General StudiesTnpsc

Tnpsc Model Question Paper 39 – General Studies in Tamil & English

1. நாடகம் பற்றிய செய்தியில் மிகச் சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்

Choose the correct assertion about Drama from the following:

(a) நடிப்பதற்கு மட்டுமே உரியது நாடகம் / Drama is meant to be enacted

(b) படிப்பதற்கு மட்டுமே உரியது நாடகம் / Drama is meant to be read

(c) பார்ப்பதற்கு மட்டுமே உரியது நாடகம் / Drama is meant to be watched

(d) நடிப்பதற்கு மட்டுமே உரிய நாடகம், படிப்பதற்கு மட்டுமே உரிய நாடகம், நடிப்பதற்கும் மற்றும் படிப்பதற்கும் உரிய நாடகம் என நாடகத்தை மூவகையாக M.வரதராசன் வகைப்படுத்துகிறார் / M.Varadharasan classify drama into three categories Drama meant only to be enacted, Drama meant only to be read and Drama meant both to be enacted and to be read.

2. “இன்பத் தமிழ்க் கல்வி யாவரும் கற்றவர் என்றுரைக்கும் நிலை எய்திவிட்டால் துன்பங்கள் நீங்கும், சுகம் வரும் நெஞ்சினில் தூய்மை யுண்டாகிடும், வீரம் வரும்” – எனப் பாடியவர் யார்?

“Inbath Thamizhkalvi Vavarum Kattravar Endruraikkum Nilai Eithivittal Thunbangal Neeengum, Sugam Varum Nenjinil Thooimai Yundaagividum, Veeram Varum” – Whose lines are these?

(a) பாரதியார் / Bharathiyaar

(b) பாரதிதாசன் / Bharathidhasan

(c) பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் / Pattukkottai Kalyana Sundaram

(d) சுரதா / Suradha

3. நிலம் அளப்பதற்கு ஏர், நிவர்த்தனம், பட்டிகை என்ற முறைகள் யாருடைய காலத்தில் கையாளப்பட்டன?

Methods of measuring lands such as Are, Nivarthanam and Pattigai were followed during which King’s period?

(a) சோழர் காலம் / Cholar Period

(b) சேரர் காலம் / Cherar Period

(c) பாண்டியர் காலம் / Pandiar Period

(d) பல்லவர் காலம் / Pallavan Period

4. 2021-ம் ஆண்டிற்காக “பேரறிஞர் அண்ணா விருது” யாருக்கு வழங்கப்பட்டது?

“Perarignar Anna Award” for the year 2021 was awarded to

(a) நாஞ்சில் சம்பத் / Nanjil Sampath

(b) பாரதி கிருஷ்ணன் குமர் / Bharathi Krishna Kumar

(c) டாக்டர்.மு.ராஜேந்திரன் / Dr.M.Rajendran

(d) சுகி சிவம் / Suki Sivam

5. 1967ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்து திருமணச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டத்திருத்தம்) முக்கிய நோக்கம்

The main aim of the Hindu Marriages Tamil Amendment Act of 1967 is

(a) இந்து திருமணங்களுக்கு பாதுகாப்பு அளிப்பது / Safeguarding Hindu Marriages

(b) தமிழகத்தில் நடைபெற்ற சுயமரியாதை திருமணங்களுக்குச் சட்டபூர்வமான அங்கீகாரம் அளிப்பது / Granting legal sanction to the self respect marriages in Tamil Nadu

(c) மணமகன் மற்றும் மணமகள் வயதினை நிர்ணயம் செய்வது / It fixed the ages of brides and bridegrooms

(d) இந்துக்களின் திருமணங்களுக்குச் சிறப்பு அங்கீகாரம் வழங்குவது / It gave special status to Hindu Marriages

6. 1944ம் ஆண்டு ———-ல் நடைப்பெற்ற மாநாட்டில் நீதிக்கட்சி என்ற பெயர் திராவிடக் கழகம் என்று மாற்றப்பட்டது

____________ session of 1944 changed the name of Justice party into Dravidar Kazhagam.

(a) திருச்சி / Trichy

(b) சேலம் / Salem

(c) விருதுநகர் / Virudhunagar

(d) ஈரோடு / Erode

7. பின்வருபவர்களின் “வைக்கம் வீரர்” என்ற பட்டத்தை பெற்றவர் யார்?

Who among the following earned the title of the ‘Hero of Vaikkom’?

(a) T.M. நாயர் / T.M.Nair

(b) A.சுப்பராயன் / A.Subbarayan

(c) E.V.ராமசாமி / E.V.Ramasamy

(d) C.ராஜகோபாலச்சாரி / C.Rajagopalachari

8. இந்திய தேசிய காங்கிரஸின் மூன்றாவது மாநாட்டிற்கு தலைமை தாங்கியவர்

The third session of the Indian national Congress was presided over by:

(a) டபுள்யூ.சி.பானர்ஜி / W.C.Bannerjee

(b) பத்ருதின் தியாப்ஜி / Badruddin Tyabbji

(c) எம்.விஜயராகவாச்சாரியார் / M.Vijayaragavachariar

(d) கோகலே / Gokhale

9. கள்ளுண்பாரைத் திருவள்ளுவர் எதனை உண்பாருக்கு நிகராகக் கூறுகிறார்?

To whom does Thiruvalluavr compares the Toddy drinkers (Kalunpor)?

(a) பாலுண்பார் / Paalunpor (Milk taking habits)

(b) தேனுண்பார் / Thaenunpor (Honey taking habits)

(c) நஞ்சுண்பார் / Nanjunpor (Poison taking habits)

(d) அமுதுண்பார் / Amudhunpor (Heavenly Nectar taking habits)

10. “தெளிவு குருவின் திருமேனி காண்டல்”

என்று உரைக்கும் பாடல் எது?

‘Thelibu kuruvin Thirumeni Kandal’ –

This line is taken from which poem?

(a) திருக்குறள் / Thirukkural

(b) திருமந்திரம் / Thirumanthiram

(d) ஆசாரக்கோவை / Asarakkovai

(d) பழமொழி நானூறு / Pazhamozhi Nanooru

11. மனத்துக்கண் மாசிலன் ஆதல் அதைத்தறன்

ஆகுல நீர பிற

இக்குறளின் அடிப்படையில்

கூற்று (A): மனம் தூய்மையாயிருப்பின் அதன் வழிப்பட்ட முக்கரண வினைகளும் தூய்மையாயிருக்கும் ஆதலின், மாசிலா மனமே அறத்திற்கு அடிப்படை

காரணம் (R): மனம் தூயதாயிருப்பின் வெளிக்கோலம் வேண்டாதது ஆகிவிடும். மனம் தீயதாக இருப்பின் வெளிக்கோலம் பிறரரை ஏமாற்றுவதாக ஆகிவிடும். இருவழிகளினாலும் பயனின்மை நோக்கி வெளிக்கோலத்தை வீண் ஆரவாரமென்றார்

Manaththukan Maasilan Aadhal Anaiththuaran

Aakula Neera Pira

Based on this kural

Statement (A): Thoughts, words and deeds of a person would be pure if the mind and heart is pure

Reason (R): Outward appearance becomes insignificant if the mind is pure. If the mind is impure, then the outward appearance is just a show – thus the outward appearance is just show of arrogance.

(a) கூற்று (A) காரணம் (R) இரண்டும் தவறு. இவை குறளை விளக்குவன அல்ல / Statement (A) and Reason (R) are both incorrect. It does not explain the kural.

(b) கூற்று (A) சரி, காரணம் (R) தவறு / Statement (A) is correct; Reason (R) is incorrect.

(c) கூற்று (A) தவறு; காரணம் (R) சரி / Statement (A) is incorrect, Reason (R) is correct.

(d) கூற்று (A), காரணம் (R) இரண்டும் சரி. இவை குறளின் பொருளை சரியாக விளக்குகின்றன./ Statement (A) and Reason (R) both correct and explains the kural aptly.

12. புதுக்கவிதைகளில் பழங்கதையைத் துணையாகக் கொண்டு ஒரு கருத்தை விளக்குவதற்குப் பயன்படுத்தப்படும் உத்திமுறை

Method of narrating old epics and legendary stories through modern poetry is called

(a) படிமம் / Padimam

(b) தொன்மம் / Thonmam

(c) குறியீடு / Kuriyeedu

(d) இவற்றில் ஏதுமில்லை / None of the these

13. சரியான விடையைத் தேர்க:

1. பொய்கையாழ்வர் “வையந் தகளியா வார்கடலே நெய்யாக” என்னும் பாடலைப் பாடினார்

2. பூதத்தாழ்வார் “திருக்கண்டேன் பொன்மேனிக் கண்டேன்” என்னும் பாடலைப் பாடினார்

3. பேயாழ்வார் “அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக” என்னும் பாடலை பாடினார்

4. பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகிய இம்மூவரும் ஒரு காலத்தவர்

Choose the right answer:

1. ‘Vaiyan dhagaliya Vaarkadale Neyyaga’ – This poem was written by Poigaiyazhvaar

2. ‘Thirukanden, Ponmeni Kanden’ – This poem was written by Boothathazhvaar

3. ‘Anbe Dhagaliyar Aarvame Neiyyaga’ – This poem was written by Peiyazhvaar

4. ‘Poigaiyazhvaar, Botthathazhvaar and Peiyazhvaar belong to the same age (contemporaries)

(a) 1, 3 சரி, 2, 4 தவறு / (1) and (3) are right, (2) and (4) are wrong

(b) 1, 4 சரி. 2, 3 தவறு / (1) and (4) are right, (2) and (3) are wrong

(c) 1, 2 சரி. 3, 4 தவறு / (1) and (2) are right, (3) and (4) are wrong

(d) 1, 2 தவறு. 3, 4 சரி / (1) and (2) are wrong, (3) and (4) are right

14. தமிழ்ச சமூகத்தில் மகளிர்க்குக் கற்பின் குறியீடாக அமையும் மலர் எது?

Which flower is the symbol of chastity for women in Tamil Society?

(a) மல்லிகை / Jasmine (b) ரோஜா / Rose (c) முல்லை / Mullai (d) அல்லி / Lily

15. பின்வரும் சங்க இலக்கிய நூல்களில், சங்க காலத்து சேரர்களைப் பற்றிக் குறிப்பிடும் நூல் எது?

Which of the following sangam literature gives exclusive references about the sangam cheras?

(a) பரிபாடல் / Paripadal

(b) பதிற்றுப்பத்து / Pathitrupattu

(c) கலித்தொகை / Kalithogai

(d) புறநானூறு / Purananuru

16. பரம்பரை ரீதியான சமத்துவம் எந்த நடைமுறையில் உறுதி செய்யப்படுகிறது

Inter-generational equality is ensured by

(a) தொழிற்சாலை / Industrial progress

(b) பொருளாதார மேம்பாடு / Economic development

(c) நிலையான மேம்பாடு / Sustainable development

(d) பொருளாதார வளர்ச்சி / Economic development

17. 1. பிராமணர்கள் நவீன கல்வியினால் அதிக நன்மை அடைந்தனர் அதன் மூலம் அதிகமான அரசு வேலை பெற்றனர் என்பது பிராமணர் அல்லாதார் இயக்கம் தென்னிந்தியாவில் உருவாக அமைந்தக் காரணங்கிளல் ஒன்று

2. ஆகையினால், அரசு வேலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டிற்கான கோரிக்கைகள் வருவாகின.

பின்வரும் கூற்றுகளில் சரியானது எது/எவை?

I. One of the reasons for the non-brahmin movement in South India was that the Brahmins took more advantage of modern education and hence secured more government jobs.

II. Therefore there were demands for reservation in government jobs and educational institution.

(a) 1 மட்டும் / I only

(b) 2 மட்டும் / II only

(c) 1 மற்றும் 2/ I and II

(d) மேற்கண்ட எதுவுமில்லை / None of above

18. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பன வழக்குகளை விசாரிக்க தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் அமைக்கப்பட்டது

பின்வரும் கூற்றுகளில் சரியானது எது/எவை?

1. இது 1993இல் ஏற்றுக்கொள்ளப்பட்டது

2. இது ஒரு தலைவர் மற்றும் 8 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது

Tamil Nadu State Commission for women, a statutory body was constituted to deal with the cases related to crime against women

Which of the following statements is/are true?

I. It was adopted in the year 1993 II. It consists of chair person and 8 members

(a) 1 மட்டும் / I only

(b) 2 மட்டும் / II only

(c) 1 மற்றும் 2/ Both I and II

(d) 1 மற்றும் 2 இல்லை / Neither I nor II

19. 1. இந்திய அரசால் முன்மொழியப்பட்டுள்ள சிறப்பு திட்டமான “சகி” என்பது ஒரே இட நெருக்கடி நிவாரண மையம்

2. இதன் நோக்கமானது வன்முறையால் பாதிக்கப்பட் பெண்களுக்கு உதவி அளித்தல் ஆகும்.

மேற்கண்டவற்றுள் எந்த கூற்று(கள்) சரி?

I. Government of India proposed a special scheme named ‘Sakhi’ which is a one stop cure centre.

II. Objective is to provide assistance to women affected by violence.

Which of the above statement is/are true?

(a) 1 மட்டும் / I only

(b) 2 மட்டும் / II only

(c) 1 மற்றும் 2/ I and II

(d) None of the above/ மேற்கண்ட எதுவுமில்லை

20. தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், அரசியல் சட்டப்பிரிவு ——— கீழ் நிரந்தர அமைப்பாக்கப்பட்டது

Tamil Nadu Backward Classes Commission has beed constituted as a permanent body under article

(a) 16(3)

(b) 16(4)

(c) 16(5)

(d) 16(7)

21. தமிழ்நாட்டில் பின்னலாடை உற்பத்தி அதிகம் உள்ள இடம்

In Tamil Nadu the knitted garments production is concentrated in

(a) கோயம்புத்தூர் / Coimbatore

(b) திருப்பூர் / Tiruppur

(c) ஈரோடு / Erode

(d) கரூர்/ Karur

22. தமிழகத்தில், இலவசமாகத் தையல் இயந்திரம் வழங்கும் திட்டம், ——— அம்மையார் பெயரில் வழங்கப்பட்டு வருகிறது

The free supply of sewing machine scheme in Tamil Nadu is implemented in the name of __________ Ammaiyar.

(a) சத்தியவாணிமுத்து / Sathiyavanimuthu

(b) தர்மாம்பாள் / Dharmambal

(c) மூவலூர் ராமாமிர்தம் / Moovalur Ramamirtham

(d) முத்துலட்சுமி ரெட்டி / Muthulakshmi Reddy

23. 1. சுயமரியாதை இயக்கம் ஒரு மன்றமாகவும் அரசியல் தளமாகவும் செயல்பட்டது

2. இதன் நோக்கம் திமுக ஆட்சிக்கு வந்ததாலும் பிராமணரல்லாதார் ஆட்சி தமிழகத்தில் அமைந்தாலும் நிறைவேறியது

I. The Self Respect Movement functioned as a form and political platform

II. It objective got fulfilled when DMK attained power and formed a government of non-brahmin in Tamilnadu.

Which of the above statements is/are true?

(a) 1 மட்டும் / I only .

(b) 2 மட்டும் / II only

(c) 1 மற்றும் 2/ I and II

(d) None of the above/ மேற்கண்ட எதுவுமில்லை

24. 1920ல் சட்டமன்ற மேலவையில் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்திய தமிழ்நாட்டைச சேர்ந்த பட்டியல் சாதியைச் சேர்ந்த முதல் பிரதிநிதி

The first SC person from Tamil Nadu to represent Tamils in the Legislative Council in 1920 was

(a) எம்.சி.ராஜா / M.C.Rajah

(b) ஆர்.வீரையன் / R.Veeraiyan

(c) சின்னசாமி / Chinnaswamy

(d) டாக்டர்.சுப்ராயன் / Dr. Subbarayan

25. 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் ——– மாவட்த்தில் அதிகமான மக்கள் தொகை உள்ளது

______________ district in Tamil Nadu has the highest population as per 2011 census.

(a) ஈரோடு / Erode

(b) கோயம்புத்தூர் / Coimbatore

(c) சென்னை / Chennai

(d) மதுரை / Madurai

26. “செயல்வழி கற்றல்” கருத்தினை முதலில் அறிமுகப்படுத்தியவர்

Active learning concept was first develop by

(a) போன்வெல் / Bonwell

(b) எல்ஸன் / Elson

(c) வெல்ட்மேன் / Weltman

(d) ஜீன்-ஜேக்குவஸ் ரௌசியா / Jean-Jacques Rousseau

27. மாணவர்களிடையே அறிவியல் மனப்பான்மையை எவ்வாறு வளர்ப்பது?

1. மாணவர்களுக்குக் கூடுதல் பயிற்சியளித்தல்

2. மாணவர்களை கேள்விகள் கேட்கவும் அதற்குப் பதிலினை கண்டறயவும் ஊக்குவித்தல்

3. அன்றாட வாழ்வில் அறிவியல் முறைகளைப் பயன்படுத்த ஊக்குவித்தல்

4. அவர்களுக்கு நன்கு தயாரிக்கப்பட்ட அறிவியல் பாடப் பொருளினை வழங்குதல்

How do you develop “Seientific Temper” among students?

(i) Give extra coaching to the students

(ii) Encourage them to ask questions and allow them to seek out answer on their own

(iii) Motivate to apply the methods of Science in day to day life

(iv) Provide well prepared science study materials to them

(a) 1 மட்டும் / (i) only

(b) 2 மற்றும் 3 மட்டும் / (i) and (iii) only

(c) 1, 2 மற்றும் 3 மட்டும் / (i), (ii) and (iii) only

(d) 1, 2, 3 மற்றும் 4 மட்டும் / (i), (ii), (iii) and (iv) only

28. சுண்ணாம்பு நீரைப் பால் போல் மாற்றும் வாயு

The gas which turns lime water milky is

(a) நைட்ரஜன் / Nitrogen

(b) நீராவி / Water vapour

(c) கார்பன்-டை-ஆக்ஸைடு / Carbon di oxide

(d) ஆக்ஸிஜன் / Oxygen

29. சைலம் திசு ———- ஆனது

Xylem tissue is composed of

(a) டிரக்கீடுகள், நார்செல்கள் மற்றும் துணை செல்கள் / Tracheids, Fibres and Companion Cells

(b) டிரக்கீடுகள், வெஸல்கள் மற்றும் சல்லடை செல்கள் / Tracheids, Vessels and Sieve Elements

(c) டிரக்கீடுகள், பாரன்கைமா, நார்செல்கள் மற்றும் துணை செல்கள் / Tracheids, Parenchyma, Fibres and Companion Cells

(d) டிரக்கீடுகள், நார்செல்கள், வெஸல்கள் மற்றும் பாரன்கைமா / Tracheids, Fibres, Vessels and Parenchyma

30. வளரும் நாடுகளால் ஆக்கிரமிக்கப்பட்ட உலகின் மொத்தக் காடுகளின் விகிதம்

The proportion of world total forest area occupied by the developing countries is

(a) 57.4%

(b) 54.7%

(c) 55.7%

(d) 57.5%

31. நோய் தடுப்பாற்றல் உடலின் சொந்த செல்கள் மற்றும் திசுகளை தாக்கும் நிலை இது பொதுவாக உடல் சுய ஆன்டிஜெனுக்கு எதிரான சகிப்புத் தன்மையைக் கொண்டுள்ளது. இருப்பினும் சில சந்தர்ப்பங்களில், சகிப்புத் தன்மை தோல்வியடைகிறது அல்லது சுய ஆன்டிஜெனுக்கு எதிராக முழுமையடையாது. இது டி லிம்போசைட்டுகள் அல்லது பி ல்ம்போசைட்டுகளின் உற்பத்திக்கு வழிவகுக்கிறது. உடலின் இயல்பான சகிப்புத் தன்மை குறைந்து, நோயயெதிர்ப்பு அமைப்பு உடலின் சொந்த திசுக்களை “சுயமாக” அங்கீகரிக்கத் தவறினால் இந்த நோய் உருவாகிறது.

மேற்கண்டவைப் பின்வரும் எந்த நிபந்தனையைக் குறிக்கிறது:

It is a condition in which the Immune system mistakenly attacks body’s own cells and tissues. Normally, body has the tolerance against self antigen. However, in some occasions the tolerance fails or becomes incomplete against self antigen. It leads to the activation if T Lymphocytes or production of B Lymphocytes. This disease is produced when body’s normal tolerance decreased and the immune system fails to recognize the body’s own tissues as “Self”.

This passage signifies the following condition:

(a) ஆட்டோகிராப்ட் நிராகரிப்பு / Autocraft Rejection

(b) தன்னுடல் தாக்கு நோய் / Auto Immune Disease

(c) ஆட்டோ ஆன்டிஜென் கோளாறு / Acquired Antigen Disorder

(d) வாங்கிய நோயெதிர்ப்பு நோய் / Acquired Immune Disease

32. கீழ்க்கண்டவற்றுள் இயற்கையான நானோ பொருள் எது?

Which one of the following is the Natural Nanomaterial?

(a) மயிலிறகு / Peacock feather

(b) மயில் அலகு / Peacock beak

(c) மணல் துகள் / Grain of sand

(d) திமிங்கலத்தின் தோல் / Skin of the whale

33. ஒரு பேருந்து மணிக்கு 55 கி.மீ வேகத்தில் செல்கிறது. அதனை மீ/வி (m/s) அளவில் எழுதுக

A bus is running at a speed of 55 Miles/hour. Write the spend in m/sec.

(a) 20.5 மீ/வி / 20.5m/s

(b) 24.6 மீ/வி / 24.6m/s

(c) 28.5 மீ/வி / 28.5m/s

(d) 22.8 மீ/வி / 22.8m/s

34. “என்னுடைய துயரமும் மற்றும் நீதி கிடைக்கும் என்ற நிலையற்ற நம்பிக்கையும் என்னுடையது மட்டுமல்ல மாறாக நீதிமன்றங்கள் மூலம் நீதி கிடைக்க வேண்டி போராடும் எல்லா பெண்களுடையது” என யார் கூறியது?

“My sorrows and my wavering faith is not for myself alone, but for every woman who is struggling for justice in court”. Who said this?

(a) நிர்பயா / Nirbaya

(b) பில்கிஸ் பானு / Bilkis Bano

(c) ஷாபானு / Shah Bano

(d) விசாகா / Visaka

35. தவறான பொருத்தத்தைக் கண்டறிக:

அ. அகாலிதள் – மத அடிப்படை

ஆ. பொதுவுடைமை கட்சிகள் – பொருளாதார அடிப்படை

இ. நாஜி கட்சி – இன அடிப்படை

ஈ. சமதர்ம கட்சிகள் – பால்பேத அடிப்படை

Find out the wrong match:

(a) Akali Dal – Religious base

(b) Communist parties – Economic base

(c) Nazi party – Racial base

(d) Socialist parties – Gender base

(a) அ மற்றும் ஆ / (a) and (b) (b) ஆ மட்டும் / (b) only

(c) இ மற்றும் ஈ / (c) and (d) (d) ஈ மட்டும் / (d) only

36. “விலங்கியலின் தந்தை” என அழைக்கப்படுபவர்

Father of Zoology is

(a) அரிஸ்டாட்டில் / Aristotle

(b) கார்லஸ் லின்னேயஸ் / Carlous Linnaeus

(c) ஹெக்கல் / Haekel

(d) பேட்சன் / Bateson

37. அக்னிகுல் காஸ்மோஸ் வடிவமைப்பு மற்றும் உற்பத்திக்கான முதல் காப்புரிமையைப் பெற்ற தயாரிப்பின் பெயரைக் குறிப்பிடவும்

Name the product for which the Agnikul Cosmos has secured first patent for the design and manufacturing

(a) ராக்கெட் என்ஜின் / Rocket engine

(b) 3D அச்சிடப்பட்ட ராக்கெட் என்ஜின் / 3D – Printed rocket engine

(c) தானியங்கி ராக்கெட் இந்திரம் / Automated rocket engine

(d) செயற்கைக்கோள் / Satellite

38. டாமன் மற்றும் டையூ, எப்போது தாத்ரா மற்றும் நாகர் ஹவேலியுடன் இணைக்கப்பட்டது?

When was Daman and Diu merged with Dadra and Nagar Haveli?

(a) 2019, ஜனவரி / January , 2019

(b) 2019, டிசம்பர் / December, 2019

(c) 2020, ஜனவரி / January, 2020

(d) 2020, டிசம்பர் / December, 2020

39. சுய உதவிக் குழுக்களுக்கு குறுநிதி அளிப்பது ——–இன் நோக்கம்

_______ is responsible for providing microfinance to self help groups.

(a) என்.ஜி.ஓ / NGO

(b) நபார்ட் / NABARD

(c) சிசி வங்கி / CC Bank

(d) பாரத ஸ்டேட் வங்கி / State bank of India

40. 2022ஆம் ஆண்டில் நாட்டில் 13, 26, 677 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்ட ——– ராம்சார் தளங்களை உருவாக்க இந்தியா மேலும் 11 ஈரநிலங்களை ராம்சார் தளங்களின் பட்டியலில் சேர்த்தது

India adds 11 more wetlands to the list of RAMSAR sites to make a total of ____________ Ramar sites covering an area of 13, 26, 677 ha in the year 2022.

(a) 75

(b) 79

(c) 50

(d) 56

41. மத்திய உள்நாட்டு நீர் போக்குவரத்துக் கழகத்தின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?

The headquarters of Central Inland Water transport corporation limited is located in

(a) புது டெல்லி / New Delhi

(b) கொல்கத்தா / Kolkata

(c) நொய்டா / Noida

(d) கவுகாத்தி / Guwahati

42. சோட்டா நாக்பூர் பீடபூமி இந்தியாவின் தொழில்துறை இதயம் என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் அது

Chhota Nagpur plateau is called the heart of industrial India, because it is

(a) முக்கிய இரும்பு, எஃகு மையங்களுக்கு அருகில் உள்ளது / Near to major iron and steel centers

(b) சாலைகள் மற்றும் ரயில்வேயின் பெரிய இணைப்பு / A big link of roads and railways

(c) கனிமங்கள் மற்றும் ஆற்றல் எரிபொருள்கள் நிறைந்துள்ளது / Rich in minerals and power fuels

(d) தொழில்துறை பயிர்களுக்கு மிகவும் வளமானது / Very fertile for industrial crops

43. அதிக ஈரப்பதத்தினைத் தக்க வைக்கும் திறன் கொண்ட மண்

Soil with high moisture retention capacity is

(a) சிவப்பு மண் / Red soil

(b) ரெகூர் மண் / Regur soil

(c) லேட்டரிடிக் மண் / Lateritic soil

(d) பாங்கர் மண் / Bhangar soil

44. வட்டப்பாறை நீர்வீழ்ச்சி அமைந்துள்ள ——– மாவட்டம்

Vattaparai waterfall is located in —— district

(a) கன்னியாகுமரி / Kanyakumari

(b) விருதுநகர் / Virudhu Nagar

(c) தேனி / Theni (d)

சிவகங்கை/ Sivagangai

45. இந்தியாவின் நில எல்லையின் நீளம் எவ்வளவு?

What is the length of the India’s land frontier?

(a) 87263 km

(b) 54560 km

(c) 15200 km

(d) 8000 km

46. நாளந்தா பல்கலைக்கழகத்தைத் தோற்றுவித்தார்

——– founded the Nalanda University

(a) சமுத்திரகுப்தர் / Samudragupta

(b) முதலாம் குமாரகுப்தர் / Kumara Gupta I

(c) ஸ்கந்த குப்தர்/ Skanda Gupta

(d) இரண்டாம் சந்திரகுப்தர் / Chandragupta II

47. கூற்று மற்றும் காரணம்:

கூற்று(A): சிந்து-கங்கை சமவெளி பஞ்சாப் முதல் வங்காளம் கிட்டத்தட்ட வட இந்தியா முழுவதும் உள்ளடக்கி இருந்தது. இப்பகுதியில் செழுமையும் வளமும் அங்கு வாழ்ந்த மக்களின் பன்முகத் தன்மைக்குக் காரணமாயின

காரணம் (R): இந்த சமவெளி இந்தியாவிலுள்ள பெரிய பேரரசுகளின் அரசாட்சி இடமாக இருந்தது

Reason and Assertion type:

Assertion (a) : The Indo-Gangetic plain comprises almost the whole of North India from Punjab to Bengal. The richness and fertility of land account for the multiplicity.

Reason (R): It was the seat of Great Empires of India.

(a) (A) சரி ஆனால் (R) தவறு / A is true but R is false

(b) (A) மற்றும் (R) இரண்டும் சரி மற்றும் (R) ஆனது (A) யின் சரியான விளக்கம் / Both A and R are true and R is the correct explanation of A

(c) (A) தவறு (R) ஆனால் சரி / A is false, R is true

(d) (A) மற்றும் (R) இரண்டும் சரி ஆனால் (R) ஆனது (A) யின் சரியான விளக்கமல்ல / Both A and R are true, but R is not the correct explanation of A

48. இவற்றில் எது “இந்தியக் கட்டிடக் கலையின் தொட்டில்” என்று வர்ணிக்கப்படுகிறது

Which one among the following is described as “The cradle of the Indian Architecture”?

(a) ஐஹோல் / Aihole

(b) கைலாசா / Kailasa

(c) விருபாக்ஷா / Virupaksha

(d) பாப நாதா / Papanatha

49. பிஜப்பூரில் ஆடில்சாஹி பேரரசு யாரால் நிறுவப்பட்டது?

Who founded the Adilshahi Kingdom of Bijapur?

(a) முகம்மது கவான் / Mahmud Gawan

(b) முகம்மது ஷா / Mahmud Shah

(c) நிசாம் ஷா / Nizham Shah

(d) யூசுப் ஆதில் ஷா / Yusuf Adil Shah

50. கால வரிசைப்படி அடுக்கவும்

1. இளவரசர் குஸ்ரூவின் கலகம்

2. சவ்சா போர்

3. பஞ்சாபில் பூபானிக் பிளேக்

4. கான்வா போர்

Arrange in chronological order:

1. Revolt of Prince Khusrau

2. Battle of Chausa

3. Bubonic Plague in Punjab

4. Battle of Kanwah

(a) 4, 2, 1, 3

(b) 1, 2, 3, 4

(c) 2, 3, 1, 4

(d) 3, 1, 2, 4

51. ஒரு தகவல் பகுதி-அதிலிருந்து கேள்வி:

பின்வரும் பத்தியைப் படித்து அதற்கான கேள்விக்குப் பதிலளிக்கவும். கேள்விக்கான உங்கள் பதில் பத்தியின் அடிப்படையில் மட்டுமே இருக்க வேண்டும்

அமீர் குஷ்ரோ தனது மகளிடம் சுழலும் சக்கரத்தின. குழையை விட். வெளியேற வேண்டாம் எப்போதும் வீட்டின் சுவரை நோக்கி முகத்தையும், வீட்டின் வாசலையும் நோக்கி பின்புறத்தையும் வைத்திருக்க வேண்டும். இதனால் யாரும் அவளது முகத்தைப் பார்க்க முடியாது என்று அறிவுரை கூறியுள்ளார்.

இப்பத்தியில் சிறப்பாகக் குறிப்பிடப்பட்டுள்ள ஒன்று?,

A passage of information – Question from it:

Read the following passage and answer the item that follow. Your answers to this item should be based on the passage only.

Amir Khusrau’s in his advice to his daughter asks her not to leave the thread of the spinning wheel and always to keep her face towards the wall of the house and her back towards the door so that nobody might be able to look at her

Which one of the following is best implied in the passage?

(a) பெண்களின் கண்ணியத்திற்குக் கவிஞர் போதிய அளவு மதிப்பளிக்கவில்லை / Poet’s inadequate appreciation of women’s dignity

(b) பெண்களின் கற்புக்கு கவிஞர் பாதுகாவலராக இருக்கிறார் / Poet as a protector of female chastify

(c) ஒரு பெண்ணின் முகத்தை பார்ப்பது மங்கலகரமாக கருதப்படவில்லை / Looking at women’s face was considered as inauspicious

(d) பெண்கள் மிகுந்த மரியாதையுடன் நடத்தப்பட்டனர்./ Women were treated with great respect.

52. குஜராத் மொழியில் லோத்தல் என்பதில் உள்ள “லோத்” என்பதன் பொருள் என்ன?

What is the maning of “Loth” in Lothal in Gujarat language?

(a) மேடு / Mound

(b) கருப்பு வளையல்கள் / Black Bangles

(c) இறந்த / Dead

(d) பொருட்கள் / Articles

53. ஹரப்பா நாகரீகத்தில் பயன்படுத்தப்படாத உலோகம் எது?

Which metal was not used during the Harappan civilization?

(a) தங்கம் / Gold

(b) செப்புதாமிரம் / Copper

(c) இரும்பு / Iron

(d) வெங்கலம் / Bronze

54. பொது மக்கள் குறைத்தீர்ப்பு இயக்குநரகம் அமைந்துள்ள இடம்

The office of the directorate of Public Grievances is situated in the

(a) பிரதமர் அலுவலகம் / Prime Minister’s office

(b) அமைச்சரவை செயலகம் / Cabinet secretariat

(c) பணியாளர் மற்றும் பொதுமக்கள் குறைத்தீர்ப்பு அமைச்சகம் / Ministry of personnel and public grievances

(d) மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையம் / Central Vigilence commission

55. பின்வருவனவற்றுள் அடிப்படை உரிமைகளின் காவலன் எது?

Which of the following is the guardian of fundamental rights?

(a) இந்திய அரசியலமைப்பு / Constitution of India

(b) இந்தியக் குடியரசுத் தலைவர் / President of India

(c) இந்தியாவின் உயர்நீதி மன்றங்கள் / High courts in India

(d) இந்திய உச்ச நீதி மன்றம் / Supreme court of India

56. கூற்று(A) : ஒன்றிய அமைச்சரவை விரும்பினால் கூட்டு ஆட்சி அமைப்பை ஒற்றையாட்சியாய் மாற்றிவிட முடியும்.

காரணம் (R): மாநிலங்களின் மீது செயல்படுத்தத் தக்க பல்திறப்பட்டs i அதிகாரங்களை ஒன்றிய அரசு கைவசம் பெற்றுள்ளது.

பின்வருவனவற்றை படித்துச் சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்:

Assertion (A) : The Union executive can transform the federation into a unitary state.

Reason (R) : The central government is vested with a variety of powers to extend its authority over the states.

Read and choose the correct option given below:

(a) (A) சரி ஆனால் (R) தவறு / A is true; bu R is false

(b) (A) தவறு; ஆனால் (R) சரி / A is false; R is true

(c) (A) மற்றும் (R) இரண்டுமே சரி; அத்துடன் (R) என்பது (A) விற்கான சரியான விளக்கமாகும்./ Both A and R are true; and R is the correct explanation of A

(d) (A) மற்றும் (R) இரண்டுமே சரி; ஆனால்(R) என்பது (A) விற்கான சரியான விளக்கமானது / Both A and R are true; but R is not the correct explanation of A

57. பாராளுமன்ற நிலைக் குழுக்கள் பற்றிய கீழ்கண்ட இணைகளை கவனிக்கவும்

1. உணவு, நுகர்வோர் விவகாரம் மற்றும் பொது விநியோக குழு – நிலைக்குழு

2. மனுக்கள் குழு – தற்காலிய குழு

3. அவைக்குழு – தற்காலிய குழு

4. நன்னெறி குழு – நிலைக்குழு

எந்த இணை தவறான இணை என்று கண்டறி:

Consider the pairs on parliamentary committees:

i. committee on food, consumer Affairs and Public distribution – Standing committee

ii. Committee on petitions – Adhoc committee

iii. House committee – Adhoc Committee

iv. Committee on Ethics – Standing committee

Which pair is not correct?

(a) 1, 3 மற்றும் 4 தவறான இணைகள் / ii, iii and iv are not correct

(b) 1, 2 மற்றும் 3 தவறான இணைகள் / i, ii and iii are not correct

(c) 1 மற்றும் 3 தவறான இணைகள் / i and iii are not correct

(d) 1 மற்றும் 2 தவறான இணைகள் / i and ii are not correct

58. கீழ்க்கண்ட நாடாளுமன்றக் கூட்டத் தொடர்களில் எது/எவை தவறானவை?

Which of the following sessions of parliament is/are incorrect?

(a) வரவு-செலவுக் கூட்டத் தொடர் (பிப்ரவரி முதல் மே வரை)/ Budget session : February to May

(b) மழைக்காலக் கூட்டத் தொடர் (ஜீலை முதல் செப்டம்பர் வரை)/ Monsoon session : July to September

(c) குளிர்காலக் கூட்டத் தொடர் (நவம்பர் முதல் ஜனவரி வரை)/ Winter session : November to January

(d) குளிர்காலக் கூட்டத் தொடர் (நவம்பர் முதல் டிசம்பர் வரை)/ Winter session : November to December

59. கீழ்வரும் எச்சட்டத்திருத்தம் தொடக்கக் கல்வியை அடிப்படை உரிமையாக்குகிறது?

Which of the following Amendments made Elementary Education a fundamental right?

(a) 42வது சட்டத்திருத்தம் / 42nd Amendment Act

(b) 44வது சட்டத்திருத்தம் / 44th Amendment Act

(c) 86வது சட்டத்திருத்தம் / 86th Amendment Act

(d) 74வது சட்டத்திருத்தம் / 74th Amendment Act

60. கீழ்காண்பவற்றில் எது தவறான இணை?

1. பட்டங்கள் ஒழிப்பு – விதி 18

2. அடிப்படை உரிமைகளை விட அரசு வழிகாட்டி நெறிமுறைகள் மேலானவை – விதி 31

3. தீண்டாமை ஒழிப்பு – விதி17

4. சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் மற்றும் சமமான பாதுகாப்பு – விதி 14

Which one of the following is incorrectly paired?

1. Abolition of Titles – Article 18

2. Supremacy to Directive principles of State policy – Article 31 B

3. Abolition of Untouchability – Article 17

4. All are equal before law and equal protection of law – Article 14

(a) 1 மட்டும் / 1 only

(b) 2 மட்டும் / 2 only

(c) 3 மட்டும் / 3 only

(d) 4 மட்டும் / 4 only

61. 42ஆம் அரசமைப்புத் திருத்தச் சட்டம், இந்திய அரசியலமைப்புச் சாசனத்தின் முகவுரையில் மூன்று புதிய சொற்களைச் சேர்த்தது. பின்வருவனவற்றில் எது தவறானது?

The 42nd Constitutional Amendment Act added three new words to the preamble of the Indian Constitution. Which among the following is the incorrect one?

(a) சோசலிஸ்ட் / Socialist

(b) மதச்சார்பற்ற / Secular

(c) மக்களாட்சியுடைய / Democratic

(d) ஒருமைப்பாடு / Integrity

62. கரிபி ஹடாவோ என்பது வறுமை ஒழிப்பு நிகழ்வுகளுக்கான ———- ஐந்தாண்டுத் திட்டத்தின் முழக்கம் ஆகும்.

Garibi Hatao is the slogan of ——— five year plan for proverty alleviation programme.

(a) முதல் ஐந்தாண்டுத் திட்டம் / Fist Five year plan

(b) இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டம் / Second Five year plan

(c) ஐந்தாம் ஐந்தாண்டுத் திட்டம் / Fifth Five year plan

(d) எட்டாம் ஐந்தாண்டுத் திட்டம் / Eighth Five year plan

63. சரியான விடையைத் தேர்ந்தெடு: பின்வரும் இடங்களில் எந்த இடத்தில்அனல்மின் நிலையம் இல்லை?

Choose the right answer:

Which one among the following places does not have a Termal Station?’

(a) தூத்துக்குடி / Tuticorin

(b) எண்ணூர் / Ennore

(c) ராணிப்பேட்டை / Ranipet

(d) மேட்டூர் / Mettur

64. பின்வருவனவற்றுள் எந்த நான்கு முக்கிய பெரு நகரங்கள் தங்க நாற்கரத் திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ளது?

Which of the following four major are connected under the scheme of golden quadrilateral?

(a) புது டெல்லி, ஹைதராபாத், பெங்களுர் மற்றும் சென்னை / New Delhi, Hyderabad, Bengaluru and Chennai

(b) புதுடெல்லி, கொல்கத்தா, சென்னi மற்றும் பெங்களுர் / New Delhi, Kolkata, Chennai and Bengaluru

(c) புது டெல்லி, கொல்கத்தா, சென்னை மற்றும் மும்பை / New Delhi, Kolkata, Chennai and Mumbai

(d) புது டெல்லி, நாக்பூர், பெங்களுர் மற்றும் கொல்கத்தா / New Delhi, Nagpur, Bengaluru and Kolkata

65. ——- என்பது கிராமப்புற மக்களை விரிவான முறையில் உள்ளடக்கிய, கிராமப்புற சுகாதார வசதியை விரைவுபடுத்தும் ஒரு திட்டமாகும்

——- is to accelerate the sanitation coverage in rural areas so as to comprehensively cover the rural community

(a) நிர்மல் பாரத் அபியான் / Nirmal Bharat Abhiyan

(b) தேசிய ஊரக சுகாதாரத் திட்டம்/ National Rural Health Mission

(c) சுத்தகரிக்கப்பட்ட தூய்மையான குடிநீர் கிராமங்களுக்கு வழங்கும் திட்டம் / Accelerated Rural water supply programme

(d) பிரதம மந்திரி கிராமோதயா யோஜனா / Pradhan Mantri Gramadoya Yojana

66. ஜனனி சுரக்ஷா யோஜனா என்பது

Janani Suraksha Yojana is a

(a) மகப்பேறு பாதுகாப்புத் திட்டம் / Maternity protection sheme

(b) ஏழைகளுக்கு இலவச உணவு / Free food for poor

(c) வேலைவாய்ப்புத் திட்டம் / Employment opportunity sheme

(d) இலவச எரிவாயுத் திட்டம் / Free gas sheme

67. ——- குழு இந்தியாவில் யை முன்மொழிந்தது

——– committee proposed GST in India

(a) ரங்கராஜன் குழு / Rangarajan Committee

(b) கெல்கர் பணிக் குழு / Kelkar Task force Committee

(c) நரசிமன் குழு / Narshiman Committee

(d) அர்ஜீன்-சென் குப்தா குழு / Arjun-Sen Gupta Committee

68. கீழ்க்காண்பனவற்றுள் நபார்டு ன் கீழ் இடம் பெறாத வங்கிகள்?

Which banks do not come under NABARD?

(a) மாநில கூட்டுறவு வங்கிகள் / State cooperative banks

(b) ஊரக வட்டார வங்கிகள் / Regional Rural Banks

(c) ஏற்றுமதி வளர்ச்சி வங்கிகள் / Export Promotion Banks

(d) மாவட்ட மைய கூட்டுறவு வங்கிகள் / District Central Cooperative Banks

69. சரியாக பொருந்தியுள்ளவற்றைத் தேர்ந்தெடு:

1. நாராயண் – சித்தரஞ்சன் தாஸ்

2. அன் ஹேப்பி இந்தியா – அன்னிபெசன்ட்

3. காமன் வீல் – லாலா லஜபதி ராய்

4. அபியுதயா – பண்டிட் மதன் மோகன் மாளவியா

Choose the ones that are correctly matched:

1. Narayan – Chittaranjan Das

2. Unhappy India – Mrs. Annie Besant

3. Common wheel – Lala Lajpat Rai

4. Abhyudaya – Pt. Madan Mohan Malaviya

(a) 1 மற்றும் 2 சரியானவை / 1 and 2 are correct

(b) 2 மற்றும் 3 சரியானவை / 2 and 3 are correct

(c) 1 மற்றும் 4 சரியானவை / 1 and 4 are correct

(d) 2 மற்றும் 4 சரியானவை / 2 and 4 are correct

70. சவுரி சவுரா நிகழ்ந்த தற்போதைய இந்திய மாநிலம் எது?

Chauri Chaura incident took place in the present day state of

(a) ஓரிசா / Orissa

(b) உத்திரப்பிரதேசம் / Uttar Pradesh

(c) குஜராத் / Gujarat

(d) பீகார் / Bihar

71. தமிழ்நாட்டில் 1948 ஆம் ஆண்டு ஜமீன்தார் முறையை ஒழிக்க பரிந்துரை செய்த குழுவின் பெயரைக் குறிப்பிடுக:

Name the committee that recommended the abolition of Zamindari system in 1948 in Tamil Nadu?

(a) ஜே.சி.குமரப்பா குழு / J.C.Kumarappa Committee

(b) பிரகாசம் குழு / Prakasam Committee

(c) சர்காரியா குழு / Sarkaria Commission

(d) வி.ஆர்.கிருஷ்ண அய்யர் குழு / V.R.Krishna Iyer Committee

72. 1928ல் இந்திய சுதந்திர கூட்டமைப்பை (லீக்) நிறுவியவர் யார்?

The Indian Independence league in 1928 was founded by

(a) சுபாஸ் சந்திரபோசுடன் சேர்ந்து ஜவஹர்லால் நேரு (மற்றும்) சீனிவாசன் ஐயங்கார் / Subhas Chandra Bose along with Jawaharlal Nehru and Srinivasan Iyengar

(b) சுபாஸ் சந்திரபோசுடன் சேர்ந்து சி.ஆர்.ரேய் (மற்றும் சர்தார் பட்டேல் / Subhas Chandra Bose along with C.R.Ray and Sardar Patel

(c) சுபாஸ் சந்திரபோசுடன் சேர்ந்து ஜவஹர்லால் நேரு (மற்றும்) வ.உ.சிதம்பரனார் / Subhas Chandra Bose along with Jawaharlal Nehru and V.O.Chidambaranar

(d) சுபாஸ் சந்திரபோசுடன் சேர்ந்து ஜவஹர்லால் நேரு (மற்றும்) சுப்ரமணிய ஐயர் / Subhas Chandra Bose along with Jawaharlal Nehru and Subramania Iyer

73. பிரிட்டன் மக்கள் அவையின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியர் யார்?

Who was elected as the first Indian Member to the British House of commons?

(a) ஜவஹர்லால் நேரு / Jawaharlal Nehru

(b) மதன் மோகன் மாளவியா / Madan Mohan Malawiya

(c) தாமோதர் சவார்க்கர் / Damodar Savaarkar

(d) தாதாபாய் நௌரோஜி / Dadabhai Naoroji

74. கீழ்கண்டவற்றுள் தவறான கூற்று எது?

Which one of the following is not correctly matched?

(a) வேத காலத்திற்கு திரும்புங்கள் – தயானந்த சரஸ்வதி / “Go back to the Vedas” – Dayananda Saraswathi

(b) தீண்டாமை ஒரு பாவச் செயல் – காந்திஜி / “Untouchability is a crime” – Gandhiji

(c) டெல்லி சலோ – பகத் சிங் / “Delhi chalo” – Bhagath Singh

(d) நீண்ட காலத்திற்கு முன்பே நாங்கள் விதியுடனான ஒப்பந்தம் செய்தோம் – ஜவஹர்லால் நேரு / Long years ago we have made tryst with destiny – Jawaharlal Nehru

75. கீழே கொடுக்கப்பட்டுள்ள நிகழ்ச்சிகளைக் கால வரிசைப்படுத்துக?

i. தண்டியாத்திரை

ii. சம்பாரன் சத்தியாகிரகம்

iii. கதர் இயக்கம்

iv. கிலாபத் இயக்கம்

Which of the following is the correct chronological sequence of the events>

i. Dandi March

ii. Champaran Satyagrah

iii. Ghadar Movement

iv. Khilafat Movement

(a) i , ii, iii, iv

(b) i, iii, iv, ii

(c) iii, i, iv, ii

(d) iii, ii, iv, i

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!