General StudiesTnpsc

Tnpsc Model Question Paper 50 – General Studies in Tamil & English

1. Myers 1998 இன் படி, கிழக்கு இமயமலை பல்லுயிர் பெருகத்தின் முக்கிய (ஹாட்ஸ்பாட்) பகுதியில் உள்ள உள்ளுர் வாஸ்குலர் தாவரங்களின் மொத்த எண்ணிக்கை

According to Myers 1998, the total number of endemic vascular plants in the easter Himalayan biodiversity hotspot region is

(a) 500

(b) 5,000

(c) 50,000

(d) 5,00,000

2. எக்ஸ் கதிர்களை கண்டுபிடித்தவர் யார்?

Who discovered X-ray?

(a) ஐன்ஸ்டீன் / Einestein

(b) மேடம் கியூரி / Madam Curie

(c) J.J.தாம்சன் / J.J.Thomson

(d) ராண்ட்ஜன் / Roentgen

3. வாயு விதியை கூறியவர் _____ ஆவார்

Gas law was given by

(a) அர்ஹீனியஸ் / Arrhenius

(b) ஆஸ்வால்ட் / Ostwald

(c) பாரடே / Faraday

(d) ராபர்ட் பாய்ல் / Robert Boyle

4. பாய்ஸ் என்பது கீழ்கண்ட எதனுடன் தொடர்புடையுது?

Which of the following is related to poise?

(a) பரப்பு இழுவிசை / Surface tension

(b) பாகியல் / Viscosity

(c) யங் குணகம் / Young’s Modulus

(d) பருமக் குணகம் / Bulk modulus

5. வட்டப் பாதையில் சைக்கிளில் செல்லும் ஒருவர் வட்ட மையத்தை நோக்கி உட்பக்கமாக சாய்வது எதனால்?

A cyclist inwards towards the centre of the circular track. Why?

(a) தேவையான மையநோக்கு விசையை உருவாக்க / To provide sufficient centripetal force

(b) புவிஈர்ப்பு விசையை சமன் செய்ய / To balance the gravitational force

(c) புவிஈர்ப்பு விசையும், உராய்வு விசையும் சமமாவதால் / Gravitational of force balances frictional force

(d) பக்கவாட்டு அழுத்தத்தை சரி செய்ய / To adjust with lateral pressure

6. விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் அமைந்துள்ள இடம் ______ ஆகும்.

Vikram Sarabhai space centre is located at

(a) சென்னை / Chennai

(b) திருவனந்தபுரம் / Thiruvananthapuram

(c) டெல்லி / Delhi

(d) மேற்கூறிய எதுவுமில்லை / None of the above

7.பின்வருவனவற்றுள் எந்த ஒன்று அறிவு சார் கற்றலுக்கு வழிவகுக்கின்றது?

Which one of the following leads to meaningful learning?

(a) பொருள் உணராமல் கற்றல் / Rote learning

(b) கண்டறிந்து கற்றல் / Learning of discovery

(c) கருத்துசார் கற்றல் / Reception learning

(d) ஆய்வக பரிசோதனைகள் / Laboratory experiments

8. 2020-ஆம் ஆண்டிற்கான உடற் செயலியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசு பெற்றவர்கள்

Noble Prize for physiology or medicine 2020 was awarded to

(a) மைக்கேல் ஹாட்டன், ஹார்வி ஜெ.அல்டர் மற்றும் சார்லஸ் எம்.ரைஸ் / Michael Houghton, Harvey J.Alter and Charles M.Rice

(b) ரோஜர் பென்ரோஸ் மற்றும் ரெயின்ஹார்ட் ஜென்சல் / Roger Penrose and Reinhard Genzel

(c) இம்மானுவேல் சார்பெண்டியர் மற்றும் ஜெனிபர் எ.டௌனா / Emmanuelle Charpentier and Jennifer A.Downa

(d) லூயிஸ் கிளிக் மற்றும் பால் ஆர்.மில்கிராம் / Louis Glick and Paul.R.Milgrom

9. விளையாட்டுகளில் சிறந்த பயிற்ச்சியாளர்களை கௌரவிப்பதற்க்கான துரோணாச்சாரியார் விருது எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

Dronacharya Award for outstanding coaches in sports and games are initiated in the year

(a) 1980

(b) 1988

(c) 1985

(d) 1987

10. “மாவட்ட திறன் கமிட்டியை” தலைமை தாங்குவது

Districk Skill committee (DSC) is headed by

(a) மாவட்ட ஆட்சியர் / District Collector

(b) ஆளுநர் / Governor

(c) முதலமைச்சர் / Chief Minister

(d) உயர்நீதிமன்ற நீதிபதி / High Court Judge

11. ‘தொற்று நோய்க்கு பிந்தைய உலகத்திற்கான பத்து பாடங்கள்” (Ten Lessons for a Post Pandemic World) என்ற புத்தகத்தின் ஆசிரியர் பெயர்

Name the author of the book “Ten Lessons for a Post Pandemic World”

(a) நவின் ராய் / Naveen Roy

(b) ப்ரீத் ஜகாரியா / Fareed Zakaria

(c) ஜஹாங்கிர் / Jahangir

(d) சாயித் கான் / Sayeed Khan

12. மார்ச் 2021 சூயஸ் கால்வாயில் சிக்கியிருந்த மாபெரும் கொள்கலன்னுடைய சரக்கு கப்பலை பெயரிடுக

Name the giant ship container cargo that was stuck in the Suez Canal in March 2021

(a) சீவைஸ் / Seawise

(b) எவர்கிவ்வன் / Evergiven

(c) MSC டையனா / MSC Diana

(d) பாரேசன் / Barzen

13. கீழ்கண்டவற்றில் எது கவர்னரின் அதிகாரமில்லை?

The power which is not related to the powers of the governor?

(a) இராஜ தந்திரம் மற்றும் இராணுவ அதிகாரங்கள் / Diplomatic and Military Powers

(b) மாநில அரசு தலைமை வழக்குரைஞரை நியமித்தல் / Power to appoint Advocate General Legislature

(c) சட்ட சபைகளை கலைத்தல் / Dissolving state

(d) மாநிலத்திற்க்குள் தண்டனைகள் மறுபரிசீலனை செய்தல் / Remission of punishments in sate extends

14. இந்திய பிரதம மந்திரி டாக்டர் மன்மோகன் சிங் _________ நதியை இந்தியாவின் தேசிய நதியாக 4 நவம்பர் 2008-ல் அறிவித்தார்

Indian Prime Minister Dr.Manmohan Singh declared _________ river as the National River of India on Nov.4, 2008

(a) பிரம்ம புத்தரா / Brahma Putra

(b) கங்கை / Ganga

(c) காவேரி / Cauvery

(d) மகாநதி / Mahanadhi

15. தேசிய ஜல் ஜீவன் இயக்கத்தின் இயக்குநர்

The Director of the ‘Jal Jeevan Mission’ is

(a) மனோஜ்குமார் சாகு / Manoj Kumar Sahoo

(b) ரத்தன் லால் கட்டாரியா / Rattan Lal Kataria

(c) சுனிதா நரைன் / Sunita Narain

(d) சுரேஷ் பிரபு / Suresh Prabhu

16. கீழ்கண்டவற்றுள் நீர்போக்குவரத்துச் செழித்துக் காணப்படாத மாநிலம் எது?

Which of the following state does not thrive in water transport?

(a) மேற்கு வங்காளம் / West Bengal

(b) ஆந்திர பிரதேசம் / Andhra Pradesh

(c) ராஜஸ்தான்/ Rajasthan

(d) அஸ்ஸாம் / Assam

17. இந்தியாவில் எந்த வகையான மனித இனத்தருக்கு தடித்த உதடுகள் காணப்படுகிறது?

Which group of Indian race has thick everted lips?

(a) நீக்ரிட்டோ / The Negritoes

(b) புரோட்டோ-ஆஸ்ட்ரோலாய்டு/ The Proto Australoids

(c) மங்கோலியர்கள் / The Mangoloids

(d) இந்தோ ஆரியர்கள் / The Indo Aryans

18. பிலாஸ்பூர் _________ மண்டல இரயில்வேயின் தலைமையகம்?

Bilaspur is the Head quarters of which Zonal Railways?

(a) கிழக்கு மத்திய இரயில்வே / East Central Railway

(b) தென் மத்திய இரயில்வே / South Central Railway

(c) தென் கிழக்கு மத்திய இரயில்வே / Southeast Central Railway

(d) வடக்கு மத்திய இரயில்வே/ North Central Railway

19. ஹேமடைட் தாதுவின் நிறம் என்ன?

What is the colour of Haematite Ore?

(a) வெள்ளை / White

(b) கருப்பு / Black (c) மஞ்சள் / Yellow

(d) சிகப்பு / Red

20. கங்கை நதியின் மொத்த நீளம், அதன் மூலத்திலிருந்து அதன் வாய் வரை

The total length of the Ganga river from its source to its mouth

(a) 1525 km

(b) 2525 km

(c) 3525 km

(d) 4525 km

21. காலவரிசைப்படி விஜயநகரப் பேரரசை ஆண்ட பின்வரும் வம்சங்களை வரிசைப்படுத்துக:

1. துளுவ வம்சம்

2. சங்கமா வம்சம்

3. சுளுவா வம்சம்

4. அரவிடு வம்சம்

Arrange the following dynastics which ruled Vijayanagar empire in the chronological order:

1. Tuluva Dynasty

2. sangama Dynasty

3. Suluva Dynasty

4. Aravindu Dynasty

(a) 2,3,4.1

(b) 1,2,4,3

(c) 4,3,2,1

(d) 3,1,4,2

22. சையது வம்சத்தின் கடைசி அரசர் ஆலம் ஷா, அவருடைய உண்மையான பெயர் என்ன?

Alam Shah was the Last Sultan of Sayyid Dynasty. What was the original name of Alam Shah?

(a) கிஷன் கான் / Hissan Khan

(b) அலாவுதீன் ஷா / Ala-Ud-Din Khan

(c) ஹமித் கான் / Hamid Khan

(d) சர்வார் உல் முல்க் / Sarwar-Ul Mulk

23.இராஜேந்திரன் சோழனின் இலங்கை படையெடுப்பு பற்றிய செய்திகளை ____________ செப்பேடுகள் மூலம் அறியலாம்

The Military and political activities of Rajendra Chola in Ceylon are mentioned in _________ plates.

(a) ஹிராகதஹள்ளி செப்பேடுகள் / Hiragathahalli Plates

(b) கரந்தை செப்பேடுகள் / Karanthai Copper Plates

(c) உத்திரமேரூர் கல்வெட்டுகள் / Uthiramerur Inscriptions

(d) திருவெலங்காடு செப்பேடுகள் / Thiruvalangadu Copper Plates

24. சிவாஜி யாரிடமிருந்து சிங்ககாட் கோடடையை கைப்பற்றினார்?

From whom Shivaji Captured the Fort of Singhagad in 1670?

(a) அகமது நகர் / Ahmednagar

(b) முகலாயர்கள் / Mughals

(c) பீடார் / Bidar

(d) கோல்கொண்டா / Golkonda

25. மொழிவாரிய அடிப்படையில் பாம்பே மாநிலம் எப்படி பிரிக்கப்பட்டது?

On the basis of language Bombay State was divided into

(a) மஹாராஸடிரா மற்றும் ராஜஸ்தான்/ Maharashtra and Rajashtan

(b) மஹாராஸடிரா மற்றும் குஜராத் / Maharashtra and Gujarat

(c) மஹாராஸடிரா மற்றும் விதர்பா / Maharashtra and Vidarba

(d) மஹாராஸடிரா மற்றும் உத்திரபிரதேசம் / Maharashtra and Uttar Pradesh

26. தமிழ்நாட்டில் 8-ம் நூற்றாண்டு மற்றும் 13-ம் நூற்றாண்டுகளுக்கு இடையில் ஐநூற்றுவர் என்பவர்கள்

“The Ainnurruvar” of 8th 13th centuries of Tamil Nadu refers to

(a) குதிரைப்படை / Cavalry

(b) காலாட்படை / Infantry

(c) வணிகர் சங்கங்கள் / Merchant Guild

(d) கப்பற்படை / Navy

27. பொருத்துக:

அ. கங்க தேவி 1. வரதாம்பிகா பரிநாயம்

ஆ. திருமலாம்பா 2. மதுரா விஜயம்

இ. சமரசர் 3. பிரபுலிங்க லீலை

ஈ. கதை தாசர் 4. ஹரி பக்தி சாரம்

Match the following

a. Gangadevi 1. Varadambika parinayam

b. Thirumalamba 2. Madura Vijayam

c. Samarasar 3. Pirabulinga lilai

d. Kadai dasar 4. Hari Bakthi Saram

a b c d

a. 1 2 3 4

b. 2 1 4 3

c. 2 1 3 4

d. 3 4 1 2

28. மொகஞ்சதாரோவின் பசுபதி முத்திரையில் காணப்படும் நான்கு விலங்குகளின் பெயரைக் குறிப்பிடுக:

Name the four animals found in the Pasupati Seal of Mohenjodaro

(a) சிங்கம், புலி, நீர்யானை, யானை / Lion, Tiger, Hippopotamus, Elephant

(b) காண்டாமிருகம், காளை, குதிரை, புலி / Rhinoceros, Bull, Horse, Tiger

(c) சிங்கம், மான், எருமை, பூனை / Lion, Deer, Buffalo, Cat

(d) யானை, புலி, காண்டாமிருகம், எருமை / Elephant, Tiger, Rhinoceros, Buffalo

29. இந்திய அரசியலமைப்பின் எந்தப் பகுதி குடியுரிமைப் பற்றி கூறுகிறது?

Which part of the constitution of India deals with citizenship?

(a) பகுதி I / Part I

(b) பகுதி II / Part II

(c) பகுதி V / Part V

(d) பகுதி VI / Part VI

30. விரைவு நீதிமன்றங்கள் __________ பரிந்துரையின் பேரில் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது

Fast Track Courts have been set up on the recommendation of the

(a) பதினோறாவது நிதி ஆணையம் / Eleventh Finance Commission

(b) உச்சநீதிமன்றம் / Supreme Court

(c) பாராளுமன்றம் / Parliament

(d) நிர்வாக சீர்திருத்த குழு / Administrative Reform Commission

31. 1953ம் ஆண்டின் மாநில மறுசீரமைப்பு ஆணையத்தின் தலைவராக இருந்தவர் யார்?

Who was the Chairman of States Reorganisation Commission, 1953?

(a) எஸ்.கே.தர் / S.K.Dhar

(b) பட்டாபி சீதாராமய்யா / Pattabhi Sitaramayya

(c) நேரு / Nehru

(d) பசல் அலி / Fazal Ali

32. பட்டியல் I (அரசியல் சாசன விதி) பட்டியல் II உடன் (ஆளுநர் சார்ந்த) ஒப்பிடுக:

பட்டியல் I பட்டியல் II

அ. விதி 156 1. ஆளுநர் மசோதாவுக்கு ஒப்புதல்

ஆ. விதி 165 2. ஆளுநரை நியமித்தல்

இ. விதி 200 3. ஆளுநரின் பதவி காலம்

ஈ. விதி 155 4. ஆளுநரின் – ‘அட்வகேட் ஜெனரல்’ நியமிக்கும்

அதிகாரம்

Match the List I (Articles) with List II (Subject related to the Governor) and choose the correct answer from the options given below:

List I List II

(Articles) (Governor’s)

a. Article 156 1. Governor Assent to bill

b. Article 165 2. Appointment of Governor

c. Article 200 3. Term of the Governor

d. Article 155 4. Power of the Governor to Appoint Advocate General

a b c d

a. 3 4 1 2

b. 1 3 2 4

c. 3 1 2 4

d. 2 1 4 3

33. கீழ் சொல்லப்பட்ட, இந்திய அரசியலமைப்பில் பண மசோதா என்ற சொல் எந்த விதியில் வரையறையப்பட்டுள்ளது?

Definition of Money bills is mentioned in which of the following Articles of the Constitution of India

(a) விதி 266/ Article 266

(b) விதி 256/ Article 256

(c) விதி 112/ Article 112

(d) விதி 110/ Article 110

34. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் அடிப்படைக் கடமைகள் என்னும் தலைப்பின் கீழான சரத்துக்கள் எந்தச் சட்டத்திருத்தம்/திருத்தங்களின் படி சேர்க்கப்பட்டுள்ளன?

அ. 42வது சட்டத்திருத்தம்

ஆ. 46வது சட்டத்திருத்தம்

இ. 76வது சட்டத்திருத்தம்

ஈ. 86வது சட்டத்திருத்தம்

The provisions of Fundamental Duties of the Indian Constitution were inserted by

(a) 23nd Amendment

(b) 46th Amendment

(c) 76th Amendment

(d) 86th Amendment

(a) அ மட்டும் / a only

(b) அ மற்றும் ஆ / a and b

(c) அ மற்றும் இ / a and c

(d) அ மற்றும் ஈ / a and d

35. அடிப்படை உரிமைகளின் மீது நியாயமான கட்டுப்பாடுகளை விதிக்கும் அதிகாரத்தினை கொண்டவர் யார்?

Who enjoys the right to impose reasonable restriction on the fundamental rights?

(a) குடியருசுத்தலைவர் / The President

(b) உச்சநீதிமன்றம் / The Supreme Court

(c) பாராளுமன்றம் / The Parliament

(d) லோக்சபா / The Lok Sabha

36.கீழ்கண்டவற்றுள் சரியாக பொருந்தாத கூற்றை கண்டறிக:

Which of the following is not matched correctly?

(a) பகுதி I : யூனியன் பிரதேசங்கள் / Part I : Union and its territory

(b) பகுதி II : அடிப்படை கடமைகள் / Part II : Fundamental Duties

(c) பகுதி IV : வழிகாட்டு நெறிமுறைக் கோட்பாடுகள் / Part IV: Directive Principles of State Policy

(d) பகுதி VI : மாநில அரசாங்கம் / Part VI: The state Governemnts

37. இரண்டாவது ஐந்தாண்டு திட்டம் __________ அதிக முன்னுரிமை அளிக்கிறது

The second five year plan accords high priority to

(a) வேளாண்மைக்கு / Agriculture

(b) தொழில்மயமாக்கலுக்கு/ Industrialization

(c) கிராமபுற வளர்ச்சிக்கு / Rural Development

(d) வறுமை ஒழிப்புக்கு / Poverty Alleviation

38. இந்தியாவில் நிதிக் கொள்கை வடிவமைக்கப்படுவது பின்வருவனவற்றில் எது?

Fiscal policy in India is formulated by

(a) திட்டக்குழு / Planning commission

(b) நிதி அமைச்சகம் / Ministry of Finance

(c) இந்திய பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் / Securities and Exchange Board of India (SEBI)

(d) ரிசர்வ் வங்கி / Reserve Bank of India (RBI)

39. (HYVP) உயர் விளைச்சல் வகை திட்டத்தில் கீழ்கண்டவற்றுள் எந்த பயிர், உணவு பயிர் கீழ் வரவில்லை?

Which crop is not comes under HYVP, among the following food crops?

(a) கோதுமை / Wheat

(b) கம்பு / Bajra

(c) சோளம் / Maize

(d) கரும்பு / Sugarcane

40. மத்திய மதிப்பு கூட்டப்பட்ட வரி மற்றும் சேலை வரிகளின் புதிய வரியின் பெயர் என்ன?

The Central Value Added Tax and Service Tax can be replaced by a new tax named as

(a) மாநகராட்சி வரி / Corporation Tax

(b) விற்பனை வரி / Sales Tax

(c) பண்டங்கள் மற்றும் பணிகள் மீதான வரி / Goods and Services Tax

(d) மூலதன ஆதாய வரி / Capital Gains Tax

41. பின்வருவனவற்றைக் காலவரன் முறைப்படி சரியாக வரிசைப்படுத்துக:

I. வெள்ளையனே வெளியேறு இயக்கம்

II. சிம்லா மாநாடு

III. பூனா ஒப்பந்தம்

IV. அமைச்சரவை குழு

Which one is the correct chronological order of the following events?

I. Quit India Movement

II. Shimla Conference

III. Poona Pact

IV. Cabinet Mission

(a) II, IV, I, III

(b) III, IV, II, I

(c) III, I, II, IV

(d) IV, II, III, I

42. இந்திய திட்டமிடல் ஆணையத்தின் தலைவர் யார்?

Who is the Chairman of Planning commission in India?

(a) ஜனாதிபதி / President

(b) துணைத்தலைவர் (ஜனாதிபதி)/ Vice President

(c) பிரதமமந்திரி / Prime Minister

(d) நிதி அமைச்சர் / Finance Minister

43.”மக்கள் பங்கேற்ப்பு சார்ந்த திட்டமிடல்” எந்த ஐந்தாண்டு திட்டத்தில் முன்நிலைபடுத்தப்பட்டது?

Which five year plan is a “People Oriented” plan?

(a) முதல் ஐந்தாண்டு திட்டம் / First Five Year Plan

(b) இரண்டாம் ஐந்தாண்டு திட்டம் / Second Five Year Plan

(c) ஐந்தாம் ஐந்தாண்டு திட்டம் / Fifth Five Year Plan

(d) ஒன்பதாம் ஐந்தாண்டு திட்டம் / Ninth Five Year Plan

44. சரியான வாக்கியத்தை தேர்வு செய்க:

1857 கலகத்தை பல்வேறு வரலாற்று ஆசிரியர்கள் பல்வேறு பெயர்களில் அழைத்தார்கள்

1. சர் ஜான் சீலி இதை இராணுவ கலகம் என கருதினார்

2. வீர் சவர்கர் இதை இந்திய தேசிய சுதந்திரப் போர் என பெயரிட்டார்

3. R.C.மஜீம்தார் இதை மிகப்பெரிய தேசிய எழுச்சி எனப் பெயரிட்டார்

4. K.M.பனிக்கர் இதை சிப்பாய் கலகம் என அழைத்தார்

Choose the right statement among type:

The revolt of 1857 called in different names by different authors:

1. Sir John Seely regarded it as Military revolt

2. Vir Savarkar named it as “The war of Indian independence”

3. R.C.Majumdar named it as Great National Uprising

4. K.M.Pannikar called it as Sepoy Mutiny

(a) 1 மட்டும் சரி / 1 is correct

(b) 2 மட்டும் சரி / 2 is correct

(c) 2 மற்றும் 3 மட்டும் சரி / 2 and 3 is correct

(d) 4 மட்டும் சரி / 4 is correct

45. நேரு டில்லி உடன்படிக்கையை லியாகத் அலி கானுடன் கையெழுத்திட்ட தேதி

Nehru signed Delhi Pact with Liaquat Ali Khan on

(a) 3 மார்ச் 1947/ 3 March 1947

(b) 8 ஏப்ரல் 1950/ 8 April 1950

(c) 22 மே 1952/ 8 March 1952

(d) 8 மார்ச் 1953/ 8 March 1953

46. 1940ல் ‘தனிநபர் சத்தியாகிரகம்’ செய்த முதல் சத்தியாக்கிரகி யார்?

Who was the first Satyagrahi to offer ‘Individual Satyagrah’ in 1940?

(a) ஜவஹர்லால் நேரு / Jawaharlal Nehru

(b) வல்லபாய் படேல் / Vallabhai Patel

(c) வினோபா பாவே / Vinoba Bhave

(d) இராஜேந்திர பிரசாத் / Rajendra Prasad

47. சுதேசி நீராவிக் கப்பல் கம்பெனி பதிவு செய்யப்பட்ட நாள்

The Swadeshi Steam Navingation Company was registered in the year

(a) அக்டோபர் 2, 1906/ October 2, 1906

(b) அக்டோபர் 16, 1906/ October 16, 1906

(c) நவம்பர் 2, 1908/ November 2, 1908

(d) நவம்பர் 12, 1908/ November 12, 1908

48. __________ தேஷ்பந்து சித்திராஞ்சன் தாஸின் தீவிர கூட்டாளி மற்றும் தேசிய கல்லூரியின் முதல்வராக பணியாற்றினார்

_______, was an active associate of Deshbandhu Chittaranjan Das and Served as the Principal of the National College

(a) லாலா லஜபதி ராய் / Lala Lajpat Rai

(b) அரோபிந்தோ கோஷ் / Aurobindo Ghosh

(c) அன்னி பெசன்ட் / Annie Besant

(d) சுபாஷ் சந்திர போஸ் / Subhash Chandra Bose

49. அகில இந்திய மாநில இடதுசாரிகளின் மக்கள் மாநாடு _________ ஆண்டு நடைபெற்றது

All India Sates’ People’s Conference of the Left-Wing was held in

(a) 1935

(b) 1936

(c) 1938

(d) 1939

50. பின்வருபவர்களில் யார் 1890ல் ‘இந்திய சமுதாய சீர்திருத்தவாதி’ யை தொடங்கியவர்

Who among the following founded the ‘Indian Social Reformer’ in 1890?

(a) வீரேசலிங்கம் / Veeresalingam

(b) கே.என்.நடராஜன் / K.N.Natarajan

(c) கே.டி.தெலாங் / K.T.Telang

(d) பெஹராம்ஜி மலபாரி / Behramji Malabari

51. பொருத்துக:

அ. குறிஞ்சி 1. சூறையாடல்

ஆ. பாலை 2. களையெடுத்தல்

இ. முல்லை 3. காளை தழுவல்

ஈ. மருதம் 4. வேட்டையாடல்

Match the following:

a. Kurinchi 1. Looting

b. Palai 2. Weeding

c. Mullai 3. Bull Fighting (Jalli Kattu)

d. Marutam 4. Hunting

a b c d

a. 4 3 2 1

b. 4 1 3 2

c. 4 2 1 3

d. 1 2 3 4

52. ‘விடுதலை எல்லாம் கிளர்ச்சியால் வெல்லும்

விடுதலை வேட்கை வெறிகொண்ட வீரன்’

எனப் பாரதிதாசனைப் புகழ்ந்து பாடியவர் யார்?

‘Viduthalai ellam Kilarchiyal vellum

Viduthalai vetkai verikonda veeran’

Who praises Barathidasan with these lines?

(a) நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் / Namakkal Kavignar Ve.Ramalingam

(b) தேசிய விநாயகம் பிள்ளை / Desiga Vinayagam Pillai

(c) தமிழ் ஒளி / Thamizh Oli

(d) சுரதா/ Suradha

53. ‘பிரபந்த மாலை’ என்று சிறப்பிக்கப்படும் இலக்கியம் எது?

Which literature is appraised as “Prabandha Maalai”?

(a) திருவாசகம் / Ghiruvaasagam

(b) தேவாரம் / Dhevaram

(c) பதினோராம் திருமுறை / Pathinoraam Thirumurai

(d) ஒன்பதாம் திருமுறை / Onpathaam Thirumurai

54. சி.என்.அண்ணாதுரையின் எந்த புத்தகம் 1950 ஆண்டு தடை செய்யப்பட்டது?

Which book of C.N.Annadurai was banned in the year 1950?

(a) ஆரியமாயை / Arya Mayai

(b) தீ பரவட்டும் / Thee Paravattum

(c) நீதி தேவன் மயக்கம் / Needhidevan Mayakkam

(d) குமர கோட்டம் / Kumari Kottam

55. ஈ.வெ.ரா.பெரியார் எப்போது திராவிட நாடு கோரிக்கையை முன்வைத்தார்?

EVR Periyar declared the demand of Dravidian land during the year

(a) 1934

(b) 1939

(c) 1949

(d) 1969

56. பிராமணரல்லாதார் பிரகடனம் வெளியடப்பட்ட ஆண்டு

Non-Brahmin Manifesto was released in the year

(a) 1915

(b) 1916

(c) 1917

(d) 1918

57. 1944ல் சேலத்தில் நடைபெற்ற நீதிக் கட்சி மாநாட்டை தலைமை தாங்கி நடத்தியவர் யார்?

Who president over the conference of Justice party as Salem in 1944?

(a) டி.எம்.நாயர் / T.M.Nair

(b) அறிஞர் அண்ணா/ Arignar Anna

(c) பனகல் ராஜா / Panagal Raja

(d) ஈ.வெ.ராமசாமி / E.V.Ramasamy

58. பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகியவற்றுக்கு இடங்கொடுக்காமல் வாழ்வதே சிறந்தது என்று திருவள்ளுவர் எந்த அதிகாரத்தில் குறிப்பிடுகிறார்?

In which chapter does Thiruvalluvar mention that the best mode of living life is not to give way to vices like malice, desire, anger and bitter speech?

(a) இல்வாழ்க்கை / Ilvalzhkkai (Domestic Life)

(b) குறங்கடிதல் / Kutrangatidhal (The Correction of Faults)

(c) கொடுங்கோன்மை / Kotungonmai (The Cruel Septre)

(d) அறன் வலியுறுத்தல் / Aran Valiyuruththal (Assertion of the Strenth of virtue)

59. “_____ __________ __________ இவையிரண்டும்

தெற்றென்க மன்னவன் கண்”

மேற்காணும் திருக்குறளில் எவை இரண்டைத் திருவள்ளுவர் கண்கள் எனக் கூறுகிறார்?

“_____ _________ _______ ivayirandum

Thetrenga mannavan kan”

Thiruvalluvar says that these two are the eyes is the above Kural.

What are they?

(a) பொருளும் குடியும் / Wealth and people

(b) கடுஞ்சொல்லும் தண்டனையும் / Unbiasedness and punishment

(c) ஒற்றும் நீதிநூலும் / Spy and book of justice

(d) ஆற்றலும் செயலும் / Energy and Action

60. “கனியிருப்பக் காய் கவர்ந்தற்று” எனத் திருக்குறள் எதனைக் கூறுகின்றது?

“Kani irupa; kai kavarthatru” complete the Kural with its first line.

(a) உண்மை உளவாக பொய்மை கூறல் / Unmai ulagaaga; poimai kooral

(b) நன்மை உளவாக தீமை கூறல் / Nanmai ulavaaga; theemai kooral

(c) இனிய உளவாக இன்னாத கூறல் / Iniya ulavaaga; innatha kooral

(d) இனிப்பு உள்ளபோது கசப்பு உண்ணுதல் / Inippu ullapothu, kasappu unnudhal

61. கூற்று : திருக்குறளானது இல்லறத்தையும், மகளிரின் கற்புத் திறத்தையும் சிறப்பித்துப் பேசுகின்றது.

காரணம் : இப்பண்புகள் மனுதர்மத்துக்குப் புறம்பானவை.

Statement: Tirukkural highlights household duties and women’s chastity.

Reason: These attributes are out of context in the Manudharma

(a) கூற்று சரி ; காரணம் தவறு / Statement is correct; Reason is wrong

(b) கூற்று சரி ; காரணம் சரி / Statement is correct; Reason is correct

(c) கூற்று தவறு ; காரணம் சரி / Statement is wrong; Reason is correct

(d) கூற்று தவறு ; காரணம் தவறு / Statement is wrong; Reason is wrong

62. “வேங்கையின் மைந்தன்” புதினத்தின் ஆசிரியர் யார்?

Name novelist who wrote the novel “Vengaiyin Maindhan”.

(a) சாண்டில்யன் / Chandilyan

(b) அகிலன் / Akilan

(c) கல்கி / Kalki

(d) அண்ணா / Anna

63. “ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும்” என்னும் பாடலடி இடம்பெற்ற நூல் எது?

‘Aathiyum anthamum illa arutperum’ which literature contains this line in praise of divinity?

(a) திருவெம்பாவை / Thiruvempaavai

(b) திருப்பாவை / Thirupaavai

(c) தைப்பாவை / Thai Paavai

(d) மேற்சொன்ன எவையும் அல்ல / None of the above

64. பதிற்றுப்பத்தில் சிறப்பிக்கப்படும் மன்னர்கள் இவர்கள்

Which kings are praised and sung in Pathitrupathu?

(a) சேரர் / Cheras

(b) சோழர் / Cholas

(c) பாண்டியர் / Pandyaas

(d) பல்லவர் / Pallavas

65. ஆதிச்சநல்லூர் தாழிகள் புதைத்த இடத்தைக் கண்டுபிடித்தவர் யார்?

The urn burial site of Adichanallur was discovered by

(a) புரூஸ்ஃபூட் / Bruce Fotte

(b) ஜகோர்/ Jagor

(c) சாகர் / Sagar

(d) கன்னிங்ஹாம் / Cunningham

66. புலம்பெயர்ந்தோர் பதிவில் முன்னிலை வகிக்கும் மாவட்டம் _______

________ district has recorded the maximum number of emigrants.

(a) இராமநாதபுரம் / Ramanathapuram

(b) கோயம்புத்தூர் / Coimbatore

(c) சென்னை / Chennai

(d) வேலூர் / Vellore

67. உலகளாவிய மனித உரிமைப் பிரகடனத்தில் கல்வி அடிப்படை உரிமை விதி

In which article of the Universal Declaration of Human Rights (UDHR) is education a fundamental Right?

(a) விதி 24/ Article 24

(b) விதி 23/ Article 23

(c) விதி 26/ Article 26

(d) விதி 27/ Article 27

68. நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளின் (SDGs) செயற்பாடுகளைக் கண்காணிப்பதற்கான முதன்மை நிறுவனம் எது?

Which is the nodal agency for monitoring the implementation of the Sustainable Development Goals (SDGs)

(a) நிதி ஆயோக் / Niti Aayog

(b) சமூக நலத்துறை / Social Welfare Department

(c) NDC

(d) MHRD

69. தமிழ்நாட்டில் அமைக்கப்பட்ட முதல் பெருநிறுவன மருத்துவமனை எது?

Which was the first corporate hospital to be set up in Tamil Nadu?

(a) சங்கர நேத்தராலயா / Sankara Nethralaya

(b) மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் / Madras Medical Mission

(c) செட்டிநாடு ஹெல்த் சிட்டி / Chettinad Health City

(d) அப்பல்லோ மருத்துவமனை / Apollo Hospital

70. எந்த ஆண்டில் தாழ்த்தப்பட்ட சாதிகள் மற்றும் பழங்குடியினருக்கான ஆணையம் பட்டியல் பழங்குடியினருக்கான தேசிய ஆணையமாக மறுபெயரிடப்பட்டது

The commission for Scheduled Castes and Scheduled Tribes has been renamed as National Commission for scheduled caste and Scheduled Tribes in the year

(a) 1987

(b) 1985

(c) 1984

(d) 1990

71. NH-44 தமிழ்நாட்டின் மிக நீளமான நெடுஞ்சாலை ஆகும். இது ஓசூரில் இருந்து _______ வரை செல்கிறது

NH-44 is the longest highway in Tamil Nadu which runs from Hossur to

(a) நாகர்கோவில் / Nagercoil

(b) திருநெல்வேலி / Tirunelveli

(c) கன்னியாகுமரி / Kanyakumari

(d) மதுரை / Madurai

72. பிரிட்டிஷ் அரசாங்கம் மறைமுகமாக இந்தியர்களின் முன்னேற்றத்திற்கு உதவியது. அவையாவன:

I. பாடச்சாலைகளை நாடு எங்கிலும் நிறுவியதன் மூலம்

II. புதிய தொழற்சாலைகளை அமைத்ததன் மூலம்

III. புதிய தேவாலயங்களை நிறுவியதன் மூலம்

IV. போக்குவரத்து வசதி செய்ததன் மூலம்

British government indirectly helped the Indian to their upliftment. They are:

I. Open school everywhere

II. To start new industries

III. To establish new church

IV. To establish transport

(a) I, II

(b) II, III

(c) III, IV

(d) I, II, IV

73. கூற்று (A): சுயமரியாதை திருமணங்களில் தாலி தடை செய்யப்பட்டுள்ளது

பகுத்தறிவு (R) : தாலி என்பது, ஆணுக்கு பெண்ணிய அடிமைத்தனத்தின் கொடூர சின்னமாக பார்க்கப்பட்டது

Assertion (A) : The “Thali’ is prohibited in self respect marriages.

Rationale (R): “Thali’ is seen as a cruel symbol of feminine servitude to man.

(a) (A) சரி, (R) தவறு/ (A) is true, (R) is false

(b) (A) மற்றும் (R) இரண்டும் உண்மை. மற்றும் (R) ஆனது (A)க்கு சரியான விளக்கமாக உள்ளது / Both (A) and (R) are true and (R) is correct explanation of (A)

(c) (A) தவறு ஆனால் (R) சரி / (A) is false but (R) is true

(d) (A) மற்றும் (R) இரண்டும் தவறு / Both (A) and (R) are false

74. பின்வருவனவற்றுள் பெரியார் ஆதரவு அளிக்காதது எது?

Which of the following was not advocated by Periyar?

(a) கணவுனுக்கு மரியாதை / Respect for husband

(b) சாதி,மத தொடர்பான சடங்குகளை மீறுதல் / Defiance of religious and caste rituals

(c) மங்கள சூத்திரத்தை மறுதலித்தல் / Rejection of Mangalsutra

(d) குழந்தைப்பராமரிப்பில் கணவன்-மனைவிக்கு சமப்பொறுப்பு / Equal responsibility for child care

75. பொருத்துக:

புரவலான மாறுபாடுகளைக் காட்டும் மாநிலங்களைச் சரியாகப் பொருத்துக:

(அ) ஒப்பீட்டளவில் குறைந்த வருமானத்துடன் உயர்

மனித வளர்ச்சி 1. ஹரியானா

(ஆ) அதிக வருமானத்தில் குறைந்த மனித வளர்ச்சி 2. பீகார்

(இ) வேகமான பொருளாதார வளர்ச்சி மற்றும்

மெதுவான மனித வளர்ச்சி 3. கேரளா

(ஈ) பரஸ்பர மந்தமான வளர்ச்சி மற்றும்

மனித வளர்ச்சி 4. ராஜஸ்தான்

Match the following:

Match correctly the states showing wide variations:

a. Higher human development with relatively lower income 1. Haryana

b. Lower human development with higher income 2. Bihar

c. Fast economic growth and slow human development 3. Kerala

d. Mutually depressing growth and human development 4. Rajasthan

a b c d

a. 4 2 1 3

b. 3 1 4 2

c. 2 3 1 4

d. 1 4 2 3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!