General TamilTnpsc

General Tamil Model Question Paper 11

21. பொருளறிந்து பொருத்துக:

பட்டியல் I – பட்டியல் II

(அ) பிடர்தலை ஏறியவர் – 1. துர்க்கை

(ஆ) எழுவருள் இளையவர் – 2. பத்ரகாளி

(இ) இறைவனை நடனமாடச் செய்தவர் – 3. பிடாரி

(ஈ) தாருகன் மார்பைப் பிளந்தவர் – 4. கொற்றவை

அ ஆ இ ஈ

(அ) 4 3 2 1

(ஆ) 3 4 1 2

(இ) 4 3 1 2

(ஈ) 2 1 4 3

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) 4 3 2 1

சிலப்பதிகாரம் (மதுரைக்காண்டம்-வழக்குரை காதை)

பிடர்த்தலைப் பீடம் ஏறிய மடக்கொடி

வெற்றிவேல் தடக்கைக் கொற்றவை அல்லள்

அறுவர்க் கிளைய நங்கை இறைவனை

ஆடல்கண் டருளிய அணங்கு சூருடைக்

கானகம் உகந்த காளி தாருகன்

வாயிற்காப்போன் கூற்று

இடம்: பாண்டிய மன்னன் அவை

பீறிட்டு எழும் குருதி ஒழுகும் பிடர்த்தலை பீடத்தில் ஏறிய இளங்கொடியாகிய கொற்றவையும் அல்லள்; கன்னியர் எழுவருள் இளையவளாகிய பிடாரியும் அல்லள்; இறைவனை நடனமாடச் செய்த பத்ரகாளியும் அல்லள்; தாருகன் என்ற அசுரனின் பரந்த மார்பைப் பிளந்த துர்க்கையும் அல்லள.

22. “மதியிலி அரசர் நின் மலரடி பணிகலர்

வானகம் ஆள்வாரே” – இப்பாடலுக்குரிய அரசன் ————-

(அ) இராஜராஜ சோழன்

(ஆ) நந்திவர்மன்

(இ) நரசிம்வர்மன்

(ஈ) சுந்தர பாண்டியன்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) நந்திவர்மன்

நந்தி மன்னனின் வீரம் குறித்து நந்திக் கலம்பத்தில்,

“மதியிலி அரசர்நின் மரலடி பணிகிலர்

வானகம் ஆள்வாரே” – என்ற அடிகள் அமைந்துள்ளன.

பொருள்: அறிவில்லாதவரான அரசர், உன்னுடைய தாமரை மலர் போன் திருவடிகளை வணங்காதவராகித் தேவர் உலகத்தை ஆள்பவராவர்.

23. தாமரையிலைத் தண்ணீர் போல் – உவமை உணர்த்தும் பொருள்

(அ) மகிழ்ச்சி

(ஆ) நட்பு

(இ) பற்றின்மை

(ஈ) தவிப்பு

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) பற்றின்மை

தாமரையிலையில் தண்ணீர் ஒட்டாது. எனவே இவ்வுவமைக்கு “பற்றின்மை” என்பது சரியான பொருளாகும்.

24. எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல்:

வேடன் சிங்கத்தை வீழ்த்தினான்

(அ) தனிவாக்கியம்

(ஆ) தொடர் வாக்கியம்

(இ) எதிர்மறை வாக்கியம்

(ஈ) கலவை வாக்கியம்

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) தனிவாக்கியம்

25. விடைக்கேற்ற வினாவைத் தேர்க:

கபிலர் நட்புக்கு இலக்கணமாகத் திகழ்ந்தார்

(அ) இலக்கணமாகத் திகழ்ந்தார் யார்?

(ஆ) நட்புக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர் யார்?

(இ) நட்புக்குச் சிறந்த புலவர் யார்?

(ஈ) நட்பு என்பது யாது?

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) நட்புக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர் யார்?

26. பின்வருவனவற்றுள் “தனிக்குறில் முன் ஒற்று உயிர்வரின் இரட்டும்” என்னும் விதியின்படி புணராதது

(அ) தன்னுயிர்

(ஆ) பெண்ணரசு

(இ) பைந்தமிழ்

(ஈ) என்னருமை

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) பைந்தமிழ்

பைந்தமிழ் – பண்புப்பெயர் புணர்ச்சியாகும்

27. சாதுவன் வாணிகம் செய்யும் பொருட்டுக் கடல் கடந்து சென்ற

குறிப்பு – இடம் பெற்ற நூல் எது?

(அ) சீவகசிந்தாமணி

(ஆ) சிலப்பதிகாரம்

(இ) குண்டலகேசி

(ஈ) மணிமேகலை

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஈ) மணிமேகலை

28.பொருத்துக:

இயற்பெயர் சிறப்புப் பெயர்

(அ) திரு.வி.கல்யாண சுந்தரம் – 1. தமிழ்த் தாத்தா

(ஆ) மறைமலையடிகள் – 2. தமிழ்த் தென்றல்

(இ) இரா.பி.சேதுப்பிள்ளை – 3. தனித்தமிழ் வித்தகர்

(ஈ) உ. வே.சாமிநாத ஐயர் – 4. சொல்லின் செல்வர்

அ ஆ இ ஈ

(அ) 4 3 1 2

(ஆ) 1 2 3 4

(இ) 2 4 3 1

(ஈ) 2 3 4 1

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஈ) 2 3 4 1

29. நெடுங்கடலும் தன் நீர்மை குன்றும் தடிந்தெழிலி

தான்நல்கா தாகி விடின் – என்னும் குறள் கூறும் கருத்தின் அடிப்படையில் பின்வருவனவற்றில் எதைக் குறிக்கும்?

(அ) மருத்துவ அறிவு

(ஆ) அணுவியல் அறிவு

(இ) மண்ணியல் அறிவு

(ஈ) நீரியல் அறிவு

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) நீரியல் அறிவு

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தொழிலி

தான் நல்கா தாகி விடின். – திருக்குறள்: 17

பொருள்: மேகம் கடலிலிருந்து நீரை முகந்து சென்று மீண்டும் அதனிடத்திலே பெய்யாதொழியுமானால், அப்பெரிய கடலும் தன் வளம் குன்றிப்போகும்.

நீரியல் அறிவு: நீர் மழையாக மண்ணிற்கு வருவதும் ஆவியாகி விண்ணிற்கு செல்வதுமான சுழற்சி கூறப்பட்டுள்ளது. மழையில்லையேல் புவியின் தட்பவெப்பநிலை மாறும்.

30. பொருந்தாததைச் சுட்டுக:

(அ) வாதம்

(ஆ) ஏமம்

(இ) பித்தம்

(ஈ) சிலேத்துமம்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) ஏமம்

வாதம், பித்தம், சிலேத்துமம் – உடல் நோய்கள். ஏமம்-பாதுகாப்பு.

Previous page 1 2 3 4 5 6 7 8Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!