Science Questions

12th Std Science Lesson Wise Questions in Tamil – Part 1

12th Std Science Lesson Wise Questions in Tamil

12th Science Lesson 1 Questions in Tamil

1] இயற்பியலின் அண்மைக்கால வளர்ச்சிகள்

1. நானோ அறிவியல் என்பது ___________ அளவுகள் வரை கொண்ட பொருள்களின் அறிவியல் ஆகும்.

A) 1 – 50 nm

B) 1 – 100 nm

C) 1 – 150 nm

D) 1 – 200 nm

விளக்கம்: நானோ அறிவியல் என்பது 1 – 100 nm அளவுகள் வரை கொண்ட பொருள்களின் அறிவியல் ஆகும். நானோ என்பது ஒரு மீட்டரில் பில்லியனில் ஒரு பங்கு அதாவது 10-9m ஆகும்.

2. கூற்று (i): நானோ என்பது ஒரு மீட்டரில் மில்லியனில் ஒரு பங்கு அதாவது 10-9m ஆகும்.

கூற்று (ii): நானோ தொழில்நுட்பம் என்பது நானோ அளவில் கட்டமைக்கப்பட்ட பொருள்களின் வடிவமைப்பு, உற்பத்தி, பண்புக்கூறுகள் மற்றும் பயன்பாடுகள் உள்ளடக்கிய தொழில்நுட்பம் ஆகும்.

A) கூற்று i சரி,ii தவறு

B) கூற்று i தவறு,ii சரி

C) கூற்று i,ii இரண்டும் சரி

D) கூற்று i,ii இரண்டும் தவறு

விளக்கம்: நானோ என்பது ஒரு மீட்டரில் பில்லியனில் ஒரு பங்கு அதாவது 10-9m ஆகும். நானோ தொழில்நுட்பம் என்பது நானோ அளவில் கட்டமைக்கப்பட்ட பொருள்களின் வடிவமைப்பு, உற்பத்தி, பண்புக்கூறுகள் மற்றும் பயன்பாடுகள் உள்ளடக்கிய தொழில்நுட்பம் ஆகும்.

3. கீழ்க்கண்ட கூற்றுக்களில் சரியற்றதை கண்டறி.

A) திண்மங்கள் துகள்களால் ஆனது. ஒவ்வொரு துகளும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான அணுக்களைக் கொண்டுள்ளது.

B) ஒரு திண்மத்தின் துகளானது 100 nm ஐ விட சிறிய அளவாக இருந்தால் அது நானோ திண்மம் எனப்படுகிறது.

C) துகளின் அளவு 100 nm ஐ விட அதிகமெனில் அது ஒரு பேரளவு திண்மம் ஆகும்.

D) நானோ மற்றும் பேரளவு திண்மங்கள் ஒரே வேதியியல் கலவையால் ஆனவையாக இருப்பதற்கான சாத்தியக்கூறு மிகவும் குறைவாகும்.

விளக்கம்: நானோ மற்றும் பேரளவு திண்மங்கள் ஒரே வேதியியல் கலவையால் ஆனவையாக இருக்கலாம். எ.கா. ZnO ஆனது பேரளவு மற்றும் நானோ ஆகிய இரு வடிவிலும் இருக்கலாம்.

4. கீழ்க்கண்டவற்றுள் மூன்று நானோமீட்டர் அகலம் கொண்டது____________

A) ஓரிழை டி.என்.ஏ

B) ஈரிழை டி.என்.ஏ

C) ஓரிழை ஆர்.என்.ஏ

D) ஈரிழை ஆர்.என்.ஏ

விளக்கம்: டி.என்.ஏ இன் ஓரிழை ஒன்று அனைத்து உயிரினங்களின் அடிப்படையில் கட்டமைப்பாக உள்ளது. ஏறத்தாழ மூன்று நானோமீட்டர் அகலம் கொண்டது,

5. கீழ்க்கண்டக் கூற்றினைக் உற்றுநோக்கி சரியானதைக் கண்டறி.

1) மார்ஃபோ பட்டாம்பூச்சியின் இறக்கைகளில் உள்ள செதில்கள் நானோ அமைப்புகளைக் கொண்டுள்ளன.

2) அவை ஒளி அலைகள் ஒன்றுடன் ஒன்று இடைவினை புரியும் வழியை மாற்றி இறக்கைகளுக்கு உலோக நீல நிறத்தையும் பச்சை சாயல்களையும் அளிக்கின்றன.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

6. மயில் இறகுகள் மாறுபட்ட நிறங்களைப் பெறுவதற்கான காரணங்களுல் சரியானது.

A) அவை இருபது நானோ மீட்டர் தடிமன் கொண்ட 2 பரிமாண ஒளிப்படிக அமைப்புகளுடன் ஒளி இடைவினை புரிவதால்.

B) அவை பத்து நானோ மீட்டர் தடிமன் கொண்ட 4 பரிமாண ஒளிப்படிக அமைப்புகளுடன் ஒளி இடைவினை புரிவதால்.

C) அவை பத்து நானோ மீட்டர் தடிமன் கொண்ட 2 பரிமாண ஒளிப்படிக அமைப்புகளுடன் ஒளி இடைவினை புரிவதால்.

D) அவை பத்து நானோ மீட்டர் தடிமன் கொண்ட 8 பரிமாண ஒளிப்படிக அமைப்புகளுடன் ஒளி இடைவினை புரிவதால்.

விளக்கம்: மயில் இறகுகள் சில பத்து நானோ மீட்டர் தடிமன் கொண்ட 2 பரிமாண ஒளிப்படிக அமைப்புகளுடன் ஒளி இடைவினை புரிவதால் அவற்றின் மாறுபட்ட நிறங்களைப் பெறுகின்றன.

7. கிளிமீனின் பற்களுக்கு நிலைப்புத்திறனை அளிப்பது________________

A) புரோட்டைட்

B) புளுரோபடைட்

C) கார்போனைட்

D) புளுரைட்

விளக்கம்: கிளி மீன் நாள்முழுதும் பவளப் பாறைகளை கடித்து நொறுக்கி கொண்டிருக்கும். கிளி மீனின் சக்தி வாய்ந்த கடிக்கு காரணம் ஒன்றுடன் ஒன்று பின்னப்பட்ட நானோ அமைப்பான நார்கள் ஆகும். புளுரோபடைட் என்ற கனிமத்தின் படிகங்கள் ஒன்றுடன் ஒன்று சஙிகிலித்தொடராக பின்னப்பட்டு உள்ளது. இந்த அமைப்பு கிளி மீனின் பற்களுக்கு அற்பதமான நிலைப்புத்திறனை அளிக்கிறது.

8. தாமரை இலையின் மேற்பரப்பில் உள்ள நானோ அமைப்பைக் காட்டும் பண்புடைய நுண்ணோக்கி______________

A) வரிக்கண்ணோட்ட எலக்ட்ரான் நுண்ணோக்கி

B) கூட்டு நுண்ணோக்கி

C) மின்னணு நுண்ணோக்கி

D) மேற்கண்ட எதுவுமில்லை

விளக்கம்: வரிக்கண்ணோட்ட எலக்ட்ரான் நுண்ணோக்கி தாமரை இலையின் மேற்பரப்பில் உள்ள நானோ அமைப்பைக் காட்டுகிறது. இதுவே தாமரை இலையின் தானே சுத்தப்படுத்திக்கொள்ளும் செயல்பாட்டிற்கு காரணமாகும்.

9. ஆண்டரி கைம் மற்றும் கான்ஸ்டன்டின் நவோஸ்லெவ் ஆகியோரால் 2D பொருள் தனிமைப்படுத்தி வகைப்படுத்தப்பட்ட ஆண்டு.

A) 2000

B) 2003

C) 2004

D) 2005

விளக்கம்: மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் 2004 இல் ஆண்டரி கைம் மற்றும் கான்ஸ்டன்டின் நவோஸ்லெவ் ஆகியோரால் 2D பொருள் தனிமைப்படுத்தி வகைப்படுத்தப்பட்டது. இந்த ஆய்வுப் பணி 2010 இல் இயற்பியலில் நோபல் பரிசைப் பெற்றது.

10. 2010 இல் நோபல் பரிசு வழங்கப்பட்டதர்கான முக்கிய காரணம்.

A) 5D கண்டுபிடிப்பு

B) 2D கண்டுபிடிப்பு

C) 3D கண்டுபிடிப்பு

D) 4D கண்டுபிடிப்பு

11. 2016 இல் நானோ கார் உள்ளிட்ட நானோ அளவிலான இயந்திரங்களை மேம்படுத்திய ஆராய்ச்சிக்காக வேதியியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்கள்.

A) ஜியான் பியேர் சவாஜ்

B) ஃபிரேசர் ஸ்டாடர்ட்

C) பெர்னார்டு பெரிங்கா

D) மேற்கண்ட அனைவரும்

விளக்கம்: ஜியான் பியேர் சவாஜ், ஃபிரேசர் ஸ்டாடர்ட் மற்றும் பெர்னார்டு பெரிங்கா ஆகியோர் நானோ கார் உள்ளிட்ட நானோ அளவிலான இயந்திரங்களை மேம்படுத்தும் ஆராய்ச்சிக்காக 2016 இல் வேதியியலில் நோபல் பரிசு பெற்றனர்.

12. நானோ தொடர்பான ஆராய்ச்சியை வழி நடத்த ஆராய்ச்சி குழுக்கல் மற்றும் செயற்குழுக்கள் அமைக்கப்பட்ட காலம்________________

A) 1990 – 1995

B) 1980 – 1990

C) 1990 – 2000

D) 1995 – 2005

விளக்கம்: நானோ தொடர்பான ஆராய்ச்சியை வழி நடத்த ஆராய்ச்சிக் குழுக்கள் மற்றும் செயற்குழுக்கள் அமைக்கப்பட்டன. நானோ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் பயனாளர் பொருள்கள் சந்தையில் வரத்தொடங்கின.

13. நவீன நானோ தொழில்நுட்பத்தின் தொடக்ககாலமாக கருதப்படுவது____________

A) 1980

B) 1981

C) 1991

D) 1995

விளக்கம்: கெர்டு பின்னிங் மற்றும் ஹைன்ரிக் ரோரர் வரிக்கண்ணோட்ட துளைக்கும் நுண்ணோக்கியை (Scaning Tunneling Microscope- STM) மேம்படுத்தியது நவீன நானோ தொழில்நுட்பத்தின் தொடக்கமாகும். ஆராய்ச்சியாளர்கள் முதன் முதலாக பொருள்களின் மேற்பரப்பில் உள்ள அணுக்களைப் பார்க்க STM உதவியது முதல் நானோ தொழிநுட்பம் அதன் படிப்படியான வளர்ச்சியைத் தொடங்கியது.

14. அல்மேடன் ஆராய்ச்சி மையத்தில் டான் இக்ளர் மற்றும் எர்ஹார்டு ஸ்வைசர் IBM சின்னத்தை உச்சரிக்க கையாண்ட செனான் அணுக்களின் எண்ணிக்கை____________

A) 15

B) 25

C) 35

D) 45

விளக்கம்: IBM இன் அல்மேடன் ஆராய்ச்சி மையத்தில் டான் இக்ளர் மற்றும் எர்ஹார்டு ஸ்வைசர் IBM சின்னத்தை உச்சரிக்க 35 தனியான செனான் அணுக்களைக் கையாண்டனர். இந்த அணுக்களைத் துல்லியமாகக் கையாளும் திறனை காட்சிப்படுத்தியதன் மூலம் நானோ தொழில் நுட்பத்தின் அவசியம் பயன்பாடு உலகுக்கு தெரிந்தது.

15. 1974 இல் நானோ தொழில்நுட்பம் என்ற வார்த்தையை உருவாக்கியவர்______________

A) ஜியான் பியேர் சவாஜ்

B) ஃபிரேசர் ஸ்டாடர்ட்

C) பெர்னார்டு பெரிங்கா

D) நோரியோ டனிகுச்சி

விளக்கம்: மிக துல்லிய இயந்திரங்களை மேம்படுத்தும் பணியின் போது பேராசிரியர் நோரியோ டனிகுச்சி நானோ தொழில்நுட்பம் என்ற வார்த்தையை உருவாக்கினார்.

16. 1959 இல் ‘அடிமட்டத்திலேயே இன்னும் நிறைய அறைகள் உள்ளன’ என்ற தன் உறையின் மூலம் நானோ தொழில்நுட்பத்தின் கருத்துக்களை குறிப்பிட்டவர்.

A) ஜியான் பியேர் சவாஜ்

B) ரிச்சர்டு ஃபைன்மேன்

C) பெர்னார்டு பெரிங்கா

D) நோரியோ டனிகுச்சி

விளக்கம்: இந்த நானோ அறிவியல் மற்றும் நானோ தொழில்நுட்பம் ஆகிய சொற்களை உருவாக்குவதற்கு வெகு காலம் முன்பே 1959 இல் ரிச்சர்டு ஃபைன்மேன் என்ற அமெரிக்க இயற்பியலாளர் அவரது அடிமட்டத்திலேயே இன்னும் நிறைய அறைகள் உள்ளன.’ என்ற உரையில் அவற்றை வரையறை செய்யும் கருத்துக்களை குறிப்பிட்டுள்ளார். ஃபைன்மேன் அவரது உரையில்; எதிர்காலத்தில் அறிவியல் அறிஞர்கள் ஒவ்வொரு அணுவையும். ஒவ்வொரு மூலக்கூரையும் எவ்வாறு தனித்தனியாக கையாளவும், கட்டுபடுத்தவும் முடியும் என்பது போன்ற செயல்முறைகளை விவரித்தார்.

17. நானோ துகள்களை உருவாக்கும் அணுகுமுறைகள்__________

A) மேலிருந்து கீழ்

B) கீழிருந்து மேல்

C) இடமிருந்து வலம்

D) A,B இரண்டும்

விளக்கம்: நானோ பொருள்களை தயாரிக்க இரு வழிகள் உள்ளன முதலாவது மேலிருந்து கீழ் அதாவது பேரளவு திண்மங்களை நானோ அளவுக்கு உடைப்பதன் மூலம் நானோ பொருள்கள் உருவாக்கப்படுகின்றன. இரண்டாவது கீழிருந்து மேல் அதாவது நானோ பொருள்கள் அணுக்கள் மூலக்கூறுகளை ஒன்றாக கூட்டுவதன் மூலம் உருவாக்கப்படுகின்றன. எ.கா. பிளாஸ்மா.

18. பொருத்துக: நானோ தொழில்நுட்பத்தின் பயன்பாடுகள்

துறைகள் பயன்பாடுகள்

A) வாகன தொழிற்சாலை – 1. புற்றுநோய் சிகிச்சை

B) வேதித் தொழிற்சாலை – 2. பள்ளம் நிரப்பும் கலவை

C) கட்டுமானம் – 3. காகிதங்கள் செறிவூட்டம்

D) மருத்துவம் – 4. குறைந்த எடை கட்டமைப்பு

A) 1 2 3 4

B) 1 3 2 4

C) 1 2 4 3

D) 4 3 2 1

விளக்கம்:

துறைகள் பயன்பாடுகள்

A) வாகன தொழிற்சாலை – 1. குறைந்த எடை கட்டமைப்பு

B) வேதித் தொழிற்சாலை – 2. காகிதங்கள் செறிவூட்டம்

C) கட்டுமானம் – 3. பள்ளம் நிரப்பும் கலவை

D) மருத்துவம் – 4. புற்றுநோய் சிகிச்சை

19. பொருத்துக:

துறைகள் பயன்பாடுகள்

A) விளையாட்டுத்துறை – 1. தோல் பூச்சுகள்

B) அழகு சாதனப் பொருட்கள் – 2. பழ ரசங்கள் தெளிவுப்படுத்துதல்

C) உணவு (ம) பானங்கள் – 3. வாசனையூட்டிகள்

D) வீட்டு உபயோகம் – 4. டென்னிஸ் மட்டை

A) 1 2 3 4

B) 4 1 2 3

C) 1 3 2 4

D) 1 2 4 3

விளக்கம்:

துறைகள் பயன்பாடுகள்

A) விளையாட்டுத்துறை – 1. டென்னிஸ் மட்டை

B) அழகு சாதனப் பொருட்கள் – 2. தோல் பூச்சுகள்

C) உணவு (ம) பானங்கள் – 3. பழ ரசங்கள் தெளிவுப்படுத்துதல்

D) வீட்டு உபயோகம் – 4. வாசனையூட்டிகள்

20. நானோ துகள்களின் சாத்தியமான தீங்குவிளைவிக்கும் விளைவுகளுல் பொருந்தாததைக் கண்டறி.

1) நானோ துகள்கள் புரோட்டீன் போன்ற உயிரி மூலக்கூறுகளுக்கு சமமான பரிமாணங்களைக் கொண்டுள்ளன. அவை உயிரினங்களின் மேற்பரப்பினுள் எளிதாக உறிஞ்சப்படலாம் அல்லது உடலின் திசுக்கள் மற்றும் நீர்மங்களில் நுழையக்கூடும்.

2) உறிஞ்சப்படும் தன்மை நானோ துகளின் மேற்பரப்பைச் சார்ந்தது. உடலில் உள்ள குறிப்பட்ட செல், மருந்தை நேரடியாக உறிஞ்சும் வகையில் நானோ துகளின் மேற்பரப்பை வடிவமைக்க இயலும்

3) உயிர்வாழ் அமைப்புகளுடன் ஏற்படும் இடைவினையையும் நானோ துகள்களின் பரிமாணங்கள் பாதிக்கப்படுவதில்லை.

A) 1 மட்டும் தவறு

B) 2 மட்டும் தவறு

C) 3 மட்டும் தவறு

D) அனைத்தும் தவறு

விளக்கம்: உயிர்வாழ் அமைப்புகளுடன் ஏற்படும் இடைவினையையும் நானோ துகள்களின் பரிமாணங்கள் பாதிக்கின்றன.

21. யுனிமேட் எனப்படும் முதல் இலக்கமுறை செயல்பாடு கொண்ட திட்டமிடக்கூடிய ரோபோவை கண்டறிந்தவர்____________

A) ஜோசப் ஏஞ்சல்பெர்கர்

B) ஜார்ஜ் ஜேக்கப்

C) ஜார்ஜ் டிவால்

D) ஜார்ஜ் ஜோசப்

22. யுனிமேட் எனப்படும் முதல் இலக்கமுறை செயல்பாடு கொண்ட திட்டமிடக்கூடியரோபோ கண்டறியப்பட்ட ஆண்டு_______________

A) 1954

B) 1957

C) 1962

D) 1968

விளக்கம்: 1954 – இல் ஜார்ஜ் டிவால் என்பவர் யுனிமேட் எனப்படும் முதல் இலக்கமுறை செயல்பாடு கொண்ட திட்டமிடக்கூடிய ரோபோவை கண்டுபிடித்தார். நவீன இயந்திர மனிதவியல் தொழிலின் தந்தை ஜோசப் ஏஞ்சல்பெர்கர் மற்றும் ஜார்ஜ் டிவால் உலகத்தின் முதல் இயந்திர மனித நிறுவனத்தை 1956-இல் உருவாக்கினார். 1961-இல் யுனிமேட் ஆனது நியூ ஜெர்சியில் ஒரு ஜெனரல் மோட்டார்ஸ் தானியங்கிகள் தொழிற்சாலையில் கார் உதிரி பாகங்களை நகர்த்துவதற்காக இயக்கப்பட்டது.

23. நவீன இயந்திர மனிதவியல் தொழிலின் தந்தை_____________

A) ஜோசப் ஏஞ்சல்பெர்கர்

B) ஜார்ஜ் ஜேக்கப்

C) ஜார்ஜ் டிவால்

D) ஜார்ஜ் ஜோசப்

விளக்கம்: நவீன இயந்திர மனிதவியல் தொழிலின் தந்தை ஜோசப் ஏஞ்சல்பெர்கர் மற்றும் ஜார்ஜ் டிவால் உலகத்தின் முதல் இயந்திர மனித நிறுவனத்தை 1956-இல் உருவாக்கினார்.

24. 1956 – இல் உலகத்தின் முதல் இயந்திர மனித நிறுவனத்தை உருவாக்கியவர்கள்____________

A) ஜோசப் ஏஞ்சல்பெர்கர்

B) ஜார்ஜ் ஜேக்கப்

C) ஜார்ஜ் டிவால்

D) A,C இரண்டும்

விளக்கம்: நவீன இயந்திர மனிதவியல் தொழிலின் தந்தை ஜோசப் ஏஞ்சல்பெர்கர் மற்றும் ஜார்ஜ் டிவால் உலகத்தின் முதல் இயந்திர மனித நிறுவனத்தை 1956-இல் உருவாக்கினார். 1961-இல் யுனிமேட் ஆனது நியூ ஜெர்சியில் ஒரு ஜெனரல் மோட்டார்ஸ் தானியங்கிகள் தொழிற்சாலையில் கார் உதிரி பாகங்களை நகர்த்துவதற்காக இயக்கப்பட்டது.

25. பெரும்பாலான ரோபோக்கள் கீழ்க்கண்ட எந்த பாகங்களை உள்ளடக்கி உருவாக்கப்பட்டுள்ளது.

A) கட்டுப்பாட்டாளர்

B) இயந்திரவியல் பாகங்கள்

C) உணர்விகள்

D) மேற்கண்ட அனைத்தும்.

26. ரோபோக்களின் மூளையாக செயல்படும் முக்கிய பாகம்______________

A) இயந்திரவியல் பாகங்கள்

B) உணர்விகள்

C) கட்டுப்பாட்டாளர்

D) மேற்கண்ட அனைத்தும்.

27. கீழ்க்கண்டவற்றில் தொழிற்சாலை ரோபோக்களின் முக்கிய வகையினைக் காண்க.

A) கார்ட்டீசியன்

B) டெல்டா

C) SCARA

D) மேற்கண்ட அனைத்தும்

28. ரோபோக்களில் செயற்கை நுண்ணறிவினைப் பயன்படுத்துவதற்கான முக்கிய நோக்கங்களில் பொருந்தாததைக் கண்டறி.

A) கணினி விளையாட்டுகளில் விளையாடுபவரின் செயல்பாடுகளுக்கு பதில் அளித்தல்.

B) சாலைகளில் போக்குவரத்து நெரிசலை பகுப்பாய்வு செய்து போக்குவரத்தை ஒழுங்குப்படுத்துதல்.

C) ஒரு மொழியில் இருந்து மற்றொன்றிற்கு வார்த்தைகளை மொழி பெயர்ப்பு செய்யாமல் இருக்க.

D) முந்தைய செயல்களின் அடிப்படையில் முடிவுகளை எடுத்தல்.

விளக்கம்: ஒரு மொழியில் இருந்து மற்றொன்றிற்கு வார்த்தைகளை மொழி பெயர்ப்புசெய்தல்.

29. மருத்துவத்துறையில் நானோ தொழில்நுட்பத்தின் பயன்பாடுகளுல் சரியானதைக் கண்டறி.

1) இரத்த ஓட்டத்தில் சிறிய அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள பயன்படுகிறது.

2) பாக்டீரியாவுக்கு எதிராக போராடுகிறது.

3) உடலில் உள்ள தனிப்பட்ட செல்லை சீரமைக்கிறது.

A) 1, 2 மட்டும் சரி

B) 1, 3 மட்டும் சரி

C) 2, 3 மட்டும் சரி

D) அனைத்தும் சரி

30. எந்த நாட்டைச் சேர்ந்த அறிவியல் அறிஞர்கள் புற்றுநோய் கட்டிகளை அழிப்பதற்காக உலகின் முதல் தன்னிச்சையாக செயல்படும் DNA ரோபோக்களை உருவாக்கியுள்ளனர்___________

A) ஜப்பான்

B) அமெரிக்கா

C) சீனா

D) இந்தியா

விளக்கம்: சீன அறிவியல் அறிஞர்கள் உலகின் முதல் தன்னிச்சையாக செயல்படும் DNAரோபோக்களை புற்றுநோய் கட்டிகளை அழிப்பதற்காக உருவாக்கியுள்ளனர்.

31. ரோபோக்கள் உருவாக்கப் பயன்படுத்தப்படும் உலோகங்கள்_______________

A) அலுமினியம்

B) மாலிப்டினம்

C) எஃகு

D) A,C இரண்டும்

விளக்கம்: ரோபோக்களுக்கு அலுமினியம் மற்றும் எஃகு ஆகிய உலோகங்கள் பொதுவாக பயன்படுத்தப்படுகிறது. அலுமினியம் ஆனது ஒரு மென்மையான உலோகம் என்பதால் அதைக் கொண்டு எளிதாக உருவாக்கலாம். ஆனால் எஃகு ஆனது பல மடங்கு வலிமையானது இவை தகடு, கம்பி, வாய்க்கால் வடிவ கம்பி மற்றும் பிற வடிவங்களாக ரோபா உடல் பகுதிகள் கட்டமைப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது.

32. ரோபோக்களை பயன்படுத்துவதற்கான முக்கிய காரணங்களுல் தவறானதைக் கண்டறி.

A) ரோபோக்கள் மனிதர்களை விட மிகவும் விலைமதிப்புடையது.

B) ரோபோக்கள் மனிதர்களைப் போல எப்போதும் சோர்வடையாது. அவை24 × 7 மணி நேரமும் வேலை செய்யும் எனவே பணி இடத்தில் வருகை தராமை குறைக்கப்படுகிறது.

C) ரோபோக்கள் மிகவும் துல்லியமானவை மற்றும் பணியை மேற்கொள்வதில் குறைபாடு அற்றவை.

D) மனிதர்களை விட வலிமையானவை மற்றும் வேகமானவை.

விளக்கம்: ரோபோக்கள் மனிதர்களை விட மிகவும் மலிவானதாகும்.

33. ரோபோக்களை பயன்படுத்துவதனால் ஏற்படும் தீமைகளுல் பொருந்தாததைக் கண்டறி.

1) வேலை வாய்ப்பின்மை பிரச்சனை குறைக்கிறது.

2) ரோபோக்கள் வரையறுக்கப்பட்ட வேலையை மட்டுமே செய்ய இயலும் மற்றும் எதிர்பாரா சூழல்களைக் கையாள இயலாது.

3) முடிவு எடுப்பதில் ரோபோக்களால் மனிதர்களுக்கு மாற்றாக இருக்க இயலாது.

4) ரோபோக்கள் ஒரு குறிப்பிட்ட வேலையை மட்டுமே செய்ய திட்டமிடப்பட்டவை.

A) 1, 2, 3 மட்டும் தவறு

B) 1 மட்டும் தவறு

C) 2, 3, 4 மட்டும் தவறு

D) அனைத்தும் தவறு

விளக்கம்: வேலை வாய்ப்பின்மை பிரச்சனைஅதிகரிக்கும்.

34. பொருத்துக:

இயற்பியல் கண்டுபிடிப்பு கண்டுபிடித்தவர்கள்

A) X– கதிர்கள் – 1. பெலிக்ஸ் பிளாக் (ம) எட்வர்டு பர்செல்

B) கதிரியக்கக் கோட்பாடு – 2. ஜோலியட் (ம) ஐரெனி கியூரி

C) செயற்கைக் கதிரியக்கம் – 3. ஹென்றி பெக்கரல்

D) அணுக்கரு காந்த ஒத்ததிர்வு- 4. ராண்ட்ஜன்

A) 4 3 2 1

B) 4 1 2 3

C) 1 3 2 4

D) 1 2 4 3

விளக்கம்:

இயற்பியல் கண்டுபிடிப்பு கண்டுபிடித்தவர்கள்

A) X– கதிர்கள் – 1. ராண்ட்ஜன்

B) கதிரியக்கக் கோட்பாடு – 2. ஹென்றி பெக்கரல்

C) செயற்கைக் கதிரியக்கம் – 3. ஜோலியட் (ம) ஐரெனி கியூரி

D) அணுக்கரு காந்த ஒத்ததிர்வு – 4. பெலிக்ஸ் பிளாக் (ம) எட்வர்டு பர்செல்

35. பொருத்துக:

இயற்பியல் கண்டுபிடிப்பு ஆண்டு

A) X– கதிர்கள் – 1. 1952

B) கதிரியக்கக் கோட்பாடு – 2. 1896

C) செயற்கைக் கதிரியக்கம் – 3. 1895

D) அணுக்கரு காந்த ஒத்ததிர்வு – 4. 1934

A) 4 3 2 1

B) 4 1 2 3

C) 3 2 4 1

D) 1 2 4 3

விளக்கம்:

இயற்பியல் கண்டுபிடிப்பு ஆண்டு

A) X– கதிர்கள் – 1. 1895

B) கதிரியக்கக் கோட்பாடு – 2. 1896

C) செயற்கைக் கதிரியக்கம் – 3. 1934

D) அணுக்கரு காந்த ஒத்ததிர்வு – 4. 1952

36. கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையற்றதைக் கண்டறி.

1) மீயொலி – 1950

2) X– கதிர் கணிக்கும் டோமோகிராஃபி – 1989

3) டோமோகிராஃபி – கார்மாக் (ம) ஹீன்ஸ்பீள்டு

A) 1 மட்டும் தவறு

B) 2 மட்டும் தவறு

C) 3 மட்டும் தவறு

D) அனைத்தும் தவறு

விளக்கம்:

A) மீயொலி – 1950

B) X– கதிர் கணிக்கும் டோமோகிராஃபி – 1979

C) டோமோகிராஃபி – கார்மாக் (ம) ஹீன்ஸ்பீள்டு

37. கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையைக் கண்டறி.

இயற்பியல் கண்டுபிடிப்பு பயன்பாடுகள்

1) ஒளி இழை – டோமோகிராஃபி

2) லேசர் – அறுவை சிகிச்சை கருவி

3) நானோ தொழில்நுட்பம் – நானோ மருத்துவம்

4) அணுக்கரு மருத்துவம் – இணைவுப் பிம்ப தொழில்நுட்பங்கள்

A) 1, 2, 3 மட்டும் சரி

B) 2, 3, 4 மட்டும் சரி

C) 1, 3, 4 மட்டும் சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்:

இயற்பியல் கண்டுபிடிப்பு பயன்பாடுகள்

A) ஒளி இழை – எண்டோஸ்கோப்பி

B) லேசர் – அறுவை சிகிச்சை கருவி

C) நானோ தொழில்நுட்பம் – நானோ மருத்துவம்

D) அணுக்கரு மருத்துவம் – இணைவுப் பிம்ப தொழில்நுட்பங்கள்

38. கீழ்க்கண்டவற்றுள் சரியற்ற இணையைக் கண்டறி.

இயற்பியல் கண்டுபிடிப்புகள் – ஆண்டு

1) ஒளி இழை – 1940

2) லேசர் – 1960

3) நானோ தொழில்நுட்பம் – 1957

4) அணுக்கரு மருத்துவம் – 1999

A) 1, 2 மட்டும் தவறு

B) 2, 3 மட்டும் தவறு

C) 3, 4 மட்டும் தவறு

D) அனைத்தும் தவறு

விளக்கம்:

இயற்பியல் கண்டுபிடிப்புகள் – ஆண்டு

A) ஒளி இழை – 1940

B) லேசர் – 1960

C) நானோ தொழில்நுட்பம் – 1959

D) அணுக்கரு மருத்துவம் – 1998

39. இரட்டை மூல கணிக்கப்பட்ட டோமோகிராஃபி கண்டறியப்பட்ட ஆண்டு__________

A) 2002

B) 2003

C) 2004

D) 2005

40. 1998 – இல் அணுக்கரு மருத்துவத்தை கண்டறிந்த அறிவியல் அறிஞர்கள்__________

A) டேவிட் டௌன்சென்ட்

B) ரொனால்ட் நட்

C) ஐரெனி கியூரி

D) A,B இரண்டும்

41. மூளை வலியை செயலாக்குவதை நிறுத்தவும் மற்றும் மருத்துவமனையில் உள்ள நோயாளிகளின் வேதனையைக் குணப்படுத்தவும் பயன்படும் முறை______________

A) மெய்நிகர் உண்மை

B) துல்லிய மருத்துவும்

C) சுகாதார அணிகலன்கள்

D) முப்பரிமாண அச்சு

விளக்கம்: மருத்துவ மெய்நிகர் உண்மையானது மூளை வலியை செயலாக்குவதை நிறுத்தவும் மற்றும் மருத்துவமனையில் உள்ள நோயாளிகளின் வேதனையைக் குணப்படுத்தவும் திறம்பட பயன்படுத்தப்படுகிறது. அறுவை சிகிச்சை நிபுணர்கள் 3D மாதிரிகளை பயன்படுத்தி அறுவை சிகிச்சையை திட்டமிடுவதன் மூலம் மெய்நிகர் உண்மை அறுவை சிகிச்சைகளை மேம்படுத்தியுள்ளது. அது மன இறுக்கம், நினைவு இழப்பு மற்றும் மனநோயை குணப்படுத்த உதவுகிறது.

42. மண்டை ஓட்டினுள் உள்ள அழுத்தம் மற்றும் வெப்பநிலையை கண்காணிக்க உதவும் முறை_____________

A) மெய்நிகர் உண்மை

B) கம்பியில்லா மூளை உணர்விகள்

C) சுகாதார அணிகலன்கள்

D) முப்பரிமாண அச்சு

விளக்கம்: கம்பியில்லா மூளை உணர்விகள் மண்டை ஓட்டினுள் உள்ள அழுத்தம் மற்றும் வெப்பநிலையை கண்காணிக்கின்றன. மேலும் அவை உடலினால் உறிஞ்சிகொள்ளப்படுகின்றன. எனவே இந்த கருவிகளை நீக்க அறுவை சிகிச்சை தேவையில்லை.

43. பொருத்துக:

A) மெய்நிகர் உண்மை – 1. ஆஸ்துமா சிகிச்சை

B) கம்பியில்லா மூளை உணர்விகள் – 2. எலும்பு மருத்துவம்

C) முப்பரிமாண அச்சு – 3. மண்டை ஓட்டின் அழுத்தம்

D) மீத்திறன் உள் இழுப்பான்கள் – 4. மன இறுக்கம்

A) 4 3 2 1

B) 4 1 2 3

C) 3 2 4 1

D) 1 2 4 3

விளக்கம்:

A) மெய்நிகர் உண்மை – 1. மன இறுக்கம்

B) கம்பியில்லா மூளை உணர்விகள் – 2. மண்டை ஓட்டின் அழுத்தம்

C) முப்பரிமாண அச்சு – 3. எலும்பு மருத்துவம்

D) மீத்திறன் உள் இழுப்பான்கள் – 4. ஆஸ்துமா சிகிச்சை

44. கீழ்க்கண்டக் கூற்றுகளை கவனி: (சரியானதைக் கண்டறி)

1) இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அணுக்களால் உருவாக்கப்பட்டது மூலக்கூறாகும்.

2) எலக்ட்ரான்கள் அணுக்கருவை சுற்றிவருகின்றன.

3) அணுவின் மையத்தில் அமைந்த புரோட்டான்கள் மற்றும் நியுட்ரான்களால் உருவாக்கப்பட்டது அணுக்கருவாகும்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) 3 மட்டும் சரி

D) அனைத்தும் சரி

45. கடவுள் துகள்கள் என்றழைக்கப்பட்ட ஹீக்ஸ் துகள்களை கண்டறிமைந்தமைக்காக நோபல் பரிசு பெற்ற அறிவியல் அறிஞர்கள்_____________

A) பீட்டர் ஹிக்ஸ்

B) எங்லெர்ட்

C) தாமஸ் எடிசன்

D) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: 2013 ஆம் ஆண்டில் புகழ்பெற்ற ‘கடவுள் துகள்கள்’ என்று விளையாட்டாக அழைக்கப்பட்ட ஹீக்ஸ் துகள்கள் கண்டறியப்பட்டன. இதைக் கண்டறிந்ததற்காக பீட்டர் ஹிக்ஸ் மற்றும் எங்லெர்ட் என்ற இருவரும் இயற்பியலில் நோபல் பரிசைப் பெற்றனர். புரோட்டான்கள் நியூட்ரான்கள் போன்ற பல துகள்களுக்கு நிறையைக் கொடுப்பது இந்த துகள்களே ஆகும்.

46. இந்த பிரபஞ்சத்தில் ஈர்ப்பு அலைகள் இருப்பதை கண்டறியப்பட்ட ஆண்டு___________

A) 2007

B) 2007

C) 2014

D) 2015

விளக்கம்: பிரபஞ்சவியல் என்பது பிரபஞ்சத்தின் தோற்றம் மற்றும் பரிணாம வளர்ச்சியை ஆய்வு செய்யும் துறையாகும். அது விண்மீன்கள், விண்மீன்திரள் ஆகியவற்றின் உருவாக்கத்தைப் பற்றிய ஆய்வை மேற்கொள்கிறது. 2015 ஆம் ஆண்டில் ஈர்ப்பு அலைகள் இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் இந்த கண்டுபிடிப்புக்காக 2017 ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

47. 1915 ஆம் ஆண்டு ஈர்ப்பு அலைகள் இருப்பதை கருத்தியல் மூலம் முன்மொழிந்தவர்_________________

A) தாமஸ் ஆல்வா எடிசன்

B) சர்.வி. ராமன்

C) ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

D) சர் ஐசக் நியூட்டன்

விளக்கம்: உண்மையில் ஈர்ப்பு அலையின் சமீபத்திய கண்டுபிடிப்புகள், இரு கருந்துளை ஒன்றுடன் ஒன்று இணைந்து ஒரே கருந்துளையாக மாறும்போது வெளியிடப்பட்டவை ஆகும். உண்மையில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் 1915 ஆம் ஆண்டு ஈர்ப்பு அலைகள் இருப்பதை கருத்தியலாக முன்மொழிந்தார் 100 ஆண்டுகளுக்குப் பிறகு. அவரது கணிப்பு சரியானது என சோதனை வாயிலாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

48. கருந்துளைத் துறையில் ஆய்வு செய்த அறிவியல் அறிஞர்_______________

A) தாமஸ் ஆல்வா எடிசன்

B) ஸ்டீபன் ஹக்கிங்

C) ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

D) சர் ஐசக் நியூட்டன்

49. 1920 இல் “ரோஸ்ஸம் யுனிவர்சல் ரோபோக்கள்” என்ற நாடகத்தின் மூலம் ரோபோக்களை அறிமுகப்படுத்தியவர்______________

A) கார்ல் கேபக்

B) ஸ்டீபன் ஹக்கிங்

C) ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

D) சர் ஐசக் நியூட்டன்

விளக்கம்: ரோபோடிக்ஸ் என்ற சொல் ரோபோ என்ற வார்த்தையிலிருந்து உருவாக்கப்பட்டது. 1920, இல் செக் எழுத்தாளர் கார்ல் கேபக் என்பவரால் “ரோஸஸம் யுனிவர்சல் ரோபோக்கள்” என்ற நாடகத்தில் அது அறிமுகப்படுத்தப்பட்டது.

50. கீழ்க்கண்டக் கூற்றுக்களைக் கவனி: (சரியானதைக் கண்டறி)

1) ரோபோ என்ற சொல் ரோபோடிக்ஸ் என்ற வார்த்தையிலிருந்து உருவாக்கப்பட்டது.

2) ரோபோ என்ற வார்த்தை தொழிலாளர் அல்லது வேலை எனப் பொருள்படும் ‘ரோபோட்டா’ என்ற சொல்லில் இருந்து பெறப்பட்டதாகும்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: ரோபோடிக்ஸ் என்ற சொல் ரோபோ என்ற வார்த்தையிலிருந்து உருவாக்கப்பட்டது. ரோபோ என்ற வார்த்தை தொழிலாளர் அல்லது வேலை எனப் பொருள்படும் ‘ரோபோட்டா’ என்ற சொல்லில் இருந்து பெறப்பட்டதாகும்.

51. ZnO பொருளின் துகள் அளவு 30 nm இந்த பரிணாமத்தின் அடிப்படையில் அது இவ்வாறு வகைப்படுத்தப்படுகிறது.

A) பேரளவு பொருள்

B) நானோ பொருள்

C) மென்மையான பொருள்

D) காந்தப்பொருள்

52. கீழ்க்கண்டவற்றுள் இயற்கையான நானோ பொருள் எது?

A) மயிலிறகு

B) மயில் அலகு

C) மணல் துகள்

D) திமிங்கலத்தின் தோல்

53. மிகவும் நிலைத்த தன்மை கொண்ட செயற்கைப் பொருள் உருவாக்குவதற்கான திட்ட வரையறை எதனைப் பின்பற்றியது.

A) தாமரை இலை

B) மார்ஃபோ பட்டாம்பூச்சி

C) கிளிமீன்

D) மயிலிறகு

54. அணுக்களை ஒன்றுதிரட்டி நானோ பொருளை உருவாக்கும் முறை அழைக்கப்படுவது.

A) மேலிருந்து – கீழ் அணுகுமுறை

B) கீழிலிருந்து – மேல் அணுகுமுறை

C) குறுக்கு கீழ் அணுகுமுறை

D) மூலை விட்ட அணுகுமுறை

55. ‘ஸ்கி மெழுகு’ என்பது நானோ பொருளின் பயன்பாடு ஆகும். அது பயன்படும் துறை

A) மருத்துவம்

B) ஜவுளி

C) விளையாட்டு

D) வாகன தொழிற்சாலை

56. ரோபோக்களில் தசைக்கம்பிகள் உருவாக்க பயன்படும் நினைவு உலோகக்கலைகள்.

A) வடிவ நினைவு உலோகக்கலவைகள்

B) தங்கம் தாமிர உலோகக்கலவைகள்

C) தங்கம் வெள்ளி உலோகக்கலவைகள்

D) இரு பரிமாண உலோகக்கலவைகள்

57. மூளையானது வலியைச் செயலாக்குவதை நிறுத்த பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம்

A) துல்லிய மருத்துவம்

B) கம்பியில்லா மூளை உணர்வி

C) மெய்நிகர் உண்மை

D) கதிரியக்கவியல்

58. புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களுக்கு நிறையை அளிக்கும் துகள்

A) ஹிக்ஸ் துகள்

B) ஐன்ஸ்டீன் துகள்

C) நானோ துகள்

D) பேரளவு துகள்

59. ஈர்ப்பு அலைகளை கருத்தியலாக முன்மொழிந்தவர்

A) கான்ராட் ரோன்ட்ஜென்

B) மேரி கியூரி

C) ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

D) எட்வார்டு பர்செல்

60. எந்திரவியல் துறையில்பயன்படுத்தப்படும் பொருள்கள்

A) அலுமினியம் மற்றும் வெள்ளி

B) வெள்ளி மற்றும் தங்கம்

C) தாமிரம் மற்றும் தங்கம்

D) எஃகு மற்றும் அலுமினியம்

1 2Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!