General StudiesTnpsc

Tnpsc Model Question Paper 41 – General Studies in Tamil & English

1. எந்த கால கட்டத்திற்கான பரிந்துரைகளை 14வது நிதிக்குழு முன்வைத்தது?

What is the period for the 14th Finance Commission has made its recommendations?

(a) 2013-2018

(b) 2015-2020

(c) 2014-2019

(d) 2012-2017

2. பின்வரும் திட்டங்களில் எது 0-6 வயது குழந்தைகளின் ஊட்டசத்து மற்றும் சுகாதார நிலையை மேம்படுத்துவது தொடர்பானது?

In the below schemes, which is related to improve the nutritional and health status of the children in the age group of 0-6 years

(a) ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் / Integrated Child Development Scheme

(b) தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் / National Rural Employment Programme

(c) ஊட்டச்சத்து வழங்கும் திட்டம் / Nutrition Programme

(d) மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டம் / Mahatma Gandhi Rural Employment Guarantee Scheme

3. கிராம புற உள்கட்டமைப்பு முன்னேற்றம் நிதி —— கீழ் உருவாக்கப்பட்டது

The Rural Infrastructure Development Fund (RIDF) was setup under

(a) இந்திய ரிசர்வ் வங்கி / RBI

(b) நாபார்டு / NABARD

(c) சிட்பி / SIDBI

(d) ஐடிபிஐ / IDBI

4. பணவியல் கொள்கையின் முக்கிய குறிக்கோள்கள்

1. பரிவர்த்தனை விகிதத்தில் நிலைத் தன்மை

2. பொருளாதார வளர்ச்சி

3. செலுத்து சமநிலையில் சமனற்ற நிலையை பேணுதல்

4. பணத்தின் நடுநிலைத் தன்மை

மேற்கண்டவற்றில் எது சரியான விடை?

The main objectives of monetary policy are

(1) Exchange rate stability (2) Economic growth

(3) Disequilibrium in the balance of payments (4) Neutrality of money

Which of the above is correct statement?

(a) 1 மற்றும் 2/ 1 and 2

(b) 2 மற்றும் 3/ 2 and 3

(c) 1, 2 மற்றும் 4/ 1, 2 and 4

(d) 3 மற்றும் 4 / 3 and 4

5. மஹலனோபிஸ் நான்கு துறை மாதிரி பின்வரும் எந்த ஐந்தாண்டு திட்டத்தில் பயன்படுத்தப்பட்டது?

Mahalanobis four sector model was applied for which of the following Five Year Plan?

(a) முதலாவது / First

(b) இரண்டாவது / Second

(c) மூன்றாவது / Third

(d) நான்காவது / Fourth

6. “கரிபி கட்டாகோ, (வறுமை ஒழிப்பு) மற்றும் “சமூக நீதியுடன் வளர்ச்சி” என்பது இந்தியாவின் எந்த ஐந்தாண்டுத் திட்டத்துடன் தொடர்புடையது?

Garibi Hatao and ‘growth with social Justice’ related to which five year Plan in India?

(a) ஐந்தாவது ஐந்தாண்டுத் திட்டம் / Fifth Five Year Plan

(b) நான்காவது ஐந்தாண்டுத் திட்டம் / Fourth Five Year Plan

(c) மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டம் / Third Five Year Plan

(d) இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டம் / Second Five Year

7. தகவல் தொழில்நுட்ப துறையின் முக்கிய சிக்கல்கள் பின்வருவனவற்றைக் கொண்டுள்ளது

1. உள்கட்டமைப்பு மற்றும் சேவைகள்

2. மின்னணு நிர்வாகம்

3. கல்வி

4. தகவல் தொழில் நுட்பத்திற்கான விழிப்புணர்வு வெகுஜன பிரச்சாரம்

Major issues in Information Technology Sector consists of the followings

(i) Infrastructure and services (ii) Electronic governance

(iii) Education (iv) Mass campaign for IT awareness

(a) 1 மற்றும் 2 மட்டும் / i and ii only

(b) 1 மற்றும் 4 மட்டும் / i and iv only

(c) 1, 2 மற்றும் 3 மட்டும் / i, ii and iii only

(d) 1, 2, 3 மற்றும் 4 / i, ii, iii and iv

8. கீழ்கண்ட கூற்றுகளில் சரியான கூற்றுஎது?

1. ஹீமாயுன் நாமா வை தொகுத்தவர் குல்பதன் பேகம்

2. பதுனி பகவத புராணத்தை பாரசீக மொழியில் மொழி பெயர்த்தார்

3. தொடர்மால் பகவத புராணத்தை பாரசீக மொழியில் மொழி பெயர்த்தார்

4. ஹஜி இப்ராகிம் சர் இந்தி அதர்வ வேதத்தை மொழிபெயர்த்தார்

Which one of the statement is correct?

(i) Humayun Nama compiled by Guldaban Begum

(ii) Baduni translated the Bagavatha purana into Persian

(iii) Todarmal translated the Bagavatha purana into Persian

(iv) Haji Ibrahim Sir hindi translated Atharvaveda

(a) 1, 2, 3 சரியானது 4 தவறானது / i, ii, iii are correct iv only incorrect

(b) 1, 3, 4 சரியானது 2 மட்டும் தவறானது / i, iii, iv are correct ii only incorrect

(c) 1, 2, 4 சரியானது 3 மட்டும் தவறானது / i, ii, iv are correct ii only incorrect

(d) அனைத்தும் சரியானது / i, ii, iv are correct iii only incorrect

9. கூற்று (A): சுல்தான் பெரோஷா துக்ளக் “ஜிஷியா“ வரியை விதிக்கவில்லை

காரணம் (R): அவரது புகழ்பெற்ற அமைச்சர் கான்-ஈ-ஜகான் மக்பூல் மதம் மாறிய ஒரு இந்து ஆவார்

Assertion (A): Firoz Shah Tughlaq did not levy Jizya tax.

Reason (R): His influential Minister Khan-i-Jahan Maqbul was a converted Hindu

(a) (A) மற்றும் (R) சரியானது மேலும் (R)ஆனது (A)க்கான சரியான விளக்கமாகும் / Both (A) and (R)are true, and (R) is the correct explanation of (A)

(b) (A) மற்றும் (R) சரியானது மேலும் (R) ஆனது (A)க்கான சரியான விளக்கமல்ல / Both (A) and (R) are true but (R) is not a correct explanation of (A)

(c) (A) சரியானஆனால் (R) தவறானது / (A) is true but (R) is false

(d) (A) தவறானது ஆனால் (R) சரி / (A) is false but (R) is true

10. பின்வருவனவற்றுள் தவறானபொருத்தம் எது?

Which one of the following is incorrectly paired?

கிராமியநாட்டியம் / Folk dance மாநிலம் / State

(a) கரமா / Karama – பீகார் /Bihar

(b) காதி / Kathi – வங்காளம் / Bengal

(c) மாயசவாரி / Maya shavari – ஒரிசா / Orissa

(d) நாதாரஷ் / Natha Ras – அஸ்ஸாம் / Assam

11. நாட்டுப்புற நாடகங்களை உரிய மாநிலங்களோடு பொருத்துக

அ. கதகளி 1. வங்காளம்

ஆ. யாத்ரா 2. மகாராஷ்டிரம்

இ. அங்கீயநாட் 3. கேரளா

ஈ. தமாஸா 4. அஸ்ஸாம்

Match correctly the Folk dramas with their corresponding states.

(a) Kathakali 1. Bengal

(b) Yatra 2. Maharashtra

(c) Ainkiya Nat 3. Kerala

(d) Tamasha 4. Assam

(a) (b) (c) (d)

(a) 1 2 3 4

(b) 1 2 4 3

(c) 2 4 1 3

(d) 2 4 3 1

12. முகலாயர் ஆட்சியில் அமைதியைப் பேணுவதில் சுபேதாருக்குஉதவியாளராக ———- இருப்பர்

During Mughal rule ———– were the assistants of Subhadar in the maintenance of peace

(a) அமீன் / Amin

(b) திவான் / Diwan

(c) கொத்வால் / Kotwal

(d) ஃபவுஜ்தார் / Faujdar

13. பின்வரும் பட்டியலில் குப்த மன்னர்களின் சிலரது பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன அவர்களின் ஆட்சிக்கால அடிப்படையில் சரியான வரிசையைக் காண்க.

1. குமாரகுப்தர்

2. சமுத்திரகுப்தர்

3. கடோகச்சகுப்தர்

4. ஸ்கந்தகுப்தர்

Select the order which gives the correct chronological order of the Gupta Emperors.

1. Kumaragupta 2. Samudragupta 3. Ghatotkachagupta 4. Skandagupta

(a) 3, 2, 1, 4

(b) 1, 3, 2, 4

(c) 1, 2, 3, 4

(d) 4, 3, 2, 1

14. இந்தியா “இனவியல் பூங்கா” என்ற பெயரினை ஏன் பெற்றுள்ளது?

India earned the title called ‘Ethnological Museum’ because

(a) பன்முக இனச்சமூகம் / Multi-racial society

(b) பன்முக மொழிச்சமூகம் / Multi-linguistic society

(c) பன்முக மதச்சமூகம் / Multi-religious society

(d) பன்முக கலாச்சாரச்சமூகம் / Multi-cultural society

15. அலாவுதீன் ஹசன் ஷாவுக்கு பின் பதவிக்கு வந்தவர்

Ala-ud-din Hasan Shah was succeeded by

(a) முதலாம் முகமது ஷா / Muhammad Shah I

(b) அகமது ஷா / Ahmad Shah

(c) ஃபிரோஸ் ஷா / Firoz Shah

(d) ஜாபர் கான் இரண்டாம் அலாவுதின் / Jafar Khan Ala-us-din II

16. “கூட்டுப் பொறுப்புடைமை” பற்றிய கீழ்வரும் கூற்றுக்களைக் கருதுக, அவற்றிலிருந்து சரியான விருப்ப விடையைத் தெரிவுசெய்க:

துணிபு (A): பாராளுமன்றக் குடியாட்சியின் கூட்டுப் பொறுப்பானது, எவ்வொரு தனிமனிதனையும் பொறுப்பாக்காது அமைச்சரவையில் உள்ள அனைவரையும் பொறுப்பாக்குகிறது

காரணம் (R): “கூட்டுப் பொறுப்பு” என்பது அமைச்சர்களிடையே ஒருமித்த கருத்தை உருவாக்கும் அமைப்பைக் குறிக்கிறது

Consider the statement about collective responsibility, choose the correct answer from the options given below:

Assertion (A): Collective responsibility, in “Parliamentary Democracy” is to make the whole body and persons holding Ministerial office collectively, rather than individually.

Reason (R): Collective responsibility implies consensus building machine among ministers.

(a) (A) என்பது உண்மை (R) என்பது தவறு / (A) is true (R) is wrong

(b) (A) என்பது தவறு என்பது சரி / (A) is false (R) is true

(c) (A) மற்றும் (R) Vஎன்ற இரண்டும் சரி, (R) என்பது (A)க்குச் சரியான விளக்கமாகும் / (A) and (R) are true, (R) is the correct explanation of (A)

(d) (A) மற்றும் (R) என்ற இரண்டும் உண்மை, (A)க்கு (R) சரியான விளக்கமாகாது / Both (A) and (R) are true, but (R) is not correct explanation of (A)

17. கீழ்கண்டவற்றைப் பொருத்துக:

வழக்காற்றுசட்டம் பொருள்

அ. பந்துகா முக்தி மோர்சா எதிர் 1. சட்டஉறுப்பு 32 மற்றும் சட்டஉறுப்பு

இந்திய ஒன்றியம் 226-க்கு இடையேயுள்ள வேறுபாட்டை விளக்குதல்

ஆ. சேலம் வழக்கறிஞர்கள் சங்கம் எதிர் 2.சுற்றுச்சூழல் வழிகாட்டுதல்

இந்திய ஒன்றியம் உத்தரவு வழங்கப்பட்டது

இ. M.C.மேத்தா எதிர் இந்திய ஒன்றியம் 3. வழக்கை விரைந்து நடத்துவது சிவில் வழக்கிற்கும் பொருந்தும்

ஈ. திருமதி.பூனம் எதிர் சுமித் தன்வார் 4.ஆரோக்கியமான சுற்றுச்சூழல் வாழ்வுரிமையுடன் இணைக்கப்பட்டது

Match the following:

Case Law Subject

(a) Bandhua Mukti Morcha Vs Union of India – 1. The difference between Article 32 and Article 226 Explained

(b) Salem Advocate Bar Association Vs Union of India – 2. Environmental Direction issued

(c) M.C.Metha Vs Union of India – 3. Speedy Trial applies to civil matters

(d) Smt. Poonam Vs Sumit Tanwar – 4. Healthy environment included in Right to Life

(a) (b) (c) (d)

(a) 3 2 1 4

(b) 2 1 3 4

(c) 4 3 2 1

(d) 1 2 3 4

18. குழுக்கள் அமைக்கப்பட்டஆண்டோடுபொருத்துக:

அ. பல்வந்த்ராய் மேத்தா குழு 1. 1977

ஆ. அசோக் மேத்தா குழு 2. 1985

இ. L.M. சிங்வி குழு 3. 1986

ஈ. G.V.K. ராவ் குழு 4. 1957

Match correctly the Committees with the year of their set up

(a) Balwantrai Mehta Committee 1. 1977

(b) Ashok Mehta Committee 2. 1985

(c) LM Singvi Committee 3. 1986

(d) GGVK Rao Committee 4. 1957

(a) (b) (c) (d)

(a) 4 1 3 2

(b) 2 3 1 4

(c) 4 1 2 3

(d) 2 1 3 4

19. கீழ்கண்ட சொற்றொடர்களில் உயிர் வாயு ஆலையுடன் தொடர்புடையது

1. கழிவுக் குழம்பை கையாளுவது கடினம்

2. வாயு உருவாக்கும் மெதனோஜெனிக் பாக்டிரியா தீவிரமானது

3. வாயு சேகரிப்பு எளிதானது

4. pH முக்கிய பங்கு வகிக்கிறது

Which of the following statements are true about biogas plant?

1. Difficult to handle the effluent slurry

2. Gas forming methanogenic bacterias are sensitive

3. Easy to handle the gas collection

4. pH plays major role

(a) 1, 3, 4

(b) 1, 2, 4

(c) 2, 3, 4

(d) 1, 2, 3

20. மக்களவையைப் பற்றிக் கீழ்வருவனவற்றுள் எது/எவை சரியானது/சரியானவை?

1. மக்களவை பொதுவாக இந்தியப் பாராளுமன்றத்தின் கீழவை என்று அழைக்கப்படுகிறது

2. மக்களவை உறுப்பினர்கள் நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்

3. 44வது சட்டதிருத்தத்தால் மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 545 ஆக உயர்த்தியது

Which of the following is true about the Lok Sabha?

(i) Lok Sabha is commonly known as Lower House of the Indian Parliament.

(ii) Members of Lok Sabha are directly elected by the people

(iii) 44th Amendment Act increased the number of Lok Sabha members to 545

(a) 1 மட்டும் / i only

(b) 2 மட்டும் / ii only

(c) 3 மட்டும்/ iii only

(d) 1 மற்றும் 2 ஆகியவை / i and ii only

21. கீழ்வருவனவற்றுள் எது/எவை கேபினட்டைக் குறித்து உண்மையானது/ உண்மையானவை?

1. சட்டமன்றத்திற்கு நிர்வாகிகளின் பொறுப்பினைக் கேபினட் அமைப்பு வலியுறுத்துகிறது

2. கேபினட் என்பது பிரதம மந்திரி மற்றும் முக்கியமான துறைகளைக் கொண்ட மூத்த அமைச்சர்களைக் கொண்டதாகும்.

3. பிரதம மந்திரி கேபினட்டின் தலைவர் ஆவார்

Which of the following statements are true about the Cabinet?

(i) Cabinet system enforces responsibility of the executive to the Legislation

(ii) Cabinet consists of the Prime Minister and his/her senior ministers with important portfolio

(iii) The head of the Cabinet is the Prime Minister

(a) 1 மட்டும் / i only

(b) 1 மற்றும் 2 ஆகியன மட்டும் / i and ii only

(c) 1 மற்றும் 3 ஆகியனமட்டும் / i and iii only

(d) 1, 2 மற்றும் 3 ஆகியவை / i, ii and iii

22. பின்வருவனவற்றுள் எவை தவறாகப் பொருத்தப்பட்டுள்ளன?

1. அசோக் மேத்தா குழு – சமூகத் தணிக்கை

2. பல்வந்த்ராய் மேத்தா குழு – 3 அடுக்குபஞ்சாயத்து ராஜ் நிறுவனங்கள்

3. எல்.எம்.சிங்வி குழு – மாவட்ட ஊராட்சி மன்றத் தலைவராக மாவட்ட ஆட்சியர் இருக்கவேண்டும் என்று பரிந்துரை செய்தது

4. ஜி.வி.கே.ராவ் குழு – மாவட்ட மேம்பாட்டு ஆணையர் என்ற பதவியை நீக்குதல்

Which of the following are incorrectly paired?

1. Ashok Mehta Committee – Social Audit

2. Balwant Rai Mehta Committee – 3 tier system of PRI

3. L.M. Singhvi Committee – District Collector to be the Chairman of Zila Parishad

4. G.V.K. Rao Committee – Abolition of the post of District Development Commissioner

(a) 1 மற்றும் 3 ஆகியன மட்டும் / 1 and 3 only

(b) 1 மற்றும் 2 ஆகியனமட்டும் / 1 and 2 only

(c) 2 மற்றும் 3 ஆகியன மட்டும் / 2 and 3 only

(d) 3 மற்றும் 4 ஆகியன மட்டும் / 3 and 4 only

23. இந்தியாவில் ‘ரலேகான் சித்தி” என்ற இடம் இந்தக் கொடுமையை ஒழிப்பதற்காகப் புகழ்பெற்றது

“Ralegan Siddhi” a famous place in India is well known for elimination of the evil of

(a) கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு / Poverty in Rural Area

(b) நிர்வாகத்தில் இருக்கும் ஊழல் / Corruption in Administration

(c) அரசியல் கிரிமினல்கள் மயமாவது / Criminalisation of Politics

(d) மனித உரிமை மீறல்கள் / Human Rights violations

24. இந்தியாவில், 59 சதவீத நிலப்பரப்பு நில அதிர்வு அபாயத்திற்கு ஆளாகிறது; மொத்தப் புவியியல் பகுதியில் 5 சதவிகிதம் வெள்ளத்தால் பாதிக்கப்படும்; மொத்த நிலப்பரப்பில் 8 சதவிகிதம் சூறாவளிக்கு ஆளாகிறது. மொத்தச் சாகுபடிபரப்பில் எத்தனை சதவீதம் வறட்சியால் பாதிக்கப்படும்?

In India, 59 per cent of the land mass is susceptible to seismic hazard; 5 percent of the total geographic area is prone to floods; 8 percent of the total landmass is prone to cyclones; what percent of the total cultivable area is vulnerable to drought?

(a) 72%

(b) 68%

(c) 70%

(d) 65%

25. ஆப்பரேஷன் ஃப்ளட் எனும் வார்த்தை, இதனுடன் தொடர்புடையது

The term ‘Operation Flood’ is related to

(a) பசுமைபுரட்சி / Green Revolution

(b) வெள்ளைபுரட்சி / White Revolution

(c) நீலபுரட்சி / Blue Revolution

(d) பாலிவீடுபுரட்சி / Poly House Revolution

26. வடமேற்று இந்தியாவின் ரெகுர் பகுதியில் பருத்தி சாகுபடி ஆதிக்கம் செலுத்துகிறது. நர்மதா, தாபி, பூர்ணா, சபர்மதி ஆற்றுப் பள்ளத்தாக்குகள் பருத்தி சாகுபடியின் மையப் பகுதிகளாகும். இது பெரும்பாலும் ஏதேனும் ஒருஉணவுப் பயிருக்கு இணையாகச் சாகுபடியில் முன்னுரிமையைப் பெறுகிறது. அவை முறையே ஜோவர், பஜ்ரா மற்றும் எண்ணெய் வித்துக்கள்.

பின்வருவனவற்றில் எது சிறப்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளது?

Cotton cultivation predominated in Regur Region of North West India. The Narmada, Tapi, Purna and Sabarmati River Valley region are basically heartland of cotton cultivation. It always associated with one food grain cultivation refereably jowar, Bajra and oil seeds. Which one of the following is best implied in the passage?

(a) கருப்பு மண் பருத்தி விளைச்சலுக்கு ஏற்றது / Black Soil is favour for cotton cultivation

(b) பருத்தி ஒரு வாணிபப் பயிர் / Cotton is the commercial crop

(c) பருத்தி பெரும்பாலும் வடமேற்கு இந்தியாவில் பயிரிடப்படுகிறது / Cotton cultivation mostly in North West India

(d) பருத்தி பெரும்பாலும் ஏதேனும் ஒரு உணவுப் பயிரிடுதலுக்கு இணையானது / Cotton always associated with food grain

27. பீகாரின் துயரம் என்றுஅழைக்கப்படும் ஆறு எது?

Which river is called the sorrow of Bihar?

(a) கோசி / Kosi

(b) சாராவதி / Sharavati

(c) நர்மதா / Narmada

(d) தபதி / Tapti

28. தெளிவான வானம், இனிமையான வானிலை, குறைந்த வெப்பம் மற்றும் ஈரப்பதநிலை, அதிக வெப்பநிலை வீச்சு, குளிர்ந்த மற்றும் மெதுவான வடக்கு காற்றுகள், இவையெல்லாம் ——— பருவத்தின் முக்கியமான குணங்களாகும்.

Clear sky, pleasant weather, low temperature and humidity, high range of temperature, cool and slow northern winds are the chief characteristics of ———– season.

(a) தென் மேற்குபருவமழை / South West Monsoon

(b) வடகிழக்குபருவமழை / North East monsoon

(c) குளிர்காலம் / Winter Monsoon

(d) வேனிற்காலம்/ Summer season

29.வாக்களிக்கும் வயதை 21 லிருந்து 18 ஆககுறைத்த அரசிலமைப்புத் திருத்தச் சட்டத்தை அடையாளம் காண்க:

Identify the Constitutional Amendment Act that reduced the age of voting from 21 years to 18 years?

(a) 60வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் / 60th Amendment Act

(b) 61வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் / 61st Amendment Act

(c) 62வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் / 62nd Amendment Act

(d) 63வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் / 63rd Amendment Act

30. “சிட்டுக் குருவியின் வீழ்ச்சி” என்ற சுயசரிதையை எழுதியவர்

Autobiography of “Fall of Sparrow” was written by

(a) வினிதா மேனன் / Vineetha Menon

(b) பாலசந்திரன் / Balachandran

(c) லஷ்மிகாந்த் / Laxmikanth

(d) சலீம் அலி / Salim Ali

31. தேசிய ஊக்க மருந்து (NADA) எதிர்ப்பு நிறுவனம் நிறுவப்பட்ட ஆண்டு

National Anti Doping Agency (NADA) was setup in the year

(a) 2007

(b) 2009

(c) 2011

(d) 2013

32. கோவா தனது ‘60-வது விடுதலை நாளை’ எப்போது கொண்டாடியது?

Goa celebrated its 60th Liberation Day on

(a) டிசம்பர் 2018/ December 2018

(b) டிசம்பர் 2019/ December 2019

(c) டிசம்பர் 2020/ December 2020

(d) டிசம்பர் 2022/ December 2022

33. ———- பகுதி பிப்ரவரி 1987ஆம் ஆண்டு இந்திய யூனியனின் 23-வது மாநிலமாக்கப்பட்டது

———- became the 23rd state of the Indian Union in February 1987.

(a) மிசோரம் / Mizoram

(b) ஒடிசா/ Odisha

(c) பஞ்சாப் / Punjab

(d) உத்ராகான்ட் / Uttarkhand

34. கரோனா வைரஸ் என்ற சொல் முதன் முதலில் “நேச்சர்” அறிவியல் ஆய்விதழில் வெளியிட்ட ஆண்டு எது?

In which year was the word “Corona virus” used in the scientific journal “Nature”?

(a) 1978

(b) 1986

(c) 1968

(d) 1966

35. அண்டார்டிக்காவிற்கான 41வது அறிவியல் சார்ந்த பயணத்தை இந்தியா ———ல் துவக்கியது

India launched its 41st Scientific Expedition to Antarctica in the year

(a) 2019

(b) 2020

(c) 2021

(d) 2022

36. சூரியனில் எந்த வாயு அதிகமாக உள்ளது?

Which gas is maximum available in Sun?

(a) ஹைட்ரஜன் / Hydrogen

(b) ஆக்சிஜன் / Oxygen

(c) ஹீலியம் / Helium

(d) நைட்ரஜன் / Nitrogen

37. மியாசிஸ் பகுப்பில் மறுசேர்க்கை நடைபெறும் நிலை

In meiosis, recombination occurs in

(a) மையநிலை I / Metaphase I

(b) முதல் நிலை I / Prophase I

(c) மையநிலை II / Metaphase II

(d) முதல் நிலை II / Prophase II

38. விஞ்ஞான அணுகு முறையுடன் தொடர்புபடுத்தப்படாத பண்பை அடையாளம் காண்க

Identify the characteristic which is not associated with scientific attitude?

(a) விமர்சன உற்றுநோக்கல் / Critical observation

(b) திறந்த மனப்பான்மை / Open mindedness

(c) மூட நம்பிக்கையிலிருந்து விடுபட்டிருத்தல் / Free from superstition

(d) பக்கச்சார்பான / Biased

39. எந்த நிலையில் மைட்டோகாண்டிரியாவின் DNA இரட்டிக்கின்றது

Duplication of mitochondrial DNA takes place during

(a) G1 நிலை / G1 – phase

(b) S-நிலை / S– phase

(c) G2 – நிலை / G2 – phase

(d) G0 – நிலை / G0 – phase

40. —- என்ற குருதி பிரிவினைச் சார்ந்தவர் உலக குருதி கொடையாளர் என்று அழைக்கப்படுவர்

Individuals with ———- blood group is called universal Donor.

(a) AB

(b) O

(c) A

(d) B

41. தமிழ்நாட்டில் தேசிய தொல்லுயிர்படிம மர பூங்கா இங்கு அமைந்துள்ளது

National Fossil Wood Park in Tamil Nadu is located in

(a) விழுப்புரம் / Villupuram

(b) மதுரை / Madurai

(c) திருநெல்வேலி / Tirunelveli

(d) தூத்துக்குடி / Tuticorin

42. தானியப் பயிர்களில் வைக்கோல் இழையினை அதிகப்படுத்த தேவைப்படுத் தனிமம் ——– ஆகும்

The element needed to increase the straw of cereal crops is

(a) நைட்ரஜன் / Nitrogen

(b) பாஸ்பரஸ் / Phosphorous

(c) கால்சியம் / Calcium

(d) இரும்பு/ Iron

43. கீழ்க்கண்டவற்றுள், வண்ணத் தொலைக்காட்சி அமைப்பின், முதன்மை நிறங்கள் யாவை?

Which of the following are the primary colours in a Colour TV system?

(a) நீலம், பச்சை, மஞ்சள் / Blue, Green, Yellow

(b) மஞ்சள், பச்சை, ஊதா / Yellow, Green, Violet

(c) சிவப்பு, மஞ்சள், ஊதா / Red, Yellow, Violet

(d) சிவப்பு, பச்சை, மஞ்சள் / Red, Green, Yellow

44. கூற்று (A): மெக்காலே தனது குறிப்புகளில் ஆங்கில வழியில் மேற்கத்தியக் கல்வி கற்பிக்கப்படுவதற்கு ஆதரவாக வாதிட்டார்

காரணம் (R): மெக்காலே, இந்தியர்களுக்கு சமஸ்கிருதத்திலும், பாரதசீக மொழியிலும் கல்வி புகட்ட கூடாது என்ற எண்ணம் கொண்டிருந்தார்

Assertion (A): Macaulay argued for Western education in the English language

Reason (R): Macaulay intension was to educate the people of India not in Sanskrit or Persian language.

(a) கூற்று சரி; ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை / (A) is correct but (R) does not explain (A)

(b) கூற்று சரி; காரணம் தவறு / (A) is correct and (R) is incorrect

(c) கூற்று சரி; காரணம் கூற்றை சரியாக விளக்குகிறது/ (A) is correct and (R) is a correct explanation of (A)

(d) கூற்று காரணம் இரண்டும் தவறு / Both (A) and (R) are wrong

45. தென் ஆப்பிரிக்காவில் காந்தியின் சட்டமறுப்பு இயக்கத்துக்கு யாருடைய படைப்பு உத்வேகத்தை கொடுத்தது?

Whose writings inspired Gandhi, for the Civil Disobedience Movement in South Africa

(a) ஹென்றி டேவிட் தாரோ/ Henry David Thoreau

(b) டேவிட் ரிக்கார்டோ / David Ricordo

(c) லியோ டால்ஸ்டாய் / Leo Tolstoy

(d) பெர்ட்ராண்ட் ரஸ்ஸல் / Bertrand Russell

46. ஜெர்மானிய நாட்டு U-வகை நீர்மூழ்கி கப்பலில் தெற்கு மடகாஸ்கருக்குச் சென்றடைந்த இரகசிய கடற்பயணத்தில் சுபாஸ் சந்திர போஸ் உடன் பயணித்தவர்

—————— accompanied Subash Chandra Bose during his secret journey in a German U-boat submarine and reached South of Madagascar.

(a) மௌலவி ஜியாயுத்தீன் / Maulvi Ziauddin (b) பகத் ராம் / Bhagat Ram

(c) மோகன் சிங் / Mohan Singh

(d) ஆபித் ஹீசைன் / Abid Hussain

47. சமூகத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்திய வரலாற்று நிகழ்வான “காந்தி ஜின்னா பேச்சுவார்த்தை” பற்றிய காந்தியின் நேர்காணலை பின்வரும் எந்த பத்திரிக்கை வெளியிட்டது?

Which among the following journal published the interview of Gandhiji on the popular historical event “Gandhi Jinnah Talks” that made a serious impact on society?

(a) நியூஸ் குரோனிக்கல், லண்டன் ஜீலை 4, 1944 / News Chronicle of London on July 4, 1944

(b) இந்தியன் மிர்ரர், ஜீன் 30, 1944 / Indian Mirror on June 30, 1944

(c) பெங்கால் கெசட், ஜீலை 14, 1943/ Bengal Gazette on July 14, 1943

(d) காமன்வீல், ஜீன் 12, 1942/ Commonweal on June 12, 1942

48. “முதலில் நாம் இந்தியர்கள், அதற்குப் பிறகு தான் ஹிந்துக்கள் அல்லது அதற்குப் பிறகுதான் முகமதியர்கள் என்று ஒரு சிலர் கூறுவது என்னால் ஏற்க முடியவில்லை. எனக்கு அதில் திருப்தியுமில்லை. எல்லோருமே முதலில் இந்தியர்கள் மற்றும் இறுதிவரை இந்தியர்களே, இந்தியர்களைத் தவிர வேறொன்றுமில்லை என்றிருக்க நான் விரும்புகிறேன்” என்று கூறியவர் யார்?

“I do not like what some people say, that we are Indians first and Hindus afterwards or Muslims afterwards. I am not satisfied with that… I want all people to be Indians first, Indians last and nothing else but Indians” Who said this?

(a) மகாத்மா காந்தி / Mahatma Gandhi

(b) மௌலானா அபுல் கலாம் ஆசாத் / Maulana Abul Kalam Azad

(c) பி.ஆர்.அம்பேத்கர் / B.R.Ambedkar

(d) ஜவஹர்லால் நேரு / Jawaharlal Nehru

49. கீழ்வரும் எந்த நாட்டு அரசியல் அமைப்பிலிருந்து இந்திய அரசியல் அமைப்பில் உள்ள “அரசு நெறிமுறை கோட்பாடு” என்ற ஆதாரம் எடுக்கப்பட்டது

From which of the following constitution, the source of “Directive principles of state policy” of constitution of India, was derived

(a) அயர்லாந்து / Ireland

(b) ஐஸ்லாந்து / Iceland

(c) நெதர்லாந்து / Netherland

(d) போலந்து / Poland

50. 1.பிப்ரவரி 1937 இல் பொதுத் தேர்தல் நடந்தபோது, ஜவஹர்லால் நேரு நாடு முழுவதும் ஒரு சூறாவளிச் சுற்றுப்பயணம் செய்து காங்கிரஸின் செய்தியை எங்கும் கொண்டு சென்றார்.

2. இருப்பினும் தேர்தலில் காங்கிரஸின் வெற்றிக்கு காந்திஜியின் முயற்சியே காரணம்

மேலே காணப்படும் கூற்றுகளில் சரியானது/வை எது/எவை?

(i) When the general elections were held in February 1937, Jawaharlal Nehru made a whirlwind tour of the country and carried everywhere the message of the Congress.

(ii) The success of the Congress in the elections was very much due to the efforts of Gandhiji.

(a) 1 மட்டும் / i only

(b) 2 மட்டும் / ii only

(c) 1 மற்றும் 2 மட்டும் / i and ii only

(d) மேற்கண்ட எவையுமில்லை / None of the above

51. பின்வருவனவற்றுள் தவறாகப் பொருந்தியுள்ளவற்றைத் தேர்ந்தெடு

1 . GSDP – மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி

2. GDP – மொத்த உள்நாட்டு விலை

3. SIPCOT – தமிழ்நாடு மாநில தொழில் வளர்ச்சிக் கழகம்

4. SEZ – சிறப்பு வேலைவாய்ப்பு மண்டலம்

Which of the following is incorrectly paired?

1. GSDP-Gross State Domestic Product

2. GDP-Gross Domestic Price

3. SIPCOT-State Industrial Promotion Corporation of Tamil Nadu

4. SEZ-Special Employment Zone

(a) 1 மற்றும் 3 சரி / 1 and 3 are correct

(b) 2 மற்றும் 4 சரி / 2 and 4 are correct

(c) 2 மற்றும் 3 சரி / 2 and 3 are correct

(d) 3 மற்றும் 4 சரி / 3 and 4 are correct

52. பின்வருவனவற்றைப் பொருத்துக:

அ. திரு.வி.கல்யாணசுந்தரம் 1. தேசியப்பள்ளி

ஆ. ஈ.வெ.ரா.பெரியார் 2. சைவ சித்தாந்தப் பள்ளி

இ. வி.வி.சுப்ரமணிய ஐயர் 3. குடி அரசு

ஈ. சாமி வெங்கடாசலம் 4. நவசக்தி

Match the following:

(a) Thiru. V.Kalyanasundaram 1. National School

(b) EEVR Periyar 2. Saiva Siddhanta School

(c) VVV Subramaniyam Aiyar 3. Kudi Arasu

(d) Sami Venkatachalam 4. Navasakthi

(a) (b) (c) (d)

(a) 4 1 2 3

(b) 1 2 3 4

(c) 3 4 2 1

(d) 4 3 1 2

53. கீழ்க்கண்டவற்றை பொருத்துக:

அ. வ.உ.சிதம்பரம் 1. அழகம்மை ஆசிரிய விருத்தம்

ஆ. பாரதி 2. சங்கொலி

இ. நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் 3. சுதேசி கப்பல் கம்பெனி

ஈ. கவிமணி தேசிக விநாயகம் 4. பால பாரத்

Match the following:

(a) VO Chidambaram 1. Alagammai Asiriya Virutham

(b) Bharathi 2. Sangoli

(c) Namakkal Kavignar Ramalingam 3. Swadeshi Navigation

(d) Kavimani Desiga Vinayaham 4. Bala Bharat

(a) (b) (c) (d)

(a) 4 2 3 1

(b) 3 4 2 1

(c) 3 2 1 4

(d) 2 1 4 3

54. கி.பி.1757 முதல் 1833 வரை இந்தியாவில் எதனை காண முடிந்தது

1. இந்தியாவின் பல்வேறு பிராந்தியங்கள் ஒன்றிணைந்தன

2. சமூக இனங்களின் பழைய/பழமையான மரபுகள் அழிந்து போயின

3. சாதிய முறை தளர்ந்தது

4. கிராமிய பொருளாதாரம் அதன் தற்சார்பு மற்றும் தனித்திருக்கும் தன்மையை இழந்தது

From 1757 to 1833 India witnessed ————-

1. Different regions in India began to draw closer

2. Old hierarchy of Social groups began to disintegrate

3. The caste system tended to relax

4. Village economy lost its character of self-sufficiency and isolation

(a) 1 மட்டும் / 1 only

(b) 1 மற்றும் 3 மட்டும் / 1 and 3 only

(c) 2 மற்றும் 4 மட்டும் / 2 and 4 only

(d) இவை அனைத்தும் / All the above

55. எத்திணைக்குரிய பாடல்கள் புறநானூற்றில் இல்லை?

Which songs of a particular Tinai are not found in Purananooru?

(a) பாடாண் திணை / Padaan Tinai

(b) காஞ்சித்திணை / Kanchi Tinai

(c) வாகைத் திணை / Vaagaith Tinai

(d) உழிஞைத் திணை / Uzhignai Tinai

56. எந்தப் புதைபொருளாராய்ச்சி, தமிழகத்திற்கும் ரோமாபுரிக்கும் இடையிட்ட கடல் வாணிகத்தின் விரிவையும் வளத்தையும் பெரிதும் விளக்கிக் காட்டுகின்றது?

Which archeological excavation illustrates the extent and richness of the maritime trade between Tamil Nadu and Rome?

(a) கீழடி / Keezhadi

(b) அரிக்கமேடு / Arikkamedu

(c) மௌரியக்குடி / Mauriyakudi

(d) செங்கல்பட்டு / Sengalpattu

57. கீழ்கண்டவற்றை பொருத்துக:

அ. நினைவுப்பாதை 1. ஆதவன்

ஆ. காகித மலர்கள் 2. வண்ணநிலவன்

இ. தந்திர பூமி 3. நகுலன்

ஈ. கடல்புரத்தில் 4. இந்திரா பார்த்தசாரதி

Match the following:

(a) Ninaivuppathai 1. Aathavan

(b) Kakitha Malargal 2. Vannanilavan

(c) Thandira Bhoomi 3. Nagulan

(d) Kadalpurathil 4. Indira Parthasarathy

(a) (b) (c) (d)

(a) 2 4 1 3

(b) 1 4 3 2

(c) 3 1 4 2

(d) 2 4 3 1

58. ’குடம்பை தனித்தொழிய புள் பறந்தற்றே’ என்னும் குறளில் வரும் காட்சி புலப்படுத்துவது எது?

What does the following Kural depict? “Kudambai thaniththozhiya Pul paranthatrae”

(a) மகிழ்ச்சி நிலையில்லாதது / Happiness is transient

(b) இளமை நிலையில்லாதது / Youth is transient

(c) செல்வம் நிலையில்லாதது / Wealth is transient

(d) வாழ்க்கை நிலையில்லாதது / Life is transient

59. கீழே கொடுக்கபட்டுள்ளவற்றில் சரியான இணையைத் தேர்வு செய்க

1. அன்பளிப்பு 1. கு.அழகிரிசாமி

2. கடவுளும் கந்தசாமி பிள்ளையும் 2. புதுமைப்பித்தன்

3. யுகசந்தி 3. ஜெயகாந்தன்

4. திருடன் மகன் திருடன் 4. கல்கி

Pick out the correct pair from the following:

1. Anbalippu – Ku. Azhagirisamy

2. Kadavulum Kandasamy Pillaiyum – Pudhumai Pithan

3. Yugasanthi – Jeyakanthan

4. Thirudan Magan Thirudan – Kalki

(a) 1, 3, 4 மட்டும் சரி/ 1, 3, 4 alone is correct

(b) 3, 4 மட்டும் சரி / 3 and 4 alone is correct

(c) எதுவும் சரியில்லை / None of the above is correct

(d) 1, 2, 3, 4 அனைத்தும் சரி / 1, 2, 3, 4 all are correct

60. இராணி வேலுநாச்சியார் திண்டுக்கல் அருகே கோபால நாயக்கரின் பாதுகாப்பில் ——– என்ற இடத்தில் வாழ்ந்து வந்தார்

Rani Velunachiyar lived under the protection of Gopala Nayakkar at ————— near Dindugal.

(a) கன்னிவாடி / Kannivadi

(b) தாண்டிக்குடி /Thandikkudi

(c) விருப்பாட்சி / Virupachi

(d) ஆயக்குடி / Aayakkudi

61. ‘தருமசேனர்’ என்ற பெயருடன் வாழ்ந்து வந்தவர் யார்?

Who lived in the name of “Dharmasenar”?

(a) திருஞானசம்பந்தர்/ Thirugnana Sambanthar

(b) திருநாவுக்கரசர் / Thirunavukkarasar

(c) சுந்தரர் / Sundarar

(d) மாணிக்கவாசகர் / Manickavasagar

62. “குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை” என்ற அடி இடம் பெற்றுள்ள நூல் எது?

From which book is the line “Kutram paarkin Sutram Illai” is taken?

(a) ஆத்திசூடி / Aathi Soodi

(b) திருக்குறள் / Thirukkural

(c) பழமொழி/ Proverb

(d) கொன்றைவேந்தன் /Kondraiventhan

63. கீழே குறிப்பிடப்பட்டவற்றில் அக்பரை பற்றிய தவறான கருத்து எது?

1. அக்பர் அவரது தாயாரால் கவரப்பட்டார்

2. அக்பர் ரூப்மதியை பாஸ்பகதூரிடமிருந்து கவர்ந்தார்

இ. பைராம்கானை அக்பர் கொன்றார்

ஈ. அக்பர் சித்தூரை கொள்யைடிப்பதற்காக படையெடுத்தார்

Which of the following statements is/are not correct about Akbar?

(a) Akbar was influenced by his mother (b) Akbar took Roopmathi from Baz Bahadur

(c) Bairam Khan was killed by Akbar (d) Akbar attacked Chitoor to get the treasure

(a) அ மற்றும் சரி ; இ மற்றும் ஈ தவறு / a nd b are correct; c and d are wrong

(b) ஆ மற்றும் ஈ சரி ; அ மற்றும் இ தவறு / b and d are correct; a and c are wrong

(c) ஆ மற்றும் இ தவறு; அ மற்றும ஈ சரி / b and c are wrong; a and d are correct

(d) அ சரி; ஆ, இ மற்றும் ஈ தவறு / a is correct; b, c and d are wrong

64. யாருடைய ஆட்சிக் காலத்தில் அசுவமேதா வகை தங்க நாணயங்களில் லட்சுமி மற்றும் கங்கையின் உருவங்கள் பொறிக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

Name the King, who introduced the Asvamedha types of Gold Coins bearing the figures of Lakshmi and Ganga.

(a) சமுத்திர குப்தா / Samudra Gupta

(b) சந்திர குப்தா II / Chandra Gupta II

(c) குமார குப்தா / Kumara Gupta

(d) ஸ்கந்த குப்தா / Skanda Gupta

65. கூற்று (A): பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் அணுகுமுறையால் இந்திய சிறுதொழில் அழிந்தது

காரணம் (R): 1833ம் ஆண்டு பிரிட்டிஷ் அரசாங்கம் தடையில்லா வாணிபக் கொள்கையை அறிவித்தது

Assertion (A): The Small Scale Industry of India was ruined due to the attitude of the Britishers

Reason (R): British Government declared the Policy of free trade in the year 1833.

(a) (A) சரி ஆனால் (R) தவறு / (A) is true but (R) is false

(b) (A) மற்றும் (R) ஆகிய இரண்டும் சரி மற்றும் (R) என்பது (A)விற்கு சரியான விளக்கமாகும் / Both (A) and (R) are true; and (R) is the correct explanation of (A)

(c) (A) தவறு ஆனால் (R) சரி / (A) is false, but (R) is true

(d) (A) மற்றும் (R) ஆகிய இரண்டும் சரி. ஆனால் (R) என்பது (A)விற்க சரியான விளக்கமல்ல / Both (A) and (R) are true, but (R) is not the correct explanation of (A)

66. வேலைக்கு உணவுத் திட்டம் மத்திய அரசால் 1972-ல் தொடங்கப்பட்டது இத்திட்டத்தின் வாயிலாக ஆண்டிற்கு கிடைப்பது

I. 10, 000 டன் கோதுமையும்

II. 60, 000 டன் அரிசியும்

III. 10 இலட்சம் விவசாயக் கருவிகளும்

IV. 10 கோடி விளிம்பு நிலை தொழிலாளருக்கு மானியம்

“Work for food” scheme implemented by Central Government in the year 1972. This programme yearly provides

I. 10, 000 tonne Wheat II. 60, 000 tonne Rice

III. 10 lakhs Agricultural instrument IV. Rs. 10 crore subsidy for marginal labour

(a) I, II

(b) II, III

(c) III, IV

(d) IV, I

67. ‘பெண்களுக்கு அதிகாரமளித்தல்’ கொள்கை கீழ்க்கண்டவற்றுள் கவனம் செலுத்துகிறது

1. வறுமை ஒழிப்பு

2. சிறிய அளவில் கடன் வழங்குதல்

3. பெண்கள் மற்றும் பொருளாதார மேம்பாடு

‘Empowerment of Women’ policy focus/s on

(i) Poverty Eradication (ii) Micro Credit (iii) Women and Economic development

(a) 1 மட்டும் / (i) only

(b) 2 மட்டும் / (ii) only

(c) 3 மட்டும் / (iii) only

(d) 1, 2 மற்றும் 3 / (i), (ii) and (iii)

68. SNDP மற்றும் யாதவ இயக்கங்களின் ஆய்வு, அரசியல் அணி திரட்டல் மூலமான கருத்தியலின் அடிப்படையில் பெரிய இனக் குழுக்கள் தோன்றியதை விளக்குகிறது.

2. இந்த இயக்கங்கள் அடையாளத்தின் அடிப்படையில் சித்தாந்தத்தை நன்கு வரையறுத்திருந்தன

இக்கூற்றுகளில் எது உண்மை?

(i) The study of the SNDP and the yadava movements illustrate the emergence of large ethnic blocs on the basis of ideology through political Mobilization

(ii) These movements had well-defined ideology on the basis of identity

(a) 1 மட்டும்/ i only

(b) 2 மட்டும்/ ii only

(c) 1 மற்றும் 2/ i and ii

(d) மேற்கண்ட எதுவும் இல்லை / None of the above

69. கூற்று (A): குறைந்தபட்ச கல்வித் தகுதியுடைய பிராமணர் அல்லாதவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் மற்றும் அனைத்து அரசுப் பணிகளிலும் நியமிக்கப்பட வேண்டும்

காரணம் (R): வகுப்புவாத பிரதிநிதித்துவ ஆணை 1921இல் நிறைவேற்றப்பட்டது

Assertion (A): Non-Brahmins with minimum educational qualification should be provided with employment opportunity and be appointed in all government services.

Reason (R): Communal Representation Decree was passed in the year 1921

(a) (A) சரி ஆனால் (R) தவறு / (A) is true (R) is false

(b) (A) மற்றும் (R) இரண்டும் சரி ; மேலும் (R) என்பது (A)விற்கு சரியான விளக்கம் / Both (A) and (R) are true; and (R) is the correct explanation of (A)

(c) (A) தவறு ஆனால் (R) சரி/ (A) is false, (R) is true

(d) (A) மற்றும் (R) இரண்டும் சரி ; ஆனால் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம் அல்ல / Both (A) and (R) are true, but (R) is not the correct explanation of (A)

70. கூற்று (A): பழங்குடியினரின் ஒட்டுமொத்த வளர்ச்சியே அரசின் முதன்மையான நோக்கம் ஆகும்.

காரணம் (R): திட்டங்களை முறையாகவும், திறமையாகவும் செயற்படுத்துவது மிக முக்கியமானது

Assertion (A): The prime objective of the government is the overall Development of the tribal community

Reason (R): Proper and effective implementation of schemes is of paramount importance

(a) (A) மற்றும் (R) சரி ; மேலும் (R) (A) க்கான சரியான விளக்கம் / Both (A) and (R) are true, and (R) is the correct explanation of (A)

(b) (A) மற்றும் (R) சரி ; மேலும் (R) (A)வுக்கான சரியான விளக்கம் அல்ல / Both (A) and (R) are true; and (R) is not the correct explanation of (A)

(c) (A) சரி ; ஆனால்(R) தவறு / (A) is true, but (R) is false

(d) (A) தவறு ; ஆனால் (R) சரி/ (A) is false but (R) is true

71. கீழ்கண்டவற்றுள் சரியாகப் பொருத்தப்படாதவற்றைத் தேர்ந்தெடுக்க.

1. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் – 1971

2. மேக் இன் இந்தியா திட்டம் – 1920

3. மதிய உணவுத் திட்டம் – 2014

4. முதியோர் ஓய்வூதியத் திட்டம் – 1983

Choose the wrong matches

1. Tamil Nadu Tourism Development Corporation – 1972

2. Make in India – 1920

3. Mid day mal scheme – 2014

4. Old age pension – 1983

(a) 1 மற்றும் 2/ Both 1 and 2

(b) 3 மட்டும் / Only 3

(c) 3 மற்றும் 4/ Both 3 and 4

(d) 2 மற்றும் 3/ Both 2 and 3

72. பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கு பின்வருவனவற்றுள் எது காரணம் அல்ல?

Which of the following is NOT the reason for the provision of reservation of SCs and STs?

(a) சமத்துவத்திற்கான உரிமை / Right to equality

(b) மாண்பிற்கான உரிமை / Right to dignity

(c) சுதந்திரத்திற்கான உரிமை / Right to liberty

(d) வாழ்வாதாரத்திற்கான உரிமை / Right to livelihood

73. கீழ்க்காண்பவற்றுள் எது/எவை அன்னி பெசன்ட் அம்மையாரின் முயற்சியில் உருவானது / உருவானவை?

1. அவர் பனாரஸில் மத்திய இந்துக் கல்லூரியை நிறுவினார்

2. அவருடைய “நியூ இந்தியா” எனும் செய்தித்தாள் பிரம்மஞானசபைக் கொள்கைகளைப் பரப்பியது

Which of the following is/are true with reference to the impact of Mrs. Annie Besant’s efforts?

(i) She founded the central Hindu College at Benares

(ii) Her paper ‘New India’ spread the theosophical ideas

(a) 1 மட்டும்/ (i) only

(b) 2 மட்டும் / (ii) only

(c) 1 மற்றும் 2 இரண்டும் / Both (i) and (ii)

(d) எதுவுமில்லை/ None of the above

74. 2017ஆம் ஆண்டு ——- மாவட்டம் பாலின சமத்துவமின்மை குறியீட்டில் தமிழ்நாட்டில் முதலிடத்தில் இருந்தது

In 2017 ———– district was a top rank in Gender Inequality Index of Tamil Nadu.

(a) சென்னை / Chennai

(b) நாமக்கல் / Namakkal

(c) நீலகிரி / Nilgiris

(d) வேலூர் / Vellore

75. அரசுப் பள்ளியில் சேர்ந்து படிக்கும் மாணவிகளின் வங்கிக் கணக்கில் ரூ.1000 டெபாசிட் செய்யப்படும் என அறிவிக்கப்பட்ட நாள்

An amount of Rs. 1000/- will be deposited in the bank accounts of girl students enrolled and studied in government school announced on

(a) மார்ச் 16, 2022/ March 16, 2022

(b) மார்ச் 17, 2022/ March 17, 2022

(c) மார்ச் 18, 2022 / March 18, 2022

(d) மார்ச் 19, 2022/ March 19, 2022

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!