General Tamil

12th Tamil Unit 1 Questions

181) கீழ்க்காண்பனவற்றுள் எது அணியிலக்கணத்தையும் கூறும் இலக்கண நூல் அல்ல?

A) தொல்காப்பியம்

B) வீரசோழியம்

C) இலக்கண விளக்கம்

D) தண்டியலங்காரம்

விளக்கம்: அணியிலக்கணத்தை மட்மே கூறும் இலக்கண நூல்கள்:

1. தண்டியலங்காரம்

2. மாறனலங்காரம்

3. குவலயானந்தம்

அணியிலக்கணத்தையும் கூறும் இலக்கண நூல்கள்:

1. தொல்காப்பியம்

2. வீரசோழியம்

3. இலக்கண விளக்கம்

4. தொன்னூல் விளக்கம்

5. முத்துவீரியம்

182) ஆய்த எழுத்து சொல்லின் எவ்விடத்தில் வரும்?

A) முதல்

B) இடை

C) கடை

D) முதல் மற்றும் கடை

விளக்கம்: ஆய்த எழுத்து சொல்லின் இடையில் மட்டுமே வரும். தனிச்சொல்லாயின் மூவெழுத்தாகவும், தனிக்குறிலை அடுத்தும் வரும். அஃது, எஃகு, கஃசு.

183) தவறாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க.

A) செம்பரிதி – ஈறுபோதல்

B) வானமெல்லாம் – உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே

C) உன்னையல்லால் – உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே

D) செந்தமிழே – இனமிகல்

விளக்கம்: 1. செம்பரிதி என்னும் சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது செம்மை + பரிதி என்பதாகும். இதில் ஈறு போதல் என்னும் விதிப்படி மை விகுதி கெட்டு செம் + பரிதி என வரும். இவை இணைந்து செம்பரிதி என்ற சொல் கிடைக்கும்.

2. வானமெல்லாம் – வானம் + எல்லாம்

விதி: உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே – வானமெல்லாம்.

3. உன்னையல்லால் – உன்னை-அல்லால்.

விதி: இஈஐ வழி யவ்வும் – உன்னை + ய் + அல்லால்

விதி: உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே – உன்னையல்லால்.

4. செந்தமிழே – செம்மை + தமிழே.

விதி: ஈறு போதல் – செம் + தமிழே

விதி: முன்னின்ற மெய் திரிதல் – செந்தமிழே.

184) மெல்லின எழுத்துகளில் எது சொல்லின் தொடக்கமாக வராது?

A) ஞ, ண

B) ந, ம

C) ண, ன

D) ஞ, ந

விளக்கம்: மெல்லின எழுத்துகளில் ண, ன சொல்லின் தொடக்கமாக வராது.

185) முச்சங்கங் கூட்டி

முதுபுலவர் தமைக் கூட்டி

அச்சங்கத் துள்ளே

அளப்பரிய பொருள் கூட்டி என்ற வரிகளை எழுதியவர் யார்?

A) பாரதியார்

B) பாரதிதாசன்

C) ந.காமராசன்

D) கண்ணதாசன்

விளக்கம்: முச்சங்கங் கூட்டி

முதுபுலவர் தமைக் கூட்டி

அச்சங்கத் துள்ளே

அளப்பரிய பொருள் கூட்டி

சொற்சங்க மாகச்

சுவைமிகுந்த கவிகூட்டி

அற்புதங்க ளெல்லாம்

அமைத்த பெருமாட்டி – கண்ணதாசன்

186) கூற்று: உறுப்பு, குழு, ஊர் என்பவை இன் என்னும் சாரியை பெறும்.

காரணம்: இவை பெயர்ச்சொற்கள்

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

D) கூற்று, காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது.

விளக்கம்: உறுப்பினர், குழுவினர், ஊரினர் முதலானவை (உறுப்பு, குழு, ஊர்) பெயர்ச்சொற்கள். அதனால், அவை இன் என்னும் சாரியைப் பெற்று முடிந்துள்ளன.

187) கலித்தொகையின் எந்த பகுதியில் காளைகளில் பல இனங்களைக் காட்டுகிற சொற்கள் நிரம்பிக் கிடக்கின்றன?

A) நெய்தல் கலி

B) முல்லைக் கலி

C) குறிஞ்சிக்கலி

D) மருதக்கலி

விளக்கம்: முல்லைக்கலியில், காளைகளில பல இனங்களைக் காட்டுகிற சொற்கள் நிரம்பிக் கிடக்கின்றன.

188) கூற்றுகளை ஆராய்க.

1. தனிக்குறிலை அடுத்து ரகர, ழகர ஒற்றுகள் வராது.

2. ரகரத்தை அடுத்து ரகர வரிசை எழுத்துகளும், ழகரத்தை அடுத்து ழகர வரிசை எழுத்துகளும் வரும்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. தனிக்குறிலை அடுத்து ரகர, ழகர ஒற்றுகள் வராது.

2. ரகரத்தை அடுத்து ரகர வரிசை எழுத்துகளும், ழகரத்தை அடுத்து ழகர வரிசை எழுத்துகளும் வராது.

189) தி.சு.நடராசன் பணிபுரியாத பல்கலைக்கழகம் எது?

A) திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்லைக்கழகம்

B) மதுரை காமராசர் பல்கலைக்கழகம்

C) வார்சா பல்கலைக்கழகம்

D) பாரதியார் பல்கலைக்கழகம்

விளக்கம்: திறனாய்வாளராகப் பரவலாக அறியப்படும் தி.சு.நடராசனன், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், போலாந்து நாட்டின் வார்சா பல்கலைக்கழகம், திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்தவர்.

190) கூற்றுகளை ஆராய்க.

1. ணகர ஒற்றை அடுத்து டகரம் வரும்.

2. னகர ஒற்றை அடுத்து றகரம் வரும்

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. ணகர ஒற்றை அடுத்து டகரம் வரும். கண்டு என்று வரும் கன்டு என்று வருவதில்லை.

2. னகர ஒற்றை அடுத்து றகரம் வரும். மன்றம் என்று வரும் மண்றம் என்று வருவதில்லை.

Previous page 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!