியில் அதன் பரப்பளவில் கர்நாடகா மாநிலத்திற்கு அடுத்து தமிழ்நாடு இரண்டாமிடம் வகிக்கிறது

2. மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டும் காபி பயிரிடப்படுகிறது

3. தேயிலை பயிரிடும் பரப்பு மற்றும் உற்பத்தியில் இந்தியாவில் அசாம் மாநிலத்திற்கு அடுத்தப்படியாக தமிழ்நாடு இரண்டாமிடம் வகிக்கிறது

Which of the following is wrong statement?

i. Tamil Nadu stands second in area and production of coffee next to Karnataka.

ii. Coffee Plants are grown only in the hills of Western Ghats.

iii. Tamil Nadu ranks second in area and production of Tea in India next to Assam.

(a) 1 மட்டும் / i only

(b) 2 மட்டும் / ii only

(c) 1 மற்றும் 2 மட்டும்/ i and ii only

(d) 1 மற்றும் 3 மட்டும் / i and iii only

40. இந்தியப பொருளாதாரத்தின் பலங்கள் என்ற தலைப்பில் பொருந்தாத வாக்கியத்தை தேர்ந்தெடு

Choose the incorrect statement about the strengths of Indian Economy.

(a) இந்தியா ஒரு கலப்பு பொருளாதாரம் / India has amixed economy

(b) தொழிற்துறை முக்கிய பங்கு வகிக்கிறது / Industries plays the key role

(c) இந்தியா வேகமாக வளரும் பொருளாதாரத்தை கொண்டுள்ளது / India has fast growing economy

(d) வேகமாக வளரும் சேவை துறை / Fast growing service sector

41. தற்கால வேலைவாய்ப்பு போக்குகளாவன

1. பகுதி நேர வேலைவாய்ப்பில் ஒரு வளர்ச்சி இருந்து வருகிறது.

2. அதிகரித்து வரும் சுய-வேலைவாய்ப்பு

3. முழு வேலை வாய்ப்பு நிலை

4. நிறுவனங்கள் ஒரு சில நிரந்தர ஊழியர்களையே பயன்படுத்துதல் மற்றும் குறுகிய கால ஒப்பந்தப பணிகளை தருவதும்.

The current employment trends are

i. There has been a growth in part-time employment

ii. Increasing self-employment

iii. Full employment

iv. Firms using fewer full-time employees and tending to offer more short-term contracts

(a) 1, 2, 4 மட்டும் / i, ii, iv only

(b) 2, 3, 4 மட்டும் / ii, iii, iv only

(c) 1, 2, 3 மட்டும் / i, ii, iii only

(d) 1, 3, 4 மட்டும் / i, iii, iv only

42. நோய்க் காரணியான போர்டெடெல்லா பெர்டுசிஸ் சுவாசக் குழாய் பகுதியை பாதித்து ——— நோயை ஏற்படுத்துகிறது

The Causative Organism Bordetella Pertussis affecting the respiratory tract causes ——- disease.

(a) தொண்டை அழற்சி நோய் / Diphtheria

(b) காசநோய் / Tuberculosis

(c) போலியோ மைலிடிஸ் / Polio Myelitis

(d) கக்குவான் இருமல் / Whooping Cough

43. கீழ்க்காணும் விலங்குகளில் உமிழ்நீரில் உள்ள வேதிப் பொருளானது இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் மருந்துகள் தயாரிக்கப் பயன்படுகின்றன.

Among the following animals, whose saliva contains the bio-chemical substance used for the preparation of pharmaceutical drugs that can treat hypertension

(a) ஓரிக்டோலேகஸ் கியூனிகுலஸ் / Oryctolagus Cuniculus

(b) காலோடஸ் வெரிஸிகோலர் / Calotes Versicolor

(c) ரானா ஹெக்ஸாடாக்டிலா / Rana Hexadactyla

(d) ஹிருடினேரியா கிரானுலோசா / Hirudinaria Granulosa

44. —— ஒளிக்கதிர்களை மின்தூண்டல்களாக மாற்றி அவற்றைப் பார்வை நரம்பின் வழியாக மூளைக்கு அனுப்பும் பணிகளைச் செய்கின்றது.

———– converts the light rays into impulses and sends the signals to the brain through the optic nerve.

(a) விழித்திரை / Retina

(b) கார்னியா / Cornea

(c) ஸ்கிளிரா / Sclera

(d) லென்சு / Lens

45. கரும்பு சர்க்கரையானது ————, ———- மற்றும் ———– ஆகிய மூன்று தமினங்களால் ஆனது

Cane Sugar is made up of three elements ——-, ———– and ———–

(a) கார்பன், நைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் / Carbon, Nitrogen and Oxygen

(b) கார்பன், ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் / Carbon, Hydrogen and Oxygen

(c) கார்பன், கால்சியம் மற்றும் ஆக்சிஜன் / Carbon, Calcium and Oxygen

(d) கார்பன், ஹைட்ரஜன் மற்றும் இரும்பு / Carbon, Hydrogen and Iron

46. கீழே கொடுக்கப்பட்டுள்ள அளவிடும் கருவிகளை அது அளவிடக்கூடிய இயற்பியல் பண்புகளுடன் பொருத்துக:

அ. ஹைட்ரோமானி 1. சர்க்கரையின் அடர்த்தி

ஆ. சாக்கரோமானி 2. சாராயத்தின் அடர்த்தி

இ. லாக்டோமானி 3. திரவத்தின் ஒப்படர்த்தி

ஈ. மதுமானி 4. பாலின் அடர்த்தி

Match the following measuring instruments with the physical quantities they can measure:

a. Hydrometer 1. Density of sugar in liquid

b. Saccharometer 2. Level of alcohol in spirit

c. Lactometer 3. Relative density of liquid

d. Alocoholometer 4. Creaminess of milk

a b c d

a. 1 2 3 4

b. 3 4 1 2

c. 3 1 4 2

d. 1 3 4 2

47. பொருத்துக:

அ. காரகோரம் கணவாய் 1. இமாச்சல பிரதேசம்

ஆ. ஜோஷிலா கணவாய் 2. சிக்கிம்

இ. பொமிடிலா கணவாய் 3. ஜம்மு-காஷ்மீர்

ஈ. நாதுலா கணவாய் 4. அருணாச்சலபிரதேசம்

Match the following:

a. Karakoram pass 1. Himachal Pradesh

b. Zojila pass 2. Sikkim

c. Bamdila Pass 3. Jammu and Kashmir

d. Nathula pass 4. Arunachal Pradesh

a b c d

a. 3 1 4 2

b. 4 3 2 1

c. 3 4 1 2

d. 2 1 4 3

48. மொர்பி மாவட்டத்தில் இடிந்து விழுந்த ஆங்கிலேயர் கால பாலம் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?

The British era bridge which collapsed in Morbi district is situated in which State?

(a) ஹரியானா / Haryana

(b) கர்நாடகா / Karnataka

(c) குஜராத் / Gujarat

(d) மத்திய பிரதேசம் / Madhya Pradesh

49. முந்தைய மதிய உணவு திட்டத்தின் மறுபெயர் யாது?

The erstwhile Mid-Day Meal Scheme is renamed as

(a) உமாங் / UMANG

(b) பவிஷ்ய / Bhavishya

(c) போஸ்கோ / POSCO

(d) P.M.போஷன் / PM-POSHAN

50. 2022 நோபல் பரிசினை இயற்பியலுக்காக வென்றவர்களில் “குவாண்டம் தொலைத்தாங்கு நடைமுறையை” செய்து காட்டியவர் யார்?

Which among the 2022 Nobel laureates of Physics demonstrated quantum teleportation?

(a) அலைன் ஆசுபெக்ட் / Alain Aspect

(b) சான் கிளவுசர் / John Clauser

(c) அன்டன் சைலிங்கர் / Anton Zeilinger

(d) திதியே கெலோ / Didier Queloz

51. கூற்று (A): தென்மேற்கு பருவக் காற்றின் அரபிக்கடல் கிளையினால் இந்தியாவின் மேற்கு கடலோர பகுதிகள் அதிக மழையை பெறுகின்றன.

காரணம் (R): இந்த பகுதிகள் மேற்கு தொடர்ச்சி மலைகளின் காற்று வீசும் திசையில் அமைந்துள்ளன.

Assertion (A): The Arabian Sea branch of South West monsoon gives heavy rainfall to the West Coast of India.

Reason (R): It is located in the windward side of the West ernghats.

(a) (A) என்பது சரி ஆனால் (R) என்பது தவறு / (A) is true but (R) is false

(b) (A) என்பது தவறு (R) என்பது சரி / (A) is false, (R) is true

(c) (A) மற்றும் (R) இரண்டும் சரி காரணம் (R) கூற்று (A)ஐ விளக்குகிறது / Both (A) and (R) are true; and (R) is the correct explanation of (A)

(d) (A) மற்றும் (R) இரண்டும் சரி காரணம் (R) கூற்றுக்கான (A) சரியான விளக்கமல்ல / Both (A) and (R) are true, but (R) is not the correct explanation of (A)

52. பின்வருவனவற்றுள் எந்த வனவிலங்கு சரணாலயம் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ளது?

Which of the following Wild Life Sanctuary is located at Tirunelveli District?

(a) முதுமலை வனவிலங்கு சரணாலயம் / Mudumalai Wildlife Sanctuary

(b) முண்டந்துறை வனவிலங்கு சரணாலயம் / Mundanthurai Wildlife Sanctuary

(c) இந்திராகாந்தி வனவிலங்கு சரணாலயம் / Indira Gandhi Wildlife Sanctuary

(d) கோடியக்கரை வனவிலங்கு சரணாலயம் / Point Calimere Wildlife Sanctuary

53. உலக் காபி உற்பத்தியல் இந்தியா ———-ஆவது இடத்தை வகிக்கிறது

India is the ——— largest producer of Coffee globally.

(a) 2nd

(b) 4th

(c) 7th

(d) 9th

54. பொருத்தி விடை தருக:

எழுதியவர் இலக்கியப்படைப்பு

அ. தன்வந்திரி 1. சூர்ய சித்தாந்தா

ஆ. வராஹமிகிரா 2. அமரகோஷா

இ. ஆர்யபட்டர் 3. பிருஹத் சம்ஹிதா

ஈ. அமரசிம்மா 4. ஆயுர்வேதா

Choose and Match the correct answer:

Author Literary Works

a. Dhanvantri 1. Surya Siddantha

b. Varahamihira 2. Amara Kosha

c. Aryabhatta 3. Brihad Samhita

d. Amarasimha 4. Ayurveda

a b c d

a. 4 3 1 2

b. 4 1 2 3

c. 4 2 1 3

d. 4 3 2 1

55. அப்பரின் சமண மதத்தின் பெயர்

——- was the Jain name of Appar

(a) தர்மசேனர் / Dharmasena

(b) அரிசேனா / Harisena

(c) தீர்த்தங்கரர் / Theerthankara

(d) சிவஞான சித்தியார் / Sivagnana Sithiyar

56. “சத்ரியா” நடனம் எந்த மாநிலத்தில் புகழ்பெற்றது

“SATRIYA” dance was famous in

(a) மணிப்பூர் / Manipur

(b) காஷ்மீர் / Kashmir

(c) அசாம் / Assam

(d) ஒடிசா / Odissha

57. Dr.சச்சிதானந்த சின்காவை பற்றிய சரியான கூற்றினை தேர்ந்தெடுக்கவும்

1. அவர் இச்சபையின் மூத்த உறுப்பினராக தற்காலிக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2. அவர் இச்சபையின் துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்

3. அவர் இச்சபையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்

Which of the following statements are correct about Dr.Sachchidananda Sinha?

i. He was the oldest member elected as the temporary President of the Assembly

ii. He was elected as the Vice-President of the Assembly

iii. He was elected as the President of the Assembly

(a) 1 மட்டும் / i only

(b) 1 மற்றும் 3 மட்டும் / i and iii only

(c) 1 மற்றும் 2 மட்டும்/ i and ii only

(d) 2 மற்றும் 3 மட்டும்/ ii and iii only

58. எவ்வகையான உறவு மத்திய மாநில அரசுகளுக்கு இடையே இல்லை

Which does not take relationship between the Centre and the states are?

(a) சட்டமன்ற உறவுகள் / Legislative relations

(b) நிர்வாக உறவுகள் / Administrative relations

(c) நிதி உறவுகள் / Financial relations

(d) பொதுவகை உறவுகள் / Public relations

59. கீழ்க்கண்டவற்றுள் ஒரு மசோதாவை நிதி மசோதாவா அல்லது இதர மசோதாவா என தீர்மானிக்கும் அதிகாரம் கொண்டவர்

Who among the following decides whether a bill is a money Bill or not?

(a) மக்களவை சபாநாயகர் / Speaker of Lok Sabha

(b) இந்திய அரசின் தலைமை வழக்குரைஞர் / Attorney General

(c) நாடாளுமன்ற விவகார அமைச்சர் / Parliament Affairs Minister

(d) நீதித்துறை செயலர் / Finance Secretary

60. சரியான கூற்றைத் தேர்வு செய்க:

கூற்று(A): புலித்தேவர், ஹைதர் அலி மற்றும் பிரெஞ்சுக்காரர்களின் உதவியைப் பெற முயன்றார்

காரணம் (R): மராத்தியர்களோடு ஏற்கனவே தொடர் போர்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததால் ஹைதர் அலியால் புலித்தேவருக்கு உதவமுடியாமல் போனது

Assertion and Reason Type:

Assertion (A) : Pulithevar tried to get the support of Hyder Ali and the French.

Reason (R): Hyder Ali could not help Pulithevar as he was already in a serious conflict with the Marathas.

(a) கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டும் சரி எனினும் காரணம் (R) கூற்று (A)க்கான சரியான விளக்கம்இல்லை / Both (A) and (R) are correct, but (R) is not the correct explanation of (A)

(b) கூற்று (A) மற்றும் காரணம் (R) ஆகிய இரண்டுமே தவறானவை / Both (A) and (R) are wrong

(c) கூற்று (A) மற்றும் காரணம் (R) ஆகியவை சரி, காரணம் (R) கூற்று (A)வை சரியாகவே விளக்குகிறது / Both (A) and (R) are correct and (R) is the correct explanation of (A)

(d) கூற்று (A) தவறானது காரணம் (R) சரியானது / (A) is wrong and (R) is correct

61. கூற்று(A) : ராம்சே மேக்டோனால்ட் வழங்கிய வகுப்புவாரி ஒதுக்கீடை காந்தியடிகள் எதிர்த்தார்.

காரணம் (R): டொமினியன் அந்தஸ்தை ஆங்கிலேயர்களிடம் இருந்து பெறுவதற்காக

Assertion (A) : Gandhiji opposed the “Communal Award” of Ramsay MacDonald,

Reason (R): To get Dominion Status from the British

(a) கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டும் சரி / Both (A) and (R) are correct

(b) கூற்று (A) தவறு ஆனால் காரணம் (R) சரியானது / (A) is wrong but (R) is correct

(c) கூற்று (A) சரி ஆனால் காரணம் (R) தவறு / (A) is correct but (R) is wrong

(d) கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டுமே சரி ஆனால் காரணம் (R) சரியான விளக்கமாகும் / Both (A) and (R) are correct and (R) is the correct explanation

62. 1578இல் கோவாவில் வெளியிடப்பட்ட தமிழ் புத்தகத்தின் பெயர் கூறுக

Name the Tamil book was published in Goa in the year 1578.

(a) வீரசோழியம் / Viracholiyam

(b) இலக்கண விளக்கம் / Ilakkana Vilakkam

(c) தம்பிரான் வணக்கம் / Thambiran Vanakkam

(d) தொல்காப்பியம் / Tolkappiyam

63. தகாத செயல்களில் ஈடுபடும் தவக்கோலத்தில் உள்ளவர்களை வள்ளுவர் யாருடன் ஒப்பிடுகிறார்?

To whom does Valluvar compare the wrong doing ascetics?

(a) நடிகர் / Actor

(b) வஞ்சகர் / Fradulent

(c) பாவி / Sinner

(d) வேட்டுவர் / Hunter

64. யாழைவிட இனிமையானது என்று வள்ளுவர் எதனை ஒப்பிடுகிறார்?

What is compared by Valluvar to the sweet music of Veena (Yaazh)?

(a) மழலைச் சொல் / Child’s Babble

(b) கிளியின் சொல் / Parrot’s speech

(c) காதலி சொல் / Beloved’s words

(d) கவிஞர் சொல் / Poet’s words

65. எவற்றை உடையவர் ஆள்பவரில் ஏறு போன்றவர்?

1. படை, குடி, கூழ்

2. அமைச்சு, நட்பு, அரண்

3. அஞ்சாமை, ஈகை, கல்வி

One who possess these are considered as lion among Kings

i. Army, Subjects, Wealth

ii. Ministers, Allies, Fort

iii. Fearlessness, Charity and Education

(a) 1 மட்டும் / i alone is correct

(b) 1 மற்றும் 2 மட்டும் / i and ii are correct

(b) 1 மற்றும் 3 மட்டும் / i and iii are correct

(d) 3 மட்டும் / iii alone is correct

66. “நாமம் கெடக் கெடுநோய்” என்று வள்ளுவர் எவற்றைக் குறிப்பிடுகின்றார்?

What are the three things to be shunned in order to dispel pain and sorrow?

(a) காமம், வெகுளி, மயக்கம் / Lust, Wrath and Delusion

(b) அறிவு, அன்பு, பாசம் / Knowledge, Love, Affection

(c) அச்சம், நாணம், மடம் / Fear, Shyness, Blindness

(d) உவகை, வெகுளி, அழுகை / Happiness, Wrath, Sorrow

67. எட்டுத்தொகையும், பத்துப்பாட்டும் ஏறத்தாழ ———– பாடல்களைக் கொண்ட இலக்கிய கருவூலமாகும்.

Ettuthogai and Pathupattu are the collection of ———- poems.

(a) 2400

(b) 3400

(c) 4400

(d) 5400

68. “அதிநவீன வசதிகளுடன் கூடிய ரயிலில் அடிமைகளாக இருப்பதைவிட சுதந்திரத்துடன் கூடிய மாட்டு வண்டியே சிறந்தது” என கூறியவர்

“Better bullock carts and freedom than a train de luxe with subjection”. Who said this?

(a) S சத்தியமூர்த்தி / S.Satyamurthy

(b) A.சுப்பராயலு / A.Subbarayalu

(c) அன்னிபெசன்ட் / Annie Beasant

(d) ருக்மணி லட்சுமிபதி / Rukmani Lkshmipathi

69. ஒடுக்கப்பட்ட மக்களின் கருத்துகளுக்காக வட்டமேஜை மாநாட்டில் குரல் கொடுத்தவர்

——- voiced the interest of the deressed clauses in the Round Table Conferences.

(a) டி.எம்.நாயர் / T.M.Nair

(b) இரட்டைமலை சீனிவாசன் / Rettaimalai Srinivasan

(c) எம்.சி.ராஜா / M.C.Rajah

(d) பண்டிதர் அயோத்தி தாசர் / Pandithar Iyothee Thassar

70. சார்தா சட்டத்தின் படி பெண்களின் திருமண வயது

The Sharda Act raised the minimum age marriageable for girls —– years.

(a) 10

(b) 12

(c) 14

(d) 18

71. உலகளாவிய மனித உரிமைகள் பேரறிக்கையானது ஐக்கிய நாடுகள் பொது சபையினால் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட இடம் எது?

The universal declaration of Human Rights was proclaimed by the United Nations General Assembly in which place?

(a) பாரிஸ் / Paris

(b) ஐரோப்பா / Europe

(c) அமெரிக்கா / U.S.A.

(d) கனடா / Canada

72. காவலன் எஸ்ஓஎஸ் செயலியை எந்த அரசு அறிமுகப்படுத்தியது?

The Kavalan SOS App was launched by which Government?

(a) இந்திய அரசு / Government of India

(b) தமிழ்நாடு அரசு / Government of Tamil Nadu

(c) கேரளா அரசு / Government of Kerala

(d) கர்நாடக அரசு / Government of Karnataka

73. தமிழ்நாட்டில் நிலக் கடலை உற்பத்தியின் அளவு என்ன?

The quantum of Groundnut production in Tamil Nadu is

(a) கிட்டத்தட்ட 7 லட்சம் டன்கள் / About 7 lakh tonnes

(b) கிட்டத்தட்ட 11 லட்சம் டன்கள் / About 11 lakh tonnes

(c) கிட்டத்தட்ட 15 லட்சம் டன்கள் / About 15 lakh tonnes

(d) கிட்டத்தட்ட 21 லட்சம் டன்கள் / About 21 lakh tonnes

74. தமிழ்நாட்டில் அதிகம் உற்பத்தியாகும பொருட்கள்

Tamil Nadu is the highest producer of

(a) அரிசி மற்றும் பருப்பு வகைகள் / Rice and Pulse

(b) வாழை மற்றும் தேங்காய் / Banana and Coconuts

(c) தேங்காய் மற்றும் ராகி / Coconut and Ragi

(d) வாழை மற்றும் பருப்பு வகைகள் / Banana and Pulses

75. கூற்று (A): அஹோபிலா மடம் மற்றும் பல மடங்கள் பள்ளிகள், விஹாரங்கள் கல்விக்காக தனித்துவமான பங்களிப்பைச் செய்துள்ளன

காரணம் (R): இடைக்காலம் பல மத மடங்களும், மடாலயங்களும் கல்வி வளர்ச்சிக்காக நிறுவப்பட்டதைக் கண்டது

Assertion (A): The ahobila mutt and many others have made distinctive contribution to the cause of education.

Reason (R) : The medieval period saw the founding of many religious mutt as the cause of education

(a) (A) சரி (R) தவறு / (A) is true but (R) is false

(b) (A) மற்றும் (R) சரி (R), (A)க்கான சரியான விளக்கம் / Both (A) and (R) are true and (R) is the correct explanation of (A)

(c) (A) மற்றும் (R) சரி / (A) is false, (R) is true

(d) (A) மற்றும் (R) சரி, (R), (A)க்கான சரியான விளக்கம் இல்லை / Both (A) and (R) are true but (R) is not correct explanation of (A)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!