General Tamil

7th Tamil Unit 9 Questions

31) காயிதே மில்லத்தின் இயற்பெயர்?

A) முகம்மது முபாரக்

B) முகமது காயிதே

C) முகமது பாஷா

D) முகமது இஸ்மாயில்

விளக்கம்: காயிதே மில்லத்தின் இயற்பெயர் முகம்மது இசுமாயில் என்பதாகும்.

32) காயிதே மில்லத் என்பது எம்மொழிச்சொல்?

A) கிரேக்கச் சொல்

B) எபிரேயச் சொல்

C) அரபுச் சொல்

D) இலத்தீன்

விளக்கம்: காயிதே மில்லத் என்னும் வார்த்தை ஒரு அரபு மொழிச் சொல்லாகும்.

33) காயிதே மில்லத் என்னும் சொல்லின் பொருள்?

A) மக்களின் வழிகாட்டி

B) சமுதாய வழிகாட்டி

C) சமூகத்தின் வழிகாட்டி

D) சமய வழிகாட்டி

விளக்கம்: காயிதே மில்லத் என்ற அரபு மொழிச் சொல்லின் பொருள் சமுதாய வழிகாட்டி என்பதாகும்

34) இந்திய சீனப் போர் எப்போது நடைபெற்றது?

A) 1963

B) 1972

C) 1998

D) 1962

விளக்கம்: இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே 1962 இல் போர் ஏற்பட்டது.

35) இந்திய-சீனப் போரின் போது இந்திய நாட்டின் முதன்மை அமைச்சராக இருந்தவர் யார்?

A) லால் பகதூர் சாஸ்திரி

B) ஜவஹர்லால் நேரு

C) காமராசர்

D) இந்திரா காந்தி

விளக்கம்: இந்தியாவிற்கும் அதன் அண்டை நாடான சீனாவிற்கும் 1962 இல் மோதல் ஏற்பட்டது. இது போராக பின்னர் உருப்பெற்றது. இப்போரின் போது இந்திய நாட்டின் முதன்மை அமைச்சராக இருந்தவர் ஜவஹர்லால் நேரு அவர்கள்.

36) இந்திய சீனாப் போரின் போர் முனைக்கு தனது ஒரே மகனை அனுப்ப ஆயத்தமாக இருப்பதாகத் தெரிவித்து அப்போதைய இந்திய முதன்மை அமைச்சரான ஜவஹர்லால் நேரு அவர்களுக்கு கடிதம் எழுதியவர்?

A) முத்துராமலிங்கத் தேவர்

B) காயிதே மில்லத்

C) நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்

D) சர்தார் வல்லபாய் படேல்

விளக்கம்: 1962 இல் ஏற்பட்ட இந்திய சீன போருக்கு தனது ஒரே மகனை அனுப்ப ஆயத்தமாக இருப்பதாகத் தெரிவித்து அப்போதைய இந்திய முதன்மை அமைச்சரான ஜவஹர்லால் நேரு அவர்களுக்கு கடிதம் எழுதினார் காயிதே மில்லத்.

37) காயிதே மில்லத்________பண்பிற்கு உதாரணமாகத் திகழ்ந்தார்?

A) தண்மை

B) எளிமை

C) ஆடம்பரம்

D) பெருமை

விளக்கம்: காயிதே மில்லத் அவர்கள் எளிமை என்னும் பண்பிற்க உதாரணமாகத் திகழ்ந்தார்.

38) விடுதலைப் போராட்டத்தின்போது காயிதே மில்லத்_______இயக்கத்தில் கலந்து கொண்டார்?

A) வெள்ளையனே வெளியேறு

B) உப்புக் காய்ச்சும்

C) சுதேசி

D) ஒத்துழையாமை

விளக்கம்: காந்தியடிகளின் வேண்டுகோள் தனக்குள் ஏற்படுத்திய தீராத விடுதலை வேட்கையினால் காயிதே மில்லத் அவர்கள் ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்துகொண்டார்.

39) ஒத்துழையாமை இயக்க காலகட்டத்தில் காயிதே மில்லத் எங்கு பயின்று கொண்டிருந்தார்?

A) திருச்சி தூயவளனார் கல்லூரி

B) தஞ்சை தூயவளனார் கல்லூரி

C) மதுரை தூயவளனார் கல்லூரி

D) நாகர்கோவில் தூயவளனார் கல்லூரி

விளக்கம்: காயிதே மில்லத் அவர்கள் காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கப் போரட்டத்தை முன்னெடுத்த போது காயிதே மில்லத் தனது கல்வியை விட நாட்டின் விடுதலையே மேலானது என்று எண்ணி அதில் கலந்து கொண்டார்.

40) காயிதே மில்லத் எவ்வாறு மரியாதையுடன் அழைக்கப்படுகிறார்?

A) பெருமைமிகு

B) கர்மவீரர்

C) கண்ணியமிகு

D) சமயத்துறவி

விளக்கம்: முகமது இஸ்மாயில் என்ற இயற்பெயர் கொண்ட காயிதே மில்லத் கண்ணியமிகு என்ற சிறப்பு பெயருடன் அழைக்கப்படுகிறார்.

Previous page 1 2 3 4 5 6 7Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!