General TamilGeneral Tamil Previous Questions

Tnpsc General Tamil Previous Question Paper 6

41. கீழே காண்பனவற்றுள் பொருத்தமற்றதைத் தெரிவு செய்க

அ. தமிழகத்தின் “வேர்ட்ஸ் வொர்த்” என்று புகழப்பட்டவர் புதுவையை அடுத்த வில்லியனூரில் பிறந்த வாணிதாசன்.

ஆ. “திரைக்கவித்திலகம் அ.மருதகாசி பாடல்கள்” என்னும் தலைப்பில் அ.மருதகாசியின் பாடல்கள் தொகுக்கப்பட்டு வெளிவந்துள்ளன.

இ. நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, கந்தர் அநுபூதி, முத்துக்குமாரசுவாமி பிள்ளைத் தமிழ் ஆகிய நூலகளைக் குமரகுருபரர் பாடினார்.

ஈ. காரைமுத்துப்புலவர், வணங்காமுடி, பார்வதிநாதன், ஆரோக்கியநாதன், கமகப்பிரியா என்ற புனைபெயர்கள் கண்ணதாசனுக்கு உண்டு

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, கந்தர் அநுபூதி, முத்துக்குமாரசுவாமி பிள்ளைத் தமிழ் ஆகிய நூலகளைக் குமரகுருபரர் பாடினார்.

விளக்கம்:

நீதிநெறிவிளக்கம், சுந்தர் கலிவெண்பா, முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் ஆகியவை குமரகுருபரரால் இயற்றப்பட்டவை. கந்தர் அநுபூதி, அருணகிரிநாதரால் இயற்றப்பட்டது.

42. “இருட்டறையில் உள்ளதடா உலகம்” எனத் தொடங்கும் பாடலைப் பாடியவர் யார்?

(அ) பாரதியார்

(ஆ) பாரதிதாசன்

(இ) கவிமணி

(ஈ) நாமக்கல் கவிஞர்

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) பாரதிதாசன்

விளக்கம்:

இருட்டறையில் உள்ளதடா உலகம் – சாதி

இருக்கின்ற தென்பானும் இருக்கிறானே!

மருட்டுகின்ற மதத் தலைவர் வாழ்கின்றாரே!

வாயடியும் கையடியும் மறைவ தெந்நாள்

சுருட்டுகின்றார் தம் கையில் கிடைத்தவற்றை!

சொத்தெல்லாம் தமக்கென்று

சொல்வார் தம்மை வெருட்டுவது பகுத்தறிவே!

இல்லையாயின்

விடுதலையும் கெடுதலையும் ஒன்றோயாகும்

– பாரதிதாசன்.

சாதியை முக்கியமாகக் கருதும் சமூகத்தைத் தாக்கி புரட்சிக் கவிஞர் எழுதிய கவிதை.

43. மாணிக்கவாசகர் கட்டிய கோயில் எங்குள்ளது?

(அ) புதுக்கோட்டை

(ஆ) திருப்பெருந்துறை

(இ) திருவெண்ணெய் நல்லூர்

(ஈ) பெரியகுளம்

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) திருப்பெருந்துறை

விளக்கம்:

மாணிக்கவாசகர் சிவபெருமானுக்காக எழுப்பிய கோயில் தற்பொழுது “ஆவுடையார் கோயில்” என வழங்கப்படுகிறது. திருப்பெருந்துறையில் அமைந்துள்ளது

44. கள்ளர் சரித்திரம் என்னும் உரைநடை நூலை எழுதியவர்

(அ) ந.மு.வேங்கடசாமி நாட்டார்

(ஆ) இரா.பி.சேதுப்பிள்ளை

(இ) தொ.பொ.மீனாட்சி சுந்தரனார்

(ஈ) மு.வரதராசனார்

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) ந.மு.வேங்கடசாமி நாட்டார்

45. மரபுக் கவிதையில் வேர் பார்த்தவர், புதுக் கவிதையில் மலர் பார்த்தவர் என்று பாராட்டப்படுபவர்

(அ) முடியரசன்

(ஆ) வாணிதாசன்

(இ) சுரதா

(ஈ) அப்துல் ரகுமான்

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஈ) அப்துல் ரகுமான்

46. மு.மேத்தா எழுதிய சாகித்திய அகாடமி பரிசு பெற்ற நூல் எது?

(அ) தமிழிலக்கிய வரலாறு

(ஆ) தமிழின்பம்

(இ) கள்ளர் சரித்திரம்

(ஈ) ஆகாயத்தில் அடுத்த வீடு

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஈ) ஆகாயத்தில் அடுத்த வீடு

விளக்கம்:

மு.மேத்தா எழுதிய “ஆகாயத்தில் அடுத்தவீடு” என்ற கவிதை நூலுக்கு 2006-இல் சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டது

47. வீரம் இல்லாத வாழ்வும் விவேகமில்லாத வீரமும் வீணாகும் என எடுத்துரைத்தவர்

(அ) கண்ணதாசன்

(ஆ)பாரதியார்

(இ) பாரதிதாசன்

(ஈ) பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர்

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஈ) பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர்

48. தமிழ்-பிரெஞ்சு கையகர முதலி என்ற நூலை வெளியிட்ட கவிஞர்

(அ) கண்ணதாசன்

(ஆ) வாணிதாசன்

(இ) பாரதிதாசன்

(ஈ) முடியரசன்

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) வாணிதாசன்

49. பொருத்துக:

புனைப்பெயர் இயற்பெயர்

(அ) புதுமைப்பித்தன் – 1.ஜெகதீசன்

(ஆ) ஈரோடு தமிழன்பன் – 2. எத்திராஜ்

(இ) வாணிதாசன் – 3.முத்தையா

(ஈ) கண்ணதாசன் – 4.சொ.விருத்தாசலம்

அ ஆ இ ஈ

(அ) 2 3 4 1

(ஆ) 4 1 2 3

(இ) 3 4 1 2

(ஈ) 4 3 2 1

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) 4 1 2 3

50. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக:

தத்தை, சுகம், வெற்பு, கிள்ளை

(அ) சுகம்

(ஆ) கிள்ளை

(இ) வெற்பு

(ஈ) தத்தை

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) வெற்பு

விளக்கம்:

வெற்பு-மலை. சுகம்,கிள்ளை, தத்தை ஆகிய அனைத்தும் கிளியைக் குறிக்கும் சொற்களாகும்.

Previous page 1 2 3 4 5 6 7 8 9Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!