General StudiesTnpsc

Tnpsc Model Question Paper 37 – General Studies in Tamil & English

1. கீழ்கண்டவற்றுள் ஒளிச்சேர்க்கைக்கு தேவையான காரணிகள்

Which of the following factors necessary for photosynthesis?

(a) சூரிய ஒளி, சாந்தோப்பில், கார்பன்டை ஆக்சைடு, நீர் / Sunlight, Xanthophyll, Carbon dioxide, Water

(b) கார்பன்டை ஆக்சைடு, நீர், சூரிய ஒளி, வெப்பநிலை / Carbon dioxide, Water, Sunlight, Heat

(c) நீர், கார்பன்டை ஆக்சைடு, சூரிய ஒளி, பச்சையம் / Water, Carbon dioxide, Sunlight, Chlorophyll

(d) சூரிய ஒளி, கந்தக டை ஆக்சைடு, நீர், பச்சையம் / Sunlight, Sulphur dioxide, Water, Chlorophyll

2. தனிம வரிசை அட்டவணையில் மூன்று வகையான தனிமங்களையும் கொண்டுள்ள ஒரே தொகுதி

The only block that contains all three types of elements in Periodic Table.

(a) s-தொகுதி / s – Block

(b) p-தொகுதி / p – block

(c) d-தொகுதி / d – block

(d) f-தொகுதி/ f – block

3. ஒரு கரைசலின் pH மதிப்பு 4 எனில், அதன் (OH) அயனியின் செறிவு

If the Ph of a solution is 4, Its (OH) ion concentration is

(a) 1 x 10-4

(b) 4 M

(c) 10 M

(d) 1 x 10-10 M

4. பின்வருவனவற்றை பொருத்துக:

கதிரியக்க ஐசோடோப்புகள் சிகிச்சை

அ. கதிரியக்கச் சோடியம்-24, (Na24) 1. தோல் நோய் சிகிச்சை

ஆ. கதிரியக்க அயோடின் -131, (I131) 2. ரத்தசோகை அடையாளம் காண

இ. கதிரியக்க இரும்பு-59, (Fe59) 3. இதயத்தை சீராக செயல்படுத்த

ஈ. கதிரியக்கப் பாஸ்பரஸ்-32, (P32) 4. முன் கழுதுகழலை

Match the following:

Radio – Isotope Treatment

(a) Radio Sodium – Na24 1. Skin diseases

(b) Radio Iodine – 1131 2. Diagnose anaemia

(c) Radio-Iron – Fe59 3. Effective functioning of heart

(d) Radio Phosphorous – P32 4. Cure Goiter

(a) (b) (c) (d)

(a) 3 4 2 1

(b) 1 2 3 4

(c) 4 3 2 1

(d) 4 2 3 1

5. ஐ.நா.சபையின் படி ஒரு குழந்தை என்பது எந்த வயதை நிறைவு செய்திருக்கக் கூடாது?

As per UNO, a child is a person who has not completed the age of ________ years.

(a) 12 ஆண்டுகள் / 12 years

(b) 14 ஆண்டுகள் / 14 years

(c) 15 ஆண்டுகள் / 15 years

(d) 18 ஆண்டுகள் / 18 years

6. ஆங்கில மொழியியல் ஆய்வகங்கள் 6029 ——– களில் அமைக்கப்படும் என்று பள்ளி கல்வித் துறை அறிவித்துள்ளது

The department of School Education has announced that the English language labs will be setup in 6029

(a) ஆரம்பப் பள்ளி / Primary Schools

(b) நடுநிலைப் பள்ளி / Middle Schools

(c) உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி / High and Higher Secondary Schools

(d) கல்லூரி / Colleges

7. கூற்று (A): 1956ம் ஆண்டு பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது

காரணம் (R): பள்ளிகளில் இடைநிற்றலைத் தவிர்க்க

Assertions (A): 1956, Midday Meal programme was introduced in schools.

Reasons (R): To avoid drop-outs in schools.

(a) (A) சரி (R) தவறு / (A) is true but (R) is false.

(b) (A) மற்றும் (R) சரி (R), (A)விற்கான சரியான விளக்கம் / Both (A) and (R) are true; and (R) is the correct explanation of (A)

(c) (A) தவறு (R) சரி /(A) is false (R) is true

(d) (A), (R) சரி, (R) (A)விற்கான சரியான விளக்கம் இல்லை / Both (A) and (R) are true but (R) is not the correct explanation of (A)

8. தமிழ்நாடு —— கி.மீ கடற்கரை பகுதியைக் கொண்டிருக்கிறது

Tamil Nadu has a coastline of ________ km.

(a) 656

(b) 1076

(c) 1254

(d) 1300

9. பின்வருவனவற்றுள் குறிப்பிடப்படும் மாவட்டம் மற்றும் நீர்வீழ்ச்சிக்கான எந்த இணை சரியாகப் பொருத்தப்படவில்லை?

Which pair of district and waterfall is not correctly paired?

(a) தர்மபுரி – ஓகேனக்கால் / Dharmapuri – Hogenakkal

(b) நாமக்கல்-ஆகாய கங்கை / Namakkal – Agayagangai

(c) தேனி-கும்பக்கரை / Theni – Kumbakkarai

(d) கோயம்புத்தூர்-சிறுவாணி / Coimbatore – Siruvani

10. யாருடைய பிறந்த நாள் தேசிய கல்வி நாளாகக் கொண்டாடப்படுகிறது?

‘National Education Day’ is to commemorate the birth anniversary of

(a) காமராஜர் / Kamaraj

(b) ராஜேந்திர பிரசாத் / Rajendra Prasad

(c) வல்லபாய் படேல் / Vallabhai Patel

(d) அபுல்கலாம் ஆசாத் / Abul Kalam Azad

11. ஆலன் ஆக்டேவியன் ஹியூம் எந்த ஆண்டு, சென்னையில் பிரம்மஞான சபையின் கூட்டமொன்றிக்கு தலைமை தாங்கினார்

Allan octavian Hume presided over the meeting of the theosophical society in Madras in the year

(a) டிசம்பர் 1884 / December 1884

(b) அக்டோபர் 1885 / October 1885

(c) நவம்பர் 1887 / November 1887

(d) மார்ச் 1888 / March 1888

12. “நான் நாத்திகன், ஏன்?” எழுதியவர்

“Why I am Atheist” written by

(a) அரவிந்தர் / Aravindar

(b) V.D.சாவர்க்கர் / V.D.Savarkar

(c) கிஷன்சிங் / Kishan Singh

(d) பகத்சிங் / Bhagat Singh

13. 1976-இல் காமராசருக்கு வழங்கப்பட்ட விருதின் பெயர் என்ன?

In 1976, Kamarajar was awarded with

(a) தமிழ் செம்மல் / Tamil Chemmal

(b) கிங்மேக்கர் / King Maker

(c) பாரத ரத்னா / Bharat Ratna

(d) கலைமாமணி / Kalaimamani

14. இரவீந்திரநாத் தாகூர் தனது அரசப் பட்டத்தை துறந்த நிகழ்ச்சி

Rabindranath Tagore renounced his knighthood immediately after the

(a) சௌரி சௌரா சம்பவம் / Chauri Chaura incident

(b) மாப்ளா கலகம் / Mappillai Revolt

(c) ஜாலிநன் வாலாபாக் படுகொலை / Jallianwala Bagh Massacre

(d) கல்கத்தா கலவரம் / Calcutta Riot

15. யார் ஒருவருடைய உயிரை எமன் கூட பறிக்கத் தயங்குவான் என்று வள்ளுவர் குறிப்பிடுகின்றார்?

Even the God of Death will hesitate to do his duty when they come to these people. Who are the according to Valluvar?

(a) கல்லாதவன் / Uneducated

(b) பொல்லாதவன் / Wicked

(c) கொல்லாதவன் / One who never kills

(d) வெல்லாதவன் / Defeated

16. நல்ல குடும்பத்திற்கு அணிகலன்களாக வள்ளுவர் யாரைக் குறிப்பிடுகின்றார்?

Who becomes the ornaments of a well-knit family according to Valluvar?

(a) நல்ல பெற்றோர் / Good parents

(b) நல்ல குழந்தைகள் / Good Children

(c) நல்ல நண்பர்கள் / Good Friends

(d) நல்ல உறவினர்கள் / Good Relatives

17. அருள் என்னும் குழந்தைக்கு வள்ளுவர் எதனைச் செவிலித் தாயாக ஒப்பிடுகிறார்?

What according to Valluvar is the foster mother of “Grace”?

(a) அடக்கம் / Humility

(b) பொறுமை / Patience

(c) கண்ணியம் / Dignity

(d) செல்வம் / Riches

18. மயக்கம் தெளித்த மாசற்ற காட்சியுடையவருக்கு எது கிட்டும் என்று வள்ளுவர் கூறுகிறார்?

What blessing will be upon men of clear vision and free of delusion according to Valluvar?

(a) துன்பம் / Suffering

(b) அவா / Passion

(c) இன்பம் / Bliss

(d) பெருமை / Excellence

19. ‘நாலாயிரத் திவ்யபிரபந்தத்தை’ தொகுத்தவர்

‘Nalayira Divyaprabandam’ was compiled by

(a) நாதமுனி / Nadamuni

(b) நம்மாழ்வார் / Nammalvar

(c) சுந்தரர் / Sundarar

(d) சேக்கிழார் / Sekkilar

20. சரியான விடையைத் தேர்வு செய்க:

சென்னைவாசிகள் சங்கம், தென்னிந்தியாவில் தொடங்கப்பட்ட ஆண்டு

Choose the correct answer:

The Madras Native Association was founded in the year

(a) 1845

(b) 1852

(c) 1862

(d) 1875

21. பெரியார் ஈ.வெ.ராவுடன் தொடர்பு இல்லாத இதழ் ———- ஆகும்

Which of the following magazine is not associated with Periyar E.V.R?

(a) குடி அரசு / Kudi Arasu

(b) புரட்சி / Puratchi

(c) தேசபக்தன் / Desabakthan

(d) ரிவோல்ட் / Revolt

22. விருந்தினரின் முகத்தை எந்த மலரோடு வள்ளுவர் ஒப்பிடுகிறார்?

To which flower does Valluvar compare the difference in hospitality of guests?

(a) குவளை மலர் / Kuvalai flower

(b) அனிச்ச மலர் / Anicham flower

(c) அல்லி மலர் / Lily

(d) தாமரை மலர் / Lotus

23. சரியான பொருந்தும் வகைகளை கண்டுபிடி:

1. முதலாளித்துவத்தின் தந்தை – ஆல்ஃபிரட் மார்ஷல்

2. சமத்துவத்தின் தந்தை – கார்ல் மார்க்ஸ்

3. நல இலக்கணத்தின் ஆசிரியர் – ஆடம்ஸ்மித்

4. பற்றாக்குறை இலக்கணத்தின் ஆசிரியர் – இலயனல் இராபின்ஸ்

Choose the right matches among type:

1. Father of capitalism – Alfred Marshall

2. Father of Socialism – Karl Marx

3. Author of Welfare – Adam Smith

4. Author of Scarcity – Lionel Robbins

(a) 1 மற்றும் 3 சரி / 1 and 3 are correct

(b) 1 மற்றும் 2 சரி / 1 and 2 are correct

(c) 2 மற்றும் 3 சரி / 2 and 3 are correct

(d) 2 மற்றும் 4 சரி / 2 and 4 are correct

24. சரியான விடையைத் தேர்ந்தெடுத்தல்:

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவ மழை பொழியும் மாதங்கள்

Choose the right answer:

The North – East monsoon period in Tamil Nadu

(a) ஆகஸ்டு – அக்டோபர் / August – October

(b) செப்டம்பர் – நவம்பர் / September – November

(c) அக்டோபர் – டிசம்பர் / October – December

(d) நவம்பர் – மார்ச் / November – March

25. இந்தியாவின் முதல் மென்பொருள் தொழிலகம்

The first Software company in India.

(a) காக்னிசைன்ட் / Cognizant

(b) எல் அண்ட டி / L and T

(c) டாடா கன்சல்டன்சி / TATA Consultancy

(d) இன்போடெக் / Infotech

26. இளைய பெருங்கடல் எனப்படும் பெருங்கடல்

The _______ ocean is the youngest ocean

(a) இந்தியப் பெருங்கடல் / Indian

(b) தென் பெருங்கடல் / Southern

(c) ஆர்டிக் பெருங்கடல் / Arctic

(d) அட்லாண்டிக் பெருங்கடல் / Atlantic

27. ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன் (ABDM) எப்போது தொடங்கப்பட்டது?

When was Ayushman Bharath Digital Mission (ABDM) launched?

(a) செப்டம்பர் 2021 / September 2021

(b) செப்டம்பர் 2022 / September 2022

(c) ஆகஸ்ட் 2021 / August 2021

(d) ஆகஸ்ட் 2022 / August 2022

28. தேசிய குடற்புழு நீக்க நாள் பற்றிய சரியானவற்றை தேர்ந்தெடுக்கவும்

1. தேசிய குடற்புழு நீக்க தினம் 2015-ல் அமல்படுத்தப்பட்டது

2. (1-19) வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பொருந்தும்

3. இது குஜராத் மற்றும் ராஜஸ்தானில் ஆண்டுக்கு ஒரு முறை செயல்படுத்தப்படுகிறது

Choose the correct statement on National Deworming day

I. National Deworming day was implemented in 2015

II. Applicable to children (1-19) age

III. Gujarat and Rajasthan it is implemented annually

(a) 1 மட்டும் / I only

(b) 2 மட்டும் / II only

(c) 1 மற்றும் 2 மட்டும் / I and II only

(d) 3 மட்டும் / III only

29. ஒரு கட்சி தேசியக் கட்சியாக அங்கீகரிக்கப்பட வேண்டுமானால், சமீபத்திய லோக்சபா பொதுத் தேர்தலில், நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் செலுத்தப்பட்ட மொத்தச் செல்லுபடியாகும் வாக்குகளில் எத்தனை சதவீதம் பெற்றிருக்க வேண்டும்?

For a political party to be recognised as a National Party, It has to receive what percentage of valid votes

cast in any four or more states in the last general election to the Lok sabha?

(a) 2%

(b) 4%

(c) 6%

(d) 8%

30. 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ISRO இத்திட்டத்தை செயல்படுத்தியது. ஏவப்பட்ட கலத்தின் பெயர்

ISRO executed this mission in October 2022. The vehicle launched in the mission was

(a) LVM – 1

(b) LVM – 2

(c) LVM – 3

(d) GSLV – 12

31. எது சர்தார் சரோவர் திட்டத்திலிருந்து பயனடையும் மாநிலம் அல்ல?

Which state is not the beneficiary of Sardar Sarover Project?

(a) மத்தியப் பிரதேசம் / Madhya Pradhesh

(b) மகாராஷ்டிரா / Maharashtra

(c) பஞ்சாப் / Punjab

(d) இராஜஸ்தான் / Rajasthan

32. இந்தியாவில் மேற்கு நோக்கி பாயும் ஆறுகளில் நீளமான ஆறு எது?

Which is the longest, the west flowing rivers of India?

(a) தபதி / Tapti

(b) நர்மதை / Narmada

(c) மகாநதி / Mahanadi

(d) கங்கை / Ganga

33. தகவல் தொடர்பிற்காக ஏவப்பட்ட முதல் இன்சாட் வரிசை செயற்கைக்கோள் எது?

Which is the first communication satellite in INSAT series?

(a) எஜீசாட் / EDUSAT

(b) இன்சாட்-1B / INSAT 1B

(c) ஜிசாட் / GSAT

(d) ஹாம்சாட் / HAMSAT

34. ஹரப்பாவிற்கு முதன்முதலில் பொ.ஆ.1826இல் வருகை தந்தவர்

Harappa was first visited by ______ in 1826 CE (AD)

(a) அம்ரி / Amir

(b) சார்லஸ்மேசன் / Charles Mason

(c) அலெக்ஸாண்டர் பர்ன்ஸ் / Alexander Burnes

(d) சர் ஜான் மார்ஷல் / Sir John Marshal

35. ——– கரிகாலனுடைய ஆட்சியின் பற்றி விரிவாக கூறுகிறது

_________ gives a vivid account of Karikalan reign.

(a) மதுரைக்காஞ்சி / Maduraikanchi

(b) பட்டினப்பாலை / Pattinappalai

(c) பதிற்றுப்பத்து / Patitruppathu

(d) பரிபாடல் / Paripadal

36. சரியான பொருத்தங்களை தேர்ந்தெடுக்கவும்

1. மகாபாரதம் – வால்மீகி

2. உமறுபுலவர் – சீறாப்புராணம்

3. வீரமாமுனிவர் – தேம்பாவணி

4. மணிமேகலை – இளங்கோ அடிகள்

Choose the right matches among the type.

1. Mahabharath – Valmiki

2. Umaruppulavar – Seerapuranam

3. Veeramamunivar – Thembavani

4. Manimegalai – Ilango Adigal

(a) 2 மற்றும் 3 சரி / 2 and 3 are correct

(b) 1 மற்றும் 3 சரி / 1 and 3 are correct

(c) 3 மற்றும் 4 சரி / 3 and 4 are correct

(d) 2 மற்றும் 1 சரி / 2 and 1 are correct

37. மாறுபட்ட ஒன்றைக் கண்டுபிடி

Find the odd one out

(a) சுதந்திர உரிமை / Right to freedom

(b) சமயச்சார்பு உரிமை / Right to religion

(c) அரசியலமைப்புக்குட்பட்டு தீர்வு காணும் உரிமை / Right to constitional Remedies

(d) சொத்துரிமை / Right to poverty

38. அடிப்படை உரிமைகளை எப்போது நிறுத்தி வைக்கப்பட முடியும்?

How can the Fundamental Rights be suspended?

(a) உச்சநீதி மன்றம் விரும்பினால் / If the Supreme Court so desires

(b) பிரதம மந்திரியின் ஆணையினால் / If the Prime Minister orders to this effect

(c) தேசிய அவசரநிலைகளின் போது குடியரசுத் தலைவரின் ஆணையினால் / If the President orders it during the National Emergency

(d) மேற்கண்ட அனைத்தும் / All of the above

39. சரியான குறிப்புகளை குறிப்பிடுக:

1. தமிழ்நாடு அரசு 1983-ம் ஆண்டு ராஜாமன்னார் தலைமையில் மத்திய மாநில உறவுகளை ஆய்வு செய்ய குழு அமைத்தது

2. அரசமைப்பின் ஏழாவது அட்டவணை மூன்று பட்டியல்களை உருவாக்கி அதிகாரப் பகிர்வை மத்திய மாநில அரசாங்கங்களுக்கு வழங்குகின்றன.

3. அதிகாரப் பகிர்வு மத்திய மாநில உறவுகளின் அச்சாணியாக உள்ளது

4. மத்திய அரசாங்கத்தின் அதிகாரம் தேசத்தின் எல்லை முழுவதும் காணப்படுகின்றது

Choose the correct statements:

I. Raja mannar commission on centre-state relation was established by the Tamil Nadu Govt in 1983

II. The Seventh schedule of the constitution contains the three lists relating to the distraction of powers between the centre and state.

III. The Centre-State relations revolve around the fulcrum of distribution of powers between Centre and State

IV. The powers are distributed between the Union and State government territotially.

(a) 1, 2 மற்றும் 3 / I, II and III

(b) 1, 3 மற்றும் 4 / I, III and IV

(c) 2, 3 மற்றும் 4 / II, III and IV

(d) 1, 4 மற்றும் 3 / I, IV and III

40. வளிமண்டல கார்பன் டை ஆக்ஸைடு (CO2) தாவரங்களுக்குள் உட்செல்லும் நிகழ்வு ——- எனப்படும்

The atmospheric carbon dioxide enters into the plants through the process of

(a) ஒளிச்சேர்க்கை / Photosynthesis

(b) உட்கிரகித்தல் / Assimilation

(c) சுவாசித்தல் / Respiration

(d) சிதைத்தல் / Decomposition

41. கீழே கொடுக்கப்பட்டுள்ளவைகளில் எவை சரியாக பொருந்தாத இணை

1. NCPCR-குழந்தைகள் கூட்டுறவு பாதுகாப்பிற்கான தேசிய ஆணையம்

2. NIDDM-இன்சுலின் சாராத நீரிழிவு நோய்

3. ELISA-நொதி சார்ந்த இன்சுலின் உறிஞ்சுகை மதிப்பீடு

4. NACO-தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு

Which of the following is incorrectly paired?

1. NCPCR – National Cooperation for Protection of Child Rights

2. NIDDM – Non-Insulin Dependent Diabetes Mellites

3. ELISA – Enzyme Linked Insulin Sorbent Assay

4. NACO – National AIDS Control Organisation

(a) 2 மற்றும் 3 / 2 and 3

(b) 1 மற்றும் 4 / 1 and 4

(c) 1 மற்றும் 3 / 1 and 3

(d) 2 மற்றும் 4/ 2 and 4

42. கூற்று (A): ஜிம்னோஸ்பெர்ம் திறந்த விதைத் தாவரங்கள் ஆகும்.

காரணம் (R): ஜிம்னோஸ்பெர்ம் தாவரங்களில் சூலானது சூற்பையால் சூழப்பட்டிருக்கும்

Assertion (A): Gymnosperms are naked seed plant.

Reason (R): The ovules are enclosed by Ovary in Gymnospermic plants.

(a) கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டும் சரியானவை / Both (A) and (R) are true.

(b) கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டும் தவறானவை / Both (A) and (R) are false

(c) கூற்று (A) தவறு, காரணம் (R) சரி / (A) is false, (R) is true

(d) கூற்று (A) சரி, ஆனால் காரணம் (R) தவறு / (A) is true but (R) is false.

43. வெப்பத்தையும், மின்சாரத்தையும் எளிதில் கடத்தும் உலோகம்/உலோகங்கள்

The Metal/Metals which excel in the conduction of heat and electricity.

(a) தாமிர மற்றும் டங்ஸ்டன் / Copper and Tungsten

(b) தாமிரம் மற்றும் வெள்ளி / Copper and Silver

(c) வெள்ளி மற்றும் டங்ஸ்டன் / Silver and Tungsten

(d) தாமிரம் மட்டும் / Copper alone

44. அண்டத்தின் புவிமைய மாதிரிக் கொள்கையை முன்மொழிந்தவர் யார்?

Who proposed the geocentric model of the universe?

(a) டைக்கோ பிராஹே / Tycho Brahe

(b) நிகோலஸ் கோபர்நிக்கஸ் / Nicolaus Copernicus

(c) தாலமி / Ptolemy

(d) ஆர்க்கிமடிஸ் / Archimedes

45. ஒரு புள்ளியை மையமாகக் கொண்டு முறையான கால இடைவெளியில் மீண்டும் மீண்டும் முன்னும் பின்னுமாக இயங்கும் பொருளின் இயக்கம் என்பது

Repetitive to and fro motion of an object at regular interval of time about a point is

(a) நேரான இயக்கம் / Linear motion

(b) வட்டஇயக்கம்/ Circular motion

(c) அலைவு இயக்கம் / Oscillatory motion

(d) ஒழுங்கற்ற இயக்கம் / Random motion

46. முத்துலட்சுமி அம்மையார் பற்றிய சரியான பதிலை தேர்ந்தெடுக்கவும்

Choose the correct answer about Muthulakshmi Ammaiyar.

(a) மருத்துவர் / Doctor

(b) பொறியாளர்/ Engineer

(c) ஆசிரியர் / Teacher

(d) வழக்கறிஞர் / Advocate

47. “இனம், பாலினம், தேசிய, இனக்குழு, மொழி மதம் அல்லது வேறு தகுதி அடிப்படையைப் பொருத்து மாறுபடாமல் மனிதர்களாகப் பிறக்கும் அனைவருக்கும் மரபாக இருக்கும் உரிமையே மனித உரிமை ஆகும்” என கூறியது?

Who defines Human Rights as, “The right inherent to all human beings, regardless of race, gender, nationality, ethnicity, language, religion or any other status. Everyone is entitled to these rights without discrimination”?

(a) WHO

(b) UNO

(c) UNESCO

(d) UNDP

48. சரியான பதில்களைத் தேர்ந்தெடுக்கவும்:

பிரிட்டிஷ் ஆட்சியில் கல்வி கீழ்க்கண்டவாறு நான்கு காலகட்டங்களாக பிரிக்கப்பட்டது

1. ஆட்சியின் ஆரம்ப காலத்திலிருந்து 1813 வரை

2. 1813 முதல் 1853 வரை

3. 1854 முதல் 1920 வரை

4. 1921 முதல் 1947 வரை

Choose the correct answer:

Education in the British rule can be divided into four periods as follows

1. Early days to 1813

2. 1813 – 1853

3. 1854 – 1920

4. 1921 – 1947

(a) 1 மற்றும் 2 இரண்டும் / Both 1 and 2

(b) 1 மற்றும் 3 இரண்டும் / Both 1 and 3

(c) 2 மற்றும் 4 இரண்டும் / Both 2 and 4

(d) 1, 2, 3 மற்றும் 4 / 1, 2, 3 and 4

49. முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் எப்போது தொடங்கப்பட்டது?

When was Chef Minister’s comprehensive Health Insurance Scheme launched?

(a) 9 ஜனவரி 2009 / 9th January 2009

(b) 10 ஜனவரி 2009 / 10th January 2009

(c) 9 டிசம்பர் 2012 / 9th December 2012

(d) 11 ஜனவரி 2012/ 11th January 2012

50. பின்வரும் கூற்றுகளில் உண்மை மற்றும் தவறை குறிப்பிடவும்

1. இந்திய தேசிய காங்கிரஸை நிறுவியவர் ஆலன் ஆக்டேவியன் ஹியூம் ஆவார்

2. கோபால கிருஷ்ண கோகலே அரசியல் சீர்திருத்தங்களுக்கு எதிராக இந்தியச் சங்கத்தை நிறுவினார்

3. வங்காளப் பிரிவினைக்கு எதிரான போராட்டத்தின்போது இந்தியாவில் சுதேசி இயக்கம் தோன்றியது

State the following statements are True (or) False.

1. Allan Octavian Hume was the founder of the Indian National Movement

2. Gopala Krishna Gokhale was the founder of Indian Association agitation for political reforms.

3. Swadesi Movement started in India during Anti – Bengal partition agitation

(a) 1 மற்றும் 2 தவறு 3 சரி / 1, 2 is wrong 3 is correct

(b) 2 மற்றும் 3 தவறு 1 சரி / 2, 3 is wrong 1 is correct

(c) 1 மற்றும் 2 சரி 3 தவறு / 1, 2 is correct 3 is wrong

(d) மேற்குறிப்பிட்ட அனைத்தும் சரி / All these above correct

51. பின்வருவனவற்றுள் சரியான கூற்றைத் தேர்ந்தெடு

1. பெரியார் இந்திய தேசிய காங்கிரஸின் உறுப்பினராக ஒத்துழையாமை இயக்த்தில் கலந்து கொண்டார்

2. சுயமரியாதைத் திருமணத்தை நீதிக்கட்சி அறிமுகப்படுத்தியது

3. பெரியார் பட்டத்தை வழங்கியது UNESCO அமைப்பு

4. விடுதலை பத்திரிக்கையை ஆங்கிலத்தில் நடத்தினார்

Choose the correct statements from the following

1. Periyar had participated in the non-cooperation programme as a congressman.

2. The Justice party held the self-respecting wedding

3. Periyar title was conferred by UNESCO

4. He ran the ‘Liberation’ press in English

(a) 1 மட்டும் சரி / 1 is correct

(b) 2 மற்றும் 4 சரி / 2 and 4 are correct

(c) 1 மற்றும் 2 சரி / 1 and 2 correct

(d) 2, 3, 4 சரி / 2, 3, 4 are correct

52. பொருத்துக:

அ. கட்டபொம்மன் 1. கர்னல் பான் ஜோர்

ஆ. மருது சகோதரர்கள் 2. கேப்டன் கேம்ப்பெல்

இ. யூசுப்கான் 3. காலின் மெக்காலே

ஈ. முத்துவடுகர் 4. பானெர்மென்

Match the following

(a) Kattabomman 1. Col. Bon Jour

(b) Maruthu Brothers 2. Captain Campbell

(c) Yusuf Khan 3. Colin Macaulay

(d) Muthu Vadugar 4. Bannerman

(a) (b) (c) (d)

(a) 2 3 1 4

(b) 3 2 1 4

(c) 2 4 1 3

(d) 4 3 2 1

53. உலக உயிர்கள் எல்லாம் யாரைக் கைகூப்பி வணங்கும்?

Who will be respected by all life on this earth according to Valluvar?

(a) கல்வி அறிவில் சிறந்த சான்றோரை / Men of wisdom

(b) ஒழுக்கத்தில் சிறந்த மனிதரை / Men of virtue

(c) உயிர்களைக் கொல்லாத புலால் உண்ணாத மாந்தரை / Men who would not kill and hurt any species for their food

(d) செல்வத்தில் திளைக்கும் மனிதரை / Men of riches

54. பசியென்னும் கொடிய நோய் யாரை அணுகுவதில்லை என்று வள்ளுவர் குறிப்பிடுகின்றார்?

Who according to Valluvar will not be pained by the pangs of hunger?

(a) தவமுடையோரை / People who do penance

(b) அருளுடையோரை / People who are graceful

(c) புகழுடையோரை / Renowed people

(d) பகிர்ந்து உண்ணுவோரை / People who share food with others

55. சரியான கூற்றை தேர்ந்தெடுக்கவும்:

1. புதுக்கோட்டை மாவட்டத்தின் பொற்பனைக்கோட்டை என்ற இடத்தில் சங்ககால நடுகற்கள் காணப்படுகின்றன.

2. அரிக்கமேடு என்ற இடம் சங்க காலத் துறைமுகப்பட்டினம் ஆகும்

3. இந்திய கருவூலம் மற்றும் புதையல் சட்டம் 1878இல் வகுக்கப்பட்டுள்ளது

4. ரோமானிய நாணயங்கள் தென்னிந்தியாவில் திருநெல்வேலி மண்டலங்களில் செறிந்து காணப்படுகின்றன.

Choose the correct statement

i. Hero stones of the Sangam Age can be found at Porpanaikottai in Pudukokotai district.

ii. Arikkamedu is a Sangam Age Port.

iii. The Indian Treasure Trove Act was passed in 1878

iv. Roman coins are concentrated in the Thirunelveli regions

(a) 1, 2 மற்றும் 4 சரி / i, ii and iv are correct

(b) 1, 2 மற்றும் 3 சரி/ i, ii and iii are correct

(c) 2, 3 சரி / ii, iii are correct

(d) 2 மற்றும் 4 சரி / ii and iv are correct

56. “நிலம் கடவுளுக்குச் சொந்தம்” என்று அறிவித்ததுடன் நிலத்தின் மீது வரிவிதிப்போ வாடகை வசூலிப்பதோ இறைச் சட்டத்திற்கு எதிரானது என்று கூறியவர் யார்?

Who declared that “Land nelongs to God” and collecting rent tax on it was against divine law?

(a) ஷரியத்துல்லா / Shariatullah

(b) டுடு மியான் / Dudu Mian

(c) டிடு மீர் / Titumir

(d) நோவா மியான் / Noah Mian

57. வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது பம்பாயில் இரகசிய வானொலி நிலையத்தை நடத்தியவர் யார்?

Who ran clandestine radio operations at Bombay during the Quit India movement?

(a) உஷா மேத்தா / Usha Mehta

(b) பிரீத்தி வதேதார் / Preeti Waddadar

(c) அருணா ஆசப் அலி / Aruna Asaf Ali

(d) கேப்டன் லட்சுமி / Captain Lakshmi

58. கூற்று (A): இரட்டைமலை சீனிவாசனின் தன்னலமற்ற சேவைக்காக ராவ்சாகிப், ராவ் பகதூர், திவான் பகதூர் ஆகிய பட்டங்களால் சிறப்புச் செய்யப்பட்டார்

காரணம் (R): இவர் ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக நீதி, சமத்துவம் மற்றும் சமூக உரிமைகள் ஆகியவற்றுக்காகப் போராடினார்.

Assertion (A): Rettaimalai Srinivasan was honoured with such titles as Rao Sahib, Rao Bahadur, and

Divan Bahadur for his selfless social services.

Reason (R): He fought for social justice, equality and civil Rights of the marginalised people

(a) கூற்றும் காரணமும் சரி; காரணம் கூற்றின் சரியான விளக்கமல்ல / (A) and (R) are correct, but R is not the correct explanation of (A)

(b) கூற்றும் காரணமும் சரி; காரணம் கூற்றின் சரியான விளக்கம் ஆகும் / (A) and (R) are correct, R is the correct explanation of (A)

(c) கூற்று தவறு; காரணம் சரி / (A) is wrong; (R) is correct

(d) கூற்றும் தவறு; காரணமும் தவறு / Both (A) and (R) are wrong

59. 15ஆவது நிதிக் குழுவின் தலைவர் யார்?

Who is the chairman of 15th Finance Commission?

(a) Y.V.ரெட்டி / Y.V.Reddy

(b) K.C.பந்த / K.C.Pant

(c) N.K.சிங் / N.K.Singh

(d) K.C.நியோகி / K.C.Neogy

60. கீழ்க்கண்டவற்றுள் மத்திய அரசின் பண பங்களிப்பு அளிக்காத வளங்கள்

Which among the following are not source of Union Government?

(a) தலைக்கட்டு வரி / Capitation Tax

(b) அயல்நாட்டுக் கடன்கள் / Foreign loans

(c) மாநகர வரி / Corporation Tax

(d) வருமான வரி (வேளாண் வருவாய் தவிர்த்து)/ Taxes on income other than agricultural income

61. சரியான விடையை தேர்ந்தெடுத்து பொருத்துக:

அ. ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டம் (IRDP) 1. 1983

ஆ. ஊரக இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்புத் திட்டம் (TRYSEM) 2. 1980

இ. தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டம் (NREP) 3. 1979

ஈ. ஊரக நிலமற்றோர் வேலை வாய்ப்பு உறுதித்திட்டம் (RLEGP) 4. 1976

Match the following type:

(a) Integrated Rural Development Programme (IRDP) 1. 1983

(b) Training Rural Youths for Self Employment (TRYSEM) 2. 1980

(c) National Rural Employment Programme (NREP) 3. 1979

(d) Rural Landless Employment Guarantee Programme (RLEGP) 4. 1976

(a) (b) (c) (d)

(a) 4 3 2 1

(b) 2 4 1 3

(c) 1 3 4 2

(d) 3 4 1 2

62. இந்தியாவின் தேசிய நாட்காட்டி ——— ஆகும்

The National calendar of India is

(a) கிரிகேரியன் நாட்காட்டி / Gregorian Calender

(b) விக்ரம் சாவந்த் நாட்காட்டி / Vikram Savanth Calender

(c) ஹிந்து நாட்காட்டி / Hindu Calender

(d) சகவருட நாட்காட்டி / Saka Calender

63. உலக பசுமை நகரம் விருது 2022 பெற்றது

World green city Award 2022 was received by

(a) பங்களுரு / Bangalore

(b) கொச்சின் / Cochin

(c) ஹைதராபாத் / Hyderbad

(d) கொடைக்கானல் / Kodaikkanal

64. சரியான பதிலை தேர்வு செய்யவும்:

ஜெய்நகர் – குர்தா ரயில் பாதை எந்த இரு நாடுகளுக்கு இடையே கையெழுத்தானது

1. இந்தியா – சீனா

2. இந்தியா – இலங்கை

3. இந்தியா – நேபாள்

Choose the correct pairs:

Jaynagar – Kurtha railway line were signed between which two sides

I. India – China

II. India – Srilanka

III. India – Nepal

(a) 1 மட்டும் / I only

(b) 2 மட்டும்/ II only

(c) 3 மட்டும்/ III only

(d) 1 மற்றும் 2/ I and II

65. கிழக்கு கடற்கரை சமவெளி பற்றி பின்வரும் வாக்கியங்களில் எது சரியானது?

1. கிழக்கு கடற்கரை சமவெளி கிழக்கு தொடர்ச்சி மலைக்கும் அரபிக் கடலுக்கும் இடையே அமைந்துள்ளது

2. மகாநதிக்கும் கிருஷ்ணா நதிக்கும் இடைப்பட்டப் பகுதி வடசரக்கார் என அழைக்கப்படுகிறது

3. கிருஷ்ணா மற்றும் காவிரி ஆற்றிற்கு இடைப்பட்ட பகுதி சோழமண்டல கடற்கரை என அழைக்கப்படுகிறது

Which of the following statement are correct about Eastern coastal plain?

i. It lies between Eastern Ghats and the Arabian Sea.

ii. The coastal plain between Mahanadi and Krishna river is known as the Northern Circars.

iii. The coastal plain lies between Krishna and Kaveri rivers is called Coromandal coast.

(a) 1, 2 மற்றும் 3 மட்டும் / i, ii and iii only

(b) 1 மற்றும் 2 மட்டும்/ i and ii only

(c) 2 மற்றும் 3 மட்டும் / ii and iii only

(d) 1 மற்றும் 3 மட்டும் / i and iii only

66. கீழ்க்கண்டவற்றில் சரியாக பொருந்தி உள்ளது எது?

உயிர்கோள காப்பகங்கள் – மாநிலம் Which of the following is correctly paired?

Biosphere Reserves / State

(a) Manas – Gujarat / மானாஸ் – குஜராத்

(b) Simlipal – Odisha / சிம்லிபால் – ஒடிசா

(c) Sundarbans – Assam / சுந்தரவனம் – அசாம்

(d) Kachch – West Bengal / கட்ச் – மேற்குவங்கம்

67. எந்த ஆற்றின் குறுக்கே சர்தார் சரோவர் திட்டம் அமைந்துள்ளது?

Sardar Sarover project is built across ________ river.

(a) கிருஷ்ணா / Krishna

(b) நர்மதா / Narmada

(c) மகாநதி / Mahanadi

(d) சட்லஜ் / Sutlej

68. பீகாரின் நாளந்தாவில் உள்ள புத்தரின் செம்புச் சிலை ——– அடி உள்ளது

A copper statute of the Buddha about ________ feet high at Nalanda in Bihar.

(a) பதினாறு / 16 feet

(b) இருபத்து மூன்று / 23 feet

(c) ஐம்பது/ 50 feet

(d) பதினெட்டு / 18 feet

69. ‘சூர்” வம்சத்தை நிறுவியவர்

‘Sur’ dynasty founded by

(a) அக்பர் / Akbar

(b) ஷெர் ஷா / Sher Shah

(c) பாபர் / Babur

(d) தேஜ் பகதூர் / Tej Bagadur

70. சிவாஜியின் அஷ்டப்பிரதானத்தில் தலைமை நீதிபதி என அழைக்கப்பட்டவர்

In the Ashtapradhan of Shivaji Cabinet Chief Justice was called as

(a) நியாயதிஸ் / Nyayadhish

(b) பண்டிட்ராவ் / Panditrao

(c) சுமந்த் / Sumant

(d) பந்த்பிரதான் / Pant Pradhan

71. அக்பரின் அவையில் இடம் பெற்றிருந்த ——– ஆக்ராவின் பார்வைத் திறனற்ற பாடகன் எனப் பலராலும்அறியப்பட்டவர்

The Court of Akbar and was popularly known as the blind bard of Agra is

(a) துக்காராம் / Tuka Ram

(b) மீராபாய் / Mirabai

(c) சூர்தாஸ் / Sur Das

(d) இராமானந்தர் / Ramananda

72. பின்வருவனவற்றுள் தவறான இணையைத் தெரிவு செய்க:

From the following, find out the wrong pair:

(a) பாபர் நாமா – சுயசரிதை / Babur Nama – Auto Biography

(b) கோனார்க் – சிவன் கோயில் / Konark – Siva Temple

(c) குதுப்மினார் – வெற்றி கோபுரம் / Qutb Minar – Victory power

(d) முகமது இக்பால் – உருதுக் கவிஞர் / Muhammed Iqbal – Urdu poet

73. கூற்று: மாநில சட்டமன்றம் மாநில அதிகாரத்தின் உண்மையான அதிகார மையமாகும்.

காரணம்: முக்கியமான துறைத் தலைவர்களின் நியமனங்களைச் செய்கிறது.

கீழ்காண்பவையிலிருந்து சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்

Assertion (A): The legislative Assembly is the real centre of power in the state.

Reason (R): It makes the important appaointments of the Heads of Departments.

Choose the correct option from the following codes:

(a) கூற்று சரி ஆனால் காரணம் தவறு/ (A) is true but (R) is false

(b) கூற்று மற்றும் காரணம் சரி மேலும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்/ Both (A) and (R) are true, and (R) is the correct explanation of (A)

(c) கூற்று தவறு ஆனால் காரணம் சரி / (A) is false (R) is true

(d) கூற்று மற்றும் காரணம் சரி மேலும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல / Both (A) and (R) are true, but (R) is not the correct explanation of (A) is correct.

74. கீழ்க்கண்ட எந்த அதிகார வரம்பின் மூலம் இரு மாநிலங்களுக்கிடையேயான பிரச்சனைகளை உச்ச நீதிமன்றம் தீர்க்க வழி வகை செய்கிறது?

Dispute between two states of India come to the Supreme Court under:

(a) நீதி மறு ஆய்வு / Judicial Review

(b) முதன்மை அதிகார வரம்பு / Original Jurisdiction

(c) ஆலோசனை அதிகார வரம்பு / Advisory Jurisdiction

(d) மேல் முறையீட்டு அதிகார வரம்பு / Appellate Jurisdiction

75. பெண்களுக்கான மூதாதையர் சொத்துரிமை சட்டத்தை 1989இல் நடைமுறைப்படுத்திய மாநிலம் எது?

Which state implemented women ancestral Property Act in 1989?

(a) ஆந்திரா / Andhra

(b) கேரளா / Kerala

(c) தமிழ்நாடு / Tamil Nadu

(d) கோவா / Goa

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!