General StudiesTnpsc

Tnpsc Model Question Paper 9 – General Studies in Tamil & English

1. குறைந்த செலவில் உருவாக்கப்படும் ஆற்றல் ———— ஆகும்.

The energy produced at a cheaper cost is

(a) காற்று ஆற்றல் / Wind energy

(b) நீர்மின் ஆற்றல் / Hydro electric energy

(c) அணுக்கரு ஆற்றல் / Nuclear energy

(d) சூரிய ஆற்றல் / Solar energy

2. மோட்டார் வாகனங்களில் அதிர்வு தாங்கிகள் பொருத்தப்படுவது கீழ்க்கண்ட எதனுடன் தொடர்புடையது

The vehicles are fitted with shock absorbers, which is based on

(a) நியூட்டனின் ஈர்ப்பியல் விதி / Newton’s gravitational law

(b) நியூட்டனின் முதல் விதி / Newton’s first law

(c) நியூட்டனின் மூன்றாவது விதி / Newton’s third law

(d) கணத்தாக்கு / Impulse

3. கீழ்க்கண்டவற்றுள் எவை மலேரியா நோயை உண்டாக்கும் ஓட்டுண்ணி

Malaria fever is caused by which of the following parasite

(a) பிளாஸ்மோடியம் வைவாக்ஸ் / Plasmodium Vivax

(b) பி.மலேரியா / P.Malariae

(c) பி.ஃபால்சிபாரம் / P.Falciparum

(d) இவை அனைத்தும் / All of these

4. வயிற்றில் உண்டாகும் அமிலத்தன்மை அதிகரிக்கும் உபாதையை நீக்கப் பயன்படும் அமில முறிவுப் பொருளின் முக்கிய மூலப்பொருள் —————— ஆகும்.

The main ingredient of antacid which is used to relieve acidity of stomach is

(a) அமிலம் / Acid

(b) காரம் / Base

(c) நடுநிலை கரைசல் / Neutral solution

(d) வீரிய அமிலம் / Strong acid

5. பௌதீக மற்றும் காலநிலை தேவைகளுக்கு அத்தியாவசியமான காடுகள்

The forest is essential for physical and climatic needs.

(a) பாதுகாக்கப்பட்ட காடு / Protected Forest

(b) தேசிய காடு / National Forest

(c) கிராம காடு / Village Forest

(d) மர நிலங்கள் / Tree Lands

6. 2011ல் இந்தியாவில் தனி நபருக்குக் கிடைத்த நீரின் அளவு என்ன?

What is the per capita availability of water in India on 2011?

(a) 1545 கன மீட்டர் / 1545 cubic metres

(b) 1515 கன மீட்டர் / 1515 cubic metres

(c) 1673 கன மீட்டர் / 1673 cubic metres

(d) 1860 கன மீட்டர் / 1860 cubic metres

7. அரசியல் கட்சிகள், வாக்காளர்களுக்கும் அரசாங்கத்திற்க்கும் இடையேயான சமூக சிந்தனையை எடுத்து செல்லும் நீர்க்குழாய் போன்றவை என ஒப்பிட்டவர் யார்?

Who compared Political parties to conduits that carry the process of social thought between electorate and the government?

(a) பார்கர் / Barker

(b) சர்தாமஸ்மோர் / Sir Thomas More

(c) டி.எச்.கிரீன் / T.H.Green

(d) ஹெர்பர்ட் ஸ்பென்சர் / Herbert Spencer

8. “நிதி கூட்டாட்சி” என்பதன் மிக முக்கியமான அம்சம் என்பது இதனை நடைமுறைக்கு கொண்டு வருவதாகும்

The Foremost aspect of Fiscal Federalism is to realise

(a) சிக்கனத் திறன் / Cost efficiency

(b) நேர்மை / Integrity

(c) தார்மிகம் / Morality

(d) நிர்வாகத் திறன் / Administrative Efficiency

9.”சீன நீர் குண்டு” திட்டம் (அணை) இந்நதியின் மீது கட்டப்படுவதால், இந்தியாவுக்கு ஆபத்து உண்டாக்கும்

“Chinese water bomb” plan (dam) constructed across this river will put India at risk

(a) சிந்து நதி / Indus river

(b) யாங்ட்ஸி நதி / Yangtse river

(c) பிரம்மபுத்ரா நதி / Brahmaputra river

(d) ஹீவாங் ஹோ நதி / Hwang-Ho river

10. மகமது கவான் எந்த குற்றத்துக்காக கொல்லப்பட்டார்

Mahmud Gawan was executed on the charge of

(a) கொலை / Murder

(b) நடத்தை-விபச்சாரம் / Adultery

(c) போலியான தேசத்துரோக குற்றச்சாட்டு / Forged charge of Treason

(d) திருட்டு / Theft

11. ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனி, தனது முதல் தொழில்கலையை சூரத்தில் எந்த முதலாயப் பேரரசருடைய அனுமதியின் பேரில் தொடங்கியது?

During the time of which Mughal Emperor gave permission to the British East India Company to established its 1st factory in Surat

(a) அக்பர் / Akbar

(b) ஜஹாங்கீர் / Jahangir

(c) ஷாஜஹான் / Shajahan

(d) ஹீமாயூன் / Humayun

12. பின்வரும் அட்டவணையில் கொடுக்கப்பட்டு குறியீடுகளை பயன்படுத்தி சரியான விடையினை அட்டவணை-I உடன் அட்டவணை-II ஐ பொருத்துக:

அட்டவணை-I அட்டவணை-II

பயணிகள் விசயநகர ஆட்சியாளர்கள்

(a) நிக்கோலோ-டி-காண்டி 1. கிருஷ்ண தேவராயர்

(b) டோமிங்கோ பயஸ் 2. தேவராயர்-II

(c) பெர்னோ நுன்ஸ் 3. தேவராயர்-I

(d) அப்துல் ரசாக் 4. அச்சுத ராயர்

Match List I with List II and choose your answer from the codes given below:

List I Traveller List II Rules of Vijayanagar

a. Nicolo de conti 1. Krishnadevaraya

b. Domingo Paes 2. Davaraya II

c. Ferno Nunz 3. Devaraya I

d. Abdul Razzak 4. Achyuta Raya

a b c d

a. 3 1 4 2

b. 1 4 2 3

c. 3 2 1 4

d. 2 1 4 3

13. செயற்கை செங்கல் கப்பல் துறைமுகம் கொண்ட ஒரே சிந்துசமவெளி நகரத்தின் பெயர்

Name the only Indus site with an artificial brick dockyard

(a) லோத்தல் / Lothal

(b) கலிபங்கன் / Kalibangan

(c) சான்குதாரோ / Chanhudaro

(d) சர்கோடோடா / Surkotoda

14. துணை குடியரசுத் தலைவர், குடியரசுத் தலைவராக செயல்பட்டு கொண்டிருக்கும் பொழுது அவரை பதவி நீக்கம் செய்யும் முறை யாது?

What is the procedure for removal of a Vice President when he acts as a President?

(a) கீழவையில் தீர்மானம் இயற்றுவதன் மூலம் / Removed by a resolution in Lok Sabha

(b) இந்திய தலைமை நீதிபதியின் அனுமதி கிடைத்தவுடன் / Need permission from Chief Justice of India

(c) இந்திய தலைமை வழக்குரைஞரின் அனுமதி கிடைத்தவுடன் / Need permission from Attorney General

(d) குடியரசுத் தலைவர பதவி நீக்கம் செய்ய நிர்ணயிக்கப்பட்ட அதே முறை / The method remains the same as for the President

15. இந்திய அரசியலமைப்பின் பாதுகாவலனாக விளங்கக்கூடியது

The Guardian of Indian Constitution is

(a) உச்ச நீதிமன்றம் / The Supreme Court

(b) அரசியலமைப்பு நிர்ணயசபை / The Constituent Assembly

(c) பாராளுமன்றம் / The parliament

(d) குடியரசுத் தலைவர் / The President

16. மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படை எப்பொழுது ஏற்படுத்தப்பட்டது?

When was the Central Industrial Security Force established?

(a) 1963

(b) 1949

(c) 1959

(d) 1969

17. எந்த சூழ்நிலையில் ஒருவரது இந்திய குடியுரிமையை நீக்க முடியாது?

Under which circumstances the Indian Citizenship cannot be terminated?

(a) அவசர நிலை அமலில் உள்ள போது / At the time of emergency

(b) போர் நடந்து கொண்டிருக்கும் போது / At the time of war

(c) தேர்தல் நடைபெறும் போது / At the time of Elections

(d) மேலே உள்ள அனைத்தும் / All of these

18. கீழ்குறிப்பிடப்பட்டவர்களுள், இந்திய அரசியலமைப்பின் முன்னுரை தான், அரசியலமைப்பின் முக்கிய குறிப்பு என்று கூறியது யார்?

Who among the following said that the Preamble of the Indian Constitution is “The Key Note of the Constitution?”

(a) எர்னஸ்ட் பார்க்கர் / Ernest Barker

(b) ஜவஹர்லால் நேரு / Jawaharlal Nehru

(c) Dr.B.R.அம்பேத்கர் / Dr.B.R.Ambedkar

(d) நெல்சன் மண்டேலா / Nelson Mandela

19. “NABARD” தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு

NABARD has been set up in

(a) 1982

(b) 1983

(c) 1984

(d) 1985

20. பதினைந்தாவது நிதி ஆணையத்தின் தலைவர்

Who is the Chairman of Fifteenth Finance Commission?

(a) ரமேஷ் சந்த் / Ramesh Chand

(b) N.K.சிங் / N.K.Singh

(c) Y.V.ரெட்டி Y.V.Reddy

(d) அசோக் லஹிரி / Ashok Lahiri

21. தவிர்க்க இயலாத நிலை அல்லது கட்டாயமாகும் திட்டமிடுதல் இவ்வாறும் அழைக்கப்படலாம்.

The imperative planning is also called

(a) குறிக்கும் திட்டமிடல் / Indicative Planning

(b) நெறிமுறை திட்டமிடல் / Normative Planning

(c) இலக்கு திட்டமிடல் / Target Planning

(d) அமைப்பு திட்டமிடல் / System Planning

22. இந்தியாவில் தாராளமயக் கொள்கை செயல்பாடுகள் எந்த குழுவின் கீழ் இயங்கியது?

The working of licencing policy in India under the committee of

(a) விஸ்வேஸ்ரய்யா குழு / Visweshwaraiah Committee

(b) நரசிம்மம் குழு / Narasimham Committee

(c) ஹசாரி குழு / Hazari Committee

(d) டட் குழு / Dutt Committee

23. ஜாலியன் வாலாபாக் படுகொலை நிகழ்ந்த ஆண்டு

Jallianwala Bagh Massacre took place on

(a) 11 ஏப்ரல் 1918 / 11th Aptil 1918

(b) 27 மே 1918 / 27th May 1918

(c) 13 ஏப்ரல் 1919 / 13th April 1919

(d) 30 மே 1920/ 30th May 1920

24. கூற்று (A): 1929 இன் பிற்பகுதியில் உருவான உலகளாவிய மந்தநிலை இந்தியாவையும் பாதித்தது.

காரணம் (R): குறிப்பாக விவசாயப் பொருட்களின் விலைகளில் மிகக் கடுமையான வீழ்ச்சி மற்றும் ஒட்டுமொத்த ஏற்றுமதி சார்ந்த காலனித்துவப் பொருளாதாரத்தில் பெரும் நெருக்கடியைக் கொண்டு வந்தது.

Assertion (A): The World-Wide Depression which set in late 1929 affected India.

Reason (R): A very sharp fall in prices, particularly of agricultural commodities and by bringing about a major crisis in the entire export-oriented colonial economy.

(a) (A) சரி, ஆனால் (R) தவறு / (A) is true (R) is false

(b) (A) மற்றும் (R) ஆகிய இரண்டும் சரி மற்றும் (R) என்பது (A)விற்கு சரியான விளக்கமாகும். / Both (A) and (R) are true and (R) is the correct explanation of (A)

(c) (A) தவறு, ஆனால் (R) சரி / (A) is false, (R) is true

(d) (A) மற்றும் (R) ஆகிய இரண்டும் சரி ஆனால் (R) என்பது (A)விற்கு சரியான விளக்கமல்ல / Both (A) and (R) are true but (R) is not correct explanation of (A)

25. “இந்திய தொண்டர் சங்கத்தை” தொடங்கியவர்

“Servants of India Society” was founded by

(a) மகாத்மா காந்தி / Mahatma Gandhi

(b) கோபால கிருஷ்ண கோகலே / Gopala Krishna Gokhale

(c) சுபாஷ் சந்திர போஸ் / Subash Chandra Bose

(d) தாதாபாய் நௌரோஜி / Dadabhai Naoroji

26. ராஜ்மஹால் பகுதியில் “டொமின்-இ-கோ” என்றால் என்ன?

What is Damin-i-koh in Rajmahal area?

(a) கோல் இனத்தரின் இடம் / Place of the Kol tribes

(b) முண்டோ இனத்தரின் இடம் / Place of the Munda tribes

(c) சந்தால் இனத்தரின் இடம் / Place of the Santhal tribes

(d) மலபாரின் ஒரு பகுதி / It’s place in Malabar

27. சென்னை மாகாணத்தின் நீதிக்கட்சியிலிருந்து முதல் அமைச்சராக இருந்தவர்

The first Chief Minister of Madras Presidency from Justice Party was

(a) பொப்பிலி அரசர் / Raja of Bobbili

(b) பனகல் அரசர் / Raja of Panagal

(c) ராஜன் / Rajan

(d) சுப்பாராயலு / Subbarayalu

28. கீழ்வருவனவற்றுள் மாறுபாடான ஒன்றை கண்டுபிடி:

Find the odd one from the following options

(a) கட்டபொம்பன் கும்பி பாடல் / Kattabomman Kummipadal

(b) கான் சாகிப் சண்டை / Khan Sahebu Sundai

(c) கட்டபொம்மன் கூத்து / Kattabaomman Kotthu

(d) நந்தனர் சரித்திர கீர்த்தனைகள் / Nandanar Charithra Keerthanaigal

29.”அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல” – இவ்வுவமை உணர்த்தும் பொருள்

What does this simile mean

Agalvarai thangum Nilam pol……….

(As earth bears up the men…)

(a) பொறையுடைமை / Forbearance

(b) ஒழுக்கமுடைமை / Decorous conduct

(c) நட்புடைமை / Friendship

(d) அறிவுடைமை / Knowledge

30. தமிழின் முதல் சென்ரியூ தொகுப்பான “ஒரு வண்டி சென்ரியூ” என்னும் நூலின் ஆசிரியர் யார்?

Identify the author of “Our Vandi centriyu” – Which is the first and foremost centriyu collection in Tamil?

(a) ஈரோடு தமிழன்பன் / Erode Tamilanban

(b) அப்துல் ரகுமான் / Abdul Rahman

(c) அறிவுமதி / Arivumathi

(d) மீரா / Meera

31. “கிழக்கின் டிராய்” என அழைக்கப்படுவது

It is called as “Tray of the East”

(a) வேலூர் கோட்டை / Vellore Fort

(b) செஞ்சிக் கோட்டை / The fort at Chenji

(c) தரங்கம்பாடி கோட்டை / Fort of Tarangampadi

(d) சிவகங்கை கோட்டை / Sivaganga Fort

32. ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல்

போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை

– அடுத்த வரிகள்

To help means to serve the needy

To protect means to live with loved ones

Identify the next line

(a) அன்பெனப்படுவது தன்கிளை செறாஅமை / To love means not to live within ones’s clean

(b) பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுதல் / To have personality means to have decorum

(c) அறிவெனப்படுவது பேதையர் சொல் நோன்றல் / To have knowledge means to ignore inexperienced

(d) செரிவெனப்படுவது கூறியது மறாஅமை / To have self righteousness means to keep up promises

33. பின்வரும் நூல்களில் பதினெண் மேற்கணக்கு வகையைச் சேர்ந்தது எது?

Which of the following books belongs to the “Padhinen Melkanakku”?

(a) திருக்குறள் / Thirukural

(b) திருமுருகாற்றுப்படை / Thirumurugatru Padai

(c) திருப்பாவை / Thirupavai

(d) திருத்தொண்டர் புராணம் / Thiruthondar Puranam

34. சங்க காலத்தின் சமுதாயத்தில் நிலவி வந்த உடன்கட்டை ஏறும் வழக்கத்தை எடுத்துக் கூறுவது

In Sangam Society, the custom of sati was mentioned by

(a) தொல்காப்பியம் / Tolkappiyam

(b) எட்டுத்தொகை / Ettutogai

(c) பத்துப்பாட்டு / Pathu Pattu

(d) பதினெண் கீழ்கணக்கு / Padinenkilkkannakku

35. 2019-2020 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் பட்ஜெட்டில் TANGEDCO பின்வரும் மாவட்டங்களில் மிதக்கும் சூரிய மின் திட்டத்தை நிறுவும்.

(அ) தேனி

(ஆ) நீலகிரி

(இ) ஈரோடு

(ஈ) சேலம்

சரியான விடையை குறியீடுகளைப் பயன்படுத்தி தெரிவு செய்க:

In 2019-2020, Tamilnadu budget TANGEDCO will be establish the floating solar power projects in the following districts.

i. Theni.

ii. The Nilgiris.

iii. Erode.

iv. Salem

Select the correct answer by using codes.

(a) (அ) மற்றும் (ஆ) / i and ii

(b) (அ), (ஆ) மற்றும் (இ) / i,ii and iii

(c) (அ), (ஆ) மற்றும் (ஈ) / i,ii and iv

(d) (அ), (இ) மற்றும் (ஈ) / i, iii and iv

36. பின்வரும் அட்டவணையில் கொடுக்கப்பட்டு குறியீடுகளை பயன்படுத்தி சரியான விடையினை அட்டவணை-I உடன் அட்டவணை-IIஐ பொருத்துக.

அட்டவணை-I அட்டவணை-II

(a) வறுமை ஒழிப்புத் திட்டம் 1. மதிய உணவு

(b) மக்கள் மேம்பாட்டுத் திட்டம் 2. இந்திரா ஆவாஸ் யோஜனா

(c) சமூக உதவித் திட்டம் 3. தேசிய முதியோர் பென்ஷன்

(d) அடிப்படைத் தேவைகள் திட்டம் 4. MGNREGA

Match the List I with List II and select the correct answer from the codes given below:

List I List II

a. Poverty Reduction Programme 1. Mid day meals

b. Human Development Scheme 2. Indira Awas Yojana

c. Social Assistance Scheme 3. National Old Age Pension

d. Minimum Need Scheme 4. MGNREGA

a b c d

a. 4 1 3 2

b. 2 3 4 1

c. 3 4 1 2

d. 4 3 2 1

37. பொருத்துக:

a. இறையாண்மை 1. எல்லா வித வேற்றுமையையும் தகர்க்க சமூக மாற்றத்தை உருவாக்குதல்

b. பொது நலக்கோட்பாடு 2. மக்களால், மக்களுக்காக, மக்களாகவே செய்யும் ஆட்சி

c. மதச்சார்பற்ற 3. ஏந்த மதத்தை வேண்டுமானாலும் பின்பற்ற பறைசாற் சுதந்திரம்

d. ஜனநாயகம் 4. முற்றிலும் அரசியல் சுதந்திரம் மற்றும் இறை அதிகாரம்

Match the following:

a. Sovereignty 1. Promoting social change to end all forms of inequalities.

b. Socialism 2. Government of the people, by the people and for the people

c. Secularism 3. Freedom to profess, preach and practice any religion

d. Democracy 4. Complete political freedom and supreme authority

a b c d

a. 4 1 3 2

b. 2 1 4 3

c. 3 2 1 4

d. 1 2 3 4

38. வலியுறுத்தல் (A): சமூக பொருளாதார வளர்ச்சிக் கொள்கையானது வருவாய்-நுகர்வு மறுபங்கீடு செய்வதை முக்கிய நோக்கமாக கொண்டிருக்க வேண்டும்

காரணம் (R): உற்பத்தியால் மட்டுமே கணிசமான வறுமை குறைப்பு சாத்தியமாகும். அது ஏழை பிரிவு மக்களுக்கு சாதகமாக வருவாய் மறுபகிர்வு செய்ய உதவும்.

Assertion (A): The Socio economic growth strategy should aim at a significant redistribution of income and consumption

Reason (R): A substantial reduction in poverty is possible only through production relations which help redistribution of income in favour of the poorer sections of the population.

(a) (A) மற்றும் (R) இரண்டும் உண்மை, ஆனால் (R) என்பது (A)-வினுடைய சரியான விளக்கமல்ல / Both (A) and (R) are true but (R) is not a correct explanation of (A)

(b) (A) என்பது உண்மை ஆனால் (R) என்பது தவறு / (A) is true but (R) is false

(c) (A) என்பது தவறு ஆனால் (R) என்பது உண்மை / (A) is false but (R) is true

(d) (A) மற்றும் (R) இரண்டும் உண்மை, மற்றும் (R) என்பது (A)விற்கு சரியான விளக்கமாகும் / Both (A) and (R) are true and (R) is the correct explanation of (A)

39. பின்வரும் தனிமங்களில், ஒரு அணுக்கரு உலையில் கட்டுப்பாட்டுத் தண்டுகள் செய்யப்பயன்படுவது எது?

Which of the following material is used to make control rods in a nuclear reactor?

(a) சோடியம் / Sodium

(b) காட்மியம் / Cadmium

(c) பொட்டாசியம் / Potassium

(d) இரும்பு / Iron

40. நிலம் மற்றும் கடல் காற்று மற்றும் வியாபார காற்று இதனால் உருவாகிறது ———-

Land and Sea breezes and trade winds are formed due to

(a) வெப்பச்சலனம் / Convection

(b) வெப்பக்கடத்தல் / Heat conduction

(c) வெப்ப கதிர்வீச்சு / Heat Radiation

(d) சிதறல் / Scattering

41. எதிர்கால உற்பத்தி செய்தலில் முப்பரிமான அச்சு முறை மரபு சார்ந்த உற்பத்தியைக் காட்டிலும் விரும்பப்படுகிறது எதனால்?

“The future of manufacturing” – 3D printing is preferred than traditional manufacturing is due to which of the following reasons?

(a) விலை குறைவு / Cost reduction

(b) தரம் மற்றும் விரைவான விற்பனை / Quality and Faster marketing

(c) குறைந்த கழிவு / Low Wastage

(d) இவை எல்லாம் /All the above

42. இராணித்தேனீயின் அதிகபட்ச வாழ்வுக்காலம்

The maximum life span of the queen honeybee is upto

(a) 24 வருடம் / 24 years

(b) 21 வருடம் / 21 years

(c) 15 வருடம் / 15 years

(d) 5 வருடம் / 5 years

43. இந்தியாவில் பழங்குடிகளில் ———— இதில் எந்த பழங்குடி இடம்பெறாது.

Which tribal group is not included in Tribes of India?

(a) திராவிடியன் பழங்குடி / Dravidian Tribe

(b) மங்கலாய்டு பழங்குடி / Mongoloid Tribe

(c) துர்கியோ-இரானியன் பழங்குடி / Turko-Iranian Tribe

(d) ஆஸ்டோலாய்டு பழங்குடி / Austoloid Tribe

44. இரண்டாவது பசுமை புரட்சியின் முக்கிய நோக்கம்:

The main objective of second Green Revolution

(a) உணவுப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக விவசாய உற்த்தித் திறனை உயர்த்துவது / To raise the agricultural productivity to promote food security

(b) நிலையான விவசாயத்தை மேம்படுத்துவதற்காக / To promote sustainable agriculture

(c) விவசாயிகளின் தனிநபர் வருமானத்தை அதிகரிக்க / To increase the per capita income of famrers.

(d) மேற்கூறிய அனைத்தும் / All the above

45. பின்வருவனவற்றுள் இந்தியாவில் குறைந்த அளவு மழைப்பொழிவினை பெறும் பிரதேசம் எது?

Which of the following regions receive minimum rainfall in India?

(a) மேற்கு மத்தியப்பிரதேசம் / Western Madhya Pradesh

(b) மேற்கு இராஜஸ்தான் / Wester Rajasthan

(c) கிழக்கு மத்தியப்பிரதேசம் / Eastern Madhya Pradesh

(d) ஒரிசா / Orissa

46. சர்வதேச மகளிர் தினம் 19-ஆம் தேதி மார்ச் மாதம் முதல் முறையாக எந்த வருடம் கொண்டாடப்பட்டது?

The first International Women’s Day got celebrated on March 19th in Which year?

(a) 1911

(b) 1913

(c) 1916

(d) 1921

47. “பறக்கும் சீக்கியர்” என்று பிரபலமாக அறியப்படும் புகழ்பெற்ற விளையாட்டு வீரர்

“Flying Sikh” popularly called as famous sports man is

(a) மனோஜ் சிங் / Manoj Singh

(b) மில்கா சிங் / Milkha Singh

(c) மித்ரா சிங் / Mithra Singh

(d) மதன் சிங் / Madhan Singh

48. “தெலுங்கானா” என்ற பெயர் எந்த வார்த்தையை குறிக்கிறது.

The name “Telangana” refers to the word

(a) திரிலிங்கா தேசம் / Trilinga Dess

(b) தெலுங்கு தேசம் / Telugu Dess

(d) மலை தேசம் / Tribe Dess

(d) திரிபுரா தேசம் / Thiribura Dess

49. தற்போதைய தெலுங்கானா மாநில கவர்னர் யார்?

Current Telungana state Governor is

(a) தமிழிசை சௌந்தர்ராஜன் / Tamilisai Soundararajan

(b) தமிழ் செல்வி / Tamilselvi

(c) சௌந்தர்ராஜன் / Soundararajan

(d) கண்ணய்யா / Kannaiah

50. கோட்டை இல்லாத ஒரே சிந்துசமவெளி நகரம் எது?

In which sites of the Indus Valley had no citadel?

(a) சான்குதாரோ / Chanhudaro

(b) லோத்தல் / Lothal

(c) கலிபங்கன் / Kalibangan

(d) ரங்பூர் / Rangpur

51. தைமூர் படையெடுப்பின் போது டில்லி சுல்தானில் சுல்தானாக இருவ்தவர் பெயர்?

Name the Sultan of Delhi Sultanate at the time of Timur invasion

(a) தௌலத் கான் லோடி / Daulat Khan Lodi

(b) கியாசுதின் துக்ளக் / Ghiyasuddin Tughlaq

(c) பெரோஸ் ஷா துக்ளக் / Firoz Shah Tughlaq

(d) நஸீருதின் முகமது ஷா துக்ளக் / Nasiruddin Mohammad Shah Tughlaq

52. கீழ்க்கண்டவற்றுள் சிவாஜியின் மிகப்பெரிய சாதனை எது?

Among the following, what way the great achievement of Shivaji?

(a) மராத்திய பேரரசின் தந்தை / He was the father of the Marathen nation

(b) மொகலாயப் படையை தோற்கடித்தார் / Defeated the Mughal Forces

(c) மிகச்சிறந்த ஆட்சியாளர் / He was a besurobent ruler

(b) மொகலாயப் பேரரசின் விரிவாக்கத்தினை தென் இந்தியாவில் தோன்ற செய்தார் / Checked expansion of Mughal empire in the South India

53. மற்ற அரசர்களுக்கு ஒரு பிள்ளை அல்லது இரண்டு பிள்ளைகள் இருக்கலாம். ஏனக்கோ பல்லாயிரக்ணக்கான பிள்ளைகள் இருக்கின்றனர். அதாவது, அவர்கள் தாம் என்னுடைய துருக்கிய அடிமைகள்; அவர்கள்தாம் என்னுடைய ஆட்சிப் பகுதிகளுக்கு வாரிசுகள்; அப்பகுதிகளில் எல்லாம் என் பெயரை குத்பா (Khutba) அழியா வண்ணம் “பாதுகாப்பர்” என்ற வாக்கியத்தை கூறியது யார்?

“Some rulers may have one or two children’s; For me, I have thousands of my children, they are none other than my Turkic slaves. They are the rulers of my conquered provinces. The will certainly reverberate my name during Kutba’s”. Who said the above statement?

(a) பஹாஹயுத்தீன் குர்ஷப் / Baha-ud-Din Gurshasp

(b) கஜினியின் மஹ்மூத் / Mahmud of Ghazani

(c) ஷிஹாபுத்தீன் முஹம்மத் / Shihabu-d-Din Muhammad

(d) குத்புத்தீன் ஐபெக் / Qutbu-d-Din Aybak

54. தேர்தல் ஆணையம் தனது வருடாந்திர அறிக்கையை யாருக்கு சமர்பிக்க வேண்டும்?

To whom does the Election Commission submit its annual report?

(a) மக்கள் சபை / Lok Sabha

(b) மாநிலங்கள் சபை / Rajya Sabha

(c) இந்திய பாராளுமன்றம் / Parliament of India

(d) இந்திய குடியரசுத் தலைவர் / President of India

55. உள்ளாட்சித் துறை அரசாங்கத்தில் தேர்தல் கட்டாயம் என்று கூறிய சட்டத்திருத்தம்

Elections to the local government bodies are made mandatory by which amendment?

(a) 72-வது சட்டத்திருத்தம் / 72nd Amendment

(b) 73-வது சட்டத்திருத்தம் / 73rd Amendment

(c) 64-வது சட்டத்திருத்தம் / 64th Amendment

(d) 63-வது சட்டத்திருத்தம் / 63rd Amendment

56. வழிகாட்டு நெறிமுறைக் கோட்பாடுகளின் பயன்பாடுகள் கீழ்க்காணப்படுபவைகளில் எது/எவை?

1. நெகிழா அரசியலமைப்பு

2. கவர்னர் நியமனம்

3. ஒருங்கிணைந்த நீதித்துறை

Which among the following is/are the utility of Directive Principles of State Policy?

1. Rigid Constitution.

2. Appointment of Governor

3. Integrated Judiciary

(a) 1,3

(b) 1,2

(c) 2,3

(d) மேற்கூறிய அனைத்தும் / All the above

57. பலபரிமாண வறுமை குறியீடு கீழ் உள்ள குறிகாட்டிகளில் எவற்றை உள்ளடக்கவில்லை?

Multidimensional Poverty Index includes the indicators except,

(a) கல்வி / Education

(b) சந்தை / Market

(c) சுகாதாரம் / Health

(d) வாழ்க்கை நிலை / Living Conditions

58. “தொலைந்து போன பெண்கள்” – என்பது?

What do you mean by mission women?

(a) அதிகபடியான பெண்குழந்தைகள் கருவுறுதலை அளவிடுதல் / Quantifying Excess female fertility

(b) அதிகபடியான பெண்கள் குற்றங்களிலிருந்து தப்பிப்பதை அளவிடல் / Quantifying Excess female obscanding from the crime

(c) அதிகபடியான பெண்கள் இறப்பு விகிதத்தை அளவிடல் / Quantifying Excess female mortality

(d) அதிகபடியான பெண்குழந்தைகளின் படிப்பின்மையினை அளவிடல் / Quantifying Excess female illiteracy

59. வரி வருமானங்களில் அடங்குவன:

1. வருவாய், செலவுகள் மீது போடப்படும் வரி.

2. சொத்துக்கள் மீது போடப்படும் வரி.

3. பொருள்கள் மீது போடப்படும் வரி.

4. பங்குகள் மற்றும் வட்டிகளின் ரசீது

Tax Revenue are

1. Taxes on income and expenditure.

2. Taxed on property.

3. Taxes on Commodities.

4. Interest receipts and dividends.

(a) 1, 2 மற்றும் 4 / 1,2 and 4

(b) 1, 2 மற்றும் 3 / 1,2 and 3

(c) 3, 4 மற்றும் 2 / 3, 4 and 2

(d) மேலே உள்ள அனைத்தும் / Above all

60. “இந்தியாவின் பிஸ்மார்க்” என்று அழைக்கப்பட்ட சிறந்த இந்திய தலைவர்

Name the great Indian leader is known as “Bismarck of India” for his services to India.

(a) காந்தி / Gandhi

(b) நேரு / Nehru

(c) சர்தார் பட்டேல் / Sardar Patel

(d) இராஜேந்திர பிரசாத் / Rajendra Prasad

61. பட்டுகேஸ்வர தத் மற்றும் ———— மத்திய சட்டசபை மேல் 8 ஏப்ரல் 1929 அன்று குண்டு எறிந்தார்கள்.

Batukeshwar Datt and ————– threw bomb in the Central Assembly on 8th April 1929.

(a) ராம்பிரசாத் / Ram Prasad

(b) ரோஷன் லால் / Roshan Lal

(c) பகத்சிங் / Bhagat Singh

(d) ராஜ்குரு / Raj Guru

62. சாண்டர்ஸ் படுகொலை வழக்கில், 23 மார்ச் 1931 லாகூர் சிறையில் தூக்கிலிடப்பட்டவர்கள்

1. ராமபிரசாத் பிஸ்மில் மற்றும் லாலா லஜ்பத்ராய்.

2. பகத்சிங் மற்றும் ராஜ்குரு.

3. ரோஷன் லால், ராம்பிரசாத், ஹீசைனிவாலா.

4. பகத்சிங், ராஜ் குரு மற்றும் சுக்தேவ்

In Saunders Murder case ———— were executed in the Lahore Jail on 23 March 1931

1. Ram Prasad Bismil and Lal Lajpat Rai.

2. Bhagat Singh and Raj Guru.

3. Roshan Lal, Ram Prasad, Hussainiwala.

4. Bhagat Singh, Raj Guru and Sukh dev.

(a) 1 மட்டும் / 1 only

(b) 1 மற்றும் 3 / 1 and 3

(c) 2 மற்றும் 3 / 2 and 3

(d) 2 மற்றும் 4 மட்டும் / 2 and 4 only

63. மருது பாண்டியனின் தலைமையிடம் எது?

The headquarters of Maruthu Pandiyar

(a) அறங்தாங்கி / Arantangi

(b) ஒக்கூர் / Okkur

(c) பரமகுடி / Paramakudi

(d) சிறுவாயல் / Siruvayal

64. வேலூர் கலகத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த இராணுவ தளபதி யார்?

The Military General, who suppressed the Vellore Mutiny was

(a) ஜார்ஜ் கார்மிசெல் ஸ்மித் / George Carmichael Smyth

(b) ரோலோ கில்லஸ்பி / Rollo Gillespie

(c) ஜான் நிக்கல்சன் / John Nicholson

(d) வில்லியம் ஹாட்சன் / William Hodson

65. சிறுகதை ஆசிரியர்களை அவர்கள் எழுதிய சிறுகதைகளோடு தொடர்புபடுத்துக

ஆசிரியர் சிறுகதை

a. ஜெயகாந்தன் 1. விடியுமா

b. மௌனி 2. அக்னிப்பிரவேசம்

c. புதுமைப்பித்தன் 3. ஆழியாச்சுடர்

d. கு.ப.ராஜகோபாலன் 4. சாப விமோசனம்

Match the authors with their short stories

Author Short Story

a. Jayakanthan 1. Vidiyumaa

b. Mouni 2. Aknipravesham

c. Pudimaipithan 3. Azhiyaa Chudar

d. Ku.P.Rajagopalan 4. Saaba Vimochanam

a b c d

a. 3 2 4 1

b. 3 2 1 4

c. 2 3 4 1

d. 2 3 1 4

66. “பாவை பாடிய வாயால் கோவை பாடுக” என இறைவன் (சிவன்) யாரிடம் உரைத்தார்?

“Paavai Paadiya Vaayaal Kovai Padung?”

“The mouth which sang paavai will have to sing Kovai”

Whom did God Siva address this to?

(a) சுந்தரர் / Sundarar

(b) மாணிக்கவாசகர் / Manickavasakar

(c) ஞானசம்பந்தர் / Gnanasampanthar

(d) நாவுக்கரசர் / Navukkarasar

67.”லிரிக்” பாடல்கள் என்று எவ்வகைப் பாடல்களைக் குறிப்பிடுகின்றோம்?

What do you mean by “Lyric Poetry?”

(a) பக்திப் பாடல்கள் / Devotional songs

(b) வீரயுகப் பாடல்கள் / Heroic songs

(c) தன்னுணர்ச்சிப் பாடல்கள் / Emotional/romantic songs

(d) தெம்மாங்குப் பாடல்கள் / Folklore songs

68. 1. அவர் முதல் கவர்னர் ஜெனரலாக இருந்தவர்.

2. வங்காளத்தின் கவர்னராகப் பணியாற்றியவர்.

3. சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக 1937-ல் ஆனார்.

மேற்கூறிய கூற்றுக்கள் யாரை விவரிக்கிறது?

i. He was the first Indian Governor General.

ii. He served as the Governor of Bengal.

iii. He became the Chief Minister of Madras Presidency in 1937.

Who is described in the above statements?

(a) காமராஜர் / Kamaraj

(b) இராஜாஜி / Rajaji

(c) நடேசன் / Natesan

(d) முனுசாமி / Munusamy

69. 1843-ம் ஆண்டு ஆங்கிலேயரால் தமிழ்நாட்டில் ஆரம்பிக்கப்பட்ட முதல் நவீன வங்கி

Name the first modern bank in Tamilnadu was started by British in 1843

(a) செட்டிநாடு வங்கி / Bank of Chettinadu

(b) ஆர்புத்நாட் கம்பெனி / Arubuthnot & Co

(c) மதுரா வங்கி / Bank of Madura

(d) மெட்ராஸ் வங்கி / Bank of Madras

70. காக்கா கலேல்கர் ஆணையம் எதனோடு தொடர்பு உடையது?

Kaka Kalelkar Commission is related to

(a) பட்டியலின ஜாதிக்கான தேசிய ஆணையம் / The National Commission for Scheduled Castes

(b) மலைவாழ் மக்களுக்கான தேசிய ஆணையம் / The National Scheduled Tribes Comission

(c) பிற்படுத்தப்பட்டோர் தேசிய ஆணையம் / The Backward Class commission

(d) ஆங்கிலோ இந்தியருக்கான அமைப்பு / The Anglo Indian Community

71. இந்திய அரசியலமைப்பில் உள்ள பட்டியல் சாதிகள், பட்டியல் பழங்குடியினர் மற்றும் பிற பலவீனமான பிரிவுகளின் கல்வி மற்றும் பொருளாதார நலன்களை ஊக்குவிக்கும் பிரிவை அடையாளம் காணவும்.

Identify the article which promotes educational and economic interests of Scheduled Castes, Scheduled tribes and other weaker sections.

(a) பிரிவு 46 / Article 46

(b) பிரிவு15 / Article 15

(c) பிரிவு 334 / Article 334

(d) பிரிவு 342 / Article 342

72. பின்வரும் கூற்றுக்களில் சுய-மரியாதை இயக்கத்தைப் பற்றி சரியானது எது?

Which among the following statements is true with Self- Respect movement?

(a) சுய-மரியாதை இயக்கம் என்பது உயர் சாதி இந்துக்களுக்கு எதிரான ஒரு சமூகப்போராட்டம் / Self-Respect Movement is a social protest against upper caste Hindus.

(b) சுய-மரியாதை இயக்கம் சமூக சுதந்திரத்தின் மீதே அதிக ஈடுபாடு கொண்டிருந்தது. / Self-Respect movement was more interested in social freedom

(c) சுய-மரியாதை இயக்கம் பெரும்பாலும் நிலமுள்ள வர்க்கத்திற்காகவே முறையிட்டது / Self-Respect movement directed its appeal mainly to land owning class.

(d) சுய-மரியாதை அரசியல் சுதந்திரத்தை பெறுவதற்காக தோற்றுவிக்கப்பட்டது / Self-Respect movement was initiated to win political independence.

73. ஜவஹர்லால் நேரு தன்னுடைய தமிழ்நாட்டுச் சுற்றுப் பயணத்தின் போது இந்தியாவின் 90% தீப்பெட்டி பங்களிப்பினை செய்வதால் “சிறிய ஜப்பான்” என்று குறிப்பிட்டது.

Jawaharlal Nehru referred to the following town in Tamilnadu as “Little Japan” because it contributes to 90% of India’s production of safety matches.

(a) கரூர்/ Karur

(b) சிவகாசி / Sivakasi

(c) காஞ்சிபுரம் / Kanchipuram

(d) சிவகங்கை / Sivaganga

74. பின்வரும் அட்டவணையில் கொடுக்கப்பட்டு குறியீடுகளை பயன்படுத்தி சரியான விடையினை அட்டவணை-I மாறிலி) உடன் அட்டவணை-II (அளவுகள்)ஐ பொருத்துக.

அட்டவணை I அட்டவணை II

a. அதிக அளவு வருவாய் வளர்ச்சி 1. கினி குணகம்

b. வருவாய் பகிர்வில் பாலினி பாகுபாடு 2. மொத்த மாநில உள்நாட்டு தலா உற்பத்தி

c. பாலின பிராந்திய ஏற்றத்தாழ்வு 3. மொத்த உள்நாட்டு உற்பத்தி

d. அதிக அளவு மொத்த வருவாய் 4. மொத்த உள்நாட்டு உற்பத்தியின்

மற்றும் உற்பத்தி வருடாந்திர வளர்ச்சி வீதம்

Match List I (variable) with List II (measures) and select the correct answer using the codes given below the list:

List I List II

(a) Rapid growth of income 1. Gini Coefficent

(b) Greater inequality in income distribution 2. Gross state domestic product per capita

(c) Greater regional imbalance 3. GDP

(d) High level of aggregate output and income 4. Average annual rates of growth of GDP

a b c d

(a) 2 4 1 3

(b) 4 1 2 3

(c) 4 1 3 2

(d) 2 3 1 4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!