General TamilTnpsc

General Tamil Model Question Paper 16

71. “நெடுந்தேர் ஊர்மதி வலவ”

இந்த அகநானூற்று அடியில் உள்ள “வலவ” என்பதன் பொருள்

(அ) தேர்ப்பாகன்

(ஆ) யானைப்பாகன்

(இ) வாயிற்காப்போன்

(ஈ) போர்வீரன்

விடை மற்றும் விளக்கம்

(அ) தேர்ப்பாகன்

72. “தீயினாற் சுட்டபுண் உள்ளாறும்; ஆறாதே

நாவினாற் சுட்ட வடு”

இக்குறட்பாவின் படி கீழ்க்கண்டவற்றுள் எது சரி?

(அ) தீப்புண், நாப்புண் ஆறாதவை

(ஆ) நாப்புண் ஆறும்; தீப்புண் ஆறாது

(இ) தீப்புண் ஆறும்; நாப்புண் ஆறாது

(ஈ) தீப்புண்ணும், நாப்புண்ணும் ஆறிவிடும்

விடை மற்றும் விளக்கம்

(இ) தீப்புண் ஆறும்; நாப்புண் ஆறாது

73. நேயர் விருப்பம், விலங்குகள் இல்லாத கவிதை ஆகிய நூல்களை இயற்றியவர்

(அ)தாராபாரதி

(ஆ) அப்துல் ரகுமான்

(இ) ஆலந்தூர் கோ.மோகனரங்கன்

(ஈ) மீரா

விடை மற்றும் விளக்கம்

(ஆ) அப்துல் ரகுமான்

விளக்கம்:

அப்துல் ரகுமானின் படைப்புகள்

சுட்டுவிரல், பால்வீதி, நேயர் விருப்பம், பித்தன், சொந்தச் சிறைகள், கரைகளே நதியாவதில்லை, விலங்குகள் இல்லாத கவிதை, ஆலாபனை, “ஆலாபனை” என்ற நூல் நடுவணரசின் “சாகித்ய அகாதெமி” விருதினைப் பெற்றுள்ளது.

74. “பீலிபெய் சாகாடும்” என்பதில் “சாகாடு” என்ற சொல்லின் பொருள்

(இ) சுடுகாடு

(ஆ) வண்டி

(இ) மண்டி

(ஈ) இடுகாடு

விடை மற்றும் விளக்கம்

(ஆ) வண்டி

விளக்கம்:

“பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்

சால மிகுத்துப் பெயின்”

திருக்குறள் – 48வது அதிகாரம்(வலியறிதல்)

குறள் எண்: 475.

பிரிவு-பொருட்பால்.

இயல்-அரசியல்.

பொருள்: மென்மையான மயிலிறகை ஏற்றியுள்ள வண்டியும், அப்பண்டத்தை அளவுக்கு மிகுதியாக ஏற்றினால், அச்சு முறிந்து விடும்

75. “தமிழ் நாடகக்கலைக்கு ஒரு பெர்னாட்ஷா” எனப் பாராட்டப் பெற்றவர்

(அ) சங்கரதாஸ் சுவாமிகள்

(ஆ) பம்மல் சம்பந்த முதலியார்

(இ) அறிஞர் அண்ணா

(ஈ) தி.க.சண்முகம்

விடை மற்றும் விளக்கம்

(இ) அறிஞர் அண்ணா

விளக்கம்:

“தமிழக நாடகக் கலைக்கு ஒரு பெர்னாட்ஷா”

– அறிஞர் அண்ணாவை இவ்வாறு பாராட்டியவர் கல்கி ஆவார்.

76. பிரெஞ்சுக் குடியரசுத் தலைவரால் “செவாலியர்” விருது பெற்ற கவிஞர்.

(அ) கண்ணதாசன்

(ஆ) வாணிதாசன்

(இ) முடிரசன்

(ஈ) மு.மேத்தா

விடை மற்றும் விளக்கம்

(ஆ) வாணிதாசன்

விளக்கம்:

வாணிதாசனின் இயற்பெயர் எத்திராசலு என்ற அரங்கசாமி. புதுவையில் பிறந்து வளர்ந்த இவர் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், பிரெஞ்சு ஆசிய மொழிகளில் புலமை மிக்கவராய் இருந்தார். 34 ஆண்டுகள் தமிழாசிரியராகப் பணியாற்றினார்.

நூல்கள்: தமிழச்சி, கொடிமுல்லை, எழிலோவியம், பொங்கற்பரிசு, இன்ப இலக்கியம், தீர்த்த யாத்திரை போன்றவையாகும். ரஷ்ய மற்றும் ஆங்கில மொழிகளில் இவரது பாடல்கள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. “தமிழ்-பிரெஞ்சு” கையரசு முதலியை வெளியிட்டுள்ளார். “கவிஞரேறு” பாவலர்மணி” தமிழகத்தின் வேர்ட்ஸ் வொர்த்” என்பவை இவரது சிறப்புப் பெயர்களாகும். பிரெஞ்சுக் குடியரசுத் தலைவர் இவருக்கு “செவாலியர்” என்ற விருதினை வழங்கியுள்ளார். இவரது காலம் 22.07.1915 முதல் 07.08.1974 வரை ஆகும். சேலியமேட்டில் இவர் பெயரால் அரசு உயர்நிலைப் பள்ளி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

77. “எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்

இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே”

– இப்பாடலைப் பாடியவர்

(அ) பாரதியார்

(ஆ) பாரதிதாசன்

(இ) வாணிதாசன்

(ஈ) கம்பதாசன்

விடை மற்றும் விளக்கம்

(ஆ) பாரதிதாசன்

78. பொருந்தாத இணையைக் குறிப்பிடுக:

(அ) சிற்றிலக்கியங்கள்-தொண்ணூற்றாறு

(ஆ) திருக்குறள்-முப்பால்

(இ) மலைபடுகடாம்-கூத்தராற்றுப்படை

(ஈ) பரிபாடல்-பத்துப்பாட்டு

விடை மற்றும் விளக்கம்

(ஈ) பரிபாடல்-பத்துப்பாட்டு

விளக்கம்:

சிற்றிலக்கியங்கள் 96 வகையாகும்.

திருக்குறள் முப்பால்களை (அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால்) உடையது.

பத்துப்பாட்டில் ஒன்றான மலைபடுகடாமின் மற்றொரு பெயர் கூத்தராற்றுப்படையாகும்.

எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று பரிபாடல். அதற்கும் பத்துப்பாட்டிற்கும் தொடர்பேதுமில்லை.

79. வள்ளை என்பது

(அ) ஏற்றுநீர் பாட்டு

(ஆ) நடவுப்பாட்டு

(இ) உலக்கைப் பாட்டு

(ஈ) தாலாட்டு

விடை மற்றும் விளக்கம்

(இ) உலக்கைப் பாட்டு

விளக்கம்:

திருவள்ளுவமாலை – மூன்றாவது பாடல்

“தினையளவு போதாச் சிறுபுல்நீர் நீண்ட

பனையளவு காட்டும் படித்தால் – மனையளகு

வள்ளைக்கு உறங்கும் வளநாட!

வள்ளுவனார்

வெள்ளைக் குறட்பா விரி” – கபிலர்.

பொருள்: உலக்கைப் பாட்டின் இன்னிசையைக் கேட்டு கண்ணுறங்கும் கோழிகளை உடைய வளநாட்டு மன்னனே! சிறுபுல்லின் தலையில் உள்ள தினையளவினும் சிறுபனி நீர், நெடிதுயர்ந்த பனைமரத்தின் உருவத்தைத் தன்னுள் தெளிவாகக் காட்டும். அதுபோல, வள்ளுவரின் குறள் வெண்பாக்கள் அரிய பொருள்களைத் தம்மகத்தே அடக்கி மிகத் தெளிவாகக் காட்டுகின்றன.

வள்ளை-நெல் குத்தும்போது பெண்களால் பாடப்படும் உலக்கைப் பாட்டு.

அளகு-கோழி

80. பொருத்துக:

பட்டியல் I பட்டியல் II

அ. அறுவை வீதி 1. மள்ளர் வாழும் வீதி

ஆ. கூல வீதி 2. பொற்கடை வீதி

இ. பொன்வீதி 3. தானியக் கடை வீதி

ஈ. மள்ளர் வீதி 4. ஆடைகள் விற்கும் கடை வீதி

அ ஆ இ ஈ

அ. 4 3 2 1

ஆ. 3 1 4 2

இ. 2 1 3 4

ஈ. 1 2 4 3

விடை மற்றும் விளக்கம்

அ. 4 3 2 1

Previous page 1 2 3 4 5 6 7 8

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!