General Tamil

7th Tamil Unit 5 Questions

31) “நன்றின்பால் உய்ப்பது அறிவு” என்ற கூறியவர் யார்?

A) சமண முனிவர்

B) நக்கீரர்

C) கபிலர்

D) திருவள்ளுவர்

விளக்கம்: நல்ல செயலை செய்ய, இன்னொருவர் வந்து சொல்ல வேண்டும் என்று காத்திருக்கக் கூடாது என்பதே இதன் பொருளாகும்.

32) இளம்பிள்ளைகளை நல்ல குடிமக்களாக உருவாக்கும் திறன் பெற்றவர்கள் யார்?

A) பெற்றோர்

B) ஆசிரியர்

C) சான்றோர்

D) அரசு

விளக்கம்: இளம்பிள்ளைகளை நல்ல குடிமக்களாக உருவாக்கும் திறன் பெற்றவர்கள் ஆசிரியர்களே.

33) “பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்குவோம்

எங்கள் பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்” இப்பாடல் யாருடையது?

A) நாமக்கல் கவிஞர்

B) பாரதிதாசன்

C) சுரதா

D) பாரதி

விளக்கம்: நமது எதிர்காலத்தை உருவாக்கும் பள்ளிக்குக் கோயில் என்று பெயர் வைத்தவர் பாரதியார்.

34) உலகப்பொதுமறை திருக்குறள் உரை விளக்கம் என்னும் நூலின் ஆசிரியர் யார்?

A) பாரதி

B) பாரதிதாசன்

C) வீ.முனுசாமி

D) வள்ளுவர்

விளக்கம்: திருக்குறள் வகுப்புகள் நடத்தியும், தொடர் சொற்பொழிவுகள் நிகழ்த்தியும் திருக்குறளைப் பரப்பும் பணி செய்தவர் திருக்குறளார் வீ. முனிசாமி. இவை நகைச்சுவை ததும்பும் தமது பேச்சால் மக்களைக் கவர்ந்தவர்.

35) வீ. முனுசாமி-ன் புகழ் பெற்ற நூல் எது?

A) வள்ளுவர் உள்ளம்

B) வள்ளுவர் காட்டிய வழி

C) திருக்குறளில் நகைச்சுவை

D) உலகப்பொதுமறை திருக்குறள் உரை விளக்கம்

விளக்கம்: மேற்கண்ட அனைத்து நூல்களும் வீ. முனுசாமி-ன் நூல்களே. அவற்றுள் பெரும் புகழ் பெற்ற நூல் “உலகப்பொதுமறை திருக்குறள் உரை விளக்கம்” என்பதாகும்.

36) திருக்குறளார் வீ.முனுசாமி-ன் எந்த நூலிலிருந்து “வாழ்விக்கும் கல்வி” என்ற பாடல் தொகுக்கப்பட்டது?

A) வள்ளுவர் உள்ளம்

B) வள்ளுவர் காட்டிய வழி

C) திருக்குறளில் நகைச்சுவை

D) சிந்தனைக் களஞ்சியம்

விளக்கம்: வள்ளுவர் உள்ளம், வள்ளுவர் காட்டிய வழி, திருக்குறளில் நகைச்சுவை, உலகப்பொதுமறை திருக்குறள் உரை விளக்கம், சிந்தனைக் களஞ்சியம் ஆகியவை வீ. முனுசாமியின் நூல்கள் ஆகும்.

37) கல்வியல்லாத நாடு_______வீடு போன்றது.

A) விளக்கில்லாத

B) பொருளில்லாத

C) கதவில்லாத

D) வாசலில்லாத

விளக்கம்: கல்வியில்லாத நாடு விளக்கில்லாத வீடு போன்றது. விளக்கில்லாத வீட்டில் யாரும் குடியிருக்க மாட்டார்கள். அதேபோல், கல்வியில்லாத குடும்பத்தை யாரும் மதிக்க மாட்டார்கள்.

38) “உயர்வடைவோம்” பிரித்தெழுதுக.

A) உயர் + வடைவோம்

B) உயர் + அடைவோம்

C) உயர் + வடைவோம்

D) உயர் + அடைவோம்

விளக்கம்: உயர்வடைவோம் – உயர் + அடைவோம் என்றுப் பிரியும்.

39) இவை + எல்லாம் – சேர்த்தெழுதுக

A) இவையெல்லாம்

B) இவையெல்லாம்

C) இதுயெல்லாம்

D) இவயெல்லாம்

விளக்கம்: இவை + எல்லாம் – என்பது இவையெல்லாமம் என்றுப் புணரும்

40) “இளமையில் கல்” என்று கூறியவர் யார்?

A) ஒளவையார்

B) பாரதியார்

C) பாரதிதாசன்

D) திருவள்ளுவர்

விளக்கம்: “இளமையில் கல்” என்று கூறியவர் ஒளவையார். இளமைப்பருவம் கல்விக்கே உரியதாகும். இளமையில் கற்கும் கல்வி, ஒருவனை சான்றோனாக்கும்.

Previous page 1 2 3 4 5 6 7 8 9Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!